3.🌺🌺 தாழம்பூவே வாசம் வீசு🌺🌺
புடவை மயில் கழுத்து கலர் அங்கங்கே மயில்களின் இறகுகளால் செய்யப்பட்டது போன்று இருந்தது.
நடுவில் சிறு சிறு கற்கள் என ஜொலிக்க புடவை கட்டி விட்ட பிறகு வானத்திலிருந்து தேவதை இருந்தது போல் ஜொலித்தாள்.
விழாவிற்கு வந்த பெண்கள் அனைவரும் புடவை பற்றியே பேச பேச அந்த ஜீவா பய நெய்ததாம் அந்த புடவையை எவ்ளோ அழகா செஞ்சிருக்கான் பாரேன் என்று அனைவரும் புடைவையை பற்றி ஜீவா பற்றியும் பேச இத்தனை நாட்களாக ஜீவாவை பார்க்காத ஏக்கம் மோதிக் கொண்டது.
பங்க்சன் எப்பொழுது முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் அம்மா அத்தை வீட்டுக்கு போறேன் என பெரிய புள்ளஆயிட்ட ஹாசினிமா அதிகமா வெளிய எங்கேயும் போகக்கூடாது என பருப்பு பாயசம் ஜீவாவுக்கு ரொம்ப பிடிக்குமா குடுத்துட்டு வந்துடுறேன்.
அவள் புடவையை கழட்டி வைத்துவிட்டு போடி என கொடுத்துட்டு வந்து விடறேன் என்று ஓடினாள்.
வெளியூரில் ஒரு திருமணத்திற்காக சென்றிருக்க வீட்டினை சும்மா கதவை சாத்தி விட்டு வீட்டினுள்ளே இருந்தான் ஜீவா.
உள்ளே தனது அறையில் புத்தகத்தினை அடுக்கிக் கொண்டிருந்தான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள் சமையல் அறையில் சென்று பாயசம், வடை வைத்தவள்,
மெல்ல ஒவ்வொரு அறையாக கொலுசு வளையல் சத்தம் கேட்கக்கூடாது என்று பொறுமையாக ஒவ்வொரு அறையாக சென்று கொண்டிருந்தாள் பத்து நாட்கள் ஜீவாவை பார்க்காது ஏக்கம் அவளைப் பார்த்ததும் சந்தோஷத்தில் பின்னால் ஓடி வந்து ஜீவா என்று கூறி கட்டிக்கொண்டாள்.
ரசாயன மாற்றம் இருவரின் உள்ளும் நிகழ இவளோ இதுவரைக்கும் ஜீவாவை எத்தனையோ முறை இப்படி கட்டிருக்க மே என்று ஒரு மாதிரி தோன்ற விலகி நின்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஹாசினிமா பெரிய பிள்ளையா ஆயிட்டீங்க இப்படி எல்லாரையும் தொட்டுப் பேசக் கூடாது என்றான்.
போ ஜீவா அம்மா தான் சொல்றாங்கன்னா நீயும் தான் சொல்றே என்று கூறியவள்.
ஜீவா இந்த புடவை எப்படி இருக்கு என்று கேட்க சூப்பரா இருக்கு என்று கூறினான். பங்க்ஷன் வந்தவங்க எல்லாம் உன்னதான் பாராட்டி சொல்லிக்கிட்டு இருந்தாங்க புடவை சூப்பரா இருக்கு என்று.
ஆமா ரொம்ப லக்கிதான் இல்ல புடவை நெய்யும் போது இப்படி செஞ்சா நல்லா இருக்கும் அப்படி செஞ்சா நல்லா இருக்கும்னு யோசிச்சுகிட்டு செய்வாங்க.
ஆனால் தான் செய்த புடவையை யார் கட்டுவாங்க கூட நெய்பவர்களுக்கு தெரியாது. ஆனால் நா ரொம்ப லக்கி செஞ்ச முதல் தடவை நீ கட்டிவந்து நான் பார்த்து இருக்கேன் என்று கூறி சிரித்தான்.
தாழம்பூ வைத்து இருக்கியா என்று கேட்க ஆமாம் ஜீவா வாசனையா இருக்கு என்றான்.
வீட்டுக்கு போ வீட்டுல வேற யாருமே இல்லை என்று கூறினான்.
சமையலறைக்கு சென்றவள் ஒரு டம்ளரில் பருப்புபாயாசம் ஊற்றி வந்து கொடுத்தாள்.
ஜீவா நீ குடி நான் போறேன் என நான் குடிக்கிறேன் நீ மொதல்ல கெளம்பு என்று அவளை அனுப்பி வைத்தான்.
ஒரு வாரம் ஓடியது ஒரு நாள் இரவு சத்தியமூர்த்தி நெஞ்சு வலி வர அவரை மருத்துவமனைக்கு சென்று சேர்த்தனர்.
பல லட்சங்கள் செலவழித்து அவரை காப்பாற்ற முடியாமல் இறந்து போனார்.
அனைவரும் மனம் உடைந்துபோய் நாட்கள் செல்லச் செல்ல வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்தார் ஹாஸசீனியின் அப்பா.
திடீரென கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி வீட்டு வாசலில் வந்து நிற்க செய்வதறியாது தவித்த வர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த ஜீவா அம்மா ஏதோ பிரச்சினை போலாமா என்று கூற ஜீவாவும் காமாட்சியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
என்ன என்று விசாரிக்க கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் போனதை பற்றி கூறினார்.
பிறகு இரண்டு வீட்டினரும் அமர்ந்து பேசி புடவையை கடையை தறி அனைத்தையும் விற்பது என முடிவு செய்தனர்.
பிறகு அவர்களிடம் தங்களுடைய பணத்தை ஒரு மாதத்திற்குள் கொடுத்து விடுகிறோம் என்று வாக்கு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
கடை தறிகள் அனைத்தும் விற்கப்பட்டது வந்த பணத்தில் சமமாய் பிரித்துக்கொண்டனர். ஜீவாவின் அப்பாவிற்காக செலவு போக மீதி ஒரு குறிப்பிட்ட அளவு பணம் இருந்தது.
என்ன செய்வது மீண்டும் இருவரும் சேர்ந்து ஏதாவது பிசினஸ் பண்ணலாமா என்று கேட்டார் ஹாசினியின்அப்பா ஜீவா வேண்டாமென மறுத்து விட்டான்.
வேணாம் மாமாநாங்க ஊருக்கு போறோம் பாட்டி வீட்டுக்கு போறோம்.
ஜீவா அப்பாவும் நானும் சேர்ந்து தான் செய்வோம் என்று கூற மாமா எங்க கஷ்டம் எங்களோட போகட்டும் நாங்க ஊருக்கு கிளம்புறோம்.
ஜீவாவும் காமாட்சியும் ஒரே போல கூற ஊரை விட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள்.
உங்களையும் எங்க கெட்ட நேரம் உங்களையும் வந்து இப்படி கொண்டு வந்துவிட்டது என.
ஜீவா வீட்டில் காமாட்சி அமர்ந்திருக்க ராஜீவ் ஹாசினியும் ஒன்றாக வீட்டிற்கு வந்தார்கள்..
அத்தை எங்கேயும் போக வேணாம் அத்தை நம்பலாம் ஒண்ணா இருக்கலாம் என்றனர் ஜீவா பிடிவாதமாய் மறுத்து விட்டான்.
அடுத்த நாள் ஹாசினி ஜீவாவினை தேடிக் கொண்டே வீட்டிற்கு வர ஜீவா.
மனசு சரியில்லை என்று மலை மீது இருக்கும் சர்ச்சுக்கு சென்றிருந்தான்
ஜீவாவை தேடிக் கொண்டு ஓடினாள் ஹாசினி.
அங்கிருந்த கம்பியை பிடித்துக் கொண்டு தூரமாக இருந்த மலையே பார்த்து நின்று கொண்டிருந்தான் ஜீவா.
ஜீவாவின் அருகில் வந்தவள் அவன் கையினுள் தனது கையினை கோர்த்துக் கொண்டாள்.
அவன் தோளின் மீது தலை சாய்த்து சாய்த்து ஜீவா எங்கேயும் போகாத ஜீவா என நீயும் அத்தையும் இல்லாம நானும் அண்ணாவும் எப்படி இருப்போம் நீ போகாதே என்றாள்.
நான் மட்டும் உங்க ரெண்டு பேரும் இல்லாம எப்படி இருப்பேன் ஹாசினிமா தெரியாதா ஏற்கனவே எங்களது குடும்பத்திற்கு எவ்ளோ கஷ்டம் என்று கூற.
அவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.ஹாசினியை தேற்ற முடியவில்லை அவனையே தேற்றுவார் இன்று நின்று கொண்டிருந்தான்.
நல்லா படிக்கணும் யாரையும் டக்கென்று நம்பிவிடக்கூடாது ராஜீவ் கூட இருக்கணும் ஹாசினிமானா ஸ்பெஷலா இருக்கணும் சரியா என மெதுவாக தலையை ஆட்டினாள்.
போலாமா என அவனின் கையில் பிடித்து முத்தமிட்டாள் ஜீவா நீ எப்ப வருவ என்று கேட்க சர்ச்சுக்கு வருவேன் ஹாசினிமா என்று அவளின் கண்ணீரை துடைத்து அவளை அழைத்துக்கொண்டு வந்தான்
ஒரு பாதாம் பழத்தை அவன் கையில் கொடுக்க சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டான்.
இரண்டு குடும்பமும் அந்த ஊரை விட்டு வெளியேறினர். தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார் அசுர வளர்ச்சி அடைந்தனர் ஹாசினியின்பெற்றோர்.
ஜீவாவும் தன்னிடமுள்ள பணத்தை வைத்து சிறிதாக தறி ஆரம்பித்தவன் தற்போது பட்டு மஹால் வைக்கும் அளவிற்கு உயர்ந்து நின்றான். ஹாசினியின் அப்பாவும் எங்கெங்கு தேடியும் ஜீவாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஹனிமா என்ன போட்டோவே பாத்துட்டு இருக்கே என்று கேட்க இல்ல இவற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று கூறினாள்.
ஒருவாரம் ஓடியது.அவள் வந்தது ஜீவாவையும், அத்தையும் பார்க்கவே.
அன்று விடுமுறை என்பதால் இன்னைக்கு லீவு தானே நான் இன்டீரியர் டெக்கரேஷன் முடித்திருக்கிறேன். நான் கொஞ்சம் வீட்டை மாற்றம் செய்ய ட்டா என உன் விருப்பம் ஏதாவது பண்ணு என்றார்.
மாலைக்குள் ஸ்கிரீன் கிளாத் சோபா என அனைத்தையும் மாற்றி வைத்தாள். இதுக்கு தான் வீட்ல ஒரு பொம்பள புள்ள இருக்க வேண்டும் என்பது என்று நினைக்க அவருக்கு ஹாஸினி நினைவுதான் வந்தது.
நான் படுக்கிறேன் என்று தனது அறையில் படுக்க விஜி நானும் தூங்குகிறேன் என்று அவளின் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.
இது தான் தருணமென்று ஜீவாவின் அறையினுள் நுழைந்தாள் முதன்முதலாய் ஜீவாவின் போட்டோவை கையில் எடுத்தாள்.
கம்பீரமாய் சிரித்துக்கொண்டிருந்த ஜீவாவின் போட்டோவை எடுத்து அழுந்த முத்தமிட்டவள் ஐ லவ் யூ ஜீவா என்று கூறி போட்டோவை வைத்து விட்டு வெளியே வந்தாள்.
இரவு பத்து மணி இருக்கும் வீட்டில் காலிங் பெல் ஒலிக்க நான் போகிறேன் ஆன்ட்டி என்று வெளியே சென்றவள்., ஜீவா உள்ளே நுழைந்தான்
. ஹைட் அண்ட் வெய்ட்டா தலையணை கோதிக் கொண்டே உள்ளே நுழைந்து அவனைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஜீவா ஏதும் சொல்லாம வந்து இருக்க என்று கேட்க ஒன்னும் இல்லம்மா ஒரு அவசர வேலை என்று கூறினான் .
சாப்பிட்டாயா என்று கேட்க இல்லம்மா என்றான்.
கிச்சனுக்குள் நுழைந்தவள் உணவினை எடுத்து வந்து டேபிள் மீது வைத்தாள்.
மா வீட்டில இருப்பாங்க அக்கா வரலையா என்று கேட்க இல்லப்பா குழந்தைக்கு உடம்பு சரி இல்ல இவங்க ரெண்டு பேரும் இருக்கிறார்களே அப்படி என்று நான் தான்பா வர வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று கூறினார்.
டிபன் எடுத்து வந்தவள் அவளின் முகத்தை கூட பார்க்க வில்லை தேங்க்ஸ் என்று கூறினான்.
ஹாலில் வந்து அமர்ந்து சிறிது நேரம் டிவி ஆன் செய்தவன் வீடு மாறி இருப்பதை பார்த்தான்.
நீங்க போய் படுங்க அம்மா என்றவன். தண்ணீர் குடிக்கலாம் என்று கிச்சனுக்குள் வந்தவன் தட்டில் அவன் மீதிவைத்து இருந்த உணவினை ஒரு வாய் எடுத்து சாப்பிடுவதை பார்த்துவிட்டு அவன் அப்படியே முறைத்துக்கொண்டு கால்களைப் பின்னோக்கி சென்றது.
தன் அறைக்குச் சென்றவன் பார்வை போட்டோவில் பதிய அதில் முத்தமிட்டு இருந்த தடம் தெரிந்தது லிப்ஸ்டிக். பல்லைக் கடித்துக் கொண்டு அங்கிருந்த கம்பியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
இது எதுவும் அறியாத ஹாசினி பால் எடுத்துக் கொண்டு வந்து டேபிள் மீது வைக்க உங்க பேர் என்ன என்று கேட்க அவள் வாயைத் திறப்பதற்கு முன் ஏதாவது இருந்துட்டு போகுது.
நாளை காலையில் வீட்ல இருக்க கூடாது நீங்க எங்காவது போங்க என்றான்
சாரி தப்பா எடுத்துக்காதீங்க அம்மா என்ன பத்தி ஏதாவது அதிகமா பேசி இருப்பாங்க நினைக்கிறேன்,.
அதனால்தான் உங்களுக்கு என்ன பிடிச்சிருச்சு என்று கூறியவன் போட்டோவை எடுத்து காண்பித்தான் அடுத்தது ஏன் நான் சாப்பிட்டு மீது வைத்து உணவினை தட்டில் சாப்பிட்டீங்க ப்ளீஸ் அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்தால் மறந்துடுங்க என்ன யாரு நான் யாரு நல்லவனா கெட்டவனா என்னை பற்றி எதுவுமே தெரியாம உங்க மனசுல அப்படி ஒரு ஆசை வந்தது நான் தான் காரணம் சாரி என்றான்.
வாசம் வீசும்🌺🌺🌺