Loading

© தமிழினியா. இது எனது சொந்தப் படைப்பு. இதனை மறுபதிப்பு செய்ய அனுமதி இல்லை.

 

ஆட்சியர் கனவு.1

 பரபரப்பு மிகுந்த காலை வேளையில், அனைத்து வகை வாகனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு முந்தி செல்லும் சாலையில், ஒரு ஆட்டோவில் திவி என்கிற திவ்யதர்ஷினி டிரைவரை அவசரப்படுத்திக் கொண்டே, பயணம் செய்துக் கொண்டிருந்தாள்.

 திவி “அண்ணா, சீக்கிரம் போங்கண்ணா. ஏற்கனவே லேட் ஆயிடுச்சு. ப்ளீஸ், கொஞ்சம் வேகமா போங்கண்ணா.”

அப்பொழுது சரியாக சிக்னல் விழுந்திட கோவத்தின் உச்சிக்கே சென்றாள் திவி. அந்த நேரம் அவளின் கைபேசி சிணுங்கியது. அதை எடுத்தவளுக்கு கோபமும் படபடப்பும் பயமும் ஒருசேர தோன்றியது. அந்த அழைப்பை ஏற்றவள், “மேம், ஐ ஆம் இன் ஆன் தி வே மேம். 10 மினிட்ஸ் மேம். சாரி மேம்.. சம் டிராஃபிக் ப்ராப்ளம், ஐ வில் பீ தேர் இன் 10 மினிட்ஸ் மேம்”. என்று கூறிக் கொண்டு இருந்தாள்.

அவளை ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒருவன் பின்தொடர்ந்து கொண்டிருப்பது அவள் அறியாத ஒன்றே..!

திவ்யதர்ஷினி, 20 வயது நிரம்பிய பருவ மங்கை. பார்வையில் கூர்மையும், கடையிதழில் சிறு புன்னகையும் என்றும் மாறாது. என்றும் தன் இலட்சியத்தை கைவிடாது சீரிய சிந்தனை உடையவள். இளங்கலை ஆங்கிலம்  இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவி, வகுப்பு தலைவி (Class representative).

 சரியாக பத்து மணிக்கு ஒரு  கல்லூரியில் அந்த ஆட்டோ நின்றது. அவசர அவசரமாக காசை எடுத்து ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு கல்லூரிக்கு எதிரே அவளுக்குத் தெரிந்த நகல் எடுக்கும் கடையினுள் சென்றாள்.

 திவி “அண்ணா, சீக்கிரம் இத 2 காப்பி எடுத்து தாங்கண்ணா. கவி எங்க? க்ளாஸ்க்கு போய்ட்டாளா? இன்னைக்கு மட்டும் என்னை மாட்டி விடுறத்துக்கு எல்லா எருமைங்களும் ஆஜர் ஆகிடும். எல்லாம் என் தலையெழுத்து. ஈஸ்வரா!” என்று புலம்பிட,

அந்தக் கடைக்காரர்  ” இன்னைக்கு ஏன் மா இவ்வளவு லேட்? என்னாச்சு? கவிதா இப்போதான் போனுச்சு. இந்தாம்மா.” என்று நகல் தாள்களை அவளிடம் நீட்ட, 

திவி “எவ்ளோ ஆனாலும் அக்கவுண்ட்ல வச்சுக்கோங்க. டிராஃபிக்ண்ணா, அதான் லேட். பை அண்ணா” என்று வேகவேகமாக ஓடினாள்.

‘போச்சு போச்சு, எல்லாரும் வந்துட்டாங்க. அந்த மேம் வேற புரியாத இங்கிலீஷ்லயே திட்டுவாங்க. கடவுளே! என்ன திவ்யா உனக்கு வந்த சோதனை.? காலக் கொடுமை திவ்யா காலக் கொடுமை!’ என்று மனதிற்குள் புலம்பிய படியே சென்று இல்லை ஓடிக் கொண்டிருந்தாள். 

விரைவாக தன் துறைக்குள் நுழைந்தவளை அவள் உயிர்த் தோழி ரவீணா தடுத்து “திவி, மேம் க்ளாஸ்க்கு வந்துட்டாங்க வா!” என்று கூற, இருவரும் வகுப்பை நோக்கி சென்றனர்.

திவி “ரவீ, நீ க்ளாஸ்க்கு போகல?” என்று வினவ,

“இல்ல திவி. நீ லேட்னு சொல்லிட்டு இருந்தாங்களா, ஸோ உள்ள போனா எப்படியும் மேம் அறுவை தான் போடுவாங்க. நீ இல்லாம அவங்கள சமாளிக்க முடியாது. திட்டுதான? ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குவோம் வா!” என்று திவியின் தோளில் கை போட்டப்படி இருவரும் சென்றனர்.

இருவரும் “எக்ஸ்க்யூஸ் மீ மேம்!” என்றிட,  திவ்யாவை தீயாய் முறைத்து “கெட் இன்” என்று கூறினார்,  அவர்களின் வகுப்பு ஆசிரியை வைதேகி கிருஷ்ணா (V.K. mam). ரவீணா தன் இடத்திற்கு சென்று விட,  திவி மேடம் அருகில் சென்று சில பேப்பர்களை நீட்டினாள்.

வி.கே மேம் “வந்த ஃபர்ஸ்ட் டே வே லேட், கிவ் மீ.” சில நிமிடங்கள் அந்த பேப்பர்களை ஆராய்ந்தவர், “குட் மை சைல்ட், ஐ நோ அபௌட் யூ திவ்யா. என்னதான் லேட் ஆனாலும் எப்பவும் எல்லா வொர்க்கயும் பர்ஃபெக்ட்டா முடிச்சுடுவ. ஐம் லக்கி டு ஹாவ் யூ மா, தட்ஸ் மை கேர்ள்” என்றிட,

மற்ற மாணவர்கள் இந்த மேம்க்கு ஆஸ்கார் அவார்டு கொடுத்தா கூட தகும் என்ற ரீதியில் பார்த்தனர். இப்போது தான் திவி சாந்தமானாள். வெகு நாட்கள் கழித்து தன் தோழமைகளை கண்ட ஆர்வத்திலும் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்த காரணத்தினாலும் மகிழ்ச்சியாக ஒரு வாரத்தை கடந்தனர், திவ்யாவும் அவளது நண்பர்களும்.

ஒரு வாரத்திற்கு பிறகு…

“La Belle dame sans merci” என்ற கீட்ஸ்ன் கவிதையையும், கவிதை நடையையும் ஆசிரியர் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பின் இடது புறத்தில் உள்ள முதல் பெஞ்சில் தன் பேக்கை வைத்துவிட்டு, இரண்டாவது பெஞ்சில் தோழி ரவீணா, கவிதா, கனக வள்ளியோடு, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டும், சாப்பிடும் தன் தோழிகளை காப்பாற்றிக் கொண்டும் அமர்ந்திருந்தாள்.

வலது புற பெஞ்சில் அமர்ந்திருந்த அவள் தோழன்  சபரி “திவ்யா, அந்த டிபன் பாக்ஸை கொஞ்சம் இந்தப் பக்கம் தள்ளு. காலைல நான் சாப்டல” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டுக் கேட்க,

கனகவள்ளி “டேய், பேசாம இரு டா.  ஏற்கனவே அந்த மேடம் சாவடிக்குறாங்க. அதுல இன்னும் பசிக்குது. இதுல இவன் வேற. திவி இந்தா, இது அவன் கிட்ட குடு” என்று தட்டை நீட்டினாள்.

திவி “கனகா, எனக்கு இதுதான் வேலையா?” என்று அந்தத் தட்டை வாங்கி அவனிடம் ஆசிரியர் அறியாதவாறு கொடுத்தாள்.

சபரி “என்னமோ கை காச போட்டு வாங்கி தர மாதிரி ரொம்ப்பபப ஃபீல் பன்ற.? பசில இருக்கேன். அமைதியா நோட்ஸ்ஸ எழுதிட்டு எனக்கு அப்புறமா வாட்ஸ்அப்ல அனுப்பிடு” என்றான்.

திவி தலையில் அடித்துக் கொண்டு வகுப்பைத் தொடர, அப்போது ஒரு ஆண் தனது கேசத்தை கோதி விட்டு, “எக்ஸ்க்யூஸ் மீ மேம், மே ஐ கம் இன்?” என்றிட, திவ்யாவைத் தவிர அனைவரும் ‘ஆ’ வென அவனை பார்த்தனர்.

மேம் “எஸ் பா, கெட் இன்” என்றிட, அவன் பின்னாலேயே வி.கே மேம் (class tutor) உள்ளே நுழைந்தார். இப்போது தான் திவ்யாவின் பார்வை அவன் மீதும் டியூட்டர் மீதும் விழ தன் பார்வையினாலேயே அவனை அளவெடுத்தாள்.

அழகான கலைந்த கேசம். கூரிய பார்வை, தன் பார்வையிலேயே மற்றவரை அளக்கும் கண்கள். ஆண்களுக்கு உரித்தான கட்டுடல் மேனி. தாடி,மீசை என்று முகத்தை அழகுப்படுத்தும் முடிகள். மாநிறம். கண்ணுக்கு அருகில் சிறு மச்சம். அவன் பார்வையிலே விழுந்துவிடும் பெண்கள். வையிட் ஷர்ட், ப்ளாக் பேண்ட்டில்  பாதி டக்-இன் செய்து இருக்கும் அவன் 23 வயது நிறைந்த ஆண் மகன். அவனைக் கண்டு,
ஒரு நிமிடம் இவளும் சொக்கித்தான் போனாள்.

அனைவரும் எழுந்து நின்றனர். கவிதா எழுந்த வேகத்தில் அவள் மடியில் இருந்த டிஃபன் பாக்ஸும் சேர்ந்து விழுந்து அமைதியினைக் கலைக்க,  திவித் தலையில் அடித்து கொண்டு, கடகடவென அதனை எடுத்து வைத்தாள்.

வி.கே. மேம் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி அந்த ஆசிரியரிடம்  ஏதோ கூற அவர் வெளியே சென்று விட்டார்.

மேம். “குட் மார்னிங் ஸ்டூடன்ட்ஸ். ஹீ இஸ் ஆதித்யன். அவர் நியூ ஸ்டூடன்ட். யுவர் நியூ ஃப்ரெண்ட். சில காரணங்களால அவரால யூஜி கண்டினியூ பண்ண முடியல. ஸோ  இப்போ செகண்ட் இயர்ல இருந்து ஜாயின்ட் பன்னிருக்காரு. திவ்யா கம் ஹியர். ஷீ இஸ் ஏ ரெப்ரஸன்டேட்டிவ் ஆஃப் அவர் க்ளாஸ். உனக்கு என்ன ஹெல்ப் வேணுமோ தாராளமா நீ இவள கேட்கலாம். அதர்ஸ் சிட் டௌன்”

ஆதித் தலையை ஆட்டிக் கொண்டு திவ்யாவிடம் “ஹாய்! ஐ ஆம் ஆதித்யன். ஜஸ்ட் கால் மீ ஆதி!” என்று கை நீட்ட,

திவி “ஹாய்! ஐ ஆம் திவ்யதர்ஷினி, வெல்கம் டூ அவர் க்ளாஸ்” என்று கை கூப்பினாள்.

அவன் வரும் போது திவ்யா அவனை கவனிக்காததும், கை குலுக்காததும் நினைத்து ஒரு வித ஈர்ப்பும், மறுபுறம் சரியான ‘திமிர் பிடிச்சவ‘ என்றும் நினைத்துக் கொண்டு ஒரு வித விஷமப் புன்னகையை விடுவித்தான்.

மேம் “திவ்யா, ஆஃப்டர் ஃபினிஷ் யுவர் க்ளாஸ் கம் அன்ட் மீட் மி இன் அவர் டிபார்ட்மெண்ட்.” (Divya, After finish your class come and meet me in our department) என்று விட்டு பிரேக்கிற்கு செல்லுமாறு கூறினார்.

திவி “ஓகே மேம். தாங்க்யூ மேம்!” என்றிட அனைவரும் கலைந்தனர்.

ஆதி “திவ்யா, நான் எங்க உட்காரது.? எனக்கு எந்த ப்ளேஷ்?”

கவிதா “விட்டா இவன் திவி மடியிலேயே உட்காந்துருவான் போல” என கனகா காதைக் கடிக்க,

கனகா “அந்நியாயமா என் பனியாரம் போச்சு பக்கி உன்னால. ஒழுங்கா கேண்டீன் கூட்டிட்டு போ இல்லன்னு வையேன்….” என்று கோபமாய் கூறினாள்.

ரவீ “அடச்சீ சும்மா இருங்க. திவி வராம எங்க போறது.? விட்டுட்டு போனா தையதக்கான்னு குதிப்பா!” என்றாள்.

திவி “டேய், விஷ்ணு அண்ணா” என்றதும் சட்டென திரும்பியவன், ‘என்ன?’ என்று பார்க்க, “உன் பென்ஞ்சில 3 பேர் தான.? இவங்களையும் அங்க உட்கார வச்சுக்கோ. நான் போய்ட்டு வரேன்!” என்று விட்டு ஆதியின் பக்கம் திரும்பி “அங்கப் போய் உட்காந்துக்கோங்க.” என்று புன்னகையுடன் கூறினாள்.

ஆதி “தாங்க் யூ திவி” என்றிட, “இட்ஸ் ஓகே!” என்று விட்டு, சட்டென அவன் வந்து “கால் மீ திவ்யா” என்று விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஆதி “ஹாய்! ஐ ஆம் ஆதி.” என்று அறிமுகப்படுத்த,

விஷ்ணு “ஹாய்! நான் விஷ்ணு, இவன் சபரி, இவன் தரனேஷ், இவன் பிரவீண்” என்று அவன் கேங்கில் உள்ள பசங்களை அறிமுகம் செய்ய ஆதிக்கு ‘ஐயோ’ என்றிருந்தது.

தரனேஷ் “என்ன மச்சான், கடுப்பாகிட்டியா? ஹாஹாஹா.. கூல் கூல் ஆதி.! எப்டியும் நீ எல்லார்கிட்டயும் உன் பேர சொல்லி, தனித்தனியா நாங்க எங்கள இன்ட்ரோ கொடுக்குறதுக்கு சார் ஒன்னா சொல்லிட்டாராமா. அறிவு கொழுந்து.!” என்று விஷ்ணுவை வார,

பிரவீன் “டேய், அவன் அதுக்கு கடுப்பாகி இருக்க மாட்டான், வந்ததுல இருந்து நம்ம பேர் மட்டும் தான இவன் சொல்லி இருக்கான், பொண்ணுங்க பேர் சொல்லவே இல்லல, அதான் அவன் கடுப்புல இருக்கான் போல.?” என ஆதியை கலாய்த்தான்.

சபரி “கவலப்படாதடா, கொஞ்ச நேரத்தில எல்லாரும் வந்துடுவாங்க. அப்போ இன்ட்ரோ குடுத்துக்கலாம்.! ஓகே வா?” ஆதிக்கு முதல் நாளே மட்டற்ற மகிழ்ச்சியோடு ஆரம்பித்தது.

ஆதி “நீங்க எப்பவுமே இப்படித்தானா.?” என்று வினவ,

விஷ்ணு “இல்ல  டா, இப்படித்தான் எப்பவுமே.. ஹாஹாஹா.. அதுவும் எங்க கேங்ல நீயும் ஐக்கியமாகிட்டன்னு வையேன், இன்னும் ஜாலியா இருக்கும். டைம் போரதே தெரியாது.” என்று கூறினான்.

ஆதி “அப்போ, இப்போவே நான் உங்க கேங் ல ஜாயின் பன்னிக்குறேன்டா!”

தரனேஷ் “வாய்ப்பில்லை ராஜா!”

ஆதி “ஏன்? சீனியர் யார்கிட்டயாவது கேட்கனுமா.?” என்று முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு கேட்டான்.

அதில் சபரி கிளுக் என்று சிரித்து விட்டு, “ஏன்டா, உனக்கு இவ்ளோ ஆர்வம்.?”

ஆதி “எனக்கு யாருமே இல்ல டா. நிஜமாவே இப்டி சிரிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு” என்று சற்று கண் கலங்க கூறியவனிடம் வேறு எதுவும் கேட்கத் தோணவில்லை.

விஷ்ணு, ஆதியை அணைத்துக் கொண்டு, “நாங்க எப்பவும் உன் கூட இருப்போம்டா” என்று அவன் கண்ணைத் துடைத்துக் கொண்டே கூறினான்.

நிலைமையை மாற்ற தரனேஷ் “டேய், சீனியர் கிட்டலாம் பர்மிஷன் வாங்க தேவ இல்லடா லூசு நண்பா.! திவிக்கிட்ட தான்டா கேக்கணும், அதான் இந்த க்ளாஸ் லீடர்ர்ர்ர்ர்.”

ஆதி: “ஓஓஓஓ.. அவங்க கிட்ட பர்மிஷன் வாங்கனுமா.? அப்போ நம்ம கேங்ல பொண்ணுங்க கூட இருக்காங்களா.?” என்று ஆர்வமாய் கேட்க,

விஷ்ணு அவன் கன்னத்தில் இடித்து “உனக்கு எப்ப பாரு அதே நெனப்பு” என்று கிழவி தோணியில் சொன்னான்.

ஆதி “டேய், நான் இன்னைக்கு தான் டா காலேஜ்க்கே வந்து இருக்கேன். நான் என்னமோ இதே நெனப்புல இருக்குறவன் மாதிரியே பேசுற.?” என்று அவன் தலையில் அடித்துக் கொண்டு “சரி கேர்ள்ஸ் நேம் சொல்லுங்கடா” என்று கண்ணடித்துக் கொண்டே கேட்டான்.

சபரி “உனக்கு தேவயானதுல கரெக்ட்டா இருக்க போல? என்று விட்டு நம்ம க்ளாஸ் ரெப் தான் திவ்யா, அவ கூடயே சுத்துறது ரவீணா, நீ வரப்போ சாப்டுகிட்டு இருந்தாங்கல அவங்க கனகவள்ளி, கவிதா, இந்த பென்ஞ்ச்ல இருக்குறது கௌசிகா, சுப்ரியா. நேம் சொல்லிட்டேன், வந்ததும் மூஞ்சிய பாத்துக்கோ!” என்றான்.

இவ்வாறு கலகலப்பாக சென்று கொண்டிருக்க, அங்கு கேண்டீனில் இவர்கள் செய்யும் ரகளை ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா…

கேண்டீன் சென்ற நம் வாலுகள், கேண்டீனையே புரட்டிப் போட்டு விட்டன. நான்கு பேரோடு சேர்த்து கௌசிகா, சுப்ரியா அனைவரும் வந்திட கேண்டீன் தான் பாவமாக மாட்டிக்கொண்டது. மொத்தமாக அவள் வகுப்பில் பதின்மூன்று பெண்களே என்பதால் தோழிகள் கூட்டம் சற்று நெருக்கமாகவே இருக்கும்.

கனகா “எனக்கு 2 பிஸ்கட் இப்போதைக்கு போதும்.”

கவிதா “எனக்கு.???? 2 வடை, 1 பஜ்ஜி, 1 மிளகா பஜ்ஜி.”

ரவீ “எனக்கு ஒரு காஃபி, திவிக்கு பால். ஓகே தான திவி.?” என்று அவளைப் பார்க்க திவியோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

உன்னைக் கண்ட நாள் முதல்
தூக்கம் தொலைத்தேன்,
துக்கமும் குடி கொண்டது
இதுவரை நடந்த நிகழ்வுகளை எண்ணி.
அவளா(னா) அறியாமல் தவிக்கின்றேன்
உன்னைக் கண்ட இந்நொடிதனில்…!!!

 

திவி “இவன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு..? ஆனா எங்க.? அந்த கண்ணு… ப்ப்ப்ப்பா… என்னா கண்ணுடா.?” என்று நினைத்துக் கொண்டிருக்க,

ரவீ திவியின் காதில் கத்தினாள்.  திவி “ஏன்டி இப்படி கத்துற? நான் இங்க தான இருக்கேன்.?”

ரவீ “என்னாது? உன்ன.? எத்தன தடவ கூப்டேன்‌. காதுல விழல.? எருமை. என்ன ஒரு மாதிரி அப்செட்டா இருக்க.? தலை வலிக்குதா.? இந்தா பாலக்குடி.”

திவி “ஒன்னுமில்லைடி” என்று தலையாட்டி விட்டு, பாலை அருந்த ஆரம்பித்தாள். ரவீ திவிக்கு மட்டும் இனிப்பு (மன்ஞ்ச்) வாங்கித் தர,
அந்த மன்ஞ்சை கையில் வாங்கிய மறுநொடி சுற்றி முற்றி பார்த்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடினாள்.

அவளை பின் தொடர்ந்து கவி, கனகவள்ளி, சுப்ரியா, காவ்யா நால்வரும் “திவி திவி” என கத்திக்கொண்டே துரத்த, ரவீணாவும், கௌசிகாவும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தனர்.

ரவீ “கௌசி, நமக்கும் அந்த மன்ஞ்ச்ல ஷேர் கிடைக்குமா.?” என்ற அதிமுக்கியமான கேள்வியை முன் வைக்க,

கௌசி “மொதல்ல அந்த மன்ஞ்சை திவ்யா கிட்ட இருந்து அந்த நாலு லூசுங்களும் வாங்க முடியுமா.? எல்லாத்துக்கும் மன்ஞ்ச் தருவா. ஆனா நீ குடுத்த மன்ஞ்சை யார் கேட்டாலும் தர மாட்டா.. தெரிஞ்சும் நாலும் அவள தொரத்துதுங்க, கடவுளே!” என தலையில் அடித்துக் கொண்டாள்.

ரவீ ‘ம்ம்ம்…. யாருக்கும் தரமாட்டா. ஆனா எனக்குத் தருவா.’ என நினைத்துக் கொண்டு நடந்தனர்.

திவி வேகமாக வகுப்பில் நுழையும் போது ஒருவர் மீது மோதிக் கீழே விழுந்தாள்…

 

கனவு தொடரும்..

உங்களோட கமெண்ட்ஸ் அண்ட் ஸ்டார்ஸ் கொடுத்துட்டு போங்க.. உங்களோட கருத்துகள் தான் எனக்கு எனர்ஜி.. தொடர்ந்து கதை வரும்…

நன்றிகள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்