Loading

          மனதில் ஏற்பட்ட காயங்களை காலம் ஆற்றும். எந்த மடையன் சொன்னான் அதை. இவனுடைய நினைப்பு நம்மள விட்டு போக மாட்டேங்குது.

 

             காலையில் 4 மணிக்கே எழுந்தவள் கிருஷ்ணன் நாமம் சொல்லி தன் வேலைகளை பார்க்க எழுந்து வந்தாள் ஜானவி.

 

        தன் பெயர் கூட மறந்து போனது போல் உணர்ந்தாள். சதா யாரும் எழவில்லை. தன் கட்டில் மேலே உக்கார்ந்து டைரி எழுத ஆரம்பித்தாள்.

 

           தொட்டு விடும் தூரம் என் வாழ்வை முடித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். நான் வைத்த அன்பிற்கு என் மகளை பலியாக்க விரும்பவில்லை. அவள் பாவம் என்ன செய்தாள். நான் காதல் என்று எண்ணினேன். அவனுக்கு அது புரியவில்லை. தவறொன்றுமில்லை. என்னைப்போல் தாய் இல்லாத ஒரு பெண்ணை யாரும் அறிந்து கொள்ள மாட்டார்கள். அப்படி  இருக்க அவன் தவறு என்ன வந்துச்சு.

 

              என் தோழி செய்த தவறுக்கு அவனைக் குறை சொல்ல மாட்டேன். ஆனால் தவறு என் மேல் தான். என் காதல் என்றும் அவன் தான். அவனிடம் ஒரு முறையாவது கூறவேண்டும். இப்படியெல்லாம் கனவுகள் எனக்குள் இருந்தாலும் கிருஷ்ணா சாகும்வரை அவனை  காணக்கூடாது என்று டைரியில் எழுதினாள் . கொடைக்கானலை சுற்றிக் காமிக்க சதானந்தனை எழுப்பினாள்.

 

           அதிகாலை குளிர், அருகில் பெண் வாசம், கனவு என்று இருந்தவன் நிஜம் என்று நினைத்து தடுமாறினான். எப்போ இவளிடம்  தன் காதலை சொல்வது? நட்பு என்று சொல்லி காதல் என்று வந்தால் நிரந்தரமாய் விட்டு போவாளே சதிகாரி.

 

எல்லாரோட மனசுக்குள்ளயும் பல கேள்வி விடை தெரியாத பதில்கள் கிருஷ்ணன் னுக்கு மட்டுமே தெரியும் அதன் அர்த்தங்கள்.

 

             கொடைக்கானல் குளிர் அவளுக்கு அங்கே இருந்த பசுமை காபி தோட்டம் தொட்டபெட்டா மலை, மலர் கண்காட்சி அப்பப்பா கடவுள் எவ்வளோ ரசனை காரன் என்று தான் அவள் மனம் எண்ணியது.

 

          *****************-*******************

 

                 சதா : “ஹலோ  மேம், ஐ வாண்ட் டு ஸ்பீக் வித் ஜனார்த்தனன். ஷால் யூ கனெக்ட் தி லைன் “

 

        ஜனா : ” என்னடா இப்படி லேண்ட் லைன் ல வந்து இருக்க. என் நம்பர் க்கு கூப்பிடு வேண்டியதானே”

 

           சதா : ” இல்லடா ரொம்ப நேரம் ட்ரை பண்ண லயன் கிடைக்கல. இந்தா இதுல தான் பிரச்சனையா?

 

 

     ஜனா :” அப்படிலாம் ஒன்னும் இல்ல சொல்லு மச்சி. ஹாப்பியா இருக்கியா உன் ஆளோட “.

 

           சதா : “கடுப்பு ஏத்தாத டா அது விஷயமாக உன்கிட்ட பேச வந்தேன்”.

 

         ஜனா :”  என்னடா சொல்லு”

 

           சதா :” அது……… வந்து……. அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. கையில் ஒரு பாப்பா வேற இருக்கு. ஆனா அவளோட ஹஸ்பண்ட் அவகிட்ட சொல்லாம ஓடிப்போய் 5 வருஷம் ஆகுது”.

 

     ஜனா :”ஏன்டா உனக்கு பிரெஷ் பீஸ் கிடைக்கலையா லவ் பண்ண “

 

    சதா : ” மச்சான் அவளை அப்படி சொல்லாத. பாவம் என்கிட்ட வேலைக்கு வரப்ப 2 மாசம் டா. அஞ்சு வருஷமா பாக்குறேன். எவ்வளோ கஷ்ட பட்டா தெரியுமா. அவன் பேர் கூட சொல்ல மாற்றா. அவ்ளோ ரோசம். நான் எனக்கே தெரியாம லவ் பண்ணிட்றேன் மச்சான் “

 

    ஜனா :” டேய் எனக்கு நேரமாச்சு. உன் லவ் கதை அப்புறம் பேசலாம். சாரா வைட்டிங். ஓகே பை ” என்று போனை வைத்து ஹோட்டல் அறைக்கு சென்றான். அங்கே சாரா ஒரு வளர்ந்து வரும் மாடலிங்.ஜனா மேல் அவன் பணம் மேல பைத்தியம்.

 

                கட்டில் காம தேவதை போல் அவள் இருக்க, ஜனா வெற்று மார்போடு வந்தான். என்ன புதுசா இப்படி என்று அவள் மேல ஆடை கலைய, அவள் சிணுங்கினா. வெறி தனமாய் அவன் வேட்டை ஆட அவள்

அவனை தன் வசப்படுத்த அவள் மேலும் ஒத்துழைத்தாள். கால்கள் பின்ன மூச்சு முட்ட அவன் அவளை காம கடலில் மூழ்கடித்தான்.

 

        எல்லாம் முடிந்தது அவன் படுக்க, அவள் நினைப்பு வந்தது. மெத்தை போன்ற உடல் அவன் மேல இருந்த அந்த அன்பு ஆனால் அவ எங்கே?

 

 

             தேடல் தொடரும்….

 

_————————————————————–

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்