Loading

பகுதி – 15

தயாளன் லேப்க்கு உள்ளே சென்றான் தயாளினிதான் கத்தி அழுதுக்கொண்டு இருந்தாள்.

அவளது துன்பத்தையும் கஷ்டத்தையும் பகிறகூட ஆளில்லாமல் தவித்து இருந்தாள். பக்கபலமாய் இருப்பவனும் படுத்துகிடப்பதால். ரதியும் அவளுக்கு துணையில்லாமல் போய்விட்டாள்.

தயா உள்ளே சென்றான் அவள் இருந்த கோலம் கண்டு திகைத்து இனி என்று அழைத்தான். அவன் குரல் கேட்ட நொடி நிமிர்ந்து பார்ந்தாள்.

வாங்க தயாளன் ஸார் என்ன வேணும் மறுபடியும் கால்ல விழனுமா இல்லை அதுக்குமேல நான் வேற ஏதாவது பண்ணனுமா

இனி நான்…….

ஜெயிச்சிட்டீங்க ஸார் என்னை பணிய வெச்சிட்டீங்க நீங்க சொன்னதெல்லாம் நடத்திக்காட்டிடீங்க ஆனா நீங்க இவ்ளோ வன்மம் வளர்க்கிற அளவுக்கு உங்களுக்கு நாங்க என்ன கெடுதல் பண்ணோம்னுதான் எனக்கு இப்போவரை புரியலை

இனி நான் சொல்லவரத கேளு

என்ன கேக்கனும் உன்னோட ஈகோவ டச் பண்ணிட்டனு என்னோட சுயமரியாதைய மொத்தமா இழக்க வெச்சிட்டல்ல போதும் இத்தோட நிறுத்திப்போம் இனி நான் உயிரா மதிக்கிற இந்த வேலைய நான் செய்யமாட்டன். என்னோட கையால இதை எதையுமே தொடமாட்டன் இது சத்தியம் போடா என்னை உடைச்சிட்டல நீ என்று கண்ணீரோடு பேசியவளைக் காண தயாவிற்கு மனது வலித்தது.

அவனுள் பூத்திருந்த காதலை அவன் உணர்ந்தான். அவள் கஷ்டம் அவனுக்கு கஷ்டத்தை கொடுத்தது. அவள் வலியை அவன் உணர்ந்தான். ஆனால் இப்போது சொன்னால் பேசினாள் கேட்பவளா இவள்.

கண்ணை இறுக மூடித்திறந்தவன் இதுவரை கனிவாக இருந்த பார்வையை ஏளனமாக மாற்றினான்.

அவளை நேருக்கு நேர் பார்த்து சொன்னான்.

இன்னும் முடியலை இனி. நீ பண்ணதுக்கும் பேசுனதுக்கும் இது ரொம்ப கம்மி. இதுக்குமேலயும் நீ அனுபவிப்ப. நீ எனக்கு கீழ இருந்தா தான என்னோட ஈகோ சேட்டிஸ்ஃபைட் ஆகும்.

அவளோ அவனை தீயாய் முறைத்து கேட்டாள். உன் லேப்ல வந்து வேலை செய்வன்னு நீ கனவுல கூட நினைச்சி பாக்காத

தயா சத்தமாக சிரித்தான்…….

இனி பேபி நீ ரொம்ப சில்லியா திங்க் பண்ற என்னோட ஈகோ அந்த சின்ன விஷியத்துல திருப்தி அடையாது வாழ்க்க முழுக்க நீ எனக்கு கீழ இருக்கனும் என் மனைவியா

நீ நினைக்கிறது நடக்காது தயா

நடக்கும் இனி நடக்கனும் இல்லைனா நான் நடத்துவன் உனக்கு தெரியும் என்னை பத்தி என சொல்லிச் சென்றான்.

தயாவோ மடிந்தமர்ந்தாள்.

இரண்டு வாரம் சென்றிருந்தது. தீபன் ஓரளவிற்கு தேறினான். தயா நடந்ததை அவனிடம் சொல்லி அவன் தோளில் ஆறுதல் தேடினாள்.

இந்த ஊரைவிட்டு போகலாம் என்றாள்.

அப்போ ரதி, நம்ம லேப்

அந்த ரெண்டையும் பத்தி பேசாத பிளீஸ் 

ரதி அழுதுக்கொண்டே ஓடிவந்தாள்.

அவளை பார்த்து இருவரும் அதிர்ந்தனர்.

தீப தயா நான் மோசம் போய்ட்டன் டி அந்த அஜ்ஜூ என்னை ஏமாத்திட்டான் அழுதாள் இருவரும் அவளை கண்டுகொள்ளவில்லை.

தேம்பி தேம்பி அழுதவள் சொன்னாள் அஜ்ஜூவின் உயிர் அவள் வயிற்றில் வளர்வதை.

இருவரும் துடிதுடித்துபோயினர். ஏதோ காதல் கருமாந்திரம் என்றுதான் நினைத்திருக்க இவள் சொல்லியதைக் கேட்டு இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

தயா அவளை தூக்கி கேட்டாள்.

அது அது என தயங்கி சொன்னாள் அஜ்ஜூ பேசியதை.

அஜ்ஜூ

சொல்லு ஏஞ்சல்

எனக்கு இந்த மன்த் பீரியட்ஸ் வரலை

அட அடுத்த மாசம் வந்திடும் டியர் இதுலாம் யூஸ்வல்தான்.

இல்லை எனக்கு நாசியா வாமிட்டிங்கா இருக்கு

வாட் யூ மீன்….. பிரக்னன்ட் சிம்ப்டம்ஸா

ம்ம்ம்

அவன் அவளை உடனே பரிசோதித்தான். ஆமா நீ பிரக்னன்டாதா இருக்க

அஜ்ஜூ அவள் அழுதாள்.

டோன்ட் வர்ரி ஏஞ்சல் ஜஸ்ட் அபார்ட் பண்ணிடலாம் ஒரு பிரச்சனையுமில்ல எனக்கு நிறையா டாக்டர்ஸ் தெரியும்.

அஜ்ஜூ என்னை மேரேஜ் பண்ணிக்க நம்ம குழந்தைய ஏன் நாம அழிக்கனும்.

வாட் மேரஜா என்ன விளையாடுறியா

அஜ்ஜூ நீதான் விளையாடுற நாம லவ் பண்றோம் மேரேஜ் பண்ணிகிறதுல என்ன தப்பு

ஏஞ்சல் நான் உலகம் சுற்றும் வாலிபன் அன்ட் உன் ஒருத்தியாள மட்டும் என்னை சேட்டிஸ்ஃபைட் பண்ணிட முடியாது.

அஜ்ஜூ கோவமாக அவன் சட்டையை பிடித்தாள்.

ஹே சில் பேபி இதை அபார்ட் பண்ணிடு அன் நீ என்னோட பெஸ்ட் கம்பேனி ஐ வோன்ட் மிஸ் யூ. வீ வில் என்ஜாய். கொஞ்சநாள் நாம பழகலாம் உங்க வீட்ல மேரேஜ் பிக்ஸ் பண்ணதும் அவனை நீ கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க சிம்பிள்.

பளாரென அவனை அறைந்தாள்.

இதெல்லாம் எனக்கு தூசி மாதிரி டியர் கிளம்பு காத்துவரட்டும் என்றவன் இன்னொரு பெண்ணுக்கு அழைத்து கடலைபோட்டான்.

தயாவும் தீபனும் தலையில்  கைவைத்து அமர்ந்தனர்.

____________

தயாளன் அவனின்  இனியிடம் பேசியதை சொன்னான் நண்பர்களிடம்.

வசீயோ கடுப்பாகி தயாவை அடித்தான்.

ஐ வான்ட் ஹர் டா

யாழி தயா இட்ஸ் ரெடிகுலஸ் உன்னேட தகுதி என்ன அவ தகுதி என்ன பைத்தியமாறி ஒலராத

தயா உங்களுக்கு புரியலையா அவ எனக்கு வேணும் அவளைத்தவர வேற எவளையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டன்.

வசீ ச்சை  நீ இவ்ளோ மோசமா இருப்பனு நான் நினைக்கலை உன் ஈகோவுக்காக ஒரு பொண்ணை எப்படிடா ஏன்டா

தயா பிடித்த பிடியிலேயே நின்றான் எனக்கு அவள் வேண்டும் என்று.

அஜ்ஜூக்கு புரிந்தது அவனது காதல் சொல்லிடுவானா என்ன ஈகோ பிடித்தவன் அவன் தோளை தட்டி சொன்னான் சரி மச்சா அவதான வேணும் நான் உன்கிட்ட கொண்டுவரன் அவளை.

யாழி அஜ்ஜூ பைத்தியமா நீ அவனோடு சேர்ந்திட்டு இப்படி பேசிட்டு இருக்க

அஜ்ஜூ ஏய் யாழி அவனை புரியலையா உனக்கு இவ்ளோ பிடிவதாமா ஒருத்தி வேணும்னு நிக்கிறானே இதுல ஈகோ மட்டும்தான் தெரியுதா உனக்கு

வசீ ம** தெரியுது அசிங்கமா கேட்ருவன் ஒரு பொண்ணை டிராப் பண்ணி  கால்ல விழவெச்சி அதும் நடுரோட்டுல அப்றம் அவளயே  கல்யாணம் பண்ணிக்க ஆசபடுவானா தயவு செஞ்சி இதுக்கு புனிதமான அந்த பேரை சொல்லிடாதீங்க

தயாவும் இந்த வார்த்தை வரக்கூடாதென்றுதான் அவன் காதலை சொல்லாமல் அவளை மிரட்டிவிட்டு வந்திருக்கிறான். ஏனென்றால் அவள் அவனுக்கு வேண்டும்.

யாழியும் புரிந்துக்கொண்டாள்.

வசீ முரண்டு பிடித்திட அதையும் இதையும் பேசி நண்பனின் ஆசை அவனது வாழ்க்கை என்று சொல்ல

தயாளினியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர். அவர்களோ குடும்பமென்ற ஒன்றில்லாதவனுக்கு பெண்ணை தரமுடியாது என மறுத்தனர். அதற்குமேல் தயாளினி குதித்தாள்.

தயா மனம் வருந்தினான். தாங்குமா நண்பனுக்கு அவர்களை சேர்த்து வைத்திட எண்ணினான்.

தீபனும்  தயாவும் அஜ்ஜூவை பார்த்து அவனிடம் பேசலாம் ரதியின் நிலையை எடுத்து சொல்லி திருமணம் செய்துகொள்ள சொல்லாம் என்று நினைத்து அவனிடம் சென்றனர்.

அஜ்ஜூவோ அவளை நான் கல்யாணம் பண்ணிக்கனுமானா நீ தயாவை கல்யாணம் பண்ணிக்கனும் என்று செக் வைத்தான்.

ரதியோ உணவு உறக்கம் இன்றி அழுகையிலேயே கரைந்தாள். அவள் நட்புக்கு துரோகம் செய்திருந்தாலும் அவளை ஒதுக்கிவிட முடியவில்லை இருவராலும்.

ஒத்துக்கொண்டாள் தயாளினி. தயாவிற்கு அழைத்தாள்.

ஹலோ இனி

எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்

இனி ஹலோ என்ன சொன்ன ஹலோ

மிஸ்டர் தயாளன் எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். உடனே ஏற்பாடு பண்ணுங்க

தயாவிற்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. சந்தோஷம் தாளவில்லை.

பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி தயாளனை திருமணம் செய்ய சம்மதம் சொல்ல அவர்களோ இத்தோடு உனக்கும் எங்களுக்கும் உறவு முடிஞ்சிது என்று தலைமுழுகினர்.

தீபனுக்கோ ஒருத்தியின் வாழ்வுக்காக இன்னொருத்தியின் வாழ்வை அடகு வைப்பதா என்ற எண்ணம் ஆனால் தயாவோ அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்காக என்று சமாதானம் சொன்னாள்.

ரதிக்கு அஜ்ஜூமீது கோபமே இருந்தாலும் காதல் அதனை மறைத்தது அவனோடு இருந்த ஒவ்வொரு பொழுதும் அவன் பேசியதும் அவளுக்காக சிரமேற்கொண்டு செய்த செயலும் அவனை வெறுக்க வைக்கவில்லை அவனோடு சேரவே விரும்பினாள்.

அதற்காக தயாவின் வாழ்க்கையை அடகு வைத்திட அவளுக்கும் விருப்பமில்லை.

இருவரிடமும் இது வேண்டம் என மன்றாடினாள்.

தீபனோ இதை அவனோட வேணா விட்று ரதி இட்ஸ் டூ லேட் இப்போ நம்மளால ஒன்னும் செய்ய முடியாது உன்னால தயா வாழ்க்கைதான் ஊசலாடுது என்று அவளை திட்டுவிட்டு சென்றுவிட்டான்.

அதன்பின் நடந்ததுதான் அவர்களின் திருமணம் இதையெல்லாம் யோசித்தே அந்த இரவை  கழித்திருந்தாள் இனி.

இன்று…….

காலைச்சூரியன் தன் கரங்களை அவள் மேனியில் படரவிட எழுந்து குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து கண்ணாடி முன் நின்றவள் தன் பிம்பத்தை பார்த்து விரக்தியாக சிரித்தாள்.

அவள் கழுத்தில் மஞ்சள் தாலி கட்டியவன் கட்டிலில் குப்பிற அடித்து தூங்குகிறான் அவள் தூக்கத்தை கெடுத்துவிட்டு.

கண்ணை இறுகமூடி திறந்தவள். வெளியில் சென்றாள்.

அமியோ ஹாய் அண்ணி என்றாள் உற்சாகமாய்.

ஹாய் என்றால் சோர்வாய்.

ஏன் டயர்டா இருக்கீங்க நைட் சரியா தூக்கமில்லையா கண்ணடித்துக் கேட்டாள்.

தயாவிற்கு இந்த கேள்வியில் வெட்கம் வந்திருக்க வேண்டும் ஆனால் எரிச்சல் வந்தது நடந்திருப்பது அப்படி.

அப்படிலாம் ஒன்னுமில்லைங்க அமிர்தா

அட என்ன வாங்க போங்கனு சொல்லிட்டு  வாபோனே கூப்பிடுங்க நான் உங்களைவிட சின்னவதான்

அது சட்டுனு வரலை அதான்

ஓகே சீக்கிரம் பழகிக்கோங்க

ம்ம்ம்

உங்களுக்கு என்ன டீயா காஃப்பியா

உங்களுங்கு ஏன் சிரமம் நான் போடுறன் அமி

அட இதுல என்னருக்கு நானே போடுறன்

இல்ல பரவால்ல நானே போடுறன்

சரி யூஅர் விஷ் எனக்கு பூஸ்ட் அண்ணாக்கு சத்துமாவு கலக்கிடுங்க உங்களுக்கு என்ன வேணுமோ போட்டுக்கோங்க

ம்ம்ம் அமி  ஒரு நிமிஷம்

சொல்லுங்க அண்ணி

நீங்க எது எது எங்கருக்குன்னு சொல்றீங்களா இன்னைக்கி மட்டும் பிளீஸ்

அண்ணி கேட்டா சொல்ல போறன் அதுக்கு ஏன் பிளீஸ்லாம்

எந்தெந்த பொருட்கள் எங்கெங்கு இருக்கிறதென சொல்லிதந்தாள் அவளுக்கு.

அப்படியே அவளோடு வளவளத்திட இனியும் அமியோடு கொஞ்சம் இயல்பாகி இருந்தாள்.

அண்ணி நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கவா

ம்ம்ம் கேளு

அது நீங்களும் அண்ணாவும் எப்படி லவ் பண்ணீங்க பிகாஸ் அண்ணா ஏன்ட்ட எதையுமே மறைக்கமாட்டான் ஆனா உங்க விஷியத்தை மறச்சிட்டானே

பாவம்  நடந்த விஷியம் அவளுக்கு தெரியாததால் அவளிடம் இவ்வாறே சொல்லி இருந்தாள் யாழினி.

தயாவும் தயாளினியும் இரண்டு வருரடமாக காதலிப்பதாகவும் உன்னுடைய திருமணத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். தயாளினி வீட்டில் இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தால் இந்த அவசரதிருமணம். தயா அவளின் பெற்றோரைவிட்டு உன் அண்ணனை நம்பி வந்துவிட்டாள் என சொல்லி இருந்தாள்.

அண்ணனை நம்பி வந்தவளை எப்படி அமியால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியும் உடனே ஒத்துக்கொண்டாள் அவர்களின் திருமணத்திற்கு.

அந்த சந்தேகத்தைதான் அவளிடம் கேட்டாள்.

இனிக்கு புரிந்தது அவன் தங்கையிடம் நல்லவன் வேஷத்தில் இருப்பது.

தயாவோ எழுந்து அறையில் அவனின் மனைவியை தேடிட அவள் இல்லாது போக வெளில் வந்தான். இவர்களின் பேச்சு சத்தம் கிச்சனில் கேட்க அங்கே வந்தான்.

அமியின் கேள்வியில் அவன் வயிற்றில் பயபந்து உருண்டது உண்மை தெரிந்தாள் அமி ஆடிடுவாள் சாமியாட்டம்.

தயா பதறி உள்ளே வர இனி சொன்னாள்.

நான் கொஞ்சம் பயப்படுவன் அதான் யார்கிட்டயும் சொல்ல வேணானு பிராமிஸ் வாங்கிட்டன் ஒருவேளை உனக்கு என்ன பிடிக்கலைனான்ற பயமும் இருந்துச்சி அதான் தயங்கி தயங்கி பொய்ப் பேசினாள்.

அமியோ அண்ணியை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

அச்சோ இவ்ளோ கியூட் அண்ணிய எனக்கு பிடிக்காம போகுமா ஐ லக் யூ வெரி மச் அண்ணி என்றால் குழந்தைபோல.

இனியும் அவளை அனைத்துக்கொண்டாள். தயா உள்ளே வந்து ம்க்கும் என செருமினான்.

இருவரும் அவனைப் பார்த்தனர்.

அமி அவனை நக்கல் செய்தாள். அண்ணி எங்கயோ கருகுற ஸ்மெல் வருதுல

இனி அப்பாவியாய் ஆமா சத்துமாவுதான் அடிபிடிக்க போகுது என்று கிண்டிவிட்டாள்.

அமியோ அண்ணி நம்ம இவ்ளோ க்ளோஸா இருக்கிறது பார்த்து ஒருத்தர்க்கு வயிறு எரியுது என்றாள்.

இனியோ பதில் பேசவில்லை

ஓஓஓ அண்ணாவ கலாய்ச்சா கம்பெனி கொடுக்க மாட்டீங்க அப்படி தான.

பதிலே இல்லை அவளிடம்.

அமிக்கு சந்தேகம் வலுத்தது ஆனால் துருவி துருவி கேட்பது முறையில்லையே என நினைத்து அமைதியாக அங்கிருந்து நகன்றாள்.

அவள் சென்றதும் வெளியே எட்டி பார்த்தவன் அவள் அறைக்கு செல்வது தெரிந்ததும் இனியை அனைத்துக்கொண்டான் பின்னிருந்து.

அவளுக்கோ ஏதோபோல் இருந்தது.

என்னடி பிளாக்ஃபாரஸ்ட் என்னை வெறுப்பேத்த என் தங்கச்சிய கட்டிபிடிச்சிட்டு இருக்கியா

இனி என்னை விடுங்க அவனிடமிருந்து விலக போராடினாள்.

நடக்கிறகாரியமில்லை அது என புரிந்துபோனது அவனது இறுக்கிய அனைப்பில்.

அவள் கழுத்தில் தாடையை பதித்துக் கொண்டான்.

இங்க என்ன பண்ற நான் எழுந்து உன்னை தேடுன. இனிமே நான் எழும்போதும் தூங்கும் போதும் உன் முகம்தான் என் முன்னாடி இருக்கனும்.

இனிக்கு பிடிக்காத திருமணம்  பிடிக்காத கணவன் பிடிக்காத அவனின் தொடுகை இதையல்லாம் சகித்துக் கொண்டு அவனோடு வாழ வேண்டும். அதுகூட பரவாயில்லை ஏதோ ஆண்டான்டு காலமாக காதலித்து திருமணம் செய்தது போன்ற காதல் வசனம் இதை கேட்க கேட்கத்தான் எரிச்சலாக வந்தது.

அவனோ அவள் கழுத்தில் முகம் புதைத்திருந்து அவளது வாசம் பிடித்தான்.

கடுப்பான இனி கழுத்தை பின்னிழுத்து அவனது கன்னத்தை வலிக்குமாறு கடித்தாள்.

ஆஆஆஆஆஆ வலியில் கத்தி விலகினான்.

ஏன்டி கடிச்ச கோபமாக கேட்டான்.

அங்கிருந்த கத்தியை எடுத்தாள் இங்பாரு என்கிட்ட ஓவர் அட்வான்டேஜ் எடுத்து நெருங்குன ஒரே சொருகு என்று கத்தியை அவன் வயிற்றை நோக்கி குத்தும்படி செய்தாள்.

உண்மையிலேயே தயா பயந்துவிட்டான்.

நான் ஒன்னும் ஆசபட்டு உன்னை கட்டிக்கலை விதியேனுதான் கட்டிகிட்ட ரொம்ப ஓவரா போன நான் மனுஷிய இருக்க மாட்டன்.

இந்த கொஞ்சுறது கெஞ்சுறதுக்கெல்லாம் நான் ஆளில்லை மூடிட்டு இரு கடுப்போடு கடுகாய் பொறிந்தாள்.

தயாவிற்கு சந்தோஷம்தான் அழுது வடிந்து கண்ணை வீங்க வைப்பாள் என்று நினைத்திருக்க அவளின் இந்த அவதாரம் அவனுக்கு ரசிக்கும் படியாக இருந்தது.

சிரித்தான் அவளைப் பார்த்து.

பைத்தியமாய்ட்டியா

என் சண்டக்கோழி டி ஐ லைக் இட் என்று அவளை இடைவளைத்து இழுத்தான்.

அவளோ கத்தியை காட்டி மிரட்டினாள்.

தயா விடு இல்லை நிஜமா குத்திடுவன்.

காதலி சுட்டா எதிரி மடியில மரணம் இங்க ரெண்டுமே நீதான் கமான் கில் மீ அவளின் இடையை அழுத்தி பிடித்திருந்தான்.

அவள் உடல் நடுங்கியது. அவன் அருகாமை ஏதோ செய்தது.

விடுடா பொறுக்கி வுமனைசர் விருப்பமில்லா பொண்ணை தொடாத டா ஆம்பளையே இல்ல நீ

அடிக்கடி ஆம்பளை இல்லை இல்லனை சொல்லாத இனி பல்லை கடித்தான்.

அப்படிதான் டா சொல்லுவன் பொறுக்கி பொறுக்கி

பொறுக்கி என்ன பண்ணுவான் தெரியுமா டி என்றான் பற்களுக்கிடையில் வார்த்தையை கடித்து

அவளோ சண்டைக்கோழியாய் சிலிர்த்து நின்றாள்.

அவளை இடையோடு தூக்கினான் இதழை கவ்வினான்.

இதிலெல்லாம் அடங்கினாள் அது தயாளினி இல்லையே கடித்தாள் நறுக்கென்று அவன் இதழை அவன் பிடி நழுவியது. அவள் நகத்தால் அவனின் கையில் கிள்ளினாள்.

தயா அவளை விட்டான். அவளோ விழிகளை உருட்டி மிரட்டினாள்.
இனிமே என்னை தொடாத இல்ல கத்தி அமிய கூப்பிடுவன்.

இத்தனைநேரம் இருந்த இனிமை போனது. கணவன் தொடுகிறான் என அவன் தங்கையிடம் முறையிடுவாளா அந்த அளவிற்கா என் தொடுகை இருக்கிறது மனது வலித்தது.

இனிமே உன்ன தொடமாட்டன் ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.

பொறுக்கி பொறுக்கி என்று அவனை திட்டு வாயை துடைத்தாள். சிங்கில் வாய் கொப்பளித்தாள். அவளது இடையை அவளது துணியாள் துடைத்தாள். அந்த குறுகுறுப்பை போக்கிட.

அமி ஷோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தாள். அவளது மனதில் ஒரு உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது. அண்ணனும் அண்ணியும் விரும்பிதான் திருமணம் செய்துகொண்டார்களா என்ற சந்துகமே அது. ஏனென்றால் தயாளினியின் நடவடிக்கைகள் அவளை அவ்வாறு யோசிக்க வைத்தது.

தயா அவளருகில் அமர்ந்தான்.
தயாவிடமே கேட்கலாம் என அவன் முகத்தை பார்க்க அவன் கன்னத்தில் பல் தடம் இதழும் வீங்கி இருந்தது. கட் பனியன் டிராக்ஸ் அணிந்திருந்தல் அவளின் நகக்கீரலும் நன்றாக தெரிந்தது.

மருத்துவம் படிப்பவளுக்கு புரியாதா என்ன சந்தேகம் தீர்ந்துவிட்டது. அண்ணனை பார்த்து குறும்பு சிரிப்பு சிரிக்க தயாவிற்கு புரியவில்லை அவளது சிரிப்பிற்கான அர்த்தம். அவனோ வேதனையில் இருந்தான்.

அவள் சிரித்துவிட்டு கிச்சன் சென்றுவிட்டாள்.

அஜ்ஜூ வந்தான்.

வாடா என்ன மார்னிங்கே இங்க விஜயம்.

சும்மாதான் என்றவன் பார்வை அவனை ஸ்கேன் செய்து நக்கல் செய்தது.

என்ன மச்சா பர்ஸ்ட் நைட் அமோகமா நடந்திருக்கு போல

ஏன்டா  கத்தி எடுத்து மிரட்டுறா பக்கத்துல வந்தா கொன்றுவேன்னு.

பச்……சும்மா நடிக்காத டா லவ் பைட்ஸ்  இருக்கு உன் பேஸ்ல  fight seenனு புருடா உடுறியா

தயா கண்ணாடியை பார்த்தான்.

அவள் கடித்த தடம் தலையிலடித்துக் கொண்டான். தங்கையின் சிரிப்புக்கான அர்த்தம் புரிந்தது. கூச்சமாக இருந்தது. வயது பெண் இருக்கும் வீட்டில் ச்சை அவனையே நொந்துக்கொண்டான்.

டாம் அன்ட் ஜெர்ரி மாறி வெளிய இருந்துட்டு உள்ளுக்குள்ள நல்லா வேலை பண்றீங்க ரெண்டு பேரும் நக்கல் செய்தான்.

தயா அவனை குனியவைத்து முதுகிலேயே குத்தினான்.

அய்யோ  அம்மா ஏன்டா குத்துற பரதேசி நாயே

அவ கடிச்சிட்டா அவளை அடிக்க முடியலை அதான் உன்னை அடிச்ச

ஏன்டா கோவத்துல கன்னத்துல லிப்ஸ்லதா  கடிப்பாங்களா  போடா டேய் யார்ட்ட கதவிடுற உங்களை எல்லாம் நம்பமுடியாதுடா நல்லவன் வேஷம் போட்டுடு திரியுற பக்கா 420 பசங்க நான்தான் இதுல அப்பாவி

யாரு நீ அப்பாவி வெளியபோய் சொல்லிடாத

இனி தயாக்கு சத்துமாவு கஞ்சி கொடுத்தாள். அஜ்ஜூ வந்திருப்பதாக அமி சொல்ல அவனுக்கும் அதையே கொடுத்தாள்.

அஜ்ஜூவை முறைத்துக்கொண்டே கொடுத்தாள். தயா அதனை கவனித்தான்.

பின் அவன் குளித்து தயாராகிட அமியோட வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தான் அஜ்ஜூ.

அவனை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு எங்கே அமியிடமும் தவறாக நடந்துக்கொள்ள பார்க்கிறானோ என்ற எண்ணம் வந்தது.

அமியை அவளோடே வைத்துக்கொள்ள கிச்சனுக்கு அழைத்தாள்.

கிச்சனிலும்  வந்தமர்ந்துக் கொண்டான்.

தயாக்கு அது பிடிக்கவில்லை. நண்பன் என்றால் ஒரு எல்லை உண்டு இப்படியா வீட்டு சமையல் அறைவரை அதுவும் அமியை தொட்டு தொட்டு பேசி விளையாடுவது எரிச்சலாக வந்தது அவளுக்கு.

அவனை அங்கிருந்து போக சொல்லவும் முடியவில்லை. கோவமாக அவள் அறைக்குச் சென்றாள்.

அங்கே தயா கிளம்பிக் கொண்டு இருந்தான்.

இங்கபாரு அவன் ரொம்ப பண்றான் மரியாத கெட்ரும் அவனுக்கு

தயா யாரு  என்ன பண்ணா உன்ன

அவன் கிச்சன்ல வந்து நின்னுட்டு அமிய தொட்டு தொட்டு பேசுறான் அவனை கண்டாலே புடிக்கலை எரிச்சலா இருக்கு

உனக்கு யாரத்தான் புடிக்கும்

அவன் நடவடிக்கை சரியில்ல

பச்…… அவன் உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா

இல்ல

அப்பறம் என்ன

நீ எல்லாம் ஒரு  அண்ணனா அவன் அமிய டச் பண்ணி பேசுறன் நீ என்கிட்ட தப்பா நடந்துகிட்டானானு கேக்குற

என் பிரண்ட பத்தி எனக்கு  தெரியும் அவங்க சின்ன வயசுலருந்து இப்படிதான் பழகுறாங்க உன் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை பேசாத அமிக்கு தெரியும் அவகிட்ட யார் எப்படி நடந்துக்குறாங்கனு

பல்லை கடித்தவள் கோபமாக அவனை நீ வெளிய போவ சொல்றியா இல்ல நான் வெளிய போகட்டுமா

😤😤😤😤 நான் வரன் போ

கீழே சென்றவன் அஜ்ஜூவை அழைத்தான்.

அர்ஜூன்

சொல்லுடா

வா கிளம்பலாம்

டேய் பயங்கரமா பசிக்கிது  முதல்ல சாப்பாடு அப்றம்தான் மத்ததுலாம்

இனி தயாவை முறைத்தாள். அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.

நல்லவேலையாக காப்பாற்றும் தெய்வமாக யாழியும் வசீயும் யாழினியும் வந்தனர்.

பின் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட அமர எல்லரும் இருப்பதால் அவளும் ஏதும் பேசவில்லை.

எல்லோருக்கும் பரிமாறினாள்.

வசீ நீயும் உக்காரு தயாமா நாங்களே போட்டுப்போம்

இல்லங்கணா பரவால்ல நான் சர்வ் பண்ற

அமி உக்காருங்க அண்ணி ரொம்ப குடும்ப குத்துவிளக்கா இருக்கீங்க

இல்ல பரவால்ல என்றவள் பரிமாறினாள் எல்லோரும் சாப்பிட சாப்பிட அவர்களை பார்த்து பார்த்து கவனித்தாள். அஜ்ஜூவை கண்டுகொள்ளவில்லை.

அஜ்ஜூ சட்னி கேக்க அவள் காதில் வாங்கவில்லை.

ஸிஸ்டர் சட்னி என்றான் மீண்டும்.

அங்கருக்கு எடுத்து போட்டுக்க வேண்டியதான என்றாள் சலிப்பாக அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. எழுந்துவிட்டான்.

தயா அவளை முறைத்தான்.

யாழியோ கைகழுவ கிச்சன் சென்று அவளிடம் ரொம்ப ஓவரா பண்ற என்ன உன் காசுலயா நாங்க சாப்பிடுறோம் இது தயா காசு நீயே இங்க அவனோட சம்பாத்தியத்துலதான் இருக்க என்று சொன்னாள்.

இனியின் சுயமரியாதை அங்கும் அடிபட்டது.  அவளுக்கு இது பிடிக்கவில்லை. அமைதியாக நின்றாள்.

அப்போது காலிங் பெல் அடிக்கப்பட அமி சென்று கதவை திறந்தாள். தீபன் வந்திருந்தான்.

அவனை பார்த்து யாழி முகம் சுழித்தாள். அவனோ தயங்கியவாறே வெளியில் நின்றிருந்தான்.

இனி அவனை அழைக்கவில்லை. அவளே இங்கு தயாவின் தயவில் இருக்கிறாள் இதில் அவனை எங்கிருந்து அழைக்க அப்படியே நின்றாள்.

தீபனுக்குமே ஒருமாதிரி இருந்தது.

அமி அவனைப் பார்த்து வாங்க புரோ ஏன் வாசல்லயே நிக்கிறீங்க வட்டிகாரன்மாதிரி அமி இயல்பாய் பேசிட அவன் வந்தான்.

தயா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு இனியிடம் வரன் என்று சொல்லிவிட்டு தங்கைக்கு நெற்றி முத்தம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

எல்லோரும் கிளம்பிட அமி தீபன் இனி மட்டுமே இருந்தனர்.

அவர்கள் ஏதாவது பேசிக்கொள்வார்கள் என அமியும் அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

தீபன் தயா என அழைக்க அவன் கைப்பிடித்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அவனிடம் நடந்ததையும் யாழி பேசியதையும் சொன்னாள்.

தீபனுக்கு யாழியின் மீது கோபமாக வந்தது.

அழாத இங்க பாரு உன் புருஷனோ உன் நாத்தனாரோ சொன்னாதான் நீ வருத்த படனும் அவ யாரு யாரோ மூனாவது மனுஷி அவ சொன்னதுக்கு ஏன் ஃபீல் பண்ற

எனக்கு ஒரு வேலை வேணும்

தயா ஒத்துப்பாரா இதுக்கு

அவர் என்கிட்ட கேட்டுடா வேலைக்கு போறாரு

பச்…… லூசுமாறி பேசுன அறஞ்சிடுவன்

எனக்கு வேலை வேணும் தீப நான் சுயமா என் காசுலதான் சாப்பிடனும்

சரி நான் இப்போ ஒரு லேப்ல வேலை செய்றன் அங்க கேட்டு பாக்குறன்

இல்ல லேப் வேணா நான் அந்த வேலை செய்ய மாட்டன்

ஏன் அதிர்ச்சியாக கேட்டான்.

அவள் தயாவிடம் பேசியதை சொன்னாள். என் சுயமாரியாதைய இழந்து நின்னுருக்கன் அதுக்கு இந்த வேலையும் ஒரு காரணம் இது வேணா எனக்கு பிளீஸ்

வேற என்ன பண்ண போற

ஏதோ ஒன்னு நான் என் சம்பாதியத்துல சாப்பிட ஆசபடுறன் உதவி பண்ணுவியா மாட்டியா

சரி பண்ற ஆனா நீ அவர்கிட்ட ஒருவார்த்த

என்ன அவரு ஒன்னும் மரியாதைலாம் வேணா அவனே சொல்லு நான் அவன்கிட்ட சொல்லுவன் பர்மிஷன்லாம் கேக்கமாட்ட

அது உங்க பர்ஸனல்

தயா முறைத்தாள் எப்பருந்து நான் நீங்க ஆன

தீபன் அவள் கழுத்திலிருந்த தாலியை காட்டினான்.

தயா கோவமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சிரித்து அவளின் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தான்.

என்ன இது

நாம வேலை செஞ்ச காசு

வீட்டுக்கு அனுப்பிடு

அவங்கதா திருப்பி அனுப்பிட்டாங்க என்ன பண்றது தெரியலை அதான் உன்கிட்ட கொடுக்கிறன். வெச்சிக்க தேவைபடும் அவசரமா ஏதாவது வாங்கனும்னா என்ன பண்ணுவ

வேணா நீயே வச்சிக்க தேவைபட்டா கேக்குறன்.

நம்ம…… நிறுத்தினாள்.

அந்த லேப் என்ன ஆச்சி

இனிமே  எங்கருந்து அதை நடத்த அதான் கட்டுபோட்டு படுக்க வெச்சிட்டானுங்களே எக்யூப்மெண்ட்ஸ்லாம் விக்க ஏற்பாடு பண்ணிட்ட வர காசுல லோன் அடச்சிடுவன்.

மீதிக்கு

நான் வேலைக்குபோறன்ல அதை வெச்சி மேனேஜ் பண்ற

மூர்த்தி தாத்தா என்ன பண்ண போறாரு

அவர்க்கு பென்ஷன் பணம் போதுமாம். சுபாக்காவோட ஹஸ்பண்ட்கு மறுபடியும் வேலை கிடச்சிருச்சி

ரதி……

அஜ்ஜூகிட்ட பேசனும் மறுபடியும்

எனக்கு என்னமோ படபடப்பாவே இருக்கு

எனக்கும்தான்

எப்போ பேசலாம்

நான் போறன் இன்னைக்கி அவன் ஹாஸ்பிடல்க்கு

சரி பேசிட்டு சொல்லு

அமிர்த்தா காலேஜ் கிளம்பிவிட்டாள்.

அண்ணி நான் பொய்ட்டுவரன் பாய் என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்து சென்றாள்.

தீபன் பார்த்து சிரித்தான்.

என்ன இது சின்னபுள்ளதனமா

டேய் என் நாத்தனார் எனக்கு சின்ன புள்ளைதான் உனக்கென்னடா நாங்க கொஞ்சிகிட்டா

தயாவையே புருஷனா  இன்னும் ஏத்துக்கலை அவர் தங்கச்சி அதுக்குள்ள நாத்தனாராகிட்டாளா

இனி பதில் பேசாமல் சென்றுவிட தீபனும் சென்றுவிட்டான். அஜ்ஜூவை காண.

அங்கு நிகழப்போகும் விபரீதம் யாதோ……..

____________

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
      Next epi quick podunko….