Loading

மிது வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள்… இவ்வளவு நேரம் அடைத்து வைத்த கண்ணீர் தானாக சிந்தியது….

ஏன்மா எனக்கு மட்டும் இப்படி நடக்குது…இதுக்கு என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாமே…என்று அழுதாள்…

அவள் பின்னால் ஓடி வந்த அவளின் தோழி கதவை திறந்தாள் …

மிது அழதா….இப்பவே நிறுத்தனுது ரொம்ப நல்லது இந்த ஸ்டிராங்கா டிசைட் பண்ணாம ஒரு பொண்ணு வாழ்க்கையை பற்றி கவல படாத குடும்பத்தில் நீ வாழ வேணாம்….என்றாள் உயிர் தோழி ஹேமா….

 முடியல ஹேமா நானா அவங்கள போய் கேட்டேன் கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு…அவங்களா என்கிட்ட பேசிட்டு அவங்க பையன்கிட்ட பேசாம இப்படி பண்ணிட்டாங்களே…எல்லாரும் எப்படி பாத்தாங்கனு நீயும் பாத்தல….

 மிது விடுடி இந்த மாதிரி ஆள மேரேஜ் பண்ணி நீ என்ன டி பண்ணுவ இப்பவே அவன் சுயரூபம் தெரிஞ்சுதுல விட்டுட்டு வேலையை பாருடி…உன்ன மாதிரி நல்ல பொண்ண மிஸ் பண்ண அவன் தான் பீல் பண்ணனும்…..ஹேமா.

  மிது அழுது கொண்டே இருக்க எப்படியோ சமாதானம் செய்து தூங்க வைத்தாள் ஹேமா…

மிதுவின் ஓரே தோழி உறவு எல்லாமே ஹேமா மட்டுமே..அவளும் ஆசிரமத்தில் வளர்ந்தவளே…. இருவரும் ஒன்றாகவே வேலை பார்க்கின்றனர்…

—————********——————

இரவில் வானத்தை வெறித்து கொண்டிருந்தான் விஷ்வா..

  ஆச்சி நான் தப்பு பண்ணிடேனா அந்த பொண்ணுகிட்ட முன்னடியே சொல்லிருக்கனுமோ…அவர் தான் ( விஷ்வா வின் அப்பா) என்ன அந்த பொண்ணு கிட்ட பேசவே விடல….நான் என்ன பண்றது…‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அவங்க ஒன்னும் நல்ல எண்ணத்தில இத பண்ணல ஆச்சி.‌‌அந்த பொண்ண கார்னர் பண்ணி ஒத்துக்க வைச்சிருக்காங்க….நான் இந்த பொண்ண வேணாம்னு சொன்னா எப்படியும் இன்னொரு பொண்ண ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பார்ப்பாங்க அதா கல்யாணத்து அன்னிக்கு நிறுத்துனேன்…இனிமே எனக்கு பொண்ணு குடுக்கவே யோசிப்பாங்கல்ல…என்று தன்‌மனதில் உள்ளதை புகைபடத்தில உள்ள ஆச்சியிடம் கொட்டிருந்தான் விஷ்வா…

 ஆம் விஷ்வாவின் அம்மா மற்றும் அத்தையின் சதியே இது விஷ்வா வின் ஆச்சி விஷ்வாவிற்கு அனைத்தும் கொடுப்பதில் அவனின் அத்தை ராஜேஸ்வரிக்கு விருப்பமில்லை…அந்த சொத்துகளின் மீது அவருக்கு உரிமை இல்லை தான்‌எனினும் சொத்து வேண்டும் என்ற ஆசையில் விஷ்வாவின் அம்மா மனதை கரைத்து இப்படி ஒரு திட்டம்…அது‌தெரியாமல் அர்ஜீனனும் மிதுவிடம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சொல்ல அவளோ முதலில் மறுத்தாள்…விஷ்வாவின் ‌‌‌அத்தை தான்‌ சென்று பேசிவிட்டு சம்மதம் வாங்கினாள்….

இதை அறிந்த விஷ்வா தான்‌ தடுத்திட நினைத்தான்…

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எவ்வளவு முயன்றும் அவளின் தீர்க்க விழிகளை மறக்க முடியவில்லை குற்ற உணர்வு என்று அவன் நினைத்தான்… ஆனால் அது காதலின் ‌‌‌‌‌‌முதல் படி என்று யார் சொல்லுவது அவனிடம்…

_______________*********__________

மறுநாள் காலையில் மிது வழக்கம் போல எழுந்து குளித்து முடித்து விட்டு சமையல் செய்தாள் அப்போது எழுந்த ஹேமா அவளை பார்த்து குட் மார்னிங் மிது என்றாள்

 வெரி குட் மார்னிங் டி..தோழி பழையபடி ஆனதில் திருப்த்தியுடன் குளிக்க சென்றாள்..

இருவரும் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்ல அங்கே விஷயம் தெரிந்து விட்டதால் சிலர் நிஜமாக வருந்நி ஆறுதல் சொல்ல சிலர் வேண்டுமென்றே காது பட குத்திகாட்டி சென்றனர்…

 அனைத்தையும் முன் சிரிப்புடன் கடந்து சென்றாள்….

மதிய வேளையில் ஆபிஸே பரபரப்பாக இருக்க என்னடி இன்னிக்கு ஆபிஸே ஒரு டைப்பா இருக்கு….

   ஹாய் ஏஞ்சல்ஸ் என்றபடியே வந்தான் மிதுவின் தோழன் ஹேமாவின் காதலன் …. இன்னும் இருவரும் சொல்லி கொள்ள வில்லை ஆனாலும் நேச விதையை இருவரும் உணர்ந்து இருந்தனர்…..

       என்ன சஞ்சய் ஆபிஸே பதட்டமா இருக்கு…என்றாள் மிது..

‌. மிது உனக்கு. விஷயமே தெரியாதா… அர்ஜூனன் சார்க்கு கொஞ்சம் பண பிரச்சனையாம்…அந்த நேரத்தில் அவர் பையன் இந்த ஆபிஸ வாங்கிட்டாராம்….அது எப்படி தான் அப்பாவுக்கு உதவி பண்ணாம அவரோட லாபத்த பார்க்கிராங்களோ….என்றான் சஞ்சய்….

      பணக்காரங்களே இப்டி தான் டா என்றாள் மிது…

   சரி விடுடா நீ தப்பிச்சட்ட…

    இன்னிக்கு நான் கம்பெனி மாறியிருக்கு மே பி நாளைக்கு அவரு டேக் ஓவர் பண்ணுவாரு… சஞ்சய்…

   சரி பார்த்துகலாம் — மிது…

விஷ்வாவின் வருகையால் நிகழ போகும்‌ மாற்றங்களை அறியாமல் இருந்தாள் பேதை…….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்