Loading

8 – வலுசாறு இடையினில் 

 

“டேய் வட்டி .. மாப்ள .. “, வர்மன் கத்தியபடி சூப்பர் மார்க்கெட் உள்ளே வந்தான். 

 

“என்ன மச்சான் ? இங்க தான் ரேக்குல ஜாமான அடுக்கிட்டு இருக்கேன்.. “, என மேல் பலகையில் இருந்து பதில் கொடுத்தான். 

 

“கீழ வாடா “, என அடங்காத ஆத்திரத்துடன் நின்று இருந்தான் வர்மன். 

 

“என்னாச்சி மச்சான் ? ஏன் மொகம் இப்டி செவந்து இருக்கு ?”

 

“அந்த இரத்தினம் பையன் எங்க டா இருக்கான் ?”

 

“யாரு ? நம்ம சித்தப்பா வீட்டு தெருவுல இருக்க இரத்தினம் மாமா வா ?”

 

“ம்ம்”, என்பது போல பார்வை பார்த்தான். 

 

“அவரு மகன் வெளிநாட்டுல இருக்கான் மச்சான் .. அவன் உன்ன என்ன பண்ணான் ?”

 

“அவனுக்கும் அந்த ஏகாம்பரத்துக்கும் என்னடா சம்பந்தம் ?”

 

“அது எனக்கு என்ன தெரியும்?”, என சொல்லி முடிக்கும் முன் அவன் கன்னம் எரிச்சல் எடுத்தது. 

 

“தோப்புக்கு வாடா “, என கூறி விட்டு வண்டியை முறுக்கி கொண்டு சென்றான். 

 

வட்டி என்ன என்று யோசிக்கும் முன் அவன் அலைபேசி அழைத்தது. 

 

“சொல்லு ஆச்சி .. “

 

“….  .. .. .. .. “

 

“உன் பேரன் இப்போதான் தோப்புக்கு வர சொன்னான்”

 

“.. .. .. .. .. .. .. “

 

“போட்ரூ .. எனக்கு இம்சை ஒழியும்“, என தலையில் கை வைத்து கொண்டு, 

“அய்யயோ .. என்ன நடந்து இருக்கும்? இவன் ஒருபக்கம் தோப்புக்கு வாங்கறான், ஆத்தா ஒரு பக்கம் வீட்டுக்கு வாங்குது .. நான் இப்ப எங்க போறது? “, என பொலம்பிவிட்டு,  ஒரு மனதாக ஆச்சி இருக்கும் இடம் சென்றான். 

“என்ன ஆச்சி ?”

 

“ஏண்டா எடுபட்ட பயலே .. கூப்பிட்டா ஒரு சுருக்குல வரமாட்டியா?”, ஆச்சி கடுகடுத்த முகத்துடன் கேட்டார். 

 

“பாட்டியும் பேரனும் இப்ப எதுக்கு மூஞ்ச கடுகு பொரிக்கராப்புல வச்சிருக்கீங்க?”

 

“அந்த சிறுக்கி அங்க என்ன டா பண்றா ?”

 

“எந்த சிறுக்கி? எங்க என்ன பண்ணா? தெளிவா சொல்லு ஆச்சி “, என கேட்டபடி  தூணில் சாய்ந்து அமர்ந்தான். 

 

“அந்த கீழ வீட்டு சிறுக்கி.. செங்கல்வராயன் மவ “

 

“அந்த புள்ள எங்க வந்துச்சி?”

 

“அவ எதுக்கு டா மாங்கா தோப்புல நாட்டாமை பண்ணிட்டு இருக்கா ? அவன் வர சொன்னதா வேற சொல்றா அவ .. “

 

“இது எப்ப நடந்துச்சி?”, வட்டி ஒன்றும் புரியாமல் முழித்தான். 

 

“உன் மச்சான் கிட்ட சொல்லி வை .. நான் கை காட்டற பொண்ண தான் கட்டணும்.. கண்ட சிறுக்கி எல்லாம் என் வீட்டுகுள்ள வரமுடியாது .. வரவும் விடமாட்டேன்.. “, என பேசிவிட்டு வட்டி முதுகில் ஒன்று வைத்து விட்டு சென்றார். 

 

“பாட்டிக்கும் பேரனுக்கும் நான் தான் கிடைச்சனா? ஆளாளுக்கு யாரோ என்னமோ பண்ணத்துக்கு எனைய அடிச்சா நான் என்ன பண்றதாம் ?”, என முதுகை தேய்த்து கொண்டே வர்மன் இருக்கும் தோப்பிற்கு புறப்பட்டான். 

 

அங்கே வர்மன் மீசையை முறுக்கி கொண்டபடி, பத்தடி நிலத்தை பள்ளம் தோண்டும் அளவிற்கு நடந்து கொண்டிருந்தான். 

 

அவன் நடக்கும் வேகம் பார்த்தே அவன் கோபத்தின் அளவை அறிந்து கொள்ள முடிந்தது. 

 

வட்டி வர்மன் கைக்கு எட்டாத தூரத்தில் நின்று கொண்டு பேச்சை ஆரம்பித்தான். 

 

“என்ன மச்சான் ? எதுக்கு அவசரமா வர சொன்னீங்க ?”, என கேட்டான். 

 

“அந்த ஏகாம்பரத்துக்கு யார் யார் கூட போக்கு வரத்து இருக்குனு உன்ன விசாரிக்க சொன்னேன் ல ? அதுல ஏண்டா நீ இந்த இரத்தனம் பத்தி சொல்லவே இல்ல ?”, என வேஷ்டியை மடித்து காட்டிய படி அருகில் சென்றான். 

 

“அய்யோ மச்சான் .. எனக்கு லிஸ்ட் குடுத்தவன் கிட்ட தான் இத கேக்கணும் .. என்னைய அப்பறம் அடிங்க .. அதுக்கு முன்ன ஆச்சி சொன்னத சொல்லிடறேன்..”, என வர்மன் கையை பிடித்தபடி கூறினான். 

 

“அந்த கெழவிக்கு என்ன வேணுமாம் இப்ப ?”

 

“செங்கல்வராயன் பொண்ண மாந்தோப்புக்கு வர சொன்னீங்களா ?”

 

“யாரு ?”, வர்மன் நெற்றியை சுருக்கியபடி கேட்டான். 

 

“அதான் அந்த கீழ தெருகாரரு ?” 

 

“அந்த ஆளா ? அவரு பொண்ணு மாங்கா தோப்பு பராமரிப்பு பத்தி கத்துக்கணும்னு சொல்லிச்சாம் .. அதான் நம்ம தோப்புல இப்போ வேலை நடக்குதுல அத வந்து பாக்கட்டும் ன்னு சொன்னேன்.. “

 

“ஏன் மச்சான் நீ புரிஞ்சி செய்யறியா புரியாம செய்யறியா ?”, வட்டி கேட்டான். 

 

“என்னடா பண்ணேன் ?”

 

“அந்த புள்ள மாந்தோப்புல வந்து அதிகாரம் பண்ணிட்டு இருந்து இருக்கு.. ஆச்சி கிட்ட வேற திமிரா பேசி நீ தான் வர சொன்ன ன்னு சொல்லி இருக்கு .. அங்க ஆச்சி சாமியாடிட்டு இருக்கு.. “

 

“என்னடா சொல்ற ?”, வர்மன் நெற்றி சுருங்கி விரிந்தது. 

 

“ஆமா .. அந்த ஆளு பொண்ண உனக்கு கட்டி குடுக்க தான் இங்க குடும்பத்தோட குடி வந்து இருக்கான்.. ஊருக்குள்ள நீ தான் அவன் மாப்பிள்ளை ன்னு சொல்லிக்கிட்டு திரியறான் “, வட்டி வரும் வழியில் ஒருவர் அவனிடம் விசாரித்ததையும் சேர்த்து கூறினான். 

 

“ஏன் மாப்ள .. இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் .. “, என அவன் ஆரம்பிக்கும் போதே வட்டி, “ மச்சான் .. அந்த நினைப்பே வச்சிக்காதீங்க .. ஆச்சி அவங்க சொல்ற பொண்ண தான் நீங்க கட்டிக்கணும் ன்னு சொல்லி விட்டு இருக்கு.. இல்லைனா சொத்தை என் பேருக்கு எழுதி வச்சிடுமாம்”, என கூறினான். 

 

“இத அந்த கெழவி சொல்லிச்சா நீ சொல்றியா மாப்ள ?”, என எட்டி வட்டியை பிடித்து இழுத்து கொண்டு மாந்தோப்பிற்கு சென்றான் வர்மன். 

 

“இந்தா கெழவி .. இத நல்லா நிறுத்தி வை.. அங்க பாரு பாட்டில் எல்லாம் கண்டமேனிக்கு களஞ்சி கெடக்கு.. சீக்கிரம் எல்லாத்தையும் நெரப்பி சரியா அடுக்கி, இன்னிக்கு ராத்திரிக்குள்ள முடிச்சா தான் வீட்டுக்கு அனுப்புவேன்”, என ஒரு இளம் பெண் நின்று அனைவரையும் அதட்டி மிரட்டி வேலை வாங்கிகொண்டு இருந்தாள். 

வட்டியும், வர்மனும் வண்டியில் இருந்து இறங்கி வந்து அவள் செய்யும் அலப்பறைகளை பார்த்தபடி நின்றனர். 

 

தாவணியை சொருகி வைத்த இடையின் மேல் கைகளை வைத்து அங்கிருந்தவர்களை ஏசி கொண்டு இருந்தாள். 

 

“இந்த மாமனுக்கு அறிவே இல்ல.. இங்க இருந்து வேலைய கவனிக்காம இப்டி விட்டுட்டு போனா எப்டி வேலை ஒழுங்கா நடக்கும்? தினம் நாமலே வந்து எல்லாத்தாயும் இனிமே ஒழுங்கு பண்ணா தான் சரி வரும் .. “, என தனக்கு தானே பேசியபடி திரும்பினாள் இளவேணி. 

 

அங்கே கையை கட்டி கொண்டு, கண்ணை சுருக்கி அவளை பார்த்து கொண்டிருந்த வர்மன், அவள் மனதில் ரவி வர்மாவின் ஓவியம் போல நின்று விட்டான். 

 

“பாத்தியா மச்சான் .. என்ன சவுண்டு போடுது இந்த புள்ள .. எல்லாம் அவன் யப்பான் ட்ரைனிங் போல .. “, என வட்டி அவன் காதருகில் கூறிவிட்டு அந்த பெண்ணை அழைத்தான். 

 

“இந்தா பொண்ணு .. இங்க வா “

 

“என் பேரு இளவேணி .. வாங்க மாமா .. இதான் நீங்க வர்ற நேரமா? இங்க வேலைய சரியா கவனிக்காராங்களான்னு கூட பாக்காம அப்டி எங்க போனீங்க? “, என உரிமையாக அருகில் வந்து நின்று கேட்டாள். 

 

“நீ இங்க எதுக்கு வந்தியோ அத மட்டும் நீ பாரு.. என் வேலைய பத்தி எனக்கு தெரியும்.. மாப்ள .. இந்த புள்ளைய இனிமே இங்க தோப்பு வேலை அப்போ மட்டும் தான் உள்ள விடணும்னு காவகாரன் கிட்ட சொல்லிடு”, என நிற்காமல் கூறிவிட்டு சென்றான். 

 

“நில்லுங்க மாமா ..”, இளவேணி அவன் முன்னே வந்து நின்றாள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. அடியேய்…இளவேணி…செவிலு திரும்பாம இந்த இடத்தை விட்டு போக மாட்ட போலயே…யாரு இடத்துல வந்து யாரு அதிகாரம் பண்ணுறது….வர்மன நீ கட்டிக்க போறியா…அப்பனும் புள்ளையும் நல்லா கனவு கண்டுட்டு இருங்க….
      இது நங்கை அதிகாரம் பண்ண வேண்டிய இடம்…வந்த வேலைய பாக்காம நீ என்னத்துக்கு இந்த வேலை பாக்குறவ….அறைவாங்கி போகா ஒழுங்கா வீடு போய் சேரு…..

    2. Yamma ilaveni Ivana kattikityu odi poiru unakum avanukum thn set aghum…. En chlm nangai ya mattum vitrunga ma…

    3. இந்த புள்ள டம்மி பாவா பாவனாவா இல்ல சவுண்டு பார்ட்டி சரோஜாவா