- திருச்சியில் மிக பெரிய குடும்பத்தை உடையவர் ராகவ கிருஷ்ணன்..இவரின் மனைவி மீனாட்சி அழகும் அறிவும் உடையவர்…இவருக்கு மூன்று பிள்ளைகள்….
இரு ஆண் மற்றொரு பெண்…
அதில் மூத்தவர் அர்ஜீனன் இவரின் மனைவி விசாலா இருவருமே நல்லவர்கள் தான் ஆனால் விசாலாவிடம் சில குறைகள் உண்டு…..
அடுத்தது சந்திரன் – சத்யா
அடுத்து பெண் ராஜேஸ்வரி- ஈஸ்வர்
ஆரம்பத்தில் அர்ஜுனன் தொழிலே தெய்வம் என்று ஓடிக் கொண்டிருக்க விசாலா வெறுமையை உணர்ந்தார்….இருவரும் மகிழ்வாக வாழ தானே பணம் மகிழ்ச்சி இல்லாமல் பணம் மட்டும் வைத்து என்ன செய்வது என்றே விசாலா வெறுப்பாக இருந்தாள் ….ஆனால் இருவரின் அலட்சியத்தால் பாதித்தது இவர்களின் ஒரே மகன் விஷ்வா ..விஷ்வா மித்திரன்….இருவரும் இவனை ஒதுக்கி விட. ஒரு கட்டத்தில் விஷ்வா இவர்களை ஒதுக்கி விசாலா வின் தாய் அம்மாச்சியிடம் அடைகலம் ஆனான்…..அவர்களும் விஷ்வாவிற்கு நல்ல குண நலன்கள் சொல்லி கொடுத்து வளர்த்தனர்…விஷ்வாவின் 20 வயதில் அவர்கள் இருவரும் ஒருவிபத்தில் தவறி விட்டனர்…அதன் அவர்களின் அனைத்து சொத்துகளுக்கும் வாரிசானான்….அவனின்கடின உழைப்பினால் அதுமேலும். பல மடங்கு உயர்ந்தது…..அவனின் அம்மாச்சி சாகும் தறுவாயில் நீ உன்குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று கூறி விட….இவனோ அவர்களுடனன் இருக்க மாட்டேன் அவர்களுக்கு பக்கத்தில் நம் இடத்தில் தனியாக தான் இருப்பேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டான்…..அவர்களும்சரி என்று அவர்களின் இறப்புக்கு இங்கு வந்து தங்கினான்…… எத்தனை முறை தந்தை தாய் என அனைவரும் பேச விழைந்தாலும் மதிக்காமல் சென்று விடுவான்…..
சந்திரன் சத்யாவிற்கு ஒரு மகன் யாதவ் ஒருமகள் யாழினி
ராஜேஸ்வரி க்கு முதலில் பெண் அதுல்யா அடுத்து ஆண் தர்ஷன்….
—****——
திருச்சிக்கு அருகில் உள்ள கிராமத்தில் காதல் தம்பதிகளுக்கு பிறந்தவள் மிதுவர்ஷினி…..
காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை பெற்றோர் ஆசையுடன்…. ஆனால் விதி இவளின் 17 வயதில் பெற்றோர் விபத்தில் இறந்தனர்….
அது அவளின் கல்லூரி சேர்ந்த சமயம்…கூண்டுக்குள் வளர்க்க பட்ட மிதுவால் இந்த பேரிழப்பை சமாளிக்க இயலாமல் தடுமாறினாள்…
ஊர்கார்களின் உதவியால் சடங்கு அனைத்தும் முடித்தாள்….படிப்பிற்கு அவளின் தந்தை சேர்த்து வைத்த பணம் இருந்தால் தன் நான்கு வருட கல்லூரி படிப்பை முடித்தாள்..படிப்பை தவிர வேறு எதுவும் இல்லை அவள் வாழ்வில்… வெறியுடன் படித்து முடித்து மிக பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்….
_____******______
விஷ்வா இங்க வாப்பா…
சொல்லுங்க தாத்தா….
அது உங்க அப்பா உனக்கு கல்யாணம் பண்ணனும் ஆசபடறான்..
யாரிடமும். பேசாதவன் தாத்தா வுடன் மட்டும் பேசுவான்…..
சொல்லுங்க தாத்தா
அது வந்து உன்அப்பா கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கான்….
என்னது கல்யாணமா …யார கேட்டு இதெல்லாம் பண்றாரு என்ன இப்ப தான் பையன் ன்னு பாசம் வருதாமா…..
அது இல்ல அவன் பாத்துருக்க பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு இங்க பக்கத்தில் தான் இருக்கு அதோட அந்த பொண்ணு ரொம்ப திறமைசாலி உனக்கு பொருத்தமா இருப்பா…
எனக்காக யோசிச்சு பாருடா விஷ்வா….
விஷ்வா எதுவும் பேச முடியாமல் நின்றான்… யாரிடமும் பேசவில்லை என்றாலும் தாத்தா வின் பேச்சை கேட்க வேண்டும் என்று ஆச்சியின் கோரிக்கை…தன்காக வாழ்ந்தவருகாக இதை செய்யலாம் என்று தோன்றியது…..
சரிஎன்னவோ பண்ணுங்க…
——*****——–
இங்கு மிதுவிடமும் விஷ்வா வின் தந்தை சமார்த்தியமாக பேசி சம்மதம் வாங்கி விட்டார்… ஆனால் மிதுவிற்கு ஒரு உறுத்தலாக இருந்து கொண்டே இருந்தது…..
பயத்துடனே இருந்தால் மிது…
இதோ விடிந்தாள் திருமணம் ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ள போகிறவனை காணவில்லை…..
———****———
கெட்டிமேளம் முழங்க ஐயர் மந்திரம்ஓத அனைவரும் அச்சதை போட தயார் நிலையில் இருந்தனர்…
ஆனால் தாலி கட்ட வேண்டியவனோ தாலி கையில் வைத்து வெறித்து கொண்டிருந்தான் ….யாரும் எதிர்பார்கா நொடியில் தாலி அக்னியில்வீசி விட்டு என்னால இந்த கல்யாணத்த பண்ணிக்க முடியாது என்றான் அழுத்தமாக….
குழப்ப நிலையில் மணமகள் நிமிர்ந்து பார்த்தாள்… அனைவரும் அவர்களுக்குள் சலசலத்து கொண்டிருக்க…
என்ன பண்ணிட்டு இருக்க விஷ்வா ..உன்ன கேட்டு தான முடிவு பண்ணோம்…
என்ன கேட்டிங்களா அவன் கூர்மையாக தந்தையை பார்க்க..
அவர் தடுமாற்றத்துடன் அது அது வந்து நீயும் அமைதியா தான இருந்த இப்ப வந்து என்னால் முடியாது ன்னு சொன்னா என்ன அர்த்தம் …என அவனின் தந்தை உச்சத்தில் கத்தி கொண்டிருக்க
பட்டென்று முடியாது ன்னு அர்த்தம் பா என்றான்…..விஷ்வா… விஷ்வாமித்திரன்
இதை அனைத்து வெறித்த விழிகளுடன் பார்த்து கொண்டிருந்தாள்
அவளால் எதுவும் செய்ய முடியாது ….அவளுக்காக பேச அங்கு யாரும் இல்லை…
விஷ்வாவின் குடும்பம் மொத்தமாக அவனிடம் கெஞ்சினர் அவன் யாரு பேச்சையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை….
பட்டென்று ரூம் கதவை அடைத்துக் கொண்டாள்…. அனைவரும் அவளை நோக்கி செல்ல விஷ்வா அசையாமல் நின்றான்….
முழுதாக ஐந்து நிமிடங்கள் தன்னை நிலைப்படுத்தி கொண்டாள்… பின் அலங்காரங்களை கலைத்து விட்டு அவளின் நார்மல் உடையில் வெளியே வர அனைவரும் அவளையே பார்த்து இருந்தனர்…..அவள் என்ன சொல்ல போகிறாள் என்று
அவளோ நேராக தாத்தாவிடம் சென்றவள் நகையை கொடுத்து விட்டு வரேன் தாத்தா என்று கிளம்பினாள்….
அவளை தடுக்க கூடமுடியாமல் வயதானவர் மெளனமாய் அழுதார்….
விறுவிறுவென்று மண்டபத்தை விட்டு வெளியேறினாள்….கண்களோ இப்பவோ அப்பவோ என நீரை இறைக்க தயாராக இருந்தது …முயன்று தன்னை கட்டு படுத்தியவள் தன் வீட்டை நோக்கி நடந்தாள் மிதுவர்ஷினி….
இவர்கள் மீண்டும் இணைவார்களா….