Loading

 

ஆட்சியர் கனவு -2

திவி வேகமாக வகுப்பில் நுழையும் போது  ஆதி மற்றும் விஷ்ணு “திவி திவி”  என்ற சத்தம் கேட்டு வெளியே வர, திவி சரியாக ஆதி மேல் மோதி கீழே விழுந்தாள்.

ஆதி சுதாரித்துத் திவியை கீழே விடாமல் அவள் இரு கரங்களையும் மெல்லிய இடையையும் இறுக பற்றிக் கொண்டான்.

 
இதே கண்கள்..
என்னை ஆட்கொண்ட
இதே காந்தப் பார்வை…
என் உள்ளம் கவர்ந்த
அதே ஸ்பரிசம்..
அவள்தான் நீயோ.?
இருந்தால் என்னிடம்
விலக்கம் ஏனேடி?
என்னவளே.!
நீதானே அவள்.?

என்றுத் தன்னவளின் நினைவில் லயித்திருக்க, விஷ்ணு இருவரையும் வாயில் ஈ புகும் அளவிற்கு ‘ஆ’ வென பார்த்துக் கொண்டு இருந்தான்.

கவி “திவி, எனக்கு கொடுடி ப்ளீஸ்டி” என்ற குரலில் தன்னிலை உணர்ந்தவர்கள் சட்டென விலகி நின்றனர்.

திவ்யாவிற்கு இன்னும் அவனின் கை வளைவிற்குள்ளேயே, தான் இருப்பது போல் உணர்ந்தவளின் இதயம் தாறுமாறாகத் துடிக்க என்ன செய்வதென்று புரியாமல் இருவரும் திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தனர்.

ஆதி “சா.. சாரி, தெரியாம..” என்று அவனும் இன்னும் பதட்டம் குறையாமல் இருக்க,

திவி (சுற்றி முற்றி பார்த்து விட்டு) “இ.. இட்ஸ்.. ஓ.. ஓகே!” என்று விட்டு அந்த இடத்தை விட்டு, நகர்ந்தால் போதும் என்று வேகமாக உள்ளே சென்றாள். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் கவிதாவின் பையில் மன்ஞ்சை மறைத்து வைத்து விட்டு அமைதியாக தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

வேகமாக வந்த நால்வரிடமும்,  விஷ்ணு “ஏன்.? என்ன ஆச்சு.? எதுக்கு திவிய தொரத்துறீங்க.?” என்றிட, சுப்ரியா ஆதியின் தோற்றத்தில் மயங்கி, அவனையே விழி அகலாதுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கவி “ஆதி, உங்க காத கொடுங்க.” என்றிட,
 
“அப்படி என்ன பரம ரகசியம்” என்று விஷ்ணுவை பார்க்க, அவனோ “கேள்வி கேட்டது நானு, பதில் அவன் கிட்டயா?” என்ற ரீதியில் அனைவரையும் முறைத்துக் கொண்டு இருந்தான்.

கவி “திவி கிட்ட ஒரு மன்ஞ்ச் இருக்கு. ப்ளீஸ் அத மட்டும் வாங்கி கொடுங்க.. ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…”

ஆதி “ஒரு மன்ஞ்ச்காகவா எல்லாரும் அவள தொரத்துறீங்க.? கேட்டாத் தர மாட்டாளா.?”

கனகா “என்ன அவ்ளோ அசால்ட்டா சொல்லிட்ட.? இதுலாம் சொன்னா புரியாது.. அந்த மன்ஞ்ச் ரவீ கொடுத்தது. அத மட்டும் அவ ரவீணாவ தவிர யாருக்கும் தர மாட்டா.”

ஆதி “ஆஹான். ஓகே ஓகே.! அத வாங்கித் தந்தா எனக்கு என்ன பண்ணுவீங்க.?”

விஷ்ணு “இவன் வேற காமெடி பன்னிகிட்டு. இவளுங்கள பத்தி தெரியாம ஆடு தானா தலையைக் கொடுக்குதே!” என்று நினைத்து நமட்டுச் சிரிப்புடன் அவனைப் பார்த்தான்.

கௌசி “உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க, சிறப்பா பன்னிடலாம்.”

ஆதி யோசனையாக முகத்தை வைத்துக் கொண்டு மார்பின் குறுக்கே இரு கைகளையும் கட்டிக் கொண்டு “உங்க கேங்ல என்னையும் சேர்த்துப்பீங்களா.?” என்று ஒரு வித ஏக்கம் கலந்த குறும்புடன் கேட்டான்.

 விஷ்ணுவோ ‘கேப்புல ஆப்பு அடிக்கிறான்டா’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டு இருந்தான்.

சுப்ரியா “ஹான்.. இட்ஸ் அவர் ப்ளஸர்” என்று கை நீட்ட அவள் பார்வையைப் புரிந்துக்கொண்டு, கைக் கூப்பினான் ஆதி. அதில் மேலும் அவன்பால் ஈர்க்கப்பட்டாள் சுப்ரியா.

இங்கு நடக்கும் அனைத்தையும் இதழோர புன்னகையுடன் திவியும் பார்த்துக் கொண்டுத்தான் இருந்தாள், இல்லை இல்லை ஆதியை ரசித்துக் கொண்டு இருந்தாள். அவன் திரும்பியதும் திவி ஒன்றும் அறியாதவள் போல் தன் பையில் எதையோ தேடிக் கொண்டு இருப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்.

ஆதி “திவி”

திவி என்னவென்று பார்த்தாள். ஆனால் அவனைக் கண்டதும் அவளது இருதயத் துடிப்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டது என்பது உண்மையே.!

ஆதி “எனக்கு சிலபஸ் வேணும் ப்ளீஸ்”

திவி “ம்ம்ம்..” என்று தலையசைத்து தனது பேக்கில் இருந்து சிலபஸ் எழுதியிருந்த பேப்பரை நீட்டினாள்.

ஆதி “தேங்க் யூ. அண்ட் அகெயின் ஒன் மோர் ஹெல்ப்.?” என்றிட,

திவி தலையை நிமிர்த்து ஒற்றைப் புருவத்தை தூக்கி ‘என்ன’ என்பது போல் கேள்வியாய் பார்த்தாள்.

ஆதி அதில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னையே பறிகொடுத்தவன். “அ… அது.. திவி..!” என்று சற்று தடுமாறினான்.

தன் கைகளை அவன் முன் நீட்டி “கால் மீ திவ்யா.! வந்து ஒரு நாள் கூட ஆகல, அதுக்குள்ள உங்க இஷ்டத்துக்கு நேம்ம ஷார்ட் பன்றீங்க..? கீப் யுவர் லிமிட்ஸ்!” என்று சற்று கோபமாக கூறினாள்.

ஆதி ‘திமிரப் பாரு.? குள்ளக் கத்திரிக்கா மாதிரி இருந்துகிட்டு என்ன பேச்சு பேசுறா..? இருடி.!’ என்று மனதில் அவளைத் திட்டிக் கொண்டு, ஓ… ஓகே! திவ்யதர்ஷினி.. சாரி.. உங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் உங்கள திவின்னு கூப்பிட்டாங்களா சோ..?” என்று இழுத்திட,

திவி “நீங்க இன்னும் எங்க கேங்ல ஜாயின் பன்னல. அண்ட் எனக்கு இன்னும் ப்ரண்ட்டாவும் ஆகல. என்னப் பொறுத்தவரை யு ஆர் ஜஸ்ட் மை க்ளாஸ் மேட். தட்ஸ் இட்..! இப்போ உங்களுக்கு என்ன வேணும்.?” என்று அடக்கப்பட்ட கோவத்தில் கேட்டாள். திவிக்கே நாம் ஏன் இவ்வாறு பேசுகிறோம் என்று புரியவில்லை.

ஆதி கோபத்துடன் கவி கனகாவை பார்க்க, அவர்களோ கண்களாலேயே கெஞ்சிக் கொண்டு இருந்தனர். மீண்டும் திவியைப் பார்க்க,

திவி “புரிஞ்சுடுச்சு. அந்த லூசுங்க மன்ஞ்சை என்கிட்ட இருந்து வாங்கி கொடுக்க சொன்னாலுங்களா‌..?” என்றாள்.

ஆதி ‘அய்யோ!, எப்படி கண்டுபிடிச்சா.?’ என்று நினைத்து விட்டு ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

திவி “ஆமா, இவளுங்க சின்ன குழந்தைங்க..? அவளுங்க கேட்டாளுங்கன்னு ஈஈஈஈஈ ன்னு பல்ல இளிச்சுக்கிட்டு இங்க வந்துருவீங்களா.? பொண்ணுங்க சிரிச்சு பேசுனா போதுமே, கொஞ்சம் கூட மேனர்ஸ் வேணாம்.? வந்த ஃபர்ஸ்ட் டே வே எப்படி தான் வலியிறீங்களோ தெரியல.?” என்று அவன் கேட்கும்படி முணுமுணுத்தாள்.

ஆதி கோபத்துடன், “கீப் யுவர் லிமிட்ஸ் ஓகே..!” என்று கத்திவிட்டு சென்றான்.

திவ்யா ‘கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ.? ப்ச் போவோம்.’ என்று விட்டு எதுவும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

கவி “இவள… ஏய்.. திவி, மன்ஞ்ச் கொடுடி”

திவி “ஒரு மன்ஞ்ச்காக, ஏன்டி லூசுத்தனமா பன்றீங்க? போங்கடி. தர முடியாது!”

கவி “அப்டிலாம் சொல்லக் கூடாது. நீ தரலன்னா நாங்க தேடி எடுத்துக்க மாட்டோமா..?”

திவி “அறிவில்ல, என் ப்ரண்ட் எனக்கு கொடுத்தத பிடுங்கி சாப்டுறீங்களே.? ச்சே.!”

கனகா “என்ன திவ்யா, இப்டி பேசுனா எங்களுக்கு ரோசம் வந்து மன்ஞ்ச் வேணாம்னு போய்டுவோமா.? வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை! எப்போ காலேஜ் சேந்தோமோ அப்போவே வெ.மா.சூ.சு (வெட்கம், மானம்,சூடு,சொரணை) எல்லாத்தையும் கழட்டி தூக்கி போட்டாச்சு, இல்ல கவிதா.?” என கூறினாள்.

கவி அதை ஆமோதித்து, “ம்ம்ம்.. சாப்டுர விஷயத்துல எங்களுக்கு எதுவுமே கிடையாது. அதில் நீயும் அடக்கம். ஒழுங்கா மன்ஞ்சை கொடுத்தா சேதாரம் இல்லாம எல்லாரும் சாப்டலாம்”. என்றாள்.

ஆதி “விஷ்ணு, இவங்க எல்லாம் என்ன மாதிரி டிசைன்டா.? ஆஃப்டர் ஆல் ஒரு 5 ரூபா மன்ஞ்ச்காக  இப்படி அடிச்சுக்குதுங்க?” என்று தலையில் அடித்து கொள்ள,

விஷ்ணு “டேய் மச்சான், அவளுங்களுக்கு கேட்டுச்சு நீ அவ்ளோதான். எதுல வேணாலும் எல்லாரும் விட்டுக் கொடுப்போம், பட் சாப்டுர விஷயத்துல நோ வே… நானே இந்நேரம் கேட்டு இருப்பேன். ஆனா இது மன்ஞ்ச்,  அவ யாருக்கும் தர மாட்டா!”

ஆதி “டேய், அவ சரியான திமிர் பிடிச்சவடா எப்டி பேசுனா தெரியுமா.?” என்று திவியைப் பார்த்துக் கொண்டு கூற,

விஷ்ணு “நீ அவள புரிஞ்சிக்கலடா. நம்ம க்ளாஸ்ல, நோ இந்த டிபார்ட்மெண்ட்லயே இவள மாதிரி யாரும் கிடையாது. ஆனா எங்க பழைய திவ்யாவை நாங்க ரொம்ப மிஸ் பன்றோம். ஓகே, ப்ச் அத விடு.! ப்ரேக்  பினிஷ்.. வா ப்ளேஷ்க்கு  போலாம்.”

ஆதி திவியைப் பார்த்துக் கொண்டே அவன் இடத்தில் அமர்ந்தான்.

ஆதி “என்னாது, பழைய திவ்யாவா.?” என்று யோசனையுடன் கேட்க,

விஷ்ணு “ஆமாடா, அவ செகண்ட் இயர் வந்தததுல இருந்து முன்ன மாதிரி இல்ல. எதுக்கோ பயப்படுறா. எதையோ நினச்சு ஃபீல் பன்றா? ஆனா என்னனு சொல்ல மாட்டிங்குறா.” என்றான்.

ஆதி திவியை மட்டுமே இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

சுப்ரியா எப்படியோ மன்ஞ்சை கண்டுபிடித்து எடுக்க, அதை கவி பிரிக்க போக திவ்யா வேகமாக அதை பறித்து அவசர அவசரமாக அதை வாயில் திணித்தாள். அனைவரும் அவளை தீயாக முறைத்து கொண்டு இருந்தனர். ஒரு வித சிரிப்புடன் ஆதி பார்த்துக் கொண்டு இருந்தான்.

விஷ்ணு “இதுதான்டா, திவி. எப்டி குழந்தை மாதிரி பன்றாள.? ஐ லவ் ஹெர்.!” என்றான்.

ஆதி அதிர்ச்சியில் “என்னாது, நீ அவள லவ் பன்றியா.? அவ உன்ன அண்ணானு  தான கூப்டா..?”

விஷ்ணு “நீ ஏன் டா இவ்ளோ பதற.? லூசு. அவ எனக்கு தங்கச்சி தான் டா. ஏன்டா? தங்கச்சிய லவ் பன்னக் கூடாதா? போடா டேய்!”

அப்போது ரவீ மற்றும் கௌசி உள்ளே நுழைய ரவீ அதிர்ந்தாள். ரவீ திவியிடம் சென்று “எனக்கு எங்க மன்ஞ்ச்.?” என்றிட,

திவி சிரித்துக் கொண்டே “என் டியர்க்கு இல்லாததா.?” என கையில் மறைத்து வைத்ததை ரவீக்கு ஊட்டி விட்டாள்.

வகுப்பில் அனைவருக்கும் இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கவி, கனகா பொய்க் கோபத்துடன் திவி தலையில் அடிக்க, சுப்ரியா உண்மையான பொறாமையில் அவள் தலையில் பலமாக அடித்து விட்டு சென்றாள்.

திவி “ஷ்ஷ்ஷ்ஷ்… ஆஆஆஆஆஆ… கொலக்காரிங்களா.!” என் தலையை நீவியபடி எழுந்திரிக்க,

ரவீ “இரு திவி!” என்று தனது கர்சீஃப்பால் அவள் வாயருகே இருந்த க்ரீமை துடைத்துவிட்டு “திவி, இப்போ க்ளாஸ் இருக்கா.?”

திவி “தெரியல ரவீ. வா நாம டிபார்ட்மெண்ட்க்கு போலாம்.”

விஷ்ணு “அய்யய்யய்ய.. எப்போ பாரு ரவீ, திவின்னு, போங்க அங்குட்டு போய் கொஞ்சுங்க. சகிக்கல”.

சுப்ரியா “நல்லா சொல்லுடா. கேட்க முடியல!”

திவி “ரவீ, எங்கேயோ கருகுதுல?”

ரவீ “ம்ம்ம்.. ஆமா திவி. இப்படி கருகுனா, நம்ம டிபார்ட்மெண்டே தீப்பிடிச்சாலும் ஆச்சர்யபடுறதுக்கு  இல்ல!” என சிரித்துக் கொண்டே இருவரும் சென்றனர்.

ஆதி “டேய் டிபார்ட்மெண்ட்க்கு எதுக்கு போறாங்க.?”

விஷ்ணு “க்ளாஸ் இருக்கா? இல்லையா?ன்னு கேட்க தான்டா! இல்லன்னா நாங்க எல்லோரும் க்ரவுண்ட்க்கு போவோம்.. ம்ம்ம்.. நீயும் வரியா.?” என்று கேட்க,

ஆதி “எல்லாரும்னா.? யார்? யார்.?” “திவியும் வருவாளா?’ என்ற எதிர்பார்ப்புடன் கேட்க, ஏனோ, அவளிடம் தஞ்சம் தேடியது இவ்வாணின் மனது.

விஷ்ணு “நீ வருவல அப்போ தெரிஞ்சிக்கோ” என்றான்.

திவியும் ரவீயும் வகுப்பிற்குள் நுழைய ,அனைவரும் அவர்கள் முகத்தையே பார்க்க, இருவரும் கள்ளச் சிரிப்புடன் ஏதும் சொல்லாது அவரவர் இடத்திற்கு சென்று தனது பேக்கே எடுத்துக் கொண்டு ஒன்றாக “இன்னைக்கு க்ளாஸ் இல்ல.! அவ்ளோதான்!” என்று கத்த, அவர்களின் மற்ற நண்பர்கள் அவளை தீயாக முறைத்து க்ரவுண்டிற்கு செல்ல ஆயுத்தமாயினர்.

வெளியே சென்றவள் ஒரு நிமிடம் உள்ளே வந்து “ஆதி, உங்களை மேம் வர சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு அவளும் ரவீயும் முதல் ஆளாக க்ரவுண்டில் ஆஜராகினர்.

ஆதி “விஷ்ணு, கூட வரியா டா.?”

விஷ்ணு “ஓகே மச்சான். மச்சி கௌசி என் பேக்கே எடுத்துட்டு போறியா.? நான் வந்துடுறேன்”

கௌசி “ஓகே மச்சி. சீக்கிரம் வா.! இல்லன்னா உன் தங்கச்சி கேள்வி கேட்டே சாவடிச்சிடுவா!” என்று விட்டு சென்றாள்.

ஆதி “ஏன்டா அவங்கள மொறச்ச.?”

விஷ்ணு  “இவளுங்களுக்கு இதே வேல தான்டா. க்ரவுண்ட்ல இடம் இல்லன்னா மண்ல  தான் உட்காரணும். அதான் இவங்க வேகமாக போறாளுங்க.”

ஆதி “அப்போ சீக்கிரம் வா! மேடம பாத்துட்டு நாமலும் போவோம்” என்று விட்டு இருவரும் டிபார்ட்மெண்ட்டிற்கு சென்றனர்.

திரும்பும் வேளையில் விஷ்ணு “ஏன் ஆதி, நீ இப்போ ஜாய்ன்ட் பன்னியிருக்க.?” என்று வினவ, ஆதி கூறிய விஷயத்தைக் கேட்டு விஷ்ணு அதிர்ந்தான். இருவரும் க்ரவுண்டுக்கு விரைந்தனர். அங்கு அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.

விஷ்ணுவின் முகமாற்றத்தைக் கண்ட சுப்ரியா மேலும் அவனைக் காயப்படுத்தும் வகையில் “டேய், இன்னைக்கு திவி யாரோ ஒருத்தர் கூட ரொம்ப க்ளோஸா பேசிகிட்டு இருந்தாடா. கேட்டா அண்ணண்னு சொல்றா  ரொம்ப க்ளோஸா பேசுனா. அண்ணா மாதிரி எனக்கு தெரியல.” என்று அவனை ஏற்றி விட,

வேகமாய் வந்து திவியின் கையைப் பிடித்தான். அதில் வலியை உணர்ந்தவள், “ஷ்ஷ்.. என்ன?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, “யாரு அவன்?” என்ற கோபக்குரலில் கேட்டான் விஷ்ணு.

அவனின் கோபத்தை அவனின் பிடியிலேயே உணர்ந்தவள் மேலும் அவனை சீண்டும் வகையில் ‘எவன்’ என்று சிரித்துக் கொண்டே கேட்க,

விஷ்ணு “ஹான்..! காலைல ஒருத்தன் கிட்ட வழிஞ்சல அவன் தான்டி, யாரு அவன்? கேட்டா அண்ணான்னு சொல்ற. அண்ணான்னு சொல்லிட்டு அப்டிதான் இளிச்சிக்கிட்டு நின்னு பேசிக்கிட்டு இருப்பியா.? என்றுமே டி என்று சொல்லாத விஷ்ணு இன்று கோபத்தில் கூற, தன்னை சமன்படுத்திக் கொண்டு திவி “வார்த்தைய பார்த்து பேசு அண்ணா.!” என்றாள்.

விஷ்ணு “ச்சீ.! என்ன அண்ணான்னு கூப்டாத. யாரு அவன்.?”

திவி “அவன் அண்ணா தான்!”

விஷ்ணு “என்னாடி நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். சொன்னதையே திருப்பி சொல்ற.?” என்று திவி கன்னத்தில் பளாரென்று அறைய அவனின் ஐந்து விரல்களும் அவளின் முகத்தில் பதிந்து இதழோரம் இரத்தம் கசிந்தது.

 
திவி யாருடன் பேசினாள்?…

ஆதி விஷ்ணுவிடம் கூறியது என்ன?…

 

கனவு தொடரும்……

கதையை படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ்ச சொல்லுங்க நட்பூக்களே❤️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்