Loading

 

 

 

 

 

 

 

முடிவே தெரியாத நீண்ட சாலை…

சாலையின் இருபுறமும் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் மரங்கள்….

இறுகப் பிணைந்திருக்கும் இரு கைகள்…

நிலவொளியில் ஒரு பயணம்…

 

 

 

“அப்பா! அப்பா! எங்கப்பா போறோம்?”தந்தையின் தோளில் தொங்கிக்கொண்டே கேட்டேன்.

 

“அதோ அந்த நிலாவ பாத்தியா?”

 

“ஆமாம்பா ரொம்ப அழகா இருக்கு. எனக்கு அத அப்பிடியே எடுத்து கடிச்சு சாப்பிடனும் போல இருக்கு. அம்மா சுடுற இட்லி மாதிரி இருக்கு தானேபா?”

 

“அது சரி, அப்ப நாளைக்கும் உங்க அம்மாவ இட்லி சுட சொல்லுவமா?”

 

“ஏன் பா? ஏன்? என்னோட நாக்கு நல்லா இருக்கது உங்களுக்கு புடிக்கலயா? நீங்க வேணும்னா உங்க நிலா சுடுற இட்லிய தினமும் சாப்பிடுங்க. என்னால முடியாதுப்பா”

 

“எங்கிட்டயே என் நிலாவோட சமையல கிண்டல் பன்றியா?”என கூறி என் தலையில் செல்லமாக குட்டினார்.

 

நான் என் தலையைத் தேய்துக்கொண்டேஆறடியில் கம்பீரமான உடல் வாகுடன் அந்த நிலவொளியில் மிளிர்ந்ந அழகிய நீலக்கண்களுக்கு சொந்தமான என் தந்தை மருதனைப் பார்த்தேன்.அவரும் என்னைப் பார்த்து 

 

“நான் மட்டும் தான் என் நிலாவோட சமையலை கிண்டல் பண்ணுவேன்”எனக் கூறியவுடன் இருவரும் மனம் விட்டு சிரித்தோம்.திடீரென ஏதோ வித்தியாசமான, பயங்கரமான ஒலி எம் செவிகளை எட்டியது. ஒலியை கேட்டு நான் பயத்தில் தந்தையைப் பார்த்த மறுநொடி என் வீட்டில் இருந்தேன் ஆனால் என் தந்தையை மட்டும் காணவில்லை.

தந்தையை தேடும் போது அவர் எங்கும் காணாமல் போக”அப்பா!!!!!!”என நான் அலறுகிறேன். ஆனால் யார் செவிகளுக்கும் எட்டவில்லை….

 

 

“தீரா! தீரா! எந்திரிஎன்ன ஆச்சு? ஏன் இப்பிடி அலறுற?” என தீராவை தட்டி எழுப்பினாள் ரக்ஷிதா.

 

“தெரியல. இப்ப கொஞ்ச நாளா மாறி மாறி அப்பாவையும் அம்மாவையும் கனவுல கண்டுட்டே இருக்கேன். ஆனா ஒரே இடத்தில. 

அவுங்க ஏதோ என் கிட்ட சொல்லனும்னு நினைக்கிறாங்கலோ தெரியல”

 

“பேசாம தூங்கு தீரா. நாளைக்கு நீ வேளைக்கே    காலேஜுக்கு( colllege)

போகனும் தானே. இப்போ கொஞ்ச நாளா அப்பாவையும் அம்மாவையும் நினைச்சிட்டே இருக்கனால இப்பிடி கனவு வரலாம்.அந்த இடம் நீ வரையுற ஓவியமா கூட இருக்கலாம்”

 

“நீ சும்மா ஒரு ஓவியத்த வரைந்தா பரவாயில்ல. வித்தியாச வித்தியாசமா நடு இராத்திரி வரை இருந்து வரைஞ்சா இப்பிடி தான் கனவுல வரும்”

 

“இல்லபா”என தீரா பேச வாயை திறக்க

 

“Finger on your lips!” என அவள் அதட்ட விரைவாக வாயில் விரலை வைத்தாள்.

 

“Close your eyes!”என மீண்டும் அதட்ட கண்களை இறுக மூடினாள்.

ரக்ஷிதா இதைப்பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ” now sleep” என கூற பேசாமல் படுத்துக் கொண்டாள்.தீரா, தந்தைக்கு பின் சொல் பேச்சை தட்டாதிருப்பது ரக்ஷிதாவிற்கு மட்டுமே.

—————————————-

 

யாருக்கும் காத்திருக்காமல் பல புதிர்களோடு அடுத்த நாளும்உதயமானது….

 

தீராவும் கல்லூரிக்குச் செல்ல தயாராகி வந்தாள்…

(தீரா நுண்கலைக் கல்லூரியில் ஓவிய பேராசிரியை ஆக பணியாற்றுகின்றாள். சிறு வயதிலிருந்தே தந்தையின் ஓவியத்திறமையைப் பார்த்து, அதில் கவரப்பட்டு ஏற்பட்ட ஆர்வத்தினால், பாடசாலை முடித்த பின்னும் ஓவியம் வரைவதில் பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தாள். இன்று ஓவியம் கற்கும் பல மாணவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குகின்றாள்.)

 

வங்கியில் உதவி முகாமையாளராக பணிபுரியும் ரக்ஷிதாவையும் அழைத்துக்கொண்டு கல்லூரியை நோக்கி நடந்தாள்.போகும் வழியில் ஒரு கூட்டம் கூடியிருப்பதைக்கண்டு இருவரும் அதன் அருகே சென்று பார்த்தனர். 

 

அங்கே ஒரு பதினைந்து வயதை எட்டிய சிறுவன் இரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தான். அவனைத் தூக்கிச் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்காமல் அவனையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் கூட்டம். அதிலும் விந்தை என்னவென்றால் ஒரு இளைஞன் அந்தச் சிறுவனை தன் கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டு இருந்தான்.

 

இவர்கள் இருவரும் கூட்டத்தை விளக்கி அந்தச் சிறுவனை தூக்கிக்கொண்டு வழியில் வந்த ஒரு முச்சக்கர வண்டியை மறித்துஅந்தச் சிறுவனை வண்டியில் ஏற்றினர். இதனையும் அந்த இளைஞன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்துக் கோபம் கொண்ட தீரா கண்களை அழுந்த மூடித்திறந்த மறுநொடி அக் கைப்பேசி தரையில் விழுந்து உடைந்து சிதறியது.

 

“ஐயோ! என்னோட ஃபோன்(phone)”என அலறி சிதறிய கைப்பேசியை பொறுக்கிக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

 

ஆனால் அங்கு நின்ற மக்கள் கூட்டத்தின் தலையாய கடமை தான் சிறிது நேரம் நீடித்தது.

 

இது யாருடைய வேலை என அறிந்த ரக்ஷிதா சிறு புன்முறுவலுடன் அதே முச்சக்கர வண்டியில் தன் நண்பியுடன் ஏறிச்சென்று அந்தச் சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு காத்திருந்தனர்.

 

ஆனால் தீரா ஒரு தீவிர யோசனையில் ஈடு பட்டிருந்தாள். 

 

” என்ன யோசிச்சிட்டு இருக்க?”  அவளது சிந்தனையைக் கலைத்தாள்.

 

“இல்ல… இந்தப்பையன எங்கையோ பாத்த மாதிரி இருக்கு”எனக் கூறிய நண்பியை ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பிக்கொண்டாள்.                                                             

                                                     தொடர்வாள்…

 

 

 

-பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி-

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்