Loading

அத்தியாயம் 8

சூர்ய சித்தாந்தன் தனக்குக் கொடுத்த புது வேலையை வெகு ஆர்வமாகச் செய்து கொண்டிருந்தாள் மௌனி ஆதிரா.

தனது அசிஸ்டண்டாக வினயனும், ஜனனியும் வேலை செய்ய வேண்டுமென நிபந்தனை வேறு.

“ஏய் மௌனி… நீ உன் ஓவர் பிரில்லியன்ஸைக் காட்டி வைக்காத. கண்டுபிடிச்சுடப் போறான்.” அவளுக்கு பைலை எடுத்துக் கொடுக்க உதவும் சாக்கில் அவளிடம் கிசுகிசுத்தான் வினயன்.

“நான் காட்டலைன்னா, அவன் ஒரு காட்டுக் காட்டிடுவான்டா… தீயில இறங்குனதுக்கு அப்புறம் சுடும்னு பயந்தா எப்படி?” மௌனி ஆதிராவின் தத்துவத்தில், “ஆனா ஒன்னுடி… சாவு கன்பார்ம். அது நம்ம சைட் இருந்து வருமா, அவன் சைட் இருந்து வருமான்றது தான் சஸ்பென்ஸா இருந்துச்சு. பட் அதுவும் இப்ப க்ளியர் ஆகிடுச்சு.” என்றவனை நிமிர்ந்து புரியாமல் பார்த்தாள்.

“புரியல… உன் வாயால தான் வரும். உன் ஜொள்ளு மழைல மூச்சடைச்சு எங்களையும் சாவடிக்கப் போற.” என்றான் முறைப்பாக.

“ஜொள்ளு நான் மட்டும் தான் விடுறேனா… ருஹானா ரூமுக்குள்ள நுழைஞ்சாலே கழுத்து வரை கடல் தண்ணி மாறி நிறைஞ்சு இருக்கு உன் ஜொள்ளு. வந்துட்டான் பேச…” என இருவரும் காரசார விவாதத்தில் இருக்கும் போதே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு புயலாக அறைக்குள் நுழைந்தான் சூர்ய சித்தாந்தன்.

கூடவே, அங்கிருந்த வினயனின் மீதும் அடர்ந்த பார்வை வீசியதில், தானாகவே அவன் அட்டென்சன் மோடிற்கு வந்திருந்தான்.

“பைல் வாங்க வந்தேன் சார். ஜஸ்ட் ஹெல்ப் பண்ணலாமேன்னு…” எனத் தானாக உளறியும் இருக்க, “அவன் தான் ஒண்ணுமே கேட்கலையேடா…” எனக் காலை மிதித்தாள் மௌனி.

“எனக்கு கேட்ட மாதிரியே இருந்துச்சுடி!” என விழித்தவனை வாசல் நோக்கிக் கண்ணைக் காட்ட, பைல்களை அள்ளிக் கொண்டு அவன் ருஹானாவின் அறைக்கே ஓடி விட்டான்.

அதன்பிறகே, ‘ஆமா, இப்ப நான் ஏன் ஓடி வந்தேன். இத்தனைக்கும் அவன் ஒரு வார்த்தை கூடப் பேசல…’ எனத் தலையைச் சொரிந்தான்.

‘நோக்கு வர்மம் தெரிஞ்சவனா இருப்பான் போல. எதுக்கும் இனிமே நம்ம அவனை பேஸ் பண்ணாம பார்த்துக்கணும்.’ என்று சபதம் எடுத்தபடி கோப்பில் புதைந்தான்.

இங்கோ ஜனனியும் ஒரு கோப்பைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏதோ நினைவில் நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருந்த அர்னவ் தேவின் இறுகிய விழிகள், தனக்கு எதிரில் அமர்ந்து சுருண்ட முடியை இன்னும் கொஞ்சம் சுருட்டியபடி யோசித்துக் கொண்டிருந்த ஜனனியின் மீது பதிந்தது.

“என்னாச்சு?”

அவனது கேள்வியில் நிமிர்ந்தவள், “நத்திங்” எனக் குழப்பத்துடன் கூற, “எதுவும் சஸ்பீஷியஸா இருக்கா?” என்றான் மீண்டும்.

“சஸ்பீஷியஸா இல்ல சார். அதான் குழப்பமா இருக்கு.” என்றவளைப் புரியாது பார்த்தான்.

“இதோ பாருங்க… எல்லா எம்ப்ளாயிஸோட பேங்க் ரெகார்ட், போன் ரெகார்ட் எல்லாமே க்ளீனா இருக்கு. இப்பலாம், ஒரு சின்னப் பொருள் கூட ஈ.எம்.ஐ ல தான் வாங்குறாங்க. அதெப்படி சார், உங்க ஆபிஸ்ல ஒர்க் பண்ற எம்பிளாயிஸ் ஒரு லோன் வாங்காம இருக்க முடியும். பிராபிட் ஷேர் குடுத்தால் கூட அதுக்கு பாசிபிள் இல்லைல?” என்றவளின் கேள்வியில் அவளது நுணுக்கமான அணுகுமுறை புரிந்தது. சிறு விழியுயர்த்தலும் அவனிடம்.

அவன் அமைதியாக இருந்ததில், “லோன் இருக்குறவங்களை விட்டுட்டு இல்லாதவங்களை நோட்டீஸ் பண்ணலாமா?” அவளே கேட்க,

“ம்ம்ஹும்… லோன் க்ளோஸ் பண்ணவங்க, லோன் வாங்கிருக்குறவங்களை விடு. முதல்ல இந்த ஆபிஸ்ல சேர்ந்ததுல இருந்து லோனே வாங்காம ஐ போன், ஐ பாட், காஸ்ட்லீ வாட்ச்னு பல்கா செலவு பண்ணிருக்குற ஆளுங்களை நோட் பண்ணு.” என்றான்.

“ஆனா, அவங்க சாலரில இருந்து வாங்குனதா கணக்கு காட்டிருந்தா?”

“அந்தக் கணக்கை க்ராஸ் செக் பண்ணு. அக்கவுண்ட்ஸே தப்பா இருந்தா…” என்றவனின் எதிர்கேள்வியில் அவளது புருவம் பாராட்டாய் உயர்ந்தது.

அடுத்த நான்கு நாள்களும் இதே வேலையாகவே கழிந்தது.

ஆனாலும், யாரையும் தனித் தனியாகச் சந்தேகப்பட இயலாதவாறு குழப்பமாகவே இருந்தது.

“ஜி… சந்தேகம்னு பார்த்தா ஆபிஸ்ல இருக்குற எல்லார் மேலயும் படனும் போல. ஆல்ரெடி ரெண்டு அட்டாக் நடந்துடுச்சு. இன்னொன்னும் நடக்குறதுக்குள்ள, ரெண்டு நாளைக்கு ஆபிஸ், பேக்டரிக்கு லீவ் விட்டுட்டு, நம்ம ஆற அமர இதைச் செஞ்சா என்ன? நெக்ஸ்ட் யார் அட்டாக் பண்ண வருவான்னு எல்லாரையும் சந்தேகத்தோட பார்க்குறதுனால மூளை சரியா வேலை செய்ய மாட்டேங்குது. தப்பான ஆளை ஹோல்டு பண்ணிட்டா, நீங்க வேற எனிமியைத் தூண்டி விடுவேன்னு பயமுறுத்துறீங்க…” என உதட்டைச் சிலுப்பினாள்.

“நீ எந்த வேலையும் பார்க்காம இப்படி வெட்டி ஐடியா குடுத்தா கூட உனக்கு டேஞ்சர் தான்!” அமைதியாக அதே நேரம் அழுத்தமாகக் கூறியவனைக் கண்டு நொடித்தவள், “உயிருக்கு ஆபத்து இல்லாம பர்ஸ்ட் இதை சார்ட் அவுட் பண்ணிட்டு ஆபிஸ் வரலாம்லனு சொன்னேன்… அது தப்பாக்கும்.” எனப் புலம்பியபடி மீண்டும் வேலையில் மூழ்கிட சூர்யாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“அப்புறம் ஒரு டவுட்டு…” மீண்டும் அவளது கேள்வி அவனது சிந்தனையைக் கலைத்தது.

“ஆக்சுவலி உங்க எதிரி தான் யாரு? எதுக்காக இந்த அட்டாக்? இதெல்லாம் தெரிஞ்சா தான உங்களை யார்கிட்ட இருந்து காப்பாத்தணும்னு ஒரு ஐடியா கிடைக்கும்…” என்றதில், “நேரம் வரும்போது தெரிஞ்சுக்கோ! இப்ப உன் வேலையைப் பாரு.” என கடுகடுத்தான்.

இதே கேள்வியை வினயன் ருஹானாவிடமும் வினவினான்.

“ஆபிஸ்குள்ள ஆள் வச்சு அட்டாக் பண்ற அளவு எவனுக்குத் தைரியம் இருக்கு பாஸ்?”

ருஹானா தனது அடர்ந்த புருவத்தை நெறித்தாள். சித்தாந்தன் க்ரூப் எல்லைக்குள்ள வரவே எல்லாரும் நடுங்குவாங்க. இப்போ… கையை இறுக்கி மூடியவளின் முகம் எல்லை மீறிய சினத்தில் சிவந்தது. எல்லாம் சூர்ய சித்தாந்தனின் மீது தான்.

அவனால் எத்தனை இழப்புகள்! தன் வீட்டிற்கு அவன் வரும் போதெல்லாம் தனக்கு அளவுக்கு மீறிய காயத்தைக் கொடுத்து விட்டு, இப்போது ஜம்பமாக தங்களின் பதவியில் அமர்ந்திருக்கிறான். வயிறு எரிந்தது.

அதைக் கூட விடாது சைட் அடித்து வைத்த வினயன், “பாஸ் பாஸ்…” என இரு முறை அழைத்தபிறகே கண்ணைச் சிமிட்டி நிகழ்விற்கு வந்தவளிடம், “உங்க எனிமி யார்னு சொல்லுங்க பாஸ், ஒரு கை பார்த்துடலாம்.” என்று நம்பியார் தோரணையில் கேட்டதில், “சித்தாந்தன் எம்பயருக்கு நிகரா, மல்டி பிசினஸ்ல கொடி கட்டிப் பறக்கிறது இந்தியால ரெண்டே கம்பெனி தான். ஒன்னு மோனா க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்…” என்றதும் திருதிருவென விழித்தான்.

“இன்னொன்னு, பி. ஆர். இண்டஸ்ட்ரீஸ். இதுல மோனா குரூப்ஸ் ஓட பிசினஸ் எல்லாமே வேற தான். ஆனாலும், அந்த பவுண்டர் மிஸ்டர் மதன்ராஜ், கொஞ்ச நாளாவே எங்களுக்குக் குடைச்சல் குடுக்க ஸ்டார்ட் பண்ணாரு. ஐ டோண்ட் நோ ஒய்… அவரை ரெண்டு மூணு பிசினஸ் பார்ட்டிஸ்ல நான் பார்த்திருக்கேன். அவரைப் பார்த்தவரை எங்களை எதிரியா நினைச்சுப் பேசுனபோல தோணல. பட், எங்களை அட்டாக் பண்ண ஒருத்தனைப் பிடிச்சப்போ அவன் சரண்டர் ஆகிட்டான்.

மதன்ராஜும் அதை ஒத்துக்கிட்டாரு. அப்புறம் தான் தெரிஞ்சுது, எங்க பெரியப்பா சந்திரசேகருக்கும், அவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஆகிடுச்சுன்னு.” எனப் பேசிக்கொண்டே செல்ல, மற்றையதை எல்லாம் விட்டுத் தள்ளியவன், “பிசினஸ் பார்ட்டிக்கு வந்திருக்கீங்களா? உங்களை நான் பார்த்ததே இல்லையே” என வாயை விட்டான்.

“பொதுவா நானும், அர்னுவும் எங்களை எக்ஸ்போஸ் பண்ணிக்கிட்டது இல்ல. மோஸ்ட்லீ பெரியப்பா தான் அதெல்லாம் அட்டென்ட் பண்ணுவாங்க. மீடியா வராத பார்ட்டிஸ் மட்டும் தான் நாங்க போவோம். அதுவும் ரேர் தான்!” என்றவள் சட்டெனப் புருவம் சுருக்கி, “நீ எப்ப பிசினஸ் பார்ட்டிஸ்க்கு வந்த?” என கூர்மையாகக் கேட்டாள்.

‘அய்யய்யோ! உளறிட்டோமே…’ என உள்ளுக்குள் கதறியவன் வெளியில் சிரித்தபடி, “நானா… நான் போய் எப்படி பார்ட்டிக்குலாம் வர முடியும். நானே அன்றாடங்காய்ச்சி…” என ஏழை போலப் பாவமாகப் பேசியவன், “அது… பிசினஸ் சம்பந்தமான எந்த சேனல்லயும் உங்களைப் பார்த்தது இல்லையே, அதைக் கேட்டேன்.” என்றதும் தான் அவள் புருவம் சீரானது.

“ம்ம்!”

“அப்போ அந்த பி.ஆர் இண்டஸ்ட்ரீஸ்?” அவன் இன்னும் துருவலை விடவில்லை.

“இப்ப முக்கியமான குடைச்சல் அவன் தான். ஏன்னா, அவனும் கார் தயாரிக்கிறதுல பெஸ்ட் சர்வீஸ் பண்ணிட்டு இருக்கான். லாஸ்ட் இயர் நடந்த குவாலிட்டி செக்ல அவனை விட நாங்க ஒரு படி முன்னாடி இருக்கோம்னு தெரிஞ்சதுல இருந்து, எங்க குவாலிட்டியைக் குலைக்க எங்களோட எல்லா பிஸினஸையும் டார்கெட் பண்ணான். நானும் அர்னுவும் சும்மா விடல. எங்களை அட்டாக் பண்ண வந்தவங்களையும், எங்களோட பிஸினஸ்ல பிரச்சினை பண்றவங்களையும் பிடிச்சு…” எனும்போதே,

“சூப்பர் பாஸ்… ஜெயில்ல போட்டீங்களா?” என ஆர்வமாகக் கேட்டதில், அவனை மேலும் கீழுமாகப் பார்த்தவள், “அவங்களையே போட்டாச்சு…” என்றாள் அசட்டையாக.

ஒரு கணம் ப்ரீஸ் மோடிற்குச் சென்றவன், “உங்களுக்குக் குசும்பு பாஸ்… வயலன்ஸ் பண்ற முகமா இதெல்லாம். பச்சை மண்ணு பாஸ் நீங்க… அதுவும் இல்லாம நீங்க ஏன் தனியா கொலை பண்ணனும், அந்தக் கத்தி ஐப்ரோஸை லைட்டா தூக்கிக் காட்டுனாலே, எதிர்ல இருக்கறவன் கத்தி இல்லாம செத்துருவான். அப்படி ஒரு ஷார்ப்பு…” என நெஞ்சைப் பிடித்து ரசித்துக் கூறியதில் அவள் திடுக்கிட்டாள்.

“யூ மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!” ருஹானா ஜியா விரல் நீட்டி எச்சரிக்க, அந்தத் தளிர் விரல்களைப் பிடித்து முத்தம் வைக்க உந்தியது உள்ளம்.

‘சைட்டிங்ல கிஸ் எல்லாம் வருமா? அட வரட்டும்… காசா பணமா… கிஸ் வரைக்கும் போகலாம் தப்பில்ல.’ எனத் தனக்குத் தானே மோட்டிவேட் செய்து கொண்டான்.

“சரி சரி, கோபப்படாதீங்க. ஒரு பொண்ணோட அழகை ரசிக்கிறது ஒரு ஆண்மகனோட கடமை ஜியா பாஸ்…” என்றான் தலை குனிந்து.

“அப்படி ரசிக்கிற கண்ணைக் குத்திக் குழி தோண்டுறதும் ஒரு பொண்ணோட உரிமை மிஸ்டர் வினயன்!” என நக்கலாகக் கூறியதில், அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

“சரி, இப்ப பி. ஆர் இண்டஸ்ட்ரீஸும், மோனா இண்டஸ்ட்ரீஸும் தான் பிரச்சினையா?”

“ம்ம். ஐ திங்க் சோ!”

“ஓகே டன்…” என்றவன் விஷயத்தை அப்படியே மௌனி ஆதிராவிற்கு ஃபார்வர்ட் செய்தான்.

அதனைக் கண்ட மௌனி ஆதிராவின் முகத்தில் சிறு திகைப்பு. ஆகினும், ‘ஹ்ம்ம்… அவளைப் பாரு, எவ்ளோ சமத்தா கேட்டதும் விஷயத்தைச் சொல்லிருக்கா… இந்த ஜி’யும் தான் இருக்காரே. புடிச்சு வச்ச புள்ளையாராட்டம். இவரைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விட்டா தான், நம்ம சைட் அடிக்க கரெக்ட்டா இருக்கும்…’ என்றவள் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“ஹே பாய்ஸ்… என் அப்பாவோட எதிரி லிஸ்ட்ல சித்தாந்தன் கம்பெனிஸ் இருக்கா?”

அவளுக்காகவே வேலை செய்யும் பணியாளர்கள் உடனடியாகச் சோதித்து, “எஸ் மேம்… கடந்த ஆறு மாசத்துல நிறைய முறை பொருள் சேதம் ஏற்படுத்தி இருக்காரு.” எனத் தகவல் தர,

“பைன்… நம்ம ஆளுங்களை ரெடி பண்ணி, அவர் என்ன என்ன பொருள் இங்க சேதம் பண்ணிருக்காரோ, அதெல்லாம் மிச்சம் வைக்காம அவருக்குப் பண்ணி வச்சுடுங்கப்பா… அவரோட எல்லா பிஸினஸ்லயும் ஒரு அடி இருக்கனும். நம்ம புட் இண்டஸ்ட்ரியும் விட்டு வைக்காதீங்க. அப்புறம் சந்தேகம் வந்துடும்.” என விளக்கியதில்,

“பட், மேம்…” எதிர்முனையில் கேள்வி வரும் முன்னே, “நோ மோர் குவெஸ்ட்டீன்ஸ்…” என்று தடுப்புப் போட, அதை எதிர்த்துக் கேள்வி கேட்க குழுவினருக்குத் தைரியம் இல்லை.

பின் அவளே, “தென் பி.ஆர் இண்டஸ்ட்ரீஸ் சிஇஓ ராபர்ட்டை நான் மீட் பண்ணனும். எனி ஆப்ஷன்ஸ் கைஸ்?” என வினவிட,

“இப்போ யாரையும் மீட் பண்றது சேஃப் இல்ல மேம். ஆல்ரெடி மதன்ராஜ் சார் உங்களை ரொம்பத் தீவிரமா தேடிட்டு இருக்காரு.”

“ஓகே பைன்…” என சிந்தித்தபடி அலைபேசியை வைத்தவளுக்கு அப்புறம் தான் உறைத்தது, சூர்ய சித்தாந்தனுக்கு அருகிலேயே அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பது.

அவன் காந்த விழிகளால் அவளை ஊடுருவ, அசடு வழிந்தவள் அலைபேசியை ஓரமாக வைத்து விட்டு கோப்பில் தலையை நுழைத்தாள்.

‘அங்க சுத்தி இங்க சுத்தி, எங்க அப்பாவுக்கு எதிராவே பண்ண வைக்குது இந்த விதி. அந்த ஆளு என்னைக்கு என்னைப் போட்டுத் தள்ளப் போறானோ? வாட் அ டிஸ்கஸ்டிங் வாழ்க்கை!’ எனத் தனக்குத் தானே நக்கலடித்துக் கொண்டவளை நிகழ்விற்குக் கொண்டு வந்தது சூர்ய சித்தாந்தனின் கேள்வி.

“ஏதாவது கண்டுபிடிச்சியா இல்லையா?”

“ஹான்? எதை? எதைப் பத்தி?” அவள் படபடக்க,

அவளது பதற்றத்தை விழிகளால் துழாவியவன், “இங்க இருக்குற எம்பிளாயிஸ் பத்தி தான். அந்த வேலை தான பார்த்துட்டு இருக்க?” என்றதும், “ஆ… ஆமா ஆமா…” என்றபடி அவனறியாது பெருமூச்சு விட்டாள்.

“எதையாவது கண்டுபிடிச்சு சொல்லலைன்னா, அப்புறம் இவன் பார்வையாலேயே பொசுக்கிடுவான் போல.” எனப் பரபரத்தபடி வேலையில் மூழ்கியவளுக்குச் சிறு சந்தேகம் முளைத்தது.

“ஜி… நான் பேக்டரில போய் எல்லா எம்பளாய்சையும் ஒரு ரோந்து பண்ணிட்டு வரவா… நேர்ல பார்த்தா கொஞ்சம் ஐடியா கிடைக்கும்.” என வினவ, அவன் தலையை மட்டும் அசைத்தான்.

அதில் அவளும் தொழிற்சாலைக்குச் சென்று விட, அவள் சென்ற திசையை இதழ் வளைத்து ஏறிட்டவன், “பார்ப்போமே… மௌனி ஆதிரா மதன்ராஜோட பிரில்லியன்ஸ் இன்னும் எவ்ளோ டீப்பா இருக்குனு. ஐ லைக் திஸ் கேம் லிட்டில் கேர்ள்!” என்றவனின் விழிகளில் ஆதிக்கம் நிரம்பி வழிந்தது.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்