Loading

30 – வலுசாறு இடையினில் 

 

காலை முதல் எல்லாரும் பரபரப்பாக தயாராகி கொண்டு இருந்தனர். நங்கை மெல்ல எழுந்து கீழே வந்து பார்த்தாள். நீலா ஆச்சியும், வேம்பு பாட்டியும் வீட்டின் முன் பந்தல் போடும் வேலையை மேற்பார்வை பார்த்துகொண்டு  இருந்தனர். 

 

“டேய் பழனி.. இந்த பக்கம் முட்டு சாயுது பாரு.. ஒழுங்கா பிடிச்சி கட்டு டா.. டேய் டேய்.. அங்க பாரு அந்த பக்கம் ஸ்கிரீன் துணி தண்ணீல விழுகுது.. ஒழுங்கா பிடிச்சி போடுங்க டா.. என்னடா வேல பாக்கறீங்க?” ,என இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று வேலை செய்பவர்களை திட்டிக்கொண்டு இருந்தனர். 

 

“ஆச்சி.. நீ கத்தறதுல தான் எல்லாமே தப்பு தப்பா பண்றாங்க.. நீ போய் மொத மதியம் சாப்பாடுக்கு என்ன என்ன செய்யணும்ன்னு சொல்லிட்டு வாங்க. அதுக்குள்ள பந்தல் வேல முடிஞ்சி இருக்கும்”, என வட்டி அவர்களை அங்கிருந்து போக சொன்னான். 

 

“ஒரு வேல ஒழுங்கா செய்ய சொன்னா என்னைய ஏண்டா வெரட்டுற? ஆடு கோழி மீனு எல்லாம் வாங்கியாச்சா? எல்லா வீட்டுக்கும் தகவல் சொல்லியாச்சா? தங்கதுரை எப்ப வரான்? அவங்க வீட்ல இன்னிக்கி விருந்து இல்லயா?” , என மூச்சு விடாமல் கேட்டார் நீலா ஆச்சி. 

 

“கொஞ்சம் மூச்சு விடு ஆச்சி.. நம்ம இன்னிக்கி போடறோம் ல அப்பறம் அவங்க எப்டி இன்னிக்கி போடுவாங்க ? அதுவும் இல்லாம புள்ள மாசமா இருக்கு. அதனால இப்ப வைக்கலியாம் .. கொழந்த பொறந்த அப்பறம் ஒண்ணா போற்றுவாங்க.. பங்காளி எல்லா வீட்டுக்கும் போய் அழைப்பு வச்சிட்டு இருக்காரு.. நான் நம்ம ஊரு எல்லாம் கூப்பிட்டு முடிச்சிட்டேன்.. காட கவுதாரி எல்லாம் வாங்கியாச்சி.. நீ போய் அடுப்ப பத்த வச்சிட்டு வா”, என கூறினான். 

 

“கூனி ஆச்சி எங்க டா?” ,என வேம்பு பாட்டி கேட்டார். 

 

“அதோ வந்துட்டு இருக்கு..” ,என வட்டி தூரத்தில் கை காட்டினான். 

 

“வாங்க வள்ளி சித்தி.. எப்டி இருக்கீங்க?” ,என நீலா ஆச்சியும், வேம்பு பாட்டியும் கூனி ஆச்சியை உள்ளே அழைத்து சென்றனர். 

 

“வரேன் .. வீட்ல விசேஷம் எப்டி போகுது ?” ,என விசாரித்தபடி கீழே அமர்ந்தார். 

 

“எல்லாம் அடிதடியா தான் போகுது சித்தி.. நீங்க தான் புள்ளைங்களுக்கு மொத எண்ணை குடுக்கணும்..” ,என நீலா ஆச்சி கூறினார். 

 

“நான் எதுக்கு டி? நல்லா இருக்கறவள குடுக்க சொல்லு”, என மறுத்தார். 

 

“உன்ன விட யாரு நல்லா இருந்துட்டாங்க..  இருக்காங்க? நீ தான் குடுக்கணும் அத்த.. உன் ஆசீர்வாதம் தான் அவங்க வாழ்க்கைகக்கு மொத வேணும்.. அப்ப தான் நல்லா வாழும்ங்க .. “, என வேம்பு பாட்டி கூறினார். 

 

“சொல்றத கேளுங்க டி..”, என அவர் மீண்டும் மறுத்தார். 

 

“நீ எதுவும் சொல்லாத.. நங்கை .. வர்மா .. ரெண்டு பேரும் இங்க வாங்க ..” ,என அழைத்தனர். 

 

“என்ன அம்மம்மா?”

 

“என்ன அப்பத்தா?”, என இருவரும் வந்து நின்றனர். 

 

அந்த குடும்பத்தின் வழக்கப்படி, திருமணம் முடிந்த அடுத்த நாள் நன்கு காய்ச்சிய எண்ணையை மணமக்கள் இருவருக்கும் கொடுத்து குளித்து வர கூறுவர். அதனால் அவர்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்று கூட்டத்தினால் ஏற்படும் கிருமி தொற்றில் இருந்தும் அவர்களை காக்கும். அந்த எண்ணையில் இருவதுக்கும் அதிகமான மூலிகையை கலந்து வேக வைப்பதால், பல நன்மைகள் அவர்களுக்கு சென்று அடையும். 

 

இதை வயதில் மூத்த பெண் கொடுப்பது தான் முறையும் கூட, அவர்கள் தனது கணவ்னுடன் மனமொத்து வாழ்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே முக்கியமான விஷயம். 

 

மணமக்களே தங்களுக்கு எண்ணை வைத்துகொண்டு வந்து மனையில் அமர்ந்த பின் அரைத்து வைத்து இருக்கும்  மஞ்சளை அவர்கள் இருவரின் உடலிலும் பூசி விட்டு, பொட்டு வைத்து, ஆரத்தி சுற்றி எழுப்புவார்கள். 

 

இதை வர்மன் குடும்பத்தில் ஒரு முக்கியமான வழக்கமாக காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். இந்த எண்ணை தொடர்ந்து தலைக்கு தடவி வருவதால் உடல் சூடு தனிந்து, உடனே பிள்ளை வயிற்றில் நிற்கவும் உதவும் என்பது முக்கியமான மருத்துவ குணம். 

 

பைத்தியக்கார தனமான வழக்கங்கள் இல்லாமல், அறிவியல் ரீதியான விளக்கங்கள் கூறி பின்பற்ற படும் விஷயங்கள் தலைமுறை கடந்தும் நல்ல வாழ்வியல் முறைகளை பின்பற்ற உதவும். 

 

பரபரவென அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து வரவேற்பில் வந்து நின்றனர் வர்மனும், நங்கையும். 

 

வர்மன் நங்கைக்கு  தன்னால் அனைத்தும் செய்து பார்த்துக்கொள்ள முடியும் அதனால் ஏகாம்பரம் வாங்கி கொடுக்கும் எதுவும் வேண்டாம் என கூறிவிட்டான். 

திருமணம் முடிந்த இரவு ஏகாம்பரம் நங்கைக்கு  என்று வாங்கிய சேலை நகைகலிருந்து அனைத்தும் வரதன் மூலமாக கொடுத்து அனுப்பினார். 

“என் பொண்டாட்டிய இத்தன நாளா மனுஷியா கூட மதிக்காதவங்க கொடுக்கற எந்த பொருளும் எங்களுக்கும் அவளுக்கும் தேவ இல்ல சித்தப்பா.. நீங்களே இத பத்ரமா அவங்க கிட்ட குடுத்துடுங்க..”, என கூறி வீட்டின் உள்ளே கூட அதை எல்லாம் கொண்டு வர விடவில்லை. 

 

நங்கை வர்மன் பேசிய அனைத்தும் பார்த்து எதுவும் கூறவில்லை. இத்தனை ஆண்டுகள் தனக்கு சாப்பாடு போட்டதற்கு கூட பணம் வாங்கிய பெற்றவர்களை நினைத்து மனம் வெறுத்து போயிருந்தாள். அவளுக்கும் அவர்களின் மேல் இருந்த கொஞ்ச அன்பும் முழுதாக மனதை விட்டு அகன்று இருந்தது. 

 

அவளை கடந்து சென்றவன் மீண்டும் அவளிடம் வந்து,” உனக்கு அதுல இருந்து ஏதாவது எடுத்துக்க ஆசை பட்டா எடுத்துக்க”, என கூறினான். 

 

“அவங்க தான் எனக்கு எதுவுமில்லன்னு ஆகிடிச்சே .. அடுத்தவங்க பொருளுக்கு நான் ஏன் ஆசை படணும்.. இனிமே நீ வாங்கி குடுக்கறது போதும் ..”, என கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள். 

 

வர்மன் மெலிதாக சிரித்து அவளை பார்த்தபடி சென்றான். “சரியான வலுசாறு புடிச்சவ..”, என மனதிற்குள் சொல்லிக்கொண்டான். 

 

வரவேற்பில் வாழ்த்த வந்த அனைவரும் மனதார வாழ்த்திவிட்டு, வயிறார உண்டு விட்டு சென்றனர் வட்டி, வேல்முருகன் மற்றும் தேவராயனின் மேற்பார்வை கவனிப்பில். 

 

“மாப்ள.. அந்த ஆள எப்ப பொதைக்கறது ?”, என தேவராயன் வட்டி அருகில் வந்து கேட்டான். 

 

“இன்னிக்கி ராத்திரி பூஜை போட்டுக்கலாம் மாப்ள..”, என வட்டி கூறிவிட்டு வர்மனை கண் காட்டி விட்டு சென்றான். 

 

தேவராயன் புரிந்து கொண்டு, விருந்து முடிந்ததும் சொல்லிக்கொண்டு இல்லம் சென்றான். 

 

“டேய் சிம்மா.. கண்ட நேரத்துல வெளிய சுத்தாம நேரத்துக்கு வீட்டுக்கு இனிமே வந்துடனும் சொல்லிட்டேன்.. வீட்ல உனக்காக ஒருத்தி இருக்காங்கற நெனப்பு எப்பவும் மனசுல வச்சிக்க..” ,என அவன் மாலை வெளியே கிளம்பும்போது கூறினார். 

 

“சரி அப்பத்தா ..”, என கூறி வெளியே வந்த போது நங்கை நின்று இருந்தாள். 

 

“என்ன முத்து? ஏதாவது வேணுமா?” ,என கேட்டான். 

 

“என் புக் நோட்ஸ் , மத்த சர்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு வரணும்.. “, என அவன் முகம் பார்க்காமல்  கூறினாள். 

 

“என் மூஞ்ச பாத்து பேசு டி.. வினிதா எல்லாத்தயும் கொண்டு வந்து நாளைக்கு குடுப்பா.. வேற ஏதாவது அங்க இருந்து உன் பொருள் தேவைன்னா சொல்லு.. வினிதா எல்லாத்தயும் கொண்டு வந்துடுவா..”

 

“வரப்போ 4 நோட் வாங்கிட்டு வா வர்மா.. எனக்கு ஒரு ஃபோன் வேணும் “, என கேட்டாள். 

 

“நாளைக்கு நம்ம கடைக்கு போறப்ப நீயே உனக்கு புடிச்சது வந்து வாங்கிக்க முத்து.. ஓரு வாரத்துல கடை திறப்பு இருக்கு.. கொஞ்சம் அலச்சல் இருக்கும்.. எனக்காக பாக்காம நேரத்துக்கு சாபிடு ..”

 

“நான் ஏன் உனக்காக சாப்டாம இருக்க போறேன்.. நான் நாளைக்கு இருந்து  காலேஜ் போகணும்.. தெனம் பஸ் ஏத்தி விட நீ சீக்கிரம் ரெடி ஆகிடு.. அதுக்கு அப்பறம் நீ எங்க வேணா போ.. சாயந்தரம் சரியா வந்துடு”, என கூறிவிட்டு உள்ளே சென்றாள். 

 

“ஏய்.. உனக்கு வேல செய்ய தான் நான் இங்க இருக்கனா டி? ஒழுங்கா வண்டி ஓட்டி பழகு.. உனக்கு சேவகம் பண்ண எல்லாம் எனக்கு நேரம் இல்ல..” ,என கத்திவிட்டு அவனும் வெளியே சென்று விட்டான். 

 

இவர்களின் சம்பாசனை கேட்டு பெரியவர்கள் இருவரும் வாய் விட்டு நகைத்தனர். 

 

“பாருங்க ஆச்சி உங்க பேரன.. எனக்கு வேலை செய்ய முடியாதாம்.. அப்பறம் எதுக்கு என்னைய கல்யாணம் பண்ணனும்.. நானும் அவனுக்கு எதுவும் பண்ணமாட்டேன்..” , என நங்கை கோபமாக கூறினாள். 

 

“முத்து.. மாப்ளய நீ தனியா எப்டி வேணா கூப்டுக்க மத்தவங்க முன்ன மரியாதையா சொல்லணும்”, என வேம்பு பாட்டி அவளின் தவறை திருத்தினார். 

 

“சாரி அம்மம்மா.. “, என கூறிவிட்டு தங்களது அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள். 

 

தேவராயன் பழதோட்டம் .. 

 

“வர்மா.. இவன என்ன செஞ்சா நமக்கு மனசு திருப்தி ஆகும்?”, என தேவராயன் இரத்தினத்தை அடித்து தொங்கவிட்ட பின் அமர்ந்து கேட்டான். 

 

“இவன கொல்றதாள நம்ம அப்பா அம்மா திரும்ப வரமாட்டாங்க ராயா ..”, என ரத்தினத்தை பார்த்தபடி கூறினான். 

 

“அதுக்காக இவன சும்மா விட சொல்றியா ?”

 

“உன் இஷ்டம் எதுவோ அத பண்ணு.. நான் செங்கல்வராயன போட்டு தள்ள தான் முயற்சி பண்றேன்..”, என கூறினான். 

 

“அதான் அவன ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்கலாம்ல..”, வேல்முருகன். 

 

“நமக்கு ஜெயில் ஒண்ணும் புதுசு இல்ல மாப்ள.. என் கூட அப்போ உள்ள இருந்தவன் ஒருத்தன் செங்கல் இருக்க ஜெயில் ல தான் இருக்கான்..”

 

“அப்பறம் என்ன யோசன வர்மா? போட்டு தள்ள சொல்லு அந்த துரோகிய ..”, தேவராயன் ஆவேசமாக கூறினான். 

 

“வித்யாதரன் மாமாவுக்கு அவன் ரொம்ப முக்கியம் ராயா.. நம்ம குடும்ப பிரச்சனைக்காக அவன கொன்னுட்டா அவனுக்கு பின்னாடி இருக்க போதை கடத்தல் கும்பல புடிக்க முடியாம போக வாய்ப்பு இருக்கு.. அதனால அவன இப்ப கொள்ள வேணாம்.. தவிர இளவேணி அவனோட பொண்ணு இல்ல ன்னு நிரூபணம் ஆகி இருக்கு.. ஏதோ பெரிய திட்டத்தோட இங்க வந்தவங்க எப்டியோ நம்ம கிட்ட சிக்கிட்டாங்க..”

 

“இது எல்லாம் நமக்கு தேவையா வர்மா?”, என தேவராயன் எரிச்சலுடன் கேட்டான். 

 

“இல்லயா பின்ன? நம்ம ஊரு ஸ்கூல் பசங்களுக்கு போதை மருந்து குடுக்கற அளவுக்கு வந்துட்டாங்க.. அந்த பய ராஜன் அன்னிக்கி அதிகமான போதை மருந்து எடுத்து தான் சுய நெனவு தப்பி விழுந்து இருக்கான். பதினாறு வயசு பையன் கைல அது கெடச்சா நம்மலோட அடுத்த தலைமுறை எல்லாம் காணாம போயிடும்.. அதனால் இவன மாட்டும் இப்ப கொண்ணு உன் ஆத்தரத்த தீத்துக்க .. அவன நம்ம கண் பார்வைல வச்சி இருந்து கொஞ்சம் பொறுத்து கொல்லலாம் .. “, என கூறிவிட்டு எழுந்து வெளியே சென்றான். 

 

அதன்பின் தேவராயன் அவனுக்கு தோன்றியபடி எல்லாம் ரத்தினத்தை மெல் உயிர் வதை செய்து விட்டு நிரந்தரமாக அவனை அடக்கம் செய்தான். 

 

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டு இருக்க, செமெஸ்டெர் தேர்வும் நெருங்கி இருந்தது. 

 

வர்மன் என்ன சொன்னாலும் அதற்கு மறுப்பு சொல்லி, அவள்  ஒரு விதமாக செய்வது வீட்டில் தினம் நடக்கும் கூத்தாக மாறி இருந்தது. அவனுக்கு எதிராக அனைத்தும் செய்தே தீருவேன் என்கிற பாங்கு நன்றாக அவனுக்கும் புரிந்தது. 

 

இடையில் வேம்பு பாட்டி இரண்டு முறை வந்து பார்த்துவிட்டு சென்றார். மறுவீடும் தான் தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து சென்று மணமக்களை எந்த குறையும் வைக்காமல் தன் சுய சம்பாத்தியத்தில் நங்கைக்கு சில புடவையும், சில முக்கியமான பொருட்கள் மட்டும்  சீர் செய்தார். 

 

“இந்த பாட்டியால இவ்வளவு தான் ராசாத்தி முடியும்.. இது எல்லாமே என் சம்பாத்தியத்துல வாங்குனது.. உனக்கு புடிச்சி இருக்கா?” ,என ஆதரவாக தலையை வருடியபடி கேட்டார். 

 

“நீங்க எது செஞ்சாலும் செய்யலனாலும் நான் எதுவும் சொல்ல போறது இல்ல அம்மம்மா.. அப்பத்தாவும் நீங்களும் மட்டும் இல்லைன்னா நான் இல்ல.. உங்க அன்பு ஒண்ணு தான் எனக்கு எப்பவும் வேணும்..” ,என கூறி அவரை கட்டிக்கொண்டாள். 

 

“அன்ப கேட்டா மட்டும் பத்தாது.. குடுக்கவும் பழகணும் ன்னு சொல்லுங்க பாட்டி.. எப்ப பாரு நான் சொல்றதுக்கு மறுப்பு சொல்லிக்கிட்டே இருக்கா உங்க பேத்தி.. ஏதாவது சொன்னா ஒடனே உங்ககிட்ட நான் கெஞ்சி இவள கட்டனேன்னு ஒப்பாரி வைக்கறா.. “, என வர்மன் அவள் மேல் குற்ற பத்திரிக்கை வாசித்தான். 

 

“நீங்களே சொல்லுங்க அம்மம்மா .. எந்த விஷயத்த எப்ப எப்டி செய்யணும் ன்னு இருக்கா இல்லயா? கண்ட நேரத்துல கண்டதும் செய்ய சொன்னா மறுப்பு சொல்லாம வேற என்ன சொல்வாங்கலாம்? கடை திறப்பு வச்சிக்கிட்டு சும்மா ஊர சுத்திக்கிட்டு இருந்தா வட்டி அண்ணே மட்டும் எவ்ளோ வேல பாக்கும் ? அவருக்கு ஒரு குடும்பம் அமைச்சி குடுக்கற பொறுப்பு நமக்கு இருக்கா இல்லயா? அத சொன்னா இவரு கொஞ்சம் கூட யோசிக்காம கத்தராரு ..”, என அவளும் அவன் மேல் புகார் வாசித்தாள். 

 

“உங்க பஞ்சாயத்துக்கு நான் வரல சாமிங்களா .. நீங்களே பேசிக்கோங்க”, என அவர் எழுந்து சென்று விட்டார். 

 

கடையில் ஏற்பட்ட வேலை தமாதத்தினால் நங்கையின் பரீட்சை முடிந்து திறப்பு விழா வைத்து கொள்ளலாம் என நீலா ஆச்சி கூறிவிட்டார். 

 

“அவ பரிச்ச எழுத நான் ஏன் கடைய திறக்காம வச்சி இருக்கணும்?” ,என வர்மன் சண்டை போட்டான். 

 

“அந்த கட உன் பொண்டாட்டிக்கு தான் சொந்தம்.. அவ பரீட்ச முடிஞ்சி வந்து எல்லாத்தயும் பாத்துக்குவா .. இத்தன நாலு இழுத்தல்ல இன்னும் ரெண்டு வாரத்துல ஒண்ணும் ஆகிடாது.. போ போய் அறுப்பு வேலைய பாரு.. “, என அவனை அதட்டி அனுப்பினார். 

 

“நீயும் அவளுக்கு தான் எப்ப பாரு பறிஞ்சி பேசற கெழவி.. இரு ஒரு நாள் வச்சிக்கறேன்”, என முறைத்துவிட்டு சென்றான். 

 

“ஆச்சி.. நான் எப்டி கடைய பாத்துக்க முடியும்?”, என நங்கை தயக்கமாக கேட்டாள். 

 

“நீ தானே சுய சம்பாத்தியம் பண்ணனும்ன்னு ஆசை பட்ட.. அதுக்கு தான் உனக்கு இது ஆரம்பமா குடுக்கறேன்.. இத நீ நல்லா லாபகரமா நடத்தி உன் சம்பாத்தியத்துல முன்ன வா..”, என சிரித்தபடி கூறிவிட்டு சென்றார். 

 

“என்ன புள்ள சொல்ற? அந்த கடைய நீ தான் நடத்தணுமா?” ,என வினிதா அவளிடம்  ஆச்சரியமாக கேட்டாள். 

 

“ஆமா வினி.. எனக்கு வேற எந்த அனுபவமும் இல்ல.. நஷ்டம் ஆகிட்டா என்ன பண்றது?”

 

“எல்லாம் தெறிஞ்சிக்கிட்டா வேலை பாக்கறாங்க .. உள்ள போனா தானா எல்லாம் கத்துக்கலாம்.. நானும் வந்து உனக்கு உதவி பண்றேன்.. நீ ஆசை பட்ட எல்லாமே ஒண்ணு ஒண்ணா நடக்குது.. தைரியமா பொறுப்ப வாங்கு நங்க.. நாங்க எல்லாரும் இருக்கோம் ல “, என வினிதா அவளை உற்சாக படுத்தினாள். 

 

நங்கை மனதிற்குள் ஒரு தீர்மானம் எடுத்தவளாக அந்த பொறுப்பை ஏற்று கொண்டாள். 

 

‘முத்து சூப்பர் மார்க்கெட்’ என்று பெரிய பலகை மின் விளக்குகள் மின்ன, விழாக்கோலம் கொண்டு இருந்தது. 

 

அன்று தான் நங்கையின் கடை திறப்பு விழா.. நங்கை அவள் இஷ்ட பட்ட அனைவரையும் அழைத்து இருந்தாள். 

 

வட்டி, வேல்முருகன், வினிதா, தேவராயன், மருது, பாண்டி, பானு என அனைத்து இளைஞர் பட்டாளமும் கூடி இருந்தது. 

 

ராஜன் வெறுப்புடன் நங்கை அங்கே சிரித்தபடி பொறுப்புகளை கையாள்வது கண்டு பொறாமை தாங்காமல் வண்டியை முறுக்கி கொண்டு சென்றான். 

 

நங்கை அங்கிருந்து சென்ற பின், ஏகாம்பரம் தொழிலில் கவனம் செலுத்தாமல் இருந்தார். ஊரின் முன் தனது மகளுக்கு சோறு போட பணம் வாங்கியது  தெரிந்த பின், அவர்களிடம் பழக்கத்தை குறைத்து கொண்டனர். 

 

காமாட்சி மகளின் மேல் ஞாபகம் வரும் போது எல்லாம் அவளின் உடையை தடவி கொண்டு, மனதிற்கு சமாதானம் செய்து கொள்வார். 

 

நங்கையின் சுயசம்பாத்திய ஆசையை ஆச்சியும், வர்மனும் நிறைவு செய்ததும் நங்கை, தன் குடும்ப வாழ்வு பற்றி சிந்திக்க தொடங்கினாள். 

 

கல்லூரி படிப்பு முடிந்ததும், மேற்படிப்பு எல்லாம் தொலைதூர கல்வியாக பயின்று கொள்வதாக கூறிவிட்டு வீட்டு பொறுப்பை கையில் எடுக்க ஆரம்பித்தாள். 

 

ஏற்கனவே பெற்றவர்களிடம் இருந்த போதே எல்லா வேலைகளும் அவளுக்கு செய்து பழக்கம் இருந்ததால், ஆச்சியிடம் சில சில சந்தேகங்கள் மட்டும் கேட்டு கொண்டு அந்த குடும்பத்தின் மருமகளாக தனது கடமைகளை செய்து கொண்டு இருந்தாள். 

 

ஒரு பக்கம் வர்மனும், வட்டியும் அவளுக்கு மூன்று மாதம் கடையை நடத்துவது பற்றி சொல்லிக்கொடுத்து விட்டு,  தங்களது வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். 

 

வர்மன் தேவையற்ற பஞ்சாயத்துக்கு  செல்லும் பொது எல்லாம் நங்கை அவனை தடுக்க முயன்றாள். 

 

“உன் விஷயத்துல நான் ஏதாவது சொல்றேனா ? நீயும் என் விஷயத்துல எதுவும் சொல்லாத”, என வெட்டி பேசிவிட்டு சென்று விடுவான். 

 

அவளும் அடுத்து நான்கு நாட்கள் பாதை பற்றி பேசி பேசி இரண்டு பாட்டிகளின் காதுகளிலும் ரத்தம் வர வைக்கும் அளவு பேசுவாள். 

 

அன்று ஒரு நாள் வர்மனை காண ஒருவர் வந்து இருந்தார். நங்கை அவரை வரவேற்று குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு ஆச்சியை அழைத்தாள். 

 

“வா மாதவா.. எப்டி இருக்க ? ஊர விட்டு பொழப்பு பாக்க போனவன் அதுக்கு அப்பறம் எதுக்குமே வரமா இருந்துட்டயே ஏன் ப்பா?”, என வந்தவரை நலம் விசாரித்தபடி அமர்ந்தார். 

 

“எங்க அத்த .. நான் இங்க இருந்து எப்டி போனேன்ணு உங்களுக்கு நல்லாவே தெரியும் ல.. பொழப்ப நடத்த ரொம்ப கஷ்டம் பட்டேன் தான் ஆனா இன்னிக்கி நல்லா இருக்கேன் .. எல்லாம் உங்கள போல சில நல்லவங்க ஆசீர்வாதம் தான் அதுக்கு முக்கிய காரணம்.. “

 

“நீ உழைச்ச உழைப்பு எப்பவும் வீண் ஆகாது ப்பா.. சொல்லு என்ன சேதி?”

 

“இங்க இருக்க வீட எடுத்து கட்டலாம்ணு இருக்கேன் அத்த.. அதான் நானும் மகளும் இங்கயே இருந்து வேலைய பாக்கலாம்ணு வந்தேன்.. உங்க வீடு ஒண்ணு பூட்டி இருக்குனு வட்டி சொன்னான்.. அதான் அந்த வீடு எனக்கு ஒரு ஆறு மாசம் விட்டா எனக்கு’வசதியா இருக்கும்ன்னு கேக்க வந்தேன்”

 

“தமிழு.. நம்ம கீழ தெரு வீட்டு சாவி கொண்டு வா”, என நங்கையிடம் கூறினார். 

 

“பொண்ணுக்கு எத்தன வயசு ஆகுது? என்ன படிச்சி இருக்கா?”

“காலேஜ் இந்த வருஷம் தான் முடிச்சா அத்த.. சொந்த ஊர்ல இருந்து கல்யாணம் செஞ்சி குடுக்கணும் ஆசை படறேன்.. நானும் தொழில என் பையன் கிட்ட குடுத்துட்டு இங்கயே வந்துடலாம்ணு இருக்கேன்.. அதான் வீட ஒழுங்கு பண்றேன்”

 

“நல்லது.. வேற எதுவும் வேணும்னா என் பேரன கேளு அவன் செஞ்சி குடுப்பான்.. சாவிய வாங்கிக்க மாதவா”, என புன்னகையுடன் கூறினார் ஆச்சி. 

 

அதன்பின் , மாதவனின் மகள் ரங்கநாயகி அடிக்கடி அங்கு வந்து சென்று கொண்டு இருந்தாள். நங்கை அவளிடம் நட்பு பாராட்டவில்லை என்றாலும் விருந்தினருக்கு உரிய இடம் கொடுத்து நடத்தினாள். 

 

அந்த பெண்ணோ வர்மனிடம் அதிக இடம் எடுத்து நடந்து கொள்ள ஆரம்பிக்க நீலா ஆச்சி நங்கையிடம் பேசினார். 

 

“உன் புருஷன் எங்க போறான் வாரன்னு கவனிக்கறியா இல்லயா டி? “, என கேட்டார். 

 

“உங்க பேரன் தானே நீங்களே கவனிங்க”

 

“அவன் கட்டன தாலிய நீ தானே தொங்கவிட்டு இருக்க.. உன் உடமைபட்டவன நீ தான் பாத்துக்கணும்..” ,என கூறினார். 

 

“இப்டி எல்லாம் பேசினா உங்க பேரன நான் கிட்ட சேத்துவேன்னு அவன் சொன்னான?”, என கேட்டாள். 

 

“அட யாருடி இவ.. அந்த கீழ தெரு சிறுக்கி அடிக்கடி உன் புருஷன சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்கா .. உன்ன ஓரம் கட்ட பெரிய கூட்டமே காத்து இருக்கு ..  அப்பறம் உன் இஷ்டம்”, என கூறிவிட்டு சென்றுவிட்டார். 

 

அப்போது சரியாக அந்த பெண் வர்மனை அழைத்தபடி உள்ளே வந்தாள். 

 

“மாமா.. என் சிங்க மாமா.. எங்க இருக்கீங்க?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள். 

 

“ஏய் நில்லு.. என்னணு கூப்ட?” ,என நங்கை கேட்டாள். 

 

“அக்கா.. மாமாவ தான் கூப்டேன் .. எங்க இருக்காரு? இன்னிக்கி என்னைய தோப்புக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு.. நான் ரெடி ஆகி வந்துட்டேன்.. அவரு இன்னும் ரெடி ஆகலியா?” ,என கேட்டாள். 

 

“அவரு இன்னிக்கி எங்கயும் வரமாட்டாரு.. இனிமே அவர்கூட சுத்தற வேலை எல்லாம் வச்சிக்காத சொல்லிட்டேன்.. “, என நங்கை அவளை மிரட்டி அனுப்பினாள். 

வர்மன் அதை எல்லாம் ஓரமாக நின்று பார்த்து சிரித்து விட்டு, மெல்ல கூடத்திற்கு வந்தான். 

 

“எங்க மாதவ மாமா பொண்ணு வந்த சத்தம் கேட்டுச்சி.. ஆள காணோம்..” ,என கேட்டபடி வர்மன் நங்கை அருகில் வந்தான். 

 

“எவளும் வந்தா போனா எனக்கு என்ன தெரியும்? வீட்ல இருக்கற மனுஷன் மொத ஒழுங்கா இருக்கணும்.. அதுவே இங்க ஒழுங்கு இல்ல அப்பறம் எங்க இருந்து ஊர திருத்தறது ? “, என முனகிவிட்டு சென்றாள். 

 

ஆச்சியும் பேரனும் நங்கைக்கு தெரியாமல் பார்த்து சிரித்து கொண்டனர். 

 

அன்று இரவு நங்கை வெளியே சென்று படுத்து கொண்டாள். 

 

“நீ ஏன்டி இங்க படுத்து இருக்க?”, என வர்மன் கேட்டான். 

 

“ஆம்பளைங்க மட்டும் தான் கோவம் வந்தா வெளிய போய் தூங்கணுமா? நாங்களும் தூங்குவோம்”, வெடுக்கென பதில் கொடுத்துவிட்டு திரும்பி படுத்து கொண்டாள். 

 

“நான் எப்ப அப்டி சொன்னேன்? நான் இன்னிக்கி போய் நல்லா கை கால் நீட்டி கட்டில்ல படுக்க போறேன்.. அப்பா மூணு மாசம் ஆச்சி நல்லா உருண்டு படுத்து.. இனிமே நீ அடிக்கடி கோவபட்டு இங்கயே படுத்துக்க.. நான் நல்லா உள்ள தூங்கறேன்.. குட் நைட்”, என கேலி பேசிவிட்டு உள்ளே சென்றான். 

 

“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லயா டா ?”, என நங்கை எழுந்து அமர்ந்து கேட்டாள். 

 

“உனக்கு இருக்கா ன்னு மொத கேட்டுக்க..” , என கூறினான். 

 

“நானா உன்ன வெளிய போன்னு சொன்னேன்?”

 

“இப்ப மட்டும் நானா உன்ன இங்க தூங்கா சொன்னேன்?”

 

“ஒரு பேச்சுக்கு கூட உள்ள வந்து தூங்குன்னு சொல்ல மாட்டியா டா?”

 

“நீ என்னிக்காவது என்னைய கட்டிபிடிச்சி தூங்கிக்கன்னு சொல்லி இருக்கியா?”

 

நங்கை அவனை முறைத்துவிட்டு போர்வையை போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். 

 

வர்மன் இதற்குமேல் இவளை இப்படியே விட்டாள் சரி வராது என்று எண்ணி அவளை அப்படியே தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். 

 

“என்ன விடு டா.. நீ ஒண்ணும் என்னைய தூக்கக்காத.. விடு “, என துள்ளினாள் நங்கை. 

 

“கொஞ்சம் சும்மா இரு டி.. மூணு மாசத்துல நல்லா குண்டு ஆகிட்ட.. எவ்ளோ கனம்.. யப்பா .. முதுகு புடிச்சிக்கும் போல..” , என அவளை கட்டிலில் தொப்பென்று போட்டான். 

 

“எரும.. எரும.. ஏண்டா இப்டி போட்ட ? “ ,என இடுப்பை பிடித்துகொண்டு அவனை அடித்தாள். 

 

“அடிக்காத டி பிசாசே .. வலிக்குது டி”, என அவனும் அவள் கைகளை பிடித்துக்கொண்டான். 

 

“விடு.. என் கைய விடு டா”, என கையை இழுத்து கொள்ள முயன்றாள். 

 

“ஏய் முத்து.. உனக்கு இப்ப என்ன டி வேணும்?”, என ஆழ்ந்து அவளை பார்த்து கேட்டான். 

 

“நீ தான் வேணும்.. நீ எனக்கு மட்டும் தான் வேணும்.. “, என பெண்ணவள் தன் மனதை அவனுக்கு தெரியபடுத்தினாள். 

 

வர்மன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான். மெதுவாக அவள் முதுகை தடவி கொடுக்க கொடுக்க நங்கை கண்களில் கண்ணீர் வழிந்து அவன் நெஞ்சை நனைத்தது. 

 

“என்னாச்சி முத்து?”, என இதமாக கேட்டான். 

 

“பயமா இருக்கு வர்மா.. என்மேல பாசம் காட்டற யாரும் என்னோட அதிக நாள் இருக்கறது இல்ல.. நீயும் ஆச்சியும் இவ்ளோ பாசம் குடுக்கறீங்க .. இது எப்பவும் எனக்கு வேணும்.. “, என கூறி விம்ம தொடங்கினாள். 

 

“பைத்தியம்.. நாங்க உன்ன விட்டு எங்க போக போறோம்? நீ எத்தன தடவ என்ன தொரத்தி விட்டும் உன்ன நான் கட்டிக்கலியா ? உனக்கு ஏன் இந்த பயம்?”, என கேட்டான். 

 

“நான் முன்ன வாழ்ந்தது அப்படி ஒரு வாழ்க்கை தா வர்மா.. என் ஒடம்புல இருக்க தழும்பு எல்லாம் இப்ப மறைஞ்சி இருக்கலாம் ஆனா மனசுல பதிஞ்ச காயம் எல்லாம் அப்படியே தான் இருக்கு.. உனக்கு நான் ஒண்ணுமே செய்யல.. உனக்கு ஒரு பொண்டாட்டிய எதுவும் நான் பண்ணவே இல்ல.. அதுவே எனக்கு குற்ற உணர்ச்சியா தான் இருக்கு..” ,என அவள் கூறியதும் அவன் கோபம் கொண்டு தள்ளி நிறுத்தினான். 

 

“நான் என்ன இங்க வியாபாரமா பண்றேன்? உனக்கு நான் இது எல்லாம் குடுத்து இருக்கேன் நீ உன்ன குடுக்க? அபத்தமா பேசாத முத்து.. நம்ம புருஷன் பொண்டாட்டி.. நமக்குள்ள நடக்கற எதுவும் நமக்குள்ள இருக்க அன்புனாலையும், நேசத்துனாளையும் மட்டும் தான் நடக்கணுமே தவிர வியாபார பண்ட மாற்று முறையா இருக்க கூடாது… உன்ன நான் ஏதாவது நிர்பந்தம் பண்றேனா முத்து?”, என கேட்டான். 

 

“இல்ல வர்மா.. உன்னால தான் இப்ப வரை ரெண்டு பெரியவங்களும் என்கிட்ட இதபத்தி ஒரு வார்த்தை கூட கேக்கறது இல்லன்னு  எனக்கு தெரியும்…”

 

“நான் சொன்னதால இல்ல முத்து. அவங்க ரெண்டு பேருமே என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா? நீ என்மேல நேசம் வச்சி தான் குடும்பம் நடத்த வாராணுமே தவிர கடமைக்காக வரக்கூடாது.. அப்ப தான் நீ உன் வாழ்க்கைய உணர்ந்து நமக்காக வாழ்வ ன்னு  சொன்னாங்க.. எனக்கு உன்ன ஏன் பிடிச்சதுன்னு இப்ப வரை தெரியாது.. என்கூட இருக்கறப்ப நீ நீயா இருக்கணும். அவளோ தான்.. உனக்கு எப்ப நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்ன்னு தோணுதோ அப்பா ஆரம்பிச்சா போதும்.. உன் மனச போட்டு கொழப்பிக்காத..” , என கூறி தன் கைவளைவில் படுக்க வைத்து கொண்டான். 

 

அன்றில் இருந்து ஒரு வாரம் கழித்து நங்கை வரமனை குலதெய்வ கோவில் செல்ல அழைத்தாள். 

 

“எனக்கு வேல இருக்கு முத்து. நீயே போயிட்டு வந்துரு” , என கணக்கு நோட்டை பார்த்தபடி கூறினான். 

 

“நானே தனியா போக எனக்கு தெரியாதா? உன்ன ஏன் கூப்பிட்டுட்டு இப்டி நிக்கறேன்… இன்னிக்கி நல்ல நாளாம்.. இன்னிக்கி வாழ்க்கைய ஆரம்பிச்சா நூறு வருஷம் ஒண்ணா இருப்பாங்கலாம்.. கூனி ஆச்சி சொல்லிச்சி.. இனிமே உன் இஷ்டம்..” ,என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். 

 

“ஏய்.. ஏய் .. நில்லு டி .. வரேன் இரு” ,என வண்டி சாவியை எடுத்துகொண்டு வந்தான். 

 

“குலதெய்வ கோவிலுக்கு தனியா எல்லாம் போககூடாது.. நானும் கூட வரேன்..” , என புல்லட்டை உதைத்தான். 

 

“ஹலோ வர்மன்.. நான் கூப்ட அப்பவே வந்து இருந்தா அந்த வண்டில ஏறி இருப்பேன்.. இப்ப என் வண்டில ஏறுங்க”, என கண்ணாடி அணிந்து கொண்டு கூறினாள். 

 

“உன்கூட வரணும்.. எதுல போனா என்ன?” ,என அவனும் கண்ணாடி அணிந்து மனைவியின் பின்னால் அமர்ந்து கொண்டு அவள் இடுப்பை கட்டிக்கொண்டான். 

 

“டேய் .. கை எடு டா”

 

“முடியாது டி என் கோவபழமே ..”

 

“நீ என்னய வண்டி ஓட்ட விடமாட்ட..”

 

“நான் ஒண்ணுமே பண்ணல.. நீ வண்டி ஓட்டு “, என சிரித்தபடி கூறினான். 

 

ஊரே வர்மன் மனைவியின் பின்னால் அமர்ந்து செல்வதை வேடிக்கை பார்த்தது. 

 

நங்கை மனமும் முகமும் மலர்ந்து கோவிலில் தங்களது நல்வாழ்விற்கு மனதார வேண்டிக்கொண்டாள். 

 

அன்று இரவு இருவரும் தங்களின் வாழ்வில் அடுத்த நிலையை அடைந்தனர். அழகான இல்லறம் நடந்து கொண்டு இருந்தது. சண்டையும் சமாதானமும், ஏட்டியும் போட்டியுமாக இருவரும் தங்களது வாழ்வை ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ்ந்து கொண்டு இருந்தனர். 

 

ஒரு மாதம் சென்ற நிலையில் காமாட்சி பதறிய படி ஏகாம்பரத்தை அழைத்தாள். 

 

“ஏங்க.. நம்ம பையன் .. நம்ம பையன போலீஸ் கைது பண்ணிட்டாங்கலாம் ங்க.. இப்ப வீட்டுக்கு ஃபோன் பண்ணாங்க “, என கூறினார். 

 

“என்ன சொல்ற காமாட்சி? அவன எதுக்கு கைது பண்ணனும்? இன்னிக்கி ஸ்கூலுக்கு தானே போனான்?”, என அவரும் பதறி கேட்டார். 

 

“காலைல எப்பவும் போல தாங்க கெளம்பி போனான்.. என்ன ஆச்சின்னு தெரியலங்க.. சீக்கிரம் நீங்க போய் என்னனு பாருங்க..” ,என அழுதபடி கூறினார். 

 

“நான் போய் பாக்கறேன்.. “, என கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார். 

 

“யாருய்யா நீ?”, என ஒரு கான்ஸ்டபிள் கேட்டார். 

 

“என் பையன கைது பண்ணதா ஃபோன் வந்துச்சிங்க .. “

 

“உன் பையன் பேரு என்ன?”

 

“ராஜன் ங்க”

 

“அவன் அப்பனா நீ ? என்னய்யா பையன வளத்து வச்சி இருக்க ? சரியான கஞ்சா பொறுக்கியா இருக்கான்.. படிக்கற வயசுல போதை மருந்து போட்டுக்கிட்டு , கூட படிக்கற பசங்களுக்கும் குடுத்து இருக்கான்.. போ அங்க ஒக்காரு “

ராஜன் மயங்கிய நிலையில் ஒரு மூலையில் கிடந்தான். அவனை கண்ட ஏகாம்பரம் பதறி அவன் அருகில் சென்றார். 

 

“ராஜா.. ராஜா.. உனக்கு என்னடா ஆச்சி?”, என அவன் கண்களை திறக்க முயற்சி செய்தார். 

 

“யோவ்.. நீ ஏன் அங்க போற? போய் அங்க இரு.. இன்ஸ்பெக்டர் வந்த அப்பறம் பேசிக்க”

 

“ஐயா.. என் பையன் அப்படி எல்லாம் இல்லைங்க .. யாரோ அவனுக்கு குடுத்து இருப்பாங்க.. அவன விற்றுங்க ஐயா” ,என கண்ணில் நீர் வழிய கெஞ்சினார் ஏகாம்பரம். 

 

“அப்படி இல்லயா ? ஒரு பொம்பள புள்ளைக்கி இன்னிக்கி வாய்ல வலுக்கட்டாயமா போட்டு அந்த பொண்ணு இப்ப மூச்சு பேச்சு இல்லாம இருக்கு.. அதுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி உன் பையன கொலை கேஸ் ல தான் உள்ள போட போறோம்.. ஒழுங்கா அங்க போய் ஒக்காரு.. பசங்கள ஒழுங்கா கண்டிச்சி வளக்க துப்பில்ல உனக்கு .. நீ எல்லாம் என்ன பெரிய மனுஷன்?”

 

“ஐயா.. என் பையன் அப்டி எல்லாம் செஞ்சி இருக்க மாட்டான் ஐயா.. அவன விற்றுங்க..”, என கெஞ்சினார். 

 

“எதுவா இருந்தாலும் இன்ஸ்பெக்டர் வந்த அப்றம் தான் பேச முடியும் .. அங்க போ “

 

இன்ஸ்பெக்டர் வந்ததும் ஏகாம்பரம் ஓடி சென்றார். 

 

“ஐயா .. ஐயா ..”

 

“யாருய்யா நீ?”, இன்ஸ்பெக்டர். 

 

“அந்த பையன் ராஜன் ஓட அப்பன்”

 

“ஓ.. என்னய்யா புள்ளய வளத்து இருக்க? சரியான பொறுக்கியா இருக்கான்.. இந்த வயசுல போத அடிக்கறான் .. என்ன வேல பண்ற நீ?” 

 

“நான் சூப்பர் மார்க்கெட் வச்சி இருக்கேன் ஐயா”

 

“அதுல போத மருந்து தான் விக்கறியா ?”

 

“இல்லைங்க ஐயா.. ஐயா.. என் பையன் அந்த மாதிரி  இல்லைங்க.. “

 

“என்ன இல்ல.. நீ சொன்னா நான் நம்பனுமா ? ஏற்கனவே உன் பையன் போத அதிகமாகி ஹாஸ்பிடல்ல சிகிச்சை எடுத்த எவிடெண்ஸ் இருக்கு.. இப்ப ஸ்கூல் அவன் கூட படிக்கற பசங்க பொண்ணு ணு எல்லாருக்கும் கட்டாயம் பண்ணி குடுத்து இருக்கான், அதுல ஒரு பொண்ணு இப்ப சீரியசா இருக்கு தெரியுமா? உன் பையன எல்லாம் வெளிய விட முடியாது. அந்த பொண்ணு மொத கண்ணு முழிச்சா தான் எதுவும் சொல்ல முடியும்.. போய் அடுத்து ஆகற வேலைய பாரு” ,என அங்கிருந்து அவரை துரத்தி விட்டனர். 

 

ஏகாம்பரம் திரும்ப வந்து வக்கீலை அழைக்க யாரும் அவருக்காக வாதாட முன் வரவில்லை. அதற்குள் ஊரில் விஷயம் தீயாக பரவி, விஷயம் வர்மன் காதுகளிலும் எட்டியது. 

 

“அந்த ஆளு வளப்பு நல்லா வேலை காட்டுது மாப்ள.. என்ன பண்றாங்கன்னு பாக்கலாம். நீ எதுக்கும் நம்ம வக்கீல் கிட்ட சொல்லி வை”, என கூறிவிட்டு தேவராயனை காண சென்றான். 

 

“வா வர்மா.. நானே உன்ன கூப்பிடலாம் ன்னு இருந்தேன்.. விஷயம் தெரிஞ்சி தானே வந்து இருக்க?”

 

“ஆமா ராயா.. நீ எனக்கு ஒரு விஷயம் பண்ணனும்..” ,என ஆரம்பித்து தேவராயனிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 

 

“நான் செஞ்சிடறேன்.. நீ வீட்டுக்கு கெளம்பு”, என தேவராயன் அனுப்பிவைத்தான். 

 

அன்றும், அடுத்த நாளும் ஏகாம்பரம் எங்கு அழைத்தும் எந்த வக்கீலும் இவருடன் வர ஒத்துழைக்கவில்லை. கடைசியில் பள்ளி நிர்வாகத்திடம் சென்று நின்றார். 

 

“உங்க பையனால இப்ப எவ்ளோ பிரச்சனை நடந்துட்டு இருக்கு தெரியுமா ஏகாம்பரம்? அன்னிக்கி நான் கேட்டப்ப நீங்க சொன்ன பதில் என்ன? இன்னிக்கி எங்க வந்து நிக்க வச்சி இருக்கு பாத்தீங்களா? பசங்க வளர முழு பொறுப்பு நம்ம தான். எங்க கண்டிக்கணுமோ அங்க கண்டிக்கணும். அப்டி செய்யலன்னா இப்டி தான் கஷ்டபடணும். உங்களுக்கு நான் எந்த விதத்துழையும் உதவ முடியாது” ,என தலைமை ஆசிரியர் கூறிவிட்டார். 

 

“உங்க ஸ்கூல் ல இருந்து தான் என் பையனுக்கு அது கெடச்சி இருக்கு .. நீங்க தான் இதுக்கு முழு பொறுப்பு. நான் உங்க மேல தான் கேஸ் போடுவேன்”, என மிரட்டினார். 

 

“ஹாஹாஹா .. என்ன ஏகாம்பரம் ஐயா.. என்ன பேசறீங்க ? உங்க பையன் தான் எங்க ஸ்கூல் குள்ள போத மருந்த கொண்டு வந்தது. அதுக்கு ஆதாரம் எல்லாம் சரியா இருக்கு.. நீங்க எங்க போய் எங்க மேல கேஸ் போட்டாலும் எதுவும் நிக்காது. உங்க பையன் தான் இதுக்கு முழு பொறுப்பு” ,என கூறியபடி தேவராயன் வந்தான். 

 

ஏகாம்பரம் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக நின்றார். பின் கை கூப்பி, “ எனக்கு என் பையன் வேணும்.. ஏதாவது உதவி பண்ணுங்க..” ,என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். 

 

“நாங்க எதுவும் பண்ண முடியாது. எங்க ஸ்கூல் ல இருக்க இன்னொரு ஓனர் ஒத்துகிட்டா ஏதாவது முயற்சி பண்ணலாம்” ,என தேவராயன் கூறினான். 

 

“யார் அவங்க? சொல்லுங்க.. அவங்க கால்ல விழுந்து நான் கேக்கறேன்”

 

“உங்க மருமகன்.. அதாவது நங்கை புருஷன் மிஸ்டர். சிம்ம வர்மன்.. “

 

“அவனா ..” , என மலைத்து நின்றார். 

 

“அவரு மட்டும் தான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்.. நீங்க அவர போய் பாருங்க..” , என கூறிவிட்டு தேவராயன் கிளம்பிவிட்டான். 

 

ஏகாம்பரம் என்ன செய்வது என்று புரியாமல் வீட்டிற்கு வந்தார். 

 

“என்னங்க சொன்னாங்க? நம்ம பையன எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்க?” என காமாட்சி அழுகையுடன் கேட்டார். 

 

“அந்த நங்கை புருஷன போய் பாக்கணும் காமாட்சி.. அவன் நெனைச்சா மட்டும் தான் நம்ம பையன காப்பாத்த முடியுமாம்..” ,என கூறி தலை குனிந்து அமர்ந்தார். 

 

“அப்படின்னா வாங்க.. ஒடனே போலாம்.. மாப்ள கிட்ட கேக்கலாம்.. நம்ம பொண்ணு கண்டிப்பா தம்பிய காப்பாத்துவா ..”, என வேகமாக கிளம்பினார். 

 

“எனக்கு நம்பிக்கை இல்ல காமாட்சி”

 

“என் பொண்ண பத்தி எனக்கு தெரியும்ங்க.. வாங்க போலாம்.. பையன் ஜெயில் ல என்ன என்ன கஷ்டப்படறானோ தெரியல” ,என கணவனை கிளப்பி கொண்டு நங்கை இல்லம் வந்தார். 

 

வாசலில் அவர்களை கண்ட நீலா ஆச்சி உள்ளே அழைத்து அமரவைத்து நங்கையை அழைத்தார். 

 

“எங்க வந்தீங்க ?” ,என தன்னை பெற்றவர்களை பார்த்து கேட்டாள். 

 

“உன் தம்பிய போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்க தமிழு.. மாப்ள கிட்ட சொல்லி அவன காப்பாத்த சொல்லு டி.. “ ,என காமாட்சி அழுகையுடன் கூறினார். 

 

“என்ன சொன்னீங்க?” ,என மெல்லிய சிரிப்புடன் கேட்டாள். 

 

“உன் தம்பிய போலீஸ் பிடிச்சிட்டு போயிட்டாங்க டி.. நீ என்ன சிரிக்கர ?” ,என கோபத்துடன் கேட்டார். 

 

“ஆவண பிடிச்சிட்டு போனதுக்கு நான் என்ன செய்யறது? அவனுக்கு பதிலா என்னைய ஜெயில்ல போடுங்க.. அவன் சின்ன பையன் ன்னு சொன்னா அவங்க ஒத்துக்குவாங்களா?” ,என கேட்டாள். 

 

“நங்கை” ,என ஏகாம்பரம் கத்தவும், அவரை கை நீட்டி அமைதியாக கூறிவிட்டு, “ இப்ப மட்டும் ஒரு பொட்ட கழுத கிட்ட உதவி கேட்டு எப்டி வந்தீங்க ?”, என அவரிடமும் கேட்டாள். 

 

“தமிழு.. அவன் உன் தம்பி டி ..” ,என மீண்டும் காமாட்சி கூறினார். 

 

“நீங்க என்னைய உங்க பொண்ணா பாக்காதப்ப நான் எப்டி அவன தம்பியா பாக்கறது?” 

 

அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தனர். இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென இருவருக்கும் தெரியவில்லை. இந்த நொடி இருவரும் தங்களை தானே கேவலமாக உணர்ந்தனர். 

 

“உங்க பையன் செஞ்ச தப்பு எவ்ளோ பெருசுன்னு இன்னும் தெரியல அதான் இப்டி இங்க வந்து நிக்கறீங்க .. நானோ என் புருஷனோ எதுவும் பண்ண முடியாது..” , என கூறினாள். 

 

“முத்து.. என்ன பேசிட்டு இருக்க? அத்த .. வாங்க போலீஸ் ஸ்டேஷன் போலாம்” , என கூறி இருவரையும் அழைத்து கொண்டு ராஜனை வெளியில் எடுக்க சென்றான் வர்மன். 

 

ஒரு வாரம் அலைந்து திரிந்து, ராஜனை வழக்கில் இருந்து விடுவித்து, மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்டு தான் ஓய்ந்தான். 

 

நங்கை அதற்கு கோபம் கொண்டு அவனிடம் முகம் கொடுத்து பேசாமல் சுற்றி கொண்டு இருந்தாள். 

 

“ஏய் கோவபழம் .. என்ன டி சும்மா மொறைச்சிகிட்டே இருக்க.. நான் என்ன பண்ணிட்டேன் இப்ப?”, என அவளை இழுத்து வைத்து கேட்டான். 

 

“பண்றது எல்லாம் பண்ணிட்டு என்னைய என்ன கேக்கற? அதான் உன் மாமனாருக்கு எல்லா சேவகமும் செஞ்சிட்டியே.. இன்னும் என்ன இருக்கு?”, என எரிந்து விழுந்தாள். 

 

“என்ன வேணா இருக்கட்டும்.. இதுல நம்ம தான் கூட நின்னு ஆகணும். அவன் வளந்த விதம் தான் அத்தனைக்கும் காரணம். அத அவங்க உணர்ந்த அப்பறம் தண்டிக்கறது நம்ம வேல இல்ல முத்து.. அவங்க செஞ்சதுக்கு அவங்க அனுபவிக்க ஆராம்பிச்சிட்டாங்க .. நம்மலாள செய்ய முடிஞ்சது நான் செஞ்சிட்டேன்.. இனிமே அவங்க வாழ்க்கை அவங்க பாத்துக்கட்டும் ..”, என கூறினான். 

 

நங்கை அரைகுறை மனதோடு அவன் சொன்னதை ஒப்புக்கொண்டு தன் வேளையில் கவனம் செலுத்தினாள். 

 

ராஜன் இப்போது தன் தவறை உணர தொடங்கி இருந்தான். ஏகாம்பரமும், காமாட்சியும் கூட தங்கள் தவறை உணர்ந்து, இது நாள் வரை செய்த பாவத்திற்கு நங்கைக்கு பரிகாரம் செய்ய நினைத்தனர். ஆனால் நங்கை அவர்களின் உறவே வேண்டாம் என்று கூறிவிட்டதால் யாரும் அவளை கட்டாயபடுத்தவில்லை. 

 

“இனிமே எந்த உதவி தேவை பட்டாலும் சொல்லுங்க நாங்க செய்வோம்.. ஆனா முத்த நாங்க எதுக்கும் கட்டாய படுத்தமுடியாது.. “, என நீலா ஆச்சியும் முடிவாக கூறி விட்டார். 

 

அதன்பின் வந்த நாட்களில், வேல்முருகன் வினிதா திருமணம் வர்மன் தலைமையில் விமரிசையாக நடந்தது. வட்டிக்கும் ஒரு பெண்ணை பார்த்து பேசி முடித்து இருந்தாள் நங்கை. 

 

தேவராயன் பானு தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருந்தது. நங்கை தன் நீலா ஆச்சி மற்றும் வேம்பு பாட்டியுடன் பேசியபடி அமர்ந்து இருப்பதை வர்மன் தன் கைபேசியில் படம் பிடித்து கொண்டான். 

 

“வலுசாறு இடையினில்”, என்னும் பெயர் போட்டு வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தான் வர்மன்.. 

 

வலுசாறுகளின் இடையினில் ஆழமான அன்பு வளர்கிறது.. 

 

சுபம். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
18
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  6 Comments

  1. Archana

   ரொம்பவே அழகா முடிச்சுட்டீங்க செவன் ஷாட்😍😍😍😍😍டீசர்ல வந்ததையும் நல்லவேலை சேர்த்துட்டீங்க, இல்லனா மண்டை காஞ்சுருக்கும்😝😝😝 அந்த வேணி பத்தி சொல்லவே இல்ல அது மட்டும் தான் எதுக்கு இப்படி செஞ்சா, ஏன் வயச மறைச்சான்னு கேள்வியாவே இருக்கு 😁😁😁 மத்தபடி இப்படி ஒரு அழகான படைப்புக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

   1. Seven shot
    Author

    Adhu thani kadhaiya future la varum archu baby… Thank u so much for the wonderful support😍😍😍😍😍

  2. kanmani raj

   கிராமத்து கதைக்களத்தை எடுத்துக் கொண்டு படிப்பு ஒரு சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி அழகான ஒரு கதையை கொடுத்ததற்கு பாராட்டுகள் சகி.

   கதை முழுக்க ஒரு முரட்டு தனமுடைய மனிதர்களை பற்றி கூறி இருந்தாலும் பலாப்பழத்தை போல சில இடங்களில் அவர்களின் மென்மையான குணங்களையும் அருமையாக காட்டியிருந்தீர்கள். முள்ளை முள்ளால் எடுப்பது போல சிம்மனின் குண இயல்பை கொண்டே மனதிற்கு பிடித்தவளை அடைந்து விட்டான்.

   கடும் வெயிலில் கால் கடுக்க நடப்பதுபோன்ற வாழ்வில் இருந்து இளைப்பாறுதலாய் நங்கைக்கு திருமண வாழ்வு கிட்டி விட்டது. துணை கதாப்பாத்திரங்கள் அனைவரும் மனதை ஈர்த்தனர்.

   மொத்தத்தில் பெண்ணை பாரமாக நினைக்கும் ஒரு சாரருக்கும், அவளை போற்றி கொண்டாடும் இன்னொரு சாரருக்கும் நடுவில் இந்த வலுசாறு இடையினில் சற்றே இனிப்பை கொடுக்கிறது.
   வெற்றி பெற வாழ்த்துகள் சகி..💐💐💐

  3. 9தானிய பொங்கல்

   காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் …….
   ஆனாலும்…..
   இந்த ஆண் பெண் பேதம் எப்ப தான் பெற்றோர்களிடம் மாற போகிறதோ……
   படித்தவர் படிக்காதவர் னு இன்னும் சிலர் இப்படி தானே இருக்காங்க……

   இப்படி எண்ணம் கொண்ட பெற்றோருக்கு பிறந்து சாதிக்க துடிப்பவள் முத்தமிழ்….

   ஆண் பிள்ளைகளை உயர்த்தி பேசும் குடும்ப வாரிசு…. நம்ம ஹீரோ சிம்மன்…

   இந்த வாரிசுகள் இணையுமா🤔 எப்படி🤔
   எப்ப பாரு தமிழ்ழ சீண்டும் சிம்மா காதலித்து கரை சேருவானா……..🤔
   (நான் சொன்னா shot எனக்கு விழும்😉😉😊)

   இப்படிப் பட்ட பொற்றோர்களினால்…. பெண் பிள்ளைகள் படும் கஷ்டத்தையும்……. ஆண் பிள்ளைகள் சீரழியும் விதத்தையும் சில பல திருப்பங்களுடன்…. விறுவிறுப்பா தந்த நம்ம seven shotக்கு வாழ்த்துக்கள்