37- நதியே தீராநதியே

Loading

தன் காதலியின் சுமையைக் குறைக்கும் பொருட்டுப் பலரிடமும் வெளிநாட்டு வேலைக்காக விசாரித்துக் கொண்டிருந்தான் அப்போது எல்லாரும் சொன்ன ஒரே பெயர் சரளா. பேராசிரியர் சரளாவிடம் கேட்டால் தெரியும் என்றும், நல்ல வெளிநாட்டு வேலைக்குப் பல மாணவிகளை அனுப்பியிருப்பதாகத் தகவல் கிடைக்க, கார்த்திக்கும் அது சரியாகவே பட்டது. அவர் எப்போதும் மாணவர்கள் நலனின் அக்கறை காட்டுபவர் அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி அவரை நம்பி மலர்விழியை அனுப்பலாம் என்ற சிந்தனை எழ, மலர்விழியை அழைத்துக்கொண்டு பேராசிரியர் சரளாவை கல்லூரியிலே சந்திக்கச் சென்றான் கார்த்திக்.

நூலகத்தில் அமர்ந்தபடி புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார் சரளா.

“வாங்க கண்ணுங்களா, என்ன விசயம்.?” கார்த்திக்கையும் மலர்விழியும் பார்த்துக் கேட்டார்.

“மேடம் முக்கியமான விசயம் பேசணும் ஜாப் பத்தி” எனக் கார்த்திக் பேசியபடி எதிரே இருந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்தான், அவனோடு சேர்ந்து இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள் மலர்விழி.

“ம்ம் சொல்லுங்க, என்ன ஜாப் விசயமா பேசணும்.?”

“மேம் மலர்விழியோட அப்பா இறந்துட்டாங்க, இப்போ பேமிலியை வழிநடத்தி கொண்டு போறதுக்கு, மலர் வேலைக்குப் போனால் தான் சரியா இருக்கும் ஏழாவது படிக்கிறா ஒரு தம்பி இருக்கான், உலகம்னா என்னனே தெரியாத அவளோட அம்மா தான் இருக்காங்க, எதோ சொந்தகாரங்க கொடுத்த பணத்துல இந்த மாசத்தைச் சமாளிச்சுட்டாங்க, அடுத்த மாசத்துகுள்ள இவ வேலைக்குப் போகலைனா ரொம்பக் கஸ்டம் மேம்” தெளிவாய் சொல்லி முடித்தான் கார்த்தி, விழிகளைக் கசக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் மலர்விழி.

“எப்படி வேலை எதிர்பாக்குறீங்க.?”

“அப்ராட் ஜாப் தான் மேம் சூட் ஆகும், அவளோட அப்பா வாங்கின கடனோட சேர்த்து, ட்ரீட்மென்டுக்காகச் செலவு செஞ்ச பணம் எல்லாத்தையும் மலர் தான் செட்டில் பண்ணணும், கடன்காரன்ங்கிட்டலாம் ஒன் இயர் டைம் கேட்டிருக்கா” எனக் கார்த்திச் சொல்லி முடிக்க,

“ஓ சரிப்பா, இதைக் கேட்கும் போது ரொம்பவே வருத்தமா இருக்கு, ஆம்பளை பிள்ளை இல்லாத வீடுனா இப்படித் தான்” எனச் சொல்லி வருந்தியவர் மலரை எழுந்து நிற்க சொல்லி ஏற இறங்க பார்த்தார்.

“மலர் உன் ஹைட் எவ்ளோ இருக்கும்.?”

“மேம் பைவ் பாயிண்ட் பைவ்” எனச் சொன்னாள் மலர்.

“முகத்துல இல்லை வேற எங்கயாவது ஸ்கார்ஸ் அதாவது தழும்பு இருக்கா.?”

“இல்லை மேம்”

“சரி கார்த்தி, மலேசியா கேபின் க்ரூல வேக்கன்ஸி இருக்குறாதா தகவல் வந்திச்சு நான் விசாரிச்சிட்டு சொல்றேன், இப்போ கிளம்புங்க” எனச் சொன்னார் சரளா.

“மேம்.., சம்பளம் எவ்ளோ இருக்கும்.?” கேள்வியாய் சரளாவை பார்த்தாள் மலர்.

“மினிமம் பத்து லட்சம் கொடுப்பாங்கமா”

“ரொம்பத் தேங்க்ஸ் மேம், நீங்க செய்யுற இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன் மேம்” எனச் சொல்லி கார்த்திக்குடன் அங்கிருந்து கிளம்பினாள் மலர். நூலகத்தின் வெளியே அவனின் கரம் பிடித்தபடி நடந்தவளின் முகத்தில் அப்படியோரு தெளிவு, தன் குடும்பத்தைக் காப்பாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கை அவளின் முகத்தில் துளிர்த்திருந்தது.

“கார்த்தி ரொம்பச் சந்தோசமா இருக்குடா” அவன் தோள் சாய்ந்தாள் மலர்.

“எனக்குத் தான் வருத்தமா இருக்கு, நீ என்னை விட்டு பிரிஞ்சிருவியே, அப்பறம் நான் இங்க தனியா இருக்கணும்” எனப் புலம்ப ஆரம்பித்திருந்தான் கார்த்திக்.

“ஏய் மேம் சொல்லுறதை பார்த்தா, ஒரு மாசத்துலையே என்னோட கமிட்மென்டலாம் முடிச்சிருவேன்டா, ஒரு த்ரீ மன்த்ஸ் பொறுத்துக்கோ முப்பது லட்சம் சம்பாதிச்சிட்டு இந்தியா வந்திடுவேன், ரெண்டு பேரும் சேர்ந்து பிஸ்னஸ் பண்ணலாம்” என எதிர்காலக் கனவுகளை நோக்கி திட்டம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணவளுக்குத் தெரியவில்லை, அவளின் கனவு காற்றில் கரைந்து போகப் போவது.

“சீக்கிரம் வந்திருடி மலர், நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்” அவள் முகம் பார்த்துச் சொன்னான் கார்த்தி, அவளின் கோடி கனவுகள் தேங்கிய விழிகளில் அவனின் காதலை கண்டு பிரமிப்பில் விரிய தொடங்கியது. தந்தை இறந்த பின் வாடிய முகத்துடன் திரிந்தவள் இன்று தான் புன்னகைக்க ஆரம்பித்திருக்கிறாள், அவளின் சிரித்த முகத்தைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிருச்சு என்றே தோன்றியது.

“கார்த்தி ஐஸ்கீரிம் சாப்பிடலாமா.?”

“ரொம்ப நாள் கழிச்சி கேட்டிருக்கடி வா போகலாம்” எனத் தன் காதலியை அழைத்துச் சென்றான்.

“எனக்காகக் காத்திகிட்டு இருப்பியா கார்த்தி.?”

“மூணு வருசம் காத்திருந்த என்னால, உனக்காக நம்ம காதலுக்காக காத்திருக்க முடியாதா.? காத்திருப்பேன் என் மலர்விழியே” என மை பூசாத அவள் விழி பார்த்துச் சொன்னான் கார்த்திக்.

அதே சமயம் நூலகத்தில் இருந்து வெளியே வந்த சரளா தீவிரமாய் யாருக்கோ அழைப்பு விடுத்தார்.

“என்ன காலேஜ் டைம்ல போன் பண்ணிருக்க.? இந்த டைம்ல போன் பண்ண மாட்டியே” திமிராய் ஒலித்தது அகிலனின் குரல்.

“டேய் என்ன மரியாதை இல்லாமல் பேசுற.? நான் ஒரு ப்ரோபசர் நியாபகம் வச்சிட்டு பேசு” எனக் கோபமாய்த் திட்டினார் சரளா.

“எங்க அப்பா கூட இருக்கிறதால உன்னை சித்தினா கூப்பிட முடியும்.? எங்க அப்பா தயவுல தான் நீ அங்க பேராசிரியரா இருக்க ஞாபகம் வச்சிக்கோ” என அகிலன் இழிவாய் பேச, அதை எல்லாம் கண்டு கொள்ளாது.

“ஒன்னு மாட்டியிருக்கு, உன்கிட்ட பேசலாம் பார்த்தேன், சரி உன் அப்பன்கிட்டயே பேசிக்கிறேன்” என இணைப்பை துண்டித்தார் சரளா. மீண்டும் அவன் அழைக்க,

“என்ன அகிலன்.? உன் சித்திக்கெல்லாம் போன் பண்ணிருக்க.? வீட்டுல எதுவும் விசேஷமா.?” நக்கலாய் கேட்டார் சரளா.

“இதோ பாரு ரொம்பத் திமிரு பண்ணாதே, எவ அவ நம்ம டிபார்ட்மென்டா.?”

“அதான்டா உங்க க்ளாஸ் தான், கார்த்திக் கூட ஒரு பொண்ணு சுத்திகிட்டு இருக்குமே”

“அவளா..? அகரநதியா.? சிக்கிட்டாளா அவ மேல ஏற்கனவே எனக்கு ஒரு கண்ணு” அவன் குரல் தீவிரமானது.

“அவ இல்லைடா மலர்விழி”

“ம்ம் அவளும் சரியான பிகர் தான்” எனச் சொல்லியவன் மலரை வைத்து என்ன செய்யலாம் என்ற திட்டம் தீட்டியிருந்தான்.

“வீட்டு சூழ்நிலை சரியில்லைன்னு சொன்னாள் மலர், அதனால் தான் வெளிநாட்டு வேலை தேடுகிறாளாம்” சரளா விவரித்தார்.

“ம்ம் சரி சொல்லு, வேற நாளைக்கு யாரும் பிரச்சனை பண்ண மாட்டாங்களே” என அகிலன் கேட்டான்

“அவளுக்கு எதாவதுனா கேட்க யாருமில்லை, அப்படியே கேட்டாலும் கார்த்திக் தான் கேட்பான், அவளுக்கு இப்போ பணத் தேவை அதிகமா இருக்கு” எனச் சரளா சொல்ல,

“ஓ அப்படியா.? அப்ப சரி உன் அக்கௌண்டுக்கு பத்து லட்சம் அனுப்புறேன் அவளுக்கு அனுப்பி விட்டுரு, உனக்கான கமிஷன் அவ சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்ததுக்கு அப்பறம் தர்றேன் சரளா சரியா.?”

“எதுக்கு இப்போவே அவளுக்குப் பத்து லட்சம் கொடுக்கணும், இது நம்ம வழக்கம் இல்லையே”

“ஏய் அவ கலரை பார்த்திருக்கல சும்மா பால் நிறத்துல இருப்பா.? அவ தங்க முட்டை போடுற வாத்து, கோடி கணக்குல எனக்குச் சம்பாதித்துத் தர போறாள், அவள ஒரு நாள் ஏலத்துல விட்டாலே பத்துலட்சம் வந்திரும், அவ ஆயுசு முழுக்க இதுல தான் இருக்கப் போற, இரண்டு மூணு வருசத்துல நம்ம கொடுக்கற போதை மருந்துல செத்தும் போயிருவாள், ஆனால் அவ பல மடங்கு பணத்தை அள்ளிக் கொட்டிட்டு தான் போவாள், நீ நான் சொல்லுற மாதிரி பணத்தைக் கொடு அப்போ தான் நம்பிக்கை வரும்”

“சரி கொடுத்து தொலைக்குறேன்” சலிப்பாய் சொன்னார் சரளா.

“அப்பறம் முக்கியமான விசயம் இதுல நான் சம்மந்தபட்டிருக்கேன்னு தெரியாமல் பார்த்துக்கோ புரிஞ்சுதா.?” என அகிலன்

“சரி சொல்லமாட்டேன் அதுக்கும் சேர்த்து கமிஷன் கொடேன்”

“ஏன் உன் பொண்ணு சத்யா இருக்காளே அவளை இறக்கிவிட்டு கமிஷன் வாங்கிக்கோயேன்” நக்கலாய் சிரித்தான்.

“டேய் அவ உன் தங்கச்சிடா” கோபமாய்த் திட்டினார் சரளா.

“என்னது என்னோட தங்கச்சியா.? என் அப்பனுக்கா பெத்த.? நீ ஏன் அப்பனோட இல்லீகல் கனெக்‌ஷன் மறந்திறாதே, இருக்க வேண்டிய இடத்துல இருந்துக்கோ” என எச்சரித்து அழைப்பை துண்டித்திருந்தான்.

சரளாவின் கணவர் இறந்த பின் அவர் வாழ்க்கை தடம் மாறி செந்தமிழனிடம் வந்து நிற்க, அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் பணம் தட்டுபாடுன்றி கிடைத்த காரணத்திற்காக, செந்தமிழனின் முழு நேர சேவகி ஆகி போனார் சரளா. அவருக்குத் தெரிந்த கல்லூரியில் வேலையும் வாங்கிக் கொடுத்திருந்தார் செந்தமிழன்.

சரளாவை துளியும் பிடிக்காத அகிலன், சரளாவிடம் பேசவேமாட்டான், ஆனால் சரளா கல்லூரியில் சேர்ந்த பிறகு, நிறையப் பெண்களை ஏமாற்றி அகிலனிடமும், செந்தமிழனிடமும் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்த காரணத்தினால், பணத்திற்காக மட்டும் சரளாவிடம் பேசுவான். ஒரு பெண்ணை அவன் கடத்திச் சென்றால் அவனுக்குக் கோடி கணக்கில் பணம் வந்து சேரும் என்ற ஒரே காரணத்தினால் சரளாவிடம் அளவாகப் பேசிக்கொள்வான் அகிலன்.

நாட்களும் கடந்தது வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கான நேர்காணல் என்று சொல்லி வரவழைக்கப் பட்டிருந்தாள் மலர்விழி. அவள் அன்று தனியாகத் தான் வந்திருந்தாள், அவள் வந்திருந்தது அகிலனின் அலுவலகம் தான். ஆனால் அவளை நேர்காணல் செய்வதற்கு ஒரு பெண் அந்த அறையில் அமர்ந்திருந்தாள்.

“எக்ஸ்கீயூஸ்மீ மேம்” கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு அறையினுள் நுழைந்தாள் மலர்வழி.

“யா கெட் இன் மா” என்று சொன்ன பெண்ணின் வயது முப்பதைத் தாண்டியிருக்கும், ஆனால் அவளின் மேக்கப் சிகை அலங்காரம் எல்லாம் இருபது வயது பெண்ணைப் போல் காட்டியது. அவள் பெயர் தாரா.

“மேம் ஐ யெம் மலர்விழி” எனத் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டாள்.

“ஜஸ்ட் பீ சீட்டட் மா, இது ஜஸ்ட் ஃபார்மாலிட்டிகாக நடக்கிற இன்டர்வீயூ தான், நீ ஆல்ரெடி செலக்ட் ஆகிட்ட” எனச் சொன்ன தாராவை விழி விரித்துப் பார்த்தாள் மலர்.

“உண்மையா தான் சொல்றீங்களா மேம்.? நான் செலக்ட் ஆகிட்டேனா.? என்னோட இங்கிலீஷ் ஃப்ளுயன்ஸி கூடச் செக் பண்ணலையே.? கேபின் க்ருனா கஸ்டமர்ஸ் கிட்ட டேரக்கடா பேசுற மாதிரி தானே இருக்கும்.?” என அவளின் சந்தேகங்களைக் கேள்விகளைத் தொடுத்து கேட்டிருந்தாள் மலர்விழி.

“மலர் நீங்க வொரி பண்ணிக்காதீங்க, உங்களுக்குச் சிக்ஸ் மன்த் ட்ரெயினிங் கொடுப்போம்” எனத் தாரா எதையோ சொல்லி சமாளித்தாள், சில நிறுவனங்களில் இப்படிப் பயிற்சி கொடுத்து வேலையில் அமர்த்துவது வழக்கம் என்பதால் மலரின் சந்தேகம் நீங்கியது.

“மெடிக்கல் டெஸ்ட் மட்டும் கொடுத்திட்டு போயிருங்க” எனத் தாரா சொல்ல,

“மெடிக்கல் டெஸ்ட்டா எதுக்கு.?” பட்டெனக் கேட்டுவிட்டாள் மலர்.

“வெளிநாட்டு வேலைகளுக்குப் போறதுக்கு மெடிக்கல் டெஸ்ட் அவசியமானது தான். உங்களோட ஹல்த் கண்டீஷன் நீங்க வேலை செய்யுற கம்பெனிக்கு தெரிய வேண்டாமா.?”

“ஓகே மேம், ப்ளட் டேஸ்ட் தானே, ப்ரைவேட்ல எடுத்து கொடுத்திடவா.?” மலர் கேட்டாள்.

“இல்லைமா நீங்க வெளிய எடுத்த சிக்ஸ் டு செவன் தௌசன்ட் ஆகும், நாங்க ஃபீரி ஆஃப் காஸ்ட்ல எடுத்துக் கொடுக்கிறோம்” எனச் சொன்னவள் அவளிடம் போதை மருந்து கலந்த பழச்சாற்றை நீட்டினாள்.

“இதைக் குடிச்சிட்டு இங்கே வெயிட் பண்ணு, நான் வர்றேன்” எனச் சொன்னவள் கதவை தள்ளிக்கொண்டு விரைந்து வெளியே வந்தாள், அகிலனின் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

“அகில்.! அகில்..! எங்கே இருக்க.?” எனக் கத்தியபடி அறைக்குள் நுழைந்தவளை பின்னே இருந்து கட்டிக்கொண்டான் அகிலன். அவனை விட மூத்த வயது பெண்ணின் மீது அவனுக்குக் காதலோ.? காமமோ.? அதை அவன் மட்டுமே அறிவான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டியவரே வாழ்வை புதைக் குழியில் தள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

    தான் தனது வாழ்வை தவறான பாதையில் புகுத்திக்கொண்டதோடு நில்லாமல், தன்னை நம்பும் மாணவிகளையும் தவறான இடத்தில் கொண்டு சேர்க்கும் ஈன செயலை குற்ற உணர்வின்றி செய்திருக்கிறார்.

    கேட்ட உடனே வேலை எந்த வித பணமும் இல்லாமல் கிடைக்கும் போது சிறிது யோசித்திருக்கலாம்.

    குரு நம்பிக்கையில் அவள் வாழ்வு சிதைந்து விட்டது.

  2. என்னெல்லாம் பண்றாங்க பொண்ணுங்களை? மலர் என்ன ஆனான்னு தெரியல