Loading

அத்தியாயம் 30

அர்ஜித்திற்கும், தனக்கும் ஆரம்பம் முதல் நிகழ்ந்த வாக்குவாதங்களை எண்ணிக் கொண்டே, ஹில்மிஸ்ட் ரிசார்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் அகமொழி.

அவனைப் பற்றிய தவறான வீடியோவை வெளியிட்டதால் தான், அவன் கோபமுற்று இப்படி நடந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அவளுக்கு மாறவில்லை. அவன் வாயால் அதனைச் சொல்லக் கேட்டால், நண்பர்களும் அவனைப் புரிந்து கொள்வார்கள் என்ற ஆர்வம்.

ரிஷானின் காரிலேயே தான் மூவரும் சென்றனர். ரிஷான் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்தான்.

அவள் கழுத்தை அலங்கரித்திருந்த பொன்தாலியைக் கண்டு நெஞ்சில் வலியும் பரவியது.

“அந்தக் கேரளாக்காரன் எதுக்காக நம்ம நிச்சயத்துல அப்படிப் பேசுனான்?” வாயைத் திறந்து கேட்ட ரிஷானைத் திரும்பிப் பார்த்து இலேசாக முறைத்தவள், “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட” என்றதில்,

“இல்ல, அன்னைக்கு அப்பாட்ட சண்டை போட்டு நான் பாதி வழில வர தான் நினைச்சேன். அவர் விடவே இல்ல அகா… ஆனாலும் அன்னைக்கு நான் உன்னை நம்பிருக்கணும், சாரி!” என்றான் உர்ரென்று.

“சரி விடு. இட்ஸ் ஓகே!” இயல்பாக மன்னித்து விட்டாள்.

அவன் சென்றதற்காகக் கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை. அதுவே அவனை அதிகம் வருத்தியது.

“அந்த விஷ்ணுவை சும்மா விடக்கூடாது. பார்த்துக்குறேன் அவனை…” என்று கறுவிக்கொண்டே வந்தவளைப் பார்த்த ரூஹி,

“உனக்கும், கேரளாக்காரனுக்கும் எப்படிடி கல்யாணம் நடந்துச்சு?” என வினவினாள்.

“அவன் தேவையில்லாம என் நிச்சயத்தை நிறுத்தினான்ல. அந்தக் கோபத்துல நான் அவன் நிச்சயத்தை நிறுத்திட்டேன். கடைசில கல்யாணத்துல வந்து விட்டுடுச்சு இந்தக் கலவரம்…” என்றவளுக்குச் சின்னப் புன்னகையும் பரவியது.

அது சில நொடிகளில் கரைந்து விட, “இப்ப என் அப்பா வேற இப்படிச் சொதப்பி வச்சிருக்காரு. ப்ச்!” என்றவளுக்கு மீண்டும் கண்ணீர் ஊறியது.

ரிஷான் “ஏதாச்சும் ஆல்டர்நேட் யோசிக்கலாம் அகா… வேற வழி இல்ல. ஆனா, நீ ஏன் அவனைப் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட” என ஆதங்கமாகக் கேட்கும்போதே ரிசார்ட் வந்திருந்தது.

தனது தொழிலைப் பற்றிய எண்ணத்தில் உழன்றவளுக்குத் தற்போது அவனுக்குப் பதில் சொல்லும் அளவு பொறுமை இல்லை.

அர்ஜித் அகனின் அறை நோக்கிச் செல்ல, அவன் இல்லையென்றதும், அறைக்கு வெளியே இருந்த காரிடோர் பால்கனியில் நின்றனர் மூவரும்.

அப்போது தான் அவளைத் தேடி அங்கு நயனா வந்தாள்.

“ஹாய் மேம்… நீங்க அர்ஜித் சார் வைஃப் தான?” எனக் கேட்டதில், “ம்ம்ம் ஆமா!” எனக் கம்பீரமாக உரைத்தாள் அகமொழி.

“அது… சார்கிட்டயே குடுக்கணும்னு நினைச்சேன். இன்னைக்கு மார்னிங் இயர்லியாவே சார் வந்துட்டாரு. வந்து… என் ரூம்ல தான் இருந்தாரு. அங்க அவரோட ஷர்ட்டும், வாட்சும் விட்டுட்டுப் போயிட்டாரு” எனக் கொடுக்க ரிஷானும், ரூஹியும் திகைத்து விட்டனர்.

“நான் தான் சொன்னேன்ல!” ரூஹி கடுகடுத்தாள்.

தோழியின் வாழ்வை எண்ணிப் பரிதவிப்பும் வந்தது. ‘தான் நிச்சயத்தை நிறுத்திய கோபத்தில் அவள் அவசரப்பட்டு அவனைத் திருமணம் செய்து விட்டாளோ?’ என்றே ரிஷானுக்கும் குற்ற உணர்வு பரவியது.

அகமொழி சுருங்கிய புருவத்துடன் அந்தச் சட்டையை வாங்கினாள்.

அது அர்ஜித் அகனுடையது தான். அவனது சந்தன அத்தரின் வாசம் நாசிக்குள் எப்போதும் போலவே இறங்கியது.

நயனா கொடுத்து விட்டு மேலும் சில நொடிகள் பேசி விட்டு நிற்காமல் சென்று விட, மீண்டும் ரிசார்ட்டிற்கு வந்த அர்ஜித் தனது அறைக்குச் செல்லும்போதே ரிஷான் விறுவிறுவென அவனருகில் சென்று பிடித்து விட்டான்.

“என்ன இதெல்லாம்?” அவனது கடிகாரத்தைக் காட்டிக் கேட்க,

ரிஷானை விழி இடுங்கப் பார்த்தவன், “கண்டால் அறியில்லே? பார்வை போயோ?(பார்த்தா தெரியல. பார்வை போயிடுச்சா)” என்றான் பரிதாபமாக. சற்றே தள்ளி பால்கனியில் நின்றிருந்த அகமொழியை அவன் கவனிக்கவில்லை.

“எனக்குப் பார்வை நல்லா தான் இருக்குங்க. உங்களுக்குத் தான் பார்வை இருக்கான்னு தெரியல. ஏதேதோ காரணத்துக்காக என்னையும் அகாவையும் பிரிச்சுட்டீங்க. இப்ப அவளை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி, இப்போ அவளுக்குத் துரோகம் பண்றது எந்த விதத்துல நியாயம்?”

அர்ஜித் இன்னுமாக விழிகளைச் சுருக்கினான்.

“நின்னை ஞான் ஒந்தும் பிரிக்கலையே. நீயாய் தன்னே எங்கேஜ்மென்ட நிறுத்திட்டுப் போயது…” அழுத்தமாகக் கூறியவனைக் கண்டு மெல்ல அதிர்ந்தவன்,

“ஆமா, தப்பு என்மேல தான்! நான் நம்பிருக்கணும். நம்பல. இப்ப நீ என்ன பண்ற? அவளை ஏமாத்தத் தான செய்யற. அவளைக் கல்யாணம் பண்ணிட்டு இன்னொருத்தி கூட இருக்குறது உனக்கு அசிங்கமா இல்ல…” என ரிஷான் கத்தினான்.

“என்னைச் சோத்யம் செய்யான் (கேள்வி கேட்க) நீ யாரு?”

“நான் அகாவோட ப்ரெண்ட், அவளுக்கு ஒண்ணுன்னா நான் கேள்வி கேட்பேன்.”

“அன்னைக்கு எந்தா (ஏன் கேட்கல) சோதிச்சில்லா?” ஒற்றைப் புருவத்தை நக்கலாய் உயர்த்தினான்.

தடுமாறிய ரிஷான் கண்ணை மூடித் திறந்து, “மே பி, அவளுக்கு நான் நல்ல லவரா இல்லாம இருக்கலாம். அட்லீஸ்ட் நல்ல பிரெண்டாவாவது இருக்கணும்னு நினைக்கிறேன். அவளுக்கு ஒண்ணுன்னா நான் வந்து கேட்கத் தான் செய்வேன். நீ இங்க வேலை பார்க்குற பொண்ணோட இருந்தது உண்மை தான?” என்று கோபமாகக் கேட்டான்.

அந்தச் சட்டையையே சில நொடிகள் வெறித்த அகமொழி, அதன்பிறகே ரிஷானின் சத்தம் கேட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தாள்.

“அதே, ஞான் இன்னொருத்தி கூட இருந்தேன், எந்தா செய்யான் போன? (என்ன செய்யப் போற)” என்று எரிந்து விழுந்து விட்டுத் திரும்பியவன், அங்கு அகமொழியை எதிர்பார்க்கவில்லை போலும்.

அவளது சலனமற்ற பார்வை கண்டு சற்றே திகைத்தான்.

ஏற்கெனவே தன்மீது அவளுக்கு இவ்விஷயத்தில் நல்ல அபிப்ராயம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். இப்போது, தானே தனது வாயால் சொல்லி விட்ட மடத்தனத்தை எண்ணி நொந்தவன், அவளிடம் எப்படிப் பேசத் தொடங்குவது எனத் தெரியாமல் சில நொடிகள் தயங்க, அவள் அந்தச் சட்டையை அவன் கையில் திணித்து விட்டு விறுவிறுவென வீட்டிற்குச் சென்று விட்டாள்.

அங்கோ அகமொழியைக் கண்டதும் சுஜாதா நிறுத்தினார்.

“அகா… ஒரு நிமிஷம், நின்னோடு சம்சாரிக்கணம்!” என்றதில், அவள் “என்ன அத்தை?” என வினவினாள்.

சற்றுத் தயங்கியவர், “இந்தலே (நேத்து)விஷ்ணுவினும் அன்விக்கும் ஏதோ பிரஸ்னம் (பிரச்சினை) போல இருக்கு.” என்றதில், அவள் தெரியும் என்பது போலப் பார்த்தாள்.

“நீயானோ அன்வியை சண்டை இடான் பரஞ்சது?”

அவரைக் கூர்ந்து நோக்கியவள், “ஆமா… எல்லா விஷயத்துக்கும் பொறுத்துப் போகணும்னு…” அவள் சொல்லி முடிக்கும் முன்,

சுஜாதா கோபமாக, “இதோ நோக்கு அகா… புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ இனி அன்வி விஷயத்தில் தலையிடாதே. அவருக்கு அறியும் ஏது பிரஸ்னத்தை (பிரச்சினையை) எங்கனே சமாளிக்கணம்னு. நீயும் அர்ஜியும் கல்யாண விஷயத்தில் ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்திய மாதிரி தயவு செய்து இதுலயும் செய்யண்டா…” எனக் கையெடுத்துக் கும்பிட்டவரைத் திகைப்பாகப் பார்த்தாள்.

“அதில்ல அத்தை…”

“ஆத்யம் நீ நின்டெ வாழ்க்கையைப் பாரு. பின்னே அடுத்தவங்களுக்கு அட்வைஸ் செய்யான் போகாம். அர்ஜியோடும் பரயு… விஷ்ணு ஸ்னேஹிச்சாலும் (காதலிச்சாலும்) அதை மரியாதைக்கு வீட்டில் வந்து பரஞ்சு, அவளைக் கல்யாணம் செய்து… ஏது விதத்தில் அர்ஜிக்கு ஞான் ஒழுக்கத்தைப் பரஞ்சு கொடுக்காதே போயெந்து அறியில்லா…” என முகத்தில் அடித்தவாறு கூறிட,

“தேவையில்லாம அகன் பத்திப் பேசாதீங்க அத்தை… ஒழுக்கத்தைப் பத்தி யார்கிட்டப் பேசணுமோ அவங்ககிட்டப் பேசுங்க.” அகமொழி சீறும்போதே விஷ்ணு விறுவிறுவென வெளியில் வந்தான்.

“எந்தா, ஞானும் பார்த்துட்டே இருக்கேன், எதிர்த்து எதிர்த்துப் பேசிட்டு இரிக்கன?” அகமொழியிடம் சண்டைக்கு வந்தான்.

“நான் எதிர்த்துப் பேசல. உள்ளதைத் தான் பேசுறேன் விஷ்ணு” இந்தக் கலவரம் நிகழும்போதே மொத்தக் குடும்பமும் கூடி விட்டது. அமையாவிற்குச் சளி அதிகம் இருந்ததால், நெபுலைசர் வைப்பதற்காக அன்விதா அமையாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றிருந்த நேரம்.

அனகாவும், கல்லூரிக்குச் சென்றிருக்கப் பெரியவர்கள் மட்டுமே இருந்தனர்.

“எந்து (என்ன) உள்ளதைப் பேசன? நிண்டெ பிசினஸ் பெருசு பண்ணான் அல்லே, நிண்டெ நிச்சயத்தை நிறுத்திட்டுப் பணக்காரனாய் நோக்கிக் கல்யாணம் செய்தது. இதே அர்ஜிட்ட காசு இல்லாதே இருந்தா, அவன் ஏமாத்திட்டான்னு வந்து நின்னிரிக்கோ?” விஷ்ணு கொந்தளித்தான்.

“என் பிசினஸை நாசமாக்கிட்டு உன் இஷ்டத்துக்குப் பேசாத விஷ்ணு.”

“ஓ… ஞான் நாசமாக்குனேனா? அதுசரி… நின்டெ கிளாம்பிங்கை அவன்டடுத்து இருந்து காப்பாத்தான் அல்லே, நின்னையே அவனுக்குத் தார வார்த்துக் கொடுத்தது. இப்போ நின் கிளாம்பிங்க இடிச்சதும் அவன் தன்னே(அவன் தான). நினக்கு ரோஷம் இருந்திருந்தா இந்நேரம் நீ கிளம்பி போயிரிக்கண்டே(போயிருக்கணும்). எந்தினு (எதுக்கு) மறுபடியும் வந்தது? அவன்டெ காசுக்காக அல்லே. அது போயாலும், அதே போல பத்து கிளாம்பிங்கை அவனால உருவாக்க முடியம்னு அறஞ்சு அல்லே வந்தது…”

“என் புருஷன் வீட்டுக்கு நான் வந்திருக்கேன். இங்க ஏன் வந்தன்னு கேள்வி கேட்க உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல விஷ்ணு…” மரியாதை எப்போதோ காற்றில் பறந்திருந்தது.

“புருஷனா? அவன் கொடுத்த நகைக்கு வேண்டி அல்லே பல்லிளிச்சிட்டு இவிடே வந்து இரிக்கனது?” விஷ்ணு எகத்தாளமாகக் கேட்க,

அவனைக் கண்ணைச் சுருக்கி ஏறிட்டவள், “ஆமா… நான் காசுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நகையெல்லாம் வாங்கிக் குடுத்ததுனால தான், அவன்கூட இருந்தேன்… போதுமா…” என அவள் எரிச்சலுடன் கூறி விட்டுத் திரும்ப, அப்போது தான் அகமொழியிடம் பேசும் பொருட்டு வீட்டினுள் நுழைந்த அர்ஜித் அகன், அவளது இறுதி வரியைக் கேட்டு அப்படியே நின்றான்.

அகமொழிக்கு அவனைக் கண்டதும், உலகமே சுற்றுவது நின்ற நிலை.

அவளே பலமுறை அவன் கொடுத்த நகை மீது பேராசை போலப் பேசி வைத்திருக்கிறாள் தானே!

என்ன நினைத்திருப்பான்? ஏதேதோ யோசனை நொடி நேரம் வந்து செல்ல, அர்ஜித் அவளை அமைதியாகப் பார்த்து விட்டு வந்த வழியே சென்று விட்டான்.

அதன்பிறகு விஷ்ணு கூறிய எதுவும் காதில் விழவில்லை. பேயறைந்தது போலத் தனது அறைக்குச் சென்றவள், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

இங்கு காரைத் தீ வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்த அர்ஜித் அகனும், ஸ்டியரிங் வீலை நறுக்கெனக் குத்தினான்.

அவள் முன்னே இன்னொருத்தியுடன் இருந்ததாகப் பேசியதை, அவளுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று அவனுக்கும் தெரியவில்லை.

சீட்டின் பின்னால் தலையைச் சாய்த்துக் கண்ணை மூடி நிதானித்தவனுக்கு இனி அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற முடிவு தோன்ற, காரை மீண்டும் கிளப்பிச் சென்று நேராக அகமொழியின் வீட்டு வாசலில் நிறுத்தினான்.

அங்கு ரிஷானும், ரூஹியும் அர்ஜித் அகனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

“அவன் அகாவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிருக்கான். உங்களுக்கு நான் விட்டுப் போனது கோபம்னா, அதுக்காக அவனுக்கே கல்யாணம் வச்சிருவீங்களா? இப்ப எங்களுக்கு லைஃபும் போச்சு, கேரியரும் போச்சு.” என்று ரிஷான் ஆதங்கத்தில் கத்தினான்.

“எங்க முன்னாடியே இன்னொருத்தி கூட இருந்தேன்னு சொன்னான் ஆண்ட்டி. என்னதான் பிடிக்காத கல்யாணமா இருந்தாலும், அவளுக்கும் வலிச்சிருக்கும்ல.” என்று ரூஹி அழுகுரலில் கூறியதும் பாஸ்கருக்கும் மனம் அதிர்ந்தது.

வசந்தி கையைப் பிசைந்து பதறும்போதே வாசலில் நிழலாடியதில் நிமிர்ந்தார்.

அர்ஜித் அகன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவர்கள் முன் நின்றிருக்க, நால்வரும் அவனை மெல்ல எழுந்த கோபத்துடன் பார்த்தனர்.

இங்கோ முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட அகமொழிக்கு, அனைத்தையும் சரி செய்தே தீர வேண்டுமென்ற அழுத்தம் நிறைந்தது.

அர்ஜித்தின் மீதிருக்கும் இந்தப் பொய் பழியால் அன்விதாவின் வாழ்விலும், சரியான முடிவு எடுக்கச் சிக்கல் ஏற்படும் என்ற உண்மை புரிந்தவள், மடமடவெனக் கீழிறங்கிச் சென்றாள்.

அங்கு இன்னுமே பெரியவர்கள் நால்வரும் ஹாலிலேயே இருக்க, விஷ்ணுவும் அங்கும் இங்கும் ஆத்திரத்துடன் அலைந்து கொண்டிருந்தான்.

மீண்டும் தங்கள் முன் வந்து நின்ற அகமொழியைக் கேசவ நாயர், “எந்தா?” எனப் பார்க்க,

“நான் உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும்.” என்றவள் கண்ணை இறுக்கி மூடித் திறந்து,

“அகன் மேல எந்தத் தப்பும் இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கும் அகனுக்கும் நடுவுல எதுவுமே இல்ல. அவர் நிச்சயத்துல வந்து நான் பொய் தான் சொன்னேன்… அவர் என்னை ஏமாத்தல.” என்றதும் நால்வரும் அதிர்ந்து விட்டனர்.

“எந்தா பரயுந்தது அகா…(என்ன சொல்ற அகா)” அவளைப் பிடித்து இழுத்து சுஜாதா கேட்க, கல்யாணிக்குச் சுறுசுறுவெனக் கோபம் எழுந்தது.

“எத்தர தைரியம் இருந்தால், ஞங்கள்டெ வீட்டுப் பையனைப் பற்றி சொந்தக்காரங்களைக் கூட்டித் தெற்றாய் (தப்பா) பேசி அசிங்கப்படுத்தி இரிக்கும். விஷ்ணு பரஞ்சப்ப ஞங்கள் விஸ்வசிச்சில்லா (நம்பல). பட்சே இங்கனே ஞங்கடெ அர்ஜியின் வாழ்க்கையை நாசமாக்கி இல்லே…”

அகமொழி பதில் பேசாது அசையாமல் நின்றாள். மறந்தும், அவன் தன்மீது பழி போட்டதால் தான் தானும் பழி போட்டதாகக் கூறவில்லை.

—-

அகமொழியை வற்புறுத்தி ரிஸார்ட்டிற்கு வரச் சொல்லிப் பழி போட்டது நான் தான் என்ற அர்ஜித் அகனின் கூற்றில் அகமொழியின் பெற்றோர் ஆடிப்போகினர்.

“என்ன சொல்ற?” பாஸ்கர் அர்ஜித்தின் சட்டையைப் பிடித்திருக்க,

“எல்லா தப்பும் என்டெ மேல தன்னே. அவள் மேல எந்தத் தப்பும் இல்லா!” என்றவனை பாஸ்கர் கன்னத்தில் அறைய வசந்தி தான் தடுத்தார்.

அதனை வாங்கிக் கொண்டு அசையாது நின்றவனிடம், “உங்களால எங்களுக்கு எவ்ளோ மனக்கஷ்டம்னு தெரியுதா தம்பி… இப்படி எங்களை ஏமாத்திட்டீங்களே!” வசந்தி கோபமும் ஆதங்கமும் கலக்கக் கூற,

அகமொழி தன்மீது அவதூறாக வீடியோ போட்டதில் தான், தானும் கோபத்தில் செய்ததாக அவனும் அவளைத் தவறு சொல்லாது மெளனமாக நின்றான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 81

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
74
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ரெண்டும் கழண்ட ஆப்பை🤦🏻‍♀️