Loading

அத்தியாயம் 34

தனது அலைபேசியை வந்தடைந்த குறுஞ்செய்தியைக் கண்டதும், அர்ஜித் அகனின் விழியில் சிறு மின்னல்.

விவாகரத்துப் பத்திரத்தைப் புகைப்படம் எடுத்தும் அவளுக்கு அனுப்பி வைத்தான்.

அதனைக் கண்டு வியந்தவள், தம்ப்ஸ் அப் குறியை அனுப்பி விட்டுச் சில நொடிகளில் “ஆனா, விஷ்ணுவும் சைன் போடணுமே?” என்றாள் வினவலாக.

“போடுவான். போட்டு தன்னே ஆகணும்.”

“ஒருவேளை இழுத்தடிச்சா? அட்லீஸ்ட் ஒரு வருஷத்துக்குள்ளயாச்சும் டிவோர்ஸ் கிடைக்கணும்.”

“ஒரு வருஷமோ? ஒரு மாசம் தன்னே லிமிட்…” என அனுப்பியதும் அவளது நெற்றியின் மத்தி சுருங்கியது.

“நைட்டோட நைட்டா டிவோர்ஸ் வாங்க முடியாதுன்னு நீதான சொன்ன. பின்ன, ஒரே மாசத்துல எப்படி அகன்?”

“நைட்டோட நைட்டா தன்னே வாங்கான் பற்றில்லாந்து பரஞ்சது. ஒரு மாசத்தில் வாங்கான் பற்றில்லாந்து பரஞ்சில்லால்லோ… (நைட்டோட நைட்டா தான் வாங்க முடியாதுன்னு சொன்னேன். ஒரு மாசத்துல வாங்க முடியாதுன்னு சொல்லலையே.) பை தி வே, அப்போ விட இப்போ ஸ்ட்ராங் ரீசன்ஸ் உண்டு.” என்றான்.

“ம்ம்…”

அந்தக் காரணங்கள் என்னவென்று அவனும் சொல்லவில்லை. அவளும் கேட்கவில்லை.

கேட்க அவளுக்கும் பிரியமில்லை. சொல்ல அவனுக்கும் விருப்பமில்லை.

தனக்கு அருகில் ஒரு ஜீவன் வெகு நேரமாக அமர்ந்திருப்பதைக் கண்டுகொள்ளாது, தீவிரமாக அலைபேசியில் மூழ்கி இருந்த நண்பனைப் பரிதாபமாகப் பார்த்தான் பிரணீத்.

“அகா ஏன் போனா?”

நண்பனின் கேள்வியில், “அதை அவளோடு தன்னே சோதிக்கணம்.” எனத் தோளைக் குலுக்கிட,

“நீ கேட்கலையா?” என்றான் தயக்கமாக.

“ஞான் எந்தினு சோதிக்கணும். ஞான் போகான் பரஞ்சில்லால்லோ…(நான் ஏன் கேட்கணும். நான் போக சொல்லலையே)” அகன் சொல்லும்போதே அகமொழியின் சேட்டில் டைப்பிங் காட்டுவதும், பின் மறைந்து போவதுமாக இருந்தது.

அதில் அவனும் ஏதோ டைப் செய்ய வருவதும் பின் அழித்து விடுவதுமாக இருக்க, பிரணீத் அலைபேசியை எட்டிப் பார்த்தான்.

“யார்கிட்ட பேசிட்டு இருக்க?”

“ம்ம்… கேர்ள் ப்ரெண்ட்!” என்றதில், “கட்டுன பொண்டாட்டியை கேர்ள் பிரெண்டுன்னு சொல்ற ஒரே புருஷன் நீ தான்…” என முணுமுணுத்தான்.

“அறயுந்தில்லே… மூடு!” என நிமிர்ந்து முறைத்தவன், கால் மீது கால் போட்டுச் சாவகாசமாக அமர, அந்நேரம் அவளிடம் இருந்து மீண்டும் குறுஞ்செய்தி வந்தது.

“ஆனா எப்படிப் பார்த்தாலும் கூலிங் பீரியட்னு அவங்களை 6 மந்த்ஸ், சேர்ந்து வாழச் சொல்லுவாங்க தான. டைம் குடுக்காம எப்படி அகன் டிவோர்ஸ் கிடைக்கும்?”

“ஆல்ரெடி ரெண்டு பேரும் ஒரே வீட்டிலேயே தனித் தனியே தன்னே இருந்ததெந்து பரஞ்சு, கூலிங் பீரியடை கேன்சல் செய்யான் பரயாம் மொழி. Waiver Application தாக்கல் செய்யாம்.

ஹஸ்பண்டுடே அத்துமீறல்களால் பெண் வல்லாத்த மனப் பிரயாஸத்தில் இரிக்குனு (மிகக் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்.) ரெண்டு பேரும் சேரான் 0% வாய்ப்பும் இல்லா. இவரே பின்னயும் 6 மாதம் காத்திரிக்கான் (காத்திருக்க) வைக்கனது பெண்ணின்டெ ஜீவிதத்தை (பெண்ணோட வாழ்க்கையை) பின்னயும் நசிப்பிக்கும் (சீரழிக்கும்’) னு லாயர் தன்னே ஜட்ஜை சம்மதிக்கான் வைக்கணம்.

விஷ்ணுவை MOU (Memorandum of Understanding) மியூச்சுவல் கன்சென்ட்ல சைன் செய்யான் வைக்கணம். குழந்தை யாரடுத்து இரிக்கணம், ஜீவனாம்சம்னு இதிலு ஆர்கியூமென்ட் இருந்தால் மாத்திரமே, கேஸ் இழுத்துட்டு போகுள்ளு. அமையா அன்விகிட்டே தன்னே இரிக்குள்ளு.(இருப்பா)

ஜீவனாம்சம்னு எதுவும் அவளுக்கு ஆவஸ்யம் ( அவசியம் இல்ல) இல்லா… சோ இதெல்லாம் ஆல்ரெடி பிக்ஸ் செய்தால், கேஸை வேகமே முடிக்காம்… வில் ஸீ!” என்றான் பெருமூச்சுடன்.

அவனது திட்டமிடலைக் கண்டு அவளுக்கு எப்போதும் போலவே வியப்பில் புருவங்கள் உயர்ந்தது.

“சூப்பர்… பிளான் பண்ணுனபடி நடந்தா ஓகே தான். ஆனா விஷ்ணு இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவானோ… அவள், கூட கொஞ்சம் ஹர்ட் ஆகாம இருக்கணும்.” என்றவளின் வார்த்தையில் அன்விதாவின் மீதான நிஜ அக்கறை தெறித்தது.

“ஹ்ம்ம்… ஹர்ட் ஆயாலும் கடந்து வந்து தன்னே ஆகணம். ஹர்ட் ஆவுந்தெந்து (ஆகுதுன்னு) ஒரே ஸ்தலத்தில் (இடத்தில்) தேங்கி நிக்கான் பற்றில்லால்லோ (முடியாதுல…)”

‘இந்தச் செய்தி அன்விதாவிற்கா, தனக்கா…’ என்றே சிறு நெருடல் வந்தது அவளுக்கு.

பின் அவனே, “அன்வியும், அமையாவும் குறச்சு திவசம் (கொஞ்ச நாளைக்கு) நிண்டெ வீட்டில் இரிக்கான் பற்றுமோ?(இருக்க முடியுமா)” என வினவினான்.

அதில், “கொஞ்ச நாள் என்ன? எவ்ளோ நாள் வேணாலும் இருக்கட்டும் அகன். இங்க இருந்தா அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.” என்றாள்.

“இல்லா… குறச்சு திவசம் நின்டெ கூடே இருந்தால், அதினு வேற கல்யாணம் செய்திட்டுப் போனதே பெஸ்ட்டெந்து அவளும் அடுத்த கட்டத்தை நோக்கிப் போகும். அதானு பரஞ்சது.(இல்ல… கொஞ்ச நாள் உன்கூட இருந்தா, அதுக்கு வேற கல்யாணம் பண்ணிட்டுப் போறதே பெஸ்ட்டுன்னு அவளும் அடுத்த கட்டத்தை நோக்கிப் போவா. அதான் சொன்னேன்)” என அசட்டையாகக் கூறியதில், அவளுக்கு வந்ததே கோபம்.

நான்கைந்து கத்தி எமோஜியை அனுப்பி வைத்தவள், அதற்குப் பதில் ஏதும் கூறவில்லை.

சட்டெனக் கோபம் வடிந்த நிலை அவளுக்கு. அவனுக்கும் சிலிர்ப்புகள் அடங்கிய நிலை.

பிரிவுகள் தானாய் ஏற்றது தான் என்றாலும், ஒருவர் மற்றவருக்குக் கொடுத்த காயம் வலித்தது.

பிரணீத் தான், “அர்ஜி… அன்வி…” என ஆரம்பிக்க, “ஞான் வேலை விஷயமாய் லாயரைக் காணான் போகுந்து. நீ ஆபிஸ்குப் போ!” என்றான் உத்தரவாக.

தன்னை இறங்கச் சொன்னது சிறு வலி கொடுக்க, “என்னைத் தப்பா நினைக்காத அர்ஜி…” எனும்போதே கண்களும் கலங்கியது.

“அவள் எப்பவும் என்னோட பெஸ்ட் ப்ரெண்டு தான்…” என்றவனைத் திரும்பித் தீயாக முறைக்க, அதில் மிரண்டவன் தானாகக் காரில் இருந்து இறங்கி விட்டான்.

பிரணீத் அடுத்ததாகச் சென்றது அகமொழியின் வீட்டிற்குத் தான்.

மீண்டும் தொழிலைத் தொடங்க அகமொழியிடம் வாதிட்டு ஓய்ந்து போயிருந்த ரிஷானும், ரூஹியும் அப்போது தான் கிளம்பி இருக்க, தனதறையில் அமர்ந்து ஜன்னல் வழியே வெறித்திருந்த அகமொழியின் அருகில் வந்து ‘பூம்’ எனக் கத்தினான் பிரணீத்.

அதில் திடுக்கிட்டுத் திரும்பியவள் பிரணீத்தைக் கண்டதும், அத்தனை நேரம் இருந்த சோர்வு மறைய, “ப்ரோ… இங்க என்ன பண்றீங்க?” என்றாள் புன்னகையுடன்.

“நியாயமா நீ செஞ்ச வேலைக்கு நான் பரலோகம் போயிருக்கணும் சிஸ்டர்…” என உதட்டைச் சுளித்ததில், “நான் என்ன செஞ்சேன்?” எனத் தலையைச் சொறிந்தாள்.

“என்ன செஞ்சியா? என் வீட்ல இருந்து என் லவ் மெமரிசைத் திருடிட்டுப் போனதும் இல்லாம, அதை எடுத்துட்டுப் போய் அன்வி ரூம்ல வச்சுருக்கியே. அவள் என்னைச் செருப்பால அடிக்காத குறை தான்…” என்று கண்ணைச் சுருக்கி முறைத்தான்.

“யோவ் ப்ரோ… உங்க வீட்ல இருந்து உங்களோட இத்துப் போன காதல் சின்னங்களைச் சுட்டுட்டு வந்தது என்னவோ உண்மை தான். ஆனா அதை நான் அன்வி ரூம்ல வைக்கலையே?”

பிரணீத் குழப்பத்துடன், “நீ வைக்கலையா?” என வினவ,

“இல்ல ப்ரோ… நான் எங்க ரூம்ல…” எனச் சொல்ல வந்து விட்டுப் பின் தடுமாறி, “அது, அகன் ரூம்ல தான் வச்சேன். அவன் பார்க்கணும்னு…” என்றதில் பிரணீத் திகைத்துப் பின் முகம் கலங்கினான்.

அவனுக்குப் புரிந்தது! அதை யார் அன்விதாவின் கண்ணில் படும்படி வைத்தது என்று.

விழி சிவக்க, மூச்சு முட்டுவது போலப் பெரிய மூச்சுகளை எடுத்து விட்டவன், “நான் அப்புறம் வந்து பார்க்குறேன் உன்ன…” என்று விட்டு வேக வேகமாகக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

வக்கீல் அலுவலகம் செல்லுவதாகக் கூறி இருந்ததில் நேராகக் காரை அங்கு விட்டவன், அர்ஜித் அகன் அங்குக் காரை நிறுத்தும் நேரம் அவனுக்கு நேராக இவனும் நிறுத்தி இருந்தான்.

அவனைப் புரியாது பார்த்தபடி இறங்கிய அர்ஜித் அகனை, அவன் உணரும் முன் கட்டி அணைத்தவனுக்குக் கண்ணில் நீர் பெருகியது.

ஒரு கணம் குழம்பி நின்ற அர்ஜித்திற்குப் பின் புரிந்து விட, அவனுக்கும் விழிகள் நீரால் சூழ்ந்தது.

அகமொழி வீட்டை விட்டுச் செல்லும்போதே ப்ரணீத்திற்கு, அன்விதாவின் மீதிருந்த தீவிரமான காதலை உரைத்து விட்டே சென்றிருந்தாள்.

அவன் டேபிளில் பறக்க முயன்ற காகிதம், பிரணீத்தின் காதலைத் தான் கொட்டி இருந்தது.

வேணியின் மூலமே பிரணீத் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்திருந்த அகமொழிக்கு, அனகாவின் மீது சிறிது கோபம் வந்ததும் உண்மை தான்.

அதனாலேயே அவளையும் திட்டினாள்.

“ப்ரணீன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஏடத்தி… அவனை என் சொந்த அண்ணனா தான் பார்த்தேன். ஆனா விஷ்ணுவோட சந்தோசத்தை அந்த நேரத்துல என்னால கெடுக்க முடியல.” என அவளிடம் விசாரிக்கும்போது கூறியதிலேயே அவளையும் திட்டினாள்.

ஆகினும், அவளாலும் என்ன செய்திருக்க முடியும்… என்ற உண்மை உணர்ந்து பின் கோபத்தை மறைத்துக் கொண்டவளுக்கு, அன்விதா தனது காதல் வாழ்வில் இத்தனைக் காயப்பட்டிருப்பது தெரிந்து நொந்து போனாள்.

இவளை உருகி உருகிக் காதலிக்க ஒருவன் பிறவி கொண்டு வந்திருக்க, இவள் எதற்காகப் பொருந்தாத காதலில் மடிய வேண்டும்?

‘எப்படியும் பிரணீத்துடன் அவளைச் சேர்த்து வைத்திட வேண்டும்’ என்ற முடிவுடன் தான் அவளை விவாகரத்துச் செய்யச் சொன்னதும்.

திட்டவட்டமாக அவள் விவாகரத்து வரை சென்றது அர்ஜித்திற்கு உறுத்தினாலும், நண்பனின் காதலை அறிந்து துடித்துப் போனான்.

தன்னுடன் நட்புப் பாராட்டி இருக்கா விட்டால், அவன் இந்நேரம் அவனது காதல் வாழ்வை வாழ்ந்திருப்பான் தானே! குற்ற உணர்ச்சி எல்லையின்றி அவனைக் குதறியது.

“சாரிடா… உன் குடும்பத்துல பிரச்சினை பண்ணனும்னு நான் நினைக்கல. ஆனா, அன்வி கஷ்டப்படுறான்னு தெரிஞ்சதும் அவளை என்னோடவே கூட்டிட்டுப் போகணும்னு வெறி வந்துடுச்சு.” என்ற பிரணீத் தேம்பி அழுது விட்டு, பின் மெல்ல விலகி “ஆனா நீ ஏன் அன்வி ரூம்ல எல்லாத்தையும் வச்ச?” என்றான்.

“சாரி ஞான் தன்னே பரயணம். என்னாலே நிங்கள் ரெண்டு பேர் லைஃபும் போயில்லே!” எனக் கண் சிமிட்டிக் கண்ணீரை உள்ளிழுத்ததில் பிரணீத் அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினான்.

“போடா டேய்… உன்னால தான் நான் இங்க மதிப்பான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். விஷ்ணு தப்பா போவான்னு அவளும் நீயும் கனவா கண்டீங்க. காதலைச் சரியான நேரத்துல சொல்லாம இருந்தது என் தப்பு… சொல்லிருந்தா கூட அவ வீட்ல கண்டிப்பா என்னைக் கல்யாணம் பண்ணி ஒன்னும் வச்சுருக்க மாட்டாங்க. அந்தப் பயத்துல தான நானும் அவள்கிட்டே சொல்லாமலே இருந்தேன்.

அவள் என்னை ரிஜெக்ட் பண்ணிடுவான்னுலாம் பயந்து நான் லவ்வ சொல்லாம இல்ல அர்ஜி… அவள் வீட்ல இதை அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு தான் அமைதியா இருந்தேன். பாரின்ல போய் படிச்சுட்டு வந்து, நல்ல வேலை கிடைக்கவும் சொல்லலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள விஷ்ணு இடைல வந்து…

அவனுக்குத் தெரியும், நான் அன்வியை லவ் பண்றது… ஆனா…” என்றவனுக்குப் பேச வார்த்தை வரவில்லை.

“என்னோடு எந்தான்டா பரஞ்சில்லா. அனு மாதிரி ஞானும் விஷ்ணு தன்னே முக்கியம்னு மனசைக் கல்லாக்கிட்டு, நினக்குச் சொந்தமான பொண்ணை என் ஏட்டனு வேண்டி பறிச்சுப்பேன்னா?(எங்கிட்ட ஏன்டா சொல்லல. அனு மாதிரி நானும் விஷ்ணு தான் முக்கியம்னு மனச கல்லாக்கிட்டு உனக்கு சொந்தமான பொண்ணை என் அண்ணனுக்காக பறிச்சுப்பேன்னா? )” ஆதங்கம் தாளாது கேட்டான் அர்ஜித்.

“ஐயோ இல்லடா… அப்படி எல்லாம் இல்ல. கல்யாண நேரத்துல சொல்லி, நீ என் மேல கோபப்பட்டு என்னை விட்டுப் போயிடுவியோன்னு பயத்துல தான்… அவள் என்னை லவ் பண்ணிருந்தா கூட சொல்லிருப்பேன். வெறும் ஒன் சைட் லவ் தானன்னு நீ கேட்டுட்டா… என்னால அந்த வலியத் தாங்க முடியாதுன்னு தான்…” தொண்டை அடைக்கக் கூறியவனைக் கட்டிக் கொள்வது அர்ஜித்தின் முறையானது.

“சாரிடா… அவளை என்னை விஸ்வசிச்சு (என்னை நம்பி தானே) ஆனு என்டெ வீட்டிலேக்கு அயிச்சது (அனுப்புன). பட்சே, என்னாலே கொடுத்த வாக்கைக் காப்பாற்றான் பற்றியில்ல.” என்ற அர்ஜித்தின் உடைந்த குரலில்,

“டேய், லூசு மாதிரிப் பேசாத. விஷ்ணுவை நம்பிப் போனா… அவள் நம்பிக்கையை உடைச்சது அவனோட தப்பு. இதுல யார் மேலயும் தப்பு இல்ல. என் சிட்டுக்கு என்ன குறைச்சல்னு அவன் இன்னொருத்தியைத் தேடிப் போனானாம். வர்ற கோபத்துக்கு அவனைக் கொலையே பண்ணிடுவேன்…” என்று காரின் பேனட்டில் குத்திக் கோபத்தை அடக்கினான்.

அர்ஜித் வேதனையை விழுங்கிக் கொண்டு நிற்க, “ஆமா, அந்த விஷ்ணு ஏன் அவள் எந்தச் சந்தோஷமும் தரலன்னு லூஸ் டாக் விட்டான். எல்லா பிரச்சினையும் தெரியும்னு நீ சொன்னதும் தான் அவள் கையெழுத்துப் போட்டா. இதைத் தாண்டி என்ன பிரச்சினை அவங்களுக்குள்ள?” எனக் கேட்டான் புருவம் சுருக்கி.

கீழுதட்டை அழுந்தக் கடித்த அர்ஜித் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, அகமொழி தன்னிடம் கூறிய அனைத்தையும் அவனிடமும் கூற, பிரணீத் உறைந்து விட்டான்.

“அவளுக்கு என்ன பைத்தியமாடா? எதுக்கு இப்படிப் பொறுத்துப் போயிட்டு இருந்தாளாம். லூசு லூசு…” என்றவன் தளர்ந்து அப்படியே அமர்ந்து விட்டான்.

“நான் நல்லாருக்கணும்னு நினைக்கிற ஜீவன்டா அவ… அவள் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கலாம்ல! அந்த விஷ்ணு…” எனப் பல்லைக் கடித்தவனுக்கு, ஆத்திரம் பீறிட்டது.

“அவனைக் கொல்லாம விட மாட்டேன்…” எனத் தானே புலம்பிச் சீறலுடன் எழுந்தவனை உணர்வின்றிப் பார்த்த அர்ஜித் அகன் தடுக்கவில்லை.

“போய் கொல்லு! கத்தி, கடப்பாரை எதுவும் தரட்டே?” நிதானமாகக் கூற, கழுத்து நரம்பு புடைக்கக் கையை இறுக்கி மூடி நின்றான் பிரணீத்.

“கொந்திட்டு(கொன்னுட்டு), நீ ஜெயிலுக்குப் போயால்… அன்வி வளரே சந்தோஷப்படும் அல்லே?

ஏற்கெனவே அச்சன் எந்து (அப்பான்னு) ஒருத்தன் அமையாக்கு இருந்தும் இல்லாதது தன்னே…

இப்ப செறியச்சன்னு(சித்தப்பான்னும்) ஒருத்தனும் இல்லாதே போகும்.

போ! போய் கொல்லு. இல்லா, அடிதடி செய்து அவனைப் தூக்கிப் போட்டு மிதிக்கு. அவன் கோபத்தில் டைவர்ஸ் தராதே, இழுத்தடிக்கட்டே.” கை விரல்களை ஆராய்ந்தபடி அலட்டலின்றிக் கூறிய நண்பனிடம், மெல்ல மெல்லக் கோபம் தணிந்து கண்ணீர் நிரம்பப் பார்த்திருந்தான்.

“நினக்கு இரிக்கனதை விட ஆயிரம் மடங்கு தேஷ்யம் (கோபம்) எனிக்கும் இருக்கு ப்ரணீ… உன்னை ஃபேஸ் பண்ணான் பற்றாத்த நிலைல என்னைக் கொண்டு வந்து நிறுத்தியதினே அவனைக் கொந்து இட்டிரிக்கணம். ஈ தேஷ்யம் அன்வியையும் அமையாவையும் பாதிக்கான் பாடில்லாந்து தான், ரொம்ப கண்ட்ரோல் செய்திட்டு இரிக்கேன்.

எனிக்கு இப்ப அவனைத் தண்டிக்கனதை விட, அன்வி சேஃபாய் இதில் இருந்து புறத்து வரணம். அது தன்னே முக்கியம். அவளைப் புது ஜீவிதத்தினு தயார் செய்யனது நிண்டெ பணி. நீ அவளைக் கல்யாணம் செய்தால் தன்னே ஞான் மொழியை வீட்டிலேக்குக் கூட்டிக் கொண்டு வரும்…(உனக்கு இருக்கறதை விட ஆயிரம் மடங்கு கோபம் எனக்கும் இருக்கு ப்ரணீ. உன்னை பேஸ் பண்ண முடியாத நிலைல என்னைக் கொண்டு வந்து நிறுத்துனதுக்கே அவனைக் கொன்னு போட்டுருக்கணும். இந்தக் கோபம் அன்வியையும் அமையாவையும் பாதிக்கக் கூடாதுன்னு தான், ரொம்ப கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு இப்ப அவனைத் தண்டிக்கிறதை விட, அன்வி சேஃபா இதுல இருந்து வெளில வரணும் அது தான் முக்கியம். அவளை புது வாழ்க்கைக்கு தயார் பண்றது உன் வேலை. நீ அவளை கல்யாணம் பண்ணா தான் நான் மொழியை வீட்டுக்குக் கூட்டிட்டு வருவேன்)” என்று அவன் தலையில் பெரிய குண்டைப் போட, பிரணீத் பதறி விட்டான்.

“சேட்டா, என்னடா பேசுற… இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கத்திட, அவனோ அதனைக் கண்டுகொள்ளாமல் வக்கீலைப் பார்க்கச் சென்றதில் மீண்டும் தலையில் கை வைத்துத் தரையில் முட்டியிட்டு அமர்ந்தான் பிரணீத்.

கல்யாணி, விஷ்ணுவைப் பளார் பளாரென அறைந்தார்.

“எத்தர தைரியம் உண்டெங்கில் இங்கனே ஒரு காரியம் செய்யும்?”

கேசவ நாயர், பெல்ட்டை எடுத்து விளாசி விட்டார். அன்விதா, எதையும் காதில் வாங்காதவளாக அறைக்குள் புகுந்து கொண்டாள்.

என்னவோ விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து இட்டதும், மனத்தின் பாரம் குறைந்த நிம்மதி. பிரணீத் தன்னை விரும்பியது, விஷ்ணுவிற்குத் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் அன்விதாவிற்குத் துளிர் விட்டது.

அந்நேரம் அவனும், “மதி! (போதும்) நிறுத்தனுண்டோ? ஞான் எந்து தெற்று செய்து? நிங்கள் தலையில் தூக்கி வச்சு ஆடுனில்லே, ஆ மருமகள் தன்னே, பிரெண்டு பிரெண்டெந்து ஆ பிரணீத் கூடே அஃபேர்ல இருந்தா… கல்யாணத்தினு முன்னாடியே அவன் அவளை லவ் செய்து… எவிடே அவனை விளிச்சு சோதிச்சு நோக்கின்… அவன் லவ் செய்யனது அவளுக்கு அறயாதே இரிக்குமோ? (போதும் நிறுத்துறீங்களா? நான் என்ன தப்பு பண்ணேன்? நீங்க தலைல தூக்கி வச்சு ஆடுறீங்களே அந்த மருமக தான், ப்ரெண்டு பிரெண்டுன்னு அந்த பிரணீத் கூட தான் அஃபேர்ல இருந்தா. கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் அவளை லவ் பண்ணான். எங்க அவனைக் கூப்பிட்டு கேட்டுப் பாருங்க. அவள் லவ் பண்றது அவளுக்குத் தெரியாமையா இருக்கும்?)

அப்போ தன்னே லவ் செய்யுவாந்து பரஞ்சிட்டு, கூட்டிட்டுப் போயிக் கூடே. அப்ப அவனு பணியும் இல்லா. வசதியும் இல்லா அவன்டெகூடே போய் பிச்சை எடுக்கான் பற்றில்லான்னு தான அவள் என்னே கல்யாணம் செய்தது. அவனும் இவிடே இருந்து பிச்சுட்டுப் போயால், அர்ஜிடே அடுத்து எதையும் கறக்கான் பற்றில்லாந்து அவன் லவரை எனிக்கு விட்டுக் கொடுத்த மாதிரி சீன் போட்டுட்டு இருந்திரிக்குனு.(அப்பவே லவ் பண்றேன்னு சொல்லிட்டு, கூட்டிட்டுப் போக வேண்டியது தான. அப்ப அவனுக்கு வேலையும் இல்ல. வசதியும் இல்ல. அவன்கூட போய் பிச்சை எடுக்க முடியாதுன்னு தான அவள் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவனும் இங்க இருந்து பிச்சுட்டுப் போய்ட்டா, அர்ஜிட்ட இருந்து எதையும் கறக்க முடியாதுன்னு அவன் லவரை எனக்கு விட்டுக் குடுத்த மாதிரி சீன் போட்டுட்டு இருந்துருக்கான்.)

இவளும், என்டெ கூடே சந்தோசமாய் வாழாதே, ஞான் அவளை ரேப் பண்ண ரேஞ்சினு கதை கட்டி வச்சிரிக்குனு. எல்லாம் பிளானிங்… ரெண்டு பேரும் சேர்ந்து என் ஜீவிதத்தை நாசமாக்கி…” எந்தத் தடையுமின்றி அழகாகப் பழியை இருவர் மீதும் போட்டு விட்டான்.

இதனைக் கேட்ட அன்விதா, மடமடவென அறையில் இருந்து வந்தவள், விஷ்ணுவைப் பட்டு பட்டென அடித்தாள்.

“யாருடா அஃபேர்ல இருந்தா… அவன் என்னை லவ் பண்றான்னு தெரிஞ்ச நாய், என்னை எதுக்குடா கல்யாணம் பண்ணுன? அவன் மட்டும் என்னை லவ் பண்ணது எனக்குத் தெரிஞ்சிருந்தா, போயும் போயும் உன்னை எதுக்குடா நான் கல்யாணம் பண்ணிக் கஷ்டப்படப் போறேன்.

அவன் கூட பிச்சை எடுக்குறதுன்னா கூட சந்தோசமா எடுத்திருப்பேன். லவ்வுன்ற பேர்ல என்னை ஏமாத்தி, கல்யாணம்ன்ற பேர்ல உன் மிருகத்தனத்தைக் காட்டி, என்னையும் நிம்மதியா வாழ விடாம, அவன் வாழ்க்கையையும் சேர்த்துக் கெடுத்துட்டு, அவன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததைக் கொச்சையா படுத்துற…” என்றவளோ அடியை நிறுத்தவே இல்லை.

“ஏய் விடடி!” விஷ்ணு கத்தியும்,

“என் வயித்துல இருந்த குழந்தையே உன்னோடது தானான்னு சந்தேகப்பட்டவன் தான நீ… இப்ப நான் போனா கூட, அவன் என்னையும் அமையாவையும் சொந்தக் குடும்பமா பார்த்துப்பான். அசிங்கம் உனக்கும், இந்தக் குடும்பத்துக்கும் தான்.

நான் பொறுத்துப் போனதுக்குக் காரணமும், என்னைக்காவது ஒரு நாள் நீ என்னைப் புரிஞ்சுப்பன்னு தான். உன்னை ஏன்டா காதலிச்சோம்னு என்னை நினைக்க வச்சுட்டல்ல… நீ என்னைக் கொடுமைப் படுத்துனதைக் கூட மன்னிச்சுடுவேன். இன்னொருத்தி கூட தப்பா இருந்ததைக் கூட ஏத்துப்பேன். ஆனா, ப்ரணீ லவ் பண்ணது தெரிஞ்சும், அவனோட கேரக்டரை அசாசினேட் பண்றல்ல. அதை மன்னிக்கவே மாட்டேன்.” எனப் பொங்கி விட்டாள்.

கொண்ட காதலுக்கு உண்மையாக இருந்தாள். வேறு என்ன தவறு செய்தாள் அவள்?

மூச்சிரைக்கத் தலையைத் திருப்ப, அங்கு வாசலில் பிரணீத் சிலையாக நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும் அவளும் திகைத்தாள். அதுவும் ஒரு கணம் தான், அவனை முறைத்து விட்டு அறைக்குச் செல்ல, பிரணீத்திற்குக் குடும்பத்தினர் முன்பு வீட்டினுள் நுழையவும் சங்கடம். அதில் மீண்டும் வெளியேறி விட்டவன், நேராக அகமொழியின் வீட்டிற்குத் தான் சென்றான்.

தத்தம் விடுதி அறைக்குச் சென்றிருந்த ரிஷானும், ரூஹியும் மீண்டும் அங்கு வந்து அகமொழியிடம் தொழில் செய்ய மன்றாடிக் கொண்டிருந்தனர்.

பிரணீத் வந்தவனோ, ஒன்றும் பேசாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

அகமொழியோ, “என்ன ப்ரோ, மார்னிங் வாக்கிங் போகலையா?” என வினவ,

“ப்ச்…” என நடையை நிறுத்தி விட்டு முறைத்தவன், மீண்டும் நடைப் பயணத்தைத் தொடர்ந்தான்.

எத்தனை நேரம் தான் கன்னத்தில் கை வைத்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க இயலும்?

ரிஷான், “பிரதர்… நீங்க வந்ததுல இருந்து 5000 ஸ்டெப்ஸ் நடந்துட்டீங்க.” எனக் கணக்காக உரைக்க ரூஹியோ, “அவர் ஸ்டெப்ஸை நீ ஏன்டா கவுண்ட் பண்ணிட்டு இருக்க?” என்றாள் புரியாமல்.

“வேற வேலை வெட்டி இல்லையே. என்ன பண்றதுன்னு தெரியல…” என்றவனைக் கண்டு தலையில் அடித்த அகமொழி, “யோவ் ப்ரோ… சொல்லிட்டு நடந்தா நாங்களும் நடப்போம்ல?” என்றதில்,

“நைட்டோட நைட்டா டைவர்ஸ் வாங்கி, மார்னிங் கல்யாணம் வைக்கிற ஆப்ஷன் எதுவும் இருக்கான்னு சட்ட ரீதியா யோசிச்சிட்டிருக்கேன். குறுக்க பேசாதீங்க.” என்றான் தீவிரமாக.

“அதுக்கு நீங்க அந்த விஷ்ணுவைப் போட்டு தான் தள்ளனும். அப்பக் கூட அவனுக்கு இறுதிச் சடங்குலாம் பண்ணி முடிக்க ரெண்டு நாள் ஆகும் ப்ரோ…” என்ற அகமொழியிடம்,

“அவன் மேல கை வைக்கக் கூடாதுனு உன் ஆளோட ஆர்டர்…” என்றதில்,

“ம்ம்க்கும்… ஆனா எனக்கு ஒரே டவுட் தான் ப்ரோ… அந்த விஷ்ணு எப்படி டைவர்ஸ்ல மியூச்சுவல்கு சைன் பண்ணுவான்னு தான்… ஒன்னும் புரியல எனக்கு.” என்றாள் யோசனையாக.

இங்கோ கோபால கிருஷ்ணன், “எந்து தெற்று செய்தாலும் நின்டெ ஜீவிதம் பற்றி ஆலோயிச்சது (யோசிச்சது) எத்தர தெற்றாந்து இப்ப மனஸியாவுந்து விஷ்ணு… நீ எத்தர ரணப்படுத்தி இருந்தா, அன்வி இத்தர உடைஞ்சிரிக்கும்?(என்ன தப்பு பண்ணாலும் உன் வாழ்க்கையை பத்தி யோசிச்சதும் எவ்ளோ தப்புன்னு இப்ப புரியுது விஷ்ணு. நீ எவ்ளோ ரணப்படுத்தி இருந்தா அன்வி இவளோ உடைஞ்சுருப்பா)” என்றார் கோபமாக.

விஷ்ணுவோ, அதிர்வை விழுங்கிக் கொண்டு சுஜாதாவின் காலைப் பிடித்தான்.

“அம்மே, ஞான் ஏதோ தேஷ்யத்தில் பேசிட்டேன். என்னாலே அன்வி இல்லாதே ஜீவிக்கான் பற்றில்லா. ப்ளீஸ்மா, நிங்களும் நிங்கள்டே மகனோடு சேர்ந்திட்டு என்டெ ஜீவிதத்தைக் கெடுக்கண்டா. அவளுக்கு என்டெ கூடே இரிக்கான் இஷ்டமில்லெந்து ஞான் அவள்டெ கூடே சேர்ந்து இரிக்கனது கூட இல்லா அறயுமோ?(அம்மே, நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன். என்னால அன்வி இல்லாம வாழ முடியாது. ப்ளீஸ்மா. நீங்களும் உங்க பையனோட சேர்ந்துட்டு என் வாழ்க்கையை கெடுக்காதீங்க. அவளுக்கு என் கூட இருக்க பிடிக்கலைன்னு நான் அவள் கூட சேர்ந்து வாழுறது கூட இல்லை தெரியுமா?)” என்றவனின் கண்ணில் கண்ணீர் நிறைய, சுஜாதா பதில் பேசாது நின்றார்.

“சரிம்மா எனிக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்தா அவள் நிம்மதியாய் இரிக்கான் பற்றுமோ? (இருக்க முடியுமா?) அமையா ஈ வீடிண்டே வாரிசு. அவள் இல்லாதே நிங்களால் இரிக்கான் பற்றுமோ? அவள் ஆ ப்ரணீதையே கல்யாணம் செய்தாலும், அமையா என்டே மோள் அல்லே… ஈ வீட்டு வாரிசு இல்லாந்து மறுக்கான் பற்றில்லா. ப்ளீஸ்மா.” எனக் கெஞ்சினான்.

சுஜாதா சற்றே சிந்தனையுடன், “இனி நீ தெற்று செய்யில்லால்லோ?(தப்பு செய்ய மாட்ட தான)” என வினவ, “ம்ம்ஹும் இல்லா…” என்றான் வேகமாக.

“இதானு நினக்கு லாஸ்ட் வார்னிங்” என்றவர், கோபால கிருஷ்ணனிடம் “எந்து ஆயாலும் (என்ன ஆனாலும்) அவசரப்பட்டு முடிவு எடுக்கான் பற்றில்லா(எடுக்க முடியாது)… அர்ஜி டைவர்ஸ்க்காக அப்ளை செய்திருந்தால், நம்மள் டைவர்ஸ் வேண்டாந்து கேஸ் இடாம் (போடலாம்). எனிக்கு இவருடே ஜீவிதம் கெட்டுப் போனதில் இஷ்டம் இல்லா.” என்று முடிவாகக் கூற கேசவ நாயர் சுஜாதாவை யோசனையாகப் பார்த்தார்.

“நந்தாயி ஆலோயிச்சிட்டானோ(நல்லா யோசிச்சு) பரயனது மோளே…”

“அதே அச்சா!” அவர் உறுதியாகக் கூறியதில் கல்யாணி குழப்பத்துடன் அவரை ஒரு முறை பார்த்து விட்டுச் சென்றார்.

கோபால கிருஷ்ணன் தான், “நினக்குப் பிராந்து எதுவும் பிடிச்சிரிக்குனோ சுஜா…” எனக் கத்த,

“டைவர்ஸ், ரெண்டாவது கல்யாணம் எல்லாம் ஈஸி அல்லா… இப்ப தேஷ்யத்தில் (கோபத்தில்) அவளுக்கு ஈ முடிவு சரியெந்து தோணும். பட்சே குறச்சு திவசத்தில், பொறுத்திரிக்காமோந்து தோணும்…” என்றதில் கோபால கிருஷ்ணன் அமைதியாக அவரை முறைத்தார்.

விஷ்ணு தான், “அதே தன்னே மா ஞானும் பரயனது. என்னை தண்டிக்கான் நிங்களுக்கு உரிமை உண்டு. பட்சே என்டெ குடும்பத்தை என்டே அடுத்திருந்து (என்கிட்ட இருந்து) பிரிக்கண்டா!” என்று இன்னும் கொஞ்சம் நீலிக்கண்ணீர் வடிக்க,

“ஞான் நம்மள்டெ வக்கீல் அடுத்து சம்சாரிக்காம்(வக்கீல் கிட்ட பேசலாம்) விஷ்ணு. ஞான் நோக்கிக் கொள்ளாம். நீ இதில் தலையிடாதே…” என்று விட்டு அலைபேசியுடன் தனியே சென்றார்.

“வேகம் (சீக்கிரம்) பேப்பர்ஸ் ரெடி செய்யூ கண்ணா…” தாயிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியில் லேசாய் இதழ் விரித்தவன், தனது கலகத்தைத் திறம்படத் தொடங்க ஆயத்தமானான்.

அகன் வசப்படுவாள் (வான்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 95

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
98
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment