Loading

விஐபிக்கு வசதி பற்றாக் குறை என்பதை பற்றி கண்மணியின் தாய் மிகவும் வருந்தி பேசவும் அதை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் “ இதுவும் என் வீடு.. இங்கேயும் நான் சமாளித்துக் கொள்வேன்… ” என அவருக்கு ஆறுதல் கூறி முதல்முறையாக ஏசி இல்லாத அறையில் இருந்தான்..

 

 

 

 அவனுக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது இரவு உணவு இலகுவாக முடித்துக் கொண்டு..

 

 

கண்மணியின் அறையில் அவளின் வருகைக்காக காத்திருந்தான்..

 

 

 அவளும் பால் எடுத்துக் கொண்டு அறைக்கு வந்ததும்..

 

 

அவளை அருகே அமர்த்தி அவளது மடியில் படுத்துக்கொண்டான்.. அவள் சேலை முந்தானையால் கணவன் முகத்தில் பேஃன் காற்றையும் மீறி வந்த வியர்வையை துடைத்து விட்டாள்..

 

 

 

 அப்படியே சுவாரசியமாக இருவரும் பேசிக் கொண்டிருந்து சற்று நேரத்தில் உறங்கி விட்டார்கள்..

 

 

 

 காதல் கணவன் காமத்தை அதிகம் தேடாமல் அவளுக்காக பார்த்து விட்டுக் கொடுத்தான்..

 

 

 இப்படியே மூன்று நாட்கள் கடந்து விட்டது..

 

 

 

 சின்ன ஒரு முகம் சுழிப்பும் இல்லாமல் இந்த மூன்று நாட்களும் கண்மணியின் வீட்டில் அவன் சந்தோஷமாகத்தான் அவள் முகத்தை பார்த்து இருந்தான்..

 

 

 

 இங்கே இந்த மூன்று நாட்களும் ராம் சீதா மீரா யசோதா யமுனா என அனைவரும் சென்னையை ஓரிடம் விடாமல் காலையில் சென்றால் மாலை வரை சுற்றி பார்த்துவிட்டு வந்தார்கள்..

 

 

 சீதா ராமை இலவச டிரைவராகவே பாவித்தாள்..

 

 

 அவனும் முகம் சுழிக்காமல் அவர்கள் சொன்ன இடம் அனைத்திற்கும் காரை ஓட்டி சென்றான்..

 

 

 

 துர்கா இங்கு வந்து இரண்டு நாட்களில் சோர்வாக இருந்ததை பார்த்து நாட்கள் தள்ளி போக இருப்பதை அறிந்து பரிசோதித்துப் பார்த்ததில் அவள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது..

 

 

 சந்தோஷத்திலும் சோர்விலும் அவர்கள் வெளியே செல்லாமல் அறையிலேயே இருந்தார்கள்..

 

 

 இதோ நாளை வந்தவர்கள் அனைவரும் ஊருக்கு செல்வதாக இருந்தது..

 

 

 

 பெரியவர்களின் அழைப்பின் பெயரில் புதுமண தம்பதிகளை ஊருக்கு விருந்துக்கு வருமாறு துர்காவும் கணவனும் மற்றும் கணேசனும் அழைத்தார்கள்..

 

 

 

 ஹனிமூன் சென்று விட்டு அங்கே வருவதாக விஐபி வாக்கு கொடுத்தான்..

 

 

 

 அதனால் அவர்கள் நேராக அங்கே வருவதால்.. அவர்களுடனே மீராவும் யசோதாவும் ஊருக்கு செல்வதாக இருந்தது..

 

 

 

 சீதாவிற்கு இன்னும் இரண்டு எக்ஸாம் இருப்பதால்.. அவள் வரவில்லை என்று கூறினாள்..

 

 

 

 இதுதான் சாக்கு என்று கணேசன் மருமகளை தனியாக விடாமல் உடனிருந்து எக்ஸாம் முடித்ததும் ஊருக்கு அழைத்து வருமாறு கூறி ராமை அங்கே விட்டுவிட்டு சென்றார்கள்… 

 

 

 

 அவனும் தந்தையுடன் ஊருக்கு செல்ல வேண்டும்.. இவளையும் தனியே விட முடியாது.. எப்படி தான் இங்கு நிற்பது என யோசித்துக் கொண்டிருந்தான்.. அதற்கு தந்தையே நல்ல வழி செய்து விட்டார்.. அந்த சந்தோஷம் அவன் முகத்தில் தெரியாமல் மறைத்துக் கொண்டான்..

 

 

 மீரா மனதில் நினைத்தபடியே கண்மணி மற்றும் விஐபி திருமணத்தை ராமும் சீதாவும் ஜோடியாக நின்று விமர்சையாக செய்து கொடுத்ததற்கு பரிசாக புதிய ரக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை சீதா ராம் ஜோடிக்கு பரிசளித்தார்..

 

 

 அவர் ரொம்ப கட்டாயப்படுத்தியதால் இருவரும் சிரித்த முகத்தோடு கார் சாவியை வாங்கிக் கொண்டார்கள்..

 

 

 மீரா அங்கிருந்து செல்லும் பொழுது இருவரையும் அந்த காரில் தான் ஊருக்கு வர வேண்டும்.. இனி அந்த கார் அவர்களுக்கு சொந்தமானது என கூறிவிட்டு சென்றார்..

 

 

 

 அனைவரும் அங்கிருந்து ஒன்றாக இரண்டு கார்களில் ஏர்போர்ட் சென்றார்கள்..

 

 

 மீரா வி ஐ பியின் பி ஏ வை வைத்து டிக்கெட் புக் செய்திருந்தார்..

 

 

 வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியேறியதும் அவளும் அடுத்த காரை எடுத்துக்கொண்டு வெளியேற முற்பட்டாள்..

 

 

 அவள் வெளியே போக போகிறாள் என்பதை புரிந்து கொண்டு நாம் கார் டிரைவர் சீட்டில் போய் அமர்ந்தான்..

 

 

“ இம்சை இம்சை என்னடா இம்சை உன்னோட பெரிய தொல்லையா போச்சு.. கொஞ்சம் தனியா வெளியில போய் வரக்கூட எனக்கு வீட்ல ரைட்ஸ் இல்ல.. எனக்கு கார் ஓட்ட தெரியாதா? உன்னை நான் கார் ஓட்ட கூப்பிட்டேனா?.. என் காரை விட்டு இறங்கு முதல்.. இப்ப நீ இறங்கலைன்னா உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்.. இப்ப நான் உன்னை என்ன பண்ணினாலும் கேக்குறதுக்கு இங்க யாரும் இல்ல.. அதனால எனக்கு எதைப் பற்றியும் கவலையோ பயமோ எதுவும் இல்லை அப்புறம் உன் இஷ்டம்..”

 

 

 என்று சற்று மிரட்டி பார்த்தாள்.. அவன் இறங்குவான்.. என்று நினைத்து அவள் காத்திருந்தாள்.. ஆனால் நீ அடித்தாலும் வாங்குவேனே தவிர காரை விட்டு இறங்க மாட்டேன்.. என அடம் பிடித்து அவனும் இறங்காமல் இருந்தான்..

 

 

 

 ஒரு வழியாக இவள் தான் அவனை சகித்துக் கொண்டு காரில் ஏற வேண்டியதாகிபோனது..

 

 

 

 போகும் வழி எங்கும் அவனை திட்டிக் கொண்டே இருந்தாள்.. அவனுக்கு அது ஏதோ சங்கீதம் கேட்பது போல் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டு வந்தான்..

 

 

 

 இப்படியே இருவரும் லியோ மூவி பார்ப்பதற்காக தியேட்டருக்கு காரைவிட சொல்லி அங்கே வந்து சேர்ந்தார்கள்..

 

 

 ராமுக்கு சிறு வயதில் தியேட்டருக்கு போய் படம் பார்த்த ஞாபகம்.. அதன் பின் நேரமும் கிடைக்கவில்லை.. அதை அவன் பெரிதாக எடுத்துக் கொண்டதும் இல்லை..

 

 

 

 இன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு மனைவியுடன் மீண்டும் படம் பார்க்க வந்திருக்கும் அந்த சந்தோசமே அவனுக்கு அளப்பரியதாக இருந்தது..

 

 

 அவளை இருக்க சொல்லிவிட்டு அவனே இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றான்..

 

 

சீதா மிகவும் படத்தில் ஒன்றி போய் படத்தை பார்த்தாள்..

 

 

 

 அவள் படத்தில் ஒன்றி போய் இருப்பது அவனுக்கு வசதியாக போய்விட்டது.. படம் பார்ப்பது ஒரு பக்கம் அவளை ரசிப்பது ஒரு பக்கம் என அந்த மூன்று மணி நேரம் அவனுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது..

 

 

 

படம் முடிய சரியாக ஏழு மணி ஆகியது..

 

 

 

 அதனைத் தொடர்ந்து சரவணபவன் ஹோட்டலுக்கு போகச் சொன்னாள்..

 

 

 

 அவன் மறுவார்த்தை பேசாமல் அங்கும் சென்றான்.. அவளுக்கு பிடித்த பீட்ஸா அவள் ஆர்டர் செய்து உண்டு முடித்ததும்..

 

 

 

 தன்னை அழைத்து வந்த ஒரு ஜீவன் எதிரில் இருப்பதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்தாள்..

 

 

 

 அவன் வயிறு பசிப்பதை உணர்ந்தான்.. உணவு உண்ண வேண்டுமே வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாது.. இனி போய் அவனுக்கு ஏதாவது செய்து உண்ண வேண்டும்.. என நினைத்து அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தான்..

 

 

 

 அவன் பட்ஜெட்டுக்கு எல்லாம் அந்த ஹோட்டலை வெளியே நின்று எட்டி தான் பார்க்க முடியும்.. உள்ளே செல்லவோ அங்கே உணவு உண்ண நினைக்கவோ முடியாது..

 

 

 பீட்ஸா முடிந்ததும் தான் நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் எதுவும் உண்ட மாதிரி தெரியவில்லை.. அது அவன் பாடு.. என நினைத்துக் கொண்டு எழுந்து பில் கவுண்டரில் அவள் சாப்பிட்டதற்கு பணம் செலுத்திவிட்டு வெளியே வந்து காரில் ஏற அவனும் அவள் ஏறியதும் காரை எடுத்தான்..

 

 

 

 பேச்சுக்கு கூட ஏன் சாப்பிடவில்லை?.. சாப்பிடுகிறாயா? என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை அவள்..

 

 

 கணவன் மனைவி இருவரும் வெளியே அவுட்டிங் சென்றார்கள்..

 

 தியேட்டர் போய் மூவி பார்த்தார்கள்.. ஹோட்டல் போய் உணவு உண்டாள்.. ஆனால் அதில் எதுவும் சிறிதளவு ஒற்றுமை கூட இல்லை அப்படி இருக்கும்போது எங்கிருந்து காதல் மலர்வது..

 

 

 இருவரும் வீடு வந்து சேர எட்டு மணி ஆகியது..

 

 

 

 ஊருக்கு சென்றவர்களும் போய்ச் சேர்ந்ததாக ராமுக்கு சீதாகும் அழைத்து கூறினார்கள்..

 

 

இங்கே ஹனிமூன் சென்ற தம்பதியரும் பத்திரமாக போய் சேர்ந்தார்கள்..

 

 

 

 அவனும் சமையலறை சென்று பார்த்தான்… மாவு இருந்தது எடுத்து அவனுக்கு இரண்டு தோசை சுட்டு இட்லி பொடியுடன் இரவு உணவை எளிமையாக முடித்துக் கொண்டான்..

 

 

  பாலை காய்ச்சி அவளுக்கு பாதாம் போட்டு அவனுக்கு நார்மலாக சர்க்கரை போட்டு எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்..

 

 

அவன் பால் கொண்டு வந்து கொடுத்ததும் எதுவும் பேசாமல் வாங்கி மேசையில் வைத்துவிட்டு அவனை அறையை விட்டு வெளியேறும்படி கூறினாள்..

 

 

 

 விஐபி திருமணத்திற்கு இங்கே வந்திருந்த நாட்கள் அனைத்தும் அவன் அவள் அறையில் தான் தங்கினான்..

 

 

 இரவு அவன் அறைக்கு வரும்பொழுது எல்லாம் திட்டி திட்டி உள்ளே எடுப்பாள்..

 

 

 ஆனால் இன்று வீட்டில் யாரும் இல்லை.. அதனால் எந்த கவலையும் கட்டாயமும் அவனுக்கு இல்லை… அப்படி இருக்கும்போது ஏன் அவன் தனது அறையில் இருக்க வேண்டும் என்று நினைத்து வெளியே போகச் சொன்னாள்..

 

 

 

 நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது.. என்று நினைத்து அவன் வழமை போல் கட்டிலின் மறுபக்கம் வந்து அமர்ந்து பாலை குடித்துவிட்டு படுத்துவிட்டான்..

 

 

 

திட்டி திட்டி பார்த்தாள்.. அவன் அசைவதாக இல்லை என்று தெரிந்ததும். வேண்டும் என்றே அவன் காலில் மிதித்து விட்டு பாத்ரூம் சென்று வந்து அவளும் படுத்து உறங்கினாள்..

 

 

 நாளை விடியில் அவளுக்கு பெரிய ஆபத்தையும் வாழ்க்கையில் அடுத்த கட்ட நிரந்தர முடிவையும் எடுக்க வைக்கப் போகிறது என்று தெரியாமல் அயர்ந்து உறங்கினாள்..

 

 

 

அவள் எடுக்க போகும் அந்த முடிவு ராம் மற்றும் அவர்களின் வாழ்க்கைக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா? 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்