நெற்றியை கூர்மையான இரும்பு கம்பி நன்றாக பதம் பார்த்து இருக்க அதன் விளைவாக அடுத்த நிமிடமே காயம் பட்ட இடத்திலிருந்து அதிக அளவு உதிரப்போக்கு ஏற்பட்டது. ஏற்கனவே கொடுத்த மயக்க மருந்தால் உண்டான தலை கிறுகிறுப்புடன் நெற்றியில் ஏற்பட்ட காயமும் சேர்ந்து கொள்ள உடலே பாரமானது போல் நிற்க முடியாமல் அப்படியே விழுந்திருந்தாள்.
அவளை சுற்றி நின்றபடி ஐந்து தடியர்களும் நக்கல் சிரிப்புடன் அவளைப் பார்க்க அதில் தலைவர் போல் இருந்தவனோ” இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் நம்ம ஏரியாவில் பார்க்கவே முடியல.பளபளன்னு டைல்ஸ் மாதிரி இருக்காள்.பாதாம் முந்திரி கொடுத்து வளர்த்து இருப்பாங்க போல. இன்னைக்கு நமக்கு சரியான வேட்டை” என நாக்கை சுழட்டிக்கொண்டே கூற அரைகுறை உணர்வில் இருந்தவளுக்கு அது அப்பட்டமாக கேட்டுவிட உடல் அப்பட்டமாக அருவருப்பில் கூசியது .
அதில் இன்னொருவன் “அதுக்கு சாயந்திரம் வரையும் காத்திருக்க வேண்டும் “என ஏக்க பெருமூச்சு விட மற்ற நண்பர்களுக்கும் அதே எண்ணம் என்பது அவளை அப்படியே விட்டுவிட்டு மீதம் இருந்த மதுவை அருந்த சென்றனர். அவர்கள் சென்றதை உறுதிப்படுத்தவளுக்கு அப்போதுதான் நிம்மதியான மூச்சே வந்தது. ரத்தப்போக்கு அதிகரிப்பதே கண்டு போட்டிருந்த துப்பட்டாவின் முனையை கிழித்து நான்காக மடித்து அழுத்தமாக கட்டினாள்.
ரத்தத்தின் போக்கு இன்னும் நிற்காமல் இருப்பதைக் கண்டு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து இருந்தாள். ஏதோ ஒரு நம்பிக்கை தங்களை மீட்க ஆட்கள் விரைந்து வருவார்கள் என அப்படியே குழந்தைகளை பார்த்தபடி சாய்ந்து அமர்ந்தாள்.
குழந்தைகளுக்கு அந்த பாட்டி புட்டி பாலை கொடுக்க அதை கண்டவளுக்கு கண்ணீர் பெருகியது. குழந்தைக்கு புட்டி பால் கொடுத்து பழக்கம் இல்லை என்பதால் கதற ஆரம்பிக்க ஒரு நிலைக்கு மேல் தடியர்கள் குழந்தைகளை தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பிக்க பொறுக்க முடியாதவள். தட்டுதடுமாறி எழுந்து குழந்தைகளை கையோடு அள்ளிக்கொண்டாள். “இதோ பாருடா அம்மா தெரசா “என்று ஒருவன் கிண்டலாக கூற அதற்கு மற்றொருவன அடேய் அது மதர் தெரசா டா என்று கூறி சிப்பை வாயில் போட்டு கொறிக்க ஆரம்பித்தான்.
குழந்தைகள் இருவரும் பழக்கப்பட்ட அணைப்பில் அமைதியாகிவிட அவர் வைத்திருந்த பாலை உடல் நடுங்கினாலும் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தாள். குழந்தைகள் முதலில் அடம்பிடித்தாலும் இருந்த பசியில் பிறகு பாலை குடித்துவிட்டு உறங்க இருவரையும் மடியில் போட்டு அமர்ந்திருந்தவளுக்கு நேரம் கடக்க கடக்க முகம் இறுக்கமானது. சரியாக அரை மணி நேரத்தில் அவள் எதிர்பார்த்த தருணம் வர அந்த பாழடைந்த இரும்பு அறையை சுற்றி கிட்டத்தட்ட இருபதற்கும் மேற்பட்ட ஆட்கள் உள்ளே நுழைந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஐவரையும் போட்டு வெளுக்க முழுபோதையில் இருந்தவர்கள். நிதானம் அடைந்து தாக்கும் முன்பே மயக்கத்தை அடைந்திருந்தனர்.
அதுவரையும் அசையாமல் இருந்தவள் திரும்பிப் பார்க்க அவளை வேலையில் சேர்த்த யதுவீரின் பிஏ மற்றும் நண்பனான கிருஷ்ணனை கண்டதும் தான் நிம்மதி பெருமூச்சு வந்தது.அவள் அப்படியே நின்று கொண்டிருக்க இருவர் சென்று குழந்தையை வாங்கிய அடுத்த நொடி மயக்கி சரிந்தாள். அவளைக் கண்டு பதறிய கிருஷ்ணா ஐயோ வதனி மா என்று கத்திய படி அவளை கைகளில் அள்ளிக்கொண்டான்.மருத்துவமனை அடைந்த பிறகும் மனம் அமைதி அடையாமல் இருந்தது.
நான்கு தையலுடன் 12 மணி நேரம் கழித்து கண்ணை முழித்தவள். கண்டதோ அவளையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் யாகவியையும் பாசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவையும் தான். இருவரையும் நோக்கி சோகையாக புன்னகைத்தவள். அடுத்த நொடியே உணர்வு பெற்று குழந்தைகள் என கேட்டதும் யாகவி புன்னகையுடன் திரும்பி பார்க்க அங்கிருந்த இரு தொட்டியில் குழந்தைகள் நன்றாக துயில் கொண்டிருந்தனர்.
அவள் எழுந்து அமர உதவி செய்த யாகவி அடுத்த நிமிடமே அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். நீ செஞ்ச உதவியை மறக்கவே மாட்டேன் என கண்ணீர் விட்டு கதற அவளை சமாதானப்படுத்துவதற்குள் மதிக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. டாக்டரும் மூன்று நாட்கள் கழித்து தையலை பிரித்து விடலாம் என்று கூறவே குழந்தைகளை கூட்டிக்கொண்டு மருத்துவமனையில் இருந்து காரில் வீட்டுக்கு கிளம்பினர்.
சென்று கொண்டிருக்கும்போது தான் 12 மணி நேரம் ஆகியும் ஏன் மருத்துவமனையில் யாகவியும் இருந்தால் என்ற கேள்வி வரவே நீ வீட்டுக்கே போகலையா என கேட்க இல்லை உன்னை பார்க்கிற அவசரத்தில் அப்படியே வந்துட்டேன் என கூறியவளுக்கு தான்.அம்சவல்லி பேசிய வார்த்தைகளை கேட்க முடியாமலே குழந்தைகளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு கிருஷ்ணாவின் உதவியுடன் மருத்துவமனைக்கு வந்து விட்டாள்.
அவள் தாயும் எப்படியோ கெட்டுப் போ என்று கூறியவர்.குழந்தைகள் கிடைத்த மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்க சென்று விட்டார். வீட்டிற்கு வந்ததும் அனைவரும் உண்டு விட்டு யாகவியும் மதியும் அவரவர் அறைக்குள் அடைந்து கொண்டனர்.கிருஷ்ணாவும் கீழ்தளத்தில் இருக்கும் ஒரு அறையில் தான் தங்கிக் கொண்டிருக்கிறான். ஒரு மாதமாக தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களது அனைத்து பிரான்ஸுக்கும் இன்ஸ்பெக்ஷன் செய்ய சென்றவன். நேற்றுதான் யதுவீரின் கட்டளைக்கு ஏற்ப வந்திருந்தான்.போட்ட மாத்திரையின் பலனாக மதி உறங்க சென்று விட யாகவியும் குழந்தைகளை தன் அருகில் போட்டு அணைத்தபடி உறங்கினாள்.
சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவும் முதல் தளத்தை ஏக்கமாக பார்த்தவன். ஒரு பெருமூச்சுடன் தனது அறைக்கு போனவனுக்கு என்ன தோன்றியதோ கடந்த இரண்டரை மாதம் கழித்து நண்பனின் அறைக்கு சென்றான். கருப்பு நிற ஷார்ட்ஸ் கருப்பு நிற பனியன் அணிந்திருந்தவன்.கடுமையான உடற்பயிற்சி செய்வதால் திளைத்திருந்த தசை கோளங்கள் அவன் உடல் வலிமையை எடுத்து காட்டிக்கொண்டிருக்க தியானத்தில் அமர்ந்திருந்தவன்.காதில் கேட்ட சத்தத்தில் கண்களை விழிக்க அதை கண்ட கிருஷ்ணனுக்கு தான் கண்களில் நீர் பெருகியது.
கண்கள் தெரியாது என்று கூறினாளும் நம்ப முடியாத அளவு இருந்த நண்பனை கண்டவனுக்கு அவன் வாழ்வை நினைத்து வலி மட்டுமே பிறந்து இருந்தது. அது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது என்பதால் கெட் அவுட் கிருஷ்ணா என்று அழுத்தமாக வந்த வார்த்தைகளில் அதற்கு மேல் அவனாலும் அங்கு நிற்க முடியாமல் அவன் அறைக்கு சென்றுவிட யதுவின் உணர்ச்சி அல்லாத முகத்திலோ கண்டுபிடிக்க முடியாத மெல்லிய வலி பரவியது.
அடுத்த நாள் அதிகாலைப் பொழுதிலே சந்தோஷ் வந்து விட யாகவிக்கோ கணவனை கண்டதும் யானை பலம் வந்து விட அவனை இருக்க அணைத்தவள் விடவே இல்லை. ஆறு மாதம் பேசாத கதைகள் எல்லாம் பேசி அவன் மார்பில் இளைப்பாறினாள். அப்போதுதான் குழந்தைகளை அவன் ஏக்கமாக பார்ப்பதை புரிந்து தன்னையே தலையில் தட்டி கொண்டவள்.குழந்தைகள் அருகே அவனை அமர வைக்கவும் குழந்தைகளை கண்டவனுக்கு கைகள் நடுங்கியது. பிறந்த இரண்டு நாட்கள் தான் உடன் இருந்திருப்பான் உடனே அமெரிக்கா சென்று விட குழந்தைகளை வீடியோ காலில் கூட பார்க்கவில்லை.
இரண்டரை மாத பிஞ்சு குழந்தைகள். ஒரே மாதிரி உறங்கிக் கொண்டிருக்க கண்டவனுக்கோ தந்தை உணர்வை மீறிய தாய்மை பெருகியது. குழந்தைகளை தொட சென்றவன் பிறகு தான் உணர்ந்து தலையில் தட்டிக் கொள்ள அவனின் உணர்வு போராட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு கணவனின் இந்த செயல் புரியாமல் போக அவனை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
” யது மேலே நம்பிக்கை இருந்தாலும் குழந்தைகளுக்கு என்ன ஆச்சு ஏதாச்சும் பதட்டத்தில் ஸ்ட்ரைட் பிலைட் கிடைக்காமல் இரண்டு பிளைட் மாறி தான் வந்தேன். ஒரே வியர்வையா இருக்கு.நான் குளிச்சிட்டு குழந்தைகளை தொடர்றேன் “என கூறியவன் குரலில் அவ்வளவு ஏக்கம். உடனே குளியல் அறைக்கு அவன் சென்று விட யாகவிக்கோ இப்பொழுதுதான் மனம் நிறைந்த உணர்வு.
குழந்தைகளை பார்க்கும் அவசரத்தில் பத்து நிமிடத்திலேயே வந்தவன். குழந்தைகளை அணைத்துக் கொள்ள குழந்தைகள் இருவரும் ஒரே நேரத்தில் சிணுங்கியபடி கை காலை அசைக்க பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் இதழ்களில் மெல்லிய புன்னகை. குழந்தைகள் இன்னும் சினுங்க ஆரம்பித்து விடவே ஒன்றும் புரியாமல் சந்தோஷ் விழிக்க யாகவி ஒவ்வொரு குழந்தைக்கும் பாலூட்டி படுக்க வைக்க குழந்தைகளும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தனர். அனைத்தையும் நிறைவாக பார்த்தவன்.மூவரையும் அணைத்தபடி நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக உறங்கினான்.
நேற்று முழுவதும் மருந்தின் உபயத்தால் உறங்கியது இரவும் உறங்கியதால் அதிகாலை 5 மணிக்கு எழுந்தவளுக்கு அதற்கு மேல் தூக்கம் வராமல் போக காயத்தில் தண்ணீர் படாமல் குளித்துவிட்டு வெளியே வந்தவளுக்கு அப்படியே அமர்ந்து இருக்க மனம் வராமல் வெளியே வந்தாள்.ஹாலில் லைட் கூட போடாமல் இருந்தது. அப்பொழுதுதான் ஆறு மணிக்கு மேல் தான் வீட்டில் வேலைகள் நடக்கும் என்பது நினைவு வர தோட்டத்திற்கு சென்றாள்.
வீடு எந்த அளவு பிரம்மாண்டமாக இருந்ததோ அதைவிட இரண்டு மடங்கு தோட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. பலவகையான பூச்செடிகள் அவ்விடத்தை ஆக்கிரமித்து காலத்து நந்தவனம் போல் காட்டியது. ஆங்காங்கே வெண்ணிற இருக்கையும் போடப்பட்டு தோட்டமானது சீராக பராமரிக்கப்பட்டிருந்தது. ஊட்டியின் சீதோஷ்ணத்தின் காரணமாக சிறிது நேரத்திலேயே உடல் சில்லிட்டு போய் குளிர ஆரம்பிக்க ஸ்வெட்டர் போடாமல் வெளியே வந்த தன் மடதனத்தை நொந்து கொண்டவள்.எதிர்ச்சியாக திரும்ப வீட்டின் முதல் தளத்தில் மின் விளக்கு எறித்துக் கொண்டிருக்க பால்கனி கதவும் திறந்திருந்ததில் திரைச் சீலைகள் எல்லாம் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அங்கிருந்து ஏதோ சத்தம் வந்தது. ஏற்கனவே ஏதாவது சத்தம் வந்தால் கண்டு கொள்ளாதே என யாகவி கூறியிருந்தாலும் மனம் கேட்காமல் தான் இருந்தது. சிறிது நேரம் அந்த யோசனையில் இருந்தவளுக்கு குளிர் உடலை வாட்டவும் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வீட்டுக்குள் சென்றாள்.
பிளாஸ்கில் இருந்த சுடு தண்ணீரை குடித்தவள். தனது அறைக்கு செல்ல போக மனம் உந்துதலில் முதல் தளத்திற்கு சென்றாள். சிறிது நேரம் யோசித்தாலும் ஏதோ ஒரு வேகத்தில் யதுவீரின் அறைக்கு முன் சென்றாள். கதவை தட்டுவதா வேண்டாமா என்று யோசனையிலேயே இருந்தவள். பிறகுதான் தான் செய்து கொண்டிருக்கும் செயல் புரிந்த அங்கிருந்து செல்ல பார்க்க உள்ளிருந்து கம்மின் என்ற கம்பீர குரல் கேட்கவும் அதற்கு மேல் செல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என உள்ளே நுழைய அவளின் மெல்லிய கொலுசு ஒலியும் அவள் மீது இருந்து வரும் பிரத்தியேக வாசத்திலும் வருவது யார் என்று கண்டுபிடித்தவனுக்கோ புருவம் யோசனையில் சுருங்கியது.
அவ்ளோ கையை பிசைந்தப்படி தயக்கத்துடன் அப்படியே நின்றிருந்தாள். அவனோ மன அமைதிக்கான தியானத்தில் அமர்ந்து இருந்தான். தைரியமாக வந்துவிட்டவளுக்கு இப்போது என்ன பேசுவது என்று புரியாமல் குழம்பி போய் இருக்க என்ன வேண்டும் என்று அவன் அழுத்தமான குரலில் அதற்கு மேல் அமைதியாக இருப்பது சரி வராது என அவனை நோக்கி நடந்தபடியே “அந்த அடியாளுங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ். என்று கூறியபடி வந்தவள்.
அவன் முன்னால் போட்டிருந்த சிறு மேட் வழுக்கி விட தடுமாறியவள்.சரியாக விழுந்தது என்னவோ அவன் மடியில்தான். அதில் அவள் பயந்து நடுங்க நொடி நேரத்தில் அவன் முகம் கோபத்தில் செந்தூரத்தை பூசிக் கொண்டது.
ஹலோ நட்புக்களே…
கதை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க.