Loading

அத்தியாயம் – 21

 “என்னடி பண்ணி வெச்சுருக்க.?” என்று கேட்டு ரூபன் அனுப்பிய வீடியோவை அவளுக்கு காட்டியதும் சமாளிப்பாக பல்லை காட்டி “நல்லா எடுத்துருக்கேன்ல.?” என்று கேட்டிட, ஆதிராவும் அவளை கொலைவெறியில் முறைத்திட, “சமாதானம் சமாதானம்” என்று சாந்தப்படுத்தினாள் காவ்யா.

“பாவி பாவி எடுத்தது தான் எடுத்த அதைய ஏன் அவனுக்கு இப்பவே அனுப்பி விட்ட.?” என்று ஆதிரா சீறிட, “ஒரு த்ரிலுக்கு தான்” என்று இல்லாத சட்டை காலரை காவ்யா தூக்கி விட்டு சிரித்தாள்.

அது ஒண்ணுமில்லங்க.. இவ ரூபன் கிட்ட போன்ல பேசறப்ப பிரியாணியையும் ஒரு பிடிபிடிச்சுட்டு இருந்துருக்கா.. அதைய நம்ம காவ்யாவும் அழகா வீடியோ எடுத்து ரூபனுக்கு அனுப்பி விட்டுருக்கா.. அதைய பார்த்ததும் ரூபனுக்கு தான் ரத்த அழுத்தம் எக்கச்சக்கமாக எகிறிருச்சு.. பின்ன அவன் உயிரை கைல பிடிச்சு பயந்துட்டு இருந்தான்ல.?

இப்போது தான் ஞாபகம் வந்தவளாக “ஆமா அபி நம்பர் உனக்கு எப்படி தெரியும்.?” என்று சந்தேகமாக ஆதிரா வினவ, ஹஹஹஹ என்று சிரித்து “நாங்க எல்லாம் யாரு.? அதெல்லாம் எப்படியோ தெரியும்” என்றாள் கெத்தாக.

“மவளே இப்ப சொல்லல உண்மையாவே மலைல இருந்து தள்ளி விட்டுருவேன்..” – ஆதிரா

“முடியாது பே..” – காவ்யா

“ரொம்ப பண்ணாம சொல்லு பிசாசு” – ஆதிரா

“ப்ச் எப்படியும் அவங்க தான் என் அண்ணனு என் எட்டாம் அறிவு சொல்லுச்சு..” – காவ்யா

“சரி..” – ஆதிரா

“அதான் நீ போன் பண்றப்ப நம்பரை மனப்பாடம் பண்ணிட்டேன் யூஸ் ஆகும்னு.. பாரேன் கரெக்ட்டா யூஸ் ஆகிருச்சு” என்று விட்டு கெக்கபெக்கவென சிரித்தவளை பாராபட்சம் பார்க்காமல் மொத்தினாள் ஆதிரா.

“பைத்தியம் பைத்தியம்.. எனக்குனு வந்து சேர்ந்துருக்கு பாரு.. ஏன்டி ஏன்.?” என்று புலம்பியவளிடம் “ரூபன் அண்ணன் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..” என்று காவ்யா கூறிய நேரம் மீண்டும் அழைத்தான் ரூபன்.

“அய்யய்யோ அவன் தான்” என்று ஆதிரா பதறிட, “அதுக்கு ஏன் இப்படி கத்தற.? எடுத்து பேசு” என்று சாதாரணமாக காவ்யாவும் கூறிட, ‘அய்யோ அவன்கிட்ட கெத்தா வேற பேசிருக்கனே.?’ என்று நொந்தபடி போனை எடுத்தாள்.

“ரொம்ப அழுதீங்களோ.?” என்று கேலியுடன் ரூபனின் வார்த்தை வர, “அது.. அது.. நான் இதுவும் சும்ம்ம்மா சொன்னது தான்” என்று கெத்தை விடாமல் சமாளிப்பாக ஆதிராவும் உரைக்க, “ம்ம்ம்ம்ம் பார்த்துக்கறேன்” என்றதும் “உங்களைய பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்.. சீக்கிரம் வாங்களேன்” என்றாள் காதலாக.

இதில் ஆண்மகனின் இதழ் விரித்து சிரிப்பை சிந்தியதில் கன்னத்தில் குழியும் சேர்ந்தே விழுந்தது.. “சீக்கிரமா வர்றேன் ஆதிமா.. நீ பத்ரமா வீட்டுக்கு வந்து சேரு..” என்று மென்மையாக கூறியவன் “உன் ப்ரெண்டு காவ்யானு ஒருத்தர் தான் இந்த வீடியோவை அனுப்புனாங்க.. அவங்க யாரு.?” என்று வினவினான்.

காவ்யா யாரென்று கூறிய சமயம் வெடுக்கென்று போனை பிடுங்கிய காவ்யாவே “அண்ணா உங்க லவ்வுல ரொம்ப பாதிக்கப்பட்டவ தான் நானு..” என்று சோகமான குரலில் கூறியவளிடம் இருந்து போனை பிடுங்க முயன்றாள் ஆதிரா.

“புரிலமா” என்று ரூபன் வினவியதும், காவ்யா பேச வாயெடுக்கும் முன்பு ரஞ்சித் வருவதை பார்த்து விட்ட ஆதிரா அலைபேசியை பிடுங்கி “அப்பறம் பேசறேன் அபி” என்றவள் போனையும் அணைத்து விட்டாள்.

ஏனென்று உணர்ந்த காவ்யாவும் எதுவும் வினவாமல் அமைதியாகிட, “ஹய்யோ இவங்களைய சமாளிக்கறது பெரிய பாடு போல.. உன்னைய உரிமையா பார்க்க போற நேரத்துக்கு தான் நானும் ஆவலா காத்திருக்கறேன் ஆதிமா..” என்று வாய்விட்டு கூறியவனின் முகம் வெக்கச்சிரிப்பில் அழகாக மாறியது.

ஆளுக்கொரு ஐஸ்கிரீமுடன் சாதாரணமாக மூவரும் பேசிட, திக்கி திணறி ரஞ்சித் தான் “ஆதிரா என்னைய பிடிக்கலயா.? நான் உங்ககிட்ட எதுவும் சொல்லாம வீட்டுக்கு வந்துட்டேனு கோவமா.?” என்று எந்த கேள்வியில் மனதை உழன்றிருந்ததோ அதை அவளிடமே கேட்டான்.

பெருமூச்சுடன் ஆதிராவும் “ம்ம்ம் ஆமா ரஞ்சித் ரொம்ப கோவம் தான்.. என்கிட்ட ஒரு வார்த்தை வர்றேனு சொல்லிருந்தா வர வேணாம்னு அப்பவே சொல்லிருப்பேன்” என்றாள் பட்டென்று.

“ஏன்.?” – ரஞ்சித்

“நான் உங்களைய ப்ரெண்டா மட்டும் தான் பார்க்கறேன்.. அப்பறம் எப்படி மேரேஜ் பண்ண முடியும்.?” – ஆதிரா

“ஆதிரா என்ன சொல்றீங்க.?” – ரஞ்சித்

“உண்மையா தான் ரஞ்சித்.. உங்க மனசுல என்ன இருக்குனு எனக்கும் தெரியும்.. நீங்க என்கிட்ட சொல்றப்ப சொல்லி புரிய வெச்சுக்கலாம்னு இருந்தா நேரா வீட்டுக்கு வருவீங்கனு நான் எதிர்பார்க்கல..” – ஆதிரா

“…..” – ரஞ்சித்

“வீட்டுக்கு வந்தது கூட ஓக்கே.. அது என்ன நிவே அக்கா கிட்ட ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்லிருக்கீங்க.? நான் எப்பவாவது உங்களைய லவ் பண்றேனு சொன்னனா.?” – ஆதிரா

“உங்களுக்கும் என்னைய பிடிக்கும்னு நினைச்சு தான் அப்படி சொன்னேன் ஆதிரா..” – ரஞ்சித்

“பிடிக்கும் சொல்றது வேற ரஞ்சித்.. அஸ் எ ப்ரெண்டா உங்களைய பிடிக்கும்.. நான் இல்லனு சொல்லல.. பட் லவ் இருக்கானு கேட்டா என் ஆன்சர் நோ மட்டும் தான்..” என்ற ஆதிராவின் உறுதியான முடிவில் ரஞ்சித்தின் முகம் சுருங்கி போனது.

“சாரி ஆதிரா..” என்று மன்னிப்பு கேட்டு விட்டு எழுந்தவன் “என் முட்டாள்தனத்துக்கு ரொம்ப சாரி..” என்றவன் சுண்டி போன முகத்துடன் நகர்ந்தான்.

“ஒரு நிமிஷம் ரஞ்சித்” என்று எழுந்த ஆதிராவும் “வாங்க நானும் வர்றேன்” என்றிட, ‘எங்க.?’ என்பதை போல் புரியாத பாவனையை அவள்மேல் படரவிட்டு நிற்க, “நீங்க லவ் பெயிலியர்ல மலைல இருந்து குதிச்சுட்டா.. உங்களுக்கு துணையா நானும் குதிக்கணும்ல.?” என்றவளை பேந்தபேந்தவென பார்த்தான்.

“உங்களுக்கும் லவ் பெயிலியரா.?” என்று இதுதான் முக்கியம் என்பதை போல் கேட்ட ரஞ்சித்கை கண்டு “அட நாதாரிப்பயலே!” என்று காவ்யா முணுமுணுக்க, “ஆமா ரஞ்சித்.. உங்க காதலுக்கு ஓக்கே சொன்னா என் காதல் புட்டுக்கும்ல.. அப்ப நானும் லவ் பெயிலியர் கேர்ள் தான்” என்றாள் சுருங்கிய முகத்துடன்.

‘அடியேய் பைத்தியமே.. நீ ஓக்கே சொன்னா அவன் ஏன்டி மலைல இருந்து குதிக்க போறான்.. விட்டா நீயே தள்ளி விட்டுருவ போல.?’ என்றதாக இருந்தது காவ்யாவின் மனநிலை.

“நீங்க லவ் பண்றீங்களா.?” என்று அதிர்ச்சியில் அவன் கேட்டதும் “ஆமா ரஞ்சித்..” என்று ஆதிராவும் ஒத்து கொள்ள, இன்னும் அதிர்வில் இருந்து மீளாமல் “எப்ப இருந்து ஆதிரா.?” என்று கேட்டான்.

“ஆறு வருசமா..” என்று வாய் கூசாமல் பொய் கூறியவளை ‘அடிப்பாவி’ என்ற ரீதியில் காவ்யா நோக்க, “ஆறு வருசமா.? என்று திகைத்த ரஞ்சித் “சாரி சாரி ஆதிரா.. நீங்க லவ் பண்றது தெரிஞ்சிருந்தா நான் வீட்டுக்கே வந்துருக்க மாட்டேன்..” என்று உண்மையான வருத்தத்தில் மன்னிப்பு வேண்டினான்.

“இட்ஸ் ஓக்கே.. யாம் உன்னை மன்னித்தோம்..” – ஆதிரா

“நீங்க லவ் பண்றது அம்மா, அப்பாக்கு தெரியுமா.?” – ரஞ்சித்

“இன்னும் சொல்லல ரஞ்சித்.. சொல்லலாம்னு இருந்தப்ப தான் நீங்க வந்துட்டீங்க..” – ஆதிரா

“சாரி ஆதிரா..” – ரஞ்சித்

“விடுங்க ரஞ்சித்.. காதல்னா ஆயிரம் தடை வந்துதான் தீரும்.. அதைய உடைச்சுட்டு போவோம்” என்று வீரவசனம் பேசிட, இன்னும் திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்திருந்தாள் காவ்யா.

“உங்க ஆளு என்ன பண்றாங்க.? அவங்கள எப்ப நீங்க பார்த்தீங்க.?” என்று விடாமல் கேள்வி கேட்க, விடமாட்டான் போல என்று நொந்து “நான் என் அம்மா வயித்துல இருக்கறப்பவே அவன் என்னைய லவ் பண்ணிருக்கான் ரஞ்சித்.. பட் காதலை சொன்னது என்னமோ ஒரு ஆறு வருசத்துக்கு முன்னாடி தான்..” என்று பொய்யாக அடுக்கினாள் பெண்ணவள்.

காவ்யாவுக்கு நெஞ்சு வலி வராதது தான் மிச்சம்.. பாவம் ரஞ்சித்தும் இதை உண்மை என்று நம்பி விட, “ஃபீல் பண்றீங்களா.?” என்று ஆதிரா அவனிடம் கேட்டாள்.

“ச்சே ச்சே இல்ல இல்ல.. ஆதிரா இல்லனா ஒரு காவ்யா கிடைக்காமளா போக போறாங்க” என்றதும் தான் திகைப்பில் இருந்து வெளியில் வந்த காவ்யா “அடேய் கொன்றுவேன்” என்று சீறி அடிக்க கட்டையை தேட, “அய்யோ நான் இல்லை” என்று ஓடியே விட்டான் ரஞ்சித்.

ஆதிராவின் பெற்றவர்கள் ஜாதகத்தை பார்க்க செல்வதாக கூறிட, “இப்பவே என்னமா அவசரம்.?” என்று தன் எதிர்ப்பை தெரிவித்தாள் ஆதிரா.

“நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணும்.. உனக்கு ஒண்ணும் தெரியாது அமைதியா இரு” என்று பாண்டியன் அவளை அடக்கியதில் அதற்கு மேல் பேச இயலாதவளாக மௌனமாகி போனாள்.

இதில் துருவினி நமுட்டு சிரிப்பு சிரிக்க, அவளை கோவமாக ஆதிரா முறைத்தாலும் “ப்ளீஸ்டி ஹெல்ப் பண்ணு” என்று கெஞ்சினாள்.

சாதாரணமாக “போகட்டும் விடு..” என்றவளை ஏகத்துக்கும் முறைத்து “உன்கிட்ட சொன்னேன் பாரு பே..” என்று கடுப்பாகிட, “நீ வேணுனாலும் பாரேன் அங்க போய்ட்டு வந்ததும் இப்ப கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்லுவாங்க..” என்று தமக்கையின் தலையில் ஜில்லென்று ஐஸ்கட்டியை கொட்டினாள் வாய் வார்த்தைகளில்.!!!

இதில் உண்மையிலே ஆதிராவின் மனநிலை குளுகுளுவென்று மாறினாலும் அடுத்த நிமிடமே “எப்படி சொல்ற.?” என்று நம்ப முடியாமல் கேட்க, “அது அப்படித்தான்.. நான் சொன்னது தான் நடக்கும்” என்று நடக்க போவதை கண்டது போல் கூறி விட்டு சென்றாள் துருவினி.

“பொய் பொய்யா பேசி பழகிட்டா.. ஒரு நாள் என்கிட்ட வாய்லயே மிதி வாங்க போறா பாரு” என்று உடன் பிறந்தவளை கருவி கொண்டு தன்னவனுக்கு அழைத்தாள்.. வேலையில் அமர்ந்திருந்தவன் அப்போது தான் உணவுண்ண எழுந்தான்.

தன்னவளின் அழைப்பை கண்டு மாறா புன்னகையுடன் “சொல்லு ஆதிமா.. சாப்பிட்டியா.? வேலை இல்லயா.?” என்று அடுக்கடுக்காக வினாவை எழுப்பிட, “இப்ப இதுதான் முக்கியமா.?” என்று கடுப்படித்தாள்.

“ஹேய் என்னமா ஆச்சு.? வீட்டுல ஏதாவது பிரச்சனையா.?” – ரூபன்

“ஜாதகம் பார்க்க போறேனு போய்ருக்காங்க அபி.. பயமா இருக்கு..” – ஆதிரா

“……..” – ரூபன்

“அபி இருக்கீயா.?” – ஆதிரா

“ம்ம்ம்ம்” – ரூபன்

“இப்ப உனக்கு என்ன ஆச்சு.?” – ஆதிரா

“வீட்டுல நான் வந்து பேசட்டுமா.?” – ரூபன்

“இப்ப கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்லுவாங்கனு துருவினி லூசு சொல்லிட்டு இருக்கா.. அவங்க வரட்டும் அபி.. அப்பறம் என்ன பண்றதுனு யோசிக்கலாம்” என்றாள் வேறு வழியின்றி.

தன்னவனின் அமைதியில் “ஹேய் அபி.. நான் தான் ரஞ்சித் கிட்ட பேசிட்டேனு சொன்னேன்ல.? அவன் விட மாட்டான்.. சோ டோண்ட் வொர்ரி.. எல்லாத்தையும் சமாளிப்போம்” என்றவள் “சாப்பிட்டியா.?” என்று கேட்டாள்.

“சாப்படலாம்னு தான் எழுந்தேன்.. அதுக்குள்ள நீ போன் பண்ணிட்ட..” – ரூபன்

“இன்னுமா சாப்படல.?” – ஆதிரா

“இல்ல அம்மா கோவிலுக்கு போறேனு போனாங்க.. சோ அவங்க வரட்டும்னு நானும் வெயிட் பண்ணுனேன்..” – ரூபன்

“பாருடா நான் எல்லாம் எழுந்ததும் முதல்ல சாப்பிட்டு தான் மறுவேலையே பார்ப்பேன்..” – ஆதிரா

“அதான் தெரியுமே..” – ரூபன்

“எப்படி தெரியும்.?” – ஆதிரா

“குட்டி பையன்கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிட்டு இருந்தீயே அதுலயே கன்பார்ம் தான்” என்றவனின் நினைவு அவனின் ஆதியை முதன் முதலாக பார்த்ததில் நிலைத்து நின்றிருந்தது.

தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்