Loading

12ஜீவாவோ   ஏற்கனவே தனக்கு எதாவது ஆனால் தனது நண்பன் ராஜீவ்க்கு  போன் செய்யச் சொல்லி நம்பரை கொடுத்து இருந்தான்.

மார்பில் பட வேண்டிய புல்லட் யார் செய்த புண்ணியமோ ஜீவாவின் தோளில் பட்டது.

ராஜிவ்  பெரிய மருத்துவமனையில் சேர்த்து உடனே ஆபரேஷன்  செய்யச் சொல்லி மருத்துவரை கேட்டுக் கொண்டதற்கிணங்க இரவு 11 மணி அளவில் ஆபரேஷன் தொடங்கியது.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் புல்லட்  எடுக்கப்பட்டு  தையல் போடப்பட்டது மயக்க நிலையில் இருந்தான் ஜீவா.

வீடிற்கு  போன் செய்து தனது மனைவியிடம் அனைத்து விஷயங்களையும் கூறினான்ராஜீவ்.

ஹாசினி அறைக்கு சென்று டிவியில் பின் வெளியே எடுத்து வைக்கச் சொன்னான். காலையில் எழுந்து கிச்சனுக்குள் நுழைய ஹாசினியின் அம்மாவும் அவளது அண்ணியும் பேசிக்கொண்டிருந்தது கேட்டது இந்த கரு உருவான நேரமோ என்னமோ இப்படி ஆயிடுச்சு என்று கூற.

யாருக்கோ எதுவோ  ஆகிவிட்டது என்று பயந்தவள்  நல்லவனை உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூற அம்மாவிடம் என்ன என்று கேட்க ஒன்னும் இல்லை  சும்மா என்ன வேண்டும் என்று கேட்டார்.

காபி வேணும் என்று கூறினாள் அண்ணி அண்ணா எங்கே என்று கேட்க ஒரு அவசர வேலை அதனால் அவர் வரவில்லை என்று கூறினாள்.

  ஏதோ தப்பு என்று நினைத்து காபி எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வந்தவள் டிவி போட டிவி வேலை  செய்யவில்லை.

போனை எடுத்து  பார்க்க கோயம்புத்தூர் செய்தியை திருப்பினாள் . நேற்று நடந்த அனைத்து விஷயங்களையும் பார்த்தவள் கதறி அழ தொடங்கி ராஜீவ்க்கு  போன் செய்தாள்.

ஹாஸ்பிடல்பெயர்,  ரூம்  நம்பர் என அனைத்தையும் பெற்றுக் கொண்டு காரினை  எடுத்து அவள் எப்படி வந்து சேர்ந்தாள் என்றே அவளுக்குத் தெரியாது.

ஓடிவந்து பார்த்தவள்  மயக்கத்தில் இருக்கும் ஜீவாவை   பார்த்தவுடன் குலுங்கி அழ ஆரம்பித்து அப்படியே சேரில் அமர்ந்தாள்.

ராஜீவ் கைகளை பிடித்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.

ஒன்னும் இல்ல ஹாசனி புல்லட்டை ரிமூவ்  பண்ணிட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கண்விழித்து விடுவான் என்று கூற அண்ணா எனக்கு  ஒரு மாதிரி இருக்கு என நேற்றுபார்த்த டாக்டரை  பார்த்துட்டு வந்துடறேன் என்று கூறியவள் மருத்துவரை பார்க்க விரைந்தாள்.

ஹாசினி அமர்ந்திருக்க என்ன நேத்து தான வந்து இருந்தீங்க என்ன ஆச்சு உடம்புக்கு  என்று கேட்க? இந்த குழந்தை எனக்கு வேண்டாம் என்று கூறினாள்.

ஜீவாக்கு தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவார் என்று கூற வேண்டாம் டாக்டர்  என்று கூற பிடிவாதமாக இருந்தவளை  என்ன காரணம் என்று கேட்க அவள்  கூற மறுத்தாள்.

சரி  இங்கு வெளிய வெயிட் பண்ணுங்க  40 நாட்கள் தானே டேப்லெட் போட்டாலே போதும் டேப்லட் போட்ட ஒரு 6 மணி நேரத்துல அபௌட் ஆயிடும் என்று கூறி வெளியே வெயிட் பண்ணுங்க என்று அனுப்பி வைத்தார்.

ஜீவாவுக்கு மயக்கம் தெளிந்தது. ஹாசினி  வந்தாள்  என்று கூற ஏன் இங்கே இல்லாம எங்க போனா என்று கேட்க அவளுக்கு உடம்பு சரியில்லையாம் நேத்து பாத்தீங்களே  அந்த டாக்டர்கிட்ட போய் இருக்கா என்று கூறினான் ராஜீவ்.

ஏதோ சரியில்லை என்று இவனுக்கு பொறி தட்டியது என்ன பாக்காம கைனகாலஜிஸ்ட் போய் பாக்குற அளவுக்கு என்ன பிராப்ளம் இவளுக்கு என்று நினைத்துக் கொண்டிருக்க போன் ஒலித்தது.

மருத்துவர்தான் பேசினார் ஜீவா உங்களுக்குள்ள  ஏதாவது ப்ராப்ளமா என்று கேட்க ஒன்றும் இல்லை டாக்டர் என்று நேற்று நடந்த என்கவுன்டர் விஷயத்தை கூற  ரொம்ப பயந்துட்டாங்க நினைக்கிறேன்.

அபாஷன் பண்ண சொல்லி வந்து உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கூற  டாக்டர் ப்ளீஸ் எதுவும் பண்ணாதீங்க என்று கூறினான்.

பிறகு அவளுக்கு அபாசன் மாத்திரைக்கு பதில் வேறு ஏதாவது சத்து மாத்திரை கொடுத்து அனுப்பி விடுங்க  அவளை கன்வின்ஸ் பண்ணி கறேன்  என்று கூறி போனை வைத்தான்.

தன் உடல் இருந்த நிலையில் ஹாசினி செய்த செயல்வேறு அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ராஜுவிடம் அனைத்து விஷயங்களையும் கூறினான்.

ஏன் இப்படி  செய்கிறாள் என்றுதெரியலையே ச்சை  என்று கூறினான் ராஜீவ்

ஹாசினியை  அழைத்தவர் ஒரு பேப்பரில் வைத்திருந்த 3 மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து டம்ளரில் நீரை கொடுத்து  மாத்திரையை போட செய்தார் மருத்துவர்.

அவள் அழுதுகொண்டே மாத்திரையை போட்டு தண்ணீரைகுடித்தால்  வெளிய எங்கேயும் போகாதீங்க வலி ரொம்ப அதிகமா இருக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஜீவாவும்  ஆபரேஷன் பண்ண டாக்டரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.  டாக்டர் ஒரு அரை மணி  நேரம்  நான் போய்ட்டு உடனே வந்துடறேன். ஃபேமிலி பிராப்ளம் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க என்று கேட்க  சாரி சார்  வெளியே போனா  இன்பிக்ஷன் ஆகிவிடும்  ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க என்று கூற டாக்டர் நான் போயே ஆகணும் என்று கூறினான் . இன்ஜெக்சன் போட்டு ஜீவாவை அனுப்பி வைத்தார் மருத்துவர்.

வயிற்றை தடவிக்கொண்டே வீட்டிற்கு வந்து அமர்ந்தவள் அழுது அழுது கண்கள் சிவந்து வீங்கி இருந்தது.

அம்மா ஒரு கப் காபி என்று  கேட்க  அம்மா காபியை எடுத்துக்கொண்டு வந்து ஹாசினி இடம்   கொடுத்தார்கள்.

ஹாசினி வாயில் வைத்து குடிக்கப் போன தருணம் ராஜீவும்  ஜீவாவும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

உள்ளே வந்தவன் வேகமாக தனது வலது கையைகொண்டு காபியை  தட்டிவிட கீழே கொட்டியது. அவளை அடிக்க ஒங்க  ராஜீவ்  டென்ஷனாகாதடா என்றான். அவள் கழுத்தை நெரிக்க போனவனை தடுத்தான்.

ஹாசினியின் அம்மாவிற்கு கோபம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.
அந்த மூணு மாசத்துல என் பொண்ணு என்ன என்ன கொடுமை பண்ணியோ ?  என்று வாயை விட இராஜீவ் அம்மா என்று கத்தினான்.

ஹாசினியும்  அம்மா அப்புறம் ஏதாவது பேசினா  மரியாதை கெட்டுவிடும் என்று கத்தினாள்.

  மாடிக்கு வரச்சொல்லி தன் கண்களை காட்டிவிட்டு மெதுவாக மாடி ஏறி   சென்றான்.
🌺🌺 வாசம் வீசும்🌺

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்