அத்தியாயம் 14 ❤
💕 விழிகளால் என்னை கைது செய்தாய்
விடுபட விருப்பம் இல்லாமல் உன்
விழி என்னும் சிறையில்
ஆயுள் கைதி ஆகி விட்டேன்.💕
மஹிமா கல்லூரிக்குள் நுழைந்தாள்.
தனது கனவுகளை நினைவாக்கும் பொருட்டும் பள்ளிப் பருவத்தை விட
அதிகமான மகிழ்ச்சியை அனுபவிக்கும் நோக்கில் இந்த கல்லூரிக்கு அடி எடுத்து வைத்திருக்கிறாள்.
வகுப்பிற்குள் கண்களை அலைய விட்டாள் தன் தோழியர் யாரேனும் இருக்கிறார்களா ?
ஆனால் தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை.
வருத்தமாக கிடைத்த இடத்தில் சென்று அமர்ந்தாள்.
கைப்பையை வைத்து விட்டு அமைதியாக அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
மஹிமாவின் வீட்டில்,
சுவர்ணலதா வழக்கம் போல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எம்பிராய்டரி போட்டுக் கொண்டு இருந்தார்.
தன் கணவனின் அலட்சியம் மற்றும் தன்னிடமும் , மஹிமாவிடமும்
நடந்து கொள்ளும் விதத்தையும் அவரால் தாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் ,
தன் வாழ்வை விட மகளின் வாழ்வு முக்கியம் என சகித்துக் கொண்டு அவருடன் வாழ்கிறார்.
கார் சத்தம் கேட்க தனது எம்ப்ராய்டரி வேலையை எடுத்து வைத்து விட்டு வேகமாக சமையல் அறைக்குள் சென்றார்.
வீட்டிற்குள் நுழைந்து ஷூவைக் கழட்டி விட்டு சோபாவில் அமர்ந்தார்.
சுவர்ணலதா ” காஃபி எடுத்துட்டு வரவாங்க ? “
ராமநாதன் ” வேணாம். கொஞ்ச நேரம் பேசாம இரு. எனக்குத் தலைவலி அதிகமா இருக்கு “
சுவர்ணலதா ” தலை வலிக்குதா ? டேப்லட் போட்றிங்களா ? “
என கேட்டது தான் தாமதம்,
ராமநாதன் ” ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டியா ? போ போய் வேலையைப் பாரு . நான் கேக்குறப்போ காஃபி குடு “
அவரைத் திட்டிக் கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டார்.
சுவர்ணலதாவும் அவரது போக்கிலேயே அவரை விட்டு விட்டார்.
மஹிமா வகுப்பில் வெகு நேரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க
அப்போது ஒரு பெண்ணும் , ஆணும் உள்ளே நுழைகின்றனர்.
அந்த ஆண்மகனின் வசீகரப் புன்னகை இவளைத் தடுமாறச் செய்தது.
அந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போல் இருக்க , அவள் யாரென்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அதற்குள் அப்பெண் இவளைக் கண்டு கொண்டு,
” ஏய் மஹிமா ! இங்க ஜாயின் பண்ணிட்டியா ? ” என்று அவளிடம் வந்தாள்.
அந்த ஆடவனும் மஹிமாவைக் கண்களால் அளவெடுக்க,
மஹிமா அவளைப் பார்த்து, ” ஆமா நீங்க ?
என இழுத்தாள்.
” அதுக்குள்ள மறந்துட்டியா ? நான் சிவரஞ்சனி. உங்கூட டென்த் படிச்சேனே “
மஹிமா சட்டென்று,
” ஆமாம்.சாரி மறந்துட்டேன் “
அவளிடம் மன்னிப்புக் கேட்டாள்.
அருகில் இருந்த ஆடவன் ,
” என்ன சிவரஞ்சனி ! உன் ஃப்ரண்டை எனக்கு இன்ட்ரொடியூஸ் பண்ணி வைக்க மாட்டியா ? “
என கேட்க,
மஹிமா அவனைப் பார்த்தாள்.
கண்களில் குறும்புடன் ,
தன்னை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவளை நோக்கிப் புருவத்தை உயர்த்தினான்.
தலையை ஒருவாறு சிலுப்பி விட்டுக் கொண்டாள் மஹிமா.
சிவரஞ்சனி ” இருடா . இது என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட் மஹிமா.
மஹி ! இவன் என் கூட லெவன்த் அண்ட் ட்வல்த் படிச்சுருக்கான். பேரு கார்த்திக் “
– தொடரும்