Loading

5🌺🌺🌺🌺 தாழம்பூவே வாசம் வீசு🌺🌺🌺🌺

ஹாசினி  நான் கிளம்பிட்டேன் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துவிடுவேன் என்று கூறியவன் போனை வைத்தான்.

ஐந்து நிமிடத்தில் வெளியே வந்துவிடுவான் என்று தனது பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து நின்றவள்.

சற்று தூரத்தில் வர படிக்கட்டில் இருந்து இறங்கி வாசலுக்கு வந்தவளின் மீது ஒருவன் டூவீலரில் வேகமாக வந்து ஹாசினியின் மீது மோத  ஹாசினி தூக்கி எறியப்பட்டாள். இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்தது.

  வண்டி நம்பரை குறித்துக் கொண்டு அவளை  அள்ளி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு இருந்த டிராபிக் போலீசிடம் போன் பண்ணி சார் நான் கொடுக்கின்ற  நம்பரை டிரேஸ் பண்ணுங்க  என்று கூறி போனை வைத்தவன்.

ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய கான்சியஸ் இல்லாம மயக்க நிலையில் இருந்தாள்.

கை காலில் சிராய்ப்பு தலையில் அடிபட்டு இருந்தது ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டு ராஜுக்கு போன் செய்தான்.

ராஜீவ்  வந்த உடன் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டு தனது அலுவலகம் சென்றான்.

டிராபிக் போலீஸ்  அவனைப் பிடித்து வைத்திருந்தார்.  வெறி கொண்ட மட்டும்  அவனைப் புரட்டி எடுத்தான்.

யார் அனுப்பியது என்று விசாரிக்க அவன்  அடி தாங்க முடியாமல்  கூறினான். தனது வண்டியை எடுத்துக் கொண்டு சென்று கண்ணன் பட்டு மஹால்  வாசலில் நின்றான்  அவன் வேகமாக ஆபிசுக்கு சென்றான்.

மஹால் வெச்சி இருக்கியா இல்ல பொறுக்கியா நீ   என கத்தியவாறு அறையில் இங்குமங்கும் நடக்க அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா  நீ இருக்க மாட்டே என்று கத்திக் கொண்டிருந்தான்.

டேய்…  டேய் …. அது இன்னைக்கு வந்த லவ்வு இல்லடா அவ பிறந்ததிலிருந்து எனக்கென பிறந்தவ எங்களுடைய நேரம் எங்களை பிரித்து வைத்திருந்தது.

இருவர் சேர்ந்து ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே டா என்று கண்கள் சிகப்பேறி  கோபத்துடன் பல்லை  இருக்க கடித்துக்கொண்டு  கத்திக் கொண்டிருந்தான்.

அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனு வைச்சுக்கோங்க உங்களைஎல்லாம் தொலைத்து விடுவேன் என்று கத்திக்கொண்டு இருந்தான்.

ஃபோன் செய்தான்  ராஜீவ்  கண் முழிச்சிட்டா உன்னத்தான் கேட்கிறா வாடா சீக்கிரம் வாடா என்று கூறி போனை வைத்தான்.

இந்தவாட்டி தப்பித்து விட் டீங்க  திருப்பி அவளுக்கு ஏதாவது பிரச்சனை பண்ணீங்கன்னு  வச்சுக்கோ என்ன நடக்குமோ தெரியாது என்று முறைத்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு மின்னலென கிளம்பினான்.

ராஜீவ் இடம் அனைத்து விஷயமும் கூற  வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம்.

ஹாசினி மேரேஜ் முடிகிற வரைக்கும் வெளியே அனுப்ப வேண்டாம். நீ போ நான் கூட்டிட்டு வரேன் என்று கூறியவன்.

ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தவள்  ஜீவா என கட்டிக்கொண்டாள்  ஒன்னும் இல்லடா பயபடக்கூடாது தைரியமாய் இரு என்று கூற டாக்டர் உள்ளே நுழைந்தார்.

ஒன்னும் இல்ல சார் பயந்துட்டாங்க தலைல  லேசான   அடிதான்  என்று கூறினார்.   எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுப்போம் என்று அனைத்தையும் எடுத்து முடிக்க இரவு 12. 30 ஆகியது.

ராஜீவ் இருக்கு போன் செய்தான் கதவினை திறந்தான்.   வீட்டில்  அனைவரும் தூங்கி கொண்டிருந்தானர். அவள் அறை எங்கே என்று கேட்க அவன் அவளது அறைக்கு தூக்கிக் கொண்டே சென்று  படுக்க வைத்தான்.

  அவனது சர்ட்டை விடவே இல்லை ராஜீவ் கொஞ்சம் நேரம் நான் பார்த்துக்கிறேன் பால் மட்டும் வேணும்டா என.

இரு நான் போய் எடுத்துட்டு வரேன் என்று கிச்சனுக்குள் நுழைந்தான். பால் எடுத்துக் கொண்டு வர அவளை எழுப்ப பாதி தூக்கத்திலிருந்து எழுந்தவள் அவன் கொடுத்த பாலினை குடித்தாள்.

ராஜீவ் நான் பார்த்துக்கிறேன் நீ போஎன்று கூறியவன் அவனை அனுப்பி விட்டு அவளது அறையில் லாக் செய்துவிட்டு வந்து அமர்ந்தான்.

தூக்கமே வராமல் பேசிக்கொண்டே இருந்தாள்  இரண்டு மணி ஆகியது ஜீவா ஜீவா எனக்கு வலிக்குது கை,  முட்டி வரை தூக்கி காண்பிக்க சாரி மாத்திக்க என்று கூறி  கப்போர்டினை திறக்க நைட்டி எங்க இருக்குன்னு தெரியல ஹாசினிமா என்றான்.  

எழுந்து நின்றாள்  அவளால் நிற்க  முடியவில்லை என்று கூறி விழப்போனவளை   தாங்கிப் பிடிக்க அவளது இடையில் கைவைத்து என்னைக் கெட்டியாகப் பிடிசுக்கோ என  அவனை கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் பதித்தாள்.  என்னடா என கேட்க ஒன்றுமில்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

ஜீவா என்னை  தூக்கிக்கோ என அவளை தூக்கி கொண்டு வந்து அவளை படுக்க வைத்தான்.

ஜீவா  என அவனது தொடையினை சுரண்ட உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டான்.  உனக்கும்   கல்யாணம்  ஆகியிருந்துச்சின்னா  ராஜிவ்   மாதிரி உனக்கும்  குழந்தை  இருந்திருக்கும் இல்லை என்று கூறினாள்.

ஐ லவ் யூ ஜீவா இங்கு வந்து படுத்துக்கோ என்று  கூ ற  வேண்டாம் என்று கூறியவன் உன் பக்கத்துல வேணா  உட்காந்துக்கறேன் என்று கூறி அவளின் அருகில் வந்து அமர்ந்தான் .

ஜீவா ஜீவா என்று கூப்பிட்டுக் கொண்டே இருக்க என்ன ஹாசினிமா என்றான்.

ஜீவா என்னை எடுத்துக்கோ ஜீவா என்று கூறியவள்,   உன்னை  அடிச்சி  வளர்த்துருக் கன்னும்  ஹாசினிமா என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட யாராவது என்னை கொன்னுடுவாங்கன்னு  எனக்கு பயமாயிருக்கு ஜீவா.

எனக்கு உன் கூட ஒரு நாளாவது வாழ்ந்துட்டு போயிட்றேன் ஜீவா என்று அழ ஆரம்பித்தாள்.

சினிமா நிறைய பாக்குறன்னு நினைக்கிறேன்.   நான் இருக்கும் போது என்ன நடக்கும்  உனக்கு என்று கூறினான்.

அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளின் இதழ்களில்  முத்தமிட்டு தூங்கு ஹாசினிமா  என்று கூறினான்.

யார்  இந்த பிரச்சனையை செய்தது என்று கூறினான்.  அடுத்த முகூர்த்தத்திலேயே மேரேஜ் என்று சொன்னேன் இல்ல  ஹாசினிமா இன்னும் ஒரு வாரம் கூட இல்லை என்று அவளை தட்டி,  தலைகோதி தூங்கவைத்தான்.

காற்று வரட்டும் என்று கதவை திறந்து விட்டு லேசாக வந்து அமர்ந்தவன் சேரில் அமர்ந்து தூங்கி போனான்.

🌺🌺வாசம் வீசும் 🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்