Loading

அத்தியாயம் -3

காற்றில்லாமல் தட்டையாக இருக்கும் டையர்களை கவனித்தவன். செக்யூரிட்டியை கூப்பிட்டி அதை என்ன ஏது என சரி பார்க்க சொல்லி விட்டு, டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தான் வருண்.

கை கால் முகம் கழுவி விட்டு டி.வியில் மூழ்கினான்.

சரஸ்வதி – ராகவன் தம்பதியருக்கு ரெண்டு மகன்கள். மூத்தவன் அசோக், திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான். சின்னவன் தான் வருண் ஆதித்யன்.

அடுகளையில் டீ போட்டு கொண்டிருந்த அவரின் மூத்த மருமகள் மதுமிதாவிடம் கிசுகிசுத்தார் சரஸ்வதி. 

” அவன் வந்துட்டான் டி.. “

” தெரியுது தெரியுது “

” நீ போய் என்ன ஏதுனு கேளேன்?”

” இங்க பாருங்க அத்த, நீங்களாச்சி உங்க பையனாச்சி.. என்னய நடுவுல கோர்த்து விடுற வேல எல்லாம் வெச்சிக்காதீங்க. என் வீட்டுகாரு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு,அவன் விஷயத்துல தலையிட வேணாம்னு.. நீங்களும் கம்முனு இருக்கலாம்ல அத்த”

” நா எப்படி அவன் எப்படியோ போட்டும்னு விட முடியும்? என் பையன் டி அவன், என் ரத்தம்!” என சொன்னவருக்கு நா தழு தழுக்க, 

” அச்சோ அத்த.. ” என சொன்னவள் அவரை தோளோடு அணைத்து கொண்டு, ” கவலபடாதீங்க அத்த, எல்லாம் நல்லபடியா நடக்கும். நீங்க முன்னாடி போங்க நா பின்னாடியே வரேன்.”

“ஆதி “

அனைவருக்கும் வருண், ஆனால் அவன் தாய் மட்டும் ஆதி என்று தான் அழைப்பாள்.

” ம்ம்”

” என்னப்பா ரொம்ப வேலையா”

” ஆமாம்மா மூணு மாசத்துல்ல முடிக்கனும் ல.. அதான் கொஞ்சம் ஹெக்டிக்கா போகுது..!”

” எதுக்குப்பா உனக்கு சிரமம். அதான் அப்பாவும் அண்ண.. ” அவர் பேசி முடிப்பதற்குள் அவரை அனல் பார்வை பார்த்தான். 

” அப்பாவும் அண்ணாவும் இருக்காங்க நீ ஏன் சம்பாரிக்கற? உன்னால ஒன்னும் முடியாது.. தண்ட சோறா வீட்டுலயே உக்காருன்னு சொல்றீங்களா ம்மா? உங்களுக்கு நா இங்க இருக்கறது புடிக்கலனா நேரடியா சொல்லிருங்க இப்படி சுத்தி வளச்சி எல்லாம் பேச வேண்டாம்..!”

தாயவளின் உள்ளத்தில் வெந்நீரை ஊற்றியது போல் அவன் பேச, கண்ணீர் மல்க நின்றிருந்தார் சரஸ்வதி..!

அவன் அடுத்து பேச வருவதிற்குள்,

” வருண்! ” என அதட்டினாள் அவன் அண்ணி..

” நீயே பாத்தில மது? என்ன சொன்னாங்கனு கேட்டீல..? வாய்ய தொறந்து சொல்லிருங்க உங்களுக்கு பாரமா நா இருந்தா, நா யாரயும் தொந்தரவு செய்யாம என் வழிய பாத்துட்டு போய்யிட்டே இருக்கேன்..”

” வருண்!! கம்முனு இரு..! அத்த நீங்க ரூமிற்கு போங்க அவன் கிட்ட நா பேசிக்கறேன்..!”

அவனின் குத்தல் பேச்சில் உரு குலைந்து போனவர், அழுது கொண்டே அவர் அறைக்கு சென்றார்.

” தன் மகனா இப்படி பேசியது? அதிர்ந்து கூட பேச மாட்டானே? இவ்வளவு கோவம் அவனுக்கு வருமா? இல்ல நான் தான் தேவை இல்லாமல் அவன் கோவத்தை தூண்டி விட்டுவிட்டேனா? என் மகனையே என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே? என்ன தாய் நான்.”

எப்போழுதும் சிரித்த முகமாக கடைக்குட்டிக்கே உரிய குறும்புடன் தன்னை சுற்றி வரும் மகன் என்ன ஆனான்? எப்பொழுது இந்த நிலை மாறும். நினைத்து பார்க்க நெஞ்சம் அடைத்து கொண்டு வந்தது சரஸ்வதிக்கு.

” அவன் போக்குலயே அவன கொஞ்சம் விட்டு புடிப்போம் பொறுமையா இரு சரஸ்! ” ஆறுதல் கூறினார் அவர் கணவர் ராகவன்.

“எவ்ளோ நாளைக்குங்க..? அவன் இப்படி எதயோ பறிக்கொடுத்த மாறி இருக்கறத பாக்க என்னால முடில.. பயமா இருக்குங்க..!”

” ஒரு நாள் அவன் வாழ்க்கையும் மாறும், நம்பிக்கையோட இருப்போம்.நீ அவன் மேல ரொம்ப கவலப்பட்டு உன் உடம்ப கெடுத்துக்காத சரியா ? அவன் கோவப்படுற மாறியும் இனிமே பேசாத! நாம தான் எல்லாரும் அவன் கூட இருக்கோம்ல..?

அவனுக்கு புடிச்சத அவன் பண்ணட்டும்.. அவனே அவன் வாழ்க்கையோட அர்த்தத்த தேடி கண்டு புடிப்பான்..!”

நம்மை புரிந்து கொண்டு நம் ஒவ்வொரு செய்யலிலும் நமக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பம் கிடைப்பது வரமே..!

அவ்வகையில் வருண் கொடுத்து வைத்தவன் தான்..!

ராகவனின் தங்கை மகள் தான் மதுமிதா. அசோக் தன் சொந்த அத்தை மகளயே கட்டி கொண்டான். வருணிற்கும் மதுமிதாவிற்கும் ஒரே வயது தான். அத்தை மகள் மாமன் மகன் என்ற உறவை தாண்டி அவர்களுக்குள் சிறு வயதில் இருந்தே நல்ல நட்பு இருக்கிறது.

” நீ ஏன் வருண் அப்படி பேசுன? அத்த ரொம்ப ஒடஞ்சு போய்ட்டாங்க தெரியுமா? உன் மேல இருக்கற அக்கறையில தானே அப்படி கேட்டாங்க..? சரி, தப்பு தான் விடு. ஒனக்கே தெரியும்ல அவங்கள பத்தி, அப்றம் ஏன் அவங்க பேசுறத எல்லாம் பெருசு பண்ணிக்கற..? “

பதில் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான் வருண்..!

“ம்மாஆஆ.. ” கத்தி கொண்டே வந்தான் அந்த வீட்டின் இளவரசன், மதுவின் மகன் க்ரிஷ். 

இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அக்கம் பக்கம் இருக்கும் சில்வண்டுகளை எல்லாம் சேத்தி கொண்டு கிரிக்கெட் டீம் நடத்தி வருகிறான். அவன் தான் அதற்கு கேப்டனும் கூட! , பள்ளி விட்டு வந்ததும் ஒரு மணி நேரம் விளையாட்டு, பிறகு தான் எதுவாக இருந்தாலும்.

“க்ரிஷ் போய் குளிச்சுட்டு வா.. நா உனக்கு ஜூஸ் போட்டு வைக்கறேன்.”

“ம்ஹ்ம் எனக்கு சாக்கோ தான் வேணும்.”

“அப்படியா.. சரி நீ போய் டக்குனு குளிச்சிட்டு வருவீயாம் சித்தப்பா உன்ன கூட்டிட்டு போய் சாக்கோ வாங்கி தருவாராம்.”

“ஐ.. ஜாலி ” என்றவன் குளிக்க ஓடி விட

” கொஞ்சம் வெளிய போய்ட்டு வா, அப்போ தான் ஒனக்கும் மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். “

அவளை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தான் வருண்.

அருகில் இருக்கும் மாலிற்கு க்ரிஷை அழைத்து வந்திருந்தான் அவன்.

க்ரிஷிற்கு சாக்லேட் வாங்கி கொடுத்து விட்டு அங்கு இருக்கும் ப்ளே ஏரியாவிற்கு கூட்டி வந்தான்.

” சித்தப்பா, எனக்கு இந்த விளையாட்டு எல்லாம் புடிக்காது. எனக்கு வேற விளையாட்டு வேணும்.!”

” வேற விளையாட்டா? “

” நா ஓடுவேனாம் நீங்க புடிப்பீங்களாம் “

” அடேய்..!! “

க்ரிஷ் பின்னாடி அவன் ஓடுவதற்குள் அவன் எதிரே வந்து நின்றான் ஒருவன்..!

மாலில் இருக்கும் ஃபுட் கோர்ட்டில் ப்ளேட்டே நம்பும் அளவிற்கு ஆர்டர் செய்து விட்டு அதை ரெண்டு கையிலும் தூக்க முடியாமல் தூக்கி, அங்கு இருக்கும் டைனிங் ஏரியாவிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்மணி.

அவள் டேபிளை நெருங்கும் நேரம் அவள் காலில் வந்து மோதினான் க்ரிஷ்.

‘ ஆத்தாடி என் சோறு..!! ‘ என தடுமாறியவள் எப்படியோ ப்ளேட்டை கீழே போடாமல் சமாளித்து அதை டேபிளில் வைத்து விட்டு குனிந்து பார்த்தாள்.

மொட்டு மொட்டுவென பெரிய விழிகளை வைத்து முழித்து கொண்டிருந்தவனை பார்த்து,

” ஹேய் குட்டி பையா பாத்து வர மாட்டியா? “

“ஸாரி ஆண்ட்டி.”

” எது ஆண்டியா? அடிங்.. ” என்றவள் அவனின் காதை லேசாக பிடித்து, ” ஒழுங்கா அக்கானு சொல்லு..!” என விழி உருட்டி முறைக்க

பயத்தின் ரேகைகள் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிய அதில் பக்கென சிரித்தவள், 

“அச்சோ பயந்துட்டியா குட்டிமா? ஸாரி ஸாரி..! வா சாப்பிடறியா?” என்றவள் அவள் வாங்கி வைத்த சாண்ட்வெட்சை நீட்ட

” இல்ல.. எனக்கு சித்தப்பா கிட்ட போகனும் .. “

” உன்ன விட்டுட்டு எங்க போனாரு உன் சித்தப்பா ?”

“அங்க !”

” எங்க? வா..”

” என்ன மிஸ்டர் வருண்? புதுசா ப்ராஜெக்ட் பண்ணுறீங்கனு கேள்விப்பட்டேன் “

அவனை சட்டை செய்யாதவன், “வழிய விடு ” என நகர அவன் கைப்பிடித்து தடுத்து , ” இத கேட்டுட்டு போ.. நீ தோத்துட்டே இருக்கனும், அத நா பாத்துட்டே இருக்கனும். எப்பவுமே உன்ன ஜெயிக்க விட மாட்டேன் வருண். அத நல்லா நியாபக வெச்சிக்கோ!”

அவன் பேசியதில் அவனை முறைத்தான் வருண்.

” ஹேய்.. பார்றா கோவம் எல்லாம் வருது..”

” கோவம் மட்டும் வராது எங்க பாஸ் கிட்ட இதே மாறி பேசுனா பனிஷ்மென்டும் வரும் ” என்ற கண்மணி அவள் கையில் இருந்த கோக் ( coke ) ஐ அவன் சட்டையில் ஊற்றி விட்டு, ” அச்சசோ ஸாரி எல்லாம் கேக்க மாட்டேன். வேணும்னே தான் ஊத்துனேன். இன்னொரு வார்த்த ஓவரா பேசுன, வாயிலயே ஹார்பிக் ஊத்தி விட்டுருவேன்..! “

அவளின் இந்த தீடிர் செய்கையில் அதிர்ந்தவன். பின் சுதாரித்து, ” யார் வருண் இது? உன் அல்ல கையா..? அதானே உன்னால தான் எதுவுமே தனியா பண்ண முடியாதுல.. “

என்றவன் நக்கலாக சிரிக்க.

அவனிற்கு பதில் கூறாமல் கண்மணியையும் க்ரிஷையும் அந்த பக்கம் தர தரவென இழுத்து சென்று விட்டான் வருண்.

” பாஸ் என் கைய விடுங்க..!”

” கம்முனு வா “

மாலின் வெளியே பார்க்கிங் வரைக்கும் இழுத்து வந்த பிறகு தான் அவள் கையை விட்டான் வருண்.

” ஹையோ பாஸ், இவளோ தூரம் கூட்டிட்டு வந்துட்டீங்க? நா வாங்குன ஸ்னாக்ஸ் எல்லாம் அங்க ஃபுட் கோர்ட்லயே இருக்கு.. இன்னும் ஒரு வாய் கூட டேஸ்ட் பண்ணல தெரியுமா? “

” அதுலா பெரிய இவ மாறி அவன் கிட்ட வசனம் பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கனும். ஆமா நீ எதுக்கு தேவ இல்லாம எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர..? உனக்கு யார் மொதல்ல அந்த ரைட்ஸ் கொடுத்தா? “

” ஹெலோ பாஸ், அத நான் கேக்கனும். நீங்க ஏன் என் விஷயத்துல்ல மூக்க நுழைக்கறீங்க? நா என்னவோ யாரயோ சொல்லிட்டு போறேன், உங்களுக்கு என்ன? உங்களுக்காக பேசுனேன் மட்டும் நெனச்சிக்காதீங்க. எங்க அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்பா இந்த கண்மணி. “

” கொஞ்சம் கூட பயமே இல்ல..? ம்ம்? “

” பயந்துட்டே இருந்தா கடைசி வரைக்கும் அப்படியே தான் இருக்கனும். அட்லீஸ்ட் என்னால முடிஞ்சத நா ட்ரை பண்ணேங்கற திருப்தியோடவாவது நா இருப்பேன்..! நமக்காக ஒருத்தவங்க பேச மாட்டாங்களாங்கற ஏக்கம் ரொம்ப கொடுமையானது “

அந்த கடைசி வார்த்தையில் உணர்ச்சிவசப்பட்டவளிற்கு வேண்டாத சில நினைவுகள் வந்து போக முகத்தை அழுந்த துடைத்து கொண்டு தன்னை ஆசுவாச படுத்தினாள்.

அவளின் அந்த , “பயந்துட்டே இருந்தா கடைசி வரைக்கும் அப்படியே தான் இருக்கனும் ” என்ற வாக்கியம் அவனுள் சென்று எதையோ உணர்த்த முயற்சிக்க, உணர்ச்சியற்ற முகத்துடன் அவளையே பாத்து கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்..!

இருவரின் மௌனத்தையும் கலைக்கும் விதமாக க்ரிஷே பேச்சை ஆரம்பித்தான்.

“சித்தப்பா எனக்கு பப்பி வேணும்.”

” வீட்டுக்கு போலாம் வா ” என்றவன் அவனை தூக்க முயல..அவனிடம் இருந்து விடுபட்டு கண்மணியின் காலை கட்டி கொண்டு அவள் பின்னாள் ஒண்டி கொண்டான்.

” க்ரிஷ் சொன்னா கேளு வா.. ” என்றவன் அவனை இழுக்க முயற்சிக்க

உடனே உதட்டை பிதுக்கி கொண்டு 

“ம்ம்ம்… ம்ம்ம்ம்.. எனக்கு பப்பி வேணும்…பப்பி தந்தா தான் வருவேன்” என்றவன் கீழே உருண்டு அழுக

” பப்பியா? ” என விழித்தாள் கண்மணி.

“பப்ஸ்ஸ தான் அவன் அப்படி சொல்லறான் “

“ஓ.. ம்ச் பப்ஸ் தானே? வாங்கி தர வேண்டியது தானே ஏன் இப்படி புள்ளய அழவிடறீங்க?” என்றவள், “அச்சோ குட்டி கண்ணனுக்கு பப்ஸ் தானே வேணும் அழுகாம இருந்தா அக்கா வாங்கி தரேன் ஓகே..!? ” என்றவள் அவனை தூக்கி நிக்க வைக்க,

க்ரிஷ் வருணை பார்த்து, போகட்டும்மா என கண்களாலேயே வினவ?

சரி என தலையாட்டி வைத்தான் வருண்.

அருகில் இருக்கும் பேக்கரியில் அமர்ந்திருந்தனர் மூவரும்.

” குட்டி கண்ணனுக்கு என்ன என்ன வேணும் சொல்லுங்க.. “

” ஒரு முட்ட பப்பி, அப்றம் சாக்கோ, அப்றம் ரோஸ் மில்க்.. அப்புறம்.. யோசிச்சி சொல்லுறேன் “

” ஓகே குட்டி..”

டேபிளில் அவன் ஆர்டர் செய்தது எல்லாம் வந்து விட..அனைத்தையும் ஆர்வமாக நோட்டமிட்டவன் எல்லாவற்றிலும் ஒவ்வொரு வாய் மட்டும் சாப்பிட்டு விட்டு கண்மணியையே பார்த்து கொண்டிருந்தான்.

அவள்,’என்ன ‘ என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்க. அவளை பார்த்து சிரித்தவன், முட்டை பப்ஸை பிய்த்தி அதில் இருக்கும் முட்டையே வெளி எடுத்து அதற்கு பதில் அங்கு சாக்லேட்டை வைத்து, அதில் ரோஸ் மில்க்கை ஊற்றியவன் பிறகு அதற்கு மேல சாசை ஊற்றி அலங்கரித்து, 

” இந்தா சாப்பிடு ” என்றவன் தட்டை கண்மணியிடம் தள்ளி வைக்க

“ஏதே..! ஓய் நீ தான் வாங்குன அப்போ நீ தான் சாப்பிடனும் “

“இல்ல.. இல்ல… நீங்க தான் சாப்பிடனும்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்… ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்றவன் சினுங்கி அழுக ஆரம்பிக்க

‘இது என்ன டா புது கதை ‘ என கலவரம் அடைந்தவள், வருண்ணை ஏறிட்டு பார்த்தாள்.

“பெரிய அன்னை தெரசா மாறி சேவ செய்ய வந்தில்ல..? அனுபவி. எங்க வீட்டு பையன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா? இப்போ எப்படி அவன் அழுகாச்சிய கண்ட்ரோல் பண்ணுறேனு நானு பாக்கறேன் “

‘அட சைத்தான் கி பச்சிகளா? குடும்பமாவே மெண்டலா இவிங்க..? இது தெரியாம மாட்டிக்கிட்டியே டி மணி..! உனக்கு வேற எங்கயும் இல்ல சனி உன் வாய் தான் சனி ‘ என தன்னை தானே நொந்து கொண்டவள்.

” அட இரு டா டேய்… அழுவாத தின்னு தொலையறேன்” அதை ஒரு வாய் எடுத்து வாயில் வைத்து விட்டு அஷ்ட கோணலாக முகத்தை சுளித்தாள் கண்மணி.

அதை பார்த்து சிரித்த வருண்,

” ம்ம் இன்னொரு வாய் எடுத்து சாப்பிடு

என் கார பஞ்சர் பண்ணும் போது சுகமா இருந்துச்சா? “

வாயில் போட்டது தொண்டையில் சிக்கியது போல் விக்கித்து முழித்தவளை பார்த்து, ” நடிக்காத நீ தான் பண்ணேனு எனக்கு நல்லாவே தெரியும்..!”

” அடபாவிகளா!! பெருசும் சிறுசும் சேந்து நல்லா பிளான் பண்ணி தான் இப்புடி ரவுண்டு கட்டி அடிக்கறாங்க போல. கடவுளே கடவுளே… “

” மைண்ட் வாய்ஸ்னு நெனச்சி சத்தமா பேசிட்டு இருக்கீங்க கண்மணி!”

“அவ்வ்வ்ளோ சத்தமாவா கேட்டிச்சி? “

“ம்ம்ம் “

“ம்ஹ்ம்.. ” என நொந்து கொண்டவள் அடுத்த வாயை கஷ்டப்பட்டு முழுங்க..

“பாஸ்..! நாம ஏன் ஒரு டீல்ங்க்கு வர கூடாது? ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் நானு வேலய ஒழுங்கா பண்ணுவேனாம், நீங்களும் என்ன திட்டாம பனிஷ்மெண்ட் கொடுக்காம இருப்பீங்களா ஓகேவா?எதுக்கு வீணா நமக்குள்ள சண்ட? ப்ரண்ட்ஸ்? ” என்றவள் சிரித்து கொண்டே கை நீட்ட, அவளையே சலனம் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தான் வருண்.

” அட கைய கொடுங்க பாஸ்!” என்றவள் அவளே அவன் கையை புடித்து இழுத்து குழுக்கி விட்டு, ” டேய் குட்டி மீதிய உன் சித்தப்பாவயே சாப்பிட சொல்லு! ஆள விட்றா சாமி. மீ எஸ்கேப் ” என விட்டால் போதும் என ஓடி விட்டாள்.

‘அவளிற்கு ரொம்ப உரிமை கொடுக்கிறோமோ? ‘ என அவன் மூளை யோசிக்க..

‘ நீ எங்க கொடுத்த அவளா எடுத்துக்கறா ‘ என மனம் சொல்ல.. அது தான் சரி என முடிவிற்கு வந்தவன் அவள் போகும் திசையையே பார்த்திருந்தான்..!

தன் மகள் மகிஷாவிற்கு இரவு உணவை ஊட்டி கொண்டிருந்தாள் சாத்விகா. 

சாப்பிட மாட்டேன் என அவள் அடம் செய்து ஓடி கொண்டிருக்க அவள் பின்னாலயே சாத்விகாவும் சுற்றி கொண்டிருந்தாள்.

குளித்து விட்டு வந்த துருவ். ஓடி கொண்டிருந்த மகளை அப்படியே அள்ளி தூக்கி கொஞ்ச,

” அவ சாப்பிடனும் ” என்றாள் காட்டமாக

“ப்பா பாப்பாக்கு வேணா.. ” என்றவள் துருவின் கழுத்தை கட்டி கொள்ள

“அப்படியா பட்டு?” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட

“டம் ” என்ற சத்ததுடன் பிளேட்டை வைத்து விட்டு சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“பாப்பும்மா இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ணுச்சி?” என்றவன் அவளுக்காக வைத்திருந்த ப்ளேட்டையும் தூக்கி கொண்டு பால்கனிக்கு சென்று விட்டான்.

அவர்களின் சிரிப்பு சத்தம் வீட்டையே நிறைத்தது. சாத்விகாவிற்கு தான் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.

காலை அத்தனை பேச்சு பேசி விட்டு சென்றவன். மறுபடியும் வந்து அந்த பேச்சை தொடரவும் இல்லை. அவன் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பும் கேட்க வில்லை..!

ஆனால் இப்பொழுது மகளுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறான் அந்த அளவிற்கு நான் வேண்டாதவள் ஆகி விட்டேனா?

“பாப்பும்மா அம்மா சாப்டாங்களா?”

” ம்ஹ்ம் “

” அம்மா எப்படி உன்ன கரெக்ட் டைம்முக்கு சாப்பிட வைக்கறாங்களோ அது மாறி நீயும் அம்மாவ சாப்பிட வைக்கனும் சரியா நம்ம அம்மாவ நாம தான டா பாத்துக்கனும் அப்படி சாப்பிடலனா அப்பாக்கு போன் பண்ணி சொல்லனும் சரியா? எங்க ஆ காட்டு பாப்போம் “

அடுப்படியை சுத்தம் செய்து விட்டு வெளிய வர.. இன்னும் மகிஷாவிற்கு அவன் ஊட்டி முடித்தபாடில்லை..!

” இதான் கடைசி வா.. ஆ காட்டு தங்கம் “

” மாட்டேன் எனக்கு கதை வேணும் “

“ஓ.. கதையா சொல்லிட்டா போச்சி , ஒரு ஊருல ஒரு அழகான ராஜா இருந்தாராம் அவருக்கு உன்ன மாறியே க்யூட்டா ஒரு இளவரசியும் இருந்தாங்களாம்.. உன்ன மாறியே தான் சாப்பிட மாட்டேனு அடம் புடிச்சிட்டு இருந்தாங்களா அப்போ அவங்க அம்மா வந்து பாத்தாங்க பாரு ஒரு பார்வை ப்பா.. “

“அவளோ பயமாவா இருக்கும்”

” ஆமா டா கண்ணு.. நீயு சாப்பிடு அப்றம் உன் அம்மாவும் வந்து அப்படி தான் மொறைக்க போற!”

” ஆமா ப்பா அம்மாவும் கண்ண உருட்டி உருட்டி டோரீமான்ல வர கோஸ்ட் மாறியே இருக்காங்க.. “

அதில் சிரித்தவன், “ஹேய் வாலு உன் அம்மா காது ல மட்டும் இது விழுந்திச்சி அப்றம் சட்னி பண்ணிருவா நம்மள”

” மகி இவ்ளோ நேரம் வேணும்மா நீ சாப்பிட? ” அதட்டினாள் சாத்வி

“ஏன் புள்ளய திட்டுற? “

“ஓ… அப்போ இதுக்கு கூட எனக்கு உரிமை இல்ல அப்படி தானே? என்னமோ பண்ணுங்க அப்பனும் மகளும்!” என எரிந்து விழுந்தவள்

படுக்கையறையில் போய் படுத்து விட அவள் கோவத்தின் காரணம் தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் துருவ்.

பொதுவாகவே பெண்களுக்கு என ஒரு குணம் உண்டு. எந்த பிரச்னையாக இருந்தாலும் எத்தனை நாள் அது நடந்தாலும் அது முடியும் வரை அதை மறக்காமல் மனதினிலேயே வைத்து கொண்டிருப்பார்கள்..! 

அதே போல் ஆண்களுக்கும் சில குணம் உண்டு. வீட்டுல நடந்ததை வெளியே போய்விட்டால் மறந்து விடுவார்கள்.

காலை இப்படி ஒன்று நடந்தது என்பதை நினைவில் கொள்ளாமல் சகஜமாக நடந்து கொள்வர்..!

ஆனால் பெண்ணவளோ துணையவன் தன்னை சமாதானம் செய்ய வேண்டும் பேசி தீர்க்க வேண்டும் என எதிர்பார்ப்பாள்..!

இதில் ஒருவர் நிலைபாடை மற்றவர் புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து நடப்பதிலேயே வாழ்க்கையின் சாராம்சம் அடங்கி இருக்கிறது.

இதை புரிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி கொள்கிறார்கள்..!

புரியாதவர்கள்..??

மகளிற்கும் ஒரு வழியாக ஊட்டி விட்டு தானும் உண்டு அவளை சாப்பிட அழைக்க வந்தான் துருவ்.

அவளோ அழுது அழுது ஓய்ந்து உறங்கியே போய் இருந்தாள். மெல்ல அவள் தலையை வருடி கொடுத்தவன், பெட்ஷீட்டை போர்த்தி விட்டு தூங்கும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
26
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்