14.🌺🌺 தாழம்பூவே வாசம் வீசு🌺🌺
இரவு இரண்டு மணி இருக்கும் ஜீவா இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேனு உங்க அப்பாவுக்கு தெரியுதா என்று ஜன்னல் ஓரமாய் போய் நின்றாள்.
ஜீவா வீட்டிற்கு வருவதை பார்த்தால் வந்து பெட்டில் வந்து படுத்துக்கொண்டாள். ராஜீவிற்கு போன் செய்ய கதவை திறந்தவன்.
சாரி டா மச்சி என தேங்க்ஸ்டா வராமல் போய்விடுவியோன்னு நினைத்தேன் என்று ராஜீவ் கூற.
தங்களது அறைக்கு வந்து முகம் கழுவி வந்தான். எழுந்திரு நடிக்காத 2 மணி வரைக்கும் தூங்காம என்ன பண்ற என நான் உள்ளே வரும் போது ஜன்னல் கிட்ட நின்னுபார்த்தே போலீஸ்கிட்ட ஏமாதரியா என்றதும் அவனது மார்பில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள்.
காலை 4 மணி இருக்க அழ ஆரம்பிக்க ஜீவா வயிறு வலிக்குது என்று கத்த ஆரம்பித்தாள். வயிறு வலிக்குது ஜீவா என்றால் அவன் அம்மாவிற்கு போன் செய்ய கசாயம் செய்யும் முறையை கூறினார்.
அவசரமாக எழுந்து கிச்சனுக்குச் சென்றவன் . வேலைக்காரம்மா படுத்திருந்தவர் எழுந்து உதவிசெய்ய கசாயம் போட்டு கொண்டு வந்து கொடுத்தான்.
குடித்த சிறிது நேரத்திலேயே வயிற்று வலி சரியானது மீண்டும் தனது தாய்க்கு போன் செய்தான் ஒன்னுமில்ல ஜீவா பொய் வலி இருக்கும் நினைக்கிறேன் நாளைக்கு காலைல எதுக்கும் ஹாஸ்பிடல் போயிட்டு வாங்க என்று கூறினார் ஜீவாவின் அம்மா.
என்னங்க நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம் அத்தம்ம கூடவே இருப்பாங்க இங்க பாருங்க எல்லாம் ஒரு ரூம்ல இருக்காங்க அவங்க தொல்ல பண்ற மாதிரி இருக்கும் என்று கூறியவள்.
காலையில் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
இன்னும் பத்து நாள் இருக்கு என மருத்துவர்கூற பத்திரமா இரு வெளியே எங்கேயும் போகவேண்டாம் என்று கூறிவிட்டு ஆபீசுக்கு கிளம்ப அவனை அருகில் அழைத்து மீசைய திருகி கன்னத்தில் முத்தமிட்டாள்.
அரை மணி நேரத்தில் ஜீவாவின் அம்மா போன் செய்தார். ஜீவா ஹாசினிக்கு வலி வந்திடுச்சு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டேன் சீக்கிரம் வந்துவிடு என்று கூற லேபர் வார்டுக்குள் அழைத்துச் சென்ற நேரம் ஜீவா உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்தவுடன் குழந்தை பிறக்கவும் சரியாக இருந்தது ஹாசினி பெற்றோர் ராஜூ அனைவரும் போன் செய்தான் டாக்டர் ஜீவா பெண் குழந்தை பிறந்திருக்கு என்று கூறினார்.
உள்ளே நுழைய ஹாசசினி மயக்கத்தில் இருக்க ஹாசினியின் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டான்.
கண் திறக்க அனைவரும் அவளின் அருகில் சூழ்ந்திருந்தனர் அவளோ கவலையுடன் ஜீவாவை தேட ஹாசினிமா குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருக்குது.
அதனால் குழந்தையை I.c.u.ல் வச்சிருக்காங்க என்று கூடவே ஜீவா இருக்கிறான் என்று கூறினான் ராஜு.
ஹாசினி கண் விழித்து விட்டால் என்றதும் வேகமாக ஹாசினியை பார்க்க வந்தவன் இவன் உள்ளே நுழைய அனைவரும் அறையிலிருந்து வெளியே சென்றனர்.
அவளது நெற்றியில் முத்தமிட்டு ரொம்ப முடியாம போச்சாடா ரொம்ப கஷ்டப்பட்டயா என்று கேட்க பாப்பாவுக்கு என்ன ஆச்சு என்ன அழ ஆரம்பிக்க,
மை லிட்டில பிரின்ஸஸ் ரொம்ப தைரியமானவங்க ஒன்னும் இல்ல ஹாசி னிமா உடம்பு சரி இல்ல அவங்க ரூம்ல இருக்காங்க என்றான். பிறந்து ஐந்து நாட்கள் கழித்து அம்மா நான் எங்க வீட்டுக்கு போறேன் கிராமத்திலிருந்து ரெண்டு பேர் வந்துருக்காங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க என்று கூறி அவளது வீட்டிற்கு சென்றாள்.
🌹🌹ஐந்து வருடங்களுக்கு பிறகு, 🌹🌹
ஞாயிற்றுக்கிழமையாதலால் ஹாசினிக்கு காபி தயார் செய்து வந்து எழுப்பினான் ஜீவா.
தேங்க்ஸ் ஜீவா என்று காபி எடுத்து குடிக்க போனவளின் காபியை எடுத்துக் கொண்டு ஓடினால் ஆராதனா. ஜீவாவின் செல்ல மகள்.
ஜீவா என் காபி என பாவம்டா ஆரா குட்டி அம்மா கிட்ட காபி கொடுத்து விடுங்கள் என்று கூற அப்பா நீங்க எப்படி ஆசையா வாமா வாங்க ஹாசினிமா போங்க குட்டிமா வாங்க குட்டிமா அப்படின்னு கூப்பிடுறீங்க ஆனா இந்த ஹாசினி என, என்னடி அம்மா கூப்பிடாம பேர் சொல்ற என்று கேட்க,
நீ மட்டும் எங்க அப்பாவை எப்படி கூப்பிடுறது வா ஜீவா போ ஜீவாணு சொல்லுவியா ஒரு ஐ.பி. எஸ் ஆபிஸர் அவரை பார்த்து ஊரே பயப்படுது என்று கண்களை உருட்டிக் கொண்டு பேச இரு இரு என்று ஹாசினிக்கு சைகை செய்தான்.
குட்டிமா உனக்கு டான்ஸ் கிளாஸ் டைமாச்சு ராஜிவ் மாமா வந்துடுவான் கிளம்பு என்று அவளை கிளம்ப வைத்தான்.
கிளம்பியவள் ஹாசினி முன்வந்து எங்க அப்பா வா போன்னு கூப்பிட்டினா நான் உன்ன ஹாசினினிணு தான் கூப்பிடுவேன் என்று கூறியவள் பாய் பா, பாய் பாட்டிமா, பாய் ஹாசினி என்று கூறிவிட்டு கிளம்பினாள்.
வீட்டில் சமைப்பதற்கு என்று தனியாக ஆள் ஏற்பாடு செய்திருந்தான். அவர் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.
தங்களின் அறைக்குள் நுழைந்தவன் ஹாசினி படுத்திருப்பதைப் பார்த்து ஹாசினிமா என சொல்லுங்க என்றாள்.
என்ன ஹாசினிமா சொல்லுங்கள் சொல்ற வா போனே சொல்லு என்று கூற இல்லைங்க அவ சின்ன பொண்ணு இருந்தாலும் அவர் சொன்னது கரெக்ட் தானே நான் உங்கள வா போன் சொன்னது தப்போ அத்தம்மா ரொம்ப வருத்தப்பட்டு இருப்பார்களோ என்று வருத்தமுடன் கேட்க.
இல்லடா ஹாசினிமா நீ சின்னப் பிள்ளையிலிருந்து அப்படித்தான கூப்பிடுவ அம்மா உன்னைதப்பலாம் நினைத்திருக்க மாட்டார்கள் என்று கூறினான். என்ன பாப்பா சொன்னது கரெக்ட் தான் நாளைக்கு அவ பெரியவளாகி மருமகனும் மருமகளும் இந்த வீட்டுக்கு வந்தாங்கனா அவங்க முன்னாடி உங்களை வா ஜீவா உன் பெயர் சொல்லி கூப்பிடா சரி இருக்காது நல்லதுதானே என்று கூறியவள்.
கூட விளையாடுவதற்கானஆள் இல்லடா அவ தனியா இருக்கிற அதனாலதான் அவ இப்படி பண்றா உன் கூட விளையாடிட்டு இருக்கா இல்லைங்க கரெக்டா தான் சொல்லி இருக்கா என்று கூறினாள்.
நீ வேற இப்ப மருமகள் சொன்னியா மருமகனுக்கு மக ரெடியா இருக்கா மருமகள் வருவதற்கு மகன் எங்க இருக்கான் சோ ஹாசினிமா பத்து நாள் m.l போட போறேன் நாம குலுமணாலி போக போறாம் என்று கூற போங்க என்றாள்.
எத்தனை வருஷம் ஆனாலும் வெட்கம் மட்டும் போகலைடா என்று கூற ஹாசினியின் போன் ஒலிக்க ஜீவா பட்டு மஹாலில் சிறந்த பட்டு தொழிலதிபரான விருதும் அவள் விகடனில் தேர்வு செய்திருக்காங்க என்று போன் செய்து விஷயத்தை கூறினார்கள்.
அவள் ஜீவாவை கட்டிக்கொண்டாள். தேங்க்ஸ் எல்லாம் உங்களால தான் என்றாள்.ஹாசினிமா இது உன்னோடு திறமைக்கு கிடைத்த பரிசு.
நீங்கதான் எப்ப பாரு டிவில வந்து கிட்டு இருப்பீங்க இந்த தடவை நானும் வருகிறேன் என்று கூறியவளை அணைத்து நெற்றியில்முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தான்.
ஒவ்வொரு சாதனைகளுக்கு பின்னாடியும் அந்தக் குடும்பத்துல இருக்கிற சூழலில் இருக்குமா என்று கூறி அவன் அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
… சுபம்..
🌺🌺என்னதான் திறமை, உழைப்பு தன்னம்பிக்கை, பணம் என்று இருந்தாலும் வீட்டில் உள்ள மனைவியும் குழந்தைகளும் வீட்டிலுள்ள குடும்ப தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கனும் அதுபோல குடும்ப தலைவிக்கு வீட்டில் உள்ள கணவரும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அனைவரும் வாழ்வில் எளிதில் வெற்றி பெற முடியும்.🌺🌺
உங்களின் வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற எனது வாழ்த்துக்கள்.
🌺🌺முடிந்த அளவுக்கு தறியில் நெய்த்த காட்டன் புடவைகளை வேட்டியை வாங்கவும்🌺🌺
என்றும் அன்புடன்.
M.Daisy .
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நன்றி தங்களின் மேலான விமர்சனத்திற்கு. நான் எழுதிய நாவல்களில் லேயே நான் விரும்பி எழுதியது,
Super stry sis nice
மிக அருமை கதை
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.