Loading

           என்ன தொல்லையா இருக்கு. எங்கே போனாலும் அந்த முகம் போக மாட்டேங்குது என்று  மனம் நொந்தவளை ஸ்ருதியின் குரல் எழுப்பியது.

 

          “அம்…..மா நீங்க தூங்கல”.

          “இல்லடி தங்கம். அம்மா உன் பக்கத்துல தான் இருக்கேன் தூங்கு”. கண்களை மீண்டும் மூடி கொண்டு அவளின் கரம்   பற்றி அவள் மெல்ல தூங்கினாள்.

 

சதா :” ஜானவி உனக்கு உன்  உலகமே குழந்தைதானே. அங்க போனதுக்கு அப்புறம் நீ கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு.. எல்லார்கிட்டயும்  நீ தான் என்  மனைவியாக போற பொண்ணு னு  சொல்லப்போறேன். சரியா. எனக்கு கல்யாணம் பண்ணது பிடிக்கல. ஹெல்ப் பண்ணா போதும். சாப்பிடவே இல்ல நீ. “

 

சதா பசிக்கல. சாப்பிட வேண்டாம். நீ சாப்பிடு.

 

    ‘  ஜானவி நல்லா இருக்கா. ஆனால் திடிர்னு அமைதியா மாறிடுறா. எல்லாமே அவளை பத்தி நமக்கு தெரிஞ்சாலும் இந்த அமைதிக்கான காரணம் சுத்தமா புரிப்பட மாட்டேங்குது.  என்னவாயிருக்கும். இவளோட மனசு எப்ப தான் மாறுமோ? கிருஷ்ணா நீதான் அருள் புரியணும்.’ என்று தன் மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.

 

 

    கொடைக்கானலை கார் நெருங்கியது. பெரிய வீட்டின் முன்பு கார் நின்றது. வயதான பெண்மணி கூடவே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் கையில் ஆரத்தி தட்டுடன் வாசலில் காத்திருந்தனர்.

 

” வாங்கடி. புதுமாப்பிள வந்துட்டான்.  வேலைய பாத்துக்கோனு  சொல்லி அனுப்பி வச்சா பொண்டாட்டிய கூட்டி வந்திருக்கேன். சரியான கேடி பையன் உன் மவன் “.

 

          காரிலிருந்து ஜானவி சுருதி யை  தூக்கிக்கொண்டு, மெல்ல இறங்க, சதானந்தன் பின்னாடி வந்தான்.

 

” என்னது கல்யாணம் பண்ணிகிட்டானா? “,பெண்மணி கண்களை திறந்து மூட, “ஜோடி பார்க்க நல்லாத்தான் இருக்கு. கையில குழந்தை வேறு வச்சிருக்க. கலிகாலம் முத்தி போச்சு.”

 

 

 

அவர்களின் பேச்சு சதானந்தன் மனதில்  குழப்பத்தை ஏற்படுத்த, பார்த்தா ஜானவி  கழுத்துல மஞ்சள் கயிறு இருந்தது. ஓ அதான் நாம கல்யாணம் பண்ணிட்டோம் னு நினைச்சுட்டாங்க போல. அதை அப்படியே மைண்டைன் பண்ணுவோம் என்று எண்ணியவன்,

 

 

          “டியர் இவங்க தான் என் அம்மா பேரு முத்துலட்சுமி. அப்பா போனதுக்கு அப்புறம் இவங்க இந்த மாதிரிதான் போடுவாங்க. இவங்க என் பெரிய அம்மா பேரு அன்னலட்சுமி. இங்கே இருக்குது எல்லாமே சொந்தக்காரங்க தான். “

கூறி முடித்ததும், காலில் விழுந்து ஜானகி நமஸ்காரம் செய்தா.

 

 

      ” ம்ம் பரவாயில்ல இதாச்சும் தெரியுதே. உள்ள வாமா. வந்து விளக்கு ஏத்து. ” அவளை உள்ளே அழைத்து செல்ல, சதாவிற்கு வானத்தில் பறப்பது போல இருந்துச்சு.

 

அங்கே ஜானவி மனதில் அந்த நினைவு வரவே, மீண்டும் கலங்கி போனாள்.

 

 

மிரட்டுவான் அவன்………

     

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்