Loading

அத்தியாயம் 11 ❤

💕 புதைத்து சமாதி கட்டிய
நம் காதலை
மீண்டும்  தோண்டி
எடுத்துப் புதுப்பித்து
என்ன பயன் 💕

நேரத்தைக் கூறி விட்டு மீண்டும் அலைபேசியில் பேசுவதைத் தொடங்கி விட்டாள் திவ்யா.

மஹிமா ”  ஓகே  ஶ்ரீ . வா  !  கொஞ்ச நேரம் நாம பேசலாம்  “
ஶ்ரீ வந்து மஹிமாவின் அருகில் அமர்ந்தாள்.

மஹிமா ” இப்போ தான் நமக்குப் பேசவே டைம் கிடைச்சிருக்கு.காலேஜ்ல ஜாயின் பண்ணிக்
க்ளாஸைக் கண்டுபிடிக்கவே டைம் – லாம் போய்டுச்சு.நாம ஸ்கூல் படிக்கற அப்போ எவ்ளோ ஜாலியா இருந்தோம்.அந்த ஏஜ்லயே இருந்து இருக்கலாம்னுத் தோனுது  “

ஶ்ரீ  ” எனக்கும் அதே தாட் தான் மஹி. அப்போ எந்த கஷ்டமும் தெரில.ஆனால் இப்போ பி. பி. ஏ – வில் இருந்து எம். பி. ஏ வர்றதுக்குள்ள எவ்ளோ டென்ஷன்.அதுவும் நீ ரொம்ப ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்க “
மெலிதானப் புன்னகையை உதிர்த்தாள் மஹிமா.

ஶ்ரீ மேலும் தொடர்ந்தாள்.
” உங்க அப்பாவோட நேச்சர் – யே அதுதான்னு சொன்ன எப்போ அதை தெரிஞ்சுக்க ஆரம்பிச்ச  ? “

மஹிமா ” அம்மா என்கிட்ட எவ்ளோ பாசமா நடந்துப்பாங்களோ  ! அப்பா அந்த அளவுக்கு ஒதுங்கி இருப்பாங்க. நானும் அதைப் பெருசா எடுத்துக்கல.நான் ஏழாவது படிக்கும் போது
அப்பா மேல கை தவறி காபியைக் கொட்டிட்டேன்.அப்போ தான் அவரோட ரியல்  கேரக்டர் என்னனு தெரிஞ்சுச்சு “

” என்னப் பண்ணாரு  ? ” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

மஹிமா பதில் கூறாமல் கையில் அணிந்து இருந்த பட்டையான கைச்சங்கிலியை அவிழ்த்துக் காட்டினாள்.

அந்த இடத்தில் சிகரெட்டால் சூடு போட்டதற்கான தழும்பு இருந்தது.

ஶ்ரீயின் கண்களில் நீர்த்துளிகள் விழியை விட்டு வெளி வந்தன.

மஹிமா ” ஶ்ரீ  ! இட்ஸ் ஓகே.எப்போவோ நடந்தது நானே மறந்துட்டேன் நீ  ஃபீல் பண்ணாத “
என அவளதுக் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

” என்ன மஹி இது  !!! காஃபி கொட்டுனதுக்கு இப்படி ஒரு பனிஸ்மென்ட் ஆ  ? “

மஹிமா  ” ஆமா. சிகரெட்டால் சூடு வச்சுகிட்டே..  இப்படித்தான் மேல காஃபியைக் கொட்டுவியா  ?   கேர்ஃபுல் ஆக இருக்க மாட்டியா  ? அப்படினு திட்டுனாரு.அம்மாவால அதை தாங்கிக்க முடியல. அப்பாவை எதுத்தும் பேசி அவங்களுக்குப் பழக்கம் இல்ல. அழுதுட்டே இருந்தாங்க.அப்பறம் எனக்கு மருந்து போட்டு விட்டுட்டு இனிமேல் அப்பா இருக்கிறப்போ ரூம்லயே இருன்னு சொல்லிட்டாங்க.

ஶ்ரீ ” அவரு இவ்ளோ பெரிய சேடிஸ்டா. எப்படி மஹி இத்தனை நாள் சகிச்சுக்கிட்டு இருக்க  ? “

மஹிமா ” பழகிடுச்சு. நானாச்சும் பரவாயில்லை. அம்மா எவ்ளோ வருஷம் அந்த வேதனையை அனுபவிச்சுருக்காங்க.இன்னும் அனுபவிக்குறாங்க.அவங்களைதஅ தான் என்னால இந்த கொடுமைல இருந்து காப்பாத்த முடியல “
தோழியின் தோள்களை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் ஶ்ரீதேவி.

மஹிமா ”  நம்ம ஸ்கூல் டேஸ் – ஐப் பத்திப் பேசலாம்  ” என அவர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசத் தொடங்கினர்.

திவ்யா  ” மஹி , ஶ்ரீ  ஏழு மணி ஆகிடுச்சு. வாங்க கடைக்குப் போகலாம் “
அவர்களை அழைத்துக் கொண்டு சென்றாள்.
                              
கார்த்திக் ” தமிழ்  சீக்கிரம் வா. ட்ரஸ் சேஞ்ச் பண்றேன்னு ஒரு மணி நேரமா என்ன தான் பண்றியோ  ? “

தமிழ் ” இரு மச்சி வர்றேன்.பேண்ட் போட முடிலடா  ! “

கார்த்திக் ” போட முடிலனா வேற ட்ரஸ் போட்டுட்டு வாடா “

தமிழ் ” எல்லாமே அழுக்குல இருக்குடா “

கார்த்திக் ” தொவைக்காதது உன் தப்பு.ஒழுங்கா வந்துரு எருமை “

தமிழ்  ” என்ன நேரம் ஆக ஆகப் பேச்சு வேற மாதிரி வருது.இதுக்கு மேல லேட் பண்ணுனா கெட்ட வார்த்தைப் பேசுவானோ  ? “
வேகமாக உடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான் .

கார்த்திக் ” போகலாமா ! இல்ல , இன்னும் எதையாவது மறந்துட்டியா  ? “

தமிழ் ” எதையும் மறக்கலடா  ! போகலாம் வா ”  இருவரும் கடைத்தெரு நோக்கி நடந்தனர்.

மஹிமா, ஶ்ரீதேவி மற்றும் திவ்யா மூவரும் தங்களது தோழிக்கு அழகான ஒரு பரிசை வாங்கி விட்டு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மஹிமா தோழியிடம்  மெய் மறந்து பேசிக்கொண்டு வர அருகில் அவளை உரசுவது போல் வந்த லாரியை கவனிக்கவில்லை.
ஆனால் அதை கார்த்திக் கவனித்து விட அந்த லாரி அவளை இடிக்கப் போகும் நேரம் பார்த்து அவளை தன்புறம் இழுத்தான்.

இழுத்த வேகத்தில் கார்த்திக்கின் மேல் விழுந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
தமிழும் , மஹிமாவின் தோழிகளும் இதைக் கண்ட மாத்திரத்தில் அச்சச்சோ என்று பதற,
மஹிமா தனது கண்களை மெதுவாகத் திறந்தாள்.

தன்னைக் காப்பாற்றியது யாரென்று பார்க்க
அவளை இடையோடு அணைத்தவாறு முகத்தை ரசித்துப் பார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக்.

சில கணங்கள் மஹிமாவின் கண்களும் அவனை ஏறிட கார்த்திக்கின் கண்களைப் பார்த்தால் தன்னைப் பற்றி அவன் கண்டு கொள்வானோ  ! என பதறி அவனின் மேல் இருந்த வெறுப்பை நினைவுபடுத்திக் கொண்டு கார்த்திக்கை  உதறித் தள்ளினாள்.

கார்த்திக் அவள் திடீரென்று தள்ளியதால் சற்று நிலை தடுமாறினாலும்
திடமாக நின்றான்.

மஹிமா ” நீ எதுக்கு என்னை காப்பாத்துன ? ”  அவனது கன்னத்தில்
ஒரு அறையையும் பரிசாகக் கொடுத்தாள்.

கார்த்திக் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டே கன்னத்தைத் தாங்கியபடி நிற்க,

தமிழ் ” ஹலோ ! என்ன நினைச்சுட்டு இருக்கிங்க  ? உங்களை காப்பாத்துனா தாங்கஸ் சொல்லாம அடிக்குறிங்க ! “

மஹிமா ” இவன் யாரு என்ன காப்பாத்த  ? எனக்கு இவனைப் பத்தி நல்லாத் தெரியும்.
என்ன லாரி இடிச்சது  கூட  இவனோட ப்ளான் தான்னு சந்தேகமா இருக்கு “

கார்த்திக் ” ஏய் என்ன உளர்ற  ? அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன்ல தான் ஃபர்ஸ்ட் டைம் உன்னைப் பாத்தேன். அதுக்கு முன்னாடி நீ யாருனே எனக்குத் தெரியாது. என்னப் பத்தி எதுவுமே தெரியாம  என் கேரக்டரைத் தப்பாப் பேசுற  ?  என்ன தைரியம் உனக்கு  ?அமைதியான பொண்ணுனு பாத்தா நீ இப்படி நடந்துக்குற !  ஃபர்ஸ்ட் உனக்கும், எனக்கும் என்ன பகைனு சொல்லுடி ? “

மஹிமா ” ஏய் ! உன்கிட்ட பேசறதே கேவலம்டா !”

அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டதால் ஶ்ரீயும் ,திவ்யாவும் மஹிமாவை இழுத்துக் கொண்டு விடுதிக்குச் சென்றனர்.

தமிழும் , கார்த்திக்கும் காய்கறிகள் வாங்காமலேயே  வீட்டிற்கு சென்றனர்.

மஹிமாவின் இந்த திடிர் நடவடிக்கை ஶ்ரீக்கு குழப்பத்தை அளிக்க அவள்
மஹிமாவிடம் பதில் கூறுமாறு வினவினாள்.
மஹிமாவும் தனக்கும் ,கார்த்திக்கிற்கும் இடையே என்ன பிரச்சனை என்பதைக்  கூற ஆரம்பித்தாள்.

    –  தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்