Loading

“அமைதியா நின்னா என்ன அர்த்தம்? பதில் சொல்லு” என்று வசீகரன் நக்ஷத்திராவிடம் சீற..,

“விஷா.. இப்..” என்றவளுக்கு அதிர்ச்சியில் வார்த்தை எழவில்லை.

“ஸார் கொஞ்சம் நா..” என்று இழை வசீகரன் அருகே செல்ல அதேநேரம் அவள் கையில் இருந்த கைபேசியில் “வசீகரா என் நெஞ்சினிக்க..” என்று பாடல் ஒலிக்க தொடங்கிய மறுநொடியே விழிகள் சிவக்க இழையிடம் திரும்பியவன்,

“ஸ்டாப் இட்!” என்று கர்ஜிக்க தூக்கிவாரி போட்டது இழைக்கு..! பதட்டத்தில் அவள் கையில் இருந்த கைபேசி நழுவி கீழே விழுந்தபோதும் “முன்ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்..” என்று பாடல் விடாது தொடர்ந்தது.

“ஆர் யூ டெஃப் ! ஐ சே ஸ்டாப் தி ஸாங்” (நீ என்ன செவிடா? பாட்டை நிறுத்த சொன்னேன் நிறுத்து) என்று வசீகரன் சீறவும் இழை என்ன செய்வதென புரியாமல் திகைத்து நின்றிருந்தாள்.

“ஏய் அவனே ஹாங்ஓவர்ல இருக்கான் போல அவன் கிட்ட உனக்கென்னடி பேச்சு? அடிச்சிட கிடிச்சிட போறான் உங்கம்மாக்கு யார் பதில் சொல்ல வா இப்படி..” என்று இழையின் செவியோரம் முணுமுணுத்தாள்.

“என்ன சொல்ற ஜீவி..?” என்று புரியாமல் பார்த்த இழையிடம், “நேத்து நாம சவிக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ எதிர்ல இருந்த வைன்ஷாப்ல இருந்து ஒருத்தன் டிப்டாப்பா சரக்கோட வந்தான்னு சொன்னேனே அது இவன்தான்..!”

“இவரா?”

“ஆமா நீ பார்க்கிறதுக்குள்ள வண்டியில கிளம்பிட்டாங்க” என்றவள் இழையின் கைபேசியை எடுக்க முயல…, மீண்டுமான வசீயின் சீற்றத்தில் சட்டென கீழே அமர்ந்த இழை மடமடவென கைபேசியை தேடி எடுத்து அதை அணைப்பதற்குள் மீண்டும் “வசீகரா என் நெஞ்சினிக்க…” என்று பாடல் ஒலித்தது.

“இடியட்!” என்றவாறே இழை கையில் இருந்த கைபேசியை பறித்து ஜன்னல் வழியே தூக்கி எறிந்திருந்தான்.

அதை கண்ட ஜீவிகா “ஸார் என்ன பண்றீங்க ? நான் போலீசை கூப்பிடுவேன்” என்றிட…

“ரெண்டு பேர் பேசிட்டு இருக்கப்போ குறுக்க பேசகூடாதுங்கிற பேசிக் டீசென்சிகூட தெரியாதா உங்களுக்கெல்லாம்” என்று இழை, ஜீவி இருவரையும் முறைத்தவன், “நான் பேசி முடிக்கும்வரை யாரும் வாயை திறக்ககூடாது குறுக்க வரவும் கூடாது காட் இட்!” என்று எச்சரித்து..,

“ஐ சே சிட் டவுன்!” என்றதில் அன்னிச்சையாக இழை அமர்ந்திட ஜீவிகா அப்போதும் அவனை அழுத்தமாக பார்த்திருந்தாள்.

“உனக்கு தனியா சொல்லனுமா உட்கார் இடியட்” என்றவன் நக்ஷத்திரா புறம் திரும்பி “ஏன் அமைதியா நிற்கிற பதில் சொல்லு” என்றிட அவளோ கண்ணீர் மல்க அவனை பார்த்து நின்றாள்.

“உங்கம்மா அப்பாவை மிரட்டி தான் நீ என்கிருக்கன்னு தெரிஞ்சுகிட்டோம்…நான் இவ்ளோதூரம் வந்ததே இந்த விஷயத்தை உனக்கு கன்வே பண்ணத்தான்… கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா ஒரே ஒருமுறை உன் குழந்தையை வந்து பார்த்துட்டு போ.. சின்ன குழந்தை ட்ரீட்மென்ட்ல ரொம்ப கஷ்டபடுது அவ அழறதை பார்க்கிற எங்களாலயே தாங்கமுடியலை..” என்றவன் கசங்கிய முகத்தோடு கீழிறங்க…

“கரண்… ப்ளீஸ் நில்லுங்க” என்று அவன் பின்னே இறங்கினாள் நக்ஷத்ரா.

“கீழே இறங்கியனின் காலில் இழையின் கைபேசி தட்டுபட அதை எடுத்தவனுக்கு அப்போதுதான் பாடல் நினைவு வர சிலநொடி கைபேசியை வெறித்தவன் ஜன்னலருகே இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு தன் புல்லட்டை எடுக்க அவன்முன் வந்த நக்ஷத்ரா “ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போங்க கரண்” என்று நிற்கவும் அடுத்த சில நிமிடங்களில் அவளோடு கிளம்பியிருந்தான்.

ஆனால் அவர்கள் கிளம்பிய அடுத்த சில மணிநேரங்களில் ட்ரிப்பை கேன்சல் செய்த பெண்கள் கூட்டமும் நக்ஷத்திராவின் குழந்தை அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.

குழந்தையின் நிலையை அறிந்துகொண்டு வெளியில் வந்த இழையின் விழிகள் வசீகரனை தேடிட அவனோ அவசர அழைப்பின் பேரில் வெளியில் கிளம்பியிருந்தான்.

அன்று மாலையே வீடு வந்து சேர்ந்த இழை பெற்றோரிடம் நடந்ததை கூறிமுடிக்க, “என்ன சொல்ற பிங்கி… சின்ன குழந்தைக்கு இப்படி ஒரு குறைபாடா? குழந்தை எப்படி இருக்கா?”

“ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கும்மா… டாக்டர்ஸ் ஓரளவு ஹோப் கொடுக்கவும் தான் கிளம்பி வந்தோம்…”

“என்னடி பொண்ணு அவ?! இப்படிதான் குழந்தையை விட்டுட்டு போவாளா? அதுவும் அந்த பையன் மேல கேஸ் கொடுத்திருக்கான்னு சொல்ற அதுவரை நீங்கல்லாம் என்ன செய்துட்டு இருந்தீங்க?”

“ம்மா… எனக்கு அவளோட விஷயம் அவ்வளவா தெரியாதும்மா. இவ ஆறுமாசம் முன்னமே அப்ராட் போயிட்டான்னு கேள்விபட்டேன். நாங்க சொல்லி கேட்ககூடிய ஆள் கிடையாது அவ…”

“என்ன பெண்ணோ… ப்ச் வேலை வேலைன்னு சின்ன குழந்தையை விட்டுட்டு போறது நியாயமே இல்ல…” என்றவர், “சரிடா… இந்த பையனை பாரு,” என்று ஒரு புகைப்படத்தை காண்பித்து,

“அடுத்தவாரம் பெண் பார்க்க வரசொல்லியிருக்கோம்… உனக்கு ஓகேதானே?” என்றார்.

“சரிம்மா… எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு… குட்நைட்.” என்றவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

மேலும் சில வாரங்கள் கழிந்த நிலையில்…

“அம்மூம்மா… அந்த பெண்ணை பாருங்க,” என்று ப்ரணவ் திருமண மேடையின் நேர்கீழே நின்று தோழியிடம் பேசிக்கொண்டு இருந்த பெண்ணை சுட்டி காண்பித்தான்.

“ரெண்டு பேர் இருக்காங்களே… யாரை சொல்ற ப்ரணவ்?”

“அந்த ப்ளூ கலர் ஃப்ராக்ல இருக்க பொண்ணு அம்மூம்மா…”

அப்படியே அருகே இருந்த அபி, “டேய், அது ரொம்ப சின்ன பொண்ணா இருக்கேடா… எப்படி உங்கண்ணனுக்கு பொருத்தமா இருக்கும்?” என்று மகனை பார்க்க…

“ஆமா ராஜா ஸ்கூல் படிக்கிற பொண்ணு போலிருக்கு. ஒருவேளை ஃப்ராக் போட்டிருக்கிறதால அப்படி இருக்குமோ… எதுக்கும் நாம புடவையில் இருக்க பெண்ணையே தேடலாம்,” என்றார் நாயகி.

“அம்மும்மா… அண்ணாவுக்கு இல்லை எனக்கு…” என்று சிரிப்போடு சொல்லவும் “ப்ரணவ்..” என்று பல்லைகடித்த அபி,

“அக்கா உன்னால தான் இவன் குட்டிச்சுவரா போயிட்டு வரேன்… நான் வேண்டாம் சொல்லியும் இவனை கூட்டிட்டு நீ பொண்ணு தேடுறது கொஞ்சமும் சரியில்ல சொல்லிட்டேன்… தம்பிக்கு பார்க்க சொன்னா அவனுக்கு பார்க்கிறான்,” என்று மகனை முறைக்க…

“ம்மா சும்மா என்னையே திட்டாதீங்க உங்கப்பாவையும் மாமனாரையும் திட்டுங்க… கொஞ்சமும் பொறுப்பில்லாம போன அவங்களால இன்னைக்கு எனக்கு எவ்ளோ கஷ்டம்,” என்று அவன் சலித்துகொள்ள…

“எதுக்குடா எங்கப்பாவை இழுக்கற?”

“பின்ன என்னம்மா… உங்கப்பா ரெண்டு பொண்ணுங்களோடும்… உங்க மாமனார் ரெண்டு பையன்களோடும் நிறுத்திட்டாங்க. யாருக்காவது என்மேல பாசம் இருந்திருந்தா… இந்த தாத்தா ஒரு பையனையும் அந்த தாத்தா ஒரு பெண்ணையும் பெத்திருப்பாங்க… எனக்கும் வசதியா இருந்திருக்கும். ஆனா உங்களை மாதிரியே பாசமில்லாத தாத்தாங்களால எனக்கு எவ்ளோ கஷ்டம்…”

“என்னடா ப்ரணவ் சொல்ற…? ஒன்னும் புரியலை.”

“ம்ப்ச் ம்மா பொறுப்பில்லாத தாத்தாங்களாலதானே எனக்கு ஒரு அத்தை மாமாகூட இல்ல…”

“அதனால என்னடா குறைஞ்சு போச்சு?” என்று அவர் குரல் உயர்த்தவும்…

“ஷ்ஷ் அபி… அவன் ஏதோ சொல்ல வரான்… கொஞ்சம் பொறுமையா கேளேன்,” என்றவர், “நீ சொல்லு ராஜா…” என்றவரின் பார்வை திருமண மண்டபத்தில் இருந்த பெண்களின் மீது பதிந்திருந்தது.

அன்று திருவிடம் வசீகரனுக்கு தானே பெண் பார்ப்பதாக கூறியவர் ப்ரணவோடு சேர்ந்து கோவில், வெளியிடங்கள், திருமண மண்டபம் என்று தன் வேட்டையை அட்டகாசமாக தொடங்கியிருந்தார்…

“பின்ன என்னம்மா… தாத்தங்களுக்கு பாசம் இருந்திருந்தா… நாளைபின்ன நம்ம பேரன் உரிமையா சைட் அடிக்க ஒரு முறை பொண்ணுகூட இல்லாம கஷ்டப்படுவானேன்னு யோசிச்சு… எனக்காக அத்தை மாமாவை கொடுத்திருப்பாங்க… சரி தாத்தாங்க தான் அப்படின்னு பார்த்தா… நீங்களும்… உங்க பேரபசங்களுக்கு துரோகம் பண்ணிட்டீங்க…”

“என்னடா சொல்ற… நாங்க என்னடா பண்ணோம்? அதுவும் பேரபசங்களா அவங்க எங்க இருக்காங்க…” அவருக்கு அவன் பேச்சு மெல்ல புரிய…

“ப்ரணவ் என்கிட்டே அடிவாங்க போற நீ…” என்று அவர் அடிக்க ஏதேனும் கிடைக்கிறதா? என்று தேட…

“ச்சு அமைதியா இரு அபி… வந்த இடத்துலயும் குழந்தையை திட்டுவியா நீ?”

“அவன் கேட்கிறதும் சரிதானே… நான் அப்போவே உன்னை ஒரு பெண் குழந்தை பெத்துக்கோன்னு சொன்னேன்… நீ கேட்டியா?”

“அப்படி கேளுங்க அம்மூம்மா… கொஞ்சமும் பொறுப்பில்லாத தாத்தங்களை ஒரு வார்த்தை கேட்கலை… என்னை மட்டும் திட்டுறாங்க…” என்று நாயகியின் தோளில் சாய்ந்தவன்,

“நீங்களாவது அவங்களை ஒருவார்த்தை கேளுங்க…”

“யாரை கண்ணா?”

“வேற யாரை… திருப்பாவை தான்…” என்று சிரித்தவனுக்கு அழைப்பு வர… அபி அடிக்கும் முன்னமே விலகி சென்று அழைப்பை ஏற்றான்.

“பார்த்தியா? நீ கொடுக்கிற இடம் இப்போ என்ன பேச்சு பேசுறான்…”

“விடுடி… நம்ம வீட்ல அவன் தான் கடைசி. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு துணையா தங்கச்சி இல்லைங்கிற ஏக்கம் அவனுக்கு எப்பவும் உண்டு. அதை பெருசு படுத்துவியா?”
இவ்வாறு அக்கா தங்கைகள் இருவரும் ப்ரணவின் பேச்சில் மோதிக்கொண்டிருக்க… அங்கே வந்து சேர்ந்தவனிடம்,

“ப்ரணவ்… தம்புக்கு பெண் பார்க்க சொன்னா… நீ உனக்கு பார்ப்பியாடா?” என்று பல்லைகடித்தார் அபி.

“ம்மா… எப்படி இருந்தாலும் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு எனக்கும் பார்க்க தானே போறீங்க. அண்ணனோட சேர்த்து எனக்கும் பார்த்துட்டா… உங்களுக்கு ஈசியா இருக்குமேம்மா… இப்படி பெத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்காத ஐடியல் மகனை பாராட்டாம திட்டுறீங்க நீங்க?” என்றவன் நாயகியை அழைத்து மற்றொரு பெண்ணை சுட்டிகாட்டினான்.

அவன் பேச்சில் வாயடைத்துபோன அபி, “ஜித்தவை ஏன் விட்டுட்ட? அவனுக்கும் சேர்த்து பார்க்க வேண்டியதுதானே?” என்றார் கடுப்பாக…

“அதெல்லாம் அவனே பார்த்துட்டான்மா…” என்று ப்ரணவ் முணுமுணுக்க…

“என்னடா சொல்ற?” என்று பதறிபோனார் அபி.

“ம்மா எதுக்கு சும்மா டென்ஷனாகறீங்க? இப்போதான் ஜித்து ஃபோன் பண்ணியிருந்தான்… எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்களாம்,” என்ற அதே நேரம் மேடைக்கு வந்து சேர்ந்தாள் இழையாள்.

ஆஷ்மிதாவை அழைத்துக்கொண்டு மேடைக்கு சென்றவளை விஜயா அழைக்க, “எங்க போற? என்கூடவே இரு பிங்கி…” என்று ஆஷ்மி அவள் கையை பிடிக்க…

“சித்தி கூப்பிடுறாங்க வந்துடுறேன் இரு ஆஷ்மி…” என்று அவள் கையில் கர்சீப்பை கொடுத்தவள், “சொல்லுங்க சித்தி…” என்றாள்.

“நிச்சயத்துக்கு நேரமாச்சு… அக்கா மாமா கிளம்பிட்டங்களான்னு கொஞ்சம் கேளுடா…”

“சரி சித்தி…” என்று பார்கவிக்கு அழைத்து, விஜயாவிடம் கொடுக்க பேசிமுடித்தவர்,

“பிங்கி… அஜு எங்கே?”

“தெரியலையே சித்தி… அவன் பிரெண்ட்ஸ் வராங்க… ரீசிவ் பண்ணிட்டு வரேன்னு போனான்…”

“சரிம்மா… அவன் எங்க இருக்கான்னு பார்த்து… வீட்டுக்கு போயிட்டு வரசொல்லு… அவசரம்.”
“சரி சித்தி…” என்று அர்ஜுனுக்கு அழைத்தாள்.

இங்கே மேடையின் ஓரம் நின்று கைபேசியில் பேசிக்கொண்டிருந்த இழையாளை கண்ட நாயகியின் விழிகள் இமைக்கவும் மறந்திருந்தது…

அதை கண்ட ப்ரணவும் அவர் பார்வை வழியே பயணித்து, “வாவ்… சூப்பர் அம்மூம்மா… இவங்களை தவிர வேற யாரும் எனக்கு பொருத்தமான அண்ணியா இருக்க முடியாது…” என்றான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பிரணவ் நீ இருக்கதால் கதை ஜாலியா போகுது … இழை நாயகி கண்ணுல பட்டுட்டா … ஆனா வசீகரன் என்ன சொல்வானோ … இழையோட அந்த பிளாஷ்பேக் வசீ தானோ … அவனுக்கு நக்ஷத்ரா ஃப்ரெண்ட்னு இவளை பிடிக்காதோ …

  2. முகம் மறைத்த பெண் யார் என்று தெரியாமல் மீண்டும் ஒரு முறை அவளை மிரட்டிவிட்டுடான் வசி.

    ஏற்கனவே, அவனுடன் முன்பு நிகழ்ந்த ஏதோ ஒரு நிகழ்வின் பாதிப்பில் “கோபப்பட்டா பிடிக்காது, எனக்கு அது ஆகாதுனு”, சொன்னால் இந்த அம்மா கோந்து.

    கல்யாண ஆசைகள், எதிர்பார்ப்புகள் பற்றி கேட்ட போது, “தெரியல என்டு சொல்லி கோவப்பட்டா சமாளிக்க முடியாதுனு” ஒரே ஒரு விடயத்தை தான் சொல்லி இருந்தால் இழையாள்.

    இப்போ மறுபடி அவனது கோபத்தையே எதிர்கொண்டாயிற்று. அவள் தோழி மூலம், “சரக்கு அடிக்கும் பழக்கம் கொண்டவன்”, என்ற தவறான புரிதலும் வந்தாயிற்று.

    பிரணவ் உண்மையில் பாவம் தான், பொறுப்பில்லாத தாத்தாக்கள் மற்றும் பெற்றவர்கள் அமையப்பெற்றிருக்கின்றான்.🤭