Loading

இருவரும் வேண்டுமட்டும் முத்தத்தில் தங்களது காயங்களை துடைத்துக் கொள்ள, நெற்றியோடு நெற்றி பதித்து அவளுக்கு மூச்சு வாங்க நேரம் கொடுத்தான். அவனுக்கும் பெருமூச்சுகள் வாங்கியது.

“ஹாலுசினேஷன் ஒந்தும் அல்லடி. அந்து சரிக்கும் ( அன்னைக்கு நிஜமாவே) ஞான் வந்திருந்து…” மூக்கோடு மூக்கை உரசினான்.

அதில் விழி விரித்தவன், “அடப்பாவி… நிஜமா வந்தியா? அப்ப கண்ணு முழிக்கும்போது எஸ்கேப் ஆகிட்டியா?” எனத் துள்ளலாகக் கேட்க,

“ம்ம், நின்னைப் போலே!” என்றான் கண்ணோரம் சுருங்கிய புன்னகையுடன்.

“ஹான்? நான்… நானா?” அவள் திருதிருவென விழித்து விட்டுப் பின் அவனது ஆழ்ந்த பார்வையில் தானும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

“விஷ்ணு விஷயத்துல நீ ரொம்ப டவுனா இருந்தியா… அதான், என்னால நிம்மதியா இருக்க முடியல… மிஸ்ட் யூ…”

“ஞானும்… ஈ காந்தாரியை வளரே மிஸ் செய்து…” அவள் நாடி பிடித்துக் கொஞ்சினான்.

“உம்ம்ம்ம்மா” அவன் கன்னம் பிடித்து அழுத்தமாக முத்தமிட்டவளுக்கும் தானும் பல முத்தங்களைப் பரிசாக வழங்கினான்.

பின் மனமின்றியே இருவரும் குளித்துக் கிளம்பி வந்தனர்.

மணி அப்போதே பத்தைத் தொட்டிருக்க அடுக்களையில் நின்றிருந்த அன்விதா, “அகா ஊருக்குப் போயிட்டாளா என்னன்னு தெரியல.” என அமுதினியிடம் கூறியபடி அவளுக்கு அழைத்தாள்.

அனைவருமே அவள் சென்று விட்டதாகத் தான் நம்பிக் கொண்டிருந்தனர்.

கண்ணாடி முன் நின்று தலை துவட்டிக் கொண்டிருந்த அகமொழிக்கு, கால்கள் சோர்வாக இருக்கும் உணர்வு.

அதில் மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டவளிடம், “எந்து பற்றியடி?(என்னாச்சுடி)” எனக் கேட்டான் அகன்.

“பீலிங் வீக்…” என உதட்டைக் குவித்துக் கூறியதில் மென்முறுவல் பூத்தவன், தானே துவாலையை வாங்கித் துடைத்து விட்டான்.

“எந்தெங்கிலும் கழிச்சால் (சாப்பிட்டா) தன்னே பிரிஸ்க் ஆகும்… வெய்ட், ஞான் ஃபுட் எடுத்திட்டு வராம்…” எனும்போதே அன்விதா அழைத்தாள்.

“இரு, இரு… அதான் இந்த வீட்டுக்கு ஒரு மருமகளைத் தத்துக் குடுத்துருக்கோமே, அவளை வேலை வாங்கலாம்.” என அவனை அமர வைத்ததில்,

அவளது குறும்பைக் கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருந்தான்.

“அகா, ஊருக்கு ரீச் ஆகிட்டியா?” அன்விதா கேட்டதில் திருதிருவென விழித்தாள்.

அர்ஜித் சிரிப்பை அடக்கிட, “நான் எப்ப ஊருக்குப் போறேன்னு சொன்னேன்?” என்று பின்வாங்கினாள் அகமொழி.

‘சிரிக்காதடா!’ என்ற ரீதியில் அவனை வேறு முறைத்திருந்தாள்.

“என்னது? நீ இங்க தான் இருக்கியா?” அன்விதா அதிர்ந்து கேட்க,

“நானும், என் புருஷனும் இன்னும் உன் வீட்ல தான் இருக்கோம். அதுவே தெரியாம வந்துட்டா கேள்வி கேட்க. சரி சரி, நீ என்ன பண்ற… சூடா ரெண்டு காபி போட்டு மாடிக்கு எடுத்துட்டு வா… வெரி டயர்ட்…” என்றதில், அன்விதாவிற்கு அவளது குறும்புப் பேச்சைக் கேட்டதுமே மகிழ்வாக இருந்தது.

இருப்பினும், “உன் பேச்சே சரி இல்லையே… ஹாட் பேக் எதுவும் தேவைப்படுதா?” எனக் கிண்டலாகக் கேட்டதில், அவள் வேக வேகமாக லவுட் ஸ்பீக்கரை அணைத்து விட்டாள்.

“எல்லாற்றையும் பரஞ்சு வச்சிரிக்குனு….” அர்ஜித் தான் தலையில் அடித்துக் கொண்டான்.

“ஹி ஹி” என அசடு வழிந்தவள், “ஹலோ… நாங்க இப்ப அப்கிரேட் ஆகிட்டோம்.” என்றதில் அர்ஜித் சத்தமாகவே சிரித்து விட, இங்கு அன்விதாவும் சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டாள்.

கூடவே ஒரு ட்ரேயில் இருவருக்குமான காலை உணவையும் எடுத்து வைத்தவள், பிளாஸ்கில் காபியையும் ஊற்றினாள் புரிதலோடு.

“ஆனாலும், புதுப்பொண்ணுகிட்ட வேலை வாங்குறதுலாம் ஓவர் அகா…” அன்விதா கேலியாய் கூற,

“இதோ பாருங்க மிஸஸ் அன்விதா பிரணீத், நீங்க எப்படியும் நேத்து நைட்டு என் ப்ரோவை டீல்ல தான விட்டிருப்பீங்க. பை தி வே, நானும் இன்னும் புதுப்பொண்ணு தான். புதுப்பொண்ணுக்கு, புதுப்பொண்ணு வேலை பார்க்கலாம். தப்பில்லை… நீ எப்படி இங்க மருமகளா பொறுப்பா நடந்துக்குறன்னு டெஸ்ட் பண்றேன்.” என்றதில்,

“அடிப்பாவி…” அன்விதா வாயில் கை வைக்க, இங்கு “நின்னே கொண்டு மானமே போகுந்தடி காந்தாரி!” என்று போலியாய் முறைத்தான் அர்ஜித்.

“நீ மட்டும் என் அப்பாட்ட என் மானத்தை வாங்குனீல்ல…” என நாக்கைத் துருத்த, அந்நேரம் அறைக்கதவு தட்டப்பட்டது.

அன்விதா தான் கையில் உணவுத் தட்டுடன் நின்றாள்.

“நீ ஒரு குட் டாட்டர் இன் லா’னு ப்ரூவ் பண்ணட்ட அன்வி…” என்று காலை உணவை ஆசையுடன் வாங்கிக் கொண்டதில்,

அர்ஜித்திற்கு ஐயோ என்றிருந்தது.

“நாங்களே வந்திருப்போம்ல அன்வி…”

“பரவாயில்ல. இவள் கீழ வந்து என் தலையைத் தான் உருட்டுவா… அதுக்கு இதுவே பரவாயில்ல அர்ஜி…” எனச் சிரித்ததில், “நின்னைக் கண்டு எல்லாரும் ஓடுன அளவு வச்சிரிக்குந்தடி” என வாரினான் அர்ஜித்.

அவளோ அதை எல்லாம் கண்டுகொள்ளாது, இட்லியில் மூழ்கி விட்டாள்.

“என்னைக் கலாய்க்காம வந்து சாப்பிட்டா உனக்கு இட்லியாச்சும் மிஞ்சும்.” என மிரட்டி அவனை வரவழைக்க, அன்விதா தலையாட்டிச் சிரித்தாள்.

“அர்ஜி, அம்மா அச்சா எல்லாரும் காலைலயே கிளம்பிட்டாங்க. ப்ரணீ ஏர்போர்ட்டுக்கு தான் விடப் போயிருக்கான்.” என்றதும், “ம்ம் இந்தலே (நேத்தே) பரஞ்சு அன்வி… அமையா எவிடே?” என்றதில், “அவளும் கூடப் போயிருக்கா. சரி சாப்பிட்டு வாங்க… நான் ரிஷுவும் ரூஹியும் எங்கன்னு பார்க்குறேன்.” என்று கீழிறங்கினாள்.

இருவரும் உண்டு முடித்து பால்கனியில் நின்று கடல் நீலத்தை ரசித்தபடி காபியை அருந்தினர்.

பால்கனி கம்பியைப் பிடித்தபடி அவள் முன்னே நிற்க, அவளுக்குப் பின்னில் தோளில் நாடியைப் பதித்து அகன் காபி அருந்திக் கொண்டிருந்தான்.

ஏதோ நினைவு வந்தவளாக, “மிஸ்டர் மலையாளி…” எனக் கழுத்தைத் திருப்பி, “நீ என்ன தான் வேலை பார்க்குற?” எனக் கேட்டதில், “வளரே வேகத்தில் சோதிச்சடி…(ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட)” என்றான் தலையை முட்டி.

“ஈஈ… ப்ரோட்ட கேட்டுடலாமான்னு நிறைய நாள் நினைச்சிருக்கேன். ஆனா கட்டுன புருஷன் என்ன வேலை பார்க்குறான்னு தெரியாதான்னு என் பிரண்ட்ஸே என் மூஞ்சில துப்புவாங்க. அதான் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்.”

அவளது கூற்றில் சிரித்தவன், “ஆர்கிடெக்!” என்றான்.

“என்னது நீயுமா?” அகமொழி அவன் புறம் திரும்பி இருந்தாள்.

“ம்ம்! அப்போ நீயும், ப்ரோவும் ஆர்கிடெக்கா?”

சாசர் போல விரிந்த விழிகளதில் ஆடவனின் மனமும் சறுக்கிச் சென்றது.

“ம்ம்!” காபியுடன் இணைந்து அவளையும் பார்வையால் பருகினான்.

“அதான், இந்த வீட்டை நல்ல ஆர்கிடெக் கட்டுனதா, தற்பெருமை அடிச்சாரா? அப்பவே நான் கெஸ் பண்ணிருக்கணும்… ராஸ்கல்ஸ்!” என்று உதட்டைக் குவித்து முறைத்தாள்.

அதில் தங்கி இருந்த காபித் துளிகளை ருசி பார்த்தவனை, வெட்கம் நிரம்பத் தள்ளி விட்டாள்.

“முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கும்போது, என்ன சேட்டை பண்ற அகன் நீ?” அகமொழி சிணுங்கியதில், அவன் உணர்வுகளும் இணைந்தே சிணுங்கியது.

“இதுவும் முக்கியமல்லே?” கண் சிமிட்டியவனின் குறும்பில் நாணத்தைக் கரைப்பது தான் பெரும்பாடு அவளுக்கு.

“நீ ஆர்கிடெக்னா, எதுக்காக ரிசார்ட்லயே இருந்த?” இடுப்பில் கையூன்றி முறைத்தாள்.

“ஆ ரிசார்ட் கட்டியதே ஞங்களானு (நாங்க தான்) காந்தாரி. ஞங்கள்டே பர்ஸ்ட் ப்ராஜக்ட். அப்பழே ஞான் விஷ்ணுவோடு எனிக்கும் அவிடே ஒரு ஆபிஸ் செட்டப் செய்யுமெந்து பரஞ்சிருந்து. (அப்பவே எனக்கும் அங்க ஒரு ஆபிஸ் செட்டப் வேணும்னு விஷ்ணுட்ட சொல்லிருந்தேன்)

சோ என்டே கிளையண்ட்ஸ்கு என்டே ஒர்க்கை காட்ட ஈஸியாய் இரிக்கும்.

கேரளாவில் இருந்து ஏது கிளையண்ட் வந்தாலும் ஞான் அவிடே வச்சானு அப்ரோச் செய்வேன்.

மற்றபடி, ரிசார்ட் உள்ளே எந்தா நடக்கனதெந்து (என்ன நடக்குதுன்னு) எனிக்கு டீப்பா அறயில்லா.

ஏன்னா, ஞானும் ப்ரணீயும் அடிமாலியில் மாத்திரமே இரிக்கில்லா (இருக்க மாட்டோம்)… அவன் சென்னை, கோயம்பத்தூர்னு மற்ற ஸ்தலத்து நோக்கியால், ஞான் ஹில் ஸ்டேஷனை கான்சன்ட்ரேட் செய்யும்.

கொஞ்ச நாள் ஞான் ஊட்டியிலானு இருந்தது. இப்ப இடுக்கி பக்கம் ஒரு கவர்மெண்ட் ப்ராஜக்ட் போயிட்டு இரிக்கினு. அதுகொண்டானு ஞங்கள் அடிமாலிக்கே வந்தது. ஞான் வந்த நேரத்திலானு நின்னையும் கண்டது.(நான் வந்த நேரத்துல தான் உன்னையும் பார்த்தேன்)” என்றான் கையைக் கட்டிக் கொண்டு.

பாவம், கொரியன் படம் பார்ப்பது போலக் கொழகொழப்பாக இருந்தது அகமொழிக்கு.

“இதை அன்னைக்கே சொல்லறதுக்கு என்ன?” கண்ணைச் சுருக்கி முறைத்தாள்.

“எந்தா நடந்ததெந்தே எனிக்கு அறயில்லாடி. கார் கிராஷ்ல ஆல்ரெடி நின்டமேலே நெகட்டிவ் தாட். இதிலு ரிசார்ட்ல வந்து இண்டீசன்டாய் நீ கத்தியப்போ… அதானு ஞானும் அங்கனே ரூடாய் பிஹேவ் செய்யேண்டி வந்து…(என்ன நடந்துச்சுன்னே எனக்குத் தெரியாதுடி. கார் க்ராஷ்ல ஆல்ரெடி உன்மேல நெகட்டிவ் தாட். இதுல ரிசார்ட்ல வந்து இண்டீசன்ட்டா கத்துன… அதான் நானும் அப்படி ரூடா பிஹேவ் பண்ண வேண்டியதா போய்டுச்சு)” எனத் தோளைக் குலுக்கினான்.

“மூஞ்சப் பாரு…” என நொடித்துக் கொண்டவள், இப்போதே ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் சரியான கோணத்தில் எண்ணிப் பார்த்துச் சிரித்தாள்.

அதே சிரிப்புடன் அவனைப் பார்க்க, அவனும் கீழ்க்கண்ணால் அவளையே ஊடுருவியதில், அவன் வயிற்றில் முழங்கை வைத்துக் குத்தினாள்.

“அப்போ நீ ஊட்டிக்குப் போயிருக்கியா? நானும் ஒரே ஒரு தடவை அங்க போயிருக்கேன். ரூஹி அப்பா அங்க தான் இருக்காரு…” என்று விளக்கம் கூறிட, “ஓ ரியலி?” எனக் கேட்டுக் கொண்டு மீதி காபியையும் குடித்து முடித்தான்.

அவளோ அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்து, “என்ன ரியலி?” என வினவ, அவனும் புரியாது பார்த்தான்.

“நீ பரஞ்சதினு அதேயோந்து சோதிச்சு…(நீ சொன்னதுக்கு தான் ரியலியான்னு கேட்டேன்)”

“நீ என்ன மாதிரி விஷயத்துக்கு எப்படி ரியாக்ஷன் குடுப்பன்னு எனக்குத் தெரியும் மிஸ்டர் மலையாளி…” என அவன் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்தாள்.

“என்ன அறியுமாம்… ம்ம்?” எனக் கழுத்தில் ஒரு முத்தம் வைக்க, சிணுங்கி விலகியவள், “கூச்சமா இருக்கு அகன், அமைதியா இரு!” என்றாள் கொஞ்சலாக.

“அமைதியாய் இருக்குற சமயமானோடி (நேரமாடி) இது?” இரு புருவமும் உயர்த்தியதில், வெட்க ரேகைகள் தாண்டவமாடியது.

“செரி பரா(சொல்லு). ஞான் எங்கனே ரியாக்ட் செய்யும்?”

“உனக்குத் தெரியாத விஷயத்தைச் சொன்னா, ஓ… ம்ம், சில நேரம் எதுவுமே சொல்லாம கேட்டுப்ப. இதே தெரிஞ்ச விஷயத்தைச் சொன்னா இப்படித் தான் நக்கலா கேட்ப…”

‘தன்னை அணு அணுவாக அறிந்து வைத்திருக்கிறாள் காந்தாரி!’ அவன் முகத்தில் அழகிய புன்னகை.

“நின்னைப் பற்றி விசாரிக்கும்போ நிண்டே பிரெண்ட்ஸ் பற்றியும் விசாரிச்சு வைக்கில்லே… அதானு!” என அவளைக் குறுகுறுவெனப் பார்த்தபடி கூற,

“ஓ…” என்றவளுக்கு எதுவோ உறுத்தியது போலும். அமைதியாக மீண்டும் கடலை வேடிக்கை பார்க்கத் தொடங்க, பக்கவாட்டில் திரும்பி அவளையே சில நொடிகள் ரசித்தவன், “மொழி…” என அழைத்தான் மென்மையாக.

“ம்ம்?”

அவள் நிமிர்ந்து பார்த்ததும், “ஞான் நின்னை முன்னமே ஊட்டியில் கண்டிட்டுண்டு(நான் உன்னை ஏற்கனவே பார்த்துருக்கேன் ஊட்டில)!” என்றான் ரசனையாக.

“என்னது? ஊட்டிலயா? நான் அங்க போயி பல மாசம் ஆகுதே. அதுவும் இல்லாம நாங்க ஒன் டே’ ட்ரிப் தான் போனோம். அப்போ எங்க?” என அடுக்கடுக்காய் கேள்வி கேட்டவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

அவளது தவிப்பை ரசித்த அகன், “ரெஸ்டாரண்டில்… ரிஷான் நினக்கு ப்ரொபோஸ் செய்த அப்போ ஞானும் நிங்களுக்கு அடுத்த டேபிள்ல தன்னே இருந்தது…” என்றதில் அவள் குழப்பமாகப் பார்த்தாள்.

ரிஷான் ஊட்டியில் வைத்து தான் அவளுக்கு ப்ரொபோஸ் செய்தது. ஆனால், இவன் எப்படி?

அவளது குழப்ப முகத்தைக் கண்டதும், “முதல்ல ஞான் வலிதாயிட்டு நிங்களை ஸ்ரத்திச்சில்லா. ரிஷான் நினக்கு ப்ரொபோஸ் செய்யும்போல் எனிக்கும் நந்தாயி கேட்டு. பட்சே நின்டே முகம் கண்டில்லா. அவன் நின்னை குறச்சு சுமாராய பிகர்னு பரஞ்சிட்டு நின்னைப் பற்றி எல்லாமே பரஞ்சு அல்லே… அப்போ ஒரு சின்ன கியூரியாசிட்டி. அப்போ நீ எழும் போலானு ஞான் நின்னைக் கண்டது.(முதல்ல நான் பெருசா உங்களை கவனிக்கல. ரிஷான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணும்போது எனக்கும் நல்லாவே கேட்டுச்சு. ஆனா உன் முகம் தெரியல. அவன் உன்னை கொஞ்சம் சுமாரான பிகர்னு சொல்லிட்டு உன்னைப் பத்தி எல்லாமே சொன்னான் அல்லே… அப்போ ஒரு சின்ன கியூரியாசிட்டி. அப்போ நீ எழும்போது நான் உன்னைப் பார்த்தது)” என்றான் பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து.

“ம்ம்ம் அப்புறம்?” அவள் ஆர்வமாகக் கேட்க,

“அப்புறம் எந்தா? அவ்ளோ தன்னே!” என்றான் அசட்டையாக.

“லவ் அட் பர்ஸ்ட் சைட்டோ?” அகமொழி அவனை இடித்துக் கேட்க,

“நினக்கு ஓவர் கான்பிடன்ஸ் ஜாஸ்தியா காந்தாரி…” என்றான் கேலியாக.

அவளோ முறைத்து வைக்க, “ஹே… சீரியஸ்லி… ஹார்ட் பீலிங்ஸ் எல்லாம் இல்லா… அப்போ நின்னை கண்டு. நின்டெ முகம் மனசில் பதிஞ்சு போயி…” என்னும்போதே, “ஏன் என்கிட்ட பேசல?” என்று சண்டை பிடித்தாள்.

“அரை மெண்டல்… நீ அவன்கூட கமிட் ஆகிட்டல்ல.”

“அப்போ கமிட் ஆகலைனா என்கிட்ட வந்து பேசிருப்பியா?” அவளது கூர் கேள்வியில் அவனிடம் சிறு திகைப்பு.

“ம்ம்ம்ம்… அறயில்லா. மே பி.

பட், நின்னைப் பற்றி, நீ இங்கனே ஆனெந்து எனிக்குள்ளே ஒரு பிம்பம் உருவாக்கி வச்சிருந்து. (பட், உன்னைப் பத்தி, நீ இப்படி தான்னு எனக்குள்ள ஒரு பிம்பம் உருவாக்கி வச்சுருந்தேன்.)

அம்மா, மேரேஜ்க்கு பெண்ணு நோக்கும்போது, ரிஷான் நின்னைப் பற்றிப் பரஞ்சதானு ஞாபகம் வந்தது. மாடர்னாய் இருந்தாலும், வீடு பேமிலின்னு வந்தால், நீ ஹோம்லி… ஃபேக் பெமினிசம் பிடிக்கில்லாந்து… லைக்… அதெல்லாம் பரஞ்சு தன்னே அம்மடடுத்து ஞான் பெண்ணு நோக்கானே பரஞ்சது. (அதெல்லாம் சொல்லி தான் அம்மாட்ட நான் பொண்ணு பார்க்கவே சொன்னேன்.)

அப்பவும், நின்னைத் தேடிப் பிடிச்சு நினக்கு பிரேக் அப் செய்து வச்சு மேரேஜ் செய்யன ஐடியா சத்யமாயிட்டும் எனிக்கு இல்லா.

பட்சே, ஆ கார் கிராஷ். ஞான் நின்னைப் பற்றி விசாரிச்சு (உன்னைப் பற்றி நினைச்சு) வச்சிருந்த ஆ ஒரு குட் பீலை மொத்தமாயிட்டு நசுப்பிச்சு (சிதைச்சுடுச்சு). சீரியஸ்லி அந்து எனிக்கு தேஷ்யத்தை (அன்னைக்கு எனக்கு கோபத்தை)கண்ட்ரோல் செய்யானே பற்றியில்லா. அது கொண்டானு நின்னைத் தூக்கி மலை மேலே இருந்து இடான் போயதும்…” என்றான் அசட்டுச் சிரிப்புடன்.

அவளோ எதுவும் பேசாது அவனை ரசித்திருந்தாள். உள்ளுக்குள் குளுகுளு மொமெண்ட் வேறு.

“அப்புறம் அந்த செகண்ட் மீட்டிங்… உன் ரிசார்ட்க்கு, சாரி சாரி… விஷ்ணு ரிஸார்ட்க்கு வந்து கத்துனதுல, எனக்கு பிசினஸ் நாகரிகமே இல்லைன்னு முடிவு பண்ணியாச்சு.” என உதட்டைச் சுளித்தாள்.

“எஸ். ஆக்சுவலி… நின்ட மேலே செம தேஷ்யம்(கோபம்), ஆ ரிவியூனால.

விஷ்ணு என்னை எதிர்த்து எப்பளும் பேசியதே இல்லா. ஆ வீடியோவை வச்சு என்னே வளரே கேவலப்படுத்தி… வீட்டில் பரஞ்சிருந்தா கூடி வேண்டில்லா.(பரவாயில்ல) பரயும், பரயுமெந்து வேறே மிரட்டி… அது எனிக்கு நின்டமேலே தன்னே தேஷ்யமாய் திரிஞ்சு.(அது எனக்கு உன் மேல தான் கோபமாய் மாறிடுச்சு)

மத்த இன்ப்ளூயன்சர் எல்லாம் ஏது பெண்ணிண்டே கூடே ஞான் இரிக்குந்து எந்து நோக்கான் என்டே ரிசார்ட்லயே ரோந்து போயி. சத்தியமாயிட்டும்… நின்னை ஒன்’டே என்டெ கூடே இரிக்கான் வச்சு, ஆ பிரஸ்னத்தை நிண்டெ மேலே திரிக்கான் மாத்திரமானு, நிண்டே கிளாம்பிங்கினு வந்து ஜேசிபியாலே இடிக்கான் வந்தது..(மத்த இன்ப்ளூயன்சர் எல்லாம் எந்த பொண்ணு கூட நான் இருக்கேன்னு பார்க்க என் ரிசார்ட்லேயே ரோந்து போனாங்க. சத்தியமா… உன்னை ஒன்’டே என் கூட இருக்க வச்சு, அந்த பிரச்சினையை உன் மேல திருப்புறதுக்காக மட்டும் தான், உன் கிளாம்பிங்கு வந்து ஜேசிபியால இடிக்க வந்தேன்.)

பட்சே, நீ ‘இடிக்கிவானெங்கில் இடிச்சோ, நின்டகூடே எல்லாம் வரான் பற்றில்லா’ன்னு திமிராய் நின்னில்லே. ஆ திமிரில் ஆனடி ஞான் பிளாட் ஆயது…(ஆனா நீ ‘இடிக்கிறதுன்னா இடிச்சுக்கோ. உன்கூட எல்லாம் வர முடியாது’ன்னு திமிரா நின்னல்ல. அந்தத் திமிருல தான்டி நான் பிளாட் ஆகிட்டேன்” என சுளித்த உதட்டை அழுத்திப் பிடித்து முத்தம் வைத்தான்.)” என சுளித்த உதட்டை அழுத்திப் பிடித்து முத்தம் வைத்தான்.

இதழீரத்தை நாணத்துடன் துடைத்துக் கொண்டவளிடம்,

“நினக்குப் பாடமும் பரஞ்சு கொடுக்கணம். அதே சமயம், நின்னை வெளிப்படையாய் புறத்து தெற்றாய் பரயானும் பிடிச்சில்லா… பட் என்டெ ஈகோ வேறே என்னை வெறுதே விட்டில்லா. அதிலானு நிண்டெ நிச்சயத்தை நிறுத்தியது. ஆக்சுவலி, ஞான் நிறுத்தணம்னு விசாரிச்சு வந்தில்லா. ஜஸ்ட் ஒரு ட்ரை செய்யாமெந்து வந்து… நின்னு போயி… பின்னே ஒரு செறிய விஸ்வாசம் வேறே…(உனக்குப் பாடமும் சொல்லிக் குடுக்கணும். அதே நேரம் உன்னை வெளிப்படையா வெளில தப்பா பேசவும் பிடிக்கல… பட் என் ஈகோ வேற என்னை சும்மா விடல. அதுல தான் உன் நிச்சயத்தை நிறுத்தினேன். ஆக்சுவலி நான் நிறுத்தணும்னு நினைச்சு வரல. ஜஸ்ட் ஒரு ட்ரை பண்ணலாம்னு வந்தேன். நின்னுடுச்சு… அப்பறம் ஒரு சின்ன நம்பிக்கை வேற…)” எனக் கண் சிமிட்டினான்.

“என்னவாம்…” அவன் அருகில் வந்து அவனது சட்டை பட்டனைத் திருகியபடி வினவ, “ஞான் நினக்கு ஒன்னு செய்தால் நீ அமைதியா இரிக்கில்லாந்து மாத்திரம் எனிக்கு மனசிலாயி. சோ ஞானும் மண்டபத்திலு போயி வெயிட் செய்து… நிண்டெ என்ட்ரிக்கு வேண்டி!(நான் உனக்கு ஒன்னு செஞ்சா நீ அமைதியா இருக்க மாட்டன்னு மட்டும் எனக்குப் புரிஞ்சுது. சோ நானும் மண்டபத்துக்குப் போய் வெயிட் பண்ணேன். உன் என்ட்ரிக்காக)” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“அடப்படுபாவி! அப்போ உன் நிச்சயத்தை நிறுத்துவேன்னு தெரியுமா?”

“கெஸ் செய்து. பட்சே நீ அங்கனே ஒரு நுண பரஞ்சு நிறுத்துமெந்து பிரதீக்ஷிச்சில்லா. அதிலயும் என்டே ஈகோ க்ளாஷ் ஆகி. அது கொண்டு ஞான் தன்னே மேரேஜ் செய்யான் சோதிச்சு…(கெஸ் பண்ணேன். ஆனா நீ அப்படி ஒரு பொய்ய சொல்லி நிறுத்துவன்னு எதிர்பார்க்கல. அதுலயும் என் ஈகோ க்ளாஷ் ஆகிடுச்சு. அதுனால தான் மேரேஜ் பண்ணிக்க கேட்டேன்…)” என இதழ் மடித்துப் புன்னகைக்க,

“சரியான கேடிடா நீ. அவ்வா… எவ்ளோ வேலை பார்த்திருக்க.” என வாயில் கை வைத்தாள்.

“இதுக்குப் பேசாம நீ ‘லவ் அட் பர்ஸ்ட் சைட்’னு ஒத்துக்கலாம்…” என நாக்கைத் துருத்தியதில்,

“வாய்ப்பில்லாடி…” என மூக்கைச் சுருக்கி அவளைக் கடுப்பேற்றிட, “நோ… நோ… நீ அப்பவே லவ் பண்ணிருக்க…” என அவள் வம்பு பிடித்தாள்.

“நோ வே!” காதை மூடிக்கொண்டு அவன் அறைக்குள் செல்ல,

“ஒத்துக்கோடா மலையாளி!” என வீம்பு செய்ததில், “எனிக்கு நுண (பொய்) பரஞ்சு பழக்கம் இல்லடி காந்தாரி!” என்றான் அடக்கமாக.

“டேய்… ப்ளீஸ்! என் செல்ல புருஷன்ல அக்செப்ட் பண்ணிக்கோடா…”

“ம்ம்ஹும், நோ! நோ!” எனும் போதே அவன் மீது கட்டிலில் விழுந்தவள், அவனுக்குப் பல முத்தம் வைத்துத் தாஜா செய்ய, “லவ் அட் பர்ஸ்ட் சைட் ஒக்கே தானாய் வந்ததாயிட்டு ஞானாய் பரயனம்டி. நீயே கம்பெல் செய்யான் பாடில்லா!(லவ் அட் பர்ஸ்ட் சைட் எல்லாம் தானா வந்துச்சுன்னு நானா சொல்லணும்டி. நீயே கம்பெல் பண்ண கூடாது)” என்றான் முட்டிய சிரிப்பை அடக்கியபடி.

“ஈகோ புடிச்சவனே. நீ இருந்தாலும் சொல்ல மாட்ட. சொல்லுடா, சொல்லுடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!”

“பரயட்டே?(சொல்லட்டா)” அவன் ஒரு மாதிரியாகக் கேட்க, அவன் மீது படுத்தபடியே “ம்ம்ம்ம்” என வேகமாகத் தலையாட்டினாள்.

“பரஞ்சால் போகுந்து…(சொல்லிட்டா போச்சு)” என அவனது மொத்தக் காதலையும் அவள் மீது பரவியே ஒன்றொன்றாய் காட்டத் தொடங்கினான் மிஸ்டர் மலையாளி.

அகன் வசமாவாள் (வான்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 84

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
80
+1
4
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்