
அன்விதாவை இங்கிருந்து அனுப்பியதற்காக விஷ்ணு கோபத்தில் கத்தினான்.
ஆனால் சுஜாதா தான், “இப்ப நம்மள் பிடிச்சு வச்சால் இன்னும் பிரஸ்னம் (பிரச்சினை) ஆகும் விஷ்ணு. ஞான் லாயரோடு சம்சாரிச்சு. என்னே விஸ்வசிக்கு… ஞான் தீர்ச்சயாயும் என்டே மருமகளையும் பேரக் குட்டியையும் விடில்லா. நீ அவசரப்பட்டு வார்த்தையை விடாதே(என்னை நம்பு. நான் கண்டிப்பா என் மருமகளையும் பேத்தியையும் விட மாட்டேன்.)” என சமாளித்து அவனை அமைதி காக்க வைத்தார்.
ஆகினும் அவனால் இரு நாளைக்கு மேல் தாக்கு பிடிக்க இயலவில்லை.
அமையாவைப் பார்க்க பள்ளிக்கூடத்திற்கு செல்ல முயன்றான்.
“ஏதெங்கிலும் பிரஸ்னம் ஆயால், கேஸ் நிண்டெ மேலே ஸ்ட்ராங் ஆகிடும் விஷ்ணு. தயவு செய்து பொறுமையாய் இரிக்கு…(ஏதாவது பிரச்சினை ஆனா, கேஸ் உன் மேல ஸ்ட்ராங் ஆகிடும் விஷ்ணு. பொறுமையா இரு)” சுஜாதா மீண்டும் மன்றாடியதில், அவனுக்கு எரிச்சல் மண்டியது.
“என்டெ மோளைக் (பொண்ணை) கூடே காணான் விடாதே செய்தில்லே? நோக்கிக் கொள்ளாம் (பார்த்துக்கறேன்…)” என அர்ஜித் மீதே சினம் கொண்டான்.
அந்தப் பஜாரி கொடுத்த தைரியத்தில் தானே, இந்தப் பிரச்சினை ஆரம்பித்ததும்!
அன்விதாவைத் தனியே சந்தித்துப் பேச நேரம் எதிர்பார்த்திருந்தான் விஷ்ணு.
இங்கோ மீண்டும் தொழிலில் இறங்குவதாக முடிவு செய்ததும், மூவரும் சுறுசுறுப்பாக அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினர்.
கிளாம்பிங் மற்றும் ஹாபிட் ஹவுஸ் இரண்டையும் இந்த முறை போட்டு விடலாம் என அகமொழி திட்டம் தீட்டினாள்.
அன்விதாவையும் தனது தொழில் பார்ட்னராக இணைத்துக் கொண்டனர்.
சொந்த வாழ்க்கை, இரவு நேரத்து பயத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மூளையைப் பரபரப்பாக வைத்துக் கொள்வதில் இருக்கும் சுகம் உணர்ந்தவளுக்கு, நிம்மதியான உறக்கம் கூட வந்தது.
அவள் படித்ததே டூரிசம் பற்றிய படிப்பு தான் என்பதால், மார்க்கெட்டிங் ரீதியாகவும் தொழில்முறை ரீதியாகவும் அதிக விஷயங்களை பகிர, அவர்களுக்கும் புது புத்துணர்ச்சி வந்தது.
பாஸ்கர் வாங்கி இருந்த இடத்தை வேண்டா வெறுப்பாகத் தான் பார்க்கச் சென்றாள் அகமொழி. ஆனால், அங்கு சென்றதும் நிஜமாகவே அப்படி ஒரு அமைப்பான, மலைமுகட்டினை முத்தமிட்டு செல்லும் பனிப்பொழிவையும் மழை நீரால் பிரச்சினையே வராதது போலான நிலத்தையும் கண்டு வியந்து போனாள்.
“இவ்ளோ மெய்ன் பிளேஸ்ல. இப்படி ஒரு அழகோட, டாப் வியூவோட அப்பா எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடிச்சாரு?”
“ஆமா அகா. செமயா இருக்குல்ல” ரிஷானும் குதூகலித்தான்.
அகமொழி அப்போதே எங்கெங்கு என்ன என்ன யூனிட் வரவேண்டுமென தீர்மானமே செய்து விட, “இந்த டாப் வியூல ரெண்டு யூனிட் போடணும். கிளாம்பிங் ரூம் மாடி கண்ணாடி வழியா பார்த்தா ஆசமா இருக்கும்…” என சிலாகிக்க,
அன்விதா “ஹனிமூன் வர்றவங்களுக்கு ஓகே. பட் பேமிலியா வர்றவங்களுக்கு? கிட்ஸ் கூட்டிட்டு வரும்போது சேஃப்டி பர்போஸும் பார்க்கணும்…” என்றவள், மார்கெடிங் வேலைகளை இப்போதே தொடங்க வேண்டுமெனவும் கூட ரூஹி, “ஆனா நம்ம இன்னும் கட்டவே ஆரம்பிக்கலையேகா” என்று குழம்பினாள்.
“கட்டி முடிச்சதுக்கு அப்பறமா ஆற அமர மார்க்கெட்டிங் பண்றது வேஸ்ட் ரூஹி. இதுல என்ன என்ன ஃபெசிலிடீஸ் இருக்கு, லான்ச் எப்போ, கிட்ஸ், எல்டர்ஸ்னு எல்லாருமே இந்த அழகை ரசிக்கவும், இங்க தங்குற எக்ஸ்பீரியன்ஸ் கெய்ன் பண்ணவும் ஒர்த் தான்னு நம்ம டே ஒன்’ல இருந்து சொல்லிட்டே இருக்கணும்.
அப்ப தான் லான்ச் பண்ணும்போதே நமக்கு புக்கிங்ஸ் வரும். என்ன பெரிய வியூ இருக்குன்னு பார்க்க வர்றவங்களை கட்டிப்போடணும் இந்த எக்ஸ்பீரியன்ஸ்.” என்றவளை மூவரும் ஆ வென பார்த்தனர்.
அவர்கள் முன்னே செய்த செட் அப் தான். ஆனால், அதனை அவள் மெருகேற்றி இன்னும் ப்ரொஃபஷனலாக அனைத்தையும் மாற்றி இருந்தாள்.
“அக்கா, நாங்க கட்டி மட்டும் தர்றோம். எங்களை உங்க சிஷ்யர்களா ஏத்துக்கிட்டு, சூர்ய வம்சம் சரத்குமார் மாதிரி பத்து பஸ் வாங்குற அளவு பெரிய ஆளா மாத்திடுங்க” என்று ரிஷான் சாஷ்டாங்கமாக கும்பிட, “உனக்கு விளையாட்டு ஓவர் ஆகிடுச்சு ரிஷு?” என அவன் காதை திருகினாள்.
“எது விளையாடுறேனா?”
“பின்ன… நான் இந்த பீல்டுக்கு ரொம்ப புதுசு. நீங்க எல்லாம் இதுலயே ஊறிப்போனவங்க. நான் உங்களுக்கு சொல்லித் தரணுமா?”
“நாங்க வெறும் ஆர்கிடெக் தான். ஆனா நீங்க பிசினஸ் ரிலேட்டடா பயங்கரா பிளானிங் வச்சுருக்கீங்களே…” ரிஷான் புகழ்ந்ததில்,
அகமொழியும் “அன்னைக்கே ரெஸ்டாரண்ட்கு கூட சொல்லிட்டு இருந்தா ரிஷு. அப்பவே இவள இங்க கடத்திடலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். வாய்ப்பு தானா அமைஞ்சுடுச்சு… உனக்கு டைவர்ஸ் வாங்கித் தந்த பெருமை என்னையவே சேரும்…” என்று தலை குனிந்து ஏற்றுக்கொண்டவளைக் கண்டு சிரிப்பை அடக்க இயலவில்லை அன்விதாவிற்கு.
“அடிப்பாவி… நிஜமா டைவர்ஸ் வாங்குறதை நினைச்சு நான் சிரிப்பேன்லாம் கனவு கூட கண்டது இல்லைமா. உங்க அலும்பு தாங்க முடியல!”
“ஆமா, நீ ஏன் உன் கேரியரை விட்ட. டூரிசம் படிச்சுட்டு வீட்ல இருந்ததுக்கு, ரிசார்ட்ல புகுந்துருக்கலாம்ல? விஷ்ணு லைஃப் பார்ட்னரை மட்டும் இல்ல, பிசினெஸ் பார்ட்னரையும் மிஸ் பண்ணிட்டான். சீரியஸா இப்ப எனக்கு அவன் மேல கோபமே வர மாட்டுது அன்வி. பரிதாபமா இருக்கு” என்ற அகமொழியிடம் முறுவலித்தாள்.
“அமையா வளர்ந்தப்பறம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். ஒருமுறை விஷ்ணுட்ட கேட்டேன், நானும் ரிசார்ட்கு வர்றேன்னு. ஆனா, நீ குடும்பத்தை ஒழுங்கா பாருன்னு சொன்னதும், அப்பறம் கேட்க தோணல…” என்றவளை மூவரும் ஒரு நொடி வருத்தத்துடன் பார்த்தனர்.
“அந்த மகாராஜா உட்சாணிக் கொம்புலையே இருக்கட்டும். இப்ப நீ ஒரு என்டர்பிரனர் சரியா?”
“சரிங்க மேடம்…” என வாயைப் பொத்தி ஒப்புக்கொண்டதில், இப்போது அகமொழியிடம் முறுவல் பிறந்தது.
தங்கள் திட்டமிடலில் கையில் இருக்கும் பணமெல்லாம் பற்றாது எனப் புரிந்த அகமொழி, மீண்டும் வாங்கி கடனுக்காக விண்ணப்பிக்க முயற்சித்தாள்.
ஆனால் அன்விதா தான், “உனக்கு எவ்ளோ தேவைப்படும்னு சொல்லு. நான் தர்றேன்” என்றதும், “அதெல்லாம் வேணாம் அன்வி” என்றாள்.
“என்னை பார்ட்னர்னு சொன்ன? ஓசில என்னால பார்ட்னெர்ஷிப் ஆக முடியாது அகா. உன் ப்ரெண்ட்ஸ் அவங்க ஷேர் குடுத்து தான பண்றாங்க. அப்போ நானும் என் ஷேர் குடுப்பேன்.”
“நீ ஒன்ஸ் ஸ்டெடி ஆனதும் குடு. வாங்கிக்கிறேன். இப்ப வேணாமே”
“நீ வாங்கிக்கிட்டா நம்ம இதை கன்டினியூ பண்ணிக்கலாம்” அன்விதா திட்டவட்டமாகக் கூறி விட,
“வர வர உன் பேச்சுல ஒரு ஃபயர் தெறிக்குது அன்வி” எனப் போலியாக முறைத்தவள்,
“எப்படி பார்த்தாலும் அமவுண்ட் கொஞ்சம் பெருசுடா. உங்கிட்ட இருக்கறதை குடு. நான் மீதிக்கு லோன் போறேன்” என்றதும், “உனக்கு எவ்ளோ வேணும்னு கேட்டேன்…” என்றாள் மீண்டும்.
“இன்னும் முப்பது லட்சத்துக்கு மேல ஆகும். இப்ப புதுசா பண்றதுனால அப்ரூவல் அது இதுனு நிறைய ஃபார்மாலிட்டி இருக்கு…”
“அவ்ளோ தான. ரெண்டு நாள்ல உன் கைல பணம் இருக்கு” என்றாள்.
“உங்கிட்ட ஏது அவ்ளோ பணம்?” அகமொழியின் கேள்வியில் லேசாக திடுக்கிட்டவள்,
“அது… ஹான் விஷ்ணு எனக்கு மாசம் மாசம் பணம் கொடுப்பாருல. அதை நான் எதுக்கும் யூஸ் பண்ணது இல்ல. அது தான்… அது போக மீதி ஏற்பாடு பண்ணிக்கலாம்” என சமாளித்தாள்.
“ஏய் அரை மெண்டல். அவ்ளோ பணம் நீயே சேர்த்து வச்சிருந்தா, அமையாவை கூட்டிட்டு எப்பவோ வந்துருக்கலாம்ல”
‘அர்ஜி எப்படி தான் இவளை சமாளிக்கிறாரோ…’ என நொந்தவள், “இப்ப இந்த டீடெய்ல் உனக்குத் தேவையா? பணம் ரெடி பண்ணி தர்றேன். நீ வேலையைப் பாரு” என்று அங்கிருந்து அகன்று விட்டாள்.
ஆனாலும் அகமொழிக்கு அவளிடம் பணம் வாங்க சங்கடமாகத் தான் இருந்தது. அதிலும் இத்தனை பெரிய தொகையை அவளால் தர இயலாது தானே?
சொன்னது போன்றே இரு நாள்களில் முப்பது லட்சத்தை கொடுத்தாள்.
“முதல்ல இதுக்கு கணக்கு சொல்லு அன்வி. ஏது இவ்ளோ பணம் மீண்டும்” அதே கேள்வியை கேட்க, அன்விதா விட்டால் அழுது விடுவாள் போலும்.
“ஏன்டி இவ்ளோ கேள்வி கேக்குற? என் நகையை கொஞ்சம் வச்சேன் போதுமா” என்றதில்,
“லூசு… உனக்கும் அன்விக்கும் இப்போதைக்கு கைல பணமும் நகையும் குடுக்குற தைரியம் வேற எதுவும் கொடுக்காது. இதை பிசினஸ்ல போட்டு முடக்காத. நீ ரிட்டர்ன் எடுக்க முடியும் தான். ஆனா, அதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகும். ப்ளீஸ் அன்வி…” என அவளிடமே கொடுத்து விட்டுச் சென்றதில், தலையில் கை வைத்த அன்விதா, வேகமாக அலைபேசியில் டைப் செய்தாள்.
“அவள் பணத்தை வாங்க மாட்டுறா அர்ஜி. நான் சொன்னேன்ல. நான் குடுத்தா ஒத்துக்க மாட்டான்னு… இப்ப என்ன செய்றது?”
“நினக்கு நுண பரஞ்சு கொடுக்கான் (பொய் சொல்லிக் குடுக்க) அறியில்லாந்து பரா…” குறுஞ்செய்தியிலேயே கோபத்தைக் கக்கினான் அர்ஜித் அகன்.
உதட்டைக் குவித்தவள், “அதெல்லாம் நம்புற மாதிரி தான் சொன்னேன். உங்க ஆளு எதுக்கும் மசிய மாட்டுறா. நான் என்ன பண்றது…” என்றதில், கோப ஸ்மைலியை அனுப்பினான் அர்ஜித்.
அதில் வாடியவள், “வேணும்னா ப்ரணீய வச்சு குடுக்க சொல்லலாமா?” எனக் கேட்க,
“நீயே இத்தர சொதப்புனு. அவன் வந்து கொடுத்தா, அவள் பிஸினஸே செய்யுனில்லாந்து போகும், சாரமில்லே? (நீயே இவ்ளோ சொதப்புற. அவன் வந்து கொடுத்தா, அவள் பிசினஸ் வேணாம்னு போய்டுவா? பரவாயில்லையா)” என்றான் நக்கலாக.
“ஐயோ வேணாம் வேணாம்… இப்ப என்ன பண்றது?”
“ஞான் நோக்கிக் கொள்ளாம்.” என்றவன் உதட்டைச் சுளித்தான்.
வங்கியில் லோனுக்காக மேனேஜரை சந்திக்க சென்றாள் அகமொழி.
கையில் தேவையான டாக்குமெண்ட்ஸை சோதித்துக் கொண்டிருந்தவள், மேனேஜர் நேராக தன்னை வந்து பார்க்கும்படி ஏற்கனவே சொன்னதில் அனுமதி கேளாமல், மேனேஜரின் கனத்த அறைக்கதவை வலுவாய் தள்ள, அந்நேரம் உள்ளிருந்து அர்ஜித் அகன் வெடுக்கென கதவைத் திறந்ததில் நிலை தடுமாறி முன்னே விழுந்தவளின் கையிலிருந்த காகிதங்கள் நழுவியது.
தன் மீது பூங்கொத்தாக விழுந்த பெண்ணின் நறுமணத்திலேயே யாரென்று கண்டுகொண்டான்.
ஆடவனின் பரந்த மார்பில் முட்டி நின்று தலையைப் பிடித்த அகமொழிக்கும் உள்ளுக்குள் சுருக்கென இருந்தது.
தலையை நிமிர்த்தாமலேயே, அவள் சுவாசம் கலந்த சந்தன அத்தரின் வாசனை அடிவயிற்றில் பெரும் பிரளயத்தையே நிகழ்த்தியது.
நிமிர்ந்து பார்க்க உந்திய மனதை முயன்று அடக்கியவள், மெல்ல அவன் மார்பில் இருந்து விலகி, தரையைத் தலையில் புதைத்து அவனுக்குப் பக்கவாட்டில் நகர்ந்து செல்ல முயல, அவளுக்கு முன்னே அவளைத் தாண்டி அவன் சென்று விட்டான் புயலாக.
அவனையும் அவன் வாசத்தையும் கடக்க இயலாமல், தன்னைத் தவிர்த்து விட்டுச் சென்றதன் ஆதங்கம் தாளாது அதே இடத்தில் வேரூன்றி நின்றிருந்த அகமொழி மேனேஜரின் குரலில் தான் நிகழ்விற்கு வந்தாள்.
அவரிடம் என்ன பேசினாள், என்ன பதில் சொன்னாளென்று அவளுக்கே தெரியாது.
டாக்குமெண்ட்டை கொடுத்து விட்டு, விறுவிறுவென வெளியே வந்தவளுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
வண்டியை எடுத்துக்கொண்டு எப்போது வீட்டிற்கு வந்தாளென்றே தெரியவில்லை.
நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டவள், ஷவரைத் திறந்து விட்டு அதனடியில் அமர்ந்து விட்டாள்.
ஆடவனின் வாசம் நாசியை விட்டு நீங்கும் வரை கண்ணை இறுக்கி மூடி அமர்ந்திருந்தவளை, உள்ளுறுப்புகள் பரிதாபமாகப் பார்த்தது.
நுரையீரலில் தங்கி, உணர்வில் உயிர் கொடுக்கும் ஆடவனின் வாசம் வெறும் ஷவர் நீரில் கரைந்திடக் கூடுமோ?
விவாகரத்திற்கான வேலைகளில் அர்ஜித்தும் ப்ரணீத்தும் மூழ்கிப் போக, இங்கோ விஷ்ணு ரிசார்ட்டின் அலுவலக அறையில் பேயறைந்ததை போல அமர்ந்திருந்தான்.
அவன் தன்னைப் பலவந்தப்படுத்தி உறவு கொண்டதாக ரிசார்ட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் விஷ்ணுவிற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
அவன் அறைக்கு பெண்கள் இரவு வருவதும் காலையில் செல்வதும் தெளிவாக சிசிடிவியில் பதிவாகி இருக்க, கூடவே அவன் உறவு கொண்ட பெண்களின் மெடிக்கல் டெஸ்ட் சோதனைகளும் அர்ஜித் அகனின் விரல் நுனியில் இருந்தது.
இதையும் விவாகரத்து வழக்கையும் ஒன்றாக ஜோடித்திருந்தவன், அன்விதாவையும் உடல் ரீதியாகத் துன்புறுத்தியதை கவுன்சிலிங்க் மருத்துவரின் வழியாக உறுதி செய்து அந்த ஆதாரங்களையும் திரட்டினான்.
விஷ்ணுவை ஜெயிலுக்கு அனுப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்ததை உணர்ந்து விஷ்ணுவிற்கு மனம் நடுங்கியது.
மேனேஜர் ஜெகன் மீது கடுங்கோபம் கொண்டான். ஜெகன் மூலமே அனைத்தையும் பெற்றுள்ளனர். அதற்கு ஈடாக ஜெகனுக்கு உயிர் பயத்தையும் காட்டி இருந்தான் அகன்.
“மோனு, நின்னை போலீஸ் அரெஸ்ட் செய்யுமோ?” வீட்டிற்குள் நுழைந்ததுமே சுஜாதா விஷ்ணுவிடம் வினவ, விஷ்ணு திடுக்கிட்டான்.
“அங்கனே எல்லாம் யாரும் என்டமேலே கை வைக்கான் பற்றில்லா…(அப்படி எல்லாம் என்மேல யாரும் கை வைக்க முடியாது)” உறுதியாக அல்லாது பலவீனமாக உரைத்தது அவன் குரல்.
“எந்து விசாரிச்சுட்டு இரிக்குனு அவளு? இப்போலே ஞான் போய் அமையாவைக் கூட்டிட்டு வராம். நாய் போலே என்டெ பின்னில் அவளும் வந்து தன்னே ஆகணம்…(என்ன நினைச்சுட்டு இருக்கா அவ? இப்பவே நான் போய் அமையாவை கூட்டிட்டு வரேன். நாய் மாதிரி என் பின்னாடி அவளும் வந்து தான் ஆகணும்…)” என்றவனுக்குக் கோபம் கொப்பளித்தது.
“பொட்டத்தரம் (பைத்தியக்காரத்தனம்) செய்யாதே விஷ்ணு.
அங்கனே நீ நிர்பந்திச்சு அமையாவைக் கூட்டி வந்தால், அதையும் கேசாய் மாற்றினா எந்து செய்யும்(என்னசெய்வ).
நீ செய்து வச்சிரிக்கன விஷயம் செறியது இல்லா. பெண்ணங்கள்டே காரியத்தில் நீ கரெக்ட்டாய் இருந்திருந்தா இத்தர பிரஸ்னவும்(பிரச்சினை) இல்லா…” என்றதில், “எனிக்கு வந்தவள் மரியாதைக்கு இருந்திருந்தா… ஞான் எந்தினு போகான் போகுந்து(எனக்கு வந்தவ ஒழுங்கா இருந்திருந்தா நான் ஏன் போகப்போறேன்)” எனக் கத்தியதில் சுஜாதாவிற்குக் கோபம் சுறுசுறுவென ஏறினாலும் அடக்கினார்.
“நின்டெ அச்சன் எப்போ வேணமெங்கிலும் போலீஸ் வரும்னு பரஞ்சல்லோ விஷ்ணு” சுஜாதாவின் கூற்றில் அவனுக்கு அனைத்து வழிகளும் அடைபட்ட நிலை.
“ப்ச்” எனத் தலையில் கை வைத்து சோபாவில் அமர்ந்து விட்டவனின் அருகில் தானும் அமர்ந்தவர், “விஷ்ணு, ஞான் பரயனது க்ஷமயோடே (பொறுமையா) கேள்க்கு. இப்ப கோபத்தை காட்டிலும் விவேகமானு முக்கியம்.
நினக்கு எதிராய் எல்லா ஆதாரமும் தயாராய் வச்சிருக்குனு அர்ஜி. ஏதெங்கிலும் ஒரு பெண்ணு வந்து சாட்சி பரஞ்சால் கூடி(சொன்னா கூட), நின்னை உள்ளில் (உன்னை உள்ளே) தூக்கி வைக்கும். இதைக் காரணம் பரஞ்சு, நினக்கு டைவர்ஸ் கிடைக்கனதோடே சிக்ஷயும் (தண்டனையும்) கிட்டும். நின்டெ நல்லதினு ஒன்னு ஆலோசிச்சு வச்சிண்டு. நீ மனசிலாக்கும் எந்த விஸ்வாசத்தில்…(உன் நல்லதுக்காக ஒன்னு யோசிச்சு வச்சுருக்கேன். நீ புருஞ்சுப்பன்ற நம்பிக்கையில…
)
“எந்து தன்னே செய்யனம் இப்போ?” எரிச்சல் மிகுந்த குரலில் விஷ்ணு கேட்க,
“டைவர்ஸினு மியூச்சுவலாய் சம்மதிக்கு…” என்றதில் திகைத்தான்.
“எந்தாம்மே பரயனது?” அவன் குரலை உயர்த்தும் போதே கையை நீட்டி நிறுத்தினார்.
“இப்ப நீ மியூச்சுவலாய் சம்மதிச்சில்லெங்கில், அர்ஜி நின்டெமேலே கேஸை அடுக்கிட்டே போகும்.
நீ வைஃபை டார்ச்சர் செய்ஹ்டுவெந்து பரஞ்சு டைவர்ஸ் வாங்கியால், நின்மேலே அது கம்பளைண்ட்டாய் பதியும். அதுவே நீ அவளு நினக்கு ஏற்ற போலே இல்லாந்து நீயே டைவர்ஸினு சம்மதிச்சா, நின்டெ மேலேயும் தெற்று வரில்லா. இல்லெங்கில், நீ தன்னே வளரே கஷ்டப்படணம் மோனு. நீ ஜெயிலினு அலையனதை எனிக்கு காணான் பற்றில்லா.( நீ வைஃபை டார்ச்சர் பண்ணுனன்னு சொல்லி டைவர்ஸ் வாங்குனா, உன்மேல அது கம்பளைண்ட்டா பதியும். இதுவே நீ அவள் உனக்கு ஏத்த மாதிரி இல்லைன்னு நீயே டைவர்ஸ்கு ஒத்துக்கிட்டா, உன்மேலேயும் தப்பு வராது. இல்லன்னா, நீ தான் ரொம்பவ் கஷ்டப்படணும் மோனு. நீ ஜெயிலுக்கு அலையுறதை என்னால பார்க்கக் முடியாது)” என்றார் உடைந்த குரலில்.
“நிங்கள் எந்து பரஞ்சாலும் எனிக்கு அவளை விட்டு கொடுக்கான் பற்றில்லா(விட்டுக் கொடுக்க முடியாது). அவள் என்டே தலையில் மொளகு அரைச்சுட்டு அவன்டே கூடே கூத்தடிக்கும். ஞான் விரலைச் சூப்பிட்டுப் போகணோ?”
“இப்ப நீ சம்மதிச்சில்லெங்கிலும் அதன்னே நடக்கும். பட்சே அதைக் காணான் கூடி நீ ஜெயில்லானு உண்டாவுகா. அவள் இவிடே சந்தோசமாய் இரிக்கும். அது சாரமில்லே? (பரவாயில்லையா?) எந்தா மனஸிலாக்காத்தது விஷ்ணு. (இப்ப நீ ஒத்துக்கலைன்னாலும் அதான் நடக்கும். ஆனால் அதை பார்க்க கூட நீ ஜெயில்ல இருப்ப. அவள் இங்க சந்தோசமா இருப்பா. அது பரவாயில்லையா? ஏன் புரிஞ்சுக்க மாட்டுற விஷ்ணு.)
நின்ட மேலே ஆதாரம் ஸ்ட்ராங்காய் இரிக்குனு. நம்மள்டே வக்கீலும் இதை தன்னே சஜஸ்ட் செய்தது.
சரி அவள் நினக்கு ஏத்த போல இல்லா, நினக்கு சந்தோசம் தந்தில்லாந்து அல்லே பரயனது. நீ எந்தினு அவள்ட கூடே கஷ்டப்படணும்? நினக்கு எந்து தலையெழுத்தோ? நினக்கு ஞானே நல்ல பெண்ணாய் நோக்கி கல்யாணம் செய்து வைக்காம். பட்சே, அதினு நீ வீட்டில் இரிக்கணம் விஷ்ணு. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தால் நின்டே சாதாரண ஜீவிதமே பாழாகும். அதினு பின்னே நின்டே இஷ்டம். எனிக்கு நிண்டே ஜீவிதம் வளரே முக்கியம் கண்ணா…(சரி அவள் உனக்கு ஏத்த மாதிரி இல்ல, உனக்கு சந்தோசம் தரலைன்னு தான சொல்ற. நீ ஏன் அவள்கூட கஷ்டப்படணும்? உனக்கு என்ன தலையெழுத்தா? உனக்கு நானே நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனா அதுக்கு நீ வீட்ல இருக்கணும் விஷ்ணு. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா உன்னோட சாதாரண வாழ்க்கையே வீணாகிடும். அதுக்கு அப்பறம் உன் இஷ்டம். எனக்கு உன் வாழ்க்கை ரொம்பவே முக்கியம் கண்ணா…)” என்றவருக்கு விழி கலங்கியது.
அவனோ தன்னை இந்நிலையில் கொண்டு வந்து நிறுத்தியவர்களின் மீது கடுங்கோபம் கொண்டு, “பட்சே, ஜீவனாம்சம்னு அவளுக்கு ஒற்ற பைஸா போலும் தரில்லா(தர மாட்டேன்)” என்றான் ஆத்திரத்துடன்.
“நம்மள் எந்தினு தரணம்? அவள் நின்டெ கூடே ஜீவிக்கில்லாந்து போயதினு நீ நிண்டெ உழைப்பைக் கொட்டணமோ? அவளே கேட்டாலும் நம்மள் தரான் பாடில்லா. நீயும் சம்மதிக்கான் பாடில்லா.(நம்ம ஏன் தரணும்? அவள் உன் கூட வாழ மாட்டேன்னு போனதுக்கு நீ உன் உழைப்பைக் கொட்டணுமா? அவளே கேட்டாலும் நம்ம தரக்கூடாது. நீயும் ஒத்துக்க கூடாது)” என்று அவனைப் போலவே வாதாட அதில் சற்றே சாந்தமானவன்,
“டைவர்ஸ் தராம். பட்சே அவள் ஆ ப்ரணீயை மட்டும் கல்யாணம் செய்தால், அவளை காலத்தினும் நிம்மதியாய் இரிக்கான் விடில்லா…” என்று விழி சிவக்கக் கூறிட, எச்சிலை விழுங்கிய சுஜாதா, “அப்போ வக்கீலை பேப்பர்ஸ் எடுத்திட்டு வரான் பரயாம்.” என்றார் வேகமாக.
அவன் மனது மாறுவதற்குள் கையெழுத்தை வாங்கி விட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு. அவர் மீது சந்தேகம் கொள்ளாதது விஷ்ணுவின் மடத்தனம்.
உடனடியாக வக்கீலிடம் தாள்களை வாங்கி, “கையெழுத்து இடு மோனு…” என மென்மையாகப் பேசிக் கொடுக்க, அவனுக்கோ எதுவோ உறுத்தியது.
ஆகினும், தன்மீது விழுந்த பழியில் இருந்து தப்பிக்க வேறு வழியற்றுக் கையெழுத்திட்டான்.
சுஜாதாவின் மனம் பாரமாவதற்குப் பதிலாக நிம்மதி அடைந்தது.
விஷ்ணுவின் கையெழுத்து கிடைத்ததும் வெகு வேகமாக வழக்கு நடைபெற்றது.
இங்கு கையில் இருக்கும் பணத்தை வைத்து வேலைகளைத் தொடங்கி இருந்தாள் அகமொழி.
அமையா இடை இடையே “அப்பா எங்க?” எனக் கேட்டிருந்தாள்.
விஷ்ணு அடிக்கடி வெளியூருக்குச் செல்வதால் அவளுக்கு இந்தப் பிரிவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை போலும். வீட்டில் இருந்தாலும் கூட, ஒரு நொடி அனைவர் முன்பும் தூக்கிக் கொஞ்சுவான். அவ்வளவே! மற்றபடி அவனுடன் ஒட்டிப் பேசியதெல்லாம் இல்லை. அதனாலேயே அர்ஜித் ப்ரணீத்துடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.
பிரணீத் அவ்வப்பொழுது கிளாம்பிங் இடத்திற்கு வருவதும் அன்விதாவை அமைதியாகப் பார்த்து விட்டுச் செல்வதுமாக இருப்பான். இருவரும் பெரியதாகப் பேசிக்கொள்வதில்லை.
பேசினாலும், வேலையைப் பற்றி மட்டுமே உரையாடல் இருக்கும்.
அன்விதாவும் வேலையில் மூழ்கி தன்னைப் புதிப்பித்துக் கொள்ள முயன்றதில் மற்றதை பேசி அவளைக் குழம்ப வைக்க அவனுக்கும் விருப்பமில்லை. விஷ்ணுவின் நினைவில் இருந்தும் உறவில் இருந்தும் அவள் முழுதாய் வெளியில் வர வேண்டும். அவ்வளவு தான் அவனுக்குத் தேவை.
“எல்லாரும் ஒழுங்கா வேலை பார்க்குறாங்க தான?” அன்விதாவிடம் பிரணீத் வினவ,
“ம்ம்… ஓகே தான். ஆனா, ஹாபிட் ஹவுஸ்கு எக்ஸ்ட்ரா ஆள் இருந்தா பெட்டர். லான்ச் பண்ண பிளான் பண்ண டேட்கு இவங்க ஒர்க் பண்ற ஸ்பீட் ரொம்ப கம்மி ப்ரணீ” என்றதில், “சரி நான் எக்ஸ்டரா ஆள் அனுப்புறேன்” என்றவன் வாயை மூடிக்கொண்டு சுற்றி முற்றி பார்த்தான்.
“அந்த ரௌடி இல்லையே…” பிரணீத்தின் மிரட்சி கண்டு முறுவலித்தவள், “அவள் வீட்டுக்குப் போயிருக்கா. தப்பிச்ச” என்றதில், “யம்மா! இவங்களுக்கு நடுவுல நான் மாட்டிட்டு பிதுங்கிட்டு இருக்கேன் சிட்டு” என்றான் பரிதாபமாக.
அதில் அன்விதாவின் புன்னகை இன்னுமாக விரிந்தது.
இப்போது ரிஷானும் அமையாவுக்கு மாமாவாகி விட, அவ்வப்பொழுது ரிஷுவும் அகமொழியும் இணைந்தே அமையாவை பள்ளியில் இருந்து அழைக்கச் செல்வர்.
சில நேரம் ரூஹியும் இணைந்து கொள்வாள்.
“அமையாவுக்கு அத்தை தான பிடிக்கும்” ரூஹி கேட்டதில், அவள் மையமாகத் தலையாட்ட, “இல்ல மாமா தான் பிடிக்கும்…” என்று சண்டைக்கு வந்தான் ரிஷான்.
“எனக்கு அத்தை பிடிக்கும் மாமா பிடிக்கும்” என்று இருவருக்கும் சமரசம் செய்து விடுவாள்.
“இன்னைக்கு ஹோம் ஒர்க் நம்ம பண்ணலாம்” என்று ரூஹி அமரும் நேரம், “இல்ல நானும் அமையாவும் தான் பண்ணுவோம்.” என ரிஷான் போட்டிக்கு வருவான்.
“ஆமா உன் ஹேண்ட்ரைட்டிங்கும் அமையா மாதிரி கோணிட்டு தான இருக்கும்…” என ரூஹி நொடித்துக் கொள்ள, “ஆமா இவ கையெழுத்து முத்துக்கு முழு ட்ரவுசர் போட்டது மாதிரி இருக்கும் பாரு” என அவன் வார, அமையாவை வைத்தே சண்டை நடக்கும்.
அனைத்தும் இயல்பிற்கு மாறிக் கொண்டிருந்தது.
பாஸ்கரும் வசந்தியும் மகளின் மீது அன்பைப் பொழிந்தனர். ரிஷானும் பழையதை மறந்து அகமொழியை வெறும் தோழியாகவே பார்க்கத் தொடங்கினான். அன்விதாவும் அவ்வீட்டில் ஒருவளாகப் பொருந்திப் போக, பிரணீத்திடமும் இயல்பாகிப் பேசிக்கொண்டாள். பிரணீத் வாரம் ஒருமுறை அமையாவை வெளியில் அழைத்துச் சென்று விடுவான். அர்ஜித் அகன், பிரணீத் அமையா மூவரும் அன்று முழுதும் வெளியில் சுற்றி விட்டு வருவர்.
அவ்வப்பொழுது ‘கமிட் ஆக போனவனுக்கு மீண்டும் சிங்கிள் வாழ்க்கை’ எனப் புலம்புவான் ரிஷான். ஆனால் இயல்பான அனைத்தையும் இயல்பாகப் பார்க்க இயலாதவாறு நாளுக்கு நாள் அகமொழியின் இறுக்கம் தான் அதிகமானது.
அவளது கனவும் கண்முன்னே பிரமாண்டமாக எழத் தொடங்கிட, தனது பழைய துள்ளல் வாழ்க்கையில் வெறுமை சூழ்ந்தே தூரத்தில் தெரியும் பனிமூட்டத்தை வெறித்தபடி நிற்பாள்.
நாள்கள் அதன்போக்கில் நகர, வசந்தி வாசலில் அமர்ந்து கீரை உருவிக்கொண்டிருந்தார்.
“என்ன ஆண்ட்டி அமையா ஸ்கூல் போயாச்சா?” எனக் கேட்டபடி படியில் அமர்ந்த ரிஷான்,
“ஆமா ரிஷு… கிளம்பிட்டா. அவள் வந்ததுல இருந்து நேரம் ஓடுறதே தெரியல. பாவம் சுஜாம்மா எப்படி இவங்களை விட்டுட்டு இருக்க முடியுதோ…” என வருத்தம் கொண்டார்.
“ம்ம்… அகா எங்க?” கேட்ட ரிஷான், “அகா” என அழைக்க, அவளிடம் பதிலே இல்லை.
“இன்னைக்கு காலைல வேலை இல்லைன்னு, வீட்ட சுத்தம் பண்ண இறங்கிட்டா. காதுல ஹெட் போனை மாட்டிட்டு நிப்பா. பக்கத்துல போய் பார்க்கலாம்” என்று வசந்தி எழுந்ததில் ரிஷானும் எழுந்தான்.
தனது அறையில் இருந்த அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். உடல் இங்கு இருக்க எண்ணங்கள் எங்கெங்கோ இருந்தது.
இன்னும் பையில் இருந்த துணிகளை அலமாரியில் கடத்த வேண்டி இருக்க, அந்த வேலையை முடிக்க எண்ணியவளுக்கு கண்ணில் பட்டது அந்த உடை.
“ட்வின்னிங் பண்ணலாமா?” குதூகலமாகக் கேட்டபடி அவளுக்கும் அவனுக்கும் ஒரே போல் எடுத்த ப்ளேசும் ஜீன்சும்.
அதனை எடுக்கும்போதே கரங்கள் நடுங்கிட, மீண்டும் அன்றைய நாளின் நினைவிலேயே மீதி வேலைகளைத் தொடர்ந்திருந்தாள்.
“அகா… ஏய் அகா…” பலமுறை ரிஷான் அழைத்தபிறகே துடைப்பதை நிறுத்தியவள், “என்னடா?” என வினவ, வசந்தி “இவ்ளோ சவுண்டா வச்சு பாட்டு கேட்டா காது வலிக்காதா அகா?” என இடுப்பில் கையூன்றி முறைத்தார்.
அகமொழி குழப்பமாக காதை குடைந்து விட்டு “நான் ஹெட்போன் போடலையே” எனப் புருவம் சுருக்க, வசந்தியின் முகம் மாறியது.
“இவ்ளோ நேரம் கூப்பிடுறோம்ல” ரிஷானும் குரல் கம்ம கேட்க,
“ஓ… கவனிக்கலடா. எதுக்கு கூப்பிட்ட” எனப் புருவம் சுருக்கியதில், இருவரின் முகமும் மலர்ச்சியைத் தொலைத்தது.
“இவளை நினைச்சு பயமா இருக்கு ரிஷு. அந்தத் தம்பியையும் உன் அப்பா அடிச்சு அனுப்பிட்டாரு. இவளோ கோபப்பட்டாலும் பரவாயில்ல. ஆனா இப்படி இருந்தா எப்படி இவளை சமாதானம் பண்றதுனு எனக்கும் புரியல. நானே மாப்பிள்ளைட்ட பேசிடலாமான்னு இருக்கு” எனத் தனியே வந்து புலம்பினார் வசந்தி.
பெருமூச்சு விட்ட ரிஷான், “நானே பேசுறேன்…” என்றான்.
சொன்னது போன்றே மனது கேளாமல், நேராக அர்ஜித் அகனின் வீட்டிற்குச் சென்றான்.
அங்கோ விஷ்ணுவிற்கு வழக்கு தீ வேகத்தில் நடந்து கொண்டிருந்ததைக் கண்டு கோபம் பீறிட்டது.
அர்ஜித் அலுவலகம் செல்லும்பொருட்டு கீழிறங்கி வர, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான் விஷ்ணு. அனகா உண்ண வந்தவள் விஷ்ணுவின் முகத்தைக் காணப் பிடிக்காமல் நகர முற்பட அர்ஜித்தைக் கண்டதும் “சாப்பிட வா அர்ஜி” என அழைத்தாள்.
மறுப்பாய் தலையசைத்தவன் நகரும்போதே, விஷ்ணு “ஏய் அனு… நின் சேட்டன் என்னை பொம்பளைப் பொறுக்கியாய் பிரேம் செய்திரிக்கானே. அவிடே இவன்டெ பார்யா மாத்திரம் எந்து செய்யுனு? (அங்க இவன் பொண்டாட்டி மட்டும் என்ன செய்றாளாம்)
இவன்டெ காசினு ஆசைப்பட்டு அவனைக் கழற்றி விட்டு, பின்னே இவன்டே அடுத்திந்து வேண்டியதைக் கறந்திட்டு இவனே கழற்றி விட்டுட்டு, அவன்டெ கூடே சுத்திட்டு இரிக்குனு. அமையாவை சாக்கு வச்சு அவள் தன்னே நல்லா வாழுந்து. (இவன் காசுக்கு ஆசைப்பட்டு அவனை கழட்டி விட்டா, அப்பறம் இவன்கிட்ட இருந்து வேண்டியதை கறந்துட்டு இவனை கழட்டி விட்டுட்டு, அவன் கூட சுத்திட்டு இருக்கா)
இந்தலே (நேத்து) கூடி கண்டல்லோ. ஆ அகமொழியும் ரிஷானும் ஜோடி சேர்ந்து வந்து என்டெ மோளைக் கூட்டிட்டு போயதை. அதுவும் ஒரே வண்டியிலு. இவன் இல்லெங்கில் அவன் எந்து அவள் மாத்திரம் ஜீவிக்காமோ…(‘இவன் இல்லைன்னா அவன்’னு அவள் மட்டும் வாழலாமோ… )” எனக் குத்தலாகப் பேசியதில் அனகா முகத்தைச் சுளிக்க, அர்ஜித் விஷ்ணுவின் நெஞ்சில் மிதித்திருந்தான்.
அதில் நாற்காலியில் இருந்து பின்னால் விழுந்த விஷ்ணு விழி சிவந்து அர்ஜித்தை அடிக்க வர, அதற்கு முயற்சி செய்யும் முன்னே அர்ஜித் அகன் அவனது உயிர் நாடியில் முட்டியை வைத்து ஏத்தி இருந்தான்.
அவனது முகத்தில் அத்தனை ரௌத்திரம் தாண்டவமாடியது. தமையனை இந்த அளவு கோபத்துடன் பார்த்திராத அனகாவிற்கு பயம் தொற்றிக்கொள்ள, “அர்ஜி வேணாம் அர்ஜி” எனத் தடுக்க முயன்றாள்.
அவளைத் தள்ளி விட்டவன், சுருண்டு தரையில் விழுந்த விஷ்ணுவை மொத்த பலமும் கொண்டு மிதித்துக் கொண்டே இருந்தான்.
அனகாவோ, “ஐயோ அச்சா, அம்மே… வேகம் வரின்… அர்ஜி வேணாம் அர்ஜி… அர்ஜி ப்ளீஸ்” என மன்றாடும்போதே பெரியவர்கள் நால்வரும் திடுதிடுவென வெளியில் வந்து விட்டனர்.
“அர்ஜி வேணாம்… நிறுத்து…” நால்வரும் பிடிக்க விழைந்தும் அவனை நிறுத்த இயலவில்லை.
விஷ்ணுவோ, அவன் காலைப் பிடித்து தடுத்து நிறுத்த இயலாது, “டேய் ஞான் சத்யமானு பரஞ்சது. அவள் காசினு (காசுக்காக) தன்னே நின்னைக் கல்யாணம் செய்தது” என்றதும் மீண்டும் கொந்தளித்த கோபத்துடன் அவன் வாயிலேயே மிதிக்க, கல்யாணி சத்தமிட்டு அர்ஜித்தை தடுத்தார்.
“நிறுத்து அர்ஜி. ஆத்யமே உள்ள பிரஸ்னம் போறாந்து நீ வலிதாக்காதே (ஏற்கனவே இருக்குற பிரச்சினை போதாதுன்னு நீ இன்னும் பெருசாக்காத).
“இன்னொரு பிராவஸ்யம் அவளைப் பற்றி சம்சாரிச்சால்…(இன்னொரு வார்த்தை அவளை பத்தி பேசுன…)” விஷ்ணுவின் மீது சினத்தைக் குவித்து எச்சரித்தவனைக் காணவே பயம் எழுந்தது.
கல்யாணி, “ஐயோ மதி. அவள் அல்லே பரஞ்சது, நின்னே காசினு வேண்டி கல்யாணம் செய்து எந்து…(ஐயோ போதும், அவள் தானே சொன்னா, உன்னைக் காசுக்காக கல்யாணம் செஞ்சேன்னு)” என்றதில், வெடுக்கெனத் திரும்பியவன் உறுமினான்.
“அதே பரஞ்சு.. அவள் பரஞ்சா? அவள் எந்து வேணமெங்கிலும் பரயும்… எதை சீரியஸாய் எடுக்கணம் எதை எடுக்கான் பாடில்லான்னு எனிக்கு அறியும்.
அவளை ஜட்ஜ் செய்யான் இவிடே யாருக்கும் அதிகாரம் இல்லா. அவள் காசினு வேண்டி கல்யாணம் செய்தெந்து நுண பரஞ்செந்து புறத்து அயிக்கான் அறஞ்ச நிங்களுக்கு, இவனை அயிக்கான் அறஞ்சில்லே?(ஆமா சொன்னா… அவள் சொன்னா? அவள் என்ன வேணாலும் பேசுவா… எதை சீரியஸா எடுக்கணும் எதை எடுக்க கூடாதுன்னு எனக்கு தெரியும். அவளை ஜட்ஜ் பண்ண இங்க யாருக்கும் உரிமை இல்ல. அவள் காசுக்காக கல்யாணம் பண்ணா, பொய் சொன்னான்னு வெளில அனுப்ப தெரிஞ்ச உங்களுக்கு, இவனை அனுப்ப தெரியலையா?)” என மூச்சிரைத்தவனின் முகமே கோபத்தில் சிவந்திருந்தது.
மொத்தக் குடும்பத்தையும் விரல் நீட்டி எச்சரித்தவன், “இனி ஒரு வாக்கு அவளைப் பற்றி தெற்றாய் பரஞ்சால்…(தப்பா பேசுனா)” என்று விழிகளில் நெருப்பைக் கக்கி விட்டு விஷ்ணுவை பார்த்து, “கொந்து கழியும்!(கொன்னு போட்டுடுவேன்)” என்றான் ஆக்ரோஷத்துடன்.
அதில் விக்கித்து நின்றதும் அர்ஜித்தின் குடும்பம் மட்டுமல்ல, அவனிடம் பேசும்பொருட்டு அங்கு வந்த ரிஷானும் தான்.
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
90
+1
2
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சீக்கிரம் சேர்ந்து காதலோடு இருங்க…
வாவ் அகன்.