
அத்தியாயம் 29
முந்தைய இரவு சுஜாதா கூறிய பிறகே, விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்தான் விஷ்ணு.
அன்விதாவிற்கு அருகிலேயே பிரணீத் அமர்ந்திருந்ததைக் கண்டு எரிச்சல் வர, “எந்து பற்றி (என்னாச்சு) அமையாக்கு? என வினவ, அன்விதா நிமிர்ந்தே பார்க்கவில்லை.
பிரணீத் தான் அவனைக் கண்டதும் எழுந்து கொண்டு, “திடீர்னு பீவராம் அண்ணா…” என்றிட, அமையா அப்போது தான் கண் விழித்தவள் அன்விதாவைக் கண்டதும் அழத் தொடங்கினாள்.
விஷ்ணுவைக் கண்டு கொஞ்சம் பயந்தவள், அன்விதாவிடம் ஒட்டிக் கொண்டாள்.
பிரணீத் அமையாவை விசித்திரமாகப் பார்த்து, “குட்டிச் சிட்டுக்கு இப்ப சரி ஆகிடுச்சா?” என வினவ, “சித்தப்பா” என உதட்டைப் பிதுக்கி அவனிடம் தாவினாள்.
அதில் அவனே மீண்டும் அமர வேண்டியதாகப் போயிற்று.
“கையில ட்ரிப்ஸ் போட்டிருக்காங்கடா. அது முடிஞ்சதும் சித்தப்பா உன்னைத் தூக்கிட்டுப் போய் டாய்ஸ் வாங்கித் தரேன், ஓகேவா?” பிரணீத் சமாதானம் செய்ய, “பசில் வேணும்.” என்றாள் அழுகையுடன்.
“பசில் தான, வாங்கிடலாமே என் குட்டிச் சிட்டுக்கு. இப்பவே போய் வாங்கிட்டு வரட்டா? இருங்க வந்துடுறேன்.” என வெளியில் சென்றான்.
விஷ்ணு தான் அவன் சென்ற நொடியிலேயே, “கட்டின புருஷன் ஞான் உள்ளப்போ, என் மோளுக்கு (பொண்ணுக்கு) முடியலைன்னா அவனை எந்தினு (எதுக்கு)வரான் பரஞ்சது?” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
“நான் சொல்லல. வேற யாராச்சும் சொல்லிருப்பாங்க.”
“ஓ! அவனுக்கு நீ பரயாத்ததுனாலே எனிக்கும் வேற யாரெங்கிலும் தன்னே பரயணமோ? எனிக்கு போன் செய்து பரயான் வேதனிக்குந்தோ(ஓ அவனுக்கு நீ சொல்லாததுனால எனக்கும் வேற யாராச்சு தான் சொல்லணுமோ? எனக்கு போன் செஞ்சு சொல்ல வலிக்குது )”
அவள் பதிலேதும் பேசவில்லை. அமையா வேறு அனத்திக் கொண்டிருந்ததில், அவளைத் தான் சமாதானம் செய்தாள்.
அவளது நடவடிக்கை அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்த, “அமையா இவிடே வா…” என மகளை அழைக்க அவளோ அன்விதாவிடம் ஒன்றி விட்டாள்.
அவள் கண்களில் தந்தையைக் கண்டு மிரட்சி தெறித்தது.
விஷ்ணுவிற்கு அதுவும் கோபத்தைக் கிளற, “என் மோளையே எனிக்கு எதிராய் மாற்றுந்தோடி(எதிரா மாத்துறியா?)” எனக் கொந்தளித்தான்.
“உங்களுக்கு எதிரா மாத்த என்ன இருக்கு விஷ்ணு? நீங்க நல்ல புருஷனாவும் இல்ல, நல்ல அப்பாவாவும் இருந்தது இல்ல.”
“வேறு எவன் அங்கனே இரிக்கன?(வேற எவன் அப்படி இருக்கான்?)” வார்த்தைகளால் வதம் செய்தவனை நிமிர்ந்து பார்த்தாளில்லை.
“நோக்கிக் கொள்ளாம் நின்னே…(பார்த்துக்குறேன் உன்னை)” எனக் கனலைக் கக்கி விட்டு அவன் வெளியில் வர, அந்நேரம் அர்ஜித்தும் அகமொழியும் அங்கு வந்தனர்.
தம்பியைக் கண்டதும் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டவனை கூர்ந்து நோக்கியவன், “ஏடத்தியை எந்தினா (எதுக்கு) அடிச்சது?” என நேரடியாகக் கேட்டதில் விஷ்ணு மெல்லத் திகைத்தான்.
“அவள் பரஞ்சோ?(சொன்னாளா?)”
“அனு பரஞ்சு…”
“எனிக்கும் என்டே பார்யைக்கும் (பொண்டாட்டிக்கும்) நடுவில் ஆயிரம் இரிக்கும். நீ தலையிடாதே” விஷ்ணு எகத்தாளமாகப் பேசியதில், அகமொழிக்கு உள்ளே செல்லும்படி கண்ணைக் காட்டினான் அர்ஜித்.
அதில் அவளும் விஷ்ணுவை முறைத்தபடி உள்ளே செல்ல, “ஓ… அவிடே இருந்து கீ வருதோ” என்றான் ஏளனத்துடன்.
“வந்தால் எந்து தெற்று? (தப்பு?) ஷீ இஸ் மை வைஃப்” அர்ஜித் அகன் அழுத்தமாகக் கூறிட,
“அவள் நினக்கு மாத்திரம் தன்னே வைஃபா இருந்தோ? கல்யாணத்தினு முன்னாடியே ஒருத்தன்டெ கூடே ஊர் சுற்றியவள் அல்லே… கல்யாணத்தினு முன்னாடியே அவள்டே பிசினஸ்னு வேண்டி நின்டெ கூடே கிடந்தவள் (படுத்தவ) அல்லே?” எனும்போதே ஏதோ கேட்கும் பொருட்டு அகமொழி வெளியில் வர, விஷ்ணுவின் கூற்றில் முகம் இறுகினாள்.
அர்ஜித் கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்து விட்டு, அகமொழியைக் கண்டதும் அவளைக் காணாமல் விழிகளைத் திருப்பிக் கொண்டான்.
அகமொழியோ, “உங்களோட மெண்டாலிட்டியே இது தானா விஷ்ணு. யாரும் உங்களைத் தப்பு சொல்லிடக் கூடாதுன்னு, முதல்ல பழியை அடுத்தவங்க மேல போடுறது உங்க ஸ்பெஷலோ? கட்டுன பொண்டாட்டியை ஒழுங்கா வச்சுப் பார்த்துக்கத் துப்பில்லை. இதுல என்னைப் பத்திப் பேச வந்துட்டாரு. இதுக்குலாம் நீங்க அனுபவிப்பீங்க விஷ்ணு…” எனக் கடிந்து விட்டு மீண்டும் உள்ளே சென்றவளுக்கு கோபத்தில் மூச்சு இரைத்தது.
அர்ஜித் அகன் மீது சின்னதாய் ஒரு வருத்தமும். பின் முயன்று அதிலிருந்து கவனத்தைத் திருப்பியவள், “என்னாச்சு அன்வி? விஷ்ணு ஏன் உன்னை அடிச்சான்?” என வினவ,
அவளோ விழி கலங்கப் பார்த்தாள்.
“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை அகா… அமையா மட்டும் இல்லைன்னா செத்தே போயிடலாமோன்னு தோணுது.” என்றவளின் கூற்றில் அதிர்ந்து விட்டாள்.
அர்ஜித் சொன்ன வார்த்தைகள் நினைவு வர, அவன் அன்விதாவைச் சரியாகக் கணித்ததில் சிறு பெருமிதமும்.
‘முந்தைய இரவு கூட அவள் இத்தனை விரக்தியாகவில்லையே’ என்ற யோசனையுடன், “லூசு மாதிரிப் பேசாத அன்வி. என்னாச்சு?” என வினவிட, அவள் பதில் பேசவில்லை.
“எனக்கு எதுவும் சொல்ல முடியல அகா… ப்ளீஸ்!” அவளது கண்ணில் தெரிந்த சோர்வில் “சரி நீ முதல்ல ரிலாக்ஸ் ஆகு. எல்லாம் சரி ஆகிடும் சரியா…” என்று தேற்றினாள்.
விஷ்ணு தம்பியை முறைத்து, “ரிசார்ட்ல கண்ட பொண்ணுங்க கூட இருக்குற நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வராத…” என்று விட்டுச் செல்ல, அர்ஜித் அகனுக்குப் பெருங்கோபம் பொங்கியது.
அகமொழியை அவன் இத்தனைத் தரக்குறைவாகப் பேசுவதில் அவன் பங்கும் இருக்கிறது தான்.
அவன் தன்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதற்குக் காரணம் அவள் தான்.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன், இதனைச் சரி செய்ய வேண்டுமெனக் குறித்துக் கொண்டான்.
மறுநாள் காலை பெரியவர்களிடம், தனியே அழைத்து விஷ்ணு பொரிந்து தள்ளி விட்டான்.
“புதுசாய் வீட்டுக்கு வந்தவள், நந்தாய் நல்லவள் வேஷம் போட்டுட்டு என்டே வாழ்க்கையில் உலை வைக்குனு. தேவையில்லாதே அன்விகிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லிச் சண்டை இழுத்து விடுந்து… இதெல்லாம் யாரும் சோதிக்கில்லே?(புதுசா வீட்டுக்கு வந்தவ, நல்லா நல்லவை வேஷம் போட்டுட்டு என் வாழ்க்கைல உலை வைக்கிறா. தேவையில்லாம அன்விகிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லி சண்டை இழுத்து விடுறா. இதெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களா?)”
கேசவ நாயரோ “எந்து பற்றி மோனே?( என்ன சொல்ற)” எனப் புரியாது கேட்க,
“எனிக்கும், என்டே பார்யைக்கும் நடக்கன பெர்சனல்லு அவள் எந்தினு தலையிடுந்து முத்தச்சா? எனிக்கும் அவளுக்கும் சண்டை இழுத்து விடுந்து… அவளால் ஞங்களுக்குள்ளே இன்னொரு பிராவஸ்யம் சண்டை வந்தால், ஞான் என்டே பார்யா, மோளைக் கூட்டிட்டுத் தனியே போகும்.(எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடக்குற பெர்சனல்ல அவள் ஏன் தலையிடுறா முத்தச்சா? எனக்கும் அவளுக்கு சண்டை இழுத்து விடுறா. அவளால எங்களுக்குள்ள இன்னொரு தடவை சண்டை வந்தா, நான் என் பொண்டாட்டி பொண்ணை கூட்டிட்டு தனியா போய்டுவேன்)” என்றான் மிரட்டலாக.
சுஜாதா பதறி, “எந்தா மோனே இங்கனே பரயனது?” என வருந்த,
“எல்லாம் நிங்கள் அவளுக்குக் கொடுக்கன ஸ்தலம்(இடம்) தான்மா. அவள் நல்ல விதமாய் ஈ வீட்டிலேக்கு வந்தில்லா…
நிங்கள்டே மகன்கிட்டே உள்ள பைசைக்கு(காசுக்கு) வேண்டி தான் அர்ஜி மேல பழி போட்டு இவிடே வந்திரிக்கனது. அவள் வந்ததில் இருந்தே இவிடே எத்தர பிரஸ்னம்(எத்தனை பிரச்சினை)… நிங்களுக்கு மனசிலாயில்லே?(உங்களுக்குத் புரியலையா)” என்றதில் அவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
கல்யாணியோ, “அவள் எந்தினா காசினு வேண்டி கல்யாணம் செய்யனம். அவளே சொந்தமாய் பிசினஸ் செய்யுந்து. கல்யாணத்தினே அத்தர நகை போட்டு இருந்தல்லோ…(அவள் ஏன்பா காசுக்காக கல்யாணம் பண்ணனும். அவளே சொந்தமா பிசினஸ் பண்றா. கல்யாணத்துலயே அவ்ளோ நகை போட்டு இருந்தாளே…)” என்றிட,
“ப்ச்! அதெல்லாம் அவருடையது கிடையாது. கல்யாணத்தினு மொத்தச் செலவும் அர்ஜி தன்னே நோக்கணம்னு பரஞ்சு தன்னே, அவள் கல்யாணத்தினு சம்மதிச்சது. அத்தர நகையும் அர்ஜி நிங்களுக்கு அறியாதே (தெரியாம) அவளுக்கு வாங்கிக் கொடுத்திரிக்குனு.
பிஸினஸோ, அவள் பிசினஸ் பற்றி வந்த ரிவியூ எல்லாம் அறியில்லால்லோ. இது நோக்கு” என்று இன்ப்ளூயன்சர் நிக்கி பேசியதைப் போட்டுக் காட்டிட கல்யாணி முகம் சுளித்தார்.
கோபால கிருஷ்ணனோ, “அர்ஜியோடு பரஞ்சு இனி நின்டே விஷயத்தில் தலையிட வேண்டெந்து அகமொழியோடு பரயான் பரயாம் மோனே… இதை விடு நீ… போய் அமையாவை நோக்கு(அர்ஜிட்ட சொல்லி இனி உன் விஷயத்துல தலையிட வேணாம்னு அகமொழிட்ட சொல்ல சொல்லலாம்பா. இதை விடு நீ. போய் அமையாவைப் பாரு)” என்று அனுப்பி விட, சுஜாதாவும் குழம்பிப் போனார்.
குட்டையைக் குழப்பி விட்டது அறியாமல், ஆடவனுடன் நெருக்கமாய் உறங்கிக் கண் விழித்தவளுக்கோ, அருகில் அர்ஜித் அகன் இல்லாதது சற்றே வெறுமையாக இருந்தது.
‘இவ்ளோ சீக்கிரம் போய் என்ன பண்ணப் போறானோ…’ எனத் திட்டியபடி கிளம்பியவளுக்கு, ரிஷானின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
லேசாய் புருவம் சுருக்கியவள் அழைப்பை ஏற்றிட, அவன் குரலில் கோபம் தெறித்தது.
“எங்க இருக்க?”
“வீட்ல…”
“ஓ புருஷன் வீட்லயோ?” அவன் குரலில் குத்தல் வெளிப்பட, அகமொழி குழப்பமாக நின்றாள்.
“உன் அருமைப் புருஷன் இங்க என்ன பண்ணிருக்கான்னு வந்து பார்த்துட்டுப் போ…” என அழைப்பைத் துண்டிக்க, வெகுவாய் குழம்பியவள் நேராகக் கிளாம்பிற்குச் சென்று அதிர்ந்தே விட்டாள்.
முழுதாய் ஒரு கிளாம்பிங்கை ஜேசிபி முழுங்கி இருக்க, அப்போது தான் ஊருக்கு வந்திருந்த ரிஷானும், ரூஹியும் அதனை வெறித்திருந்தனர்.
“ஹே! யாரைக் கேட்டு இடிக்கிறீங்க?” அகமொழி அங்கிருந்த ஆள்களிடம் சண்டையிட,
“ஹில்மிஸ்ட் எம்டி சொல்லித் தான்மா. நீங்க என்ன பேசுறதுன்னாலும் அங்க போய் பேசுங்க.” என்று வேலையில் கவனமாகினர்.
ரிஷான் தான், “என்ன பண்ணி வச்சுருக்க அகா? இதையும் அந்த சோ கால்டு ஹஸ்பண்டுக்கு எழுதிக் குடுத்துட்டியா?” எனக் கேட்க, அகமொழிக்கு நிஜத்தை ஜீரணிக்கவே அதிக நேரம் பிடித்தது.
அவளவன் என்றான பின்னும் தனது கனவைக் கலைக்க எண்ணியது ஏனோ?
கண்ணில் நீர் திரண்டது.
ரூஹி அவளை உலுக்கி, “பதில் சொல்லு அகா? இவன் உன்னை நம்பலைன்னு அவன் மேல கோபப்பட்ட… உன் கோபம் சரி தான். ஆனா அந்தப் பொம்பளைப் பொறுக்கியை எதுக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. சரி நீ என்னைப் பத்தி யோசிக்கலையா? இல்ல, எங்களைப் பத்தின யோசனை உனக்கு வரவே இல்லையா?” என்றதில், “என..எனக்கே தெரியாது ரூஹி…” என்றவளுக்கு வார்த்தையே நடுங்கியது.
‘பழி வாங்கி விட்டானல்லவா?’ ஏதேதோ சிந்தித்துச் சிதைந்து போனாள்.
“போ அகா… ரொம்ப வலிக்குது. இதுல எங்களோட கேரியரும் அடங்கி இருக்குல்ல?” ரூஹி வேதனையாகக் கூற, அவளுக்குக் குற்ற உணர்வாக இருந்தது.
அந்தக் கோபமும் அர்ஜித் அகன் மீது தான் திரும்பியது.
விறுவிறுவென ஹில்மிஸ்ட் ரிஸார்ட்டிற்குச் சென்றவள், அர்ஜித் அகனின் அறைக்கதவைப் படாரெனத் திறந்தாள்.
ஏதோ வேலையாக இருந்தவன் நிமிர்ந்து அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க, “நீ நினைச்ச மாதிரி பழி வாங்கிட்டல்ல. இப்ப நிம்மதியா உனக்கு?” என்றாள் சீறலுடன்.
அவனோ சீட்டில் நன்றாகச் சாய்ந்து அவளைத் தீர்க்கமாக ஏறிட்டதில் இன்னும் கொஞ்சம் கோபத்தீ எரிந்தது.
“ஒருத்தரோட தொழிலைக் கெடுக்குறோம்னு குற்ற உணர்ச்சியே இல்லாம, என் கிளாம்பிங் பத்திக் கண்ட மாதிரி ரிவியூ போட்டது தப்பில்ல. அதுக்கு நான் ரியாக்ட் பண்ணது உனக்குத் தப்பா தெரிஞ்சு குத்துதுல. அதுக்காக நீ என்னை அவ்ளோ அசிங்கப்படுத்தி இருக்கன்னு உனக்குத் தெரியுதா அகன்?
உன்னால என் பேரெண்ட்ஸ் என்கிட்ட மூஞ்சி குடுத்துப் பேசுறது இல்ல. ப்ரெண்ட்ஷிப் போச்சு. என் லவ் போச்சு. உன் அண்ணன் என்னை ப்ராஸ்டிடியூட் விடக் கேவலமா ட்ரீட் பண்ணான். இப்ப கேரியரும் போச்சு. உனக்குத் தேவையானது என்கிட்ட இருந்து கிடைக்கலைன்னு, பழி வாங்கிட்டியா அகன்… அதுக்கு நீ என்னை, விஷ்ணு அன்வியைக் கஷ்டப்படுத்துன மாதிரி நீயும் ரேப்பே பண்ணிருக்கலாமே?”
கோபத்தில் தான் ஆரம்பித்தாள். ஆனால் முடியவில்லை! நெஞ்சம் துடித்து வலித்தது. அதில் குரலும் தழுதழுத்தது. கண்ணீர் மட்டும் விட்டு விடவே கூடாது எனப் பிடிவாதம் பிடித்ததில் விழிகள் மட்டும் சிவப்பேறி இருந்தது.
அர்ஜித்தோ கையை இறுக்கி மூடினான். நியாயமாகக் கோபம் வர வேண்டும். ஆனால் வலித்தது அவளது வார்த்தைகள்.
“ஜெகன்…” உச்சஸ்தாயியில் கழுத்து நரம்பு புடைக்கக் கத்தினான் அவன்.
அதில் பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்த அகமொழியை வெறிக்கும்போதே ஜெகன் அவசரமாக உள்ளே நுழைந்து, “சொல்லுங்க சார்!” எனக் கேட்க,
“நின்னோடு ஏற்கெனவே பரஞ்சிட்டுண்டு இனி ஒரு பிராவஸ்யம் ஈ ரிசார்ட் சம்பந்தப்பட்ட ஏது பிரஸ்னவும் எனிக்கு வரான் பாடில்லாந்து. கெட் ஹெர் அவுட்!(உன்னை ஏற்கனவே சொல்லிருக்கேன். இனி ஒரு தடவை இந்த ரிசார்ட் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் எனக்கு வரக்கூடாதுன்னு. கெட் ஹெர் அவுட்)” எனக் கர்ஜித்தவனின் விழிகள் தாறுமாறாக நெருப்பை உமிழ்ந்தது.
“ம்மா, நீ வா முதல்ல…” ஜெகன் அவளைக் கிளப்ப முற்பட,
“எதுக்காக என் கிளாம்பிங்கை இடிக்கிறீங்கன்னு எனக்கு விளக்கம் தெரிஞ்சாகணும்…” அவள் அழுத்தமாக நின்றதில்,
“அதெல்லாம் நீங்க எம்டிகிட்ட பேசிக்கோங்க…” என்றார் அவர்.
“இவர் தான எம். டி?” அகமொழி சட்டெனப் புருவம் சுருக்கி வினவ, “இல்லமா, விஷ்ணு சார் தான் ரிசார்ட் எம். டி. அவர் தான் எல்லா முடிவும் எடுப்பாரு.” என்றதில் அகமொழிக்குப் பூமியே காலுக்குக் கீழே நழுவுவது போல இருந்தது.
அதிர்ந்து திகைத்து உறைந்து நின்றிருந்தவளுக்குத் தலையே சுற்றியது.
விழிகள் தானாய் அர்ஜித் அகனைப் பார்க்க, அவனோ அவளை எதிர்கொள்ளப் பிரியமற்றுத் தனது மடிக்கணினியில் புதைந்து கொண்டான்.
“எது சம்சாரிக்கனமெங்கிலும் (பேசுறதுனாலும்) புறத்து (வெளில)போய் சம்சாரிக்கு…” என எரிச்சலாய் மொழிந்ததில், ஜெகன் அவளைப் பிடித்து இழுக்க அவளும் தளர்ந்து அவர் இழுப்பில் வெளியில் சென்றாள்.
“இதோ பாருமா. அந்த இடத்து ஓனர் நீ இல்ல, உன் அப்பா தான். அவர்ட்ட பேசி அவர் அந்த இடத்தை ரெண்டு வாரம் முன்னாடியே விஷ்ணு சார் பேர்ல எழுதிக் குடுத்துட்டாரு. நீ ப்ராப்பரா இடத்து ஓனர்கிட்ட அக்ரீமெண்ட் எதுவும் போட்ட பேப்பர்ஸ் இல்லையே. அதுனால அந்த இடத்தில என்ன இருந்தாலும் அதைத் தூக்கச் சொல்லி சார் சொல்லிட்டாரு. இனி இதை நீ உன் அப்பாகிட்டயோ, இல்ல விஷ்ணு சார்கிட்டயோ பேசிக்கோ!” என்றார் தெனாவெட்டாக.
அடுத்த அடி அவளுக்கு. “அப்பா இடத்தை எழுதிக் குடுத்துட்டாரா?” கையெல்லாம் நடுங்கியது.
“ஆமா, அதுக்கான ப்ராப்பர் பேப்பர் இருக்கு…” என அதனை எடுத்தும் கொடுத்திட அதனை வெறுமையாக ஒரு பார்வை பார்த்தவள், இறுகிய நிலையிலேயே அங்கிருந்து சென்றாள்.
மடிக்கணினியில் கவனம் இருப்பினும் வெளியில் ஜெகன் பேசியது அர்ஜித்திற்கும் கேட்டதில், அவன் புருவ மத்தியில் சிறு முடிச்சு.
‘ஏதோ ரிவியூந்து பரஞ்சல்லோ?’ என அப்போது தான் அவனும் சிந்தித்தான்.
அதில் “ஜெகன்…” என மீண்டும் மேனேஜரை அழைக்க, “அது எந்தா ரிவியூ பிரஸ்னம்?” என்றான் கூர்மையாக.
“அது ரிசார்ட் சம்பந்தப்பட்ட மார்க்கெட்டிங் சார். ஒன்னும் குழப்பமில்லை, அந்தப் பொண்ணை அனுப்பியாச்சு.”
“ஜெகன்… ஷீ இஸ் மை வைஃப்!” என்றவனின் பார்வையில் இருந்த அழுத்தத்தில் ஜெகன் தடுமாறினார்.
“அது எந்தா ரிவியூன்னு சோதிச்சு?” மீண்டும் உறுமிட, ஜெகன் எச்சிலை விழுங்கியபடி நிக்கியின் ரிவியூவைக் காட்டினார்.
சுழல் நாற்காலியில் சுழன்றபடி அதனைப் பார்வையிட்டவன், மேலும் அகவனா கிளாம்பிங் பற்றி இணையதளத்தில் தேடிப் பார்த்துச் சில நிமிடங்களைச் செலவழித்தான்.
“நெட்ல மோஸ்ட்லீ நல்ல ரிவியூஸ் போட்டிருக்கன ஒரு இடத்தை, ஈ ரிவியூவர் எந்தினு இத்தர மோசமாய் போட்டிருக்கான்? அதும் ஈ ரிஸார்ட்டை உயர்த்திப் பேசி?” என்றான் ஒற்றைப்புருவம் உயர்த்தி.
“அது தான் சொன்னேனே சார் மார்க்கெட்டிங் தான்…”
“புல்ஷிட்!” என்று டேபிளை ஒரு தட்டுத் தட்டியவன்,
“மார்க்கெட்டிங் நிங்கள் நிங்களுக்கு தன்னே செய்யணம். அடுத்தவர்டே பிசினஸைக் கெடுக்கனதினு பேர் வேறே. இதினு வேண்டி அவள் ஒந்து செய்து வச்சுருக்கா பாரு… ச்சை! நிங்களுக்கு பிசினஸ் எதிக்ஸ்னா எந்தாந்து அறியுமோ அறியில்லே? இடியட்ஸ்(மார்க்கெட்டிங் நீங்க உங்களுக்கு தான் செஞ்சுக்கணும். அடுத்தவங்க பிசினஸை கெடுக்குறதுக்கு பேர் வேற. இதுக்காக அவள் ஒன்னு பண்ணி வச்சுருக்கா பாரு… ச்சை! உங்களுக்கு பிசினஸ் எதிக்ஸ்னா என்னன்னு தெரியுமா தெரியாதா? இடியட்ஸ்!)!” என்று கோபத்தில் கொந்தளித்தான்.
பின் கண்ணை இறுக்கி மூடித் திறந்து, “இப்ப எந்து (என்ன) பிளான் பரஞ்சு நிங்கள்டே எம்.டி?” என்றான் பல்லைக் கடித்து.
“அது, இப்ப கிளாம்பிக்கை இடிச்சுட்டு இருக்கோம் சார்!” என்றதில், “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஜெகன்” என்றான்.
“சாரி சார், அங்க ப்ராசஸ் போயிட்டு இருக்கு. பேப்பர்ஸ் லீகலா இருக்கு. இதுக்கு மேல விஷ்ணு சார் சொல்லாம எதுவும் செய்ய முடியாது.” என்று விட, “விஷ்ணு விஷ்ணு விஷ்ணு… வை தட் இடியட் டூயிங் திஸ் மச் இடியாடிக் திங்ஸ் நொவ் அ டேஸ்…” என்று தமையனின் மீது புகாரின் மேல் புகார் வந்ததில் அழுத்தம் தாளாது அலைபேசியைத் தூக்கி எறிந்தான்.
சிறிது நேரத்தில் அகவனா கிளாம்பிற்கு அர்ஜித் கிளம்ப, அங்கோ தனது வங்கிக்காக ஏற்பாடு செய்திருந்த டாக்குமெண்ட், ஆசையாக வரைந்து திட்டமிட்ட ஹாபிட் ஹவுஸ் என அனைத்துத் தாள்களையும் சரமாரியாகத் தூக்கி எறிந்த அகமொழிக்கு, இந்தத் தோல்வியைத் தாங்க இயலவில்லை.
எத்தனை நாள்கள் உறங்காமல் இதற்காக உழைத்திருப்பாள்?
தினமும் இந்த இயற்கை அழகை ரசிக்காது எப்படி இருக்க இயலும்?
தேம்பித் தேம்பி அழுதவளை என்ன செய்வதென்று தெரியாமல், இனி அடுத்து என்னவென்று தெரியாது திகைத்திருந்தனர் ரிஷானும் ரூஹியும்.
அந்நேரம் வசந்தி அவளுக்கு அழைக்க, கண்ணீரைத் துடைத்தவள் அழைப்பை ஏற்று, “ஏன்மா அப்பா இப்படிப் பண்ணாரு? இங்க நான் மட்டும் இல்லாம என்னை நம்பி ரெண்டு பேர் பிசினஸ் செஞ்சுட்டு இருக்காங்கள்ல… அப்புறம் ஏன் இடத்தை எழுதிக் குடுத்தாரு…” என்றாள் கேவலுடன்.
வசந்தி தயக்கத்துடன், “எனக்கே இது தெரியாது அகா… உன் அப்பா இப்ப தான் சொல்றாரு. உனக்குச் சீதனமா குடுக்க நினைச்சது தான, அதான்…” என்றிட,
“அதுக்காக என்கிட்ட கேட்காம ஏன் இப்படிச் செஞ்சீங்க?” என்று பொங்கினாள்.
வசந்தி லவுட் ஸ்பீக்கரில் வைத்துப் பேசியதில், பாஸ்கரும் அனைத்தையும் கேட்டார்.
“அவள்கிட்ட கேட்டுக் கேட்டுச் செஞ்சு அசிங்கப்பட்டவரை போதும். என் இடம் என் இஷ்டம்…” என்ற தந்தையின் குரலில் கோபம் வந்தது.
“சரி, எனக்குச் சீதனமா குடுக்க நினைச்சா ஒன்னு என் பேர்ல எழுதி வைக்கணும். இல்லன்னா அகன் பேர்ல எழுதி வைக்கணும். சம்பந்தமே இல்லாம விஷ்ணு பேர்ல ஏன்?”
அதற்கு பாஸ்கர் பதில் அளிக்காது போக, வசந்தியும் “நானும் கேட்டுட்டேன் அகா… அதுக்கு வாயே திறக்க மாட்டுறாரு.” என்றார் வருத்தம் நிறைந்த குரலில்.
“சரி… அட்லீஸ்ட் இடத்தைக் குடுத்துப் பணமாவது வாங்குனீங்களா?” என வினவ,
“சீதனமா குடுத்ததுக்கு எப்படிப் பணம் வாங்குறது அகா…” என வசந்தி தயங்கிட, “உங்களுக்கு என்ன பைத்தியமா? இருக்குற இடத்தையும் கொடுத்தாச்சு. எனக்கு வருமானம் இருக்காது. வெறும் பென்சன் பணத்தை வச்சு நீங்க எப்படிச் சமாளிக்க முடியும்?” என நொந்திட,
“அது எங்க பிரச்சினை, யாரும் அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம் வசந்தி…” என்ற பாஸ்கரின் கூற்றில் அழைப்பைத் துண்டித்தாள்.
கண்ணீர் பீறிட்டு வழிந்தது. அவள் அழுவதைப் பொறுக்க இயலாமல் ரூஹி தான் அவள் அருகில் அமர்ந்தாள்.
“அகா… அந்தப் பொறுக்கி…” எனச் சொல்ல வந்து விட்டு, “உன் ஹஸ்பண்ட்கிட்ட பேசிப் பார்க்கலாம்.” என்றிட,
“அவன்கிட்ட பேசி என்ன ஆகப்போகுது. அவன் எம்.டியே இல்லையாம். அவனோட அண்ணன் தான் எம். டி’யாம், என்மேல இருக்குற கோபத்துல இந்த விஷயத்தைச் சொல்லாமலே என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அந்த பிராடு…” கண்ணீரைத் துடைத்தபடி செல்லமாகவே திட்டினாள்.
அந்த விஷ்ணு திட்டமிட்டே அனைத்தையும் செய்திருக்கிறான். இவனால் தேவையின்றி அர்ஜித்திடம் அல்லவா சண்டையிட்டு இருக்கிறாள்.
‘அவன் எம்.டி இல்லையென்றால், அந்தப் பெண்கள் விஷயமும் பொய்யாகத் தானே இருக்க வேண்டும்.’ என்ற சிறு மகிழ்வும் எழுந்தது.
காரணமின்றி நெஞ்சம் தவித்தது அவனைக் காண!
ஒரு மன்னிப்பை வேண்டி விட வேண்டுமென்ற திணறல்.
“என்னது, ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டானா?” ரிஷான் அதிர்ந்து விட்டான்.
ரூஹியோ ஏதோ தோன்ற அந்த வீடியோவைப் பார்த்ததில் அதிர்ந்து விட்டாள். அது பல்லாயிரம் வியூஸ் சென்றிருந்தது.
“அகா… இது… இது நான் டெலிட் பண்ணச் சொல்லிட்டேன். ஆனா…” ரூஹி பயந்து விட்டாள்.
“இது.. இதுனால தான் பிரச்சினையா?” கைகள் நடுங்கக் கேட்டவளை ஒரு கணம் பார்த்தவள், “இல்லடி, இதுனால இல்ல.” என்று பொய்யுரைத்து விட்டாள் அப்போதும்.
“நிஜமா?”
“ம்ம்…” என்றபிறகே “என்ன வீடியோ?” என ரிஷான் வாங்கிப் பார்த்து அதிர்ந்தான்.
“என்னடி செஞ்சு வச்சிருக்கீங்க? அவன் இவ்ளோ மோசமானவனா?”
“இல்லடா, எம்டினு நினைச்சு யாரோ அகன் பேரை இழுத்து விட்டிருக்காங்க. இது ஃபேக்கா தான் இருக்கும்.” என்றிட, ரூஹியோ “இல்லடி, இது சத்தியமா உண்மைன்னு சொல்லித் தான் அங்க இருக்குற பொண்ணுங்களே குடுத்தாங்க. பொய்னா நான் போட்டிருக்கவே மாட்டேன்…” என்றாள் தயக்கத்துடன்.
உள்ளுக்குள் சுருக்கென இருந்தாலும், “அதை அவன்கிட்டயே கேட்கலாம்… வாங்க…” என இருவரையும் தரதரவென ஹில்மிஸ்ட் ரிஸார்ட்டிற்கு இழுத்துச் சென்றாள்.
இங்கு அர்ஜித் அகனும், ‘இதற்கெல்லாம் காரணகர்த்தா விஷ்ணு, அந்த இடத்தில் ரிசார்ட் தொடங்க ஆசைப்பட்டதே’ என்று புரிந்து அவளிடம் மன்னிப்புக் கேட்கவே விழைந்தான்.
‘என்னவாகினும், அவளது தொழிலைக் கெடுத்தது தவறு தான். பதிலுக்கு அவள் ஏதோ செய்து விட்டாள். அவ்வளவே!’ நெஞ்சம் கொஞ்சம் இலேசானது.
விஷ்ணு ரிசார்ட் ஆரம்பித்த சமயத்தில் அர்ஜித்தும் அவனுடன் இருந்தான். அப்போதெல்லாம் சின்ன ரிசார்ட் வைத்திருந்தவர்கள் சில நேரம் பணம் பறிக்கச் சண்டைக்கு வருவார்கள்.
“நீங்க ஏன் இவ்ளோ க்ராண்டா ரிசார்ட் பண்றீங்க. ஏன் இவ்ளோ கம்மி விலைக்குக் குடுக்குறீங்க. உங்களால எங்க பிசினஸ் அடிபட்டிச்சு.” என ஏதாவது காரணம் சொல்லிப் பிரச்சினைக்கு வருவார்கள்.
அதன்பிறகு விஷ்ணுவே இந்தத் தொழிலை முழுமையாக எடுத்து நடத்துவதால், அவன் தனது வேலையில் கவனமாகி விட்டான்.
சரியாக அவன் ஊருக்கு வந்த சமயம், அகமொழியும் அதே போல வந்து சண்டையிட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.
தொழிலில் இப்படிச் சண்டை சச்சரவுகள் செய்து, அடுத்த இடத்திற்கு வந்து அவர்களது மனநிலையைக் கெடுக்கக் கூடாதென்பது அர்ஜித் அகனின் வாதம்.
அதுவே தொழில் ரீதியாக அவள் மீது ஒரு நம்பிக்கையின்மையையும் எரிச்சலையும் கொடுத்திருந்தது. அதன்பிறகு அவள் செய்த காரியத்தில் அவளைப் பிடிக்காமலே போனது தான். ஆனால் முன்னுக்கு பின் முரணாகத் தொழிலுக்காகச் சண்டையிட்டவள், தான் ஓரிரவு தன்னுடன் தங்கச் சொன்னபோது அவளது கிளாம்பிங்கை இடித்துத் தள்ளி விடுமாறு கூறிய திமிரில் தான் ஆடவனின் பார்வை மாறியது.
முதல் கோணலில் அவள் மீது ஏற்படுத்திய தவறான பிம்பத்தை அவன் மாற்றிக் கொள்ளவே இத்தனைச் சம்பவங்களைக் கடந்து வர வேண்டியது இருந்தது. ஆனால் மனைவியாக அவளை மிகவும் பிடித்துத் தொலைத்தது.
அதன்பிறகே தொழில் வேறு, சொந்த வாழ்க்கையில் அவள் வேறு என்று அவளை மனைவியாக மட்டுமே பார்த்துக் கொண்டவன், அவளது வேலையைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
இப்போதே முதன்முறை, அவளது கிளாம்பிங்கிற்குச் சென்றான். இரண்டாவது கிளாம்பிங்கைத் தற்போது தகர்த்து கொண்டிருந்தனர்.
மீதி இருந்த கிளாம்பிங் டென்டிற்குச் சென்றவன், அவள் அதனை வடிவமைத்திருந்த விதத்தையும், மழை நீர் தேங்கி விடாமல் இருக்க அந்தச் சரிவான நிலத்தைச் சரியாகப் பண்படுத்தி, மழை நீர் செல்ல ஏதுவாகப் பாதை அமைத்து, எத்தனைப் பெரிய வெள்ளத்திலும் தரத்துடன் நிற்கும் அளவு நேர்த்தியாக உருவாக்கி இருந்ததைக் கண்டான்.
கூடவே அங்குச் சில தாள்கள் அங்கும் இங்கும் பரவிக்கிடந்தது.
அதில் ஒன்றை எடுத்துப் பார்த்தான். வங்கிக் கடனுக்கான டாக்குமெண்ட். மெல்ல அடி எடுத்து வைக்கும்போதே அவன் காலடியில் மற்றுமொரு தாள் வந்து விழுந்தது.
ஹாபிட் ஹவுஸ் – கான அவளது வரைபடம். அவளது கை வண்ணத்தில் மிளிர, புருவம் சுருக்கியபடி அதனை எடுத்துப் பார்த்தவன் அதில் அப்போது தான் காய்ந்து கொண்டிருந்த நீர்பொட்டுகளையும் பார்த்தான்.
‘அவளது கண்ணீராக இருக்குமோ?’ என்ற சிறு தவிப்பு அவனிடம்.
அந்த வரைபடத்தை மெல்ல வருடினான். அவளது புத்திக்கூர்மையில் புருவங்கள் மேலேறியது. நிஜமறிந்த நெஞ்சங்கள் நிழலைத்தான் சேருமோ?
அகன் வசப்படுவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
64
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விஷ்ணு இங்கே பார்க்கிறான் போல. சென்னை அகன் பார்க்கிறான் போல.
விஷ்ணு எவ்வளவு மோசமானவன்… ச்சே…