
அத்தியாயம் 31
“எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க!” தலையைக் குனிந்து அகமொழி பெரியவர்களிடம் மன்னிப்பு வேண்ட, சுஜாதா அவளைப் பளாரென அறைந்தார்.
“நின்னை விஸ்வசிச்சு (நம்பினேன்) அகா… என்டெ மகனை விட விஸ்வசிச்சு…” ஆதங்கம் தாளாது கூறியதில் அவள் விழி கலங்க நிமிர்ந்தாள்.
“அத்தை…”
“அங்கனே விளிக்காதே. நின்னாலே ஞங்களுக்கு எத்தர மனக்கசப்புனு நினக்கு மனஸிலாவுந்தோ?(அப்படி கூப்பிடாத. உன்னால எங்களுக்கு எவ்ளோ மனக்கசப்புன்னு புரியுதா?)”
கோபால கிருஷ்ணனும், “நின்னோடு இதைப் பிரதீக்ஷிச்சில்லா (எதிர்பார்க்கல) அகா” என்றார் கோபத்துடன்.
“தப்பு தான்… ஆனா” எனும்போதே,
விஷ்ணு, “இப்போ மனஸிலாயோ இவளைப் பற்றி… அர்ஜி மேல பழி போட்டு தன்னே வந்திரிக்குவான்னு. இனி ஒரு நிமிஷம் கூடி ஈ வீட்டில் நீ இரிக்கான் பாடில்லா…(இருக்க கூடாது) போ!” என்று வாசலைக் கைகாட்ட, அவள் அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“நீயே போகுந்தோ?(போறியா) ஞானே கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளனோ?”
ஒரு முறை சுஜாதாவைப் பார்த்தவள், “நான் போகட்டுமா?” என வினவ, அவர் அவளைப் பாராமல் திரும்பிக் கொண்டார், “நின் இஷ்டம்” என்று.
கேசவ நாயருக்கு இதில் முடிவெடுக்க இயலவில்லை. என்ன இருந்தாலும் அர்ஜித்தைப் பற்றிப் பொய் தகவலைக் கூறியது தவறு தானே?
நால்வரையும் ஒரு தடவை பார்த்தவள், விஷ்ணுவின் வெற்றிக் களிப்பை ஒரு கணம் ஊடுருவி விட்டு, “நானே போறேன்!” என்றாள் அமைதியாக.
தனது அறை நோக்கிச் செல்லப் போக விஷ்ணு, “வாசல் ஈ சைடில்…” என்றான் ஏளனமாக.
“என் ட்ரெஸ்ஸை நீ போட்டுக்குவியாடா பொ****ப் பயலே!” அசிங்கமாக அவனைத் திட்டி விட்டு மாடியேறிச் செல்ல, விஷ்ணுவிற்கு வந்ததே ஆத்திரம்.
“கண்டில்லே… நிங்கள்டெ முன்னிலே எங்கனே சம்சாரிக்குவானு. (பார்த்தீங்களா உங்க முன்னாடியே எப்படி பேசுறான்னு) ஒரு லோ க்ளாஸ் பஜாரியை வீட்டினுள் விட்டா, இங்கனே தன்னே நம்மள்டெ மரியாதை போகும்.” விஷ்ணு இஷ்டத்திற்குக் கத்திட, அறைக்குள் நுழைந்த அகமொழிக்குக் கரங்கள் நடுங்கியது.
ஒன்றும் சிந்திக்க இயலவில்லை. தனது உடைகளை எடுத்து வைத்தவளுக்கு உள்ளுக்குள் எதுவோ பிசையும் நிலை.
எதையும் பாராமல், மடமடவென அங்கிருந்து வெளியேறிக் கீழே வந்தவளின் முகமே செத்திருந்தது.
யார் முகத்தையும் நிமிர்ந்து பாராது கிளம்பியே விட்டாள்.
—-
“போதும்… உங்களை நம்பி என் பொண்ணை மட்டும் இல்ல. அவளோட கனவையும் சேர்த்து நான் கொன்னுட்டேன்.” பாஸ்கர் கையெடுத்துக் கும்பிட்டு,
“என் பொண்ணை என்கிட்டயே அனுப்பிடுங்க தம்பி. இனி அவள் உங்க வீட்ல இருக்க வேணாம். நான் அவளைக் கூட்டிட்டுப் போறேன். உங்க சாவகாசமே வேணாம்.” என்று விட, சட்டென நிமிர்ந்தவனின் முகத்தில் சின்னதொரு கோபம்.
“அவள் வந்தால், தாராளமாய் விளிச்சிட்டுப் (கூட்டிட்டுப்) போங்க!” என்றவனின் கூற்றிலேயே அவள் அவனை விட்டுச் செல்ல மாட்டாள் என்ற உறுதி மிளிர, அங்கிருந்து சென்று விட்டான்.
அகமொழியை வெளியேற்றி விட்டு, வெற்றிப் புன்னகையுடன் தானும் வெளியில் சென்றான் விஷ்ணு.
தனது வீட்டிற்கு வந்த அர்ஜித் அகனைக் கட்டிக் கொண்டார் சுஜாதா.
இத்தனை நாள்கள் பேசாமல் இருந்த அன்னையின் செயலில் ஒரு கணம் விழி விரித்தவன், “எந்து பற்றி மா?” எனப் பதற்றமாகக் கேட்க,
“என்னை மன்னிச்சுடு கண்ணா… யார் வந்து எந்து பரஞ்சாலும் ஞான் நின்னை விஸ்வசிச்சிரிக்கணம்(நம்பிருக்கணும்)…” என்று தேம்பலுடன் மன்னிப்பு வேண்டியதில், ஒரு நொடி புரியாமல் விழித்தான்.
“ஆ பொண்ணு நின்டெ மேலே பழி இட்டு தன்னே கல்யாணம் செய்தெந்து சம்மதிச்சு” கேசவ நாயர் கூறியதில் அர்ஜித் மெல்ல அதிர்ந்தான்.
“எ…எவிடே அவள்?”
“விஷ்ணு அவளைப் பற்றி உள்ள சத்தியமொக்கெ பரயுமெந்து பேடிச்சு அவளே பரஞ்சு அர்ஜி…(விஷ்ணு அவளைப் பத்தின உண்மையை எல்லாம் சொல்லிடுவான்னு பயந்து அவளே சொல்லிட்டா)” என்ற கோபால கிருஷ்ணனைத் தொடர்ந்து,
கல்யாணியும் “அவள் போயி… அவள்டெ குட்டு புறத்து வந்ததும் இவிடே இருந்து போயி… அவளைத் தலைமுழுகிட்டு அடுத்த பணியை நோக்கு அர்ஜி. எந்தோ அவளை எனிக்குப் பிடிக்கவே இல்லா(அவள் போய்ட்டா. அவளோட குட்டு வெளில வந்ததும் இங்க இருந்து போய்ட்டா. அவளைத் தலைமுழுகிட்டு அடுத்த வேலையைப் பாரு. என்னவோ அவளை எனக்குப் பிடிக்கவே இல்ல)” என்றார் எரிச்சலுடன்.
அவன் கண்கள் வீட்டைச் சுற்றிலும் ஆராய்ந்தது. கல்யாணியின் பேச்சை நம்பாமல் அவள் அங்கு தான் இருப்பாளென்ற தவிப்புடன் ஆராய்ந்து கொண்டே இருந்த விழிகளுக்கு என்ன பதில் உரைப்பான்? ஏமாற்றம் என்றா?
“போயோ? அல்லெங்கில் போகான் பரஞ்சோ?(போய்ட்டாளா? இல்ல போக சொன்னீங்களா)” அர்ஜித் இயலாமையுடன் கேட்க,
“போ’ன்னு ஞங்களாய் பரஞ்சில்லா. அவள் போயால் போகட்டே. நுணயாலே (பொய்யால) ஆரம்பிச்ச ஈ பந்தம் நினக்கு வேண்டாம் அர்ஜி…” சுஜாதா முற்றும் முடிவாகக் கூற,
அவரைக் கூர்மையாக ஊடுருவியவன், “நிங்களுடே ஈ முடிவில் ஒரு மாற்றமும் இல்லால்லோ…” என்றான்.
“இல்லா!” அவரும் உறுதியாகக் கூற,
“குட். ஈ முடிவை மாற்றில்லாந்து விஸ்வசிக்குந்து. எப்பழும்…(இந்த முடிவை மாத்திக்க மாட்டீங்கன்னு நம்புறேன் எப்பவும்)” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டுச் சென்றதில், அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், இனி அவனுக்கென்று புது வாழ்க்கையைத் தொடங்கி வைக்கவே எண்ணினார். அவனும் அதைத் தான் விரும்புகிறான் போலும் என்ற எண்ணத்துடன்.
தனது அறைக்குச் சென்ற அர்ஜித் அகன் கட்டிலில் டொம்மென அமர்ந்தான்.
“பழி வாங்கிட்டீல?” அவளது குரல் காதில் எதிரொலிக்க, நெற்றியில் கையூன்றி அழுத்தினான்.
இனி யாரிடம் தனது தவிப்பை அவன் கொட்ட இயலுமாம்?
“ஹலோ மிஸ்டர் மலையாளி!” அவள் குரலே அவனுக்கு அசரீரியாகக் கேட்க,
“என்னே பழி வாங்கிட்டுப் போயோடி?” யாருமற்ற அறையில் கத்தினான் அர்ஜித்.
ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் ஒரு கடிதம் பறக்கத் தயாராக இருந்தது.
——–
மருத்துவமனைக்குச் சென்ற அன்விதாவின் கார், மருத்துவமனைக்கு அருகில் செல்லும்போதே பிரேக் டவுன் ஆனதில், முதலில் அகமொழிக்குத் தான் அழைத்தாள். அவள் எடுக்காததால் அர்ஜித்திற்கும் முயற்சித்து விட்டுப் பின் ப்ரணீத்திற்கே அழைத்தாள்.
அவளது அழைப்பில் உடனடியாக வந்து விட்டவன், “என்னாச்சு சிட்டு? இப்ப அமையாக்கு ஓகேவா? ஹாஸ்பிடல் போகும்போதே என்னைக் கூப்பிட்டு இருந்தா நான் வந்திருப்பேன்ல.” என்றபடி சிகிச்சை முடித்துத் தானே வீட்டிற்கு அழைத்து வந்தான்.
விஷ்ணு, அன்விதாவை அறைந்தது அவனுக்கும் அர்ஜித் மூலம் அன்று காலையில் தான் தெரிந்திருந்தது.
அதீத கோபம் அவனுக்கு.
“எதுக்குடா அடிச்சான்?” கோபத்துடன் நண்பனிடம் எகிறிய ப்ரணீத்திற்கு எப்போதும் இருக்கும் மென்மை தொலைந்திருந்தது.
“ரெண்டு பேருக்கும் எதுவும் சரியில்லடா, ஞான் நினக்கு எல்லாம் பின்னே பரயாம். எந்தாந்து ஏடத்தியோடு சோதிச்சு முடிவெடுக்காம்.(ரெண்டு பேருக்கும் எதுவும் சரி இல்லடா… நான் உனக்கு எல்லாம் சொல்றேன். என்னன்னு ஏடத்திட்ட கேட்டு முடிவு எடுக்கலாம்…)” என்று அர்ஜித் தயங்கித் தயங்கிப் பேச,
“என்னன்னு பேச… புரியல? அவள் நல்லாருக்கா தான?” என இதயம் நடுங்கக் கேட்டான்.
அதற்கு அர்ஜித்திடம் இருந்து பதில் வராது போனதில், அவனுக்குள் சிறு பயம்.
வேலையாக வெளியில் சென்று விட்டு, அகமொழி கத்தி விட்டுச் சென்ற பிறகே ரிஸார்ட்டிற்கு வந்த பிரணீத், “என்னடா, அகா கூப்பிடக் கூப்பிடப் பார்க்காமல் போறா?” என்று கேட்க, அர்ஜித் யோசனையில் ஆழ்ந்தான்.
அகமொழி சண்டை இட்டுச் சென்றதில் இருந்து அர்ஜித்திற்குச் சின்னதொரு சந்தேகம் விஷ்ணுவின் மீது முளைத்தது. கிளாம்பிங்கிற்கு அவன் செல்லும் முன்னே, அர்ஜித் பற்றிய பொய்யான தகவலை ரிசார்ட்டில் இருந்து யார் பரப்பியதென்று ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது தான் விஷ்ணுவின் நடவடிக்கை அங்குச் சரியில்லாததை இருவரும் ஊகிக்க, பிரணீத் அர்ஜித்தின் சட்டையைப் பிடித்திருந்தான்.
“டேய், இதுலாம் உண்மையா இருக்கக் கூடாது. இருக்காதுல?” எனக் குரல் நலியக் கேட்க, அதற்கும் அவனால் பதில் சொல்ல இயலவில்லை. அவனே செய்வதறியாது திகைத்திருந்தான்.
———–
அன்விதாவிடம் இதைப் பற்றி எப்படிப் பேசத் தொடங்குவது என்ற நெருடலிலேயே வீட்டை நெருங்கினான் பிரணீத்.
அமையா பாதி உறக்கத்தில் இருக்க, “ப்ரணீ, இவளைக் கொஞ்சம் கைல வச்சுருடா. இப்படியே உள்ள தூக்கிட்டுப் போனா பேச்சுச் சத்தம் கேட்டு எந்திரிச்சுடுவா. நான் போய் பெட்ட ரெடி பண்றேன்.” எனக் கெஞ்சலாகக் கேட்டவளுக்கு, ஏற்கெனவே சரியாக உறக்கம் இல்லாததில் தலை வலித்தது.
“நான் பார்த்துக்கிறேன் சிட்டு. நீ போ. நான் தூங்க வச்சுக் கொண்டு வரேன்…” என்று அவளை வாங்கி, முற்றத்திலே தோளில் போட்டு நடக்கத் தொடங்க அதில் அவள் உறங்கியே விட்டாள்.
வீட்டினுள் நுழைந்த அன்விதா, வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
அடுக்களையிலும் சுஜாதா இல்லாது போக, வேலையாள்களிடம் விசாரித்ததில் கோபால கிருஷ்ணனும், கேசவ நாயரும் எஸ்டேட்டிற்குச் சென்றிருப்பதாகவும், பெண்கள் இருவரும் கோவிலுக்குச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்க, ‘முத்தச்சியுமா போயிருக்காங்க இந்நேரத்துல’ என வியப்பாக எண்ணிக்கொண்டு அறைக்குச் சென்றாள்.
இது அவர் உறங்கும் நேரமாகிற்றே.
கலைந்து கிடந்த அறையை ஒழுங்கு படுத்தியவள், மெத்தை விரிப்பைச் சரி செய்ய முயலும்போதே கண்ணில் பட்டது சில பொருள்கள்.
‘இது யாரோடது? இங்க கொண்டு வந்து வச்சுருக்காங்க…’ என்று குழம்பியபடி, அதனை எடுத்துப் பார்த்தவளுக்குக் கண்ணை இருட்டியது.
எத்தனை நேரம் அசையாது பேயறைந்தது போலவே நின்றாளெனத் தெரியவில்லை.
அமையாவை உறங்க வைத்து அவளது அறைக்குத் தூக்கி வந்த பிரணீத், “ஓய் சிட்டு, பில்லோவ சரியா போடு.” என்றிட அவளிடம் அசைவே இல்லை.
‘என்ன பண்றா இவ?’ என்றபடி அவனே அமையாவைப் படுக்க வைத்து விட்டு, “அப்படி என்ன தீவிரமா பார்த்துட்டு இருக்க” என எட்டிப் பார்த்தவன் அதிர்ந்தே விட்டான்.
‘அடிப்பாவி அகா…’ என அகமொழியை மனத்தினுள் திட்டித் தீர்த்தான்.
நெஞ்செல்லாம் பதறியது.
அகமொழி ப்ரணீத்தின் வீட்டில் கண்டறிந்த அவனது காதல் சின்னங்களான ‘ஐ லவ் யூ அனு’ என்று எழுதிய கிரீட்டிங் கார்டுகளும், அவனும் ‘அனு’ என அவனால் பள்ளி நாள்களில் அழைக்கப்படும் அன்விதாவும் இருக்கும் புகைப்படங்களில் எல்லாம், இதய வடிவக் குறியைப் போட்டு வைத்திருந்த அனைத்தையும் திருடிக் கொண்டு வந்திருந்தாள், ப்ரணீத்திற்குத் தெரியாமல்.
அதை அவளிடம் இருந்து பிடுங்கியவன், “அனு… இது… இது…” எனும்போதே அவள் கண்ணில் இருந்து நீர் வழிந்தது.
அவற்றை எல்லாம் அவனிடமே கொடுத்தவள், “போ ப்ரணீ…” என்றாள் நடுக்கத்துடன்.
“சிட்டு… நான்…” ப்ரணீத்திற்கு எங்குச் சென்று முட்டுவதென்று தெரியவில்லை. அவளிடம் சொல்ல முயன்ற போது இந்த விதி சொல்ல விடவில்லை. இப்போதோ அவளிடம் தன்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
ஆகினும், ஒரு கணம் கண்ணை மூடி நிதானித்தவன்,
“எப்பவுமே உங்கிட்ட இதைக் கேட்க முடியாதுன்னு நினைச்சேன் சிட்டு. சந்தர்ப்பம் கிடைக்குதேன்னு உன் வாழ்க்கைக்குள்ள நுழையுறேன்னு நீ என்னைக் கேவலமா நினைச்சாலும் பரவாயில்ல. விஷ்ணுவை விட்டுட்டு வந்துடு அனு. உன்னையும், குட்டிச் சிட்டையும் நான் பார்த்துக்கிறேன்.” என்று அழுத்தம் திருத்தமாகக் காதலைப் பகிர, ஏற்கெனவே அதிர்வில் இருந்த அன்விதாவிற்குத் தலையே சுற்றியது.
“பைத்தியமாடா நீ… என் புகுந்த வீட்ல வந்து காதலைச் சொல்லிட்டு இருக்க. புத்தி பிசகிப் போச்சா? போ ப்ரணீ… இங்க இருந்து போயிடு. யாராச்சும் இதைக் கேட்டா தப்பாகிடும்.”
“அப்போ நீ புகுந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி இதைச் சொல்லிருந்தா ஓகே சொல்லிருப்பியா அனு?” அவன் கண்களில் அத்தனை வருடமும் தேக்கி வைத்திருந்த ஏக்கம் கண்ணீராக வெளிப்பட்டது.
அவளோ அக்கேள்வியில் இன்னுமாக அதிர்ந்தாள்.
“ப்ரணீ, நீ இப்படிப் பேசுறதே தப்பு. தயவு செஞ்சு போ ப்ரணீ… போ!” என்று அவனை வெளியில் தள்ளிக் கதவை அடைத்தவள், தனது இயல்பிற்கு மீறி ஆ’ வெனக் கத்தி அழுதாள்.
அமையா பயந்து எழுந்தும் கூட, அவளால் அழுகையை நிறுத்த இயலவில்லை.
ஏன் அழுகிறாள் என்றும் அவளுக்குத் தெரியவில்லை.
அவள் அறையையே வெறித்தபடி நின்றிருந்த பிரணீத்திற்கு, தான் கேட்டது சரியா தவறா என்றெல்லாம் தெரியவில்லை. அவனது இத்தனை வருடப் பாரத்தை அவள் மீது ஏற்றி விட்டது புரியாது, “சிட்டு ப்ளீஸ்!” என்று கதவைத் திறக்க முன் வருவதும் பின் செல்வதுமாகத் தவித்துப் போனவன், எதேச்சையாகப் பின்னால் திரும்ப அங்கு அர்ஜித் விழி சிவக்க நின்று கொண்டிருந்ததைக் கண்டு உறைந்து விட்டான்.
பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது அவனுக்கு.
“அர்ஜி… அது… நா… அவளை… ஸ்கூல்ல…” தனது மனத்தைப் பகிர முயன்றும் அவனுக்குப் பயத்திலும், அவனை இழந்து விடுவோமோ என்ற தவிப்பிலும் வார்த்தைகள் வரவில்லை.
அர்ஜித் ஒன்றும் பேசாது அங்கிருந்து சென்று விட்டான்.
குளியலறைக்குள் நுழைந்தவன், ஷவரின் அடியில் தன்னை நிறுத்தி நீரின் குளுமையில் தன்னைத் தணிக்க முற்பட்டான்.
“ஷீ டிசர்வ் பெட்டர் லைஃப் அகன்!” அகமொழியின் வாதம் தற்போது அவனுக்குப் புரிந்தது.
“நான் இருக்கேன்ல. எல்லாத்தையும் சேர்ந்து சரி பண்ணலாம்.” என முந்தைய இரவில் வாக்குக் கொடுத்தவள், வாக்கை மறந்து தன்னைத் தனித்து விட்டுச் சென்றதன் நியாயம் என்ன?
அழுத்தம் தாளாது ஆடவனின் அழுத்த விழிகளில் இருந்து சில துளிக் கண்ணீரும், ஷவரின் நீர்த்துளியுடன் கலந்தே காணாமல் போனது, அவனின் காதலைப் போல.
—–
உயிரற்ற பொம்மை போலவே தனது வீட்டை அடைந்தாள் அகமொழி.
மகளைக் கண்டதும் பாஸ்கர் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்.
“என்னை மன்னிச்சுடு அகா… அந்தப் பையன் என்ன சொல்லிருந்தாலும் நான் உன்னை நம்பிருக்கணும்.” என்று மன்னிப்பு வேண்ட, விழிகளைத் திருப்பி அவரைப் புரியாமல் பார்த்தாள்.
ரூஹி, “இப்ப தான் அந்தக் கேரளாக்காரன் வேணும்னே உன்மேல பழி போட்டேன்னு ஒத்துக்கிட்டுப் போனான் அகா… நீயாவது அப்படி இல்லைன்னு சொல்லிருக்கலாம்லடி!” என்றிட, அவள் மெல்ல அதிர்ந்தாள்.
ரிஷிக்கோ, ஏற்கெனவே அவள் தவறிழைத்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது தான். ஆனால் உண்மை தெரிந்ததும் குற்ற உணர்ச்சி நெஞ்சை அழுத்தியது. நிச்சயத்தை நிறுத்திச் சென்றது எத்தனைப் பெரிய தவறென்று புரிந்து கொண்டான்.
“ச..சாரி அகா…” மீண்டும் கண்ணில் நீர் நிறைய அவன் மன்னிப்பு வேண்ட, “ப்ச்… விடுங்க!” எனத் தந்தைக்கும் அவனுக்கும் சேர்த்தே இயல்பாகச் சொல்லி விட்டாள்.
அவள் எண்ணம் முழுதும் நிறைந்திருப்பது அகன் ஒருவனே! அவனைத் தவிர யார் என்ன செய்தாலும் அவள் கருத்தில் பதியப் போவதில்லை என்பதே அவளுக்குச் சமீபமாகத் தானே புரிந்திருக்கிறது.
பாஸ்கரோ, “இனி நீ அந்த வீட்ல இருக்க வேணாம். இந்த ஏமாத்துக் கல்யாணம் உனக்கு வேணாம் அகா… உன்னைக் கூட்டிட்டு வந்துடுவேன்னு நான் அந்தப் பையன்கிட்ட சொல்லிட்டேன்.” என்றிட,
அதில் தடதடத்த இதயத்துடன், “என்ன சொன்னாரு?” என வினவினாள்.
“அவன் கூட்டிட்டுப் போறதுனா போகச் சொல்லிட்டான். வேற என்ன சொல்ல முடியும்… செஞ்ச தப்பு உறுத்தும்ல.” என்றதில்,
“ஓ!” என்றாளே தவிர எந்த எதிர்வினையும் காட்டவில்லை.
நேராய் தனதறைக்குச் செல்ல, அங்கு ரூஹியும் ரிஷியுமே வந்து விட்டதில் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஷவரைத் திறந்து விட்டு அதன் அடியில் சம்மணமிட்டு அமர்ந்து விட்டவளின் எண்ணங்கள் ஆடவனைச் சுற்றியே வட்டமடித்தது.
“நீ என் லீஸ் ஆனு காந்தாரி!” அகனின் குரல் செவியில் நிறைந்தது.
“பிசினஸ் தவிர்த்து, உன்னை வைஃபா எனக்குப் பிடிச்சிருக்கு. நீ ஒரு வைஃப் மெட்டீரியல்டி!” ரசனை மிகுந்த வார்த்தைகள் நெஞ்சில் அமிலமாய் இறங்கியது.
“யார் வேணாலும் வந்து அடிச்சுட்டுப் போகட்டும்னு ஷோ கேஸ்ல காட்ட உன்னைக் கல்யாணம் பண்ணல காந்தாரி…”
அவனது ஒவ்வொரு வார்த்தையிலும், இப்போதேனோ காதலை மட்டுமே ஏக்கத்துடன் எதிர்பார்த்து ஏங்கிப்போனது அவள் இதயம்.
இறுதியாக, “பெயின் ஆனோ மொழி?” என்ற வாசகம் தானாய் நினைவில் ஊர்ந்திட, அத்தனை நேரமும் அடக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தக் கண்ணீரும் அவள் கொண்ட காதலைப் போலவே ஷவர் நீரிலிருந்து பிரிந்து தன் உறைவிடம் தேடியே ஓடி ஓய்ந்தது.
உண்மை நேசம் கொண்ட
உள்ளங்கள் தான்…
உயிர் வலி கொண்டே
உருக்குலையும்
நான்கு இதயங்களில்
யாரைத் தான் நோவது?
அகன் வசப்படுவான்(வாள்)!
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
83
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


😥😓
என்ன இப்டி pannitinga agan மொழி pirivanga தெரியும் but என் previous comment poi illa nu prove pannitingaleee naa guess panne. Anvitha than anu nu but kurukka intha anura vandhutta let’s hope for best