ஸ்வாதி சென்ற பிறகு தான் ஜெய்க்கு மூச்சே விட முடிந்தது. “என்ன பொண்ணுடா இவ.. ச்ச.. நான் இருக்க எல்லாரையும் ஒரு வழி பண்ணுனா… இவ என்னையே வச்சு செய்றா.. இவ கிட்ட அப்டி என்ன தான்.. இருக்கு? நான் ஏன் பயந்து போறேன்”, என்று பலவாறு புலம்ப..
“அதுக்கு பதில் நான் சொல்லவா பாஸ்..”, என்று சாய் குரலை கேட்டவன்,
“இவன் ஒருத்தன்.. நான் புலம்பும் போது கரெக்ட் அஹ் வந்துருவான்.”, என்று சாய்யை நினைத்து நொந்தவன், அவனை திரும்பி பார்த்தான்.
“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.. என்றபடி தன் இருக்கையில் அமர்ந்தான்.
“எல்லா ஸ்டாப்ஸ்க்கும் மெயில் பண்ணிடு ஈவினிங் பார்ட்டி இருக்குன்னு.. அண்ட் எவரி ஒன் ஷுட் அட்டெண்ட் இட்..” என்று தீர்க்கமாக, சொல்ல,
“என்ன பாஸ்.. இதுவே என் கட்டளை என் கட்டளையை சாசனம் மாதிரி சொல்லறிங்க.. வாங்கன்னு தான் சொல்ல முடியும்.. நீங்க கண்டிப்பா வாங்கன்னு ஆர்டர்லாம் போட முடியாது..”, என்று கைகளை ஆட்டி சொல்ல,.
“அப்போ ஓகே சாய்.. எல்லாரும் கண்டிப்பா வரணும்.. இல்லனா..”,என்று அவன் சொல்ல வர, குறுக்கிட்டான், சாய் “ரிதுவ பார்க்க விடமாட்டேன்”, என்று ஜெய் போல அவன் குரலிலே சொல்ல,
“நல்லா மிமிக்கிரி பண்றயே மேன்.. ஏதாவது ஒரு பிளான்க்கு யூஸ் ஆகும்”, என்று சொன்ன ஜெய்யை வெறியாக முறைத்தான் சாய்.
“எப்பவுமே உங்களுக்கு இதே நினைப்பு தானா பாஸ்”,.. என்று சளிப்பாக கேட்க, “நீ விட்டா பேசிட்டே இருப்ப.. போ போய் சொன்ன வேலைய பாரு.”, என்று அவனை முறைக்க,
“ஆமா பாஸ் சரியா சொன்னிங்க.. உங்க கூட நின்னு பேசி.. என்னோட டைம் தான் வீணா போகுது.. நீங்க சொன்னதை செஞ்சுட்டு.. நான் இங்க வந்த வேலையையும் முடிச்சுட்டு.. எங்க ஆஃபீஸ்க்கு போறேன்”,. என்று அவன் சிலுப்பி கொள்ள,
“அது என்னடா.. நீ வந்த வேலை”, என்று புரியாமல் ஜெய் கேட்க, தன் காலால் தரையில் கோலம் போட்டுக் கொண்டே, “அது உங்களுக்கு தெரியாதா..”, என்று வெக்க பட்டு கொண்டே கேட்க,
“யப்பா டேய்.. நீ என்ன வேணுன்னாலும்.. பான்னு தயவு செஞ்சு இந்த கருமத்தை பண்ணாதா.. என்னால பாக்க முடில.. டா போ முதல்ல..”, என்று பைலை அவன் மீது விட்டெறிந்தான் ஜெய்.
அதை லாவகமாக பிடித்தவன், கதவு வரை சென்றுவிட்டு, “பாஸ் நா வேணுன்னா ஸ்வாதி மேடத்தையும் கூப்படவா.. “, என்று கேட்க.. “உன்ன.”,. என்று ஜெய் இருக்கையில் இருந்து எழ, அதற்குள் ஓடிவிட்டான் சாய்.
ஜெய் கூறியது போல, அனைத்து வேலைகளையும் முடித்து விட்டான். தியாவிற்கும் சூர்யாவிற்கும் விஷயம் சொல்ல பட, “என்ன வேணுன்னாலும் பண்ணுங்க டா ஐ டோன்ட் கேர் .”,, என்று கண்டுக்காமல் விட்டு விட்டாள், தியா.
ஆனால் சூர்யா தான், “இன்னைக்கு என்ன ஏழரைய இழுத்து விட போராணுகளோ”, என்று நொந்து போனான்.
அப்படியே மாலையும் வந்து விட, அனைவரும் குடிவிட்டனர், ஜெய்யின் பார்ட்டி ஹாலில், விழாவும் இனிதே தொடங்கியது.
தியாவும் சூர்யாவும் கூட, வந்து சேர்ந்தனர். அணைவருக்கும் முன் சென்று நின்ற, ஜெய். “ஹலோ.. பிரண்ட்ஸ். உங்க எல்லாருக்கும் குட் ஈவினிங்.. அண்ட் தெங்க் யூ.. சோ மச்.. பார் கம்மிங்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. இன்னைக்கு சூர்யாவுக்கும் தியாவுக்கும், செகண்ட் இயர் அணிவர்சரி.. அத செலிப்ரேட் பண்ணதான் நம்ம எல்லாரும் வந்துருக்கோம்.” என்று சற்று நேரம் உறையாடிவன், சூர்யா தியாவை கேக் வெட்ட அழைத்தான்.
புன்னகை முகமாக முன் வந்தாள், தியா. ஆனால் அதில் எந்த விதமான மகிழ்ச்சியும் சூர்யாவுக்கு இல்லை.. காரணம் அவள் முகத்தில் தெரிவது, போலி புன்னகை மட்டுமே.. அவளை பற்றி அனைத்தும் தெரிந்தவனுக்கு, இது தெரியாத என்ன.
இருவரையும் சேர்ந்து கேக் வெட்ட, அழைக்க, முகத்திக் சிறிதும் சலனம் இன்றி, இருவரும் வந்தனர். கத்தி கையில் கொடுக்க பட, சூரியதான் முதலில் வாங்கினான்.
மற்றவருகளுக்காக, அவன் கை மீது தனது கையையும் வைத்தாள், இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டி , மாறி மாறி ஊட்டியும் கொண்டனர். அந்த காட்சியில் யாருக்கு மகிழ்வோ இல்லையோ, ஜெயின் கண்கள் தான் கலங்கி விட்டது,
இதே போல, கேக் வெட்டிய நினைவுகள், வேறு அவனை வண்டாக குடைந்து. இங்கு சூர்யாவும் பழைய நினைவுகளில் தான் இருந்தான். அவன் முகமும் கலக்கமாக தான் இருந்தது.
‘தன் பழைய ரதி திரும்பவும் கிடைக்காமலே போய் விடுவாளோ’, என்ற பயம் தான் அவன் மனம் முழுவதும் பரவி இருந்தது.
சற்று, நேரம் நேரத்தில் ஒவ்வொருவராக கிளம்ப, தியா ஜெய்யிடம் சென்றாள், “நா வீட்டுக்கு போறேன் ஜெய்”, என்று கூறியவள், அவன் பதில் சொல்லும் முன் அங்கிருந்து கிளப்பி விட்டாள். சூர்யாவும் ஜெய்யின் அருகில் தான் இருந்தான், மறந்தும் அவன் புறம் அவள் திரும்ப வில்லை.
அவள் சென்ற பாதையை பார்த்து கொண்டு நின்றான், சூர்யா. அவன் தோளில் ஆதரவாக கையில் வைத்த ஜெய்யை கட்டிக்கொண்டான் சூர்யா. சட்டென்று திடுக்கிட்ட ஜெய் சூர்யாவை தன்னிடம் இருந்து விலக்கினான்.
தனியாக வீடு வந்த தியாவை வரவேற்றது அவர்களின் இந்த இரண்டு வருட வாழ்வை கண் கூடாக பார்த்த, அந்த வீடு தான்.
மனம் முழிவதும் பாரமாக இருக்க.. அப்டியே ஹாலில் உள்ள சோபாவின் அருகில் தரையில் அமர்ந்து விட்டாள்.
வீடு முழுவதும் கண்களை சுழல விட்டவளின், பார்வை நிலகுத்தியது அவர்களின் திருமணதின் போது எடுத்த, புகைப்படத்தில். அந்த வீட்டிற்கு அவர்கள் வந்த நாள் முதல் இன்று வரை நினைத்து பார்த்தாள்.
அவளின் அனுமதி இல்லாமலேயே கண்கள் கலங்கி கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது.
ஏனோ?
தன் நண்பனின் நிலை அறிந்து அவன் தோளை ஆதரவாக பற்றினான் ஜெய். வேகமாக திரும்பி அவனை அனைத்து கொண்டான் சூர்யா.
சூர்யாவின் நிலை அறிந்தவன், மேதவக அவன் முதுகில் தட்டி கொடுத்தான். அவன் சட்டையில் ஈரம் பட திடுக்கிட்டு தன்னிடம் இருந்து சூர்யாவை விலக்கி அவன் முகத்தைப் பார்த்தான்.
கண்களில் கலங்கி வெள்ளம் போல ஓடிக்கொண்டு இருந்தது கண்ணீர். அதில் பதறியவன், “சூர்யா.. பிளீஸ் டா.. எனக்கு உன்னோட நிலைமை புரியுது டா.. ஆனா அழுதா எல்லாம் சரியா போய்டுமா.. கொஞ்சம் பொறுமையா இரு டா..”, என்று மிகவும் மென்மையாக ஜெய் சொல்ல,
சூர்யாவிடம் பதில் இல்லை, கண்ணீரும் நிற்க வில்லை. தன் நின்ற இடத்திலேயே சுவரில் சாய்ந்து அமர்ந்தான். ஒரு வார்த்தை கூட அவன் பேச வில்லை, ஆனால், அவன் முகத்தில் தான் எத்தனை சோகம்.
அதை பார்த்த ஜெய்க்கும் மனம் வலிக்கத்தான் செய்தது. மேதுவாக சூர்யாவின் அருகில் அமர்ந்தான். அவனோ ஜெய்யை கண்டு கொள்ள வில்லை.
“டேய்.. பிலீஸ் டா.. நீயும் இப்படியே இருந்தா என்ன தான் டா பன்றது.. யாராவது ஒருத்தர் கொஞ்சமாச்சும் மாறுங்களேன்.. அப்போதான் உங்க வாழ்க்கையும் நல்ல இருக்கும்”, என்று அவன் கொஞ்சம் ஆவது மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்ல..
விரக்தியாக புன்னகைத்தவன், “இனிமேல் எதுவும் மாறாது.. நான், ரதி, எங்க வாழ்கை எதுவுமே மாறாது.. நிச்சயம் மாறாது..”, என்று எங்கோ பார்த்து கொண்டு சொல்ல,
என்ன சொல்லி அவனை தேற்றுவது என்று ஜெய்க்கு தெரியவில்லை. “இல்ல டா.. கண்டிப்பா எல்லாம் சரி ஆகும்.. தியா மனசு மாறும். கொஞ்சம் நாள் பொறுமையா இரு மச்சான்..”, என்று அவன் கைகளை பிடித்து கொண்டு சொல்ல,
“இன்னும் எவ்ளோ நாள் டா.. இதோ இன்னையோட ரெண்டு வருஷம் முடிஞ்சுருச்சு.. ஆனா எதுமே மாறல.. அவளோட முடிவுல இருந்து அவ கொஞ்சம் கூட பின்வாங்கல.. ஆனா.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை டா.. நா பன்னது ஒன்னும் சின்ன விஷயம் இல்லையே..”, என்று அவன் மெதுவாக சொல்ல,
ஜெய்க்கு தான் பழைய நினைவுகளை எண்ணி பார்க்க, சூர்யா மீது கொலைவெறியாக வந்தது. இருந்தும் தன் கோபத்தை மறைத்தவன், “எனக்கு நம்பிக்கை இருக்கு சூர்யா.. எல்லாம் சரியா போய்டும்”, என்று சொன்னவனின் குரலில் இப்போது மேன்மை இல்லை.
“பார்த்தியா.. உனக்கே என் மேல கோபம் வருது.. அவளுக்கு வராதா.. நீ எங்களை நினச்சு கவலை படாத டா.. நான் இந்த வாழ்க்கைக்கு பழகிக்கிட்டேன்.. இப்படியே வாழவும் நான் தயராத்தான் இருக்கேன்.”, என்று சொன்ன சூர்யாவை பார்க்க அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
மனதில் எத்தனை சோகம் இருந்தால், அவன் இப்படி சொல்லுவான் என்று நொந்தவன், அவனிடம் மீண்டும் பேசினான், “டேய்.. போதும் உன்ன எப்டி சமாதான படுத்தறதுன்னு எனக்கு தெரியல.. ஆனா ஒன்னு.. கண்டிப்பா தியா மனசு ஒரு நாள் மாறும்.. நான் மாத்தி கட்டுவேன்”, என்று ஏதோ சபதம் எடுக்கும் ரேஞ்சுக்கு அவன் சொல்ல..
“கிழிப்ப” என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்து வைத்தான், சூர்யா. அதை அறிந்தாலும், கண்டு கொள்ளாமல் சூர்யாவை அமைதியாக பார்த்தான்.
“எப்படி ஜெய் உன்னால இவ்ளோ சாதரணமா சொல்ல முடியுது.. நான் பன்னது எவ்ளோ பெரிய விஷயம்.. நான்.. நான்.. அவ என் மேல வச்சிருந்த நம்பிக்கைய முழுசா சுக்கு நூறா ஓடச்சுட்டேன்.. இருந்தும் அதுக்காக இன்னைக்கு வரைக்கும் அவ என் கூட ஒரு முறை கூட சண்ட போட்டது இல்ல.. என்ன திட்டுனது இல்லை.. கோவ பட்டது இல்லை.. இதுல இருந்தே தெரியல நான் செஞ்சது அவள எவ்ளோ பாதிச்சு இருந்தா.. அவ இப்டி மாறி இருப்பா.. இதுல இருந்தே தெரியல அவ மனசு நிச்சயம் மாறாது.. எல்லாத்துக்கும் மேல, என் மேல அவளுக்கு எப்போவும் நம்பிக்கை வரவே வராது..”, என்று ஜெய்க்கு சொல்வது போல, தனக்கும் சொல்லி கொண்டான்.
“ஓ.. அப்படியா.. அவளுக்கு உன் மேல நம்பிக்கை இல்லாமலா உன் கூட ஒரே வீட்டுல.. அதுவும் ஒரே ரூம்ல இருக்கா..?”, என்று ஜெய் கேட்க,
“அது என் மேல இருக்கற நம்பிக்கை இல்லை ஜெய்.. அவளுக்கு அவ மேல இருக்க நம்பிக்கை.. அவள மீறி என்னலா எதுவும் செய்ய முடியாதுன்னு தான் அவ நம்பறாளே தவிற.. என்ன இல்லை..”, என்று அவன் விளக்கம் சொன்னான்.
“சரி.. நீ சொல்லற மாதிரியே வச்சுக்கலாம் டா.. அப்போ உன் மேல கோபமா இருக்கறவ எதுக்காக உனக்கு சமைச்சு போடணும்.. நீ சாப்பிட்டா அவளுக்கு என்ன சாப்படலானா அவளுக்கு என்ன?”, என்று அடுத்த கேள்வியை அவன் கேட்க..
“அது அவ எனக்காக செய்யல.. அவளோட புருஷனுக்காக செய்யறா.. அவ்ளோதான்.”, என்று அவன் சொல்ல,
அவனை நன்றாக முறைத்த ஜெய், “ஓ.. சாரிங்க.. நீங்க அவ புருஷன் இல்லையா.. நான் தான் ஆள மாத்தி பேசிட்டு இருக்கேனா..”, என்று ஜெய் நக்கலாக கேட்க, இப்போது முறைப்பது சூர்யாவின் முறையாயிற்று.
அதை கண்டவன், “பின்ன என்ன டா.. நீ வேற அவ புருஷன் வேறயா?.”, என்று கேட்க,
“கண்டிப்பா இல்லை.. ஆனா இதெல்லாம் அவ அவளோட புருஷன் சூர்யாக்காக தான் செய்யறா.. எனக்காக இல்ல.. இப்போ உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.”, என்று சொல்ல, ஜெய்க்கு புரிந்தது, போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது, (உங்களுக்கு புரியுதா?).
“சரி..டா.. அப்போ இதுக்கு பதில் சொல்லு, உன் மேல அவளுக்கு அன்பு, பாசம்.. டேஷ்.. டேஷ்.. டேஷ்.. எதுவும் இல்லைனா எதுக்கு உனக்கு ஒடம்பு சரி இல்லமா போனா அவா பதறனும்.. துடிக்கும்.. உன்ன ராத்திரி பகல் தூங்காம பாத்துக்கும்”, என்று ஏதோ ஆரிய கேள்வியை கேட்டது போல, பாவனையில் அவன் இருக்க,
“இதுக்கு முன்ன சொன்ன அதே பதில் தான்.. இதுக்கும்.”, என்று அவன் சொல்லிவிட, “எந்த பக்கம் பால் போட்டாலும் அடிக்கிறான்.”,. என்று சிந்தித்தவன், “ஹான் இப்ப மாட்டுவான்”, என்று நினைத்து விட்டு,
“அப்போ அன்னைக்கு ஆபிஸ்ல அவ்ளோ பேர் முன்னாடி எதுக்காக.. உனக்கு சப்போர்ட் பண்ணனும்.. எதுக்காக உன் பக்கம் நின்னு பேசணும்.. எப்படியோ போ’ன்னு விடலாம்ல்ல… ஏன் உன்ன விட்டு கொடுக்காம பேசணும்.. சொல்லு.. இதுக்கும் நான் அவ ஹஸ்பண்ட்.. ரப்பர் பேன்டுன்னு சொன்ன அவ்ளோதான் டா.. “, என்று மிரட்டி விட்டு, அவன் கேட்க,
“ரொம்ப சிம்பிள்.. மச்சான் அது தான் என் ரதியோட கேரக்டரே.. யார் பக்கம் உண்மை இருக்கோ.. நியாயம் இருக்கோ.. அவங்க பக்கம் தான் அவ இருப்பா.. அதுக்கு மேல, நான்னு இல்லை யாரா இருந்தாலும் அவ விட்டு கொடுக்க மாட்டா.. கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவா.. இதுல நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.. இவ்ளோ ஏன் நா குடிச்ச மாதிரி நடிச்சதுக்கு விட்ட ஒரே அறை ரெண்டு நாள் வலி குறையவே இல்ல.. அவள பொறுத்த வரைக்கும் தப்புன்னா தப்பு தான் யார் செஞ்சாலும்.. அது தப்பு தான்”, என்று அவன் இப்போதும் விளக்கம் கொடுத்து விட,
“இது எப்போ டா?”, என்று புரியாமல் ஜெய் கேட்க, “போன வருஷம்.. அதுக்கு முன்னாடி ரெண்டுவாட்டி உண்மையாவே குடிச்சுட்டு போனேன்.. ஆனா அப்போ என்ன ஆச்சுன்னு எனக்கு நியாபகம் இல்ல.. அதான் அன்னைக்கு சும்மா குடிச்ச மாதிரி ஒரு ஆக்ட போட்டேன்.. எப்டி கண்டு பிடிச்சாளோ.. யப்பா என்ன அடி”, என்று அவன் கன்னத்தை தேய்த்து கொண்டே சொல்ல,
அந்த காட்சியை நினைத்து பார்க்க ஜெய்க்கு சிரிப்பு தான் வந்தது. அவன் சிரிப்பின் காரணம் புரிந்தவன், அவனை முறைக்க அமைதி ஆனாவன், மீண்டும் தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்,
“அப்போ..”, என்று ஜெய் ஆரம்பிக்க, “போதும் டா.. நீ என்ன சொன்னாலும்.. கண்டிப்பா அது நீ நினைக்கற மாதிரி இருக்காது.. அதுக்கு நிச்சயம் வேற ஒரு அர்த்தம் இருக்கும்.. “, என்று அவன் சொல்லிவிட, ஜெய்யும் தன் உரையை முடித்து கொண்டான்.
இவர்கள் இங்கு இப்படி இருக்க, வீட்டில் ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல்.. தன் கண்ணீரில் கரைத்து கொண்டு இருந்தாள், தியா.
அவர்களின் திருமணம் நடந்தது முடித்து, ஒரு மாதத்தில், இந்த வீட்டிற்கு வந்தனர். அப்போதும் அவள் அவனோடு பேசியதில்லை.
ஆனால், அது ஆரம்பம் என்பதால் அவள் மனம் விரைவில் மாறி விடும் என்று எண்ணி இருந்தான் சூர்யா. ஆனால் நாளைடைவில் அவன் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போனது. இருந்தும் அமைதி கத்தான்.
அந்த வீட்டை சுற்றி பார்க்க, அங்கு இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் சூர்யா அவளிடம் நின்று தன்னிடம் அவளை பேச சொல்லி, மன்னிக்க வேண்டி மன்றாடி கெஞ்சிய நினைவுகள் அவள் முன் வந்து சென்றது.
அது மேலும் கண்ணீரை கொடுத்தது. இன்று வரை அவள் சூர்யாவை வெறுக்கவில்லை, ஆனாலும் நேசிக்கவும் இல்லை.
அவளை பொறுத்த வரை, அவள் நண்பன் சூர்யா எப்போதோ இறந்து விட்டான். இப்போது இருப்பது அவள் கணவன் சூர்யா.. சூரியதேவ் மட்டுமே. மேலும் அவள் செயல்களுக்கு சூர்யா சொன்ன அனைத்து விளக்கமும் சரி தான்.
உண்மையில் அவன் சொன்ன காரணங்களே அவளின் செயகளுக்கான அர்த்தம்.
ஏதேதோ நினைவில் சிக்கி தவித்தவளின் நினைவு சூர்யாவிடம் வந்து நின்றது. இதற்கு மேல் சிந்திக்க முடியதவள், கண்களை மூடி சோபாவில் சாய்ந்து கொண்டாள்.
ஜெய்யும் சூர்யாவும் வீட்டிற்கு கிளம்பி விட்டனர். வீட்டிற்கு வந்த ஜெய்யின் முகமே ஸ்வாதிக்கு கூறிவிட்டது, அவனின் திட்டம் வழக்கம் போல சொதப்பி விட்டது என்று.
அறைக்குள் சென்றவன் பின்னாலே சென்றாள், ஸ்வாதி. அவன் அறைக்குள் சென்று பார்க்க, தலையை கைகளால் தாங்கி அமர்ந்து இருந்தான்.
அவனை பார்த்தவளுக்கு மனம் கனக்க, அவன் அருகில் சென்று அமர்ந்தாள், கைகளை எடுத்து விட்டு, நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“என்ன ஆச்சு ஆகாஷ்.. உங்க முகம் ஏன் சோர்ந்து போய் இருக்கு?”, என்று வினவ, “தியா மனசு மாற மாட்டாளா ஸ்வா?”, என்று அவன் எங்கோ பார்த்து கொண்டு கேட்க,
“அப்டிலாம் இல்ல ஆகாஷ்.. ஆனா அதுக்கான நேரம் இன்னும் வரல.. நீங்க பண்ற எதுவும் அவள மாத்தாது.. ஆகாஷ்.. அவளா மாறுனா தான் உண்டு..”, என்று அவள் பங்கிருக்கு சொல்ல,
“இல்ல.. ஸ்வா எனக்கும் நம்பிக்கை கோறஞ்சுட்டே வருது.. தியா மனசு எப்போவோ கல் ஆகிருச்சு..”, என்று நம்பிக்கை இழந்து சொல்ல,
“கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும்.. ஆகாஷ்.. நீங்க வேணுன்னா பாருங்க எல்லாம் சிக்கிரம் சரியா போயிரும்”, என்று சொன்னவளை தெளிந்த முகத்தோடு பார்த்தான்.
அதில் நிம்மதி அடைந்தவள், “நான் உங்களுக்கு சாப்பட ஏதாவது கொண்டு வறேன் நீங்க போய் பிரேஷ் ஆகிட்டு வாங்க. “, என்று சொன்னவள், அங்கிருந்து வெளியே சென்றாள்.
“இவ கிட்ட என்ன தான் இருக்கோ.. கொஞ்ச நேரத்துல என்னோட மூடயே மாதிட்டா.. எப்போவும் போல.. வித்தியாசமா இருக்கா”, என்று அவனை மெச்சியவன், குளியல் அறைக்குச் சென்றான்.
ஸ்வாதி ஜெய்யின் மாமன் மகள். இப்போது அவன் வீட்டில் தான் அவளும் இருக்கிறாள். ஜெய்யின் தாய் ஜனாகிக்கு தன் அண்ணன் மகளை தன் வீட்டு மருமகளாக கொண்டு வர வேண்டும் என்ற, ஆசை இருக்கிறது.
ஸ்வாதிக்கும் ஜெய்யை பிடிக்கும். ஆனால் அவன் தன் அவளை பார்த்து பதறுகிறான், பயம் கொள்கிறான், தடு மாறுகிறான். ஆனால் இவை அனைத்தையும் அவள் ரசிக்கவே செய்கிறாள்.
பின்னே, அனைவரிடமும் சிங்கம் போல் கர்ஜிப்பவன், தன்னிடம் பம்புவது அவளுக்கும் பிடித்து இருந்தது. மேலும் சூர்யா தியா பற்றி அறிந்த மூன்றாம் ஆளும் இறுதி ஆளும் ஸ்வாதியை.
ஆனால் அவளுக்கும் சாய்யைப் போலவே முழுமையாக எதுவும் தெரியாது, ஜெய் எதை சொல்கிறானோ, அதை மட்டுமே அவள் அறிவாள், அவனிடம் அதற்கு அவளும் கேட்டதில்லை. அவனும் சொல்ல நினைத்தது இல்லை.
சூர்யாவும் வீடு வந்து சேர்ந்தான், உள்ளே வந்தவன் முதலில் பார்த்தது, சோபாவின் அருகில் கண் மூடி சாய்ந்து இருந்தா அவனது ரதியை தான்.
என்ன செய்வனோ?..