
அத்தியாயம் 7
கையில் மதுக்குவளையுடனும், கண்ணிற்குக் கீழே ஏற்பட்ட காயத்துடனும் வெறி பிடித்தவன் போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான் ஆரோன்.
சொகுசு பங்களாவின் குளிர்ந்த நீச்சல் குளத்தில், பிரதிபலித்த அவனது பிம்பத்தின் வெப்பம் தாளாது நீரும் சூடானது.
அவனது கையில் சுற்றப்பட்டிருந்த மஞ்சள் தாலியின் ஈரம் அவனை அதிகம் சினப்படுத்தியது.
“ஆரோன், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு…” மத்திய அமைச்சர் சௌரப் மகனை நிதானப்படுத்த முயன்றார்.
“எப்படி? எப்படி டேடி ரிலாக்ஸ் ஆக முடியும்? எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சுட்டுப் போயிருப்பா… என் கண்ணுல மண்ணைத் தூவிட்டுப் போய் மூணு நாளாச்சு… இன்னும் ஒருத்தனாலயும் அவளைக் கண்டுபிடிக்க முடியலைல? இன்னைக்கு எனக்கும் அவளுக்கும் ரிசப்ஷன்னு டாப் க்ளாஸ் ஆளுங்களை இன்வைட் பண்ணியாச்சு. திடீர்னு அவளுக்கு உடம்பு சரி இல்லைனு பங்க்ஷனை கேன்சல் பண்ணிட்டதா ஒவ்வொருத்தரையும் நம்ப வச்சு… ச்சே! உண்மை தெரிஞ்சா என் மானம் போயிடும் டேடி. என் மானம் மட்டும் இல்ல, உங்க மானமும் சேர்ந்து தான்!”
“அவளை… அவளைக் கொன்னே போட்டிருக்கணும்…” எனக் கொதித்தவனுக்கு ஆற்றாமை தாளவில்லை.
“அவளை வலை வீசித் தேடிட்டு தான் இருக்கோம் ஆரோன். அவளோட பிசினஸ் எனிமிஸ்ல இருந்து, ஏன் அவளோட சொந்தக் குடும்பமே அவளைக் கொலை பண்ற எண்ணத்துல தான் இருக்காங்க. நம்ம எல்லைல இருந்து பறந்து போகணும்னு நினைச்சது அவளோட முட்டாள்தனம். பட் இப்ப அவளைக் கொன்னுட்டா, ரிசப்ஷன் வைக்காததுக்கும், உன் கல்யாண போட்டோசை இன்னும் வெளி உலகத்துக்குக் காட்டாததுக்கும், ஏதேதோ காரணம் வச்சுப் பேச ஆரம்பிச்சுடும் இந்த மீடியா.”
“அவள் வரணும்… கல்யாணம் ஆன அரை மணி நேரத்துக்குள்ள, நீ கட்டுன தாலிய உன் மூஞ்சில வீசி எறிஞ்சுட்டுப் போனவ, திரும்ப வரணும். இங்க மருமகளா வரணும். அவளோட திமிர்த் தனத்தை வச்சே அவளுக்குப் பாடம் சொல்லிக் குடுத்துட்டு, எதிரி கையால செத்துட்டான்னு நம்மளே கொன்னு போடணும். உன்னை அவமானப்படுத்திட்டுப் போனவளுக்கு நான் பதிலடி குடுக்காம சாக விடமாட்டேன். எந்த எதிரிகிட்ட இருந்து தப்பிச்சாலும், என்கிட்ட இருந்து அவள் தப்பிக்கவே முடியாது.” என இப்போது சௌரபும் இணைந்தே சீறி இகழ்ச்சி நகை புரிந்தார்.
உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே…
பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இணையாதே…
உலகத்தின் வலியெல்லாம்
வந்தால் என்ன உன்முன்னே
பிரசவத்தின் வலியை தாங்க
பிறந்த அக்கினி சிறகே!
எழுந்து வா…
உலகை அசைப்போம்!
உயர்ந்து வா…
அக்கினி சிறகே
எழுந்து வா…ஆ…ஆஆ…
என ஹை பிட்சில் பாடிக் கொண்டிருந்த மௌனி ஆதிராவின் முதுகில் ஒரு சேர அடித்தனர் ஜனனியும், வினயனும்.
“ஆஆ… எருமைங்களா…” மௌனி முதுகை நெளிக்க,
“மிஸ் அக்கினி ஃபெதர், கொஞ்சம் எழுந்து வாங்க… சாப்பிடப் போவோம். உசுருக்குப் பயந்து ஓடி வந்துட்டு, அக்கினிச் சிறகு பாட்டுலாம் நமக்குத் தேவையா தங்கை?” என வினயன் முறைக்க,
“தேவை இல்ல தான். ஆனா எனக்கு இந்த கியூட் பாய் ரூம்ல இருந்தாலே தூக்கமா வருது தமையா… அதான் தூக்கத்தைப் போக்குறதுக்காக என்னை நானே மோட்டிவேட் பண்ணிட்டு இருந்தேன். அதுல கேஸ்டர் ஆயில் ஊத்த நீங்க வந்துட்டீங்க…” என்று சலித்துக் கொண்டாள்.
“ம்ம்க்கும்” ஜனனியும் நொடித்துக் கொண்டாள். பின் அவளே, “நம்ம மூணு இம்சையும் மீட்டிங் போயிருக்காம். வர ஒரு மணி நேரம் ஆகுமாம். அதுவரை நம்ம ஃபன் பண்ணலாம் மௌனி…” என அவளை கேண்டீனிற்கு இழுத்துச் சென்றாள்.
மூவரும் தத்தம் உணவை வாங்கி உண்டபடி இருக்க, வினயன் தான் ஆரம்பித்தான்.
“மௌனி… சென்ட்ரல் மினிஸ்டர் சௌரப், அதான் உன் எக்ஸ் மாமனாரு, ரிஷப்ஷனை கேன்சல் பண்ணிருக்காரு. ஆனால் இன்னுமே கல்யாணத்துல நடந்த மேட்டரைப் பத்தி வாயே திறக்கலை. அவன் ஏதோ பிளான் பண்றான் மௌனி. ஆரோனும் லேசுப்பட்டவன் இல்ல…” எனப் பேசிக் கொண்டே செல்ல அவனைத் தடுத்து நிறுத்திய மௌனி ஆதிரா, “ஆமாடா! அவன் லேசானவன் இல்ல, கொஞ்சம் ஜிம் பாடி போல. பன்ச் பேக்ல அடிச்ச மாதிரி மூஞ்சில ஒரு குத்து விட்டேன், கொஞ்சம் கூட அசரல பாரேன்…” என்று சிரித்து வைத்தாள்.
“வெறுப்பேத்தாத மௌனி… உன் கல்யாணம் இப்படி ஆகியிருக்கக் கூடாதுன்னு உள்ளுக்குள்ள அவ்ளோ கஷ்டமா இருக்கு. நீ…” அவன் பேசி முடிக்கும் முன்,
“இப்படியாவது ஆச்சேன்னு சந்தோஷப்படு வினய். அவனை நம்பி நான் அவன் வீட்டுக்குப் போயிருந்தா, நம்ம புட் பேக்டரில விஷத்தைக் கலந்து நமக்கே குடுத்திருப்பான். பரதேசி டாக்… சாப்பிடும்போது ஏன்டா அந்த டாகைப் பத்திப் பேசுற” என முறைத்தாள்.
ஜனனி தான், வினயனுக்குக் கண்ணைக் காட்டி அமைதி காக்கச் சொன்னாள்.
அவளுக்கும் தமக்கையின் திருமணம் ஒரே நாளில் முடிந்த வேதனை அரிக்கத் தான் செய்தது. ஆகினும், மௌனி அதற்காகவெல்லாம் வருத்தப்பட்டுத் தனது மனநிம்மதியைக் கெடுத்துக் கொள்ளும் ஆள் அல்ல. வீணாக அவளுக்கு அறிவுரை கூறுவதும், ஆறுதல் கூறுவதும் அவளைப் பொறுத்தவரை நேர விரயம் தான்.
தனது குடும்பத்தாருக்கு அரசியல்வாதி பேய் பிடித்து ஆட்டுகிறது என்றே எரிச்சலடைந்தவளுக்கு அர்னவ் அழைக்க, “அய்யய்யோ! இவன் வந்துட்டான் போலடி. சரி நான் போய் என் டியூட்டியைப் பார்க்குறேன்.” என்று ஓடி விட்டாள் ஜனனி.
“ஹ்ம்ம்… நம்ம ஆளுங்க நமக்கு ஒரு போன் கூட பண்ண மாட்டுறாங்க பாரேன்!” என வினயன் குறைப்பட்டுக் கொண்டான்.
“ம்ம்க்கும்… காலைல நடந்த கலவரத்துக்கு, உன் ஆளுக்குப் பாடையே கட்டிருக்கணும் தமையா… கூடவே என் ஆளு உனக்கும் பாடை கட்டிருப்பான், மிஸ் ஆகிட்ட.” என குலுங்கிச் சிரித்தவளைத் தீயாக முறைத்தவன், “நானே பெர்பார்ம் பண்ண சான்ஸ் கிடைச்சும் மிஸ் ஆகி, நீ இடையில புகுந்து ஹீரோயினிசம் பண்ணிட்டியேன்னு கடுப்புல இருக்கேன். கொய்யால…” எனப் பல்லைக் கடிக்க, இருவரும் கிண்டலுடன் வாரியபடி உண்டு முடித்துத் தத்தம் முதலாளியிடம் சென்றனர்.
ருஹானா, அடுத்த மூன்று நாள்களுமே வெகு அமைதியுடனே இருந்தாள். கூடவே வினயனிடம் சிடுசிடுக்கவும் தவறவில்லை.
அலுவலகத்திற்குத் தானும் வருவதாகக் கூறினாலும், அவனை அடுத்த அடுத்த நாள்களும் ஆட்டோவிலேயே தான் வரவழைத்தாள்.
அவனும் பொறுத்துப் பார்த்து விட்டுப் பின், நான்காம் நாளிலிருந்து அவள் கிளம்புவதற்கு முன்பே ஒரு ஆட்டோவில் ஏறி விடுவான். அந்த ஆட்டோ அவளை ஓவர்டேக் செய்யவும் விடாது, வேகமாக ஓட்டவும் விடாது.
“ஷிட்!” என ஸ்டியரிங்கைக் குத்திய ருஹானா ஜியா, “ஹே! எதுக்கு இப்ப ஹைவேஸ்ல ஆட்டோல ஊர்வலம் போயிட்டு இருக்க?” என வினயனுக்கே அழைத்து எரிந்து விழ,
“உங்களுக்கு முட்டைக்கோஸ், ச்சீ… பந்தகோஸ் குடுக்கணும்ல பாஸ்… அதான், உங்களை அப்படியே அரவணைச்சு…” எனும்போதே “என்னது?” எனக் கொந்தளித்தாள்.
“ஐ மீன் உங்க காரை அரவணைச்சுக் கூட்டிட்டுப் போறேன். உங்கள் காவல் என் கடமை இளவரசியாரே!” என்று வெகு பணிவுடன் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்ததில், “இம்சை புடிச்சவன்…” என ஆத்திரத்துடன் திட்டியபடி காரைச் செலுத்தினாள் அவள். அப்போதும் சிடுசிடுப்பு குறையவில்லை அவளுக்கு. அழுத்தத்தின் ஆழம் என்ன சிறியதா?
எத்தனை நேரம் தான் பிடித்து வைத்த பிள்ளையார் போன்று ஒரே நிலையில் நின்று கொண்டிருப்பது? ஜனனிக்குக் காலெல்லாம் வலித்தது.
அலுவலகம் வந்தது முதல் அவள் அவனுக்கு அருகில் நின்று கொண்டே இருக்க வேண்டுமாம். அர்னவ் தேவின் உத்தரவாம்.
‘பெரிய ராஜ மாதா உத்தரவு போடுறாரு.’ என கழுத்தை வெட்டிக் கோபத்தை மனத்தினுள்ளேயே கொட்டிக் கொண்டாள்.
“சார்ர்ர்…”
“ம்ம்!” அவன் வேலையில் கவனமாக கேட்க, “ரெஸ்ட் ரூம்…” என்று விட்டு குளியலறைக்குள் ஓடி நீண்ட மேடை போலிருந்த வாஷ்பேசின் திண்டில் ஏறிச் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.
“ஹப்பாடா! அரசியல்வாதி வீட்டுக்குக் கல்யாணம் பண்ணிப் போயிருந்தால் கூட நம்மளை உக்கார வச்சு சோறு போட்டிருப்பாங்க. என் கிரகம், காவலுக்கு வந்து நின்னு காலெல்லாம் வலிக்குது. இந்த அர்னவ் வேணும்னே பண்றான்… இருடா, நேரம் வரட்டும். உன்னை யார் அட்டாக் பண்றாங்களோ இல்லையோ, நானே மாஸ்க் போட்டுட்டு வந்து உன்னை கும்மாங்குத்து குத்துறேன்.” என்று சபதம் எடுக்கும்போதே, வெளியில் ‘டம் டொம்’ எனச் சத்தம் கேட்டது.
அன்று, சூர்யாவிடம் சண்டையிட்டு வந்த போதும் இப்படித் தான், அறையில் இருந்த ஒரு பெரிய கண்ணாடி ஜக்கைத் தூக்கி எறிந்து உடைத்தான்.
‘இன்னைக்குக் கோபம் வந்து எதைத் தூக்கிப் போடுறானோ… நம்ம சேஃபா இங்கயே இருந்துப்போம்.’ என நினைத்துக் கொண்டவளுக்குச் சத்தம் அதிகமாகக் கேட்டதில், மெல்லக் கதவைத் திறந்து பார்த்தவள் சன்னமாக அதிர்ந்தாள்.
அர்னவ் மீது ஒருவன் ஏறி அமர்ந்து அவன் கண்ணை நோக்கிக் கத்தியை இறக்க முயன்று கொண்டிருந்தான்.
“அய்யய்யோ…” ஜனனி கத்தி விட, அர்னவைத் தாக்க வந்தவன் திரும்பி ஜனனியைப் பார்த்தான்.
அவனது கவனம் பிசகியதைப் பயன்படுத்தி அர்னவ் அவன் கையைப் பிடித்து வளைக்க முற்பட, தாக்க வந்தவனோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
“ஹே நூடுல்ஸ் மண்ட, இவனை அட்டாக் பண்ணு!” என பற்களைக் கடித்து அவனை எதிர்த்துக் கொண்டிருந்ததில்,
“இனிமே நீங்க என்னை நூடுல்ஸ் மண்டைன்னு கூப்பிடக் கூடாது. ஜனனி மேடம்னு மரியாதையா கூப்பிடுங்க, காப்பாத்துறேன்…” எனத் தோளைக் குலுக்கியவளைச் சிவந்த விழிகளுடன் ஏறிட்டவன், “ஏய்! வந்தேன், உன்னைக் கொன்னுடுவேன்.” என மிரட்ட, “அதுக்கு முதல்ல அவன் உங்களைக் கொன்னுடுவானே மிஸ்டர் அர்னவ் தேவ்…” எனப் பரிதாபப்பட்டாள்.
“உன்னை பயர் பண்றேன் இருடி…”
“ஹெலோ, அதுக்கும் உங்களை நான் காப்பாத்தணும்.” என சிலுப்பிக் கொள்ள, எதிராளியோ இப்போது கத்தியால் அர்னவின் வயிற்றில் குத்தப் போனான்.
சடுதியில் அவனை ஓங்கி எத்தியவள், உருண்டு விழுந்தவனை முகத்திலேயே மாறி மாறிக் குத்தினாள்.
அதில் அவனுக்குத் தலை சுற்றினாலும், கீழே விழுந்து கிடந்த கத்தியைக் கையால் துழாவி எடுத்து அவளைக் குத்த வர, அர்னவ் தேவ் இப்போது அவன் கையைப் பிடித்திருந்தான்.
ஜனனி தான் ஒரு கணம் மிரண்டு விட்டாள்.
“காப்பாத்த வந்த இடத்துல காப்பாத்திட்டப்பா!” என உளறியபடி அவனது தலை முடியைப் பிடித்து ஆட்டியவள், “டேய்… சண்டை சண்டையா இருக்க வேண்டியது தான, எதுக்குடா கத்தி எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க?” என்று அவனிடம் நியாயம் பேசிக் கொண்டிருக்க, அர்னவ் லேசாக அவனது கையை விட்டு அவளைக் குத்த வந்தான்.
“நான் கையை லேசா விட்டாலும், இந்தக் கத்தி உன்னைப் பதம் பார்த்துடும் நூடுல்ஸ் மண்டை!” என நக்கலாகக் கூறியதில், ஜனனி திருதிருவென விழித்தாள்.
“நூடுல்ஸ் மண்டைனு இப்பக் கூப்பிடலாம்ல?” அர்னவ் கேலி நகை புரிய,
“கூப்பிட்டுக்கோங்க சார்… ஸ்பைசி நூடுல்ஸ்னு கூட கூப்பிடுங்க. உயிர் தான் முக்கியம், மயிரா முக்கியம்…” என சட்டெனச் சரணடைந்தவளை விழி உயர்த்திப் பார்த்தான்.
“அவ்ளோ ஆசையா உயிர் வாழ?” என்றபடி அதே கத்தியால் எதிராளியின் இடுப்பில் குத்தினான் அசட்டையாக.
அதில் திகைத்தவள், “சார், சார்… அவன் செத்துறப் போறான். நிஜமாவே குத்திட்டீங்க?” எனப் பதற, அவளை விசித்திரமாகப் பார்த்த அர்னவ், “வேணும்னா வீட்டுக்கு வர வச்சு விருந்து குடுக்குறியா?” என்றான் அசட்டையாக.
சில நொடிகளில், அர்னவின் ஆள்கள் கீழே விழுந்து கிடந்தவனை அள்ளிக் கொண்டு சென்றனர். கூடவே அங்கு வந்த மேனேஜர், “சார்… சூர்யா சார் உங்களையும், ருஹானா மேமையும் உடனே மீட்டிங் ஹாலுக்கு வரச் சொல்லிருக்காங்க. உங்க செக்கரட்டரியையும் சேர்த்தே வரச் சொல்லிருக்காங்க.” என்று விவரம் சொல்லி விட்டுச் சென்றார்.
அதில் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆறு பேருமே மீட்டிங் ஹாலில் கூடினர்.
ருஹானாவும், அர்னவும் சூர்யாவின் முகத்தைப் பாராது வேறெங்கோ பார்வையைப் பதிய வைத்திருந்தனர்.
அதனைக் கண்டு கொள்ளாத சூர்யா, “ஆபிஸ்ல ஒர்க் பண்றவங்களை அகைன் பேக்ரவுண்ட் செக் பண்ணனும். இன்னைக்கு நடந்த அட்டாக்கும், பேக்டரில சூப்பர்வைசரா ஒர்க் பண்றவன் தான் பண்ணிருக்கான். என்ன காரணம்?” என்றான் கூர்மையாக.
“எங்களைக் கேட்டா? இத்தனை மாசமா நீ யார் என்ன செஞ்சாலும் பொறுமையா இருந்த. அதை அட்வாண்டேஜா எடுத்துக்கிட்ட ஆப்போசிட் ஆளு, இங்க ஒர்க் பண்ற ஆளுங்களை விலைக்கு வாங்குறான்…” அர்னவ் எரிச்சலாய் உரைத்தான்.
“அவங்க எல்லாரும் நான் வர்றதுக்கு முன்னாடி இருந்தே இங்க ஒர்க் பண்றவங்க. அப்போ அவங்க இந்த ஆபிஸ் ஒர்க்கர்ஸா மட்டுமே இருந்தாங்கன்னு சொல்ல என்ன ஆதாரம் இருக்கு?” என ஏளனமாய் உதட்டைச் சுளித்தான்.
இருவரின் முகமும் கருத்துப் போனதைத் திருப்தியுடன் பார்த்தவன், “மறுபடியும் எல்லாருக்கும் பேக் கிரவுண்ட் செக் பண்ணனும். சின்ன டவுட் இருந்தால் கூட எல்லாரையும் பயர் பண்ணிட்டு, புது எம்ப்ளாயிசை எடுக்கணும்.” என்றான் தீவிரமாக.
அதனை ஆமோதிக்க ஈகோ தடுக்க, இருவருமே அமைதியாக இருந்தனர்.
அந்நேரம் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த ஜி. எம் சேகரன், “சார் ஹெட் போஸ்டிங்ல உள்ளவங்களோட பேக்கிரவுண்ட் செக்கப் ஸ்டேட்டஸ்” என ஒரு பைலை நீட்டினார்.
அதனை வாங்கிப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த சூர்ய சித்தாந்தனை வெறுப்பாய் நோக்கினான் அர்னவ்.
“சோ, நீ எங்ககிட்ட அபிப்ராயம் கேட்கல. ஆல்ரெடி எல்லா முடிவும் எடுத்துட்டு இன்பார்ம் பண்ற. ரைட்?” எனச் சீறினான்.
“எவ்ளோ நாளைக்கு நீ இந்த போஸ்ட்ல உயிரோட இருக்கன்னு நானும் பார்க்குறேனே…” அர்னவ் எகத்தாளமாய் உரைத்ததில், “பைன்… இப்ப உயிரோட இங்க சேர்மனா இருக்கேன் தான. இங்க எந்த முடிவு எடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கு. ரைட்?” அவனைப் போலவே எகத்தாளமாகக் கேட்டான் சூர்ய சித்தாந்தன்.
ஜனனியும் வினயனும் தான், ‘என்ன சும்மா பேசிட்டு இருக்கீங்க? யார் பெருசுன்னு அடிச்சுக் காட்டுங்க!’ என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு நகை புரிய, மௌனி ஆதிராவோ ‘இவனுங்க வேற நசநசன்னு…’ என கடுப்படைந்தபடி சூர்யாவின் கையில் இருந்த கோப்பில் பார்வையைப் பதித்தாள்.
அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் ஆள்களின் விவரம் அதில் அடங்கி இருக்க, “மிஸ்டர் சேகரன்… இந்த டீடெய்ல்ஸ் மட்டும் வச்சு எப்படி இங்க இருக்குற எம்ப்ளாயிஸ் விலை போகாம இருப்பாங்கன்னு சொல்ல முடியும். வீ நீட் மோர் டீடெய்ல்ஸ். கால் ஹிஸ்டரி எடுங்க. ஒரிஜினல் மொபைல் தவிர வேற மொபைல் இருக்கான்னு பாருங்க. பேமிலில இருக்குற அத்தனைப் பேரோட கால் ஹிஸ்டரி டிராக் பண்ணுங்க. வேலைக்குச் சேர்ந்ததுல இருந்து அவங்களோட நடவடிக்கை எப்படி இருக்கு, இப்ப எப்படி இருக்குனு பாருங்க. அவங்களோட சொத்து மதிப்புக்கு மீறி, திடீர்னு அதிகமா எக்ஸ்பென்ஸ் பண்ணிருந்தா அதை ஹைலைட் பண்ணுங்க. அந்தப் பணம் எங்க இருந்து வந்துச்சுன்னு பாருங்க. அண்ட் இதெல்லாம் தாண்டி மறுபடியும் ஒரு பெர்சனல் இன்டெர்வியூ அரேஞ்ச் பண்ணுங்க. இதெல்லாம் வச்சு, யாரை பயர் பண்ணலாம்… யாரை ஹோல்டு பண்ணலாம்னு முடிவு பண்ணலாம்.” எனப் பேசி முடித்து விட்டு நிமிர்ந்தவளை ருஹானாவும், அர்னவும் வியப்புடன் பார்த்தனர்.
ஜனனியோ, “இந்தக் கருமத்தை எல்லாம் இவன் நம்மகிட்ட பண்ணுனா மாட்டிப்போமேடி அரை மெண்டல்!” என்று நொந்து போக, “என் தங்கச்சிக்கு எவ்ளோ பிரெய்ன் இருக்கு பார்த்தியா…” என பெருமைப்பட்டுக் கொண்டான் வினயன்.
“நமக்கு நம்ம வாய் தான் எதிரி!” எனத் திருதிருவென விழித்த மௌனி ஆதிரா, “அது வந்து… இப்படி எல்லாம் ஜி சொல்லுவாரு. அதைக் கேட்டுக்கோங்கன்னு சொல்ல வந்தேன் மிஸ்டர் சேகரன்…” என சமாளித்து விட்டுத் தன்னையே துளைத்துக் கொண்டிருந்த சூர்யாவின் கூறிய விழிகளைக் கண்டு மருண்டு,
“எப்படிஜி? உங்களை நல்லா அனலைஸ் பண்ணிருக்கேன் தான…” என கேவலமாக ஒரு சிரிப்பையும் சிரித்து வைத்தாள்.
“சும்மா இருந்திருந்தா கூட அவன் விட்டிருப்பான்டி…” வினயன் கெக்க பெக்கவென வந்த சிரிப்பை அடக்கியபடி நிற்க, சூர்ய சித்தாந்தன் மேஜையின் மீது ஆள்காட்டி விரலால் தட்டியவாறே, “என்னை அனலைஸ் பண்ணது இருக்கட்டும், இங்க இருக்குற ஒர்க்கர்ஸை நீயே அனலைஸ் பண்ணு. கரெக்ட்டா இருந்துட்டா, உன்னை இங்கயே பெர்மனன்ட் பண்றேன். ஒருவேளை ஏதாவது தப்பா ஆச்சுன்னா…” என சொல்லி முடிக்கும் முன்,
“வேலையை விட்டுத் தூக்கிடுங்க ஜி” என்று சபதமாகக் கூறியவளைக் கண்டு மறுப்பாக உச்சுக் கொட்டினான்.
“என் எனிமிஸை வரச் சொல்லி, உலகத்தை விட்டே தூக்கிடுவேன்…” என்றான் அர்த்தமாக.
அதற்கெல்லாம் மசியாதவள், “ஆனாலும் நீங்க ஒரு பியூர் ஹார்ட் ஜி” என நற்சான்றிதழ் கொடுக்க, எதுக்காம் என்பது போலப் புருவம் உயர்த்தினான்.
“என்ன இருந்தாலும் நீங்க கொல்லுவேன், வெட்டுவேன்னு சொல்ல மாட்டுறீங்க… அட்டாக் பண்ண வர்றவனைக் கூட விட்டுடச் சொல்லி, எவ்ளோ ஒரு அகிம்சை வழில நடக்குறீங்க பார்த்தீங்களா! யூ ஆர் கிரேட்ஜி…” என்று சிலாகித்ததில் அவள் நெற்றியில் சில வரிகள் உதயமாக, சூர்ய சித்தாந்தனின் கவனம் முதன்முறை அவ்வரிகளை நுணுக்கமாக அவதானித்தது.
அதனை அவளும் கண்டுகொள்ள, ‘அடடா! நம்மளை இன்னைக்குத் தான்டா இவன் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்குறான்.” எனக் குளுகுளு ஜலஜலாவென இருந்தது மௌனி ஆதிராவிற்கு.
ஆடவனின் பார்வையை விளையாட்டாய் ரசித்தவளுக்குப் புரியவில்லை, அவன் ஈர்ப்பு கொள்வது அபாயமென்று!
ரசித்திட வருவாள்(ன்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

