
அத்தியாயம் 28
அமையாவிற்குக் காய்ச்சல் அதிகமாகி டீ – ஹைட்ரேஷன் என்ற நிலை ஏற்பட்டதில், க்ளூக்கோஸ் ஏற்ற வேண்டுமென மருத்துவர் பரிந்துரைத்தனர்.
“அச்சோ… குழந்தைக்கு எப்படி ஐவி எல்லாம் போட முடியும்?” என அகமொழி முகம் சுருக்கினாள்.
“செறிய ஊசி தன்னே இடுள்ளுடி. (சின்ன ஊசி தான் போடுவாங்கடி)அவளுக்கு இப்ப தேகத்தில் சக்தி (தெம்பு) வேணமல்லோ…” அர்ஜித் சமன் செய்ததும்,
“சாதாரணக் காய்ச்சல் தான” என முணுமுணுத்தவளிடம்,
“உங்க பொண்ணு டேட் ஆஃப் பர்த் எந்தா?” என தாதியர் வினவ, அவள் திருதிருவென விழித்தாள்.
அவள் முழியைக் கண்டு சிரிப்பை அடக்கிய அர்ஜித் அகன், “வீ ஆர் ஸ்டில் ப்ராசஸிங் ஃபர்ஸ்ட் ஸ்டேஜ். பின் எங்கனே குழந்தை வரும்…” எனத் தீவிரமாகக் கூற தாதியர் புரியாது பார்த்தார்.
“டேய்ய்ய்! என்னடா பேசிட்டு இருக்க?” என அவனைக் காலை மிதித்த அகமொழியின் காலை அவனும் மிதித்தான்.
இருவரையும் ஒரு மார்க்கமாகப் பார்த்து விட்டுத் தாதியர் சென்ற நேரம், அன்விதா கண்ணில் நீருடன் அங்கு வந்து விட்டாள்.
அவளைக் கண்டதும் அகமொழிக்கு வருத்தம் மிளிர்ந்தது.
“அமையா எங்க அகா?”
“ஐவி போடணும்னு சொல்லிருக்காங்க அன்வி. பட் பயப்பட ஒன்னும் இல்ல. டூ ஹவர்ஸ் தானாம், அப்புறம் வீட்டுக்குப் போயிக்கலாம்.” என்றதும் அவளுக்குக் கண்ணீர் வழிந்தது.
“நீ அமையாவைப் பாரு அன்வி. அவள் உன்னைத் தேடிட்டே இருக்கா. இப்ப கொஞ்சம் தூங்குறா…” அகமொழி பேசும்போதே,
“எந்தா ஏடத்தி இது? எந்து பிரச்சினைன்னாலும் இங்கனே வீட்டை விட்டுப் போயால் சரி ஆகுமோ? அவள் நிங்களைக் காணோம்னு இத்தர (இவ்ளோ)நேரமா கரைஞ்சிட்டு (அழுதுட்டு) இரிக்குனு. இனி எதுவா இருந்தாலும் விட்டுட்டுப் போகன எண்ணம் நிங்களுக்கு வரான் பாடில்லா(விட்டுட்டுப் போகணும்னு எண்ணம் வரக்கூடாது)” என்று அழுத்தம் திருத்தமாகத் திட்டினான்.
அதில் அன்விதாவிற்குக் குற்ற உணர்ச்சியும் தோன்றிட, கீழுதட்டை அழுந்தக் கடித்துத் தலையைக் குனிந்து கொண்டாள்.
அகமொழிக்குத் தான் சுறுசுறுவெனக் கோபம் வந்தது.
“சாரி…” என்ற அன்விதா அமையாவைக் காணச் செல்ல, அகமொழி அர்ஜித் அகன் மீது கோபத்தைப் பொழிந்தாள்.
“விஷ்ணு அவளை அடிச்சதுல தப்பு இல்ல. அதுக்கு அவள் ரியாக்ட் பண்ணது தான் தப்பா? விஷ்ணு உன் பொண்டாட்டியைத் திட்டுனதுக்குக் கோபப்பட்டல்ல. அப்போ நீ மட்டும் அடுத்தவன் பொண்டாட்டியைத் திட்டலாமா? அதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? என்ன பிரச்சினைன்னு தான நீ கேட்டிருக்கணும்… பிரச்சினை என்னன்னு தெரியாம, அவங்களை எப்படி நீ பேசலாம்… உன் ஆம்பளைப் புத்தியைக் காட்டுறல்ல” எனக் கொந்தளிக்க, அந்நேரம் ப்ரணீத்தும் தகவல் தெரிந்து வந்து விட்டான்.
“டேய், அமையாக்கு என்னாச்சு?”
“ஏடத்தியும், அமையாவும் உள்ளே இரிக்குனு. நீ நோக்கிக்கோ(பார்த்துக்கோ)… ஞங்கள் வந்துடறோம்.” என அவளது கையைக் கெட்டியாகப் பிடித்து தரதரவென காருக்கு அழைத்துச் சென்றான்.
கையில் ட்ரிப்ஸ் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்த மகளைக் கண்டு வெதும்பிய அன்விதா, “சாரி அமையா” என்று அவள் நெற்றியில் முத்தமிட அங்கு வந்த பிரணீத்,
“என்னாச்சு சிட்டு? ஏன் திடீர்னு குட்டிச் சிட்டுக்கு இவ்ளோ ஃபீவர்” என அன்விதாவிற்கு அருகில் அமர்ந்து அமையாவின் பாதத்தைப் பிடித்து வருத்தமாகக் கேட்டான்.
பிரணீத்தைக் கண்டதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “தெரியல ப்ரணீ. கிளைமேட் சேரலையோ என்னவோ…” என்றாள் அவனைப் பாராமல்.
“ம்ம்ம்…” என்றவன் திரும்பி அன்விதாவைப் பார்த்துப் புருவம் சுளித்தான்.
“இது என்ன, உன் கன்னம் சிவப்பா இருக்கு?”
“அது… கதவுல இடிச்சுட்டேன்.” எனச் சமாளித்ததில், அவளை யோசனையாகப் பார்த்தான்.
தன்னைத் தரதரவென காருக்கு இழுத்துச் சென்றவனிடம் இருந்து விடுபட முயன்ற அகமொழிக்குத் தோல்வியே கிடைத்தது.
“விடுடா பைத்தியக்காரா!” அவள் கத்தலை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. காரின் பின் சீட்டில் அமர்ந்ததும்,
“ஹாஸ்பிடல்ல நிந்து இங்கனே ஆனோ(இப்படி தான்) இண்டீசன்ட்டாய் கத்தனது?” பல்லைக் கடித்து உறுமினான்.
“உண்மையைச் சொன்னா குத்துது! நீங்க என்ன வேணா பண்ணலாம். அதை அமைதியா கேட்டுக்கிட்டா நல்ல பொண்ணுன்னு முத்திரை குத்துவீங்க. இதே திருப்பிக் கேள்வி கேட்டா அடிப்பீங்க. அதையும் வாங்கிட்டு ரோஷத்தை எல்லாம் மூட்டை கட்டிப் பரணி மேல போட்டுட்டு நீ குடுக்குற சோத்தையே சாப்பிடணும். பொண்டாட்டின்னா சூடு சொரணைன்னு எல்லாம் விட்டுட்டு இருக்கணுமா? நீ அப்படித் தான அன்வியை இருக்கச் சொல்ற…” விஷ்ணு மீது இருக்கும் கோபத்தையும் அர்ஜித் மீதே காட்டினாள்.
“தேவையில்லாதே பேசாத மொழி!” அவன் கண்டிப்பாகக் கூற,
“முதல்ல அன்வி ஏன் சண்டை போட்டான்னு உனக்குத் தெரியுமா?” என எகிறினாள்.
அதில் புருவம் சுருக்கியவன், “நினக்கு அறியுமோ?” என்றான் ஒரு மாதிரியாக.
“தெரியும். அவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு எனக்குத் தெரியும். நான் தான் விஷ்ணுகிட்ட சண்டை போடச் சொன்னேன்…”
அவளை உறுத்து விழித்தவன், “ஏடத்திக்கு நின்னே போலே சண்டை போடான் ட்ரெயினிங் கொடுக்குவானோ?” என்றான் குத்தலாக.
பதிலுக்கு அவள் பார்வையில் அனலடிக்க, “எந்து பிரஸ்னம் அவருக்கு?(என்ன பிரச்சினை அவங்களுக்கு)” எனக் கேட்டான் கூர்மையாக.
“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க மிஸ்டர் மலையாளி. ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் வாங்கித் தநதிடுவீங்களோ? இன்னும் நாலு அடி வாங்குன்னு அவளை அம்போன்னு விடத் தான போறீங்க…” என்றாள் நக்கலும் கோபமும் கலந்தவளாக.
“ஓங்கி ஒந்து விட்டால் அறியும். எந்தாடி, ஞானும் நோக்கிட்டே இருக்கேன் ஓவரா பேசிட்டு இரிக்கன…” கார் அதிர அவன் குரல் உயர்த்திக் கையை ஓங்கிக் கர்ஜிக்க, அவள் உதட்டைக் குவித்து முறைத்தாள்.
“விஷ்ணு அடிச்சது சரின்னு ஞான் எப்போ பரஞ்சது? அவன் அடிச்சது தப்பு தன்னே. அதை அவங்க வீட்டில் அல்லே பரயணம்? அதான் இத்தனைப் பேர் வீட்டில் குத்துக் கல்லாட்டம் இருக்கோமே. அதைச் செய்யாதே, ஆல்ரெடி பயந்து போயிரிக்கன அமையாவை விட்டுட்டு அவர்டெ பாட்டினு போயால் சரியாய் போகுமோ? அங்கனே போகணம்னு முடிவு செய்தா அமையாவையும் தன்னே கூட்டிட்டுப் போயிரிக்கணம்.(விஷ்ணு அடிச்சது சரின்னு நான் எப்போ சொன்னேன். அவன் அடிச்சது தப்பு தான். அதை அவங்க வீட்ல தான சொல்லணும்? அதான் இத்தனை பேர் வீட்ல குத்து கல்லாட்டம் இருக்கோமே. அதை பண்ணாம, ஆல்ரெடி பயந்து போயிருந்த அமையாவை விட்டுட்டு அவங்க பாட்டுக்கு போய்ட்டா சரியாய் போய்டுமா? அப்படி போகணும்னு முடிவு எடுத்தா அமையாவையும் தான கூட்டிட்டுப் போயிருக்கணும்.
)
ஏடத்தி ரொம்ப சென்சிடிவ். விஷ்ணு அடிச்ச சங்கடத்தில் ஏதோ ஒரு மைண்ட்செட் ஆகி தெற்றாய முடிவு எடுத்தால் எந்தாடி செய்யுக? அவரு வீட்டில் இல்லாந்ததும் எனிக்கு ஆ பேடியானு வந்தது. ஞான் திட்டி விட்டா, ஆ பேடியிலாவது இனி இங்கனே வெளிநடப்பு செய்யாதே இருப்பாங்கன்னு தன்னே திட்டியது. ஒந்து போல்டா ஃபேஸ் செய்யனம், அல்லெங்கில் வீட்ல பரயணும். ரெண்டுமே இல்லாதே கிளம்பிப் போயால் எந்தா அர்த்தம்? அவரு போயது சரியென்னு நீ மோட்டிவேட் செய்தா, இன்னும் தெற்றாய முடிவைத் தன்னே மனசு தேடும்.(விஷ்ணு அடிச்ச வருத்தத்துல ஏதோ ஒரு மைண்ட்செட் ஆகி தப்பான முடிவை எடுத்துட்டா என்னடி செய்வ? அவங்க வீட்ல இல்லைன்னதும் எனக்கு அந்தப் பயம் தான் வந்துச்சு. நான் திட்டி விட்டா, அந்தப் பயத்துலயாவது இனி இப்படி வெளிநடப்பு செய்யாம இருப்பாங்கன்னு தான் திட்டினேன். ஒன்னு போல்டா ஃபேஸ் பண்ணனும், இல்லன்னா வீட்ல சொல்லணும். ரெண்டுமே இல்லாம கிளம்பிப் போனா என்ன அர்த்தம்? அவங்க போனது சரின்னு நீ மோட்டிவேட் பண்ணுனா, இன்னும் தப்பான முடிவை தான் மனசு தேடும்)” என்றவனின் மூச்சிலும் கோபக்கனல் கலந்திருந்தது.
அவனது கூற்றில் பொதிந்திருந்த உண்மையை உணர்ந்து முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டவள், “சாரி…” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.
அவள் மன்னிப்புக் கேட்டதில் சட்டெனத் தணிந்தவன், “எந்தா பிரஸ்னம்?(என்ன பிரச்சினை?)” என வினவிட அவள் கையைப் பிசைந்தாள்.
“எந்து பிரஸ்னமான்னு(பிரச்சினைன்னு) கேட்டேன் மொழி?”
“இருடா. கேட்டதும் சொல்ல முடியுமா? எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு தெரியல” என்றவளுக்கு அவனிடம் இதை எப்படிப் பகிர்வது என்றே தெரியவில்லை.
அவனோ வெகு குழப்பமாக அமர்ந்திருக்க, “அது… அவங்களுக்குள்ள எல்லாம் ஓகேவா இருக்குனு உனக்குத் தோணுதா?” என வினவினாள்.
“இப்ப ரீசன்டாய் விஷ்ணு நடந்துக்குறதைக் கண்டால் ஏதோ மிஸ் அண்டர்ஸ்டான்டிங் உண்டோன்னு ஒரு உறுத்தல். அன்னைக்கே பரஞ்சில்லே ஏதோ சரி இல்லான்னு.”
“ப்ச்! இப்போ ரீசண்டா இல்ல, மேரேஜ் ஆன டே ஒன்ல இருந்தே எதுவும் சரி இல்ல அகன்.”
“மனசிலாயில்லா!(புரியல)”
“அது… உங்கிட்ட எப்படி இதை விலாவாரியா சொல்லன்னு எனக்கும் தெரியலடா” என்றாள் பரிதாபமாக.
“இப்ப நீ பரயான் போனோ இல்லியோ?(இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?)” வெட்டவா குத்தவா ரீதியில் அவளைப் பார்த்து வைத்தான்.
“ம்ம்ம்ம்… வந்து… என்னன்னா…” என இழுத்தவள், “ஹான்… இப்ப நீ நைட்டு ஸ்டாப் பண்றீல்ல. அவர் பண்ணல, அதான் பிரச்சினை!” என ஒரே வார்த்தையில் முடித்து வைக்க, அவனோ “எந்து ஸ்டாப் பண்றேன்?” என்றான் இன்னுமே குழப்பமாக.
“ஹையோ! உனக்குப் புளி போட்டு விளக்கணும் போலயே!” என நொந்தவள், “அதான்… பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் அப்போ…” எனத் தலையைக் குனிந்து கொண்டு கூறியதில் அவனுக்கு விஷயம் விளங்கியது.
ஆகினும், “சரி, இப்ப அதிலு எந்தா பிரஸ்னம்(பிரச்சினை)?” எனக் கேட்டதில், அவனை நிமிர்ந்து முறைத்தாள்.
“அது பிரச்சினை இல்லையா?” இப்போது அவள் விழிகளில் காட்டம் நிறைந்தது.
“அவருக்கு மேரேஜ் ஆகி ஆறு வருஷம் ஆகுந்து மொழி. அவருக்கு டிஸ்கம்ஃபர்ட்னா அதை விஷ்ணுவோடு பரயாம். இல்லெங்கில் வீட்டில் பெரியவங்ககிட்ட பரயாம். லவ் மேரேஜ் செய்தவரு…” என அவன் பேசிக் கொண்டே செல்ல அவள் காளி அவதாரமே எடுத்து விட்டாள்.
“என்னடா பைத்தியக்காரன் மாதிரிப் பேசிட்டு இருக்க… என் புருஷன் தினமும் என்னை ரேப் பண்றான்னு வீட்ல சொல்ல முடியுமா?”
“ஏய்! அறிவு கெட்ட தனமா சம்சாரிக்காதே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போலே. ஸ்டாப் செய்தில்லெங்கில் கெட்டவன், ரேப்னு பரயனதை என்னால் அக்செப்ட் பண்ணிக்க முடியாது”
“அப்படியா? அப்போ ப்ளீடிங் ஆனாலும், எவ்ளோ வலிச்சாலும், எனக்கு ஹார்ட் செக்ஸ் தான் முக்கியம்னு அவங்க கூட லவ் மேக் பண்ணாம, வெறும் லஸ்ட்டை மிருகத்தனமாய் கொட்டுறது சரியோ?” என்றவளின் கூற்றில் மெல்ல அதிர்ந்தான்.
“சரிப்பா, இதெல்லாம் வேணாம். மேரேஜ் ஆகி வெறும் பதினெட்டு நாள்ல நீ எப்படி கன்சீவ் ஆனன்னு கேட்ட புருஷன் ரொம்ப உத்தமனோ? உன் அண்ணன் அந்தக் கேள்வியைத் தான் கேட்டிருக்கான். இன்னும் என்ன என்ன கேட்டானோ, அவ பாதி முழுங்கித் தான சொன்னா.
சரி அதையும் விடு… என்னோட மேரேஜ் லைஃப்ல ஹேப்பினஸ் போகுதுன்னு அமையாவை அபார்ட் பண்ணச் சொல்லிருக்கான். அன்வி அவன் சொன்னதைக் கேட்கலைன்னு சொன்னதும், கன்சீவ் ஆனதுல இருந்து அமையா பிறந்து மூணு மாசம் வரைக்கும் அவளைப் பார்க்கவே இல்லை.
கன்சீவ் ஆகி, அவன் முன்னாடி மயக்கம் போட்டு விழுந்தா கூட என்னன்னு கேட்காம எனக்கென்னனு இருக்குறதுலாம் லவ்வா? இப்படிப்பட்ட லவ் தான் லவ் மேரேஜ்ல கிடைக்கும்னா, எனக்கு வாழ்க்கைல லவ்வே வேணாம் சாமி!” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
பின் அவளே “சரி அதெல்லாம் கூட விடு. அமையா பிறந்து மூணு மாசம் கழிச்சுப் பொண்ணைப் பார்க்கப் போனவன், பொண்ணைத் தான பார்த்திருக்கணும். நார்மல் டெலிவரி ட்ரை பண்ணி அது முடியாம ரொம்ப கஷ்டப்பட்டு சி செக்க்ஷன் பண்ணுன பொண்ணுகிட்ட அவள் உடம்பைப் பத்தி விசாரிக்காம, அவள் உடம்புல இருந்து அவனுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்க, அப்பவும் மிருகத்தனமா முயற்சி செஞ்சதுக்குப் பேர் ரேப் இல்ல, அப்படித் தான?
வீட்ல சொல்லணும், வீட்ல சொல்லணும்னு சொல்ற… வீட்ல என்ன சொல்லச் சொல்ற அகன். நீயே இவ்ளோ கேள்வி கேட்கும்போது அவங்க கேட்க மாட்டாங்களா? முதல்ல அவ என்னனு சொல்லுவா? சரிப்பா அப்படியே அவ சொல்றான்னே வச்சுப்போம். உன் வீட்ல விஷ்ணுவை நாலு திட்டு வேணா திட்டுவாங்க. அப்புறம், அவள் திரும்ப அவன் கூடத் தான வாழனும்?
ஒரு பொண்ணைக் கஷ்டப்படுத்துறான்னு உன் பேரன்ட்ஸ் ஒன்னும் விஷ்ணுவை வெறுத்து ஒதுக்கப் போறது இல்லைல.
இவ்ளோ ஏன், நீ என்னை ஏமாத்திட்டன்னு தான நான் உன் வீட்ல வந்து சொன்னேன். உன்மேல உன் அம்மா கோபப்பட்டாங்க, பேசாம இருக்காங்க தான். ஆனா கடைசியா உன்னைத் தான எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.
கல்யாணத்துக்கு அப்புறமும் நீ என்னை ஏமாத்துவியா, மாட்டியான்னு அவங்க யோசிக்கல. என் வீட்லயும் அதே தான். இந்த பேரண்ட்ஸோட மெண்டாலிட்டியே, பசங்க தப்பே பண்ணாலும் அவங்க லைஃப் பாதிக்கப்படக் கூடாதுன்றது தான். வீட்ல சொன்னா கூட அவளுக்கு எந்த நியாயமும் கிடைக்கப் போறது இல்ல.
லவ் பண்ணியாச்சு, கல்யாணம் பண்ணியாச்சு, குழந்தையும் பெத்தாச்சு. இனி கேவலம் இந்தச் சந்தோஷத்துக்காகக் குடும்பத்தை உடைக்கக் கூடாதுன்னு அவள் மனசுக்குள்ளயே புழுங்கிட்டு, காலம் முழுக்க உன் வீட்ல ஒரு ஓரத்துல இருந்துகிட்டா நீங்க எல்லாரும் அவளுக்கு அவார்ட் தூக்கிக் குடுக்கப் போறீங்களா?” மூச்சு வாங்கிப் பேசி முடித்தவளுக்கு இன்னும் கோபம் தீர்ந்த பாடில்லை.
அர்ஜித் அகன் சிலையாக அமர்ந்திருந்தான். அகமொழியின் கூற்றில் இருந்த உண்மை சுட, பிரச்சினையின் வீரியம் அறிந்தவனுக்குத் தலையே சுற்றியது.
தான் பேசியதில் இருந்த அசட்டுத்தனமும் உறைக்க, “சாரி…” என்றான் மெதுவாக.
அவன் மன்னிப்பு வேண்டியதாலோ என்னவோ, சட்டென அவளுக்கும் கோபம் தணிந்தது.
“இதெல்லாம் ஏடத்தி பரஞ்சுவோ (சொன்னாங்களா) மொழி?” அவனிடம் வருத்தம் தெளிவாய் தெரிய, “ம்ம், அவங்க சொல்லாம எனக்கு எப்படித் தெரியும் அகன்… நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. ஷீ டிசர்வ் பெட்டர் லைஃப்” என்றவளைப் பெருமூச்சுடன் பார்த்தான்.
“எனிக்கு ஒந்தும் மனசிலாயில்லா” தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனின் அருகில் ஒட்டி நகர்ந்தவள், “பாவம்டா… உண்மையாவே ரொம்பக் கஷ்டப்படுறாங்க. உன் அண்ணா ரொம்ப ஹர்ட் பண்றாங்க.” என்றாள் வருத்தமாக.
“ஆனா இத்தர பிரைவேட் விஷயத்தை ஏடத்தி நின்னோடு மாத்திரம் எங்கனே ஷேர் செய்தது?” அர்ஜித் நிமிர்ந்து வினவ, “என் முக ராசி அப்படி மிஸ்டர் மலையாளி…” எனக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவளை முறைத்தான்.
“அது… சும்மா ஜெனரலா பேசிட்டு இருக்கும்போது…”
“இது ஜெனரலா பேசுற விஷயமா?” ஒற்றைப் புருவம் உயர்த்தியதில் அசடு வழிந்தவள்,
“ஹிஹி… எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் ஆச்சே, டிப்ஸ் கேட்கலாமேன்னு போனேன்…” என நெளிந்தாள்.
அதில் கனிந்தவன், “அந்த டிப்ஸை நீ என்னோடு தன்னே சோதிச்சிரிக்காம்.(அந்த டிப்ஸை என்கிட்டவே கேட்டிருக்கலாம்)” என முணுமுணுத்ததில் சிவப்பு ரேகைகள் அவள் கன்னத்தில்.
இருப்பினும் அவன் தோளில் அடித்தவள், “அடப் போடா. டிப்ஸ் கேட்கப் போன என் தலைல இவ்ளோ பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுட்டா. நைட்டெல்லாம் தூக்கமே வரலை தெரியுமா? ஒரே தலைவலி. ஆன்சைட்டி குறையும்னு பார்த்தா அதிகம் தான் ஆகியிருக்கு.” இறுதி வரியை மெதுவாகக் கூற,
“அதான், ராவிலே தலைவலின்னு உக்காந்திருந்தியா?” மென்மையாகக் கேட்டதில் “ம்ம்ம்” எனத் தலையாட்டினாள்.
பெருமூச்சு விட்டவன் நெற்றியைத் தேய்த்தான்.
“ஞான் விஷ்ணுவோடு சம்சாரிக்காம். அவனுக்கு எந்து தன்னே பிரஸ்னமெந்து சோதிக்காம்.(அவனுக்கு என்ன தான் பிரச்சினைன்னு கேக்கலாம்)” அவனே சொல்ல,
“அவர்கிட்டப் பேசி? அவர் அதுக்கு ஒரு நியாயம் சொன்னா என்ன செய்வ?” மீண்டும் மெல்லக் கோபம் துளிர்த்தது.
“எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவு எடுக்கான் பற்றில்ல மொழி. எந்தெந்து ரெண்டு சைடும் சோதிச்சிட்டுப் பொறுமையாய் தன்னே ஹேண்டில் செய்யான் பற்றுள்ளு(பொறுமையா தானே ஹேண்டில் செய்ய முடியும்?)”
“ஹான், நீ பொறுமையா யோசிச்சு முடிவு எடுக்குறதுக்குள்ள அன்விக்கு வயசாகிடும். அவளுக்கே இந்த லைஃப் பிடிக்கலைங்கும் போது, விஷ்ணு ஏதாச்சும் சப்பை ரீசன் சொன்னா அதை வச்சு அவளைச் சமாதானம் பண்ணி மீதிக் காலத்தை ஓட்ட வச்சுடலாமா?” என்றாள் எரிச்சலாக.
அதில் அவன் முகத்திலும் கோபமும் கண்டிப்பும் வழிந்தது.
“பிராந்தி மாதிரிப் பேசாதே காந்தாரி. இப்ப எந்தா நைட்டோட நைட்டாய் போயி டிவோர்ஸ் வாங்காமோ? எந்து ரீசன் பரயும்? ஈ ரீசன்னு பரஞ்சால் விஷ்ணுவே அக்செப்ட் செய்யில்லா. பர்ஸ்ட் அவன் கேட்டதும் டைவர்ஸ தூக்கித் தருமோ? நிறைய சட்டச் சிக்கல் இண்டு(இருக்கு).
அவன் பிடிவாதம் பற்றி எனிக்கு அறியாம்(தெரியும்). ஒன்னு விசாரிச்சா(நினைச்சா) அதை நடத்தியே தீருவான்.
டிவோர்ஸ் கொடுக்கான் பாடில்லாந்து முடிவு செய்தால், ஏடத்தியைக் கூடே வாழானும் விடாதே, தள்ளிப்போய் தனியே வாழ்க்கையைத் தொடங்கானும் விடாதே செய்தால் எந்து செய்யும்?(டிவோர்ஸ் குடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணுனா, ஏடத்தியை கூடவும் வாழ விடாம தள்ளிப்போயும் தனி வாழ்க்கையை தொடங்க விடாம செஞ்ச என்ன செய்வ?)
ஆத்யம்(முதல்ல) என் வீட்டில் சம்சாரிக்கணம். அவருக்கு புரிய வைக்கணம். இத்தர வருஷம் ஒரு வீட்டில் மருமகளாய் வாழ்ந்த பெண்ணு.
விஷ்ணுவினு எங்கனயோ(விஷ்ணுக்கு எப்படியோ), என்டெ வீட்டில் இரிக்கன பெரியவங்க நாலு பேருக்கும் ஏடத்தின்னா உயிர்.
நீயே பரஞ்சில்லே, எல்லா பேரண்ட்ஸும் அவங்க அவங்க பசங்க நல்லதை தன்னே யோசிப்பாங்கன்னு. அப்போ இதைப் பற்றி வீட்டில் பரஞ்சால் கூட அவங்க சமாதானம் செய்து வாழ வைக்கான் தன்னே யோசிப்பாங்க.
அதினு மேலே ஞான் இடைல புகுந்து டைவர்ஸ் செய்யனம்னு பரஞ்சா, ‘அவளே சும்மா இரிக்குனு(இருக்கா), நீ எந்தினு(எதுக்கு) குடும்பத்திலு பிரச்சினை செய்யன’ந்து ஏடத்தி பேரண்ட்ஸ் கூடே என்னோடு சண்டைக்கு வராம்.
எல்லாற்றினும் மேலே அமையா… அவள் ஒந்தும் குழந்தை இல்ல. ஒரு ஃபேமிலி என்விரான்மெண்ட்ல இரிக்கன(இருக்குற) பெண்ணு. திடீர்னு இது எதுவும் நினக்கு சொந்தம் இல்லாந்து பரஞ்சா அவள்டெ மனநிலையை ஹேண்டில் செய்யான் நம்மள் ஃபர்ஸ்ட் ரெடியாய் இரிக்கனம். (திடீர்னு இது எதுவும் உனக்கு சொந்தம் இல்லைன்னு சொன்னா அவளோட மனநிலையை ஹேண்டில் பண்ண நம்ம ஃபர்ஸ்ட் ரெடியா இருக்கனும். )
அதுக்கு ஏடத்தியும் தன்னே தயார் செய்யணம்.
சும்மா கோச்சுட்டு கிளம்பிப் போனதும் சண்டை போடனதும் மட்டும் ஏது பிரஸ்னத்தினும் தீர்வு இல்லா. முதல்ல விஷ்ணுட்ட சுமூகமா பேசி நோக்கணம். எடுத்ததும் அவன்கிட்ட எகிறியால், ஆ கோபம் ஏடத்தி மேலே தன்னே திரும்பும். அவருக்கு தான் அது காம்ப்ளிகேட் ஆகும். (சும்மா கோச்சுட்டு கிளம்பி போறதும் சண்டை போறதும் மட்டும் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்ல. முதல்ல விஷ்ணுட்ட சுமூகமா பேசிப் பார்க்கணும். எடுத்ததும் அவன்கிட்ட எகிறினா, அந்தக் கோபம் ஏடத்திட்ட தான் திரும்பும். அவங்களுக்கு தான் அது காம்ப்ளிகேட் ஆகும். )
அவனுக்கு மேரேஜ்னா, எந்தா அர்த்தம்னு நினைச்சுட்டு இருக்கான்னு தெரியல. இடியட்! அண்ட் இது எல்லாற்றினும் மேல ப்ரணீ…
ஏடத்தி ஹர்ட் ஆயிரிக்கினு அறஞ்சாலே(தெரிஞ்சாலே) அவன் ரொம்ப வேதனைப்படுவான். அவனை ஃபேஸ் செய்யான் எனிக்கு ஆத்யம்(முதல்ல) தைரியம் வேணம். இதெல்லாம் விட்டுட்டு தேஷ்யத்தில்(கோபத்தில்) முடிவு எடுத்துட்டா, பின்னே வரன பிரச்சினையை ஃபேஸ் செய்யான் நமக்கு கோபம் மட்டும் தன்னே மிஞ்சும். சொலியூஷன் கிட்டில்லா(முடிவு கிடைக்காது)…” என்று திட்டவட்டமாகத் தெளிவாகப் பேசியவனை அயர்ந்து பார்த்திருந்தாள் அகமொழி.
சர்வ நிச்சயமாக அவனிடம் இப்படி ஒரு புரிதலையும், தொலைநோக்குப் பார்வையையும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“மறுபடியும் சாரி…” தலையைக் குனிந்து அவள் கூறியதில் தணிந்தவன்,
“எனிக்கும் ஏடத்தியுடே கஷ்டம் மனசிலாவுந்து(புரியுது) காந்தாரி. விஷ்ணு செய்யனது ரொம்பவே தப்பு தன்னே.
அவனைத் தூக்கி போட்டு மிதிக்கன(மிதிக்க) அத்தர எனிக்கு தேஷ்யம்(கோபம்) உண்டு. பட்சே, இப்ப நிதானமாய் இரிக்க வேண்டிய சிச்சுவேஷன். ஒருவேளை, விஷ்ணு சுமூகமாய் பேசியும் அவங்களை ஹர்ட் தன்னே செய்யுவானெங்கில், அதை நோக்கியிட்டு ஞானும் சும்மா இரிக்க மாட்டேன்.
என் அண்ணனை விட எனிக்கு ஏடத்தி முக்கியம். பிகாஸ் அவங்க வருத்தப்பட்டா, ப்ரணீ ரொம்ப ஹர்ட் ஆவான். எனிக்கு அவற் ரெண்டு பேரை விட ப்ரணீ முக்கியம்!” என்றவனை விழிகளை அசைக்காது தன்னை மறந்து பார்த்திருந்தாள் அகமொழி.
“பட், எந்து ஆயாலும் சரி… ஒருவேளை டைவர்ஸ் அளவுக்குப் போயாலும் கண்டிப்பா ஏடத்தியை ஞான் விடமாட்டேன்.” என்றவனிடம் வேகமாக,
“அதை தான் நானும் அன்விட்ட சொன்னேன். என்ன ஆனாலும் அகன் பார்த்துப்பான்னு. டைவர்ஸ்க்கு அப்புறம் அவள் வீட்டுக்கும் போக முடியாது, இங்கயும் இருக்க முடியாதுனு அவள் பொறுத்துட்டுப் போக வேண்டியது இல்லைல. நீ அப்படி எல்லாம் அவங்களை நடுரோட்டுல விட மாட்டன்னு நான் சொன்னேன் அகன். அப்படியே நீ விட்டா கூட அவளை நான் விட மாட்டேன். இப்ப அவள் என்னோட டியர் ப்ரெண்ட் ஆகிட்டா தெரியுமா…” எனத் தலையாட்டிக் கூறியதில், இப்போது இமைகள் இமைக்க மறந்தது அவன் முறையாகிற்று.
“அவங்க எனிக்கு ஏடத்தி, நினக்கு அவங்க யாரோ அல்லே… அவருக்காக நீ எந்தினா இத்தர மெனக்கெடுந்தது காந்தாரி…” அக்கேள்வியில் ரசனை பொங்கியது.
“எனக்கு அவங்க என் புருஷனோட ஏடத்தி… அப்போ எனக்கும் சொந்தம் தான. அப்புறம் எப்படி யாரோவாக முடியும்?” இடுங்கிய புருவத்துடன் எதிர்கேள்வி கேட்டவளின் மீது மொத்தமாகச் சரிந்தே விழுந்தது ஆடவனின் மனம்.
அவர்கள் வீட்டை அடையவே இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆனது.
அனைவருமே அசதியில் உறங்கச் சென்று விட, அர்ஜித் அகனும் படுக்கையில் விழுந்தான்.
அவளுக்கு ஆரம்பித்த தலைவலி இப்போது அவனைத் தொற்றிக் கொண்டது பாவம்.
நெற்றியைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தவனைப் பார்க்கப் பாவமாக இருக்க, “தைலம் வேணுமா மிஸ்டர் மலையாளி?” என வினவினாள் சின்னக் கிண்டலுடன்.
“எஸ் ப்ளீஸ்!” அவன் மூக்கைச் சுருக்கிக் கூறிய தொனியில் சிரிப்பு வர, அவளே தைலத்தை எடுத்து அவனுக்குத் தேய்த்து விட்டாள்.
“ரொம்ப யோசிக்காத அகன்… எதுவா இருந்தாலும் விடிஞ்சதும் பார்த்துக்கலாம். இப்பத் தூங்கு…” என்று அவளும் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொள்ள, உருண்டு வந்து அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
நெற்றியை அவளது முதுகில் வைத்து அழுத்திய விதமே, இன்னும் மனத்தினுள் உழல்கிறான் எனப் புரிய வைத்தது.
இதில் நிச்சயம் அதிகப் போராட்டம் அவனுக்குத் தான். தமையனா? அண்ணியா? நண்பனா? என்ற பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகப் போகிறானென்ற வருத்தம் தாக்க அவன் புறம் திரும்பிப் படுத்தவள், அவனைத் தனது நெஞ்சில் போட்டுக் கொண்டாள்.
“எல்லாம் சரி ஆகிடும் அகன்…” என அவன் கேசத்தைக் கோதி விட்டபடி மென்மையாகக் கூற, “ம்ம்ம்” என்றவனின் குரலிலேயே சோர்வு அப்பட்டமாகத் தெறித்தது.
அவன் நாடியை நிமிர்த்தி நெற்றியின் மத்தியில் முத்தமிட்டவள், “நான் இருக்கேன்ல, ரெண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம். ஓகேவா?” என்றாள் கொஞ்சலாக.
“இங்கனே(இப்படியே) இருப்பியா?” அவன் விழி நிமிர்த்திக் கேட்க,
“நீ இப்படியே இருந்தா நானும் இப்படியே இருப்பேன்…” எனக் கண் சிமிட்டியதில் அவனிடம் சின்னப் புன்னகை.
நிமிர்ந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு, “ஞான் இதே போல எப்பவும் நல்லவனா இருக்க மாட்டேன் காந்தாரி…” எனக் குறும்பாய் மூக்குரசிக் கொஞ்சி விட்டு, அவள் நெஞ்சத்தையே மஞ்சமாக்கி உறங்கி விட, அவனது நெருக்கத்தில் தானும் சுகமாய் கண்ணயர்ந்தாள் அகமொழி.
இருவர் இதயத்திலும் நேசச் சாரல் சுகமாய் வீசிட, அதே மனநிலை மறுநாள் கிளாம்பிங் செல்லும் வரைக்கும் இருந்தது. ஆனால், அங்குத் தனது கனவு மொத்தமும் தகர்க்கப்படுவது போல, அவளது கிளாம்பிங் எல்லாம் ஜேசிபிக்கு இரையாவதைக் கண்டு உறைந்து போனாள் அகமொழி.
தீர்வுகள் அடங்கிய நேசம் தான்… தீர்க்கப்படாமலே ஆகிவிடுமோ?
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
89
+1
5
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விஷ்ணு பார்த்த வேலையா?😡
அகாவோடதை விஷ்ணு தான் இடிக்க சொல்லி இருப்பானா?.