About

sindhu Krishnamurthy

நான் சிந்து கிருஷ்ணமூர்த்தி. படித்தது பொறியியலில் உயிரிதொழில்நுட்பம். ஒன்றரை ஆண்டுகள் முன்பு வரை வாசகியாக மட்டுமே இருந்தவள். இப்பொழுது வாசிப்போடு எழுதவும் துவங்கியிருக்கிறேன். எழுத்துலகில் தவழும் மழலை நான். சிறு வயது முதலே தமிழ் என்றால் பிடித்தம் ஏன் உயிர் என்றே கூறலாம். முதன் முதலில் நான் எழுதியது கவிதைகள் தான். பின் கதைகளும் எழுத துவங்கியிருக்கிறேன். நான் எழுத வந்ததே விளையாட்டான ஒரு விபத்து. ஆனால் எழுத துவங்கியப் பிறகு அதில் கிடைக்கும் திருப்தியால் எழுதுவதைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன். எழுத எழுத தமிழ் மீது கொண்ட காதல் அதீதமாகிக் கொண்டு இருக்கிறது. அதீதமானது இன்னும் ஆழமாக வேண்டுமென்றே என் எழுத்து பயணமும் வாசிப்பும் தொடர்கிறது. நான் முதலில் எழுதத் தொடங்கிய தளம் பிரதிலிபி. பிரதிலிபி தாண்டி நான் எழுத வந்திருப்பது தூரிகை தமிழ் நாவல்கள் தான். தற்போது அன்னா ஸ்வீட்டி அவர்களின் தளத்தில் போட்டி கதை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது படைப்புகள் அனைத்தும் பிரதிலிபியிலும் மூன்று படைப்புகள் மட்டும் அமேசானில் இ- புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.

sindhu Krishnamurthy
6

Completed Books

4

Ongoing Books

Thoorigai Novels

4. இதயம் நீங்கா இளவேனில்

அத்தியாயம்- 4             அன்று தமிழ் சற்று முன்னதாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தாள். வந்ததும்...

3. இதயம் நீங்கா இளவேனில்

அத்தியாயம்- 3          "அப்பா பஸ் வந்துற போகுது ப்பா. கொஞ்சம் வேகமாதான் போயேன். காலேஜ் பஸ்ஸ விட்டா தனியா...

2. இதயம் நீங்கா இளவேனில்

அத்தியாயம்- 2           பேருந்திலிருந்த மாணவர்கள் பேராசியர்கள் என்று அனைவரது பார்வையும் பின்னே தான்...

1. இதயம் நீங்கா இளவேனில்

அத்தியாயம்- 1      ஒளியோன் உயிர்களின் உறக்கம் கலைத்தக் காலை வேளை. இரைத்தேடி பறந்தப் புள்ளினங்களின்...

27. அகவழகி

         கொடைக்கானலின் நகரப் பகுதியை தாண்டி மகிழுந்து பயணித்துக் கொண்டிருந்தது. கட்டுப்போட்ட கையுடன்...

26. அகவழகி

      கதிரை பற்றிய கவலையில் அவ்விரவை உறங்கா இரவாகக் கழித்தாள். விடயலுக்காகவே காத்திருந்த அழகி செய்த...

Kindle

உன்னில் தொலைகிறேனடா!

உலகில் உயிர்கள் தோன்றியக் காலம் தொட்டு இன்றுவரை நிலைத்து நிற்கும் மாயவித்தை காதல்! உச்சரிக்கும்...

வனாந்திரத்தில் வழிகாட்டி

வாழ்க்கை எவ்வளவு அதிசயங்களையும் மகிழ்வையும் உள்ளடக்கியதோ அதே அளவு அனுபவங்களையும் இன்னல்களையும்...

அன்பின் ஆழி அவள்

காலை இளந்தென்றலாய்க் காதலும் இனிமையான சுகமே. அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில்...

Reviews

பிரம்மிக்க வைக்கிறது

மிகவும் அருமை. விருப்பமான தேடல். ஒவ்வொரு பாகத்தையும் செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு அழகாக காதல், போர், சொல்லாடல். பிரம்மிக்க வைக்கிறது உங்கள் எழுத்து! தலைவணங்குகிறேன். நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருமையான கிராமத்து கதை

அருமையான கிராமத்து கதை. வெற்றி, சத்யாவின் அழகான காதல், பாலா வெற்றியின் ஆழமான நட்பு, அழகான குடும்ப சூழல் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடிப்படை. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசியலின் தாக்கம் நிறைய மக்கள் அறிந்து கொள்ள அருமையான கருத்துகள். சூப்பர் ப்பா. லவ்லி ஸ்டோரி. ஐ லைக் இட் வெரி மச்.

மனசுல நிறைய தாக்கம் ஏற்படுத்தி இருக்கு

அருமையான கதை சகி. ஒரு கதை படிச்சா அதோட தாக்கம் மனசுல நிக்கணும்னு நான் நினைப்பேன். உங்க கதையும் என் மனசுல நிறைய தாக்கம் ஏற்படுத்தி இருக்கு. எந்த வித சூழ்நிலையிலும் நிதானமா தெளிவா தைரியமா இருக்கணும் இது தான் நான் கத்துக்கிட்டேன். உங்க எழுத்து மூலமா...!

Excellent and wonderful narration

First of all thank you for bringing this excellent and wonderful narration of a village story with the realty picture of emotions and love. hatsoff to the writer. I liked the way the story narrated and the way it goes on like i am mingled with the family. I am a big Fan of ramanichandran mam novel after that your novel made me to read your story with the same impact. keep up the good work.

New and Innovative story

சூப்பர் ஸ்டோரி. அதுவும் ஒரு கூட்டு குடும்பத்தை அவ்ளோ அழகா காட்டி இருந்தீங்க. நீங்க சொன்ன நிறைய விஷயம் புதுசா இன்னோவேட்டிவா இருந்துச்சு. நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையா விவசாயிகள் எவ்ளோ கஷ்டப்படுறாங்க நம்மளோட மைண்ட் செட் எப்படி இருக்குன்னு அழகா சொன்னீங்க. then love of the both heroine awesome. friendship of  bala and vetri so nice. all the best for the upcoming works.

Interview Questions

நான் எழுதத் துவங்கியதே விளையாட்டான விபத்து. கண்மண் தெரியாமல் ஓடிய கற்பனைக் குதிரையை கடிவாளமிட்டு கதைகளாகக் களமிறக்கினால் என்ன என்று தோன்றிடவே, வாசகியாக மட்டுமே வலம் வந்தவள் உள் மன ஆசைகளை கற்பனகளை அழுகையை ஆதங்கங்களை கோபங்களை மகிழ்ச்சியை சொற்களாய் வடித்து கவிதை எழுத முயற்சித்தவள் கதைகள் எழுதத் தொடங்கினேன். என் எழுத்தையும் ஏற்றுக் கொண்டப் பெரிய மனதுக்காரர்களால் எழுதுவதைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன். எத்திசையில் இனி பயணமென்ற பெரும் வினா முன்நின்ற பொழுது மனதை திசைத் திருப்பப் பயணித்தக் களமின்று என் வழிகாட்டியாய் மாறிப் போனதால் அதன் கைப்பற்றி நடைப்பழகிக் கொண்டிருக்கிறேன்.

பிழைகள் செய்து பயின்றாலே புரிதல் அதிகமாகும் அது கல்வியானாலும் வாழ்க்கையானாலும். அதற்காக எல்லாப் பிழைகளையும் சரி செய்துவிட இயலாது. சரி செய்யவியலாப் பிழைகளும் உண்டு. எழுத்துப்பிழை சரிசெய்ய இயலும் பிழை. வாசிப்போரின் புரிதலில் தாக்கம் விளைவிக்காது. இதனைப் பயிற்சியின் மூலம் களையலாம். கருத்துப்பிழை சரிசெய்யவியலா பிழை. வாசிப்போரின் புரிதலில் மட்டுமல்ல மனதிலும் தாக்கம் விளைவிக்கும். கருத்துப்பிழை கதையின் கருவிலும் எதிரொலிக்கும். இதனை வாசிப்பு, கலந்துரையாடல், சுய அலசல், சொல்லும் கருத்தின் மீதுக் கொண்ட புரிதல் ஆகியவற்றை வளர்த்தலின் மூலம் களையலாம்.

ஒரு வரியென்ன ஒரு சொல் கவிதையொன்று கூறுகிறேன். " "தமிழ் அன்னை!" பெருங்கவிதைகளான தமிழும் வந்துவிட்டாள் அன்னையும் வந்துவிட்டாள் ஒரே சொல்லில்!"

எனக்கு சங்கடமாக இருக்கும் பிரிவு காதல். இதுவரை எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் கதைகளில் காதல் இருந்தாலும் கேட்டதைப் பார்த்ததை மட்டுமே கொண்டு காதலை கூறிட முடியுமென்று எனக்கு தோன்றாததினாலேயே எனக்கு காதல் சங்கடமாக இருக்கிறது. அது ஒரு நுண்ணுர்வு அதனை மேலோட்டமாய் எழுதவதை மனம் ஒப்புக் கொள்ளா விட்டாலும் காதலின் மேல் கொண்ட ஈர்ப்பு அதனை எழுதத் தூண்டுகின்றதினாலேயே சங்கடமாகயிருந்தாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை எதிர்மறை கதைகளை எழுதியதில்லை. ஆனால் எதிர்மறை நிகழ்வுகளை வைத்து எழுதியிருக்கிறேன். அப்படி எழுதுகையில் மனம் கணமாக இருக்கும். மிகுந்த கணமாகும் வேளைகளில் எழுதுவதை நிறுத்தி வைத்துவிடுவேன். மனம் சரியாக இரண்டு மணி நேரமானாலும் சரி இரண்டு நாட்களானாலும் சரி. நல்ல இசை கேட்பது, தனிமையில் தோட்டத்தில் அமர்வது, இயற்கையோடு கதைப்பது, பிடித்தவர்களிடம் கதைப்பது என்று மனதை இலகுவாக்கி ஒருநிலைப் படுத்தியப் பிறகே விட்ட இடத்திலிருந்து எழுதுவதைத் தொடர்வேன்.