Loading

 

பகுதி – 9

தயாளன் வீடு…….

பஞ்சு மெத்தையில் தயா சுகமான உறக்கத்தில் நித்ரா தேவியோட சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

அப்போது பயங்கரமாக காற்று அடித்தது. காரிருள் கண்களை கறுப்பாக்கியது. அப்போது அவன் வீட்டின் பால்கனியில் இரண்டு கருப்பு உருவம் வந்து பொத்தென குதித்தது. இருவரும் தங்களின் முகத்தை கருப்பு துணி கொண்டு கட்டியிருந்தனர். அவர்களின் கண்கள் மட்டுமே தெரிந்தது.

முதல் உருவம் டார்ச்சை ஆன் செய்திட இன்னோரு உருவம் கையில் ஒரு கர்ச்சீப்பை எடுத்து அதில் மயக்க மருந்தை கொட்டியது.

அந்த இரண்டு உருவமும் தயாவை நெருங்க போக  அவன் அசைந்து திரும்பி படுத்தான். இருவரும் அப்படியே அமர்ந்தனர். மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து அவனருகில் செல்லப்போக பால்கனி கதவு பூட்டி இருந்தது.

அவர்களோ திருதிருவென விழித்தனர் வந்த திட்டம் சொதப்பியதால்.

அப்போது தயாவின் அறைக்கதவு திறக்கப்பட இருவருக்கும் வியர்த்து விருவிருத்தது.

இன்னொரு உருவம் அவன் அறையினுள் நுழைந்தது. அது ஒரு பெண் உருவம்.  அது வேறுயாருமல்ல யாழினிதான்.

ச்சை இவளா என வசீமும் அஜ்ஜூவும் தலையிலடித்துக்கொண்டனர்.

பின் அவளே வந்து பால்கனி கதவை திறந்துவிட்டாள்.

அந்த இரு உருவமும் வேறு யாருமல்ல அஜ்ஜூ வசீம்தான். இருவரும் முகத்திலிருந்த மாஸ்கை அகற்றிவிட்டு பேசினர் ஹஸ்கி வாய்சில்.

அஜ்ஜூ எருமை உன்னனை கார்லதான வெட் பண்ண சொன்னோம்

யாழி மூஞ்சி நான் கார்ல இருந்தா நீங்க எப்படி உள்ள வந்துருப்பீங்க பால்கனி கதவு மூடிதான இருக்கும் அதை தொறந்துவிடதான் வந்தன்.

அஜ்ஜூ அட ஆமால நீ வந்ததும் நல்லதுதான் குட் கேர்ள்

வசீம் இதுக்கு எதுக்குடா நாம பைப் ஏறி வரனும் நாமளும் வாசல் வழியாவே வந்திருக்கலாமே

அஜ்ஜூ 🙄🤗☺️😄😅😁😁😃🤣  இந்த எல்லா ரியாக்ஷனையும் முகத்தில் காட்டினான்.

யாழி பாவம் பதட்டத்துல பைத்தியமாகிட்டான்

அஜ்ஜூ அது கடத்தல்னா இப்படிதான பண்ணனும்

தயா டேய் பேசாம வந்து படுங்கடா நை நைனுட்டு மனுசனை ராத்திரி கூட நிம்மதியா தூங்கவிட மாட்டிகிறானுங்க  தூக்க கலக்கத்திலேயே அவர்களை திட்டினான்.

மூவருக்கும் தூக்கிவாரி போட்டது தெரியாமல் கடத்தல் பண்ண வந்தால் இவன் தெளிவாக சொல்கிறானே என்று.

அஜ்ஜூ இவன் தூங்கலையா

யாழி ஆமா நீ இப்படி மைக்க முழுங்குறமாறி பேசுனா யாரா இருந்தாலும் முழிச்சிடுவாங்க அவள்தான் கத்தி பேசினாள்.

வசீம் யாரு இவன் மைக்க முழுங்குனானா நக்கலாக கேட்டான்.

யாழி பின்ன என்ன நானா

அஜ்ஜூ பின்ன இல்லையா

தயா எழுந்தனா செருப்பாலயே அடிப்பன் ஏன்டா கத்தி கத்தி பேசி டிஸ்டர்ப் பண்றீங்க கடத்ததான வந்தீங்க மூக்கில கரச்சீப வெச்சி தூக்கிட்டு போங்கடா

அடச்சி என்று நொந்த அமிர்த்தா லைட்டையே ஆன் செய்தாள்.

மூவரும்  பேந்த பேந்தவென விழித்தனர்.

தயா எழுந்து அமர்ந்துவிட்டான். அமி அவன் அருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கொட்டாவி விட்டாள்.

அண்ணா இங்க பாரேன் ரெண்டு பேரயும் இந்த கெட்டப்ல காமெடியா இருக்கானுங்க

தயா ஏன்டா கடத்தல் பண்ணதான வந்தீங்க இங்க வந்துட்டு என்னடா வாக்குவாதம்

அஜ்ஜூ மச்சா உனக்கு தெரியுமா எங்க பிளானு

தயா ஆமா பொல்லாத பிளானு ஏன்டா எனக்கு தெரிய கூடாதுனா என் கண்ணுல படுறமாறியே நீங்க இருக்க கூடாது நீங்க என்னடானா நான் அந்த பக்கம் திரும்புனா இந்த பக்கம் நீங்க ஒன்னு கூட முணுமுணுனு பேசிக்கிறீங்க நான் பார்த்தா சைலன்டாகிடுறீங்க இதுலயே எனக்கு தெரிஞ்சிடுச்சி

வசீ அது பிளான் பண்றோம்தான தெரிஞ்சிது என்ன பிளான் பண்ணோ எப்படி தெரிஞ்சிது

தயா டிடக்டிவ் வெச்சி கண்டு பிடிச்சன் எருமைங்களா எருமைங்களா   தயா கிட்னாப்  குரூப்னு ஒன்னு ஆரமிச்சி அதுல என்னையும் ஆட் பண்ணி வெச்சிருக்கீங்க நீங்க ஒரு மணி நேரமா போட்ட பிளானெல்லாம் நானும்தான் படிச்சன்

வாட் மூவரும் முழிக்க அஜ்ஜூவோ ஆந்தையைப்போல் சுற்றி சுற்றி பார்த்தான்.

அஜ்ஜூ அது ஒரு ஆர்வத்துல எப்பவும் ஒன்னாவே இருந்து கவனிக்காம அவனையும் ஆட் பண்ணிட்ட

அமி ஏன் லூசுங்களா உங்களுக்கு கூடவா தெரியலை நாலுபேர் குரூப்ல இருக்கீங்கனு

யாழி 🤗🤗🤗🤗 அது நாலுபேரா எப்பவும் இருந்து அது மைண்ட்ல செட் ஆகிடுச்சி நாங்களே பிரிய நினைச்சாலும் அது நடக்காது.

அமி த்தூஊஊஊஊஊஊ கேவலமான பிளான் உங்க பிளானை படிச்சி எனக்கு சிரிச்சி சிரிச்சி வயறு வலியே வந்திருச்சி. அண்ணாதான் லைவா பாரு இன்னும் காமெடியா இருக்கும்னு என்னை அவன் ரூம்ல ஒளிய வெச்சான்.

தயா பக்கீங்களா ஏன்டா பைப் ஏறி வந்தீங்க வாசல் வழியா வராம

அஜ்ஜூ மச்சி கடத்தல்க்குனு ஒரு வழிமுறை இருக்குடா எகிறி குதிச்சி பதுங்கி பதுங்கி வரனும்டா சாகம்லாம் பண்ணாதான ஒரு கெத்தா இருக்கும்.

சரி அப்போ என்னை எப்படி தூக்கிட்டு கீழ இறங்குவ

அஜ்ஜூ அது வாசல் வழியாவே தூக்கிட்டு போய்டுவன்

தயா அமி த்த்தூஊஊஊஊஊ

வசீம் இதுக்குதான் நான் முன்னயே சொன்ன இந்த பிளான்லாம் வேணானு கேட்டீங்களா

அமி ஆமா ரொம்ப நல்லவரு கூட்டு சேர்ந்து கும்மி அடிச்சிட்டு பேச்ச பாரு

அப்போது மணி பன்னிரண்டு ஆகப்போக வெயிட் வெயிட் என்று ஓடியவள் கையில் கேக்கோடு உள்ளே நுழைந்தாள்.

அவளே ஒரு கேன்டிலை அதில் ஏற்றி ஹாப்பி பர்த்டே அண்ணா என்று அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

எல்லோரும் பர்த்டே பாடல் பாட தயா கேக்கை வெட்டினான்.

பின் அனைவரும் அவனைக் கட்டிக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

முதல் பிஸை அமிக்கு கொடுக்க அவளோ அண்ணா நானே உனக்காக பண்ணது நீ முதல்ல சாப்பிடு என அவனுக்கு ஊட்ட தயாவோ அவள் கேக் செய்யும் லட்சனம் தெரிந்து முதல்ல உனக்குதான் பாப்பா நீ சாப்பிடு என அவளுக்கு ஊட்ட மற்ற

அஜ்ஜூ தான் அட முதல் பீஸ்  கேக்க யாரச்சும் தின்னு தொலைங்க நாங்களும் சாப்பிடவேணா மா என்றனர்.

தயாவோ பாசமாக அப்ப இந்தா மச்சா உனக்குதான் முதல் பீசு என அவனுக்கு  ஊட்ட அவனோ வாயை பிளந்துக்கொண்டு வர பெரிய பீஸாக அவன் வாயில் திணித்தான்.

அதுவோ கறுகிப்போய் தீஞ்சுப்போய் கசப்பாக இருந்தது அதில் வேறு புளிப்பு சுவையும் கலந்து இருந்தது.

அஷ்ட கோணலாக முகத்தை மாற்றியவன் இதுதான் உங்க பாசப்பிணைப்புக்கான காரணமா என்று கேட்டான்.

ஏனென்றால் தயாவும் சரி அமிர்தாவும் சரி கேக் பிரியர்கள் ஒரு துண்டை கூட மிச்சம் வைக்காமல் அருகில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் கூட இல்லாமல் கேக் அட்டையை கூட வழித்து நக்கிவிடுவார்கள். ஆனால் இன்று பாசமாய் இப்படி மாற்றி மாற்றி நீ சாப்பிடு நீ சாப்பிடு என்று சொல்லும்போதே சுதாரித்திருக்க வேண்டும்.

யாழி என்னடா அம்ரல்லா கசப்புலாம் கேக்குல கரெக்டா இருக்கா

வசீம் அமியோட கேக் பிரப்பரேஷனை தெரிஞ்சிதான நாங்கலாம் வாய மூடிட்டு நிக்கிறோம் நீ என்ன முந்திக்கிட்டு ஓடுற

அஜ்ஜூ அடே ஆளாக்கு டயலாக் பேசுறதை விட்டு தண்ணிய குடுங்கடா கசந்து தொலையுது

அமி அவ்ளோ கசப்பாவா இருக்கு என்று ஒன்றுமறியாததுபோல் கேட்டிட அஜ்ஜூ அவளை தீயாய் முறைத்தான்.

பின் தயாவே  எப்படியும் உங்க பிளான் சொதப்பிடும் யாரும் கேக்கும் எடுத்திட்டு வரமாட்டீங்கனு தெரியும்  அதனால என் பர்த்டேக்கு நானே கேக் வாங்கிட்ட என்று கட்டிலுக்கடியிலிருந்து ஒரு பார்சலை எடுத்தான்.

யாழியோ அட கேக்குகு பொறந்த பேக்கு

வசீம் உலகத்துலயே தன்னோட பொறந்தநாளுக்கு தானே கெக்குவாங்கி அதை சர்ப்ரைஸா வெச்சி வெட்றது நீதான்டா

அஜ்ஜூ அந்த கேக்க கொண்டா திம்போம்

அமி இது அடுத்த அல்பம்

இப்படி மாறி மாறி கலாய்த்து மீண்டும் ஒரு கொண்டாட்டம் இந்த கேக்கை ஆளாளுக்கு எனக்கு உனக்கு  என போட்டிபோட்டு எடுத்து சாப்பிட்டனர்.

யாழி தயாவின் முகத்தில் பூசவர அவனோ யாழி நோ உனக்கு பூசனும்னா அந்த தீஞ்ச தீவட்டிய எடுத்து  பூசு இதை கொடுத்திடு நான் சாப்பிட்டுறன் என்று அவள் கையிலிருந்து வாங்கி வாயில் போட்டுக்கொண்டான்.

அந்த தீஞ்சதை எடுத்து முகத்தில் பூசி விளையாடினர்.

வசீம் ஒரு பீஸ் கேக்கை எடுத்து சாப்பிட அமி அதை கண்களால் கேட்க அவனோ யாருமறியாது அவள் கையில் கொடுத்திட அமியோ வெட்க சிரிப்போடு வாங்கி சாப்பிட்டாள்.

தயாவும் யாழியும் வாக்கு வாதத்தில் இருக்க அதனை அவர்கள் கவனிக்கவில்லை. இதை பார்த்த அஜ்ஜூவிற்கோ இதயம் பலூன் போல் வெடித்தது. நெஞ்சில் கை வைத்து ஏதோ பார்க்க கூடாததை பார்த்துவிட்ட அதிர்ச்சியில் இருந்தான்.

யாழி சரி சரி வாடா போகலாம்

தயா எங்க போகலாம்

அஜ்ஜு கோவாக்குடா

தயா டேய் லேப் இருக்கு மறந்துட்டீங்களா

யாழி எல்லாருக்கும் ரிசல்ட் லேட்டாகும்னு மெயில் போட்டாச்சு ஒன் வீக்தான் வந்து பட்டுபட்டுனு பாத்து ரிசல்ட் குடுத்துக்கலாம் மூடிட்டு கிளம்பிவா

தயா ஓஓஓ அப்படியா அப்போ  பிளான் படி நீங்க என்னை தூக்கிட்டு பேகனும் என கையை காலை நீட்டி சாவகாசமாக படுத்துக் கொண்டான்.

அஜ்ஜூ எங்க பிளான்தான் எதுவுமே ஒழுங்கா நடக்கலையே

அமி இதையாச்சும் ஒழுங்கா பண்ணுங்க

வசீம் டேய் 70 கிலோ எருமை மாடே உன்னை தூக்குறது சாத்தியாமா நீவேற ஆம்ஸ் பை செப்ஸ் சிக்ஸ்பேக்னு வளரத்து வெச்சிருக்க அதான் முழிச்சிட்டல வாடா மூடிட்டு

தயா பர்த்டே பாய் விஷ்டா நிறைவேத்தனும் இல்லைனா உனக்கு பர்ஸ்ட் நைட் நடக்காது

இதைக்கேட்டு அமிக்குதான் புறை ஏறியது. யாழி அவள் தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தாள்.

வசீம் டேய் இது என்னடா புதுப் புறளியா இருக்கு

அஜ்ஜூ ஆமா மச்சான் அது உண்மைதான் உனக்கு பர்ஸ்ட் நைட் நடக்கனும்னு தயாவை தூக்கு

வசீ நீங்களும்தான பிளான் போட்டீங்க வாங்க ஆளுக்கொரு கைப்பிடிங்க 

யாழி நான் பொண்ணு பா. பொண்ணுங்களாம் வெயிட் தூக்க கூடாது வயித்து வலி வந்திடும். முதுகு பிடிச்சிக்கும் ஆம்பளை சிங்கங்கள் நீங்க தூக்குங்க நைஸாக கழண்டுக் கொண்டாள்.

அஜ்ஜூ டேய் எனக்குலாம் தினமும் பர்ஸ்ட் நைட்தான்டா சோ அது நடந்தாலும் கவலை இல்லை நடக்காட்டியும் கவலை இல்லை 

தயா  அடச்சி கருமம் புடிச்சவன தங்கச்சி முன்னாடி என்ன பேசுற விவஸ்தை கெட்டவனே

அஜ்ஜூ அவ மட்டும்  அண்ணன் முன்னாடி என்ன காரியம்  பண்ற

வசீம்க்கு பக்கென்று ஆனது அமியோ திருட்டு முழி முழித்தாள்

தயா டேய் தூக்குடா இல்லைனா கோவா பிளான் கேன்சல் என்று பேச்சை அவன் பக்கம் திருப்பிட

வசீமோ நொந்துக் கொண்டு  அவனை தூக்கினான்.

வசீயின் இருபக்க தோளிலும் தயா காலைப்போட்டு அமர அவன் தோளில் தயாவை தூக்கிக்கொண்டு கீழே வந்தான்.

அமியோ தனக்கு இன்டனல்ஸ் இருப்பதாகவும் ஹாஸ்டலில் ஒருவாரம் தங்கப்போவதாகவும் ஏற்கனவே சொல்லிவிட இவர்கள் நால்வரும்  மட்டும் கோவா கிளம்பினர்.

சந்தோஷமாக ஒரு வாரத்தை செலவிட்டு வந்தவர்களுக்கு பெரும் இடி காத்திருந்தது. அவர்களின் அஸ்திவாரத்தையே அசைத்து போட்டிருந்தாள் அவள். வெறும் ஒரே வாரத்தில்.

______________

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்