திருமணத்திற்கு இன்னும் ஒரு நாளே இருக்க நலங்கு வைத்து ஒருபக்கம் மெஹந்தி போடுவது ஒரு பக்கம் என்ன வீடு திருமண கலை பூண்டிருந்தது.
அடுத்த நாள் முழுவதும் ஜீவா வீட்டிலேயே இருந்ததால் ஹாசினி சிரித்த முகத்தோடு வீட்டினை வலம் வந்து கொண்டிருந்தாள்.
பெண் அழைப்பு தொடங்கி வீட்டில் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கண்களில் கண்ணீரோடு மண்டபம் கிளம்பினாள் ஹாசினி.
காலை 8 மணிக்கு முகூர்த்தம்🌹🌹
❤️❤️ ஜீவானந்தம் வெட்ஸ்
ஹாசினி ❤️❤️
மண்டபமே டூலிப் மலர்கள் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிருஷ்ணமூர்த்தி பட்டு மகாலில் இருந்து வருவதற்கு மூன்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தங்குவதற்கு அவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது அவர்கள் வீட்டு திருமணம் போல் அனைவரும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தனர்.
மணமகள் அறையில் ஹாசினி கிளம்பிக் கொண்டு இருந்தாள். தலை குளிக்க வைத்து சாம்பிராணி போட்டு தலையை காய வைத்தபிறகு ஜடை மட்டை வைத்து தாழம்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது
ஹாசினி ஏற்கனவே மேக்கப் செய்பவரிடம் மேக்கப் நிறைய வேண்டாம் கம்மியா போட்டு விடுமாறு கூறி இருந்தாள்.
ஜாக்கெட் போட்டு பார்த்தபோது சிறிதளவு லூசாக இருந்தது. ஜீவா போட்டு பார்க்க சொன்னாங்க பரவால்ல விடு சாரி கட்டினால் சரியாகிவிடும் என்று கூறிக்கொண்டிருந்தாள்.
புடவையை கிளம்பும்போது கட்டிக் கொள்ளலாம் இல்லை என்றால் கலைந்துவிடும் என்று கூற அவளின் ஷாலினை மேலே போட்டு அமர்ந்திருந்தாள்.
ஹாசியினின் ஃபோன் ஒலித்தது. ஹா சினிமா என்று அழைத்தான் ஜீவா சொல்லுங்க என்று கூறினாள்.
கீழே கூப்பிடுறாங்க நான் கிளம்புறேன் என்று கூற என்ன பாக்கணும் உங்களுக்கு தோணவே இல்லையா? என்று கேட்டாள் ஹாசினி.
ஏ அதுக்கு தாண் போன் செய்தேன் என்று கூறினான். நீங்க கிளம்பிட்டீங்களா ஜீவா என்று கேட்க அவன் கிளம்பிட்டேன் என்று கூறினான்.
பட்டு வேட்டி பட்டு சட்டை கையில் தங்க காப்பு நெற்றியில் சந்தனம் வைத்திருந்தான்.
உங்கள வர சொல்லலாம்னு பார்த்தா இந்த ரூம்ல பத்து பேருக்கு மேல இருந்து கிட்டு இருக்காங்க என்று கூறியவள் ஓகே ஜீவா நீங்க கிளம்புங்க என்று கூறிபோனை வைத்தாள்.
ஒப்பனை செய்யும் பெண் கண்ணை மூடுங்கள் என்று கூறி கண்ணில் மஸ்காராவை போட்டுவிட்டாள். ஒரு இரண்டு நிமிடம் கழித்து கண்களை திறங்கள் என்று கூறினாள். கண்களை மூடி அமர்ந்திருந்தாள் ஹாசினி.
மணமகள் அறையினை தட்டியவன் வாயில் விரலை வைத்து ஒரு ஐந்து நிமிடம் என சைகை செய்ய அனைவரும் வெளியேறினர் கதவை தாழிட்டான் . அறை ரொம்ப அமைதியாக இருந்தது என்னப்பா ஒரு சத்தத்தையும் காணோம் என கண்களை விழிக்க அவள் எதிரில் இருந்த கதவில் ஜீவா சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
பட்டு வேட்டி, பட்டு சட்டை யில் இருந்த அவன் கையிலிருந்த காப்பினை முறுக்கிக் கொண்டு அருகில் வரவே ஹாசினியின் இதயம் வேகமாக துடித்தது.
வெட்கத்தில் முகம் சிவந்தவள் முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள் முதுகில் அழகாய் குட்டி கிருஷ்ணன் சிரித்துக் கொண்டிருந்தான்.
அவளின் இடை அவனை அழைக்க ஹாசினிமா என அழைத்தான்.
ஹாசினிமா இன்னும் புடவை கட்டவில்லை ஞாபகம் இருக்கா என்று கேட்க தன்னை உணர்ந்து திரும்பி நின்றாள்முழுக்க வெட்கத்தோடு.
அவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன் நான் கீழே போகிறேன் நீ வா என்று கூற அவள் அவனின் மீசையை முறுக்கி அவனது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். நெற்றியோடு நெற்றி ஒட்டியவள் கதவு தட்டும் சத்தம் கேட்டவுடன் டக்கென விலகினாள்.
கதவைத் திறக்க ராஜிவ் உன்னை எங்கடா தேடிட்டு இருக்கேன் என்னடா பண்ணிட்டு இருக்க என்று கூற ஒன்னும் இல்லடா சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று கூற,
ஐயர் காத்திருக்கிறார் வாடா போகலாம் என்றும் அப்புறம் உன் பொண்டாட்டி கூடிவே இருப்ப என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.
கீழே சென்று ஐயர் கூறிய மந்திரங்களில் கூற தமிழ் முறைப்படி உறுதி எடுத்துக் கொண்டிருந்தான் வானத்தில் இருந்து எழுந்த வந்த தேவதை போல் ஜீவா வாங்கி கொடுத்த நகைகள், புடவையை கட்டிக் கொண்டு இறங்கி வந்தாள் கழுத்தில் மாலையோடு வந்து ஜீவாவின் அருகில் அமர தாழம்பூவின் மணம் அவ்விடம் முழுவதும் கமழ்ந்தது.
ஹாசினியின் கழுத்தில் மாங்கல்ய கயிற்றில் மூன்று முடிச்சிட்டு அவள் கையைப் பிடித்து அக்னியை வலம் வந்து இவளை என் கண்கலங்காமல் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன் என்று மனதில் உறுதி பூண்டான் ஹாசினியும் அவ்வாறே நினைத்தாள்.
ஜீவா ஹாசினியின் காலில் மெட்டி மாட்டிவிட்டான். முகம் முழுவதும் வெட்கத்தின் பூரிப்பில் இருந்தால் ஹாசினி.
தனியாளாய் இருந்து மகனை எந்த அளவுக்கு உயர்த்தி இருந்த ஜீவாவின் அம்மா மன நிம்மதியோடு கண்கலங்கி அமர்ந்திருந்தார்.
காதலித்தவரையே கைபிடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. எல்லையில்லா பூரிப்பில் இருந்தனர் இருவரும்.
ஹாசினியின் பெற்றோருக்கு மகிழ்ச்சி திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் எவ்வளவு பெரிய பட்டு மஹால் வச்சிருக்காங்க அதுக்கு தகுந்த மாதிரி அவங்க பொண்ணுக்கு நச்சுன்னு புடவை எடுத்துட்டாங்க என்று பேசுவது அனைவர் காதிலும் விழுந்தது.
அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். பாதர் மற்றும் திருமணத்திற்கு வந்திருக்கும் அவரிடம் ஆசி பெற்றனர்.
ஹாசினியின் நண்பர்கள் ஜீவாவின் நண்பர்கள் உடன் பணிபுரிபவர்கள் இரண்டு பட்டு மஹாலில் வேலை செய்பவர்கள் உறவினர்கள் என திருமண மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஜாக்கெட்தைத்துக் கொடுத்து தையல்காரர் மேடைக்கு வந்தவுடன் மேடம் புடவை செமையா இருக்கு மேடம் என்று கூறினார்.
புடவை எனக்கு கொடுத்த திருமண பரிசு என்று கூறினாள். இது சாரே அவரோட கையால செய்தது என்று கூறினாள்.
வாழ்த்துக்கள் சார் செம்மையா இருக்கு என்று அவரை அவனைப் புகழ்ந்து விட்டு சென்றார்
ஜீவா கூறியதுபோல் மலை கிராமத்தில் உள்ள சர்ச்சில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் திருமண சாப்பாடு அனுப்பி வைக்கப்பட்டது.
ஹாசியின் வீட்டிற்கு வந்தவுடன் பால் பழம் கொடுத்தனர். ராஜீவ் நண்பனை ஆரத் தழுவினான் அவ சின்ன பொண்ணு நீ அவள பாத்துப் பண்ணு எனக்கு நல்லா தெரியும் எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு ஜீவா என்று கூறினான்.
ஹாசினிமா உன்னை கண்டிப்பா நல்லா பாத்துப்பான் எனக்கு தெரியும் நீ ஜீவா கஷ்டப் படாமல் பார்த்துக் கொண்டு விட்டுக் கொடுத்து போகணும் உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பான் திருப்பி சொல்றேன் என்று கூறினான் ராஜிவ்.
ஹாசினியின் அண்ணியோ ஹாசினியை ஒரு ரூமிற்கு அழைத்து சென்று சிறிதுநேரம் பேசிவிட்டு வந்தாள். ஹாசனின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.
ஜீவா கண்களாலே என்ன என்று கேட்க ஒன்றுமில்லை என்று கீழே குனிந்து கொண்டாள் ஹாசினி.
அனைவரும் இரண்டு மூன்று கார்களில் ஜீவாவின் வீட்டிற்கு கிளம்ப காரில் அமர்ந்தவுடன் ஹாசினி ஜீவாவின் தோளில் தலை சாய்த்து கண் மூடினாள்.
தன் அவளின் அருகாமை கழுத்தில் மஞ்சள் கயிறு, தாழம்பூ மணம், காலில் அணிந்திருந்த மெட்டி, கைகளில் இருந்தமெகந்தி அனைத்தையும் ரசித்து கொண்டே வந்தான்.
இங்கே ஜீவாவின் வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஜீவாவின் வீட்டில் ஆரத்தி கரைத்து அனைவரும் வரவேற்க காத்திருந்தனர்.
ஜீவாவோ ஹாசினியின் காதல் குனிந்து ஹாசினி வீட்டுக்கு வந்துட்டோம் டா எழுந்திரு என்று கூற அதுக்குள்ள வந்துட்டமா இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா என்று கண்விழித்து அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தவள் ஒன்றுமறியாமல் வெடுக்கென்று எழுந்து நின்றாள்.
அவள் விழித்ததற்கு காரணம் அவள் வந்திருப்பது மலை கிராமம் ஜீவா வாழ்ந்த வீடு அதனை ஜீவா ஒரு பத்து வருடத்திற்கு முன்பே அவனது தாயார் பெயரில் வாங்கி இருந்தான் இதை ஹாசினியிடம் சொல்லவே இல்லை சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று.
கீழே இறங்கியவள் கண்களில் நீர் கோர்க்க ஜீவா வேணாம் போகாத ஜீவா என்று அவள் அழுத நாட்கள் அனைத்தும் அவளின் கண் முன் வந்து நிற்க ஜீவாவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைக்க வீடு முற்றிலும் நவீனமயமாக மாற்றப்பட்டிருந்தது.
ஜீவாவிற்கும் ஹாசினுக்கும் பால் பழம் கொடுத்து ஹாசினி விளக்கேற்ற சொல்ல விளக்கேற்றியவள் கடவுளே எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்கணும் நானும் ஜீவாவும் அத்தமாவும் சந்தோஷமா இருக்கணும்.
எனக்கு சீக்கிரம் குட்டிப்பாப்பா பிறக்கணும் என்று வேண்டிக் கொண்டு விளக்கு ஏற்றினாள்.
அனைவரும் அவரவர் வேலையை பார்க்க கண்மூடி வேண்டிக் கொண்டிருந்த ஹாசினியின் காதருகில் சென்று ஜீவா ஹாசினிமா என்ன வேண்டின என்று கேட்க முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு அவனை திரும்பி பார்த்தாள் அவனோ உள்ளே சென்று விட்டான்.
ஹாசினியை பால் காய்ச்ச சொன்னார் ஜீவாவின் அம்மா.
கிச்சனுக்குள் நுழைந்ததும் அன்று ஜீவாவிற்கு பருப்பு பாயசம் கொண்டுவந்து கொடுத்தது நினைவுக்கு வர பழைய நினைவுகளோடு பால் காய்ச்சி முடித்தாள்.
ஹாசினியின் பெற்றோர் அண்ணி அனைவரும் கூறிக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானார்கள். அத்தை பாய் அத்தை என்று கூற அவளை கட்டிக் கொண்டாள்.
அனைவரையும் அனுப்பிவிட்டு வந்து ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தவள் ஹாசினிமா நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று கூற சரிங்க அத்தம்மாஎன்று கூறியவள்.
அத்தை காண்பித்த அறைக்குள் செல்ல ஜீவா கட்டிலில் படுத்திருந்தான்.
ஜீவா முதன் முதலில் இவள் புடவை அணிந்து கொண்டு ஜீவாவை சேர்த்து கட்டி அணைத்த அறை.
இதை பார்த்தவுடன் பழைய நினைவுகள் வர அங்கிருந்து தனது புடவையை எடுத்து மாற்றினாள். முகூர்த்தப் புடவை மாற்ற நினைத்தவள் சென்று ஜீவாவை எழுப்ப டயர்டா இருக்குடா என்று கூறினான்.
டிரஸ் மாத்தணும் என்று கூற நான் ஒருக்களித்து படுத்து கொள்கிறேன் என்று கூறியவன் அந்த பக்கம் திரும்பி படுத்து கொண்டான்.
நகைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கழட்டியவள் ஒரே ஒரு மெல்லிய செயின் அணிந்து கொண்டு மாங்கல்ய கயிறுடன் கரை வைத்த இலகுவான ஆர்கானிக்கான் சாரி அணிந்தாள்.
தலை வலிக்குது போல் இருக்க தலையில் வைத்திருந்த தாழம்பூ ஜடை மட்டையை பிரித்து வைத்தாள்.
அவிழ்ந்த கூந்தலை கொண்டை இட்டவள்.
ஜீவாவின் அருகில் வந்து அமர்ந்து அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நீ போலீஸ் ஆபீஸர் ஜீவா எப்படி இருக்க பாரு எனக்கு உன் பக்கத்துல வந்தாலே பயமா இருக்கு இந்த காப்ப புடிச்சு முறுக்கிக்கிட்டு வருவ பாரு என் பக்கத்துல அப்படியே டோட்டல் பிளாட் ஜீவா உன்ன ரொம்பபிடிச்சிருக்கு என்று குனிந்து அவனின் மீசையை முறுக்க ஆரம்பிக்க அவன் கண்விழித்தான் .
என்ன ஹாசினிமா என்று கேட்க ஒன்னும் இல்லைங்க ஜீவா என்று முட்டைகளை உருட்டினாள் ஏனிந்த முட்ட கண் போட்டு உருட்டற என்று கூறியவன் வா வந்து படு என்று அவளை தன் அருகில் படுக்க சொல்லி தள்ளிப் படுத்தான்.
மாலை 5 மணி ஆகியிருக்க ஜீவா எழுந்து வெளியே வந்தான். செட்டில் செய்யவேண்டிய இவைகளை செய்து முடித்தான். சிறிது நேரம் லேப்டாப்பில் ஓபன் பண்ண சிறு வேலைகளை செய்து முடித்தான்.
ஜீவா 9 மணி ஆயிடுச்சு பார் இன்னும் தூங்கிட்டு இருக்கா என்று கூறினார் ஜீவாவின் அம்மா.
டயர்டா இருக்கும் போல தல வலிக்குதுன்னு சொன்னா என்று கூறியவர் ஆமாம்பா தாழம்பூ நிறைய வைத்திருந்தா கொஞ்சமா வச்சா தெரியாது.
நிறைய இருந்த தலைவலிக்கும் எதுக்கு தாழம்பூ மட்டைய செலக்ட் பண்னான்னு தெரியல என்று கூறி தனது அறைக்குச் சென்றார்.
அவளுக்கு சாப்பாடு குடுங்க நான் அவளை எழுப்பி கொடுத்துகிறேன் என்று கூற இல்லபா கொஞ்சம் சம்பரதாயம் இருக்க்கு என அவள தொந்தரவு பண்ண வேண்டாமா தூங்கட்டும் பாவமா இருக்கு அப்புறம் பார்த்துக்கலாம் எதுவா இருந்தாலும் என்று உணவு எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.
அவளை எழுப்ப அவள் எழுந்திருக்கவே இல்லை ப்ளீஸ் ஜீவா டயர்டா இருக்கு என்று கூறியவளை எழுப்பி பால் மட்டுமாவது குடி என்று பால் குடிக்க வைத்து தூங்கவைத்தான்.
தனது லேப்டாப்பை எடுத்து செய்யவேண்டிய பணிகள் அனைத்தையும் செய்து முடிக்க இவனுக்கும் அசதியாக இருக்க அப்படியே அவள் அருகில் படுத்து அவளை தன் மார்பின் மீது போட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்.
எப்ப பாரு என்ன எடுத்துக்க ஜீவா என் எடுத்துகக்க ஜீவன் சொல்லிக்கிட்டே இருப்பா தூக்கத்தை பாரு என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான் ஐ அம் சோ ஹேப்பி ஹாசினிமா என்று அவள் இடையை கட்டிக் கொண்டு தூங்கினான்.
நன்கு தூங்கியவள் காலை 4 மணியில் தூக்கம் கலைந்தாள். போனை எடுத்து தடவி பார்த்தவள் மணியை பார்க்க பக்கென்று ஆனது. அய்யோ இவ்ளோ நேரம் தூங்கி இருக்குமே என்று அறையில் கண்ணை சூழல் விட்டவள் சாப்பாடு டேபிள் மேலே இருக அதை பார்த்தாள் அருகில் ஜீவா படுத்திருந்ததை பார்த்தவள் போச்சு எல்லாம் போச்சு என்று போனை பார்க்க அவள் அண்ணியிடமிருந்து இருபத்தி ஐந்து மிஸ்டுகால் இருந்தது வாட்ஸ்அப் மெசேஜ்ல செம திட்டு.
ஹாசினி நான் உன்கிட்ட என்ன சொல்லி அனுப்பிச்சேன் தூங்கிட்டு இருக்க உன்கிட்ட பேசலாம்னு போன் பண்ணினா ஜீவா அண்ணாதூங்கிட்டு இருக்கன்னு சொல்றாங்க எவ்ளோ நேரம்தான் தூங்குவ நான் உன்கிட்ட என்ன சொல்லி அனுப்பிச்சேன் என்று திட்டி அவளது அண்ணி மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
எல்லா ஆண்களும் ஒரு மாதிரி இருக்க மாட்டாங்க ஹாசினிமா அவரு உனக்காக காத்துகிட்டு இருந்த வரை அவர் கையால் மாங்கல்யம் மட்டும் வாங்கினதுபெரிய விஷயமில்லை அவரோட தேவையை பூர்த்தி செய்து சந்தோஷமா வச்சுக்கணும் அவர் அம்மா உன்கிட்ட சொல்ல மாட்டாங்க ஒரு அன்னிய நான் உன் கிட்ட சொல்றேன் என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
ஜீவாவை பார்க்க பாவமாய் இருந்தது சாரி ஜீவா என்று கண்களில் கண்ணீர் வந்தது. எழுந்து ஜன்னல் இருந்து அங்கிருந்து நிலவினை பார்த்தாள்.
ஹாசினியை காணோம் என்று எழுந்தவன் அவளிடம் எழுந்து வந்தவன் ஹாசினியின் பின்னால் நெருங்கி நின்று ஜன்னல் கம்பியை பிடித்து நின்றான்.
அவனை திரும்பி பார்த்தாள் நிலவினை பார்த்தவள் தாழம்பூவு வாசம் அறை முழுவதும் வீச அது முடியிலும் தாழம்பூ மணம் வீச ஹாசினிமா தாழம்பூ உனக்கு ரொம்ப பிடிக்குமா என ஆமாம் என்றாள்.
அதற்கு ஜீவாவும் நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது அம்மா உனக்கு அடிக்கடி வைத்து விடுவார்கள் இந்த வாசனையை முகர்ந்த நீ என் கூட இருக்கிற மாதிரி இருக்கும்மா என்றான்.
எனக்கும் அதுதான் ஜீவா அதனாலதான் சென்னையிலும் கிடைக்கலைன்னா கூட தாழம்பூ குங்குமம் இல்லாமல் இருக்கவே மாட்டேன் நீ அட்வைஸ் பண்ணும் போது எனக்கு ஒரு வார்த்தை சொன்ன தெரியுமா தாழம்பூ கூட கூட கம்பர் பண்னி என்று தனது கைகளை ஆட்டி விளக்கிக் கொண்டிருந்த அவளின் இடையில் கை வைத்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட அவளோ அவன் முடியை பிடித்து இருந்தால் கதவு தட்டப்பட்டது டக்கென்று விலகினர் இருவரும்.
காலை 5 மணி ஆகியிருக்க ஜீவா எழுந்து குளிச்சிட்டு கிளம்புங்க கோயிலுக்கு போயிட்டு ஹாசினி வீட்டுக்கு போகனும் காபி போடுறேன் என்று கிச்சனுக்குள் நுழைந்த ஜீவாவின் அம்மா.
சாரிங்க என்று கூற ஏன்டா இங்க வா என்று அவளை தனது மடி மீது அமர்த்திக் கொள்ள இல்ல நைட்டு நைட் அண்ணிபோன் பண்ணி இருக்காங்க எனக்கு தெரியல என்ன சொன்னாங்க உங்க அண்ணி என்று கூற அவள் மெசேஜ் எடுத்துக் காண்பித்தாள்.
இது மட்டுமே வாழ்க்கை இல்லை ஹா சினிமா அப்புறம் பாத்துக்கலாம் சரியா என்று கூற இருவரும் குளித்து வந்தனர்.
காபி குடித்தவுடன் சர்ச்சுக்குக்கு போயிட்டு வந்துடறேன் என்று அவளை அழைத்துக்கொண்டு கார் ஓட்டிக் கொண்டு அங்கிருந்து சிறுவர்களுக்கு பழங்கள் ஸ்னாக்ஸ் எடுத்துக்கொண்டு சென்றான்.
மலையினை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி இருவருக்கும்.
ஜீவா எத்தனை நாள் இங்கே வந்து அழுதேன் தெரியுமா என்று அவளின் கையைப் பிடித்து மென்மையாய் முத்தமிட்டான்.
அவள் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். பிறகு பழங்களையும் ஸ்னாக்ஸ் அங்கு இருக்கும் சிறுவர்களிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள் வீட்டிற்கு வந்தவுடன் ஹாசினி வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகினர்.
அதற்குள் போன் ஒலித்தது போனை எடுத்தவன் ஓகே நோ ப்ராப்ளம் சார் நான் இன்னுமொரு த்ரீ டேஸ் ல வந்து விடுவேன்.
பேச வேண்டியதை மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க அது எல்லாத்தையும் ஆட்டோ டிரைவர் கார்டிரைவர் களுக்கு மீட்டிங் போட்டு அரேஞ்ச் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க.
ஸ்கூல் ஆட்டோ ஓட்டுறவங்களுக்கு மட்டும் நான் தனியா வந்து நான் பேசுகிறேன் என்று கூறினான்.
அந்த கிட்னப் பண்ணாங்க்ளே குழந்தையோட பேரன்ஸ் உங்கள பாக்கணும் னு சொல்றாங்க என்று கூற ஒன்னும் பிராப்ளம் இல்ல நேர்ல வந்து பார்த்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவங்ககிட்ட சொல்லுங்க.
நான் ஆபிஸ் வந்த பிறகு கால் பண்ற அப்புறம் பார்ப்போம் சொல்லுங்க என்று கூறி போனை வைத்தான்.
🌺🌺 வாசம் வீசும் 🌺🌺.