Loading

 

 

 

13. 🌺🌺தாழம்பூவே வாசம் வீசு🌺🌺

அறைக்குசென்றதுமே என்ன  பண்ண என்னடி  பண்ண என் லிட்டில் பிரின்சஸ்ஸ  என்னடி பண்ண. 

இவ்வளவு பிரச்சனையும் உனக்கு இப்படி ஆனதுக்கு காரணம்இந்த குழந்தைதான்என்று கூறி அழுதாள்.

ஜீவா உ னக்கு இப்படி ஆனால் அதற்கு காரணம் இந்த கரு உருவான நேரம் தான் அம்மாவும் அண்ணியும் பேசிகிட்டு இருந்தாங்க ஜீவா.

படிக்காதவங்க அவங்க தான் பேசிகிட்டு இருக்காங்க நீ படிச்சவ  தானடி உனக்கு அறிவு கிடையாதா?  அவ்வளவு முட்டாளாக நீ இருப்ப என்று நான் நினைத்து  கூட பாக்கல ஹாஸனி.

அவ்வளவு கோபத்தோடு கத்தி கொண்டிருந்தான். என் உயிரை எடுப்பாளா  என் உயிராக இந்த வயதுல  அவ வந்து என்னை காப்பாற்றி இருக்கா நெஞ்சில செல்லவேண்டிய புல்லட் கைல பட்டு இருக்கு என்று கூறியவன்.

வலி தாங்க முடியாமல் அங்கிருந்த சோபாவில் அமர ஓடிவந்து ஜீவா என்றால் என் பக்கத்தில் வரக்கூடாது ஹாஸினி

சரி உன்னோடலாஜிக் படியே  வரேன்  அவ வந்த நேரம் என் உயிர் போயிருக்கும் தானே எதுக்குஇந்த சின்ன ஆபரேஷன் மூலம்  உயிரோடு நிற்கிறேன்உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன். என்று கூற ஜீவாவை கட்டிக் கொண்டு அழ தொடங்கினாள்.

வயிற்றை தடவிக்கொண்டே அழத்தொடங்கினாள். தப்பு பண்ணிட்டேன்  ஜீவா.

எனக்கு தெரியல உனக்கு இப்படி ஆயிடுச்சு என்ற உடனே பயந்துட்டேன் இதுக்கு மேல உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ அப்படின்னு தான் ஜீவா எனவும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எமோஷனலா   முடிவு  எடுக்க கூடாது என்று கூற  அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

கண்ணத்தொட முதல  கண்ணை தொடைத்து விட்டு உனக்கு வேற டேப்லெட் தான் கொடுக்க சொன்னேன் .

வேற டேப்லெட் தான் குடுத்திருக்காங்க பயப்படாதே என்று கூறியவனை  கட்டிக்கொண்டு அழ தொடங்கினாள்.

சாரி ஜீவா இத  மாதிரி எப்பவுமே  பண்ண மாட்டேன் என்று தனது வயிற்றை தடவி அப்படியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிடல் போறேன் என்று மெதுவாக எழுந்திரிக்க ஓடிவந்து தூக்க வர ப்ளீஸ் ஹாசினிமா   என்கிட்ட பேசாத, ப்ளீஸ் என்று அவள்  கெஞ்ச கெஞ்ச அவளை கவனியாது  ராஜீவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு   விரைந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து ராஜீவ்க்கு  ஃபோன் செய்தால் ஹாஸினி.என்ன பண்றாரு என்று கேட்க இன்ஜெக்ஷன் போட்ருக்காங்க  தூங்குகிறான்  என்று கூறினான்.

எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க என்று கேட்டாள். நைட்டு டிஸ்சார்ஜ் பன்னுவாங்க என்று நினைக்கிறன் என்று கூறினான் ராஜீவ் . சரிங்க அண்ணா  நான் எங்க வீட்டுக்கு போறேன் நீங்க அங்க இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது  எனக்கு போன் பண்ணுங்க  என்று கூறி போனை வைத்தாள்.

அறையில் இருந்து கீழே வந்தவள்  ஹாஸனியின் அம்மா ஒரு தகுதி தராதரம் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கனும்.

  இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு கட்டிகொடுத்தது தப்பா போச்சு என்று ஒன்றும் அறியாமல் புலம்பிக்கொண்டு இருக்க.

சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நினைக்கிறேன் எப்ப  பாத்தாலும் தகுதி தராதரம் பார்த்து கட்டிக்கொடுதிருக்கணும்னு சொல்கிறயே.

கடைய வித்த  முழு பணத்தையும் நீங்க வச்சிருக்கீங்க அவங்க அப்பாவுக்கு வாங்குன கடனை அடைத்துவிட்டு மீதி பணத்தை வைத்து அவர் எந்தளவு வந்திருக்கிறார்.

உங்ககிட்ட இருந்து அளவு பணமோ ஆள் பலமோ இருந்திருந்தா உங்களை விட பெரிய  பணக்காரராக இருப்பார்.

நாலு மாசத்துல என்ன  சத்தமாக கூப்பிட்டது  கிடையாது நீ என்னடான்னா கொடுமைப்படுத்தினாங்கனு  சொல்ற.

கல்யாணமான பொண்ணு மாப்பிள்ளைக்கு உள்ள ஒரு பிரச்சினை வந்தாலும் அதை பொறுமையா எடுத்து சொல்லனும். இல்லனா பெத்தவங்க தலையிடக்கூடாது.

குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது இந்த காரணத்தினால்தான் என் பொண்ண நாங்க அப்படி பார்த்துகிட்டோம் இப்படிபார்த்துகிட்டோம்  சொல்லி சொல்லியே ரெண்டு பேருக்கும் பிரச்சனையை பெருசு பண்றதே வேலையா போச்சு.

முதல்ல புடவை வாங்கல, நகை வாங்கல சொன்னீங்க உன் வாயை அடைச்சார்.  இதேபோல தகுதி தராதரம் என்கிற வார்த்தையை உங்க வாயில் இருந்து வரவே கூடாது.

நீங்க  ரெண்டு வாட்டி இதே வார்த்தைய யூஸ் பண்ணிட்டீங்க ஒவ்வொரு டைமும் அவர் இல்ல.

உன்னோட முட்டாள்தனமான பேச்சைக் கேட்டதனால் தான் நான் குழந்தையை வேணாணு  ஹாஸ்பிட்டல் போனேன்  அதனால தான் இப்ப எல்லா பிரச்சினையும் எனது வீட்டுக்கு போறேன் என்றாள்.

என்னது ஹாஸ்பிடல் போனியா எதுக்குடி போன என்று கேட்க குழந்தை வேணாம்னு  தான் உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு என்று கேட்டார் ஹாசினி  அம்மா.

மாப்ள உன் கழுத்தை மட்டும் நெரித்து இருக்க கூடாது உனக்கு இரண்டு அரை விட்டு இருக்கணும் என்றார் ஹாசனின் அம்மா.

அண்ணி நான் கிளம்பறேன் என்று கூறி அவளது அண்ணியை கட்டி கொள்ள நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் என்று கூற  நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள்..

ஜீவா விற்கான உணவு அறை என அனைத்தையும் ரெடி பண்ணி வைத்தால் இரவு 7 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்து ராஜீவ்  வீட்டிற்கு அழைத்துவந்தான். இருவருக்கும் காபி  கொடுத்தால் காபி குடித்தவன் தனது அறையில் சென்று  படுத்துக்கொண்டான்  எந்த மாத்திரை போட வேண்டும் என்று கொடுத்து விட்டு கிளம்பினான்.

  சட்டை  மாற்ற கஷ்டப்பட்டு கொண்டு எழுந்தான் அவள் வந்து உதவி செய்ய வேண்டாம் நானே பாத்துக்கிறேன் என்று கூற பிடுங்கி அவளே  மாற்றி விட்டாள்  நான் தான் சாரி சொன்னேல அப்புறம் என்னபண்ற சாரி என கண்டு கொள்ளாமல் சென்றான்.

இரவு உணவினை ஊட்டிவிட்டு மாத்திரையை கொடுத்து வாய்  துடைத்துவிட்டு படுக்க வைத்தாள்

அவளும் சாப்பிட்டு விட்டு வந்து ஜீவாவின்  அருகில் படுக்க  வாய் பேசாமல் கண்களை மூடி படுத்திருந்தான்  நீ பேச வேண்டாம் ஜீவா.

காலையில் ஜீவாவின் அம்மா வீட்டிற்கு வந்தார்கள். இரவு ஜீவா நடந்த அனைத்து விஷயங்களையும் கூற  அம்மா அந்த கடையை  இன் சார்ஜ் போட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று கூடிய இருங்க என்று கூறினான்.

வீட்டில் ஒரு பெரியவங்க  இருக்கிறது எவ்வளவு அவசியம் என்று இவள் செய்த முட்டாள்தனமான காரியத்தை புரிஞ்சுகிட்ட நீங்க இருந்தா இப்படி இருக்குமா என்று கூறினான்.

ஒருவாரம் ஓடியது ஜீவாவின் உடல்நிலை தேறியது. ஜீவா ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவள் அவனுக்கு உணவு உடை மாற்றுவது உடல் துடைத்து விடுவது சாப்பாடு ஊட்டுவது மாத்திரை கொடுப்பது என அனைத்து வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தால் ஹாசினி.

 

ஜீவாவின் இன்னொரு அன்னையாய் குளிப்பாட்டுவது முதல் அனைத்து வேலைகளையும் அவளே செய்தாள் ஒரு அன்னையாய் அவனைப் பார்த்துக் கொண்டாள்.

ஹாசினியின் அப்பா லண்டன் சென்றிருந்ததால் போனில் நலம் விசாரித்தார்  ஹாசினியின் அம்மா வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

ஜீவாவிடம் மன்னிச்சுக்கோங்க மாப்பிள்ளை ஏதோ கோவத்துல பேசிட்டேன் என்று கூற பொன்னோட  கழுத்தை நெரிசா  யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும்  என்று கூறினான்.

ராஜீவ் மருத்துவமனை அழைத்து செல்ல கையில்  போடப்பட்டிருந்த கட்டு பிரிக்கப்பட்டது வீட்டிலேயே உடற்பயிற்சிசெய்யுங்க சரியாகிவிடும் என்று கூறினார் டாக்டர்.

வீட்டிற்கு வந்தவுடன் அனைத்தும் சரியாகி விட்டது என்று தனது இயல்பான வேலைகளைச் செய்யத் தொடங்கியிருந்தான்.

மாலை 4 மணி அளவில் தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் ஜீவாவின் அம்மாவின் மடியில் படுத்து ஹாசினி  தூங்கிக் கொண்டிருந்தாள்.

அருகில் சேர் போட்டு அமர்ந்தவள் உங்க மருமக என்னம்மா சொல்கிறாள்  என்று கூற ரொம்ப பீல் பண்றா ஜீவா பேசிடு பா அவ வயித்து புள்ளதாச்சி அவபண்ணது தப்புதான் சின்னப்புள்ளத்தனமா உனக்கு ஏதாவது ஆயிடும் நினைச்சிட்டு இப்படி பண்ணிட்டா அந்த டைம்ல எடுத்துச் சொல்ல ஆளில்லை பாவம் ஜீவா பேசிடு என்று கூறினார் ஜீவாவின் அம்மா.

தூங்கியவளையே பார்த்துக் கொண்டிருக்க ஜீவா முகத்த பாத்தியா பளபளப்பா ருக்கு பொம்பள புள்ளையா இருந்தா தான முகம்   ஜொலிப்பா இருக்கும்.

எனக்கும் தெரியும்மா என்னோட லிட்டில் பிரின்சஸ் பொறக்கப் போறா என்று கூறினான் .

இரவு உணவு உண்டு விட்டு வந்து அறையில் படுத்தவளின் உடல் குலுங்கியது.

ஜீவா லேப்டாப்பில் அமர்ந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

  நீ இப்படி அழுது என் குழந்தைக்கு தான் பாதிப்பாகும் முதல்ல அழுவதை நிறுத்து  ஹாசினிமா என.

ஜீவா உன்னுடைய லிட்டில் பிரின்சஸ க்கு முத்தம் வேண்டுமாம்  என்றுகூற

வயிற்றில் காதில் வைத்தவன் பேசத்தொடங்கினான்.  லிட்டில் பிரின்சஸ் என்ன பண்றீங்க அப்பா போன வேலை சக்சஸ் ஆயிடுச்சு என்ன அப்பாக்கு  கொஞ்சம் அடிபட்டுருச்சி நீங்க வந்த நேரம்  தான் அப்பா உயிரோட இருக்கேன். 

இல்லன்னா என்ன ஆகியிருக்குமோ என ஹாசினியின் உடல் குலுங்க ஆரம்பிக்க அவனின்  தலையிணை வயிற்றோடு வைத்து  அழ ஆரம்பிக்க அவளது வயிற்றில் முத்தமிட்டான்.

ஹலோ பிரின்சஸ் என்னுடைய பெரிய பிரின்சஸ் அழுவறாங்க  அவளை சமாதான படுத்திடு வரேன்  என்று கூற அவனது மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.

ஏன்டா இப்படி பண்ன  டேப்லெட் கொடுத்திருந்தாங்க என்ன கேட்காம  கொடுத்திருந்தாங்கன்ன என்ன  ஆகி இருக்கும்னு யோசிச்சு பாரு என்று கூற,

சாரி ஜீவா இனிமேல் அதுபோல்செய்ய மாட்டேன் என்று கூற  சாரிடா குட்டிமா கழுத்தை நெரிசீட்டேன் என்று கூறி கழுத்தில் முத்தமிட சாரி ஜீவா அம்மா அப்படி பேசியிருக்க கூடாது என

என் குட்டி பிரின்சஸ் காக பேசனேன்  அவங்க அவங்க பெரிய பிரின்சஸ் காக பேசினாங்க என்று கூறியவனின் இதழினை i சுவைக்கத் தொடங்கினாள்.

தன் மார்பில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்கவைத்தான் சரியா தூங்கவே இல்ல இந்த பத்து நாளும்அவள்  இதழில் மென்மையாக முத்தமிட்டான்.

 

 

ஜீவா உடல் நலம் தேறிய 15ஆவது நாளிலே அலுவலகம் செல்ல ஆரம்பித்தான்.

ஐந்தாவது மாதமாக வா மிட்டெடுத்துக் கொண்டு இருந்தாள்.  ரொம்ப ஒர்க் பண்னத   கடைக்கு வாரத்தில் இரண்டு நாள் போனால் போதும் என்று கூறினான்.

  மிகவும் மெலிந்து காணப்பட்டாலும் முகம் ஜொலித்தது என்னோட பெரிய பிரின்சஸ் ரொம்ப கஷ்டப்படுறா  ப்ளீஸ் லிட்டில் பிரின்சஸ் அவளைத் தொந்தரவு பண்ணாத அவளின் வயிற்றின் முன்பு அமர்ந்து கூறிக்கொண்டிருந்தான்.

ஹாஸ்பிடல் அழைத்துச் செல்வது ஜூஸ் போடுவது சாப்பிட வைப்பது என அத்தாமாவும்  ஜீவாவும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.

9 மாதம் வளைகாப்பு வைர வளையல்கள் வாங்கி வந்திருந்தான். புடவை புது புடவை தனது தறியிலேயே ஜீவாவின் டிசைனில் செய்யப்பட்டு நேர்த்தியாய் வந்திருந்தது..

வளைகாப்பு செய்யும் நாளும் வந்தது வீட்டிலேயே எளிமையாக செய்து விடலாமே என்று கூற, வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது.  சேரில் அமர வைத்து நலங்கு எடுத்தான்.

ஜீவா கையில் சந்தனம்எடுத்து இரண்டு கன்னத்திலும் வைத்தவன் நெற்றியில் குங்குமம் வைத்து கைகளில் வளையல் பூட்டி நெற்றியில் முத்தமிட்டான்

அனைவரும் வெளியே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க  கண்களால் அறைக்குள் அழைத்தால் ஹாசினி.

வளைகாப்பு நல்லபடியாக முடிந்தது.
அவளின் அறைக்குச் சென்றதும் ஜீவாவின் மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.

ஹே ஹசினி  நீ எங்கு போராடடா உன்  வீட்டுக்குத்தான் போறே என்று கூற  நான் அங்கு போகல  ஜீவா இங்கேயே இருக்கிறேன் என்று கூறி அவனின் சட்டை பட்டனை திருகினாள்.

வேண்டாம்  ஹாசினிமா நீ வீட்டுக்குப் போ பாப்பா கன்பார்ம் ஆன போது போனது உங்க அம்மா என்ன தப்பா நினைப்பாங்க டா என்று கூறி அவன் நெற்றியில் முத்தமிட.

அவள் நீ  தனியே  எப்படி இருக்க நானும் பார்க்கிறேன் என்று கிளம்பினாள்.
நீ என்ன பாக்க வரல நாளும் பரவால்ல உன்னோட லிட்டில் பிரின்சஸ் கிட்ட பேசாம முத்தம் கொடுக்காம  உன்னால இருக்க முடியாது அப்பவந்து பாருடி உனக்கு அப்புறம் இருக்குது என்று கூறினாள். ஹா ஹா ஹா என்று சிரித்தான்
🌺🌺 வாசம் வீசும்🌺🌺

.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்