
சிறுகதை வெற்றியாளர்கள்
தளத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதை போட்டியின் முடிவுகள் இதோ 👇
முதல் பரிசு : நம்பிக்கை – செவ்வந்தி புனிதா
கதை, சொல்லப்பட்ட விதம், எழுத்து நடை எல்லாமே சிறப்பாக இருந்தது. கதையின் நீளம் சற்று அதிகம் என்றாலும் கதை படைக்கப்பட்ட விதம் நம்மை முழுமையாக சென்று சேர்க்கிறது. கதையில் மட்டுமல்ல தலைப்பிலும் நேர்மறை சிந்தனைகள் விரவி இருக்கிறது.
இரண்டாம் பரிசு : கிருபானந்த வாரியாரும், வி.பி. துரைசாமி செட்டியாரின் நட்பும் – புவனேஸ்வரி சுவாமிநாதன்.
இது உண்மை நிகழ்வு. அது இன்றைய காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு சென்று சேர, ஒரு சிறுகதை போட்டியில் பதிவிட்ட ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டுகள். ஒத்த தோற்றம் கொண்ட இரு நண்பர்களைப் பற்றிய செய்தியை வாசித்து, உண்மையில் வியப்பில் ஆழ்ந்தேன். இதுபோன்ற முயற்சிகள் ஆக்கப்பூர்வமானது மட்டுமல்ல, சென்று சேரவேண்டிய ஆவணங்களும் கூட. ஒரு நீண்ட பதிவாக இருந்தாலும், அது நடந்த நிகழ்வு என்பதால், அதை பெரிய குறையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. முயற்சிக்கு வாழ்த்துகள்.
கிருபானந்த வாரியாரும் வி.வி.பி துரைசாமி செட்டியாரின் நட்பும் – எஸ்.புவனேஸ்வரி சாமிநாதன்.
மூன்றாம் பரிசு : அற்றார் அழி பசி – இந்துமதி
இன்னும் கொஞ்சம் நேர்த்தியாகச் சொல்லி இருந்தால், முதல் பரிசையே பெற்றிருக்கும் கதை. பசியின் கொடுமையை நேரவாரியாகச் சொல்லி பதிவிட்டு விட்டார். உலகமே கவனிக்க வேண்டிய ஒற்றை பிரச்சனை வறுமை. அதை எளிய வார்த்தைகளில் எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு.
குறிப்பிட தகுந்த படைப்புகள்: பருவப்பிழை, திகழ்வாய் நெஞ்சே கலங்காதே, மழையின் வாசம் நீயடி, நேர்த்தியின் பயணம்.
அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னும் பல கதைகள் சிறப்பாகவே இருந்தன. ஆனால் வெகு நீளமான பதிவாக இருந்ததும், சொல்ல வந்த கருத்தை இன்னும் சுவைபட சொல்லி இருக்கலாமோ என்ற சில காரணங்களால் பின் தங்கின என்றே சொல்லலாம். இது தீர்ப்பல்ல, பரிந்துரை மட்டுமே. அனைவரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
நாங்கள் கேட்டவுடன் உடனே சம்மதித்து வெற்றியாளர்களை தேர்வு செய்ய உதவிய நடுவர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் அன்புகளும்.
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்களது Google Pay Number அல்லது வங்கிக் கணக்கு விபரங்களை எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மின்னஞ்சல் முகவரி : thoorigaitamilnovels@gmail.com
இவண்
தூரிகை தமிழ் நாவல் தளம்
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Congrats to everyone in the competition 💐💐💐💐💐
Congratulations to all 🥳🥳🥳
Congratulations to all💐💐💐💐💐