நாள் 2
வானம்
தேடும்
நிலவிற்கு கூட
தனிமை
தேவைப்படுகிறது
உலா வருவதற்கு
வீட்டிலிருந்து கிளம்பிய சமுத்ரா தன் அலுவலகத்தை அடைந்தாள். வழக்கம் போல் அவளின் மேற்பார்வைக்காக வேலைகள் தேங்கி நிற்க அனைத்தையும் சரிபார்த்து கையெழுத்திட தொடங்கினாள் சமுத்ரா.
சமுத்ரா அட்வடைசிங் ஏஜென்சி ஒன்றில் துணை இயக்குனராக பணிபுரிகின்றாள். அவளின் முன்னால் முதலாளியின் மகனான உதய்யின் பெரும் பங்கான பண உதவியோடு மூன்று வருடங்களுக்கு முன் இந்த அட்வடைசிங் ஏஜென்சியை ஆரம்பித்தாள் சமுத்ரா.
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அந்த அட்வடைசிங் ஏஜென்சி சமுத்ராவின் திறமையான நிர்வாகத்தால் மூன்றாண்டுகளில் பெயர் தெரியும் அளவிற்கு வளர்ந்திருந்தது.
தன் வேலையில் மும்முரமாக இருந்தவள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க
“கம் இன்” என்று குரல் கொடுத்தாள்.
“குட் மார்னிங் மேடம்” என்ற குரலில் தலை நிமிர்ந்தவள்
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இப்படி செய்யாதனு.”என்று முகம் முழுதும் புன்னகையுடன் வந்துக்கொண்டிருந்த உதயை சமுத்ரா கடிந்து கொள்ள
“எனக்கும் இதையே பலதடவை கேட்டு போரடிச்சுப்போச்சு. ” என்றபடியே அவளெதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தான் உதய்.
“இங்க நீ தான் பாஸ்ஸூங்கிறதாவது சாருக்கு ஞாபகம் இருக்கா?”என்று சமுத்ரா புருவம் உயர்த்தி கேட்க
“மேடம் பார் யோர் கைன்ட் இன்பர்மேஷன் அந்த போஸ்டையும் மேடம் தான் எனக்கு கொடுத்தீங்க” என்று அவனும் கிண்டலாக கூற
“உதய்…”என்று சமுத்ரா பல்லை கடிக்க
“ஓகே கூல் கூல். நான் தான் பாஸ் ஓகேவா? சரி எதுக்கு என்னை வரச்சொன்ன?” என்று உதய் கேட்க அவனிடம் ஒரு கோப்பினை நீட்டியவள்
“புது ப்ராஜெக்டுக்கான பைனான்ஸூக்கு ஒரு லேன் எடுக்கலாம்னு நெனைக்கிறேன்.”என்று கூற உதயோ கடமைக்காக அந்த கோப்பினை புரட்டி பார்த்துவிட்டு
“ம்ம்ம் செய்யலாம். பேங்க்ல பேசிட்டியா?”என்று உதய் சீரியஸான முகத்தோடு கேட்க
“அந்த பைலை படிச்ச தானே?அதுலயே எல்லா டீடெயிலும் அப்டேட் செய்திருக்கேனே.” என்று சமுத்ரா அவனை ஆராய்ச்சி பார்வை பார்க்க உதயோ மனதிற்குள்
“ஐயய்யோ நாம பைலை சரியா பார்க்கலைனு கண்டுபிடிச்சிட்டாளே. இனி க்ளாஸ் எடுத்தே சாவடிப்பாளே”என்று புலம்பிக்கொண்டவன்
“அது சம்மு பேபி நான்” என்று உதய்யும் வார்த்தைகளால் தந்தி அடிக்க
“இங்க பாரு உதய். என்ன தான் உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தாலும் இது மொத்தமும் உன்னோட பணம். அந்த பொறுப்பு உனக்கு வேணும்” என்று சமுத்ரா அடுத்து பேசுவதற்குள்
“பேபி ஒரு நிமிஷம்”என்றவன் தன் பார்கெட்டில் ஒய்யாரமாக தூங்கிக்கொண்டிருந்த தொலைபேசியை அழுத்தி இயக்கி
“ஹலோ ஆ இதோ வந்துட்டேன். இதோ ” என்றவன் போனை காதில் வைத்தபடியே
“பேபி பேங்குல பேசிட்டு எப்போ சைன் போட வரனும்னு அப்டேட் மீ”என்றவன் காலில் சக்கரத்தை கட்டியதை போல் அடித்து பிடித்து அங்கிருந்து வெளியே வந்தவன்
“ஜஸ்டு மிஸ்ஸூடா சாமி. நல்ல வேளை என்னை பெத்தவரு ஆச படி நமக்கு இவ மேல லவ்வு வரல. அப்படி மட்டும் ஏதாவது நடந்திருச்சு இந்த கொடுமைகாரிகிட்ட மாட்டிக்கிட்டு சிங்கியடிச்சிருப்போம்.கூட சுத்துற நமக்கே இந்த நிலைமைனா கட்டிக்கப்போறவன் நிலைமை.” என்று யோசித்தவனுக்கு பதிலாக பெருமூச்சு வெளிவந்தது.
தான் பார்க்க வேண்டிய அனைத்து பைல்களையும் பார்த்து முடித்த சமுத்ரா தன் பி.ஏவை அழைத்து
“இதயா பைல் எல்லாம் செக் பண்ணியாச்சு. சூட்டிங் ஷெடியூல் அன்ட் மாடல்ஸ்ல சில சேன்ஜஸ் மென்ஷன் பண்ணியிருக்கேன். அதை செக் பண்ணிடுங்க. அந்த ஆன்லைன் க்ளாஸஸ் சூட்டிங் ஸ்டேட்ஸ் என்ன? ஸ்ரிப்ட்டல ஏதோ சேன்ஜஸ் வேணும்னு க்ளையண்ட் சொன்னதாக சொன்னீங்க. அதோட ஸ்டேட்டஸ் என்ன?” என்று அவள் சமுத்ரா விசாரிக்க நிலவரத்தை எடுத்துரைத்தாள் இதயா.
அந்த விவாதம் முடிந்ததும்
“இதயா நெக்ஸ் வீக் உன்னோட லீவ்”என்று சமுத்ரா ஆரம்பிக்கும் முன்னே
“லீவ்வை கேன்சல் பண்ணிடுங்க மேடம்”என்றவளின் வார்த்தைகளில் சொல்லமுடியாத வலியொன்றிருக்க அதனை புரிந்துகொண்ட சமுத்ரா
“ம்ம்.. லோன் விஷயமாக 11மணிக்கு பேங்க் மேனேஜர் கூட அப்பாயிண்மெண்ட் இருக்கு. தேவையான டாக்குமெண்ட்ஸை ரெடி பண்ணிடு.” என்று மட்டும் சொன்னவள் அதற்கு பின் தன் வேலைகளை கவனிக்கத்தொடங்கினாள்.
காலேஜிற்கு வந்த மஹதியும் வினயாஸ்ரீயும் லைப்ரரியை தஞ்சமடைந்திருந்தனர்.
என்னதான் வீட்டில் லூட்டியடித்து அழிச்சாட்டியம் செய்தாலும் படிப்பு என்று வரும் போது இருவரும் அதில் சிரத்தையாகவே இருந்தனர்.
வினயாஸ்ரீ ஆர்க்கிடெக்சர் துறையை தேர்ந்தெடுத்திருக்க மஹதி ஜேர்னலிசம் துறையை தேர்ந்தெடுத்திருந்தாள்.
இருவருக்கும் தத்தமது துறை சார்ந்த புத்தகங்களை எடுத்து அடுக்கிவிட்டு நிமிர்ந்த போது மஹதி
“வினு அங்க பாரேன்” என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்ட அவள் காட்டிய இடத்தை பார்த்தாள் வினயாஸ்ரீ.
“அது நிர்மலா பெரியம்மா மகன் பவன் இல்ல?”என்று வினயாஸ்ரீ சந்தேகமாக கேட்க
“அந்த அம்மாஞ்சி மாம்ஸே தான். ஆனா இவரு எப்படி இங்க? பாரின்ல இருக்கிறதால்ல அத்த ரீல் சுத்துச்சு.” என்று மஹதி சந்தேகமாக கேட்க
“அதானே இவரு எப்படி இங்க?” என்று வினயாஸ்ரீயும் குழப்பத்துடன் யோசிக்க
“வா போய் நேரடியாகவே விசாரிச்சிடலாம்” என்ற மஹதி வினயாஸ்ரீயோடு பவன் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றாள்.
“ஹலோ மாம்ஸ்” என்ற குரல் கேட்டு தலை நிமிர்ந்தான் பவன்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும் அவன் முகம் அதிர்ச்சியை தத்தெடுக்க மனமோ
“ஆத்தி இந்த அறுந்த வாலுங்க இரண்டும் எப்படி இங்க?” என்று பதறியதை எதிரிலிருந்த இருவரும் அறிய வாய்ப்பில்லை.
“ஷாக்கை குறைங்க மாம்ஸூ. ஆமா நீங்க எப்படி எங்க காலேஜில்?” என்று மஹதி கேட்க
“என்னது இதுங்க இந்த காலேஜா?”என்று பவனோ மனதினுள் பதறினான்.
பவன் தன்னுடைய அனைத்து கேள்விகளுக்குமே ஒரே ரியாக்ஷன் கொடுப்பதை கண்ட மஹதி வினயாஸ்ரீயின் காதில் கிசுகிசுத்தாள்.
“என்னடி எதை கேட்டாலும் ரியாக்ஷன் மட்டும் வருது. பதில் வரமாட்டேங்கிது. உள்ளார ட்ரம் ஏதும் சட்டவுன் ஆகிடுச்சா?” என்றவளின் வார்த்தைகளில் வெளிவந்த சிரிப்பினை அடக்கிக்கொண்ட வினயாஸ்ரீ பவனிடம் மீண்டும் பேசினாள்.
“அண்ணா நீங்க எப்படி எங்க காலேஜில?” என்று கேட்க
“விசிட்டிங் லெக்சரராக ஜாயினாகியிருக்கேன்.” என்று கூற இரு பெண்களும் அதிர்ச்சியுடன் ஒருவரை மற்றவர் பார்த்துக்கொண்டனர்.
அப்போது மணியடிக்கும் சத்தம் கேட்க
” எனக்கு க்ளாஸ் இருக்கு. சீ யூ லேட்டர்.” என்றபடி அங்கிருந்து கிளம்பிவிட்டான் பவன்.
“என்னடி அத்த சுத்துன ரீலெல்லாம் உண்மை தான் போல”என்று மஹதி யோசனையுடனேயே கூற
“அவ்வளவு சீக்கிரம் நம்ம காலேஜில விசிட்டிங் லெக்சரர்சை இன்வைட் செய்யமாட்டாங்க. அப்போ அண்ணா பெரிய தலை தான் போல”என்று வினயாஸ்ரீ கூற
“எனக்கும் அப்படித்தான் தோனுது. எதுக்கும் விசாரித்து பார்த்திடுவோம்” என்ற மஹதி வினயாஸ்ரீயோடு தாம் வந்த வேலையை கவனிக்கச்சென்றாள்.
சமுத்ராவை பார்த்துவிட்டு தன் அலுவலகத்திற்கு வந்தான் உதய். தன் அறைக்குள் நுழைந்தவன் அங்கு அமர்ந்திருந்த தன் தந்தையை அந்நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவில்லை.
“வாங்க அப்பா”என்று வாய்வார்த்தையால் சொன்னவனின் மனமோ
“என்ன காலபைரவர் திடீர்னு ஆபிஸிற்கு விசிட் வந்திருக்காரு. சரியில்லையே” என்ற யோசனையுடனேயே தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.
“என்ன விஷயம்பா? ஆபிஸ் வரைக்கும் வந்திருக்கீங்க?”என்று உதய் தன் தந்தையான காலபைரவரிடம் கேட்க
“நானும் அம்மாவும் சமுத்ரா வீட்டுல பேசலாம்னு முடிவு செய்திருக்கோம்.” என்று அவர் உறுதியான குரலில் கூற உதயோ மனதினுள்
“மீசைக்காரர் வேலையை ஆரம்பிச்சுட்டார்”என்று எண்ணிக்கொண்டவன்
“அப்பா எனக்கு சமுத்ரா ஒரு நல்ல ஃப்ரெண்ட் மட்டும் தான்.”என்று அவன் முடிக்கும் முன்னே
“நீயே பேசி முடிவெடுப்பனு எதிர்பார்த்தேன். ஆனா நீ நாங்க சொன்னதை மதிச்சதாகவே தெரியல. வர்ற புதன்கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னைக்கே நானும் அம்மாவும் போய் பேசிமுடிக்கலாம்னு முடிவு செய்திருக்கோம்”என்று அடுத்த அதிர்ச்சி பந்தை அவனை நோக்கி வீச உதயோ ஞ்ஞேவென்று விழித்தான்.
அதற்கு பின் வந்த வேலை முடிந்தது போல் அங்கிருந்து கிளம்பிவிட்டார் காலபைரவர்.
உதயிற்கோ எப்போதும் போல் காலபைரவரின் செயல் கடுப்பை கிளப்பியது. உடனே தன் அன்னைக்கு அழைத்தவன்
“உன் வீட்டுக்காரர் அவர் மனசுல என்ன தான் நெனச்சிட்டு இருக்காரு?”என்று உதய் போனிலேயே கத்த
“டேய் இப்போ எதுக்கு கத்துற?”என்று மறுபுறம் அவனின் அன்னை கேட்க
“அவருகிட்ட தான் பேசவே முடியலையே. அதான் உன்கிட்ட கத்துறேன்.”என்று உதய் கோபத்தில் பொரிந்து தள்ளினான்.
“இங்க பாரும்மா. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. நீங்க சமுத்ரா வீட்டுக்கு போகக்கூடாது. மீறி போனீங்கனா நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்”என்று உதய் தன் கோபம் மொத்தத்தையும் தன் அன்னை மீது காட்ட
“சரி நான் அப்பாகிட்ட பேசுறேன். நீ வீட்டுக்கு வந்ததும் மீதியை பேசிக்கலாம்.”என்று அப்போதைக்கு அவனை சமாதானப்படுத்தி அழைப்பை துண்டித்தார் உதயின் அன்னையான மதியழகி.
தன் கணவர் வீடு திரும்புவதற்காக காத்திருந்த மதியழகி காலபைரவர் வந்ததும்
“என்னங்க சொன்னீங்க அவன்கிட்ட? போன் போட்டு அந்த கத்து கத்துறான்”என்று நடந்ததை மதியழகி விசாரிக்க நடந்ததை ஒற்றை வார்த்தையில் விளக்கினார் காலபைரவர்.
“ஏங்க அதான் சமுத்ராகிட்ட இதபத்தி ஏற்கனவே பேசிட்டோமே”என்று கேட்க
“ஆனா அது நீ பெத்த மகராசனுக்கு தான் தெரியாதே. அதான் அப்படி சொல்லிட்டு வந்தேன்.” என்று காலபைரவர் கூற மதியழகிக்கோ அவரின் பேச்சின் அர்த்தம் சுத்தமாக புரியவில்லை.
“என்னங்க சொல்லுறீங்க?”என்று கேட்க
“என் ப்ரெண்டு மூலமாக உதய்க்கு ஒரு வரன் வந்திருக்கு. எல்லாம் பொருந்தி வந்தா பேசி முடிச்சிடலாம்னு யோசிச்சேன். இதை நேரடியாக சொன்னா உன் மவன் தப்பிக்க ஏதாவது காரணம் சொல்லுவான். அதான் இப்படி சொல்லிட்டு வந்தேன்.” என்று கூற மதியழகிக்கும் அவர் கணவர் செய்தது சரியென்றே பட்டது.
இந்த இரண்டு வருடங்களாக அவர் திருமண பேச்சை எடுக்கும் போதெல்லாம் உதய் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிடுவான். ஒருவேளை சமுத்ராவும் அவனும் விரும்புகின்றனரோ என்ற சந்தேகத்திலேயே அவளிடம் பேசினர். ஆனால் அவளிடம் பேசியபின்பு அதுவும் இல்லையென்று தெரிந்துவிட காரணமில்லாது திருமணத்தை தட்டிக்கழிக்கிறானென்று பெற்றோருக்கு புரிந்தது.
அதனால் காலபைரவரின் ஏற்பாடு மதியழகிக்கு சரியென்றே பட்டது.
“பொண்ணு ஜாதகத்தை வாட்சப்ல அனுப்பிருக்காங்க. இரண்டு ஜாதகத்தையும் ஜோசியருக்கு அனுப்பியிருக்கேன். அவர் பொருத்தம் பார்த்திட்டு கூப்பிடுறேன்னு சொன்னாரு.”என்று காலபைவரவர் மேலதிகமாக சில தகவல்களை மனைவிக்கு தெரியப்படுத்தினார்.
அலுவலகத்தில் உதயோ அடுத்து என்ன செய்வதென்று யோசனையில் மண்டையை பிய்த்துக்கொண்டிருந்தான்.
அவனின் பெற்றோர் நினைப்பதை போல் அவனுக்கு திருமணத்தில் விருப்பமில்லையென்பதெல்லாம் இல்லை. அவன் விரும்பிய பெண் இப்போது ஊரில் இல்லை என்பதே அவனின் நழுவலுக்கு காரணம். மேலதிகமாக அவன் இப்போது வரை அவனின் காதலை அப்பெண்ணிடமும் சொல்லவில்லை.
இவ்வாறு பல காரணங்கள் இருக்கும் போது அவனும் என்ன தான் செய்வான்?
தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தவன்
“அவ ட்ரெயினிங் எப்போ முடியும்?”என்று கேட்க மறுபுறம் சொன்ன பதிலில் அவன் முகத்தில் பல்ப் எறிந்தது.
“சரி வேற ஏதும் இருந்தா எனக்கு உடனே அப்டேட் பண்ணு.”என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவனின் மனம் இப்போது தான் ஆசுவாசப்பட்டது.
தன் மொபைலை எடுத்து அதில் காலரியில் ஹைட் செய்திருந்த போல்டரை அழுத்த அதில் ஒரு பெண்ணின் செல்லமாய் முறைக்கும் முகம் தெரிந்தது.
அதை பார்த்தவனின் இதழ்கள் எப்போதும் போல் கேலியாய் சிரிக்க
“எப்போ ஸ்வீட்டு மறுபடியும் உன்னை பார்ப்பேன்னு இருக்கு. திடீர்னு வந்த. திடீர்னு தூரம் போயிட்ட. ஆனா மறுபடியும் உன்னை தூரம் போக விடமாட்டேன். அப்படியே போகனும்னாலும் நீ எனக்கு சொந்தமானவளாக தான் போகனும். நீ திரும்ப ஊருக்கு வரும் போது உனக்கொரு சப்ரைஸ் இருக்கு”என்று அந்த புகைப்படத்தோட பேசியபடியே கனாகாணத்தொடங்கினான் உதய்.
Nice update 🤩
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.