வீட்டை விட்டு வெளியேற வேண்டும்… அதற்கு மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள் என்றும் அவர் பெரிய அணுகுன்டை அவர்களின் நிம்மதிக்கு அருகில் அமர்த்தி இருந்தார்…..
நாள் நெருங்க நெருங்க மனதில் அதைப்பற்றிய நெருக்கடி அதிகமாகிக் கொண்டே சென்றது….
தற்போது எடுத்துள்ள முடிவு மனதிற்கு கடினமாக இருந்தாலும் அது அவர்களின் குடும்பத்திற்கு ஒரு பெரிய விடுதலையாக அவளின் தாய் நினைத்தாள்….இதை மனதில் வைத்திருந்ததால்…தன் மகளிடம் இதைப் பற்றி எந்த கருத்துமே தெரிவிக்காமல் அமைதி காத்தாள்….
“அம்மு”
“என்னம்மா”
“வா வா தலை சீவி விடுறேன்…அம்மாவுக்கு வேலைக்கு போக டைம் ஆகிருச்சு”
“இதோ வரேன்மா….”
வாசல்படியில் நின்று ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் தடதடவென நடந்து வீட்டிற்குள் வந்தாள்….வந்தவளை கவனித்த பிறகுதான் தெரிய வந்தது அவள் பள்ளி சீருடையை அணிந்திருக்காமல் வேறு வண்ண உடையை அணிந்திருந்தாள்….
“என்ன அம்மு டிரஸ் இது….”
“அது ஒன்னு இல்லமா யூனிஃபார்ம் போட்டுட்டு போனா டிசி குடுக்குறதுக்கு பல காரணம் சொல்லனும்…அது மட்டும் இல்லாம இன்னைக்கு வீட்டுக்கு போய் நல்லா யோசிச்சிட்டு வந்து நல்ல முடிவா சொல்லுங்க அப்படினு சொல்லி கிளாஸ்ல உக்கார வச்சிருவாங்க….இந்த மாதிரி போனாதான் சரிப்பட்டு வரும் “
“அப்போ இன்னைக்கு போசதான் போறீங்களா?”
“ஆமா இன்னைக்கு பேசுனாதான் எக்ஸாம் முடிஞ்சதும் டிசி குடுப்பாங்க….அதுனாலதா இன்னைக்கு அப்பாவ வேலைக்கா போக வேணாம்னு சொல்லிருக்கேன் “
“ம்ம்ம் “
அம்மா வேலைக்கு கிளம்பி போன பிறகு…அப்பாவும் அம்முவும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை பார்க்க வேண்டி அவரின் அறைக்கு வெளியில் உள்ள ச்சேரில் அமர்ந்திருந்தார்கள்….அப்போது அவ்வழியாக வந்த அம்முவின் வகுப்பு ஆசிரியை ஒருவர் அவளைப் பார்த்தும் சென்று பேசினார்…. அம்முவின் முடிவைக் கேட்டு அதிருப்தி அடைந்த ஆசிரியையோ…இது வேண்டாம் என்று கூற….அம்முவோ அவள் பக்கம் இருக்கும் நிலையை பேசினாள்….
கவர்ன்மென்ட் ஸ்கூல்ல இந்த அளவுக்கு கோச்சிங் இருக்குமானு தெரியாது….இங்க எப்படி இருக்கும்னு நான் சொல்லிதா உங்களுக்கு தெரியனும்னு இல்ல….படிப்பு மட்டும் இல்லாம வாழ்க்கைக்கு அவசியமான ஏகப்பட்ட விஷயங்கள இங்க இருந்து கத்துக்கலாம்….
இங்க படிக்குறதுல முக்கால் வாசி பேர் ஃபீஸ் கட்ட கஷ்ட படுரவங்கதான்….ஆனாலும் ஏன் கைவிடாம இருக்காங்கனா பிள்ளைங்களோட எதிர்காலம் எந்த அளவுக்கு நல்லா இருக்கும்னு எல்லாருக்குமே தெரியும்…அதுல எந்த சந்தேகமும் இல்ல….சின்ன வயசுல இருந்து படிக்க வச்சிட்டு இப்போ கடைசி நேரத்துல வேற ஸ்கூல் மாறுறேனு சொன்னா நல்லாவா இருக்கு… இங்க இவ படிச்சா பத்தாவது முழு பரிட்சை டிசல்ட் வரும் போது இவதான் முதல் மார்க் வாங்குவானு எல்லா ஸ்டாஃபுமே உறுதியா இருக்காங்க….அது மட்டும் இல்லாம மத்த ஸ்கூல விட நம்ம ஸ்கூல்ல நல்ல ரிசல்ட் குடுக்க முடியும்னு எல்லாருமே நம்புறாங்க….நீங்க எடுத்த இந்த முடிவு உங்களுக்கு எப்படி இருக்கோ தெரியல ஆனா எனக்கு ஒரு மாதிரி கஷ்டமாவும் சங்கடமாவும் இருக்குப்பா அப்படினு அந்த ஆசிரியை அம்முவோட அப்பாவ பாத்து பேசுனாங்க….
அவங்க பேசிட்டு இருக்கும்போதே தலைமை ஆசிரியர் இவர்கள் இருவரையும் உள்ளே அழைக்க….அவரைச் சந்திக்க சென்றார்கள்….
அவர்களின் முடிவைத் தெரிவித்ததும் தன் கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மீது வைத்துவிட்டு தன்னுடைய வாட்டர் பாட்டிலைத் திறந்து தாகத்தை தணித்துக்கொண்டார் தலைமை ஆசிரியர்…..அந்த காட்சியில் பல யோசனைகளும் சோகமும் தெரிந்தது….
அவரின் குணமே அமைதிதான்…. அவர் வாக்குவாதத்தில் ஈடுபடவும் இல்லை….ஐந்து நிமிடத்தில் பதில் கூறி அவர்களை அனுப்பிவிட்டார்…..
வீடு திரும்பிய இருவருமே கணத்த இதயத்தோடு இருந்தார்கள்…..
வேலை முடிந்து வீடு திரும்பும் அம்மாவிற்கு உதவி செய்யும் வகையில் அம்மு அன்றைக்கு செய்ய வேண்டிய இரவு உணவைத் தயாரித்துவிட்டு வீட்டையும் சுத்தம் செய்துவிட்டு அம்மாவின் வருகைக்காக வாசல் திண்ணையில் காத்திருந்தாள்…..
வீட்டிற்குள் நுழையும் அம்மாவிற்கோ இவர்கள் இருவரின் மனநிலையும் ஏதோ சற்று குழப்பத்தில் உள்ளது என்பது சொல்லாமலே தெரிய வருகிறது….
உணவு உண்ணும் வேளையில் கேள்வி கேட்கத் தொடங்கினாள் அம்முவின் அம்மா….
இந்த பள்ளியில் வந்து சேர ஆயிரம் காரணம் இருக்கும்போது….இப்பள்ளியை விட்டு வெளியேறவும் சில காரணங்கள் இருக்கத்தான் செய்யும்….அதைப் புள்ளி வைத்து சுட்டிக்காட்டி வெளியேற விரும்புவரை நாங்கள் எப்போதும் தடுத்ததில்லை…. நீங்கள் தாராளமாக விடைபெறலாம்…. ஆனால் நீங்கள் விடைபெறும் அந்த நாளைப்பற்றி நினைத்து எதிர்காலத்தில் ஒரு நாளாவது வருந்துவீர்கள்…. ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை சிறப்பாக எழுதி முடித்து விட்டு நல்ல மதிப்பெண்களோட செல்ல என் வாழ்த்துக்கள்…. அப்படினு சார் சொன்னாருமா….அவரு எதாவது பேசிருந்தா ஒரு மாதிரி தெரிஞ்சிருக்காது …. இப்போ ஏதோ ஒன்னு உறுத்துது…என்னமோமா…என்று முனுமுனுத்தாள் அம்மு…..
அவ்வுளவுதானா? இதுக்குப் போய் என்று அவள் தாய் சலிப்பாய் பேச….இல்லை இல்லை என்று அவள் அப்பா வேறொரு விஷயத்தையும் சொன்னார்….நீ இந்த ஸ்கூல விட்டுப் போனா இந்த ஸ்கூல்ல ஃபர்ஸ்ட மார்க் வாங்குறதுக்கு போட்டில பல பேர் இருக்காங்க….ஆனா நீ இந்த ஸ்கூல விட்டு போனீனா நீ மார்க் வாங்குவியானே தெரியல…. ம்ம் அதையும் பாக்கதான போறேன்….அப்படினு சொல்லிட்டு எழுந்து போனாரு இவங்க சார் அப்படினு அவர் சொல்ல….
விடு அம்மு… படிக்குற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்…அந்த ஸ்கூல்ல படிக்குறதாலதான் நீ முதல் மார்க் வாங்குறனு அவரு நெனச்சிட்டு இருக்காரு….ஆனா எங்களுக்குதான தெரியும் எங்க புள்ள எங்க படிச்சாலும் முதல் மார்க்குதா வாங்கும்னு….மத்தவங்க நம்மள மட்டம்தட்டி பேசும் போது அவங்க கிட்ட பதில் பேசுறதும் வேஸ்ட்டுதா கோவப்படுறதும் வேஸ்ட்டுதா…அதையே நெனச்சு ஃபீல் பண்றதும் வேஸ்ட்டுதா….அதுக்கு உண்மையான சரியான பதில் எது தெரியுமா…நீ அந்த ஸ்கூல்ல வாங்குற ஃபஸ்ட் மார்க்க விட ஒரே ஒரு மார்க்காவது அதிகமா வாங்கனும்….எப்போதுமே நம்ம சொல் பேசக் கூடாது நம்ம செயல்தான் பேசனும் புரியுதா அப்படினு அம்மா சொன்ன ஆழமான அறிவுரை அவளுக்கு நல்லா மனசுல பதிஞ்சது….
ஒன்பதாவது எப்படா முடியும்னு காத்துட்டு இருந்தவ…அவளுக்கு புடிச்ச மாதிரி அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க ஃபிரண்ட்ஸ் கூட நடந்து போற தூரத்துல இருக்க அரசு பள்ளில பத்தாவது சேர்ந்தா…..
என்னதான் அவ நெனச்ச மாதிரி வாழ்க்கை மாறி…பேசி சிரிச்சு சந்தோஷமா இருந்தாலும்……
…கதை தொடரும்…