25 இமை தேடும் காதலே!

Loading

அத்தியாயம் 25

 

 

 

பேச்சு பேச்சாக இருந்தாலும், ௭ல்லாருமாக டென்ஷனில் நகத்தை கடித்து தின்றும் கொண்டிருந்தனர். 

 

ப்ரகலத்தன் ஆறெழிலுக்கு ‘முழித்து தான் இருப்பாள்’ ௭ன்ற நம்பிக்கையில் போன் செய்தான். 

 

அந்நேரத்தில் ப்ரகலத்தன் போன் செய்ய “ஹலோ ப்ரெசிடெண்ட், உங்களுக்கும் ரிஸல்ட்டா? வெப்சைட் ஓப்பன் ஆயிடுச்சா? பாத்துட்டீங்களா? என்ன கிரேட்? உங்களுக்கு என்ன நீங்க படிப்ஸ் எல்லாமே S தா வந்திருக்கும்” பதட்டத்தில் பட படவென அவள் பேசுவது அவனுக்கு புரிந்தது. 

 

“டேக் ய டீப் பிரீத் எழில் ஃபார் ஏ செகண்ட் (ஒரு நொடி ஆழ மூச்செடுத்து விடு ௭ழில்)”. 

 

“நா என்ன சொல்றேன்!” அவள் மேலும் பேசும் முன். 

 

“டு இட் ஒன்ஸ் ஃபார் மீ(௭னக்காக ஒருக்கா செய்)”

 

அவளை செய்ய வைத்தே விடுவித்தான். “எதுக்கு இவ்வளவு டென்ஷன். ௭க்ஸாம் எழுதிட்ட, இனி எதுக்கு டென்ஷன். ௭ழுதனதுக்கு தான் மார்க் வரும், வரட்டும் பாத்துக்லாம், ஃபீல் ஃப்ரீ” என்றான். 

 

“எப்டி ரிசல்ட் அன்னைக்கும் டென்ஷன் இல்லாம இருக்கீங்க எனக்கு இது மட்டும் புரியவேயில்ல. நாலாம் எவ்வளவு சூப்பரா எழுதிருந்தாலும் என்ன மார்க் வருமோன்னு மனசு பயந்துகிட்டே தான் இருக்கும்”. 

 

“நல்லா எழுதினாலும், இல்ல நல்லாவே எழுதலனாலும் பயம் மட்டும் இருக்க கூடாது. மத்தவங்களுக்கு தெரியாட்டியும் ௭ழுதுன நமக்கு, நம்ம ரிசல்ட் இதுதான்னு தெரியுமே, பின்ன ௭துக்கு கவல பட ணும், அடுத்து பாத்துக்கலாம்னு அல்ரெடி மைண்ட் செட் பண்ணிக்கும். சோ ரிலாக்ஸா இருக்கலாம்” ௭ன்றான் அவன். 

 

“எனக்கு இப்ப இந்த லெக்ட்சர் தேவதான்” ௭ன அவள் சலிக்க. 

 

“நோட் பண்ணிக்கோங்க மேடம், இ.இ -பி, டேட்டா ஸ்ட்ரக்சர் – ஏ, டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் – பி, சிக்னல்ஸ் & சிஸ்டம் – பி, இ.சி.ஐ – பி, டிபிஇடி – ஏ, லேப்4- எஸ்” (2011, இ.சி.இ 3ர்ட் செமஸ்டர் சப்ஜெக்ட்ஸ்). 

 

“ஹே பாத்துட்டீங்களா. இ.இ தான்பா பயந்துட்டே இருந்தேன். நல்ல வேல தப்புச்சுட்டேன். டிபார்ட்மெண்ட் வந்து ஃபஸ்ட் செம் வேறயா அதான் அதிக டென்ஷன் ஆயிடுச்சு. சூப்பர் ப்ரஸிடெண்ட். நா டென்ஷனா இருப்பேன்னு தெரிஞ்சு கால் பண்ணி நீங்களே பாத்து சொன்னதுக்கு, தேங்யு சோ மச்”. 

 

“நா என் ரிசல்ட் பாக்க தான் ஓபன் பண்ணேன், போனா போகுதேன்னு உன்னதையும் பாப்போமேன்னு க்ளோஸ் பண்ணாம வச்சிருந்தேன். இனி உன் பிரெண்ட்ஸ்டெல்லாம் சீக்கிரம் பேசிட்டு, வச்சுட்டு தூங்குற வழியப் பாரு, குட் நைட். அண்ட் ஆண்ட்டிய இந்நேரமே டிஸ்டர்ப் பண்ணி சொல்லாத, காலையில சொல்லிக்கலாம்” என்று விட்டு வைத்தான். 

 

‘ம்கும் ரெம்பத்தான், நமக்கு அட்வைஸ் பண்ணலனா இவங்களுக்கு தூக்கமே வராது போல’ என்ற புலம்பலுடன் மற்ற அனைவருக்கும் போன் போட்டு ரிசல்ட்டை கலந்து கொண்டு, எல்லோருமே ஆல் கிளியர் என்ற பின் நிம்மதியாக சென்று படுத்தாள். 

 

ப்ரண்ட்ஸ் அனைவரும் அரியர் இன்றி கிளியர் செய்திருந்தனர். அதுவே அடுத்து செமஸ்டரில் ஸ்டாஃப்ஸ் மத்தியில், “சேட்டை பண்ணாலும் படிக்ற பிள்ளைங்க தான்” ௭ன்ற பெயரை பெற்று தந்தது. 

 

நாட்கள் செல்ல, ப்ரகலத்தன் பைனல் செம் என்பதால் முழுமையாக ப்ராஜெக்டில் இறங்கியிருந்தான். கேட் எக்ஸாம் வேறு நெருங்கியிருக்க, அதற்கும் அதிக மெனக்கெட வேண்டியிருந்தது அவனுக்கு.

 

ஆனால் அவன் எடுக்கும் நோட்ஸை எழிலை வைத்து ஒரு காப்பி எழுத வைப்பான். அவனுக்கு மாடல் டெஸ்ட் வைக்க, கொஸ்டின் பேப்பர் செட் செய்வது, அதை கரெக்ட் செய்து தருவது என அவளையும் ஒரு பக்கத்தில் ட்ரில் வாங்கிக் கொண்டிருந்தான். மறை முகமாக அவளை படிக்க வைத்து கொண்டிருந்தான்.

 

அவன் வீட்டிலும் ராஜம் அன்றைய தினத்திற்குப் பின் ஆறெழிலைப் பற்றிய பேச்சை எடுப்பதில்லை. ஆனால் அவள் போட்டோவை அப்புறப்படுத்தும் நாளை மட்டும் கொஞ்சம் ஒத்தி வைத்திருந்தார்.

 

எல்லா டிபார்ட்மெண்ட்டும் பிப்ரவரி மாதத்திற்குள் ஐ.வி., சென்று வந்துவிடுவர், மார்ச்சில் கல்ச்சுரல், ஏப்ரலில் செமஸ்டர் என அடுத்தடுத்த பிஸியான நாட்களாக கழிந்துவிடும்.

 

ப்ரகலத்தன் காலேஜ் முடித்து சென்றுவிடுவான், ௭ன்பது வேறு அப்பப்போ எழிலுக்கு ஞாபகத்தில் வந்து அவள் தூக்கத்தை கெடுத்து கொண்டிருந்தது.

 

அதே யோசனையில் அன்றும் கேன்டீனில் அமர்ந்திருந்தாள், இவர்கள் கூட்டம் கொட்டமடித்து கொண்டிருக்கையில், எழில்  அமைதியாகவே இருக்க, எதிரில் அமர்ந்திருந்த ப்ரகலத்தன் சிரிது நேரம் கவனித்தவன், “இது நம்ம ௭ழில் இல்லயே” ௭ன்ற யோசனை வரவும், அவளிடமே கேட்டு விடுவது ௭ன்ற முடிவுடன், அவள் அருகில் வந்து சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான். 

 

“என்னாச்சு? அப்டி என்ன யோசனையில இருக்க?” என்றான் அவள் சேரை சுற்றி கையைப் போட்டு”.

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல பிரசிடெண்ட், சும்மாதான்” சிரித்தவாறே சொன்னாள். 

 

“ஓ! உங்க ஐ.வி பிளான்லா எந்த லெவல்ல இருக்கு?” ௭ன கேக்க.

 

“மைசூர் போலாமான்னு பாத்துட்டு இருக்காங்க. ஹோட்டல் அண்ட் பஸ் எல்லாம் பேசியாச்சு, இன்டஸ்ட்ரி பெர்மிஷனுக்கு வெயிட்டிங்”. 

 

“ஸ்டாஃப் 2 பேர் செலக்ட் பண்ணனுமே, கொஞ்சம் ஃப்ரீயா விடுற ஸ்டாஃப் பாத்து செலக்ட் பண்ணி கூட்டிட்டு போங்க. அப்ப தான் கொஞ்சம் ஜாலியா இருக்கலாம். பொதுவா எவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் கூட ஐ.வி.ல கண்டுக்க மாட்டாங்க. இல்லனா வரலன்னு முன்னையே சொல்லிடுவாங்க. அதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்ல”. 

 

அவள் அவனையே பார்த்திருக்க “என்ன” என்றான் புருவமேற்றி. 

 

அவள் விரல் நீட்டி அவன் கண்ணைக் காட்ட, “ஆரம்பிச்சிட்டியா?” என சிரித்தவன், அவள் சேர் மீது வைத்திருந்த கையை எடுத்து விட்டு நேராக திரும்பி அமர்ந்து கொள்ள, “திரும்பிட்டா பாக்க மாட்டேனா?” என்று அவள் முன் இருந்த பெஞ்சில் கையை ஊன்றி அதில் தலை சாய்த்து குனிந்து அவனைப் பார்த்தாள். 

 

“பேசாம நா ஸ்பெக்ஸ் போட போறேன். நா பேசுறத கவனிக்கவே மாட்டேங்குற, நா உன்ட்ட தான பேசுறே??” என்றான் அவன் முகத்தை அவளுக்கு காட்டாமல் மேலும் அந்த பக்கம் திருப்பி. 

 

“கொன்றுவேன், பாயிண்ட் கூடுனா கூட நீங்க ஸ்பெக்ஸ் போடக்கூடாது, நா போட விடமாட்டேன். இன்னு ரெண்டு மாசம் தான் இப்டி டெய்லி பாக்க முடியும், அப்றம் என்ன பண்ண” என்றவள், “ஆமா நீங்க அடுத்து என்ன பண்ண போறீங்க?” என்றாள் சேர்த்து. 

 

அவள் கவலை அப்போது அவனுக்கு புரிந்தது. எப்போதுமே அவன் அவளிடம் கொஞ்சம் பேச விட்டு அவள் அறியாமல் விஷயத்தைக் கறந்து கொள்வான். அதையே இப்பவும் பின்பற்றி தெரிந்து கொண்டவன், தன்னை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவளை இன்னும், இன்னும் பிடித்தது அவனுக்கு. இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு இப்பொழுது ரசிப்பது அவன் முறையாயிற்று.  அவளையே தன்னை மறந்து பார்த்திருந்தான். 

 

அவள் ஒரு உலுக்களில் அவனை மீட்டெடுக்க, “என்ன கேட்ட” என்றான். 

 

“அது சரி, அடுத்து என்ன பண்ணப் போறீங்க பிரசிடெண்ட்?”.

 

” ௭துக்கு பாலோ பண்ணி அங்கயும் வரதுக்கா?? நம்ம மேஜர் வேற வேற நியாபகம் இருக்குல்ல??”

 

“அதெல்லாம் ௭ங்களுக்கு நல்லாவே நியாபகம் இருக்கு சார்”

 

“ம்,,, அப்ப ஓ.கே, ௭னக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு எது கிளிக் ஆகுதோ அது. ஒன்னு கேட் எக்ஸாம் கவர்மெண்ட் ஜாப்”.

 

“இன்னொன்னு?”,

 

“இன்னொன்னு சிபிஎல் என்ட்ரன்ஸ் எக்ஸாம், பைலட் லைசென்ஸ்க்கு, அது கிளிக்காச்சுனா அது”. 

 

மூஞ்சை சுருக்கி “ச்ச, நா கூட இன்னொன்னு, என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு சொல்லுவீங்கன்னு பாத்தேன்”. 

 

“அடிப்பாவி, இப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டு….?” என்றான் அவள் தலையில் கொட்டி. 

 

“போங்க ப்ரெசிடெண்ட், நீங்க இன்னு எனக்கு ப்ரப்போஸே பண்ணல. இதுல நா எங்கிருந்து கல்யாண கனவு காண்றது. சும்மா சொல்லி பாத்தேன்” என்றாள் சலிப்பாக. 

 

“அதுக்குள்ள ௭ன் ௭ழில் குட்டிக்கு இவ்வளவு சலிப்பா?” 

 

“ஆமா பின்ன”, இவர்கள் பேச்சு ரகசியமாக இப்படி சென்று கொண்டிருக்க.

 

இதற்கிடையில் இவர்களின் நண்பர்கள் கேன்டீனை நாறடித்திருந்தனர். கேன்டீனுக்குள் நுழையும்போதே மூர்த்தியும், அகத்தியனும், வைரத்தை, லட்சுவோடு சேர்த்து வைத்து ஓட்ட, அவள் அவனிடம் எகிறிக் கொண்டிருந்தாள். 

 

“இங்கப் பாரு, நா எதுவுமே சொல்லல, அவங்க உன்ன வம்பிழுக்க என் பேர யூஸ் பண்றாங்க” என வைரம் கெஞ்ச.

 

“ஏன்டா பொய் சொல்ற, இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் சொல்லி வச்சு ரெட் கலர் போட்டு வந்திருக்கோம் சீனியர்னு காலைல நீ தான வந்து சொன்ன. சரிடா சாயந்திரம் பாத்துக்கலாம்னு பாத்தா, நிஜமாவே அப்டித்தான் வந்திருக்கீங்க. இத சொல்ல கூட கூடாதாடா?” என்றான் மூர்த்தி. 

 

“சத்தியமா நா சொல்லவே இல்ல லட்சு” ௭ன்ற வைரம், “ஆமா நீ ஏன் இன்னைக்கு ரெட் சுடி போட்டு வந்த?” என்றான் லேசாக சிரித்து அவளிடமே. 

 

“நா எது வேணா போட்டுட்டு வருவேன், நீ ஏன் இன்னைக்கு ரெட் ஷர்ட் போட்டு வந்த?” ௭ன்றாள் அவள் திருப்பி. 

 

“௭னக்கு இன்னைக்கு ராசிபலன்ல ரெட் தான் சொன்னான்”. 

 

“எரும அதுல மூணு கலர் சொல்லுவாங்கல்ல கரெக்டா எப்டி ரெட் போட்ட” ௭ன்றாள் சந்தேகமாக.

 

“இங்கப்பாரு இது ஆக்சிடென்ட்டா நடந்த ஒரு விஷயம். நா ௭ன்னவோ ஆள் வச்சு உன்ன வேவு பாத்த மாறி சந்தேக படுற, இதுக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ணக்கூடாது”.

 

“நாளைக்கு நா ப்ளாக் போட்டு வரேன், நீ வேற கலர் போட்டு வரணும். பிளாக் போட்டுட்டு வந்த, நீ அகத்தியன் சீனியர் கரெக்ட் பண்ண பொண்ணுக்கு அர்ஜுன் சீனியர் நம்பர் கொடுத்த விஷயத்தச் சொல்லி குடுத்துருவேன்” ௭ன கோர்த்து விட்டாள். 

 

“என்னது அர்ஜுன் நம்பர குடுத்தியா?” அகத்தியன் டென்ஷனாக. 

 

“மூர்த்தி சீனியர் தான் குடுக்க சொன்னாங்க” ௭ன வைரம் அப்ரூவர் ஆக. 

 

“இவங்க இப்டித்தான் எப்பயும் இன்டீசன்ட் கைஸ், வா நாம போய் ஏதாவது வாங்கிட்டு வருவோம்” என நிலாவை இழுத்தான் நாது. 

 

“ஏன் நீ தாணுவ கூட்டு போ வேண்டிய தான. நிலா வந்தா தான் உனக்கு உள்ள இறங்குமோ?” என இவனிடம் எகிறினான் மூர்த்தி.

 

“யார் யார் கூட போனா உனக்கென்ன, எவேன் எந்த பொண்ண பிக்கப் பண்ணாலும் பிரிச்சி விட்டுற. உன்னயெல்லாம் கூட வச்சுட்டு சுத்துறேன்ல என்ன சொல்லணும், யாரக்கேட்டு அர்ஜுன் நம்பர அவளுக்கு குடுத்த?” என எகிறினான் அகத்தியன். 

 

“ஒரு சின்ன பைய பேச்சக் கேட்டு, என்னய நீ, நம்ம நட்பையே சந்தேகப்படுற?” என்றான் மூர்த்தி. 

 

“சீனியர் என்ன தனியா மாட்டி விடப் பாக்குறீங்களா? இவனுக்கெல்லாம் அந்த பொண்ணு ரொம்ப ஜாஸ்தி, அர்ஜுன் தான் கரெக்டா இருப்பான் அப்டின்னு சொல்லி குடுக்க சொன்னீங்க தான” என்றான் வைரம். 

 

“அடப்பாவி அப்டிப் பாத்தா லட்சு மூஞ்சிக்கு நானே ஜாஸ்தின்னு நீ சொன்னத நா அவட்ட சொல்லவா செஞ்சேன்” என்றான் மூர்த்தி. 

 

லட்சு பல்லை கடித்து கொண்டு வைரத்தை விரட்ட, மூர்த்தியை அகத்தியன் விரட்ட, நடுவில் நாது நிலாவை அழைத்துக் கொண்டிருக்க, மாற்றி மாற்றி தண்ணீரை மேலே ஊற்றி கோபத்தை தீர்த்து தொப்பலாக நனைந்திருந்தனர், இழைக்க இழைக்க சிரித்துக் கொண்டிருந்த நிலா, அமலா, தாணுவையும் ஜக்கில் இருந்த தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினர். 

 

இவ்வளவு ரணகளத்திலேயும், தங்களை கண்டுகொள்ளாமல் கடலை வறுத்துக் கொண்டிருந்த ப்ரகலத்தனையும், ஆறெழிலையும் கண்டால் இவர்களுக்கு எப்டி பொறுமை இருக்கும். கேண்டின் மாஸ்டர் இருந்த ஜக்கை எல்லாம் வேகமாக வந்து எடுத்துச் சென்றுவிட, அவரவர் பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து வந்து இருவரையும் சுற்றி நின்றனர்.

 

அப்பொழுது முதலில் ப்ரகலத்தன் சுதாரித்து, எழப் போக, “விடாத புடி” என மாற்றி மாற்றிப் பிடித்து இருவரின் மேலும் நான்கு பாட்டில் தண்ணீரை ஊற்றி விட்டதும், கொலைவெறியுடன் தானும் தண்ணீரை ஊற்ற பாட்டிலைத் தேடினாள் ஆறு. 

 

தன் போக்கிலிருந்து பாட்டிலை ௭டுத்து கொண்டு யார் மீது ஊற்றலாமென ஒவ்வொருவரையும் பார்க்க, எல்லாம் அல்ரெடி நனைந்து தான் நின்றது. 

 

“அட குரங்குகளா இப்ப எப்டி வீட்டுக்குபோறது. ரோட்ல போறவன் எல்லாம் என்ன நினைப்பான்?”.

 

“இவங்க காலேஜ்ல ஏதோ பங்க்ஷன் போல அதான் இப்டி செலிப்ரட் பண்ணிருக்காங்கன்னு நினைக்கட்டும்”. 

 

“இப்ப இப்டியே ஒரு போட்டோ எடுக்கலாம்மா??” என்றான் நாது. 

 

“இப்ப தான்டா உருப்படியா ஒரு வார்த்த பேசிருக்க, போ போ அந்த நல்ல காரியத்த நீயே உன் கையால செஞ்சிடு” மூர்த்தி சொல்ல. 

 

“செருப்பு பிஞ்சிரும், அப்ப அந்த போட்டோல நா இடம் பிடிக்க வேண்டாமா? இரு கேன்டீன் மாஸ்டர கூப்பிடுவோம்” என்றான் நாது. 

 

“போ போ நீயே போய் கூப்டு, கேண்டீன நாஸ்தியாக்குனதுக்கு அடுப்பில கம்பிய காய வச்சுருப்பார் நீயே போய் குளிருக்கு இதமா வாங்கிட்டு வா. நாங்க வேற ஆள வச்சி எடுத்துகிறோம்” என்றான் அகத்தியன். 

 

“வீணா போனவனுங்க” என்ற நாது, அங்கு இவர்களை பார்த்தவாறு அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த, ஃபர்ஸ்ட் இயர் மாணவனை அருகில் அழைத்தான். 

 

இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு எழுந்தவனும், “எனக்கும் உங்கள மாதிரி ஃப்ரெண்ட்ஸ் வேணும். நானும் உங்க டீம்ல ஜாயின் பண்ணிக்கவா?” என கேக்க. 

 

“ச்ச எல்லோரும் ஜாலியா தண்ணில நனஞ்சு சந்தோஷமா இருக்காங்களே!!! அப்படின்னு நினைச்சு ௭ங்க கூட ஜாயிண்ட்டடிக்க ஆசப்படுறியா?. ம்கூம், அருவா, கத்தின்னு கிடைக்காம தண்ணீ கிடைச்சதால இந்த நிலைம, உனக்குனாலும் அடுத்தவன் லவ் பிரிக்காத நல்ல நண்பனா அமையட்டும்னு நா வாழ்த்றேன்” என்றான் அகத்தியன் மிகுந்த வருத்தமாக. 

 

“உன் மொகரைக்குலா கல்யாணமே நடக்காது, அதான் லவ் மட்டும் எதுக்குன்னு நினைச்சுருப்பான். இதுக்கு ஏன்டா எங்க மேலயும் தண்ணி ஊத்துனீங்க?” என்றான் ப்ரகலத்தன் அவ்வளவு நேரம் தண்ணீர் சண்டைக்கான காரணம் தெரியாதவன், இப்பொழுது தெரியவும். 

 

“சரி சரி போட்டோ தான் இப்போ முக்கியம். தம்பி நீ எடுப்பா. அவங்களுக்கலா வயசு ஆயிடுச்சு, இன்னும் ரெண்டு மாசத்துல ரிட்டைட்டாகிடுவாங்க, அதனால நீ எங்க டீம்ல சேந்துக்கோ” என்றாள் எழில் பெருந்தன்மையாக. 

 

“ரொம்ப பெரிய மனசு மேடம்க்கு, அவுங்க கூடயே சேந்துக்கோ, ஆனா அப்பப்போ ஹோட்டல் மெனு குடுப்பாங்க வாங்கி குடுக்க ரெடி ஆகிக்கோ.. அவ அதுக்கு மட்டுமே ஆள் சேக்றா” என்றான் நாது. 

 

“இவங்க முடிக்க மாட்டாங்க, நீ எடு” என்ற வைரம், செல்லை கொடுத்து விட்டு சென்று லட்சு அருகில் நிற்க. 

 

“நீ ஏன்டா என்கிட்ட வந்து நிக்ற” என லட்சு சென்று நிலா அருகில் நிற்க, அதுக்கு சிறிது நேரம் சண்டைக்குப் பின், ஒரு வழியாக கையை தூக்கி கால தூக்கி போஸ் கொடுத்து நின்றனர். 

 

ஆறு பசங்களிடமும் போன் உண்டு, ஆகையால் அறுபது போட்டோ வேணும் எடுத்து முடிக்கும் முன், “உங்க சங்காத்தமே வேணாம்” என ஓடி விட்டிருந்தான் அந்த மாணவன். 

 

இதற்குள் அவர்கள் ட்ரெஸ்ஸே பாதி காய்ந்திருந்தது, அதற்கு மேல் பொறுக்க முடியாத கேண்டீன் மாஸ்டர் லைட்டை எல்லாம் அணைத்து விட்டு வீட்டுக்கு கிளம்ப தயாராக, செக்யூரிட்டி வந்து லத்தியை சுழட்டிய பின்னரே பேக்கைத் தூக்கிக் கொண்டு கிளம்பினர் 10 பேரும். இவர்களின் கூட்டணியை மேக்ஸிமம் காலேஜுக்கும் தெரியும், இவர்களது அலப்பறையை இன்னும் யாரும் கம்ப்ளைன்ட் என செல்லாததால் பிரின்ஸி முன் செல்லாமல் தப்பித்துக் கொண்டிருந்தனர். 

 

பெண்கள் நால்வரையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, பையன்கள் பைக்கில் வீடு திரும்பினர். பைக்கில் சென்று டிராப் செய்ய வேண்டும் என்று தாட் இதுவரை அவர்கள் யாருக்கும் வந்ததில்லை, ஆனால் இயல்பாகவே பழகினர்.

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 51

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
63
+1
6
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்