Loading

அவள கட்டிகிட்டவரு ரொம்ப நல்ல மனுஷன்…. மாதவங்கள மாதிரி வரதட்சணை அது குடு இது குடுனு எந்த தொந்தரவும் இல்ல…..ஊர்ல நல்ல மரியாதையான ஆளு….எந்த கெட்ட பழக்கமு இல்ல….. அமைதியான குணம்….ஒரு சில நேரம் இவளே எதாவது வாய் கொழுப்பா பேசுனாலும் கூட அவரு கோவமாவோ திமிராவோ பேசுனது இல்ல…. நல்லவரு….

 

ஆதியும் மீனாட்சியும் வசந்திய கிண்டல் பண்ணிட்டு இருக்க கேப்ல மீரா டீய கொண்டு வந்து குடுத்தா….குடிச்சிட்டே பேசிட்டு இருக்கும் போது…

 

“நாளைக்கு கெளம்பல நாங்க இன்னைக்கே கெளம்புறோம்”

 

“டேய் ஆதி என்ன சொல்ற நாளைக்கேவா…என்டா…வந்ததும் வராததுமா சுடு தண்ணிய கால்ல ஊத்துன மாதிரி கெளம்புறேன் கெளம்புறேனு சொல்லிட்டு இருக்க….கம்முனு இரு ரெண்டு நாள் கழிச்சுப் போ…..”

 

“என்னது ரெண்டு நாளா…. “

 

“ம்ம் ஆமா “

 

“ரெண்டு நாள் இங்க இருந்து நான் என்ன பண்றது….அது மட்டும் இல்லாம வேல செய்யாம சம்பளம் உங்க தாத்தாவா குடுப்பாரு…..”

 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது…. ரெண்டு நாள் கழிச்சுப் போங்க அவ்ளோதான்….மாமா சொல்லிட்டு வர சொன்னாரு அதான் வந்தேன்….. சொல்லிட்டேன் நான் கெளம்புறேன்….பசங்க ஸ்கூல்ல இருந்து வந்துருவானுங்க….அவனுங்கள கவனிக்காம நான் இங்க உக்காந்திருந்தா உங்க மாமா அவ்ளோதா…சாமி ஆடிருவாரு…..”

 

“ம்ம்ம் அவரு சாமி ஆடுனா நீ போய் உடுக்கை அடி போ..”

 

“அம்மா சொல்லி வச்சுக்கோ….உன் மகனுக்கு வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆகிருச்சு…இவன போய் மாமா ரொம்ப அமைதியான பையன்னு நம்பிட்டு இருக்காரு…..”

 

“அடிப்படையில நானும் அமைதியானவன்தான் ஆனா உன்ன பாத்தா மட்டும்தா வம்பிழுக்கனும்னு தோனும்….என்னமோ தெரியல….சின்ன வயசுல இருந்தே இது ஒரு வியாதி எனக்கு “

 

“சரி ஓவரா பேசாத சொன்னது நியாபகம் இருக்குல…. ரெண்டு நாள் கழிச்சுதான் கெளம்புற…சரியா “

 

“சரி அது இருக்கட்டும்….மாமா காரணம் இல்லாம இருக்க சொல்ல மாட்டாரே….என்னவாம் எதுக்காக இருக்க சொல்றாரு…..”

 

“ஓஓஓ….உனக்கு விஷயமே தெரியாதா அப்போ “

 

“சொன்னாதான தெரியும் லூசு “

 

“இல்லடா கெடா வெட்டு இருக்கு….நாளைக்கு அத முடிச்சிட்டு போங்க “

 

“அப்படியா சங்கதி…. என்ன திடீர்னு “

 

“அதான்டா எனக்கும் தெரியல…..சொல்ல சொன்னாரு சொன்னே அவ்ளோதா….மத்த எதுவும் விசாரிக்கல…சரி நான் வர்றேன் “

 

பேசிட்டு இருக்கும் போதே….வாசல வாசலவே பாத்த வசந்தி நேரம் ஆகிருச்சுனு தெரிஞ்சதும் சாப்பிடு சாப்பிடுனு மூனு பேர் கத்துறத கூட காதுல வாங்கிக்காம கெளம்பிட்டா…..

 

ஏன்மா ஸ்கூல் இன்னைக்கு மதியத்தோட முடியுதா என்ன….இப்போவே படபடப்பா கெளம்பி போகுது வசந்தி அப்படினு ஆதி கேள்வி கேக்க…..இன்னைக்கு அரை நேரம்தா ஏன்னா மதியத்துக்கு மேல சாமி ஊர்வலம் போறதால ஸ்கூல் லீவு விட்டிருக்காங்க அப்படினு மீனாட்சி மீராவ பாத்து பதில் சொன்னாங்க….அப்போவே ஆதி புரிஞ்சு கிட்டான் அம்மா கோவமா இருக்காங்கனு…..

 

நேரம் ஆகிருச்சு…காலைல இருந்து யாரும் சாப்பிடல….வந்து உக்காருங்க ரெண்டு பேரும்… சாப்பிடலாம் அப்படினு மீரா கூப்பிட….நீ முதல்ல உன் புருஷனுக்கு பரிமாறுமா நான் அப்புறம் சாப்பிடுறேன் அப்படினு அத்த சொல்ல மருமக மறுக்காம பரிமாறுனா…..ஆதி சாப்பிட்டான் ஆனா அவன் மனசுல நிம்மதி இல்ல….அவன் பண்ண தப்பு அவன போட்டு உருத்திட்டு இருந்தது….. மன்னிப்பு கேக்கனும்னு அவனுக்கு தோனுது மீரா முன்னாடி கேக்க தயங்குனான்…..

 

ஏன்னா இத்தன நாளா மீரா கிட்ட… நான்தான் பெரிய ஆளு….அப்படி இப்படினு தன்னப் பத்தியும் தன் கேரெக்டர் பத்தியும் ஒரு கோட்டையவே எழுப்பி வச்சிருந்தான்…..ஒரு தப்பு பண்ணிட்டு அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டா அது அப்படியே கீழ கவுந்துருமே அப்படினு அவன் யோசிச்சான்….அதுனால அமைதியா சாப்பிட்டு கெளம்பி வெளிய போய்ட்டான்…..

 

அவன் வீட்ட விட்டு வெளிய போன பிறகுதான் மாமியாரும் மருமகளும் சாப்பிட உக்காந்தாங்க….

 

சாப்பிடும் போது கத பேசிட்டே சாப்பிடாங்க…..

 

“ஏன் அத்த அவன் முகத்த பாத்து கூட பேசாம இருந்தீங்க….பாவம் அவன் முகமே சுருங்கிப் போச்சு….”

 

“இருக்கட்டும்மா….அவன கேள்வி கேக்காம…அவன் மேல கோச்சுக்காம…எதுவுமே பண்ணாம இருந்தோம்னா…நம்ம என்ன வேணாம் பண்ணலாம்….நம்மள கேக்க யார் இருக்கான்ற தைரியம் வந்துரும்…..என்னைக்கா இருந்தாலும் அது பெரிய ஆபத்துலதா போய் முடியும்….அது நல்லதுக்கு இல்ல “

 

“குடிச்சது தப்புதான்… இல்லனு சொல்லல….தப்பு பண்ணா தப்ப சுட்டி காட்டுங்க…அதுக்காக அவன் கிட்ட பேசாம இருக்காதீங்க….ரொம்ப கஷட்டபடுவான்….. “

 

“சுட்டிக் காட்டி புரிய வைக்குறதுக்கு அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்லமா….அவனுக்கு எல்லாமே தெரியும்…..”

 

“எது எப்படியோ அத்த….நீங்க அவன் கிட்ட பேசுங்க “

 

“பாத்துக்கலாம்மா…..”

 

“ம்ம்ம் “

 

“பொறந்ததுல இருந்து பாக்குறேன்….ஆதி ஒரு சின்ன தப்பு கூட பண்ணதே இல்ல….அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என்னோட கஷ்டத்த புரிஞ்சுகிட்டு… எனக்காக சின்ன சின்ன வேலையெல்லாம் பாத்து என் கஷ்டத்த கொறைக்க முயற்சி பண்ணிருக்கான்….எனக்கு அது வேணும் இது வேணும்னு எதுவுமே அவன் ஆசப் பட்டு கேட்டதே இல்ல…..நான் பாத்து எத வாங்கி குடுக்குறனோ அத வாங்கிப்பான்….நான் சொன்னா தட்டாம கேட்டுப்பான்….ஆனா இப்போ அவன் பண்றது எல்லாமே தலைகீழ மாறிடுச்சு….அது மட்டும் இல்லாம தப்பான வழில போயிருவானோன்ற பயமும் இப்போ எனக்குள்ள வர ஆரமிச்சிருச்சு…..”

 

“அத்த விடுங்க…. நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் நடந்துறாது….நேத்து ஏதோ தெரியாம பண்ணிருப்பான்….இல்லைனா அவனோட ஃபிரண்ட்ஸ ரொம்ப நாள் கழிச்சு பாத்த சந்தோஷத்துல அவன வற்புறுத்தி குடிக்க வச்சிருக்கலாம்…..இந்த மாதிரி எது வேணா நடந்திருக்கலாம்ல “

 

“என்னமோமா….அவன் உங்கிட்டையும் ஒழுங்கா பேச மாட்டேன்றான்….பத்தாததுக்கு புதுப் புது பழக்கம் வேற பழகிட்டு வர்றான்…..நெனச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்குமா “

 

“அவன் இன்னைக்கு என்கிட்ட பேசுனான் அத்த… நீங்க மறஞ்சு நின்னு அவன பாத்துட்டு இருந்தீங்கள்ல அப்போ சொல்லலாம்னு வந்தேன் அதுக்குள்ள வசந்தி வந்துட்டாங்க…. மறந்துட்டேன்….”

 

“பேசுனானா அதிசயமா இருக்கு “

 

“அப்படிதான் அத்த எனக்கும் இருந்துச்சு “

 

“அவ்ளோதாம்மா எத்தன நாளைக்கு இப்படியே இருக்க முடியும் அதெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வழிக்கு வந்துருவான்…..நீ அத பத்தி யோசிச்சு மனச கெடுத்துக்காத “

 

“அதையேதா அத்த நான் உங்களுக்கும் சொல்றேன்…..அவன் கிட்ட பேசாம எத்தன நாள் இருந்துற போறீங்க….பேசுங்க அத்த உங்க பையன்தான “

 

“ஆயிரம்தான் இருந்தாலும் புருஷன விட்டுக் குடுக்காம பேசுற….பயங்கரமான ஆளுதான் “

 

 

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்