Loading

ஒருவாறாக வீடு வந்து சேர்ந்தான் சூர்யா. உள்ளே நுழைய தியாவை தான் முதலில் கண்டான். ஏனோ சொல்ல முடியாத வலி ஒன்று மனம் முழுவதும் பரவுவது போல உணர்ந்தான்.

மெல்ல தன்னை நிலை படுத்துக் கொண்டு தியாவிடம் சென்றான். அவள் அருகில் தானும் தரையில் அமர்ந்தான். அவள் முகத்தை பார்த்தவுடன் புரிந்து விட்டது, அவள் அழுது இருப்பது. முடிய விழியிலும் கண்ணீர் தடங்கல் தெரிந்தது.

எல்லாம் தன்னால் தன் என்று நினைக்க, அந்த எண்ணமே வண்டாக குடைந்தது அவனை. தியாவின் நெற்றியில் விழுந்து இருந்த முடி கற்றைகளை ஒதுக்க முற்பட்டு கையை உயர்த்த, அந்த நொடி தன் கண்களை திறந்தாள், தியா.

உயர்ந்த கை அப்படியே நின்றது. கண் விழித்தவள், சூர்யாவையும் அவன் கையையும் மாறி மாறி பார்த்தாள், அதை கவனித்தவன் சட்டென தன் கையை எடுத்துக் கொண்டான்.

அங்கிருந்து எழுந்தவள், அவனை சட்டை செய்யாது அங்கிருந்து செல்ல போக, “ரதி”,என்று அழைத்தான் சூர்யா. அவளோ திரும்பி கூட பார்க்கவில்லை. சென்று விட்டாள் அறைக்கே.

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன்,”இன்னும் எவ்ளோ நாள் ரதி”, என்று வேதனை நிறைந்த பார்வையோடு, தானும் அந்த இடத்தில் இருந்து அறைக்கு கிளம்பினான்.

ஜெய்யின் அறைக்கு வந்தாள், ஸ்வாதி. அவனை தேட வெளியே நின்று கொண்டு இருந்தான். அவனை நோக்கி சென்றாள். அவள் வந்ததை கூட அவன் கவனிக்க வில்லை. அவனுக்கு கொண்டு சென்ற பாலை அருகில் வைத்து விட்டு, “ஆகாஷ்”, என்று அவனை அழைக்க, அப்போதுதான் திருப்பி பார்த்தான்.

முகத்தில் எந்த உணர்வும் இல்லை. “சொல்ல ஸ்வாதி.”, என்று அமைதியாக கேட்ட ஜெய் அவளுக்கு புதிதாக தெரிந்தான்.

மாலையும் இப்படித்தான் இருந்தான். இன்னும் அதையே நினைத்து கொண்டு இருக்கிறானா.. இல்லை வேறு எத்தவதாக இருக்குமா.. என்று நினைத்தவள்,

“என்ன ஆச்சு ஆகாஷ்.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?. ஏதாவது பிரச்சனையா?”, என்று அவள் கேட்க, ஜெய் எதுவும் பேசவில்லை.

அவன் முன் சென்று நின்றவள், “இப்போ சொல்ல போறீங்களா இல்லயா”, என்று சத்தமாக கேட்க, ‘பயமா இருக்கு ஸ்வா”, என்று கூறியவன் அப்படியே அமர்ந்து விட்டான்.

அவன் கூற்றில் பதறியவள், தானும் அமர்ந்தாள். “என்ன ஆகாஷ் எதுக்கு இப்டி சொல்றிங்க?”, என்று அவனிடம் வினவ,

“உனக்கு சூர்யா தியா பத்தி தெரியும் தான.. அவங்க ஏன் இப்டி இருக்காங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு என் தியா வாழ்க்கை இப்டியா இருக்கணும்.. என்னால முடியல ஸ்வா”, என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல,

“ஈவினிங் தான ஆகாஷ் சொன்னேன்.. இப்போ மாறுபடியும் அத நினைச்சு கவலை பட்டுட்டு இருக்கீங்க.. எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வரணும் ஆகாஷ்.. அப்போ எல்லாம் தனவே சரி ஆகிடும்.”,என்று அவன் கைகளை பற்றி சொன்னவள், “பால் டேபிள்ல வச்சுருக்கேன் குடிச்சுட்டு தூங்குங்க.. நா கிளம்பறேன்.”, என்று அங்கிருந்து எழுந்தாள்.

கிளம்ப முயன்றவளை, “ஸ்வா”, என்று அழைக்க, என்ன என்பது போல பார்த்தாள். “தேங்க்ஸ்”, என்று ஜெய் சொல்ல, அவனை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள்.

வழக்கம் போல இன்றும் அவள் புதிதாகவே தெரிந்தாள். அவளை பதினைந்து வருடங்களுக்கு மேலே அவனுக்கு தெரியம். ஒவ்வொரு முறையும் அவனை வியப்பில் ஆழ்த்த அவள் தவறவே இல்லை.

ஜெய்யின் அம்மா, ஜானகி தன் அண்ணனும் அண்ணியும் விபத்தில் இறந்த பின், ஆறு வயது சிறுமியான ஸ்வாதியை தன்னுடன் இங்கு அழைத்து வந்தார்.

சில ஆண்டுகள், ஜெய், ரிது, ஸ்வாதி அனைவரும் ஒன்றாக தான் வளர்ந்தனர். ஆனால் ஸ்வாதி எட்டாம் வகுப்பு படிக்கும் அவள் விடுதி தங்கி கொள்வதாக கேட்க, முதலில் சிறிது யோசித்த ஜானகி,

ஸ்வாதியின் உறுதியை பார்த்து சரி என்று கூறி விட்டார். அவளும் படிப்பில் படு சுட்டி, பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தாள்.

பிறகு இளங்கலை பட்டம் முடித்து விட்டு தான் வீடு திரும்பினாள். சிறு வயதில் தன்னோடு விளையாடிய சிறுமி, சில பல ஆண்டுகளுக்கு பிறகு அழகு புதுமையாக வர, ஜெய்க்கு தான் அவளை பார்க்க மூச்சு முட்டியது அன்று பேச பயந்து ஒதுங்கியவன் தான். இன்று வரை அதே நீடிக்கிறது.

ஆனால் அவள் அப்படி இன்று வரை அவனிடம் சகஜமாக பேசி கொண்டு தன் இருக்கிறாள், அவனுக்காக அனைத்தும் செய்கிறாள், ஆனால் இது காதல் தான் என்று அவள் மூளைக்கு இன்னும் எட்டவில்லை.

இதோ இப்போது இருவருக்கும் கல்யாண பேச்சும் வந்துவிட்டது. இருந்தும் இருவரும் பேச முயலவில்லை. இன்றுவரை.

அனைவரும் சென்ற பிறகு, ஜெய்யின் அலுவலகம் முன் வந்து நின்றான், சாய். அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு செல்ல, “என்ன இவ்ளோ கேவலமான லுக் விடாறாங்க.. செரி எல்லாம் பழகுனது தான.. நம்ம வந்த வேலைய பாக்கலாம்..” என்று அலுவலக வாசலை பார்த்து கொண்டு நின்றான்.

சிறிது நேரத்தில், அலுவலகம் உள்ளே இருந்து வந்தாள் ரிதன்யா, அதான் ரிது. அவளை பார்த்தவுடன், ஈ.. என்று பல்லை காட்ட, அவள் தான் கண்டு கொள்ளவே இல்லை. “ரிது.. ரிது” என்று அவள் பின் ஓட, திரும்பி அவளை பார்த்தாள். “என்ன ரிது கண்டுக்காம போற”, என்று பாவமாக கேட்க, அவனை முறைத்தவள் “எப்போ உன்கிட்ட நின்னு பேசிருக்கேன்.. இன்னைக்கு கண்டுக்காம போறேன்னு சொல்ற?..”, என்று கைகளை கட்டிக்கொண்டு அவனை கேட்க,

“அது இல்ல ரிது.. இனிமேல் பேசலமே கண்டுகலாமே.. காத..”, என்று கூற வந்தவன் நிறுத்தி அவளை பார்க்க, அவ்ளோ அப்டியே நின்று கொண்டு இருந்தாள், “ஏதாவது சொல்லு ரிது”, என்று அவன் கேட்க,

“இப்போ சொல்றதுக்கு எதுவும் இல்லை.. நான் வறேன்.. “,என்று பதில் கூறியவள் கிளம்பி விட்டாள்.

“ஹ்ம்ம். என்று மூச்சை இழுத்து விட்டவன், “நாமெக்கென்ன இது புதுசா… பல வருஷமா நடக்கிறது தான”, என்று நினைத்து விட்டு அவனும் கிளம்பினான். அவன் செல்வதை பார்த்த ரிதுவோ தனக்குள்ளே சிரித்து கொண்டாள், அவனை நினைத்து. அதை அந்த மக்கு சாய் அறிய வாய்ப்பில்லை.

இப்படியே நாட்கள் அதன் போக்கில் ஓடி கொண்டு இருந்தது. யாருக்கும் எந்த மாற்றமும் இல்லாமல். தியாவோ தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்க, அவளை அவளுக்கே தெரியாமல் கவனித்து கொண்டான் சூர்யா.

ஜெய் தான் இனி என்ன செய்தாலும் எதுவும் மாற போவதில்லை என்று முற்றிலும் நம்பிக்கை இழந்து இருந்தான். அவனை தேற்றுவதே பெரிய வேலையாக பொய் விட்டது, சாய்க்கும் ஸ்வாதிக்கும். எப்போதும் கலகலப்பாக இருப்பவர்கள் மனம் உடைந்து போனால் தேற்றுவது கடினம் தான் போலவே.

அனைவரும் சகஜமாக இருந்து விட்டால், எனக்கென்ன என்ன வேலை, என்று எண்ணிய விதி தன் வேலை காட்ட தொடங்கியது.

அனைவரின் நிலை மாற்றவே விமானத்தில் வந்து இறங்கினான், அவன் நரேன் கார்த்திக். தரை இறங்கியவன், நேராக தன் இல்லம் செல்லாமல் தனது ஆருயிர் நண்பன், வினய்யை பார்க்க சென்றான்.

அவன் வருவதை அறிந்த வினய் அவனுக்கு பிடித்தமான அனைத்தையும் செய்து வைத்து இருந்தான். நண்பனுக்காக காத்துகொண்டு இருக்க, அப்பெரிய வீட்டின் வாசலில் பிரமாண்ட மகிழுந்தில் வந்து இறங்கினான் நரேன்.

“வா.. மச்சான்.. எப்டி டா இருக்க.. இப்போ தான் வரணும் னு தோணுச்சா உனக்கு “, என்று நண்பனை பார்த்த வினய் ஆரத்தழுவி கொண்டே பேச, அவனுடன் பரஸ்பர விசரிப்புகள் அனைத்தும் முடிந்து அவனை சாப்பிட அழைத்தான் வினய்.

“எனக்கு என்ன செஞ்சு வச்சிருக்க.. என்று அவன் கேட்க, “என்ன கேள்வி டா இது.. உனக்கு பிடிச்ச எல்லாமே முட்டன் வறுவல், சிக்கன் பொடி மாஸ், மீன் கொழம்பு என்று அவன் அடுக்கி கொண்டே போக,

“எனக்கு பிடிச்ச இன்னொன்னு இருக்கு டா. அத நீ மறந்துட்டாயா.. இல்ல நான் மறந்து போய் இருப்பேன் னு நினைச்சியா.?”, என்று அவன் வினவ,

“அது.. தியா சூர்யா பத்தியா கேக்கறே..”, என்று யோசனையோடு அவன் கேட்க,
“எஸ்.. என்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

“அவங்க எப்டி போன நமக்கு என்ன டா.. அதெல்லாம் முடிச்சு போனது.. நம்ம வேலைய பாக்கலாம் டா.. “, என்று பிடிப்பு இல்லாமல் பேச, அருகில் இருந்த பொருள்களை தூக்கி வீசி எறிந்து விட்டு எழுந்து வினய் அருகில் சென்றான், நரேன்.

“நான் உன்கிட்ட அட்வைஸ் கேக்கல.. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு.. என்ன”, என்று அவன் கத்திய கத்தில் ஒரு நொடி ஆடித்தான் போனான் வினய்.

“அவங்க எங்கேயும் போகல.. இங்க சென்னை ல தான் இருக்காங்க.. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது.. நல்ல தான் இருக்காங்க.. எந்த பரோப்ளேம்மு இல்ல அவங்களுக்கு உள்ள.. நான் பார்த்த வரைக்கும்.. ஒரு நல்ல ஜோடி அவங்க.. கொஞ்ச நாள் முன்னாடி தான் அவங்க கல்யாணா நாள் வந்துது.. அவங்க ஆஃபீஸ் ல நல்லா கொண்டாடிட்டு போனாங்க.. இப்போ தியா ஜெய்யோட ஆஃபீஸ் ல வேலை பாக்கறா.. இவ்ளோதான் எனக்கு தெரியும்”, என்று கூறி முடிக்க,

நரேனின் முகம் செங்கொழுந்தாய் சிவந்து இருந்தது. வெறிபிடித்தவன் போல கத்தியவன், மீண்டும் பொருள்களை உடைக்க, அவனை இழுத்து பிடித்து கொண்டான் வினய்.

“அவங்க நல்லா சந்தோஷமா இருக்கவா.. நான் இவ்ளோ பண்ணேன்.. எப்டி டா. எப்டி இதெல்லாம் நடந்தது.. எப்டி டா அந்த தியா.. அப்றம் அவன்.. சூர்யா நல்லா இருக்கலாம்.. என்னால முடில..”, என்று கத்தியவனை அடக்க பெரும் பாடு பட்டான் வினய்.

ஒரு வழியாக நிலை பெற்றவன், “நான் எதுக்கு இப்போ இவ்ளோ கோவப்படனும்.. இது வரைக்கும் தான அவங்க நல்லா இருக்காங்க.. அதான் நான் வந்துட்டேன்ல்ல இனிமேல் இப்டி நல்ல இருக்காங்கன்னு பாக்றேன்.. “, என்று விஞ்சகமாக சொன்னவன், அதற்கான வேலைகளை தொடங்கினான்.

வினய் மற்றும் நரேன் இருவரும் நண்பர்கள். நரேன் தனது எதிரிகளான நினைப்பது தியா மற்றும் சூர்யாவை தான். தியா நரேனின் சொந்தம் தான். வினய்க்கும் அவர்களுக்கும் நேரடியாக எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் தன் நண்பனுக்காக அவர்களை எதிரியாக நினைக்கிறான். அவர்களை தொல்லை செய்வதில் அவனுக்கு பெரிதாக எந்த விருப்பமும் இல்லை அதனாலே நரேன் மனதை மாற்ற எண்ணுகிறான்.

ஆனால் அவனால் இன்றுவரை முடியவில்லை. ஒரு புறம் நியாயம் மறுபுறம் நண்பன்.  என்ற நிலை வர, நண்பனே முக்கியம் என்று எண்ணிவிட்டான்.

முதலிலேயே குழம்பி போன குட்டையாக இருக்கும் தியா சூர்யாவின் வாழ்வில் நரேனால் நடவிருப்பது நன்மையில் முடியுமா.. இல்லை நிலைமை இன்னும் மோசமாகுமா.

காலை அழகாக விடிய, கண்களை கசக்கி கொண்டு எழுந்தான். எழுதவனுக்கு தான் உண்மையில் எழுந்து விட்டோமா இல்லை இன்னும் உறக்கத்தில் கனவு கண்டு கொண்டு இருக்கிறோமா.. என்ற எண்ணம் வர தன்னையே கிள்ளி பார்த்து கொண்டான்.

கிள்ளிய கை சுள்ளென்று வலிக்க நிச்சயம் கனவில்லை என்று புரிந்து கொண்டவன், கண்களை சுருக்கி தன் முன் உள்ள காண கிடைக்காத காட்சியை பார்க்க தொடங்கினான்.

ஆம், தியா தான் அவன் அருகில் தூங்கி கொண்டு இருந்தாள். அவள் அங்கு தூங்குவது வழக்கம் தான். ஆனால் அவன் எழும் முன்னரே எழுந்து விடுவாள். இரவும் அவனுக்கு முன்னே தூங்கிவிடுவாள். இல்லையெனில் அவன் தூங்கிய பின் அறைக்கு வருவாள்.

இன்று தான் தன் அருகில் தூங்கும் தன்னவளை காண்கிறான், அதுவும் இவ்வளவு பக்கத்தில். பார்க்க பார்க்க அவனுக்கு சளிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் வராத சளிப்பா இன்று வர போகிறது அவனுக்கு.

சற்றே கலைந்து இருந்த கேசம், முடிக்கற்றைகள் முகத்தில் லேசாக படர்ந்து இருந்தது. பொட்டு இல்லாதா நெற்றி, இயற்கையாகவே சிவந்த அதிரங்கள் என்று பார்க்கிறேன் என்ற பெயரில் அவளை அளவெடுத்து கொண்டு இருந்தான். (ஆப்பு ஆன் தி வே மாப்பிள).

அப்போதுதான் பொறி தட்டியது. அவள் இவ்வளவு நேரம் தூங்க கூடியவள் இல்லை. இன்று என்னவாக இருக்கும், என்று குழம்பியவன் “ஒரு வேளை உடம்பு எதுவும் சரி இல்லையோ”, என்ற சந்தேகம் எழ ,

மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் நெற்றியில் கைவைத்து பார்த்தான். இயல்பாகவே இருந்தது. “லேட்டா தூங்கி இருப்பாளோ..” என்று எண்ணியவன் முன் ஜெய்யின் முகம் வந்து போக,

“அவன”, என்று திட்ட வந்தவன், “நோ.. வேர்ட்ஸ வேஸ்ட் பண்ண கூடாது.. அவனையே திட்டலாம்”, என எழுந்து அறையை விட்டு வெளியே வந்து அவனுக்கு போன் செய்தான்,

காதல் தோல்வி அடைந்தவன் கூட இப்படி இருக்க மாட்டான் என்று சொல்லும் அளவிற்கு முகத்தை சோகத்தில் நிறைத்து இருந்தான் ஜெய். “இவனுக்கெல்லாம் வேற வேலை இல்லை”, என்று ரிதன்யா அவனை கண்டு கொள்ளவில்லை.

பாவம் ஸ்வாதிக்கு தான் மனது கேட்கவில்லை, தன்னால் இயன்ற வரை அவனை சகஜமாக்க முயன்று விட்டாள். ஆனால் பலன் தான் பூஜ்யம். போன் அடிப்பது கூட தெரியாமல் சிந்தனையில் மூழ்கி இருந்தான் ஜெய்.

அவனை கவனித்த ஸ்வாதி அவன் தலையில் தட்ட, என்ன என்பது போல அவளை முறைத்தான். அவளோ “போன் அடிக்குது..” என்று சைகை காட்ட அப்போதுதான் கவனித்தான், “சூர்யா தான்” , என்று மெதுவாக சொன்னவன் அதை எடுத்து காதில் வைக்க,

“நீ எல்லாம் மனுஷனா.. நல்லா இருப்பியா டா.. வேளங்குவியா டா”, என்று சூர்யா பேசிக்கொண்டே போக, “டேய்… டேய்.. நிறுத்து டா.. எதுக்கு இப்டி காலங்காத்தாள போன் போட்டு இவ்ளோ பாசமா பேசிட்டு இருக்க..”, என்று அவன் பேசுவது பிரியாத போதும் அவனை நக்கல் கேட்க,

“உன்ன கொல்ல போறேன் டா.. கைல மாட்டுன.. அவ்ளோதான் ரஸ்கல்”,.. என்று மீண்டும் ஆரம்பிதான், , “டேய்.. எருமை ஒழுங்கா என்னன்னு சொல்லிடு திட்டு..”, என்றவன், “என்னவாக இருக்கும்.. நம்ம தான் சமீப காலமா எதுவும் பன்னாலேயே”, என்று மனதில் நினைத்து கொண்டான்.

“உன் ஆபிஸ்ல ஆளே இல்லயா டா வேலை செய்ய?.. ஹான் இல்ல யாரும் செய்ய மாட்டேன் சொல்லிடங்களா?.. எதுக்கு டா எல்லா வேலையையும் என் பொண்டாட்டிக்கே குடுக்கற பொறுக்கி”, என்று மீண்டும் கத்த,
“ஓ.. அப்படியா விஷயம்.. சரி மச்சான்.. இந்த என் பொண்டாட்டி னு சொல்றியே அது யாரு தியா வா?”, என்று அவனை வம்பிலுக்க,

“மவனே வந்தேன்.. செருப்பு பிஞ்சுரும் டா.. உனக்கு”, என்று அவன் கத்த, “அதெல்லாம் பிஞ்சா தச்சுக்கலாம்”, என்றான் நக்கலாக,
“எல்லாம் வேலையுலாம் ஒன்னும் குடுக்கல.. டா. இது ஒரு புது ப்ரொஜெக்ட் அத.. தியா தான் முழுசா நானே பண்றேன் னு சொன்னா அதான் நானும் சரின்னு சொன்னேன்.. இது மட்டும் சக்சஸ் ஆச்சுனா.. தியாக்கு செம்ம பேரு கிடைக்கும் டா”, என்று சூர்யாவுக்கும் விளக்க,

“என்ன கருமமோ.. அவ சரியா துங்கறதே இல்ல நயிட்லாம்.. அதான் உண்ண கொஞ்சம் திட்டிட்டேன்..”, என்றவனின் குரல் இப்போதுதான் தணிந்து இருந்தது. பெருமூச்சு விட்ட ஜெய், “ஏன்டா இப்போவே.. இப்டி பேசரையே.. தியா உணக்கூட பேசிட்டா.. அப்போ என்னலாம் டா பண்ணுவா”, என்று வினவ,

“பெருசா ஒன்னும் இல்ல டா, முதல் வேலையா உன் ஆபிஸ் வேலைக்கு போக வேணாம்ன்னு சொல்லிடுவேன்.”, என்றவன் போனை வைத்து விட்டான்.

“டேய்.. பாவி”, என்று கத்திவிட்டு தானும் போனை வைத்து விட்டான் ஜெய். மணி எட்டை தொட அப்போதுதான் எழுந்தாள், தியா.

பிறகு வேக வேகமாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, அலுவலகம் கிளம்பி, இருவரும் சென்றனர்.

ஜெய்யின் நிலை கண்டு வருந்தி கொண்டு இருந்த ஸ்வாதி தியாவிடம் பேசலாம் என்று முடிவெடுத்து அவளை காண அலுவலகம் சென்றாள்.

ஜெய் அலுவலகத்தின் வெளியே நின்றவள், தியாவிற்கு போன் செய்து வர சொன்னாள். தியாவும் வர, இருவரும் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றனர்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்