Loading

 

 

 

அதே சித்திரை திருநாள் காலை நேரம்…

 

அம்ரிதா கோபத்தோடு அமர்ந்து இருக்க மஞ்சுளா அவளருகில்‌ நின்று இருந்தாள்.

 

“அடியே கொல்லுதே” என்ற பாடல் வரியை பாடிக் கொண்டே வந்த அர்ஜுன் அம்ரிதாவை பார்த்து கண்ணடித்தான்.

 

“அழகோ அள்ளுதே” என்ற வரியில் அருகில் இருந்த மஞ்சுளாவின் பக்கம் திரும்பி அவளது தோளை பற்றி சுற்றி விட்டான்.

 

மஞ்சுளாவிற்கு சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு இருவரையும் வேடிக்கை பார்த்தாள்.

 

“உலகம் சுருங்குதே” என்ற வரியில் அம்ரிதாவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

 

“இருவரில் அடங்குதே” என்ற வரியில் அம்ரிதாவையும் தன்னையும் சுட்டு விரலால் காட்டினான்.

 

காதில் ஏர் போடை மாட்டிக் கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருந்தான் அர்ஜுன். அம்ரிதா அவனை முறைத்துக் கொண்டே இருந்தாள்.

 

பாடல் வரிகளை விடாமல் அவன் பாடிக் கொண்டிருக்க, அம்ரிதாவிற்கு அது வரை கட்டு படுத்தி இருந்த கோபம் வெடித்து விட “இவன..” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 

பழக்கூடையில் இருந்த கத்தியை வேகமாக தூக்கி சமையலறை பக்கம் எறிந்து விட்டாள் மஞ்சுளா.

 

“அத ஏன்டி எறிஞ்ச? இவன் தொல்லைக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டனும்” என்று வேகமாக எழுந்தவள் அவனது குரல்வளையை பிடிப்பது போல் வந்தாள்.

 

“பாடாத டா.. கொன்னுடுவேன்”

 

அர்ஜுன் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்க “இப்ப ஏன் பொங்குற நீ?” என்று கேட்டாள் மஞ்சுளா.

 

“உன் கால் சரியானதும் ஆட்டம் ஓவரா இருக்கு.. இரு நான் திரும்ப கட்டு போட வைக்கிறேன்”

 

“எனக்கு பதில் சொல்லப்போறியா இல்லையா?”

 

“நான் கல்யாணம் பண்ணிட்டு இவன் கூட‌ வந்துடனும்னு அடம் பிடிக்கிறான். அம்மா மாமாவ எப்படி விட்டுட்டு போவேன்?”

 

“அம்மா சந்திராக்கா கூடவே கல்யாணம் பண்ணப்போவே போயிட்டாங்க. உன் கூட இருக்க கொடுமைய விட சந்திராக்கா நூறு மடங்கு பெட்டர்னு அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சு”

 

“துரோகி.. இவன மாதிரியே பேசாத”

 

“நியாயம் அதான…? அண்ட் செந்தில் சார பத்தி கவலை படாத.. அவரே உங்கள போக சொல்லிட்டாரு. நீ நல்ல மருமக மாதிரி நடிக்காம பெட்டிய கட்டு காத்து வரட்டும்”

 

அம்ரிதா அமர்ந்து இருந்த அர்ஜுனையும் மஞ்சுளாவையும் முறைத்து பார்த்தாள். பிறகு சாப்பிடாமலே கிளம்பினாள்.

 

இப்போது ஒரு நேர்காணல் இருக்கிறது. அதுவும் நேரலையாக. சித்திரை திருநாளை முன்னிட்டு திவ்யாவை நேர்காணலுக்கு அழைத்து இருந்தனர். கடந்த ஐந்து மாதங்களில் அர்ஜுனின் கை கால் இரண்டும் சரியாகி இருந்தது. திவ்யா நடிப்பு வேண்டாம் என்று முடிவு செய்ததை வெளியே இன்னும் சொல்லவில்லை.

 

அதை இன்றைய நேர்காணலில் சொல்லி விடலாம் என முடிவு செய்து இருந்தாள். அதற்கு உதவி செய்யதான் மஞ்சுளாவை வரவழைத்தாள். அவளும் யஷ்வந்த்திடம் கேட்டு விட்டு வந்து சேர்ந்தாள்.

 

அம்ரிதாவிற்கு மேக் அப் போட்டு முடித்தவள் “இது தான் நான் போடுற கடைசி மேக் அப்.. அடுத்து உன் கல்யாணத்துக்கு தான் போடனும்” என்று மஞ்சுளா கூற அம்ரிதா முகத்தை சுருக்கினாள்.

 

“அவன் தான் இங்க கல்யாணம் கூட பண்ண தயாரா இல்லையே.. இந்தியா விட்டு போயிட்டு தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறான்”

 

“சோ வாட்? என் ஆளு கிட்ட சொல்லி நீங்க எங்க இருந்தாலும் நான் பறந்து வந்துட மாட்டேன்”

 

இருவரும் பேசியவாறே காருக்கு வர “நீ எங்க வர்ர?” என்று மஞ்சுளாவை கேட்டாள்.

 

“எனக்கு வீட்டுல இருக்க போர் அடிக்குது. அவரு வேலை வேலைனு வேலை பின்னாடியே சுத்துறாரு. நான் அம்ரு கூட இன்டர்வியூ போயிட்டு வரேன்னு சொன்னேன். சரினு சொல்லிட்டாரு.”

 

“நண்பிடி.. வா ஒன்னா ஊர் சுத்தலாம்” என்று கூறி தோளில் கை போட்டுக் கொண்டு சென்றாள்.

 

இருவரும் நேர்காணல் நடக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு வந்ததும் மீண்டும் ஒரு முறை மேக் அப் சரி செய்யப்பட்டது. பிறகு அவளுக்கு மைக் எல்லாம் மாட்டி விட்டு மஞ்சுளா விலகிக் கொள்ள அம்ரிதாவை பேட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

முதலிலேயே என்ன பேசப்போகிறார்கள் என்று கூறி வைத்திருந்ததால் அம்ரிதா தைரியமாக சென்று அமர்ந்தாள். அவளை பேட்டி காணும் பெண் சில வார்த்தைகள் பேச அம்ரிதாவும் பேசினாள்.

 

பிறகு ஆரம்பிக்கலாமா என்று கேட்டு பேட்டியை ஆரம்பித்தனர். திவ்யான்ஷியை பற்றிய சிறிய அறிமுகத்தோடு ஆரம்பித்தனர். பிறகு பேட்டி காணும் பெண் சில கேள்விகளை கேட்க திவ்யான்ஷி ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பதில்களை எல்லாம் கூறினாள்.

 

முதல் பத்து நிமிடம் முடிந்து விளம்பரம் போடும் நேரம். எதையாவது ஆர்வமாக கேட்க வேண்டும். அதற்கு திவ்யா என்ன பதில் சொல்கிறாள் என்ற ஆர்வத்துடனேயே விளம்பரத்தை போட வேண்டும் என்று கூறி விட்டனர்.

 

அதற்காக “கூடிய சீக்கிரமே கல்யாணம்னு நீங்க அவார்ட் பங்சன்ல சொன்னீங்க. யாரு கூடனு சொல்லாம போயிட்டீங்க. யாருனு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க அம்ரிதா புன்னகைத்தாள்.

 

அதோடு திரும்பி பார்க்க மஞ்சுளாவோடு அர்ஜுன் வந்து அவள் முன்னால் நின்றான்.

 

ஒரு நிமிடம் அதிர்ந்தவள் உடனே பார்வையை மாற்றிக் கொண்டாள். திடீரென எதோ தோன்ற “யாருனு சொல்லுறது என்ன? காட்டிட்டா போச்சு” என்று அர்ஜுன் பக்கம் கை காட்டினாள்.

 

இதை முன்பே திட்டமிடாததால் எல்லோருக்கும் அதிர்ச்சி தான். ஏன் அர்ஜுனுமே சற்று அதிர்ச்சியோடு “நானா?” என்று உதட்டசைவில் கேட்டான்.

 

திவ்யா தலையாட்ட அந்த பெண்ணுக்கு அர்ஜுனை அழைக்கும் படி கட்டளை வந்தது. உடனே எழுந்து நின்று “சார்.. ப்ளீஸ்..” என்க மஞ்சுளா அர்ஜுனை பிடித்து தள்ளி விட்டாள்.

 

உதட்டில் சிரிப்போடு படியேறி வந்தான். அதற்குள் அவன் அமர்வதற்கு திவ்யான்ஷியின் அருகில் இருக்கை போட எடுத்து வந்தனர்.

 

அதை மறைக்க அந்த பெண் அர்ஜுனை வரவேற்பதை படம் பிடித்தனர்.

 

திவ்யாவும் எழுந்து நிற்க அர்ஜுன் அருகில் வந்தான்.

 

“இங்க என்னடா பண்ணுற? லைவ் சோ.. பார்த்து..” என்று மெல்லிய குரலில் அவள் கூற “பார்க்கலாம்” என்றான்.

 

இருவரும் அமர்ந்த பின் அர்ஜுனுக்கு மைக் கொடுக்கப்பட்டது. அப்பெண் மீண்டும் பேசினாள்.

 

“சார்.. உங்கள பத்தி இன்ட்ரோ.. மக்களுக்காக”

 

“ஹாய்.. நான் அர்ஜுன் கீர்த்திவாசன். உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச டைரக்டர் செந்தில்குமார்.. அவரோட பையன் நான்.. அண்ட்..” என்று திவ்யாவை திரும்பி பார்த்தான்.

 

திவ்யா பதில் சொல்லாமல் சிரிப்போடு திரும்பிக் கொண்டாள்.

 

“உங்க திவ்யான்ஷி மேடமோட ஃபியான்ஷி”

 

“வாவ்.. உங்கள பத்தி கேள்வி பட்டு இருக்கோமே தவிர பார்த்தது கூட இல்ல.. நைஸ் டூ மீட் யூ”

 

அவனை வரவேற்ற சில நொடிகளில் விளம்பர இடைவேளையை அறிவிக்கச் சொல்லி அவளுக்கு கட்டளை வந்தது.

 

அவளும் சொன்னதை செய்து முடிக்க தொலைகாட்சியில் விளம்பரம் ஓடியது. திவ்யா வேகமாக அர்ஜுன் பக்கம் திரும்பினாள்.

 

“இங்க என்னடா பண்ணுற?”

 

“உன்ன மிஸ் பண்ணனா அதான்”

 

“சுத்தி ஆளுங்க இருக்காங்க அடிக்க மாட்டேன்னு தைரியமா?”

 

“ஆமா”

 

“ஏன் வந்த?”

 

“சும்மா தான்டி” என்று கூறும் போதே அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் வந்து விட்டார்.

 

“சார்… ” என்றதுமே இருவரும் எழுந்து நின்றனர்.

 

“நீங்க இன்டர்வியூ கண்டினியூ பண்ணுவீங்களா?” என்று அவர் கேட்க “கண்டிப்பா… ” என்றான்.

 

“இவன் எதையாச்சும் உளறி வச்சா நான் பார்த்துக்குறேன்” என்று திவ்யா கூற அர்ஜுன் அவளை முறைத்து வைத்தான்.

 

“ஓகே மேம்.. கொஞ்சம் கேள்விகள் மாறும். கால் பண்ணலாம்னு நம்பர் கொடுத்துருந்தோம். சோ கால் பண்ணுறத கட் பண்ணிட்டு நீங்க மட்டும் பேசுறதோட முடிச்சுக்கலாம்”

 

“ஓகே” என்று சம்மதம் கூறி விட்டு அமர்ந்து கொண்டாள்.

 

“சார்க்கு மைக்?”

 

“வேணாம். இதுவே போதும்” என்று அர்ஜுன் கூறி விட்டான்.

 

இருவரும் அமர்ந்த பின்பு அந்த இயக்குனர் பேட்டி எடுக்கும் பெண்ணிடம் பேசச் சென்று விட்டார்.

 

“எதாவது சொதப்பி வை மகனே.. உனக்கு அப்புறம் இருக்கு”

 

“அப்போ என் கூட வர ஒத்துக்கோ”

 

“முடியாது”

 

“அப்போ என் இஷ்டத்துக்கு தான் பேசுவேன்”

 

“அடி வாங்குவ”

 

“பார்க்கலாம்.. “

 

இருவரும் மைக்கை மறைத்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

 

மீண்டும் நேர் காணல் ஆரம்பித்து.

 

“நம்ம கூட திவ்யான்ஷி மேம் அண்ட் அவங்க வருங்கால கணவர் அர்ஜுன் கீர்த்திவாசன் சார் இருக்காங்க வாங்க பேசலாம்” என்று ஆரம்பித்தாள்.

 

“சார்..‌ உங்க பேரு பெருசா இருக்கே..”

 

“தாத்தா பேரு.. அவர் ஞாபகமா அப்பா எனக்கும் வச்சுட்டார்”

 

“ஓ… உங்க அப்பா ‌சினிமால இருக்கார். அம்மாவும் ஒரு அற்புதமான நடிகை. உங்க வருங்கால மனைவியும் பெஸ்ட் ஆக்ட்ரஸ். நீங்களும் பிற்காலத்துல சினிமாவுக்கு வர வாய்ப்பு இருக்கா?”

 

திவ்யா அர்ஜுனை பார்த்து புருவம் உயர்த்தினாள். அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. அவனும் ஒரு நொடி அவளை பார்த்து விட்டு “இல்ல.. எனக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்ல” என்றான்.

 

‘ஒழுங்கா பேசுறான் சமாளிச்சுப்பான்’ என்று தோன்றியது திவ்யாவுக்கு.

 

“அப்போ உங்க ப்ரஃபஷன்?” என்று கேட்டு அவன் கூறும் விவரங்களை அறிந்து கொண்டாள்.

 

அதற்குள் திவ்யாவோடு அர்ஜுனும் நேர்காணல் வந்திருக்கும் செய்தி வெளியே தீயாக பரவ அந்த நிகழ்ச்சியை பார்க்கும் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

அது தானே அந்த சேனலுக்கு வேண்டும். சில நிமிடங்கள் இருவரிடமும் சொல்லி கொடுத்த கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

அடுத்ததாக அவளுக்கு வேறு ஒரு கட்டளை வந்தது.

 

“நீங்க கல்யாணத்துக்கு அப்புறமும் உங்க நடிப்ப தொடருவீங்களா மேம்? ஏன்னா நிறைய பேர் கல்யாணம் ஆகிட்டா அதோட நடிப்ப விட்டுடுறாங்க”

 

அவள் கேட்ட கேள்விக்கு திவ்யா அர்ஜுனை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

 

அதை கேமராக்கள் க்ளோஸப்பில் படம் பிடித்துக் கொண்டிருந்தன.

 

‘பதில் சொல்லு’ என்பது போல் அவள் சைகை செய்ய அர்ஜுன் சிரித்துக் கொண்டே “நடிக்க மாட்டா” என்றான்.

 

உடனே திவ்யாவும் கையை விரித்தாள்.

 

“அவ்வளோ தான்”

 

“வாட்? என்ன மேம் நீங்களும் எல்லார மாதிரியும் கல்யாணம் ஆனதும் கனவ விட்டுறேன்னு சொல்லுறீங்க?”

 

திவ்யா எதோ சொல்ல வர “அவ கனவு இது இல்லையே?” என்றான் அர்ஜுன்.

 

“இல்லையா?”

 

“இல்ல.. இந்த மேடமோட கனவு ஆர்கிடெக் படிக்குறது” என்று கூறும் போது திவ்யா சந்தோசமாக அவனை திரும்பி பார்த்தாள்.

 

“ரியலி.. வாவ்.. பட் நடிச்சுட்டே படிக்கலாம் இல்லையா?”

 

“இல்ல.. நடிப்பு என் லைஃப்ல ஆக்ஸிடென்ட்டா தான் வந்துச்சு. சோ அத விடுறதுல எனக்கு எந்த கவலையும் இல்ல”

 

திவ்யா அர்ஜுனை பார்த்து கண்ணால் பேசிக் கொண்டே இதை கூற அர்ஜுன் முகத்திலும் புன்னகை.

 

அதை பார்த்துக் கொண்டிருந்த நேயர்களுக்கு இதை நம்பவே முடியவில்லை.

 

“என்னடா கண்ணாலயே பேசிக்கிறாங்க?” என்று ஆச்சரியபட்டனர்.

 

போகப்போக நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. விளம்பரம் போடுவதை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

திவ்யா நடிப்பை விட்டு விடுவதாக கூறியபின் விளம்பர இடைவேளை விடுவது சேனலின் வருவாய்க்கு நல்லது என்று விட்டு விட்டனர்.

 

கேமரா அணைத்ததும் “மேம்.. நிஜம்மாவே இனி நீங்க நடிக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

 

“ஆமா..”

 

“ச்சே.. ரொம்ப மிஸ் பண்ணுவேன் மேம்”

 

திவ்யா ஒன்றும் சொல்லாமல் சிரித்து வைத்தாள். அர்ஜுனுக்கும் திவ்யாவிற்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர்.

 

“கேள்வி கேட்டா நீ பதில் சொல்லாம என்ன சொல்ல சொல்லுற?”

 

“பின்ன.. சும்மாவே உட்கார்ந்து இருப்பியா.. பதில் சொல்லு..”

 

“உன்ன வீட்டுக்கு போகும் போது பார்த்துக்கிறேன்” என்று முறைத்தான்.

 

மீண்டும் ஆரம்பமானது.

 

“இவங்க கனவு ஆர்கிடெக்னா அத இத்தனை வருசத்துல நிறைவேற்றி இருக்கலாமே சார்…”

 

“ஆக்ட்சுவலி அப்போ இருந்த நிலைமை படிக்க முடியல. ஐடி தான் படிச்சேன். அண்ட் என் கூட இருக்கேன்னு சொன்ன இவனும் கூட இல்ல. நடிக்குற பிசில அதெல்லாம் காண்சன்ட்ரேட் பண்ண முடியல”

 

“உங்கள பார்த்தா லவ்வர்ஸ் மாதிரி தெரியல.. கல்யாணமே ஆன மாதிரி தெரியுது”

 

திவ்யா சிரித்தாள். அர்ஜுன் உடனே “ஆகி இருக்க வேண்டியது தான். ” என்றான்.

 

“உங்க காதல் கதைய சொல்லுங்க” என்றுதும் திவ்யாவிற்கு சிரிப்பு பீறிட்டது. அவசரமாக வாயை மூடிக் கொண்டு அர்ஜுனை பார்த்தாள்.

 

அவளது சிரிப்பை பார்த்து தானும் சிரித்தான்.

 

“காதல் கதைய கேட்டா இவ்வளவு சிரிக்கிறீங்களே?”

 

“எங்க கதையில காதல் எல்லாம் இல்ல.. மோதல் மோதல் மோதல்.. வேற ஒன்னுமே கிடையாது”

 

“ஓ மை காட்”

 

“ரியலி.. காலையில வரும் போது கூட சண்டை போட்டுட்டு தான் வந்தேன்.”

 

“ச்சே.. மோதல் காதல்ல முடியும்னு பார்த்துருக்கேன். இங்க காதல் முழுக்க மோதல் தானா?”

 

“கிட்டத்தட்ட”

 

“நீங்க எப்போ மீட் பண்ணிக்கிட்டீங்க?”

 

“மீட்? அது சின்ன வயசுல நடந்தது. அர்ஜுன் என்னோட ஸ்கூல் சீனியர்”

 

“சீனியரா? நீங்க ரிலேட்டிவ்ஸ் இல்லையா?”

 

“இல்ல”

 

“ஊருக்குள்ள எவ்வளவு கதைங்கள கிளப்பி விட்டுருக்கானுங்க.. நானும் நம்பி தொலைச்சுட்டேன். இப்போ நீங்களே டீடைல்ஸ சொல்லிடுங்களேன்”

 

“அர்ஜுன் நான் இருந்த ஊர்ல தான் இருந்தான். பக்கத்து வீடு. ஸ்கூல் சீனியர். சேர்ந்து விளையாடுவோம்‌. சண்டை போடுவோம். நிறைய பண்ணி இருக்கோம். பல தடவ என் கிட்ட அடி வாங்கி இருக்கான்”

 

திவ்யா இதை சொல்லி விட்டு சிரிக்க

அவள் தலையை பிடித்து அர்ஜுன் ஆட்ட மேலும் சிரித்து வைத்தாள்.

 

“அடிப்பீங்களா மேம்?”

 

“என் கிட்ட கேளுங்க.. எப்படி அடிப்பானு.. ரத்த காயமே பார்த்து இருக்கேன்.”

 

“திவ்யா மேம்னாலே பொறுமை தான். அது உங்க கிட்ட இல்ல போல”

 

“கிடையவே கிடையாது. கோபம் வந்தா நேரா வைலன்ஸ் தான்”

 

“அப்புறம் எப்படி உங்க காதல்?”

 

“அத நான் சொல்லுறேன். பேமிலில பேசி முடிவு பண்ணிட்டாங்க. அப்போவே எங்களுக்கு எங்கேஜ்மெண்ட் முடிஞ்சு போச்சு. பட் கல்யாணம் பண்ண முடியல. நான் நடிக்க வந்துட்டதால அர்ஜுன் வெயிட் பண்ணான்.

 

அவனும் அடிக்கடி பாரின் போக வேண்டிருந்தது.‌ ரெண்டு பேரும் கரியர்ல செட்டில் ஆகலாம்னு டிசைட் பண்ணிட்டோம். இப்போ எங்களுக்கு மேரேஜ் பண்ணிக்கனும்னு தோனுச்சு. சோ…”

 

அவள் சொல்வதில் பாதி பொய் என்றாலும் அர்ஜுன் புன்னகை மாறாமல் அமர்ந்து இருந்தான். அவள் தான் சொல்லியிருக்கிறாளே நம்முடைய உண்மை நிலை அடுத்தவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை என்று.

 

இப்படியே கேள்வி தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் இருவரும் மாறி மாறி பதில் சொன்னார்கள். அதோடு பேசி முடித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

 

போனை அணைத்து தூக்கி போட்ட அபிமன்யு கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

 

திவ்யாவும் அர்ஜுனும் கண்ணால் பேசிக் கொள்வதும் அவர்களது சந்தோசமான முகமும் அவனுக்கு அதிகமாக வலித்தது. யாருக்காக அவன் தன்னை இவ்வளவு வளர்த்துக் கொண்டானோ அவள் இன்று வேறு யாருடனோ சந்தோசமாக இருக்கிறாள்.

 

அவளை கடந்து செல்வதை தவிர எதுவுமே மிஞ்சவில்லை. போனை அப்படியே போட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

 

அர்ஜுனும் திவ்யாவும் காரில் அமர்ந்து இருக்க “அவர் எனக்கு கார் அனுப்புறேன்னு சொல்லிட்டாரு.. நான் அதுல போறேன் . நீங்க கிளம்புங்க” என்று மஞ்சுளா கையாட்டினாள்.

 

அம்ரிதா காரை ஓட்ட அர்ஜுன் அமர்ந்து இருந்தான். கை சரியாகி விட்டாலும் அவன் கார் ஓட்ட அம்ரிதா அனுமதிக்கவில்லை.

 

“எதுக்கு வந்த? இப்பவாச்சும் சொல்லு”

 

“உன்னோட கடைசி இன்டர்வியூ.. நேர்ல பார்க்கலாம்னு தோனுச்சு”

 

“உன்னால கான்சப்டே மாறி போச்சு”

 

“உன்னால தான்.. உன்ன யாரு என்ன கூப்பிட சொன்னது?”

 

“சரி என்னால தான்… போதுமா?”

 

“அப்படி வா வழிக்கு”

 

“நான் ஆர்கிடெக் படிக்கனும்னு ஒரே ஒரு தடவ தான‌ சொல்லி இருக்கேன். ஞாபகம் வச்சுருக்க போல?”

 

“மறப்பானா? அம்மாவோட கனவு தெரியல.‌ நான் நிறைவேத்தல.‌ உன் கனவு தெரியும். சோ கண்டிப்பா அத செய்யனும்ல. நம்ம கல்யாணம் முடிஞ்சதும் அங்க வந்து படி”

 

“இங்க படிச்சா?”

 

“இங்க உன்னால காலேஜ் லைஃப்ப என்ஜாய் பண்ண முடியாது. உன் நடிகை ஃபேம் சுத்திட்டே இருக்கும். உன்ன யாருனே தெரியாத இடத்துல அம்ரிதாவா படி.. மிஸஸ் அர்ஜுனா படி. அது தான்‌ நல்லது”

 

“மிஸஸ் அர்ஜுனா? நான் கல்யாணத்துக்கு சரினு சொல்லவே இல்லையே?”

 

“உன் சம்மதம் யாருக்கு வேணும்?”

 

“சம்மதம் கேட்கலனா தாலி கட்டிக்க மாட்டேன்”

 

“அடம்பிடிச்சா சடையோட இழுத்துட்டு போய் மேடையில உட்கார வச்சு கட்டுவேன்”

 

“நான் அங்க இருக்க தேங்காய எடுத்து உன் மண்டைய உடச்சுட்டா?”

 

“முடிஞ்சா செய்டி.. அதையும் பார்க்கலாம்”

 

“செய்ய மாட்டேன்னு நினைக்காத செய்வேன்”

 

“அத தான் பார்க்கலாம்ங்குறேனே..”

 

இருவரும் பேசிக் கொண்டே இருக்க கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது.

 

முற்றும்.

 

(இதுங்க கல்யாணத்த ஏன் எழுதலனு கேட்காதீங்க. அங்கயும் எதாச்சும் சண்டை போட்டு நம்ம தலைய உருட்டுங்க. அதுக்குள்ள மஞ்சு மாதிரி நாமலும் ஓடி போயிடுவோம்… வாங்க வாங்க)

 

இந்த கதையோட குறை நிறை பிடிச்சது பிடிக்காதது நல்லது கெட்டது இன்னும் என்னலாம் இருக்கோ எல்லாத்தையும் சொல்லுங்க. நான் அதுக்காக காத்துட்டு இருப்பேன். இந்த கதைய சீக்கிரம் முடிக்கலாம்னா ஓவரா இழுத்துடுச்சு. க்ளைமேக்ஸ் இழுக்குற மாதிரி இருக்குனு தோனுச்சுனா சாரி பா. மத்த எல்லாம் உங்க கையில. நீங்க சொல்லுறத நான் ஏத்துக்கிறேன். நன்றி.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
8
+1
2
+1
4

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  8 Comments

  1. Meenakshi Subburaman

   💞டேய் கடைசி எழில் என்னடா எதுவோ நிறைய விட்டுப்போன மாதிரி இருக்கு

   💞அம்மு நீ என் மின் மினி இதோட அர்த்தம் எதுவோ முழுமையாக இல்லாமல் இருக்க மாதிரி இருக்கு

   💞 லெனின் எங்க போனான்

   💞 செந்தில் மாமா எங்க போனார்

   1. hani hani
    Author

    செந்தில் முதல்லயே சொல்லிடுவார். நீங்க போங்க னு. லெனின் ஜஸ்ட் ஃப்ரண்ட். அவன் கதையில கொஞ்சம் தான் வருவான். பெயர் .. அர்ஜுன்க்கு அம்மு ஒரு மின்மினி.. அத தான் அப்படி வச்சேன்.

    1. Meenakshi Subburaman

     மின் மினி அவ நடித்த முதல் படத்தில் அவள் பெயர் தானே மின்மினி திவ்யான்ஷி

  2. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.