Loading

அத்தியாயம்  19 ❤

பல வருடங்களுக்குப் பிறகு தனது தாயின் கையால் உணவுண்டு மகிழ்ந்தார் சுவர்ணலதா. 

அதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்த மஹிமா.உணவுண்டு முடித்ததும் மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார் சந்திரா.
அவரது அருகிலேயே சந்திராவின் கையைப் பற்றிக் கொண்டு அமர்ந்து இருந்தார் சுவர்ணலதா.

அவருக்கு வலது பக்கத்தில் மஹிமா அமர்ந்து இருந்தாள். 

சுவர்ணலதா ” அம்மா நம்ம ஊருக்கு ஒருநாள் வரனும்மா.எல்லாரையும் பார்த்து எவ்ளோ நாளாச்சு “

என்று தனது குரலில் வலியை நிரப்பி பேசிக் கொண்டு இருந்த மகளை பாவமாகப் பார்த்தார்.

மஹிமா ” ஆமா பாட்டி.நானும் அங்க வரனும் . நம்ம வீட்டுல இருக்கனும்.நிலத்துல இறங்கி வேலைப் பாக்கனும்.இது மாதிரி நிறைய ஆசை இருக்கு  “

என்று கண்கள் மின்ன பேசிய பேத்தியின் கன்னத்தில் செல்லமாக தட்டி.

சந்திரா ” சீக்கிரம் அந்த நாள் வரும்டா. கவலைப்படாத “

என்று சமாதானம் அளித்தார்.

” அம்மாடி… ! நான் கிளம்பறேம்மா. இன்னொரு நாள் வர்றேன் “

என்று மகளிடமும் பேத்தியிடமும் கூற நிமிடத்தில் மஹிமாவின் முகம் சுருங்கி விட்டது .

அதைக் கண்டு பதறிய சந்திரா. 

” மஹிக்குட்டி.. ! அம்மாச்சி கண்டிப்பாக இன்னொரு நாள் வர்றேன்டா.  வர்றப்போ தாத்தாவையும் கூட்டிட்டு வர்றேன். முகத்தை சுணக்கமா வச்சுக்கக் கூடாது.சிரிடா… ! “

என்று பேத்தியைக் கொஞ்சி சிரிக்க வைத்தார்.

அம்மாச்சி ஊருக்குக் கிளம்பும் போது அவரது மனம் நோக விடக் கூடாது என்று மஹிமாவும் புன்னகையை உதிர்த்தாள்.

அதைப் பார்த்து நிம்மதி அடைந்து மகளிடம் திரும்ப சுவர்ணலதா விழிகள் கலங்கி  நின்றார்.

சந்திரா ” சுவர்ணாம்மா. அழக் கூடாது.அம்மா எப்பவும் மனசளவுல உங்கூட தான் இருப்பேன் ” என்று அவரையும் தேற்றி விட்டு , 

பேத்தியின் நெற்றியில் அன்பாக  முத்தமிட்டு விட்டு இருவரிடமும் விடைபெற்று விட்டு சென்றார் சந்திரா.

அவர் செல்வதை ஒருவாறு சோர்வுடன் பார்த்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்கள் தாயும் , மகளும். 

அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் ராமநாதனின் கார் காம்பவுண்டிற்குள் நுழைகிறது என்பதை  வாட்ச்மேனின் வாயிலாக அறிந்ததும்
சுவர்ணலதாவிற்கும் மஹிமாவிற்கும் பதட்டம் ஏற்பட்டது. 

அங்கிருக்கும் வேலைக்காரர்களிடம் சந்திரா அங்கு வந்ததை எக்காரணம் கொண்டும் அவரிடம் கூறக்கூடாது என்று கட்டளை இட்டு விட்டு கதவைத் திறக்கச் சென்றார்.

மஹிமா தனது அறையான கூண்டிற்குள் அடைந்து கொண்டாள்.

கதவைத் திறந்ததும் சுவர்ணலதாவின் மூக்கினைத் துளைத்தது.

ராமநாதன் குடித்திருந்த மதுவின் நெடி, 
அதை முகம் சுளித்து விட்டு அவரை உள்ளே வருமாறு கூறி சுவர்ணலதாவும் உள்ளே நுழைந்தார்.

ஹாலுக்கு வந்தவர் மனைவியிடம் எதுவும் பேசாமல் கையில் வைத்திருக்கும் பொருட்களை அப்படியே ஹாலில் வீசி விட்டு சோபாவில் கால்களை நீட்டி உறங்கி விட்டார்.

சுவர்ணலதா அவரது டை மற்றும் ஷூவை கழட்டி அவரை சோபாவில் ஒழுங்காக படுக்க வைத்து விட்டு தனது அறைக்குச் சென்று விட்டார்.

இரவின் ரம்மியத்தில் மனம் சற்று இலகுவானாலும் என்னதான்   பணம் படைத்தவளாக இருந்தாலும் தன் தந்தையின் குணம் அவளை ஏழையாக்கி விட்டதை உணர்ந்த மஹிமா.தலையை உலுக்கி விட்டு தன் பெட்டில் படுத்துக் கொண்டாள். 

 –  தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்