Loading

 

அபிநயம் காட்டும் ஆரணங்கே!

 

“அனன்யா…”

 

“சொல்லு விஜய்…”

 

“நான் உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா?”

 

“கேளுங்க… என் கிட்ட ஏன் பெர்மிஷன் கேட்கிறீங்க…”

 

“இது உன் பெர்சனல் அதான்…”

 

“ஓஹ்…”

 

“உனக்கு நிஜமாவே இந்த ஃபீல்ட்… அதாவது ஆக்டிங் பிடிக்குமா?” என்று நேரடியாகவே கேட்டான் விஜய்.

 

அவளோ அவனை பார்த்து இதழ் பிரித்து சிரித்து, “தாங்கஸ்…” எனக் கூறி இன்னும் சிரித்தாள்.

 

“இப்ப ஏன் சிரிக்கிற…”

 

“இதுவரை யாரும் இப்படி ஒரு குவஸ்டீனை கேட்டது இல்ல… அதான்…” என்றவள் தொடர்ந்து, “நீங்க கேட்ட குவெஸ்டீனுக்கு உண்மையான ஆன்சர் பண்ணனுமா? இல்ல பொய்யாவா?” என்று கேள்வியுடன் அவனை பார்த்தாள்.

 

“ஹ்ம்ம்… பொய்யாவே ஆன்சர் சொல்லு…”

 

“எனக்கு இந்த ஃபீல்ட் ரொம்ப ரொம்ப ரொம்பபபபப பிடிக்கும் விஜய்…”

 

“என்ன சொல்ற… அப்போ உண்மையான ஆன்சர்?”

 

“நான் சொன்னதுக்கு ஆப்போசிட் தான் உண்மையான ஆன்சர்…” என்று சொல்லி கண்ணடித்தாள் அனன்யா.

 

“ஓகே… உனக்கு பிடிக்காத ஆக்டிங்கை நீ ஏன் செய்யறேன்?”

 

“கம்பல்ஷன்..‌.”

 

“வாட் கம்பல்ஷனா!” என்றான் அதிர்ச்சியாக!

 

“ஏன் விஜய் ஷாக் ஆகறீங்க… ரிலாக்ஸ்!”

 

“எனக்கு புரியல அனன்யா…”

 

“என் வீட்டுல அப்பா ஒரு மிகப்பெரிய ஆஸ்கார் அவார்ட் வாங்கின ஆக்டர்… அம்மாவும் ஒரு சிறந்த ஆக்ட்ரஸ்… தேசிய விருதெல்லாம் நிறைய வாங்கி இருக்காங்க… அக்கா ஒரு வளர்ந்து விட்ட இளம் கதாநாயகி… இளைஞர்கள் மத்தியில் அதிக மவுசு கூட இருக்கு… இப்படி என்ன சத்தி இருக்குற எல்லாரும் ஆக்டிங் ஃபீல்ட்… சோ, என்னையும் கம்பல் பண்ணி இழுத்து விட்டுட்டாங்க…” என்று வெறுமையான குரலில் சொன்னாள் அவள்.

 

மேலும், “எனக்கு இதுல சுத்தமா இன்ரெஸ்ட் இல்ல… ஆனாலும் கட்டாயத்தின் பேர்ல செஞ்சிட்டு வரேன்…” என்றாள்.

 

“இது எல்லாம் கூட ஓகே… நீ ஏதாவது பங்ஷன்ல போட்டுட்டு வரும் டிரஸ் எதுலையும் நீ கம்ஃபர்ட்டபிளா இருக்க மாட்ட… அத ஏன் வியர் பண்ற…” என்று பல நாட்களாக தோன்றும் கேள்வியை இன்று கேட்டு விட்டான் விஜய்.

 

“இதுவும் கம்பல்ஷன் தான் விஜய்… நான் போடற டிரெஸ்ஸில் இருந்து சாப்பிடும் சாப்பாடு வரைக்கும் எல்லாம் கம்பல்ஷன் தான்… சொல்ல போனா நான் காலையில எழுந்துக்கும் டைமில் இருந்து தூங்கும் டைம் வரைக்கும் எல்லாமே லிஸ்ட் இருக்கும்… இத பண்ணு… அத பண்ணாத… இப்படி இரு… இப்படி இருக்காத… இப்படி பேசு… அப்படி பேசாத… இப்படி எல்லாத்துக்கும் ஒரு ரூல் புக் இருக்கு… ஆரம்பத்துல இது எல்லாம் ரொம்பவே வெறுத்தேன்… எதையும் பண்ண மாட்டேன்னு அடம் பிடிப்பேன்… அப்படி செய்த அடுத்த நிமிஷம் லைனா ஃபோன் வரும்… அப்பா ஹிந்தியில திட்டுவார்… அம்மா தமிழ்ல திட்டுவாங்க… என் அக்கா இங்கிலிஷ்ல திட்டுவாங்க… அம்மா அப்பா ஆச்சும் பரவாயில்ல… அக்கா எல்லாத்தையும் பச்சையாவே கேட்டு திட்டுவா… இது எல்லாத்தையும் கேட்டு கேட்டு அப்படியே பழகி போச்சு விஜய்…” என்று உயிர்ப்பற்ற நிலையில் இருந்து பேசினாள்.

 

“உனக்கு பிடிக்காது ன்னு சொல்லிட்டே ஆக்டிங்கை நீ ஆவ்சமா பண்றீயே அனன்யா…”

 

“ரியல் லைஃப்ல நடிச்சி நடிச்சி… ரீல்ல செமயா நடிக்க கத்துக்கிட்டேன் போல விஜய்…” என்று விரக்தியில் கூறியவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.

 

‘இந்த குடும்பத்துல இப்படி ஒரு பொண்ணா!’ என்று வியக்கவும் செய்தான்.

 

ஒரு கியூட் சாப்ட் ஆன காதல் கதையை பார்க்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க செல்லமே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்