Loading

அத்தியாயம் 33

இரு நாள்கள் கடந்திருந்தது. அர்ஜித் அகன், வீட்டில் யார் முகத்தையும் பார்க்கவில்லை.

சுஜாதா தானாய் வந்து பேசினாலும், ‘ம்ம்’ மட்டும் கொட்டினானே தவிர அவனிடம் இருந்து ஒரு வார்த்தையும் வாங்க இயலவில்லை.

ப்ரணீத்திடமும் ஒற்றை வார்த்தை உதிர்த்தானில்லை.

நண்பனின் பாராமுகம் பாரமாக அவனுள் இறங்கியது. சென்னைக்குச் செல்லலாம் என்றால், இங்கிருக்கும் வேலையைப் போட்டு விட்டுச் செல்லவும் இயலாது என்ற நிலை உறுத்த, ரிசார்ட்டிலேயே மதுக்குவளையுடன் மூழ்கி விட்டான்.

ரிசார்ட்டில் இருக்கும் பெண்களுடன் விஷ்ணு தவறு செய்வது, மேனேஜர் ஜெகனை அடித்துப் பிழிந்ததன் மூலம் வெளி வந்துவிட்டது.

தனது உயிரானவளுக்குத் துரோகம் இழைத்தவனைக் கொலையே செய்யத் தோன்றியது ப்ரணீத்திற்கு. ஆனால், அன்விதாவின் மனநிலையைக் கருத்தில் கொண்டே அமைதி காக்கிறான். அப்படியும், இவனைப் போல ஒருவனுடன் அவள் ஏன் வாழ வேண்டும் என்ற கோபத்தில் தான், அவனை விட்டு வந்து விடக் கூறியதும்!

இன்னும் முழு விஷயமும் தெரிந்தால், அவனுக்குத் தானே அத்தனைக் காயமும்!

அகமொழி இரு நாள்களாய் வாயைத் திறக்கவே இல்லை. அவ்வப்பொழுது எங்கோ வெறிப்பதும், பின் இணைய தளத்தில் வேலை தேடுவதுமாக இருந்தாள்.

“வெளில வேலைக்குப் போகப் போறியா?” ரிஷான் கேட்க,

“ம்ம்… அடுத்து என்னன்னு யோசிக்கணும்ல. சாரி… என்னால நீங்க ரெண்டு பேரும் கேரியரை இழந்துட்டு நிக்கிறீங்க…” என்றாள் வருத்தமாக.

“நான் உன்னையவே இழந்துட்டு நிக்கிறேன், கேரியர் தான… போகட்டும்.” என்ற ரிஷானுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு.

“யப்பா சாமிகளா… இந்த விஷயத்தை இத்தோட விடுங்க. நம்ம கேரியரைப் பத்தி யோசிக்கலாம். இனி நடந்து முடிஞ்சதைப் பத்திப் பேசிப் பிரயோஜனம் இல்ல…” என்று ரூஹி தான் இருவரையும் அதட்டினாள்.

ரிஷானோ அகமொழியையே பார்வையால் அளந்து விட்டு, “நம்ம நிச்சயதார்த்தம் நின்ன அன்னைக்கு நீ சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.

ஏதோ நினைவில் இருந்தவள், “ம்ம்… சாப்பிட்டேன். ஏன்?” எனப் புரியாமல் வினவ,

“என்ன சாப்பிட்ட?” என்றான் மீண்டும்.

“டேய், மூணு வாரத்துக்கு முன்னாடி நடந்ததை இப்ப கேக்குற?” ரூஹி தலையைச் சொறிந்தாள்.

‘வெறும் மூன்று வாரங்கள் தானா? அப்படி என்றால், அகனுடன் வெறும் பதினைந்து நாள்கள் தான் இருந்தாளா?’ அகமொழிக்கே வியப்பாக இருந்தது. ஏதோ பல யுகங்களாக அவனுடனே வாழ்ந்த பிரம்மை!

ரிஷானோ மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அவளுக்கு அவனது நிச்சயத்தை நிறுத்தியதும், அதற்குக் கொடுத்த பாவனைகளும் மென் புன்னகையைத் தந்தது.

நிச்சயத்தை நிறுத்தி விட்டு வந்து மகிழ்வாக பிரியாணி உண்டது இப்போதும் நினைவடுக்கில் உதயமாக, அதையே ரிஷானிடமும் கூறியதில் அவன் முறைத்தான்.

“இப்ப நீ சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுது…”

“ஓ!” என்றதோடு மீண்டும் மடிக்கணினியில் புதைந்து கொண்டாள்.

அவளுக்கு எப்போதோ நேரங்கள் வேலை நிறுத்தம் செய்து விட்டது. அகம் எங்கிலும் அகன் பற்றிய சிந்தையே சுழலும்போது, எங்கனம் மற்றவற்றைச் சிந்திப்பது?

ரூஹி எதுவோ புரிவது போல ரிஷானைப் பார்க்க, அவனோ கடுகடுவென இருந்தான்.

அந்நேரம் பாஸ்கர் அழைத்ததில் மூவரும் வெளியில் வந்தனர்.

அகமொழியிடம் ஒரு பையைக் கொடுத்தவர், “நான் செஞ்ச தப்பை நானே சரி பண்ணனும் அகா, அதான் இது…” என்றதில் அவள் குழப்பமாகப் பார்த்தாள்.

“விஷ்ணுகிட்ட சண்டை போட்டு, குடுத்த இடத்துக்குப் பணம் வாங்கிட்டேன். நீ அங்க கிளாம்பிங் எல்லாம் போட்டுச் செலவு பண்ணிருந்தியே… அதான், அதுக்கும் சேர்த்தே வாங்கிட்டேன்.” என்றதில் அகமொழி திகைத்தாள்.

“விஷ்ணு பணம் எப்படிக் குடுத்தான்?”

“போலீஸ் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்னு மிரட்டித் தான் வாங்குனேன். அவனும், இனி உன் பொண்ணு என் வாழ்க்கைல தலையிடக் கூடாதுன்னு சொன்னான்.”

‘பாஸ்கருக்குப் பயந்து எல்லாம் அவன் கொடுத்திருக்க மாட்டான். மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தால், அன்விதாவை அவனிடம் இருந்து பிரித்து விடுவேனென்ற பயத்தில் கொடுத்திருப்பான்’ எனச் சரியாகக் கணித்தாள்.

அதற்காகத் தானே, அவசர அவசரமாகத் தன்னை அவ்வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினான்.

‘என்னவாகிலும், அன்விதாவிற்குக் கொடுத்த நம்பிக்கையை அவள் விடப் போவதில்லை’ என உறுதி எடுத்தவள், “சரிப்பா… இதைப் பத்திரமா வச்சுருங்க. வேற இடம் பார்த்து வைங்க. ஆனா அதை உங்களுக்குன்னு வச்சுக்கோங்க. சும்மா தானம் பண்ணாதீங்க.” என்று அமைதியாகக் கடிந்திட, அவரோ இன்னும் ஒரு சில தாள்களை நீட்டினார்.

“இது என்னப்பா?”

“ம்மா… என்னை மன்னிச்சுத் தயவு செஞ்சு இதை வாங்கிக்க…” பாஸ்கர் விழி கலங்கக் கொடுக்க,

“எதுக்குப்பா மன்னிப்புலாம்… உங்க மேல எனக்கு நிஜமாவே கோபம் இல்லப்பா!” என்றாள்.

“இது உனக்குன்னு நான் வாங்குன இடம். நீ இங்க வந்ததுமே விஷ்ணுகிட்டப் போய் பேசிப் பணத்தை வாங்கியிருந்தேன். நேத்தே ஒரு இடமும் பார்த்து வச்சிருந்தேன். நல்ல வியூ உள்ள இடம் தான். நீ ஆசைப்பட்ட மாதிரி கிளாம்பிங், ஹாபிட் ஹவுஸ் இன்னும் என்ன வேணாலும் பண்ணலாம். பழைய இடத்துக்கு மாதிரி மழைத் தண்ணி போறதைப் பத்தி நீ அதிக மெனக்கெட வேணாம். நல்ல தரமான இடம் தான்… உன் பேர்ல தான் இடம் வாங்கியிருக்கேன். ரெஜிஸ்ட்ரேஷனும் முடிஞ்சுது. அங்க மறுபடியும் நீங்க உங்க பிசினஸை ஸ்டார்ட் பண்ணுங்க…” என்றதில், அகமொழி ஒன்றும் புரியாமல் நின்றாள்.

“என்னப்பா உளறுறீங்க? ஒரே நாள்ல இடம் பார்த்து ஒரே நாள்ல ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டீங்களா?”

“ஆமாமா, கைல காசு இருந்துச்சு. எதுக்கு யோசிச்சுட்டு இருக்கணும்னு, இன்னைக்கே போய் பண்ணிட்டு வந்துட்டேன். இதுல மீதிப் பணம் இருக்கு. லோன் எல்லாம் போக வேணாம். இதுவே நீங்க கிளாம்பிங் போட சரியா இருக்கும். ரிஷுவும், ரூஹியும் சேர்ந்து தான இன்வெஸ்ட் பண்ணிருந்தாங்க. அவங்களுக்கு நீ பணமா குடுத்தாலும் சரி, இல்ல மறுபடியும் நீங்க மூணு பேரும் சேர்ந்து செய்யறதுனாலும் சரி, உங்க இஷ்டம். நான் அவங்களைப் பத்தியும் யோசிச்சிருக்கணும். இருக்குற நகையை வித்து அவங்க இன்வெஸ்ட் பண்ணுன பணத்தைக் கொடுத்துடலாம்னு தான் இடத்தைக் குடுத்தேன். சாரிப்பா…” என மற்றவர்களிடமும் மன்னிப்பு வேண்ட, ரிஷான் “என்ன அங்கிள் நீங்க… உங்க சாரி எல்லாம் வேணாம். மறுபடியும் உங்க பொண்ணை என்னை ப்ரெண்டாவாச்சும் ஏத்துக்கச் சொல்லுங்க, அது போதும்…” என்றான்.

அகமொழி திரும்பி அவனை முறைத்து, “உன்னை ப்ரெண்டா கூட நினைக்கலைன்னா, நீ வந்ததும் உன்னை அடிச்சுத் துரத்திருப்பேன். உன்மேல எனக்கு நிஜமாவே கோபம் இல்ல ரிஷு… நீ கில்ட் ஆக வேண்டிய அவசியமும் இல்ல.” என்று விட்டுத் தந்தையிடம் திரும்பி, “இப்ப நான் எதையும் செய்யற மனநிலைல இல்லப்பா. எனக்கு பிசினஸ் வேணாம்.” என்றாள்.

“ஏன்மா?”

“தெரியல. என்னால எதுலயும் இன்வால்வ் ஆக முடியும்னு தோணல.” வெறுமையாகக் கூறியவளை பாஸ்கர் இயலாமையுடன் ஏறிட்டார்.

ரிஷானோ, “பிளான் பண்ணி நம்ம கேரியரை அழிச்சிருக்காங்க அகா…”
என்றிட,

“ப்ச், என்னால முடியலைன்னு சொல்றேன்ல. ப்ளீஸ் விட்டுடுங்க!” என்றவள் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

——

அனகாவிற்கு, அகமொழி வீட்டில் இல்லாததே என்னவோ போல் இருந்தது. என்ன பிரச்சினை என்று யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென்று தெரியவில்லை. அர்ஜித்தும் வாய் திறக்கவே இல்லை.

வீட்டினர் இயல்பு நிலைக்குத் திரும்ப, விஷ்ணு டைனிங் டேபிளில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான்.

ரிஸார்ட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த அர்ஜித் அகனை, கேசவ நாயர் உண்ண அழைக்க அவனும் மறுக்காமல் வந்து அமர்ந்தான். அனகா தமையனின் முகத்தையே ஆராய்ந்தபடி உணவை அளந்திட,

அமையாவைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்போது தான் வந்த அன்விதா, அறைக்குச் செல்லப் போகையில், “ஏடத்தி…” என்றழைத்தான் அர்ஜித் அகன்.

அதில் அவளும், “சொல்லுங்க அர்ஜி…” என்று விஷ்ணுவைப் பாராது அருகில் வந்து வினவ, தனது மடிக்கணினிப் பையில் இருந்து ஒரு தாளை எடுத்தவன், “இதில் சைன் செய்தோளு!” என்று கொடுத்தான்.

அதில் விஷ்ணுவும் நிமிர்ந்து பார்க்க, “என்ன இது?” எனக் கேட்டபடி அதனை வாங்கிப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

விஷ்ணு அதனைப் பிடுங்கிப் பார்த்து, அவனும் உறைந்து போனான்.

“எந்தாடா இது?”

அர்ஜித் அவனது கேள்விக்குப் பதில் கூறாமல் அவனிடம் இருந்து தாளை வாங்கி அன்விதாவிடம் கொடுத்து, “சைன் செய்யூ!” என்றதில் அவள் சிலையாகவே நின்றாள்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ஜித் விவாகரத்து வரைக்கும் செல்வான் என்று.

அகமொழி அவளை விவாகரத்து வாங்கச் சொல்லி அறிவுறுத்தினாள் தான். ஆனால் அன்று கோவித்துக் கொண்டு சென்றதற்குக் கூட அர்ஜித் கோபம் தானே கொண்டான்.

அதுவே அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கோபால கிருஷ்ணன், “எதிலு கண்ணா, சைன் செய்யான் பரயனது?(எதுல சைன் போட சொல்ற)” என வினவ விஷ்ணு தான்,

“புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்டெ ஜீவிதத்தில் (வாழ்க்கைல) நந்தாய் களிக்குந்துண்டு (விளையாடுறாங்க) அச்சா… இப்ப டைவர்ஸ் செய்து வைக்கன அளவு வந்து…” என்று பொங்கியதில் பெரியவர்கள் அதிர்ந்து எழுந்தே விட்டனர்.

சுஜாதா, “அய்யோ அர்ஜி, டைவர்ஸோ?” என நெஞ்சில் கை வைத்ததில், “அதே, டைவர்ஸ் தன்னே… கட்டிய பாரியா (பொண்டாட்டி) இரிக்கும்போல் ரிசார்ட்டில் உள்ள பெண்ணுங்களோடு கூத்தடிக்கன ஹஸ்பண்ட் ஏடத்திக்கு…” என்று நிறுத்தி விட்டு, “அன்விக்கு வேண்டா!” என்றான் உறவு முறையைத் துறந்து.

பெரியவர்கள் திகைத்திருக்க, “எந்தா பரயனது அர்ஜி… விஷ்ணு அங்கனே எல்லாம் செய்திரிக்கில்லா(அப்படியெல்லாம் செஞ்சுருக்க மாட்டான்!” என்று கோபால கிருஷ்ணன் பதறியதில் அவரைத் திரும்பி முறைத்தவன், “அப்போ ஞான் மாத்திரம் செய்திரிக்குமோ?(அப்ப நான் மட்டும் செஞ்சுருப்பேனா)” என்றான் விழி சிவந்து.

“ஐயோ! அதில்ல கண்ணா… நீயும் அகாவும் லவ் செய்து ஏதோ பிரஸ்னம் (பிரச்னை) ஆகியெந்தானு அப்போ விசாரிச்சது…(ஆகியிருக்கும்னு தான் நினைச்சோம்)” என வேகமாகக் கூற,

“நிங்கள் எந்து வேணமெங்கிலும் விசாரிச்சோளு. பட்சே அன்வி இனி ஒரு செகண்ட் கூடி ஈ வீட்டு மருமகளாய் இரிக்கான் பாடில்லா…(நீங்க என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க. அன்வி இனி ஒரு செகண்ட் கூட இந்த வீட்டு மருமகளா இருக்கக் கூடாது)” என்றான் அழுத்தம் திருத்தமாக.

சுஜாதாவிற்குத் தலை சுற்றியது.

“எந்தா மோனே பரயனது. எதுவாய் இருந்தாலும் சாவதானம் (பொறுமையா) ஸம்சாரிச்சு முடிவு செய்யாம். அவருள்ளே எந்து பிரஸ்னமோ, அதை அவர் தன்னே சரி செய்யட்டே!(அவங்களுக்குள்ளே என்ன பிரச்சினையோ அதை அவங்களே சரி செய்யட்டும்)”

“எங்கனே சரி செய்யும்? நிங்கள்டெ மகன் இவளை டார்ச்சர் செய்தோ?” நக்கலாகக் கேட்டதில், “அம்மே, இவன் உளறுவானு. ஞான் ஒரு தெற்றும் (தப்பும் செய்யல) செய்தில்லா!” என்றான் கோபத்துடன்.

“இவன் ரிசார்ட்டில் ஒர்க் செய்யன பெண்ணுங்களோடு தெற்றாய (தப்பான) ரிலேசன்ஷிப்பில் இரிக்குந்ததினு என்டடுத்து ப்ரூஃப் உண்டு.(ரிலெஷன்ஷிபில் இருக்கான்னு ப்ரூப் இருக்கு)” அமைதியாகக் கூறியவனை விழி அதிரப் பார்த்தவன்,

“இவன் நுண (பொய்) பரயுந்து… இவன் தன்னே தெற்றாய (தப்பான) ரிலேசன்ஷிப்பில் இருந்தது… நம்மள்டே ரிசார்ட் பேரை நாறடிச்சு ரிவியூ கூடி வந்து…” என்ற விஷ்ணு அந்த ரிவியூ வீடியோவைத் தேட, அது டெலிட் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு தடுமாறினான்.

அவனும் சேமித்து வைக்காத மடத்தனத்தை நொந்தவன், அந்த இன்ப்ளூயன்சருக்கு அழைத்துக் கொண்டே இருக்க, அவனோ அழைப்பை ஏற்கவே இல்லை.

அன்விதா, விஷ்ணுவை அருவருப்பாகப் பார்த்தாள்.

“நீங்க தப்பு செய்யலைன்னு வாதாடுங்க. ஆனா அதே தப்பை அடுத்தவங்க மேல போடாதீங்க விஷ்ணு… எப்பவும் பழி போடுறது தான் உங்க வழக்கம்ல!” என முகம் சுளித்தாள்.

அன்விதா, அகமொழியிடம் மனத்தைப் பகிர்ந்த மறுநாள் காலையில் இருந்தே, அவளுக்கு அகமொழியின் வாழ்வைச் சரி செய்ய வேண்டுமென்ற உந்துதல் இருந்தது.

அதில் ப்ரணீத்திடம், “அப்படி என்னதான் ரெண்டு பேருக்கும் பிரச்சினை?” எனக் கேட்டிருந்தாள்.

ஏதோ ஒரு தொழில் முறை கோபத்தில், இருவரும் மாறி மாறி நிச்சயத்தை நிறுத்திக் கொண்டது தான் அன்விதாவிற்குத் தெரியும். அதைத் தாண்டி அதன் மூலகாரணத்தை ஆராய, முதலில் பகிர மறுத்த பிரணீத் அன்விதா கெஞ்சலாகக் கேட்டதில், அந்த வீடியோ இணைப்பைப் பகிர்ந்தான்.

ஆனால், அதில் குறிப்பிட்டிருந்த ஹில்மிஸ்ட் எம். டி என்ற வாசகம் அவளை அச்சுறுத்தியது.

வேண்டாத கணவன் என்றாலும், தன் நேசத்தைப் பகிர்ந்து கொண்டவனாகிற்றே. நெஞ்சே அடைத்தது.

தன்னிடம் அவன் உறவுக்காகக் கூட நெருங்குவதில்லை என்ற உண்மை புரிய, விஷ்ணுவின் மீதே சந்தேகம் வரத் தொடங்கியது.

“எதுவா இருந்தாலும் சண்டை போடுங்க!” என்று அகமொழி ஓதியதன் பலனாக இதனை விடக்கூடாது என்றே அன்று மாலை விஷ்ணுவிடம் சண்டை பிடித்தாள்.

“இது என்ன விஷ்ணு, எம்.டின்னு போட்டிருக்கு. ஆனா பேரை மட்டும் மாத்தி அர்ஜி பேர் போட்டிருக்கு. இ…இது உண்மையா?” எனக் கேட்டவளுக்குக் குரல் கம்மியது.

“நீ எல்லா காரியத்துலயும் வளரே கரெக்டாய் இரிக்குவானோ? எந்தோ என்னைச் சோதியம் செய்யான் (கேள்வி கேக்க) வந்துட்ட? போய் ஜோலியை நோக்கு.” என்று இயல்பாகக் கூறியதில் அவளுக்குச் சுயமரியாதை தடுத்தது.

“நான் எல்லா விஷயத்திலும் கரெக்ட்டா தான் இருக்க முயற்சி பண்றேன் விஷ்ணு…”

“எந்து (என்ன) கரெக்ட்டாய் இரிக்கன? நிண்டே அடுத்து ஆசையாய் அருகில் வந்தால் கூடி, யூ அப்செட் மீ எவெரிடைம்.”

“அதே தான் நானும் சொல்றேன். உங்ககூட சந்தோசமா வாழணும்னு நினைக்கிற ஒவ்வொரு தடவையும், நீங்களும் என்னை அப்செட் தான் பண்றீங்க.” தன்னை எதிர்த்து நின்றவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

“என்னாடி, வார்த்தை நீளுந்தது?”

“உங்க வார்த்தையை விட இல்ல விஷ்ணு. உங்களுக்கு ஏத்த பொண்டாட்டியா இல்ல, இல்லன்னு சொல்றீங்களே. முதல்ல நீங்க எனக்கு ஏத்த புருஷனா இருந்திருக்கீங்களா? இந்தக் காதல் எனக்கு வலியை மட்டும் தான் அதிகம் குடுத்திருக்கு. வலி தான் குடுக்கப் போறீங்கன்னா அப்புறம் ஏன் அன்பைக் காட்டி என்னைக் கல்யாணம் பண்ணுனீங்க. இல்ல உங்க உண்மையான முகம் தெரியாம நான் தான் அறிவு கெட்டத்தனமா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?” ஆதங்கம் நிறைந்தது அவள் குரலில்.

“நினக்குப் புருஷனாய் இருந்தோ, இல்லியோந்து பதினெட்டு திவசத்தில் (நாள்ல) நீ கன்சீவ் ஆகும்போலே அறிஞ்சில்லே?”

“அமையா உங்க ஜாடைல இருந்ததுனால தான, அதுவும் உங்க குழந்தைன்னு நம்புனீங்க?” மூச்சிரைக்க வினவியதில், விஷ்ணு தடுமாறினான்.

“அதே… கல்யாணத்திண்டெ அந்து எவனோ ஒருத்தனை விசாரிச்சு கரைஞ்சவள் அல்லே (கல்யாணத்து அன்னைக்கு எவனையோ நினைச்சு அழுதவ தான) நீ… ஆ பிரணீத் தப்பு செய்திருந்தா மாட்திரம் நீ இத்தர சோத்யம் செய்யுமோ? (கேள்வி கேக்குமோ?) அதேடி, ஞான் தெற்று (தப்பு தான் செஞ்சேன்) தன்னே செய்தது… நீ எனிக்கு சாடிஸ்பேக்ஷன் தந்தில்லா.” என்றதில் இறுகிப் போனாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி உங்க பிரெண்ட் லிஸ்ட்ல இருந்த பிரணீத், ஏன் அப்புறம் மட்டும் சந்தேக லிஸ்ட்ல வந்தான்னு எனக்குப் புரியல. தென் என்ன கேட்டீங்க? பிரணீத் தப்புப் பண்ணிருந்தாவா… அவனை என்ன உங்களை மாதிரி பொம்பளைப் பொறுக்கின்னு நினைச்சீங்களா… கூட இருக்குற நட்புக்குக் கூட துரோகம் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறவன், கட்டுன பொண்டாட்டியைக் கடுகளவும் கலங்க விட மாட்டான். அவனை உங்களோட கம்பேர் பண்ணி, அவனோட தரத்தைக் கெடுக்காதீங்க…”

“ஏய்…” விஷ்ணு கோபத்துடன் அவள் அருகில் வர,

“எனக்கும் கூட உங்க ரிலேசன்ஷிப் சாடிஸ்பேக்ஷன் தரல விஷ்ணு…” என்றாள் காட்டத்துடன்.

“வேறே எவன் கொடுக்கனது, ஆ ப்ரணீத்தோ?” குதறலுடன் கேட்டதில்,

“உங்க புத்தி எப்பவுமே மாறாதுல்ல. இப்பக் கூட தப்புப் பண்ணிருக்கோம்னு சின்னக் குற்ற உணர்ச்சி கூட இல்ல. நீ எல்லாம் ஒரு மனுஷன்…” எனக் கத்தியதில் ஏற்கெனவே கோபத்தின் உச்சத்தில் இருந்தவன் அவளை அடித்து விட்டான்.

“யார் பரஞ்சு கொடுத்தடி நினக்கு இத்தர சம்சாரிக்கான்?” அவள் முடியைப் பிடித்து விஷ்ணு கேட்க,

“விடு விஷ்ணு, வலிக்குது.” என்று கண்ணைச் சுருக்கி விலக முற்பட்டாள்.

அவனோ இன்னும் வலிக்க வைக்க முடியை இறுக்கமாகப் பிடித்தவன், “எல்லாம் ஈ வீட்டிலேக்குப் புதியதாய் வந்திரிக்குனில்லே, அவள் பரஞ்சு கொடுத்தோ?(எல்லாம் இந்த வீட்டுக்குப் புதுசா வந்தவள் சொல்லிக்கொடுத்ததோ)” எனக் குத்து மதிப்பாகக் கேட்க, வலியில் இருந்தவளோ “ஆமா, இப்ப என்ன அதுக்கு?” என்று விட்டாள்.

அதுவே அகமொழியின் மீது மொத்தக் கோபமும் திரும்பக் காரணமாகிற்று. இந்த நினைவிலேயே நின்றிருந்தவளைக் கல்யாணி தான் உலுக்கினார்.

“எந்தா மோளே பரயுந்தது… விஷ்ணு நின்னே கஷ்டப்படுத்துந்தோ? ரெண்டு பேரும் நந்தாயிட்டல்லே இருந்தது…(என்னமா சொல்ற. விஷ்ணு உன்னைக் கஷ்டப்படுத்துறானா? நீங்க ரெண்டு பேரும் நல்லாதானே இருந்தீங்க)”

“இங்க வந்ததுல இருந்து ஒரு நாள் கூட நான் நல்லா இல்ல முத்தச்சி…” விழி தாழ்த்திக் கூறியவளிடம் விஷ்ணு எகிறினான்.

“எந்தாடி நந்தாய் இல்லாத்த… நின்னைக் கல்யாணம் செய்து ஞான் மாத்திரம் நந்தாயிருந்தோ?(உன்னைக் கல்யாணம் செஞ்சு நான் மட்டும் நல்லாருந்தேனா)”

மகனின் கத்தல் சுஜாதாவிற்கே புதிதாக இருக்க, “விஷ்ணு பெல்ல (அமைதியா) சம்சாரிக்கு. நீ தெற்று செய்தது சத்யமானோ?(நீ தப்பு செஞ்சது உண்மையா)” என வினவியதில், அவன் பதில் கூறும் முன்னே அன்விதா கூறினாள்.

“உண்மை தான் அம்மே, இல்லீகல் அஃபேர் வச்சுருக்குறது விஷ்ணு தான்!”

கேசவ நாயரோ விஷ்ணுவின் முகத்தில் அடித்தார். “எந்தடா செய்து வச்சிரிக்கனது?” என்று.

எதையும் காதில் வாங்காதவனாக அர்ஜித், “சைன் இடு அன்வி!” எனக் கண்ணைக் காட்ட, அவளுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது.

“மதி! நிறுத்துனுண்டோ? எந்தோ என்னைத் தெற்று பரயான் வருந்த… கல்யாணம் ஆய நாளில் இரிந்து அவள் எனிக்கு ஏது சந்தோஷத்தையும் தந்தில்லா. ஞானே அவள்ட மேலே மான நஷ்ட வழக்கு இடாம்.(போதும். நிறுத்துங்கள். நான் என்ன தப்பு பண்ணேன். கல்யாணம் ஆன நாள்ல இருந்து அவள் எனக்கு எந்த சந்தோஷமும் கொடுக்கல. நானே அவள் மேல மான நஷ்ட வழக்குப் போடுவேன்)” என்று எகிறினான்.

தன்மீது சிறு தவறு உண்டோ என்ற சின்னக் குற்ற உணர்வு அவளுக்கு இருந்தது தான். ஆனாலும் விஷ்ணுவின் செயல்களில் நியாயமில்லை என்ற நிலைப்பாட்டில் மாறாதவள், “முழுப் பிரச்சினை உங்களுக்குத் தெரியாது அர்ஜி, இதை யோசிச்சே முடிவு எடுக்கலாம்.” என்றாள்.

‘எப்படியும் விஷ்ணு இதனை வைத்துத் தன்னை அசிங்கப்படுத்துவான்.’ என்ற எண்ணம் அவளுக்கு.

அர்ஜித், “எனிக்கு அறியாம்…(எனக்குத்தெரியும்)” என்று அவளை அழுத்தமாகப் பார்த்துக் கூற அவள் திகைத்தாள்.

“நிங்களுக்குள்ளே எந்து பிரஸ்னமானெந்து (பிரச்சினைன்னு) எனிக்கு அறியாம்.” என மீண்டும் கூறியதிலேயே, “எப்…எப்படி?” எனக் கேட்டவள் பின், “அகாவா?” என்றாள் தவிப்பாக.

அவளது பெயரே அவனுள் பூகம்பம் கொடுக்க, சட்டெனப் பார்வையை மாற்றியவன், “ம்ம்…” என்றான்.

“யூ டிசர்வ் பெட்டர் லைஃப் அன்வி… இவிடே யாரை விசாரிச்சும் நீ விசனப்பெட்டு, பேடிக்கண்ட ஆவஸ்யம் இல்லா… இவிடே யார் தடுத்தாலும், நின்னை ஈ ஜீவிதத்தில் இருந்து விடுதலை செய்யேண்டதும், நினக்கு ஒரு நல்ல ஜீவிதம் ஏற்படுத்திக் கொடுக்கனதும் என்டே உத்தரவாதம்…(யூ டிசர்வ் பெட்டர் லைஃப் அன்வி. இங்க யாரை நினைச்சும் நீ கவலைப்பட்டு பயப்பட தேவை இல்ல. இங்க யார் தடுத்தாலும் உன்னை இந்த வாழ்க்கையால் இருந்து விடுதலை பண்ண வேண்டியதும் உனக்கு நல்ல வாழ்க்கைய ஏற்படுத்திக் கொடுக்குறதும் என்னோட பொறுப்பு)” என்றவனைக் கண் கலங்க ஏறிட்டாள்.

அனகா தான் பேயறைந்தது போல அமர்ந்திருந்தாள்.

‘அன்றே பிரணீத்தின் காதல் விஷயத்தைக் கூறி இருந்தால், இன்று இருவரும் இப்படி உடைந்திருக்க மாட்டார்கள் தானே?’ குற்ற உணர்ச்சி கொன்றது.

விஷ்ணுவின் மீதிருந்த பாசத்தினால், அவனது சந்தோஷத்தைப் பறிக்க மனமில்லாது ப்ரணீத்திற்குத் தவறு இழைத்து விட்டாள். இன்றோ, இவர்களது உறவே சின்னாபின்னமாகி இருக்கிறதே!

விஷ்ணுவைப் பார்வையாலேயே எரித்தாள்.

சுஜாதாவும் கல்யாணியும் தான், “ஐயோ அர்ஜி… அவன் தெற்று (தப்பு) செய்தால், நாலு அடி அடிக்காம். இனி இங்கனே செய்யான் அவனு தைரியம் வரான் பாடில்லா… பட்சே அதினு வேண்டி டைவர்ஸ் வரை போயால்.. இவர்டே ஜீவிதம் (வாழ்க்கை என்னாகும்) எந்தாகும்? அமையாவை ஆலோயிச்சு நோக்கு!” என்று பரிதவித்தனர்.

“இதே போலே அனகாவைக் கல்யாணம் செய்தவன் செய்திருந்தா எந்து செய்திரிக்கும்?” எனக் கண்ணைச் சுருக்கிக் கேட்க, அதற்கு சுஜாதா பதில் கூறும் முன்னே அனகா வெடித்தாள்.

“அவரு எந்தா செய்யனது? ஞானே செருப்பாலே அடிச்சு அயிச்சிட்டுண்டாவும். (அனுப்பி இருப்பேன்.) ஏடத்தி மாதிரிப் பொறுத்துட்டு இருந்திரிக்கில்லா!” என்றபடி விஷ்ணுவைத் தீயாக முறைக்க, விஷ்ணுவிற்கு வியர்த்து விட்டது.

“கேட்டில்லே…” அர்ஜித் பெரியவர்களை அர்த்தமாகப் பார்க்க, அன்விதா மடமடவென விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.

அகமொழி வீட்டை விட்டுச் சென்ற விஷயம், அன்று காலையில் அனகா சொல்லித் தான் ப்ரணீத்திற்குத் தெரியும். என்ன ஆனதோ எனப் பதறி அங்கு வந்த பிரணீத் நடந்ததைக் கண்டு அதிர்ந்ததோடு, அன்விதாவின் முகம் தாங்கிய வலியைக் கண்டு துடித்து நின்றான்.

அன்விதா கையெழுத்திட்டதைத் திருப்தியாகப் பார்த்த அர்ஜித், தாயிடம் திரும்பிக் கண்ணைச் சுருக்கினான்.

“பின்னே எந்து சோதிச்சு? தெற்று செய்தால் நாலு அடி அடிச்சால் மதி, டைவோர்ஸ் எந்தினாந்தோ? அப்போ எனிக்கு டைவர்ஸ் வாங்கித் தரான் மாத்திரம் எந்தினு அத்தர ஆச… அன்வி எத்தர அடிச்சாலும் தாங்கும்… ஆ காந்தாரி எதிர்த்து கேள்வி கேட்கும்… அதல்லே?(அப்பறம் என்ன கேட்டீங்க? தப்பு பண்ணா நாலு அடி அடிச்சா போதும், டைவோர்ஸ் எதுக்கா? அப்போ எனக்கு டைவர்ஸ் வாங்கித் தர மட்டும் ஏன் அவ்ளோ ஆர்வம். அன்வி எவ்ளோ அடிச்சாலும் தாங்குவா… அந்தக் காந்தாரி எதிர்த்து கேள்வி கேட்பா… அதான?)” எனக் குற்றப்பார்வை பார்க்க, சுஜாதாவிற்குப் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

“அவள் நின்னைத் தெற்றாய் பரஞ்சல்லே…(அவள் உன்னைப் பத்தி தப்பா பேசுனதால)” அவர் பேசி முடிக்கும் முன்,

“ஆத்யம் எவளோ ஒருத்தி தெற்றாய் பரஞ்சதை விஸ்வசிச்சது நிங்கள்டெ தெற்று… அப்போ நிங்கடே கவிழத்து நிங்களே அடிச்சோளு… நிங்களை நிங்களே பிடிச்சு புறத்து தள்ளிக்கோளு…(முதல்ல எவளோ ஒருத்தி தப்பா பேசுனா நம்புனது உங்க தப்பு. அப்போ உங்க கன்னத்துல நீங்களே அடிச்சுக்கோங்க… உங்களை நீங்களே பிடிச்சு வெளில தள்ளிக்கோங்க)” அசட்டையாகக் கூறியவன், சுஜாதாவின் கலங்கிய முகத்தைக் கண்டு கொள்ளாது, அந்த விவாகரத்துத் தாளை மீண்டும் மடிக்கணினிப் பையில் வைத்தான்.

வாசலில் பாராமலேயே தெரிந்தது, அங்கு பிரணீத் நிற்கிறான் என.

அவனை ஏறெடுத்துப் பாராதவனாக, “நினக்குப் புறத்து தாமஸிக்கான் ஏற்பாடு செய்திட்டுப் பரயாம். அதுவரை இவிடே இரிக்கு… என் பிரெண்டுடே பிரெண்டாய் மாத்திரம் இரிக்கு… யாரெங்கிலும் பிரெய்ன் வாஷ் செய்தெந்து மனசு மாறியால், டைவர்ஸ் எல்லாம் ஆவஸ்யம் இல்லாந்து நினக்கு வேற கல்யாணம் செய்து வைக்கும்!(உனக்கு வெளில தங்க ஏற்பாடு பண்ணிட்டுச் சொல்றேன். அதுவரை இங்க இரு. என் பிரெண்டோட ப்ரெண்டா மட்டும் இரு. யாராவது ப்ரெய்ன் வாஷ் பண்ணுனாங்கனு மனசு மாறுன, டைவர்ஸ் எல்லாம் தேவை இல்லன்னு உனக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்)” என அர்ஜித் மிரட்டிட, அன்விதா பே என விழித்தாள்.

‘எதே! இன்னொரு கல்யாணமா?’ பிரணீத் நெஞ்சில் கை வைக்க,

“இல்ல இல்ல மாற மாட்டேன்…” அன்விதா வேகமாகத் தலையாட்டியதில், உள்ளுக்குள் அமிழ்ந்திருந்த புன்னகையை அடக்கியவன்,

“என் பார்யைக்குக் (பொண்டாட்டிக்கு) கல்யாணம் செய்து வைக்கான் இவன் யாரு?” என்ற விஷ்ணுவின் கத்தலை எல்லாம் பொருட்படுத்தாது விறுவிறுவென வெளியில் சென்று விட்டான்.

அப்போது தான் அன்விதாவும் பிரணீத்தைக் கண்டு திகைக்க, விஷ்ணு ப்ரணீத்திடம் சண்டைக்கு வந்ததில், அவனும் அவன் பேச்சை எல்லாம் காதில் வாங்காது திடுதிடுவென ஓடி அர்ஜித்தின் காரில் ஏறிக்கொண்டான்.

காரைக் கிளப்பும் நேரம், அர்ஜித் அகனின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்தடைந்திருந்தது.

“அன்வி விஷயத்துல என்ன முடிவு எடுத்திருக்க அகன்?” என்று.

அகன் வசப்படுவாள் (வான்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 108

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
113
+1
4
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அன்வி வாழ்க்கை சரியாகும்.. நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையை சீக்கிரம் சரி பண்ணுங்க..மனசு வலிக்குது 💖