Loading

அத்தியாயம் 23 ❤

மஹிமா தனது அறையில் இருந்து கொண்டு கார்த்திக் இன்று தன்னுடன் பழகும் விதத்தை நினைத்துக் குழம்பிப் போனாள்.

ஏனெனில் அவன் தன்னை விட சிவரஞ்சனிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஆனால் தான் இருக்கும் சமயத்தில் அவளை கார்த்திக் கண்டு கொள்ளாதது அவளுக்குள் உறுத்திற்று.

கார்த்திக்கிடம் ஒரு அளவுடன் பழக வேண்டும் ஏனெனில் அவன் தன்னிடம் உரிமையாக பழகுவது ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை.

பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் போதே சிவரஞ்சனியின் குணம் அவளுக்கு அவ்வளவாக ஏற்றுக் கொள்ளப்படும்படியாக இல்லை.

இதில் அவளது நண்பனுடன் நட்பு பாராட்டும் நோக்கம் சரி என்று அவளுக்கு தோன்றவில்லை. எனவே நாளையில் இருந்து அவர்களை தவிர்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் உறங்கி விட்டாள்.

காலையில் வெகு சீக்கிரம் எழுந்த மஹிமா ,
தாயிடம் “அம்மா எங்க காலேஜ்ல நெக்ஸ்ட் வீக் கல்ச்சுரல்ஸ் வருது.அதுல நானும் பார்ட்டிசிபேட் பண்ணலாம்னு இருக்கேன். என்ன காம்ப்படிஷன் – ல சேரலாம் ?”என்று கேட்டாள்.

சுவர்ணலதா மகளைப் புன்னகையுடன் பார்த்து “உனக்குப் பாட்டும் நல்லாப் பாட வரும், டான்ஸூம் நல்லா ஆடுவ. ரெண்டுலயும் கலந்துக்கோ “என்று யோசனை கூறினார்.

” டான்ஸ் – னா ஒன் வீக் – ல சாங் செலக்ஷன்,ப்ராக்டிஸ், காஸ்ட்யூம் ரெடி பண்றதுனு டைம் ஆகிடும்மா “

சுவர்ணலதா ” அப்போ பாட்டு மட்டும் பாடு.நல்ல சாங் ஆக செலக்ட் பண்ணு. இப்போ போய் ரெடி ஆகு. டைம் ஆச்சுப் பாரு ” அவளை அனுப்பி விட்டு காலை உணவைத் தயாரித்தார்.

மஹிமா தயாராகி வந்ததும் உடனே உணவு உண்டு முடித்தவள் ” பாய்மா ” என்று கல்லூரிக்குச் சென்றாள்.

ஸ்கூட்டியை நிறுத்தும் இடத்தில், அங்கு நின்றிருந்த மூன்று பெண்கள் இவளைப் பார்த்ததும் “பாரு.மூனு நாள்லயே அவனை மடக்கிட்டா. ரொம்ப கெட்டிக்காரி தான் ” அவள் காது பட பேசிக் கொண்டனர்.

அவர்கள் மஹிமாவைப் பார்த்துத்தான் இதைக் கூறினர் என்பதைப் புரிந்து கொண்டவள் “இவங்க எதுக்கு சம்பந்தமே இல்லாமல் நம்மளப் பாத்து இப்படி சொல்லிட்டுப் போறாங்க “

குழம்பியவாறே தனது வகுப்புக்குள் நுழைந்தாள்.

வகுப்பில் அமர்ந்து இருந்தவர்கள் கூட்டமாக இருந்து ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர் மஹிமாவைப் பார்த்ததும் நமுட்டுச் சிரிப்புடன் தங்களது இடத்திற்கு சென்று விட்டனர்.

மஹிமாவிற்கு ஆயாசமாக இருந்தது.
‘ இவங்களும் ஏன் நம்மள வித்தியாசமா பாக்குறாங்க ‘என்று யோசித்துக் கொண்டே ,

இருந்தவளது அருகில் அமர்ந்து இருந்த பெண்” ஹாய் மஹிமா ! கார்த்திக்கும், நீங்களும் லவ்வர்ஸாமே ! ஒரே டெஸ்க்-ல உங்கப் பக்கத்துலயே உக்காந்து இருக்குற எங்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டிங்க பாத்திங்களா ?” என்று குறைபட்டுக் கொண்டாள்.

மஹிமாவிற்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.

“இத உங்ககிட்ட யார் சொன்னது ?” அதிர்ச்சி மறையாமல் கேட்டாள்.

“எனக்கே நம்ம க்ளாஸ் ஃப்ரண்ட்ஸ் தான் சொன்னாங்க.என்ன அதுக்குள்ள எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சுனு ஷாக்கா இருக்கா  ? விடுங்க மஹிமா. எப்படியும் தெரியப் போறதுதானே . இப்போ தெரிஞ்சுருச்சு ” என்று கூலாக கூறினாள்.

அவள் கூறியது மஹிமாவின் மூளைக்குள் ஏறவில்லை.பதட்டத்துடன் இருந்தவள் வகுப்பறைக்குள் நுழைந்த சிவரஞ்சனியைப் பார்த்ததும் அவளிடம் ஓடினாள்.

ஆனால் சிவரஞ்சனி “கங்கிராட்ஸ் மஹி ! ஆனா எங்கிட்ட கூட சொல்லனும்னு உங்களுக்கு தோனலல ” அவளைக் குற்றம் சாட்டும் குரலில் கேட்டாள்.

அதைக் கேட்டதும் அவசரமாக ,
” அய்யோ சிவா ! நானும்,கார்த்திக்கும் லவ் பண்ணவே இல்ல.இது யாரோ பரப்பி விட்ட ரூமர் அவ்ளோ தான். ப்ளீஸ் என்ன நம்பு சிவா ” அவளிடம் தன் நிலையை விளக்கினாள்.

உடனே அவளிடம் வந்த சக மாணவி “நீ மட்டும் சொன்னாப் போதுமா ! கார்த்திக்கும் சொல்லட்டும் அப்பறம் பாக்கலாம் “

மஹிமா “கார்த்திக்கும் இதே தான் சொல்லப் போறாரு பாருங்க ” அவர்களிடம் சவால் விட்டவாறே தனது இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டாள்.

கார்த்திக் அப்போது தான் வகுப்பறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள்
“ஹேய் கார்த்திக் கங்கிராட்ஸ் ! நாங்கள்லாம் ப்ரபோஸ் பண்ணிட்டு வெய்ட் பண்ணிட்டு இருந்தா, நீ சைலன்டா மஹிமா கூட டூயட் பாடிட்டு இருந்திருக்க ” அவனிடம் ஆதங்கத்துடன் கேட்டனர்.

முதலில் புரியாமல் பார்த்தக் கார்த்திக் பிறகு சிவரஞ்சனியைப் பார்த்தான்.அவளது இதழில் மர்மப் புன்னகை தென்படவே இவ வேலை தானா இது என்று ஒருவாறு புரிந்து கொண்டான்.

விழிகளில் அலைப்புறுதலுடன் கார்த்திக்கின் அருகில் வந்த மஹிமா ,
” கார்த்திக் நீங்களே சொல்லுங்க. நம்ம லவ்வர்ஸ் இல்ல தானே?” கூறிவிட்டு அவனது முகம் பார்த்தாள்.

கார்த்திக் அவளது கண்களை ரசனையுடன் பார்த்தவன் “ஏன் பேபி ! இவங்களுக்கு உண்மை தெரிஞ்சா என்ன ஆகப் போகுது.இதுக்கு நீ ஏன் கவலைப்பட்ற ? ஆமா நாங்க லவ்வர்ஸ் தான் ” தடாலடியாக கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட மஹிமா விக்கித்து நின்றாள்.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்