Loading

அத்தியாயம் 41

“அகன்…” தவிப்புடன் அவன் பெயர் உச்சரித்தவளின் வார்த்தைகளும் அவன் இதழ்களுக்குள் அடைக்கலமாகிட,

அவன் கொடுத்த இன்ப முத்தங்களிலெல்லாம் அதிர்ந்து அடங்கி உடைந்தது அவள் தேகம்.

மனமுவந்து தன்னைக் கொடுப்பதாலோ என்னவோ, இன்னுமாக அவனது தீண்டலை ரசித்து மயங்கிக் கிடந்தாள்.

“மொழி! சுடுவெள்ளம் வேணோ?” மூக்கு நுனியால் அவளது செவி தீண்டிக் கேட்க, வெட்கம் நிறைந்த வதனம் இன்னுமாகச் சிவந்தது.

“நீ வேணும்…” கண்மூடிச் சிலிர்த்தவளின் அதரம் மோகத்தீயில் முணுமுணுத்தது.

அவளை விட அதிக மோகத்தில் வெந்த அர்ஜித் அகனுக்கு, அவளைக் காயப்படுத்தி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் அதிகமாகவே இருந்தது.

“ஸ்டாப் செய்யாமா மொழி… இந்து சத்யமாயிட்டும் எனிக்குப் பகுதியில் நிறுத்தான் பற்றில்லா!(இன்னைக்கு நிஜமா என்னால பாதில ஸ்டாப் பண்ண முடியாது)” கழுத்தினுள் புதைந்தவனுக்கு எதையும் நிறுத்தவும் மனமில்லை.

“ஏன் நிறுத்தணும்?” அவளது கேள்வியில் இன்னுமாக ஒன்றியவனிடம், “உனக்கு நான் வேணாமா மலையாளி?” என அவன் கன்னம் பிடித்துக் கேட்டாள்.

சட்டென ஒரு கோபம் தோன்ற அவள் வயிற்றில் வலிக்காதவாறு அமர்ந்தவன்,

“நீ எனிக்கு நீயாய் வேணம். நிண்டெ அடுத்து காதலை பிரதீக்ஷிச்சு (எதிர்பார்த்து) கல்யாணம் செய்தில்லா. இப்ப ஒவ்வொரு நிமிஷமும் காதலை மாத்திரமே எதிர் நோக்குந்து காந்தாரி.

நின்டெ அகம் வேண்டாந்து வீம்பாய் பரயான் பற்றிய எனிக்கு, ஆ அகம் என்டேது அல்லாந்து விசாரிக்கும்போல் இட் ஹர்ட்ஸ் காந்தாரி…(உன் அகம் வேணாம்னு வீம்பா சொல்ல முடிஞ்ச எனக்கு, அந்த அகன் என்னோடது இல்லைன்னு நினைக்கும் போது இட்ஸ் ஹர்ட்டிங் காந்தாரி)” எனக் கழுத்து நரம்பு புடைக்க, அவள் நெற்றியோடு நெற்றி நெருங்கிக் கேட்டான்.

விழி கலங்கிப் போனது அவளுக்கு.

“என் அகத்துல எப்பவும் இந்த அகன் மட்டும் தான்! சொன்னா நீ நம்புவியா? இல்ல உன்னைக் காசுக்காகத் தான் கல்யாணம் பண்ணேன்னு…” எனும்போதே அவளுடன் இரண்டறக் கலக்கத் தொடங்கினான்.

“அகன்…” தலையணையில் தலையை அழுத்தியவளுக்கு, வலி கூடப் பிடித்தமாய் தோன்றியது.

“என்டே அகம் முழுக்க ஈ அகமொழி மாத்திரம் தன்னே… நின்னைத் தவிரே ஏது பெண்ணையும் என்டெ நிழலும் தொட்டது இல்லடி. நீ விஸ்வசிச்சாலும் (நம்புனாலும்) இல்லெங்கிலும்…” என அவன் சொல்லி முடிக்கும் முன், கழுத்தைத் தூக்கி அவன் இதழ்களை விழுங்கினாள் அகமொழி.

தான் விரும்பிய வார்த்தைகளைக் கேட்டதாலோ என்னவோ, உள்ளமும் உடலும் இணைந்தே இன்பவதையில் சிக்கிக் கொண்டது.

அவள் லேசாய் துடிக்கும்போதே, “பெயின் ஆனோ மொழி?” என எப்போதும் போல மென்மையாகக் கேட்டவன், கட்டை விரலால் அவள் கன்னத்தை வருடிட, அவ்வார்த்தைக்கு ஏங்கியவளின் இதழ்கள் மெல்ல முறுவலித்தது.

“உன்னை விட இந்தக் கேள்வி எனக்குப் பிடிக்கும் அகன்…” அரை மயக்கத்தில் பிதற்றியவள் அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள, ஆடவனின் முகம் பூரிப்பில் விரிந்தது.

“ஐ லவ் யூ காந்தாரி… ஐ லவ் யூ சோ மச்!” என்றவனுக்குப் பொறுமையெல்லாம் பறந்தே போக, அவளுள் தன் தேடலை ஆழமாய் தொடங்கி இருந்தான்.

வலி உணராத உறவின் உச்சநிலையை, மென்மை கலந்தே கொடுக்கும் வன்காதல் கொண்டான் அர்ஜித் அகன்.

அவன் கொடுக்கும், திக்கு முக்காடும் காம ரதக் காதலில் சிக்கித் திணறி, மூச்சிழந்து, பேச்சிழந்து உயிரையும் அவனுக்கே கடனாகக் கொடுத்துப் பொன் காதல் கொண்டாள் அகமொழி.

உயிரும் உயிரும் இணைந்த முடிவுறா இரவின் இருளில், அகமொழியின் பிதற்றலும், அவனது அக மொழியின் போதையும் கலந்தே சூரியன் கிழக்கில் மெல்ல மெல்ல உதயமாக, ஒரே போர்வைக்குள் துயில் கொண்டனர் இருவரும்.

————————–

சூரியக் கதிர்கள் முகத்தில் அறைய, கண்ணைச் சுருக்கிக் கண் விழித்தாள் அன்விதா.

எழ முற்பட்டவளுக்கு வயிற்றில் கனமாக இருக்க, குனிந்து பார்த்துத் திகைத்தாள்.

அவளுக்கு இடப்புறம் அமையா கையையும் காலையும் அவள் மீது போட்டிருக்க, அவளுக்கு வலப்புறம் பிரணீத் அவனது கையையும் காலையும் அவள் மீது போட்டு வாகாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் முகம் வேறு அவளுக்கு வெகு அருகில்.

இரவு எந்தவிதச் சம்பிரதாயங்களையும் வேண்டாமென மறுத்தவன், அமையாவுடன் கதை சொல்லி விளையாடிக் கொண்டிருந்தான்.

முதலில் அன்விதாவிற்கும், ப்ரணீத்திற்கும் இடையில் தான் படுத்திருந்தாள் அமையா.

பின் இருவரும் தலையணையால் அடித்து விளையாடி இடம் மாறி மாறிப் படுத்தனர்.

இம்முறை அன்விதா நடுவில் படுத்துக் கொள்ள, அவளைத் தாண்டி இருவரும் தலையணைச் சண்டையை நிகழ்த்தியதில், “ரெண்டு பேரும் அமைதியா தூங்கப் போறிங்களா இல்லையா?” என விழிகளை உருட்டி முறைத்தாள்.

அமையா எப்போதும் அன்விதாவுடன் உறங்கியே பழக்கம். அவளுடன், அவளது உயரத்திற்கு இறங்கி அடித்துப் பிடித்து யாரும் விளையாடியதில்லை.

சில நாள்களாக பிரணீத், அவளுடன் நிறைய நேரங்களைச் செலவழித்தது அவளுக்கு உற்சாகமாக இருந்தது.

என்னதான் தாயன்பு இருப்பினும், தந்தையுடன் நெருக்கமாக இருக்க அவளுக்கும் உள்மனதில் ஏக்கம் இருந்திருக்கும் தானே.

“சித்தப்பா, அம்மா கூட பில்லோ பைட் பண்ணலாம்.” என்றவள் அன்விதாவின் மீது தலையணையைப் போட,

“அமையா… உன் சித்தப்பா கூடச் சேர்ந்து ரொம்ப சேட்டை பண்ற? ரெண்டு பேரும் அடி வாங்கப் போறீங்க…” எனும்போதே பிரணீத் அவன் பங்கிற்குத் தலையணையால் அடித்ததில், அவளும் தலையணைச் சண்டையைத் தொடங்கி வைத்தாள்.

பின் எப்போது சோர்வாக உறங்கினார்களென்று அவர்களுக்கே தெரியவில்லை.

“அமையாவைச் சமாளிக்கிறதை விட இவனைச் சமாளிக்கிறது தான் கஷ்டமா இருக்கு…” எனச் சிறு புன்னகையுடன் சலித்துக் கொண்டவள், அவன் காலையும் கையையும் மெல்ல எடுத்து விட, அதில் அவன் விழித்து விட்டான்.

தனது கையைப் பிடித்திருந்த அன்விதாவிடம், “குட் மார்னிங்” எனக் குழறலாகக் கூற அவனது கையைத் தயக்கத்துடன் விட்டவள், “உன் குட் மார்னிங் இருக்கட்டும். முதல்ல தள்ளிப் படுடா… ரெண்டு பேரும் என் மேல ஏறிப் படுத்திருக்கீங்க.” என முறைத்தாள்.

அவனோ இன்னும் நெருங்கிப் படுத்து, “இதான் வசதியா இருக்கு…” என அவள் தோளில் நெற்றி பதித்து மீண்டும் கண்ணை மூடிக்கொள்ள, அவள் சற்றே திகைத்தாள்.

புடவை வேறு கட்டி இருந்ததால், அது இங்கும் அங்கும் நெளிந்திருந்தது.

“பிரணீ எந்திரி. அமையா முழிச்சுடப் போறா…” அவளுக்குச் சங்கடமாக இருக்க,

“ஓகே…” என்றவன் அவளிடம் விலகிப் படுத்து மறுபுறம் திரும்பிக் கொண்டான்.

அதுவும் அவளுக்கு வருத்தத்தைக் கொடுக்க, “இல்ல… நான்…” அவள் தடுமாறியதில் மீண்டும் அவள் பக்கம் திரும்பிப் படுத்தவன், அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “ஐ வாண்ட் திஸ் டைப் ஆஃப் குட்மார்னிங்!” என்று சில்மிஷத்துடன் சிரித்து விட்டுக் குப்புறப்படுத்துக் கொள்ள, அன்விதாவின் கன்னங்கள் சிவந்து போனது.

இறுதியாக எப்போது இப்படி ஒரு காதல் முத்தம் பெற்றாளென்று அவளுக்கே நினைவு இல்லை.

மெல்லுணர்வுகளைத் தூண்டி விட்டு, இரசாயன மாற்றம் கொடுக்கும் முத்தம். அடிவயிற்றில் அமிர்தம் போல் நிறையும் முத்தம். மீசை உரசிய கன்னத்தைத் துடைத்துக் கொண்டவளுக்குப் புத்தம் புது நாணம் பரவியது.

நிச்சயமாக, பயம் ஏற்படவில்லை. மென் புன்னகையுடன் குளியலறையில் புகுந்து, குளித்து விட்டுத் திரும்பும் போது, அமையாவும் பிரணீயும் பெட் காபி கேட்டு அன்விதாவைத் தொல்லை செய்யத் தொடங்கியதில், அவர்களது இம்சைகளை ரசிக்கத் தொடங்கினாள்.

———–

ஆழ்ந்த உறக்கத்தைக் கலைக்கும் வண்ணம், அகமொழியின் அலைபேசி தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தது.

இரண்டு முறை கத்தி ஓய்ந்த பிறகே அர்ஜித் லேசாய் நெளிந்தான்.

கட்டிலுக்குப் பக்கவாட்டில் இருக்கும் மேஜையில் இருந்த அலைபேசியை எட்டி எடுத்தவன், பாஸ்கரின் பெயரைக் கண்டதும், குனிந்து தன்னவளைப் பார்த்தான்.

அசையாது உறங்கிக் கொண்டிருந்ததில் சிறு புன்னகை அவனிடம்.

“மொழி… நின்டே அச்சன்!” எனத் தட்டிட,

“ப்ச், அவரை அப்புறம் வரச் சொல்லு…” என்று நெஞ்சில் இன்னுமாக முகம் புதைத்ததில் புன்னகை பெரிதானது அகனுக்கு.

பின் அவனே அழைப்பை ஏற்றிட பாஸ்கரோ, “என்னமா, இன்னும் வீட்டுக்கு வரலை. நைட்டே கிளம்பிட்டேன்னு சொன்னியே, எங்க இருக்க?” எனப் பதற்றமாகக் கேட்டார்.

“அவள் இனியும் (இன்னும்) சென்னையில இருந்து கிளம்பியிட்டில்லா… என்டெ கூடத் தன்னே இரிக்கனது.” அர்ஜித்தின் குரல் கேட்டதில் துணுக்குற்றார்.

“என்..என்னாச்சு, எதுவும் பிரச்சினையா?” அவர் பதறியதில், “என்டெ வைஃப்என்டெ கூடே இருந்தால் பிரச்சினையோ?” அதிகாரமான அவனது குரலில் திகைத்தவர், “இல்ல இல்ல… அவள் வரலைன்னு கேட்டேன். நைட்டு என்னாச்சு? பஸ் மிஸ் ஆகிடுச்சா?” எனத் தடுமாறினார்.

அதில் அவளும் உறக்கம் இழந்து கண்ணை விழித்திருக்க, அகனோ அவள் தலையைக் கோதியபடி, “நைட்டு எந்தாயினு ஆல்ரெடி கல்யாணம் செய்து ஒரு பெண்ணைப் பெற்ற நிங்கள்க்கு அறயில்லே (தெரியாதா) அச்சா?” எனக் குறும்பு மின்னக் கூறியதில் அகமொழி பதறி விட்டாள்.

“டேய் பைத்தியக்காரா… அப்பாகிட்ட என்னடா பேசிட்டு இருக்க?” ஹஸ்கி குரலில் அவசரமாக அலைபேசியை வாங்கிட, “என்டெ வைஃப் என்டெ கூடே இரிக்கனதினு நின்டெ அச்சன் எந்தினாடி இத்தர குவெஸ்ட்டின் சோதிக்கனது…” என அவனும் பதில் பேசினான்.

எதிர்முனையில் பேயறைந்தது போல அமர்ந்திருந்த பாஸ்கரோ, அசடு வழிய அப்படியே அழைப்பைத் துண்டித்து விட்டார்.

மகளின் வாழ்க்கை சரியாகி விடும் என்ற நிம்மதி அவர் முகத்தில் தீர்க்கமாகப் பரவியது.

“ஹையோ…” எனத் தலையில் கை வைத்துக் கொண்டவளுக்கு எழவும் முடியாத நிலை.

போர்வையை இறுக்கிப் பிடித்திருந்தாள்.

தலையில் கையை ஊன்றி அவள் பக்கம் திரும்பியவன், “வளரே கோபம் வருந்தெங்கில் எந்திரிச்சு இருந்து அடி காந்தாரி…” அவன் அவளை வம்பிழுக்க, அவளுக்குத் தான் முகமே இரத்த நிறமாய் சிவந்தது.

“உன்னால நான் பஸ் மிஸ் பண்ணிட்டேன்.” அவன் நெஞ்சில் குத்தியதில், “அடிப்பாவி… என்டெ டீஷர்ட்டை பர்ஸ்ட் கழட்டுனது யாரானு?” என ஒற்றைப் புருவம் உயர்த்திட அவளுக்கு ஐயோ என்றிருந்தது.

“முதல்ல கிஸ் பண்ணது நீ தான?” அவளும் விடாமல் சண்டைக்கு வர,

“கிஸ் செய்யான் வேண்டி அல்லே நீ சேரியை சேஞ்ச் செய்யாதே (செய்யாம) என்னே தூண்டி விட்டது?” என வாதம் செய்தான் குறும்பாக.

“நான் உன்னைத் தூண்டி விடணும்னு தான பார்ட்டி ஹால்ல என்னைக் கண்டுக்காத மாதிரி நடிச்ச?” அவள் முறுக்கிக் கொண்டதில்,

“நின்னே தனியே எங்கனே (எப்படி) தள்ளிட்டு வராமெந்து (வரலாம்னு) டீப் திங்கிங்கில் இருந்து. நீயே அதினு ஒரு ரூட் இட்டு தந்திருந்து… அதானு கிடைச்ச சான்சை எந்தினு (எதுக்கு) வேஸ்ட் செய்யனம்ந்து…” என்றபடி ஒற்றை விரலால் அவளது இடையில் கோலமிட, அவள் வெட்கம் தாளாது முகத்தை மூடிக்கொண்டாள்.

“ப்ளஷ் ஆயோ?” மூடிய விரல்களுக்கு முத்தமிட்டபடி அர்ஜித் அகன் வினவ,

“ம்ம்ம்ம்…” எப்போதும் போலல்லாமல் இப்போது தலையாட்டி ஒப்புக் கொண்டாள்.

அதில் மந்தகாசப் புன்னகை அவனிடம். அவள் முகத்தில் இருந்து கையை எடுத்து விட்டு, அவன் நெஞ்சில் மீண்டும் பதுக்கிக் கொள்ள இருவரிடமும் சிறு அமைதி.

சில நொடிகளில் அவனே ஆரம்பித்தான்.

“எந்தினா போயது?(ஏன் போன?)”

“நீ ஏன் என்னைக் கூப்பிட வரல?”

“ஞான் சோதிச்சதினு உத்தரம் (நான் கேட்டதுக்கு பதில்)…” அவன் அழுத்தமாகக் கேட்டதில், அவள் அமைதி காத்தாள்.

“நயனா, என்னைப் பற்றி பரஞ்சால் விஸ்வசிக்குமோ? கல்யாணத்தினு முன்னே ஓகே. பட்சே பின்னயும் ஒரு பிராவஸ்யம் கூடி, நினக்கு என்டெ மேலே விஸ்வாசம் வந்தில்லே மொழி?(நயனா, என்னைப் பத்தி சொன்னா. நம்பிடுவியா. கல்யாணத்துக்கு முன்னாடி ஓகே. ஆனா அப்பறமும் ஒரு தடவை கூட, உனக்கு என் மேல நம்பிக்கை வரலையா மொழி?)” அவனிடம் அதீத ஆதங்கம்.

அவளோ இரு விரல்களால் அவனது நெஞ்சில் பரவி இருந்த முடிகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

“நயனா, உன் சட்டையைக் கொடுத்து நீ அவள் கூட இருந்ததா சொன்னா…”

“பரஞ்சால்?”

“அதுல உன் பெர்பியூம் வாசம்…”

“சோ?” அவனிடம் அடக்கப்பட்ட கோபம்.

அவனை விழி நிமிர்த்திப் பார்த்தவள், “ஆனா எனக்கு உன் வாசம் தெரியாதா? உன் வேர்வை கலந்து வர்ற இந்தச் சந்தன வாசம் எனக்கு அத்துப்படி. அவள் என்னை நம்ப வைக்கணும்னு ஜஸ்ட் உன் பெர்பியூமை அந்தச் சட்டைல தேய்ச்சுட்டு வந்திருந்தா… அப்படியே இல்லைன்னாலும், எந்த அளவுக்கு உன் மேல வெறுப்பு இருந்துச்சோ, அந்த அளவு உன் மேல ஒரு நம்பிக்கையும் தானா துளிர் விட்டுச்சு. நீயே சொன்னாலும் எனக்குத் தெரியும்… உன்னால என்னைத் தவிர எவளையும் தொட முடியாதுன்னு…” என நிறுத்தி நிதானமாகத் தனது நம்பிக்கையின் ஆழத்தை அவனுக்குள் செலுத்தியத்தில் அவனிடம் சிறு திகைப்பு.

“அப்..அப்போ… அதுகொண்டு நீ தெற்றிப் (கோச்சுட்டு) போயில்லே மொழி?”

“ம்ம்ஹும். அப்படிக் கோச்சுட்டுப் போகணும்னா நான் அப்படியே என் வீட்டுக்குப் போயிருக்க மாட்டேனா மிஸ்டர் மலையாளி?” என்று அவன் கன்னத்திலிருக்கும் மச்சத்தை வருடினாள்.

“பின்னே எந்தினாடி போயது?(அப்பறம் ஏன்டி போன?)” அவன் தவிப்பாய் கேட்டான்.

மீண்டும் ஒரு அமைதி அவளிடம். தானாய் ஒரு கண்ணீர்த் துளியொன்று பிரிந்து அவன் நெஞ்சில் வழிந்தது.

“விஷ்ணு என்னை ட்ரிக்கர் பண்ணதுல, கோபத்துல உன்னைக் காசுக்காகக் கல்யாணம் செஞ்சுட்டேன்னு சொன்னேன். கிட்டத்தட்ட உன் வீட்லயும் எல்லாரும் அப்படித் தான் நினைச்சாங்க. உன்கிட்டயும் நான் உன்னை விட பிசினஸ் தான் முக்கியம், நீ குடுத்த நகை தான் முக்கியம்னு சொல்லிருக்கேன். நீயும் காசுக்காகத் தான் என் கூடக் குடும்பம் நடத்துறியான்னு கேட்டிருவியோன்னு… ஒருவேளை கேட்டா என்னால உன்னை ஃபேஸ் பண்ண முடியாது அகன்… ஐ ரியலி லவ் யூ…” என்றவளுக்குக் காரணமின்றித் தேம்பல் அதிகரித்தது.

“ஹே மொழி…” அவன் அவளது முகத்தை நிமிர்த்த முயல, அவளோ அவனது வெற்று மார்பில் புதைந்து கேவினாள்.

இத்தனை மாதங்கள் அடக்கப்பட்ட அழுத்தம் கண்ணீராய் வெளிப்பட,

“இவிடே நோக்கடி… என்னே நோக்கடி! என்டெ செல்லப் பொண்டாட்டியல்லே…

எனிக்கு நின்னை அறியாம் காந்தாரி. ஏது சமயத்தில் எங்கனே சம்சாரிக்குமெந்து எனிக்கு அறயில்லே? அதினானோடி போயது? பிராந்தி…(எனக்கு உன்னைப் புரியும் காந்தாரி. எந்த நேரத்துல எப்படி பேசுவன்னு எனக்கு தெரியாதா? அதுக்காகவாடி போன? பைத்தியம்…)” என்று அவள் நெற்றியில் முட்டினான்.

அதில் மெல்ல மெல்ல அவளது அழுகை மட்டுப்பட, “நான் போனதும் ஜாலியா இருந்தியா? என்னைப் பார்க்கக் கூட வரப்பிடிக்கல. பேங்க்ல பார்த்தப்ப கூட விருட்டுன்னு போயிட்ட. உன்னால, தூங்கும்போது கூட நீ பக்கத்துல வந்து நிக்கிற மாதிரி ஹாலுசினேஷன் ஆகிப் பைத்தியம் ஆகிருப்பேன்டா!” என அவன் முடியைப் பிடித்து ஆட்டினாள்.

“அதே! ஜாலியாய் இருந்து… என்டெ லைஃபில் இத்தர என்னை யாரும் வேதனிப்பிச்சது இல்லடி. இவிடே அங்கனே (அப்படி) ஒரு வேதன…” என்று நெஞ்சைக் குத்திக் காட்டினான்.

அது அவன் கண்களிலும் வெளிப்பட, அவள் முகம் வாடிப் போனது.

“நின்னைக் காணான் வரணம்னு ஞான் தவிச்சது எனிக்கு மாத்திரமே அறியும். பட்சே அறஞ்சோ, அறயாதயோ (தெரிஞ்சோ தெரியாமலோ) என்னாலே நீ நிறைய நஷ்டப்பட்டு (இழந்துட்ட).

பின்னயும் நீ என்டெ கூடே வரும்போல் நீ நஷ்டப்பட்டது எல்லாம் நின்டெகூடே இரிக்கணம்னு விசாரிச்சு. அதானு வெயிட் செய்தது… பின்னயும் நீ என்னை விஷ்ணு போலயே இரிந்திரிக்காமெந்து பரயான் பாடில்லால்லோ!(மறுபடியும் நீ என்கூட வரும்போது நீ இழந்தது உன்கூட இருக்கணும்னு நினைச்சேன். அதான் வெய்ட் பண்ணேன்… மறுபடியும் நீ என்னை விஷ்ணு மாதிரியே இருந்துருக்கலாம்னு சொல்லிடக்கூடாதுல)” என உணர்வற்ற குரலில் கூறியதில் அவள் தவித்துப் போனாள்.

“வேணும்னு சொல்லல அகன். ஏதோ கோபத்துல… நீ… நீ என்னை ஏமாத்திட்டியேன்ற ஆதங்கம் தாங்க முடியாம தான். நீ சொல்லிருக்கலாம்ல. விஷ்ணு தான் ரிசார்ட்டோட எம்டி’னு எனக்குத் தெரியாம தான் அப்படி வந்து பேசுனேன். சாரிடா…” என்றாள் கெஞ்சலாக.

“ப்ச்! இட்ஸ் ஓகே…” அவளது கண்ணீரைக் கட்டை விரலால் துடைத்து விட்டவனிடம்,

“மே பி… உன்னால நான் நிறைய இழந்திருக்கலாம். அதெல்லாம் இழந்தப்ப என்னால வாழ முடிஞ்சுது. ஆனா உன்னை இழந்துட்டேன்னு புரிஞ்சதும் வாழவே பிடிக்கலைடா மலையாளி… நான் கேட்ட எல்லாம் என் கைல கிடைச்சுது. ஆனா, என்னால எதையும் ரசிக்க முடியல. எதுக்காகவும் சந்தோஷப்பட முடியல. என்..என்னால உன்னை விட்டு ஒரு துளி கூட மூவ் ஆன் ஆக முடியல. ஸ்டக் ஆகிட்டேன். உன்கூட வாழ்ந்த அந்த பியூ டேஸ் மட்டும் தான், எனக்கு ஆக்சிஜனா இருந்துச்சு. இல்லன்னா மூச்சு அடைச்சுச் செத்திருவேனோன்னு பயமா இருந்துச்சுடா…” என்றவளின் பேச்சில் உடைந்து போனவன், அவள் இதழ்களை அவசரமாக நாடினான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 89

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
90
+1
4
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்