Loading

 

ஆஷா : உன்னோட ப்ளஸ் பாய்ன்டே  ஃபிசிகல் ஸ்ட்ரெந்த் மட்டும் தான். மென்டல் ஸ்ட்ரெந்த்ல நீ ஜீரோ… என்று அவனை வேண்டுமென்றே வெறுப்பேற்ற, அவன் கோபம் கொண்டு அவளது கழுத்தை இன்னும் நெறித்தான்.

ஆனால் ஆஷாவோ கண்களில் ஒரு வித திமிருடன் அவனையே பார்த்திருந்தாள்.

அதை கநிகாவும், கனியனும் புருவம் சுருக்கி பார்த்திருந்தனர்.

அவனது பலம் அவளை ஒன்றும் செய்யவில்லை. அன்றும் இதே போல் தானே நடந்தது.

கபிலனே ஒரு நொடி அதிர்ந்து போய் கையை எடுத்துக் கொண்டான்.

ஆஷாவின் மனமோ எதையோ யோசித்துக் கொண்டிருக்க, அதே நேரம் அந்த அறையில் இருந்த அந்த மர்ம நபர் “என்ன ஆச்சு??? எனி ப்ராப்ளம்???” என்று புருவம் சுருக்கி கேட்டார்.

கபிலன் : யார் நீ??? என்று அவளின் தலை முடியை பின்னால் இழுத்துக் கொண்டே கேட்டான்.

அவளோ “நீ இன்னும் சின்ன பையன் தான் கபிலா… நீ கத்துக்க வேண்டியது இன்னும் நரையா இருக்கு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.” என்று கண்களை சிமிட்டிக் கொண்டே அவள் கூறவும், இவன் “உனக்கு ஏதோ தெரிஞ்சுருக்கு. என்ன தெரியும்??? நீயா சொல்றியா??? இல்ல நானா தெரிஞ்சுக்குட்டா???” என்று கோபமாக கேட்டான்.

ஆஷா : யூ கான்ட். என்று மெதுவாக முனுமுனுத்தாள்.

கபிலனின் பார்வை கநிகாவை தொட, அவள் ஆஷாவின் கண்களை உற்று பார்த்தாள். அவளது கண்களில் இருந்து இவளால் ஒன்றுமே கண்டறிய முடியவில்லை. தலையை சிலுப்பி கொண்டவள் மௌனமாக எழுந்து நின்றாள்.

கபிலன் : என்ன ஆச்சு??? என்ன தெரிஞ்சுது??? என்று அவன் நிதானத்தை இழந்து கோபத்துடன் கத்தினான்.

கநிகா : அவங்க என்ன நினைக்குறாங்கன்னு என்னால கண்டு பிடிக்க முடியல டா. என்று தலையை குணிந்தவாறு கூறி முடித்தாள்.

ஆஷா : ஓஓஓ ரியலி??? நான் சும்மா தான்ப்பா சொன்னேன். எனக்கு எதுவும் தெரியாது… என்று தோளை குலுக்கி கூறினாள்.

எதற்கும் கோபப்படாத கனியனே கூட கோபமடைந்து அவளின் கண்ணத்தில் அறைந்திருந்தான்.

ஆஷா : ப்ச்ச்… உங்க மூனு பேர்லையும் நீ தான் கொஞ்சம் மெச்யூர்டான ஆள்னு நெனச்சேன். ஆனா நீயும் இப்டி பேசுவன்னு நான் நினைக்கலப்பா… என்று உதட்டை பிதுக்கி கூறவும், மூவருக்கும் அவள் மேல் ஒரு கோபம் துளிர்த்தது.

“கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கியா???” என்று கோபத்தில் கத்திய அந்த மர்ம நபர், “இவங்கள கடுப்பேத்தவே வந்துருக்கியா??? இவள ஏன் கடத்திட்டு வந்திங்க??? அறிவில்ல உங்களுக்கு??? இவள கடத்திட்டு வந்தது வேஸ்ட்.” என்று கோபமாக கத்தினார்.

ஆஷா : நீ வாய மூடு. உன்ன நம்புனதுக்கு நல்லா திருப்பி தரல்ல நீ??? உன்ன மாதிரி ஒரு கேடுகெட்ட ஜென்மத்த நான் பாத்ததே இல்ல. என்று கோபமாக கத்தினாள்.

அதை கேட்டு அந்த மர்ம நபரும் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக நின்று விட்டார்.

கனியன் : ஷட் அப். இவங்கள பேசுற தகுதி உனக்கு இல்ல. என்று கோபமாக கத்தினான். என்றும் இல்லாத கோபத்தில் அவனின் உடல் சிவப்பாக மாறியது.

கநிகா : கனியா… என்று அவனை அழைத்தவாறு அவனின் தோளை தொட்டாள் அவள்.

கனியனோ கோபத்தில் அவளை நெருங்க, கபிலன் அவனை தடுத்தான்.

உண்மையில் அவனது உருவத்தை பார்த்த ஆஷா பயந்து தான் போனாள்.

கண்களில் அதிர்ச்சியை தேக்கி பார்த்தவளை கநிகா திரும்பி பார்த்தாள்.

அப்போது அவளது மனதில் நினைப்பவற்றை அவளால் பார்க்க முடிந்தது.

ஒருவித படபடப்பும் பயமும் அவளிடம் அதிகமாகவே இருந்தது. ஏனோ மனதில் அப்போது தன்னவனை தான் தேடியது. அவனை பற்றி நினைத்த அடுத்த நொடி அவளின் பழைய நினைவுகள் எழ, கண்களில் அந்த சோகம் அப்பட்டமாக தெரிந்தது. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டாள் கநிகா.

கநிகா : அப்போ நீங்க இன்னும் அவங்க மேல கோவமா இருக்கிங்களா??? என்று கொஞ்சம் சோகமாக கேட்டாள்.

அவளை கபிலன் புருவம் சுருக்கி பார்த்தான். அவன் கேட்ட கேள்வியில் கனியன் கூட தன்னிலை அடைந்து இருந்தான்.

ஆஷா : வாட்… என்று அவள் அதே படபடப்புடன் கேட்டாள்.

கநிகா : அதான்… கார்த்திக்??? என்று கேட்கவும், இவளது கண்கள் அகல விரிந்தது.

ஆஷா : என்ன??? அது எப்டி உனக்கு தெரியும்???? என்று கேட்கவும், கநிகா ” அதெல்லாம் தெரியும்… சொல்லுங்க… உங்களுக்கு அவங்க மேல கோவம் இருக்கா இல்லையா???” என்று நிருத்தி நிதானமாக கேட்டாள்.

ஆஷா : தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். என்று கூறியவள் அப்போதும் குழப்பத்திலேயே இருக்கவும், அவளது கண்களை பார்த்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவள் “ஓஓஓ… அவங்கள நீங்க பாக்கனுமோ???” என்று கேட்டவளை அவள் கோபமாக பார்த்தாள். அழையா விருந்தாளியாக கண்ணீரும் சேர்ந்தே வந்தது.

கனியன் : பார்ரா… நீங்க அழலாம் செய்விங்களா??? என்று கேட்ட பிறகே தான் அழுததே அவள் உணர்ந்தாள்.

கண்ணீரை துடைக்க கூட முடியாமல் அவள் அமர்ந்திருப்பதை பார்த்த கநிகா அவளின்‌ கண்ணீரை துடைத்து விட்டாள்.

ஆஷா : என்ன திடீர் பாசம்??? என்று முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு கேட்டவளை பார்த்த கபிலன் “நீங்க ரொம்ப சாஃப்ட். ஆனா, ரஃப் மாதிரி நடிக்குறிங்க. ஏன்???” என்று அவளை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே கேட்டான்.

ஆஷா : உன்ன மாதிரியா?? என்று தன்னிலைக்கு வந்தவள், வாழைபழத்தில் ஊசியை இறக்குவது போல் சடாரென்று கேட்டு விட்டாள்.

அதை கேட்டவனின் மனமோ வாடி போனது.  கண்களில் அவனது சோகம் அப்பட்டமாக தெரிய, அதை பார்த்தவளின் இதழ்கள் ஏளனமாக விரிந்தது.

கனியன் : நீங்க அப்பப்போ ஹர்ட் பண்ற மாதிரி பேசியர்ரிங்க… என்று வெளிப்படையாகவே கூறி விட்டான்.

ஆஷா : தம்பி…. இன்னும் வாழ்க்கைல எவ்ளவோ இருக்கு. இதுக்கே ஹர்ட் ஆனா எப்டி?? நான் கூட உங்க கதைய கேட்டு நீங்க கொஞ்சமாச்சும் மெச்யூர்டா இருப்பிங்கன்னு நினைச்சேன்… என்று அப்போதும் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் கூற, மற்றவர்கள் “இவ கிட்ட மனுஷன் பேசுவானா…” என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர்.

*
*

அதிதி கார்த்திக்கை அதிர்வுடன் பார்த்தாள்.

கார்த்திக்கோ அதற்கு மேல் அடக்க முடியாகமல் கரையில் மண்டியிட்டு கதறி கதறி அழுதான். அவனின் கண்ணீரிலேயே அவனது காதல் மற்றவர்களுக்கு புரிந்து போனது.

இருந்தும் அனைவரும் அவனை வித்தியாசமாக பார்க்க, அக்ஷித் “என்னது???” என்று எதுவும் புரியாமல் அவன் கேட்க, இவன் அவனை திரும்பி பார்த்தான்.

அக்ஷித் அப்படியே ஆஷாவை உரித்து வைத்தாற்போல் இருக்க, அவன் அருகில் பயந்து போய் நின்று கொண்டிருந்தவளோ அதிதியை போல் இருந்தாள்.

கார்த்திக் இருவரையும் மாறி மாறி பார்க்க, ஆஷிஷ் “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இத எப்டி நாங்க நம்புரது?” என்று அவன் முகத்தை சுருக்கி கேட்டான்.

அதை கேட்ட கார்த்திக் அதிதியை பார்க்க, அவளும் அமைதியாகவே நின்றிருந்தாள்.

கார்த்திக் தனது ஃபோனில் ஆஷாவும் இவனும் மாலையும் கழுத்துமாக நிற்பது போன்ற புகைப்படத்தை காட்ட, அக்ஷித் “இது உண்மையா??” என்று புருவம் சுருங்க கேட்டான். அவனுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை என்றாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனிடத்தில் இருந்தது.

அதிதி : இது… ஆஷாவோட பசங்க தான். என்று கூறவும், அவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகே அனைத்தும் விளங்க, இருவரையும் இழுத்து அருகில் நிறுத்திக் கொண்டான்.

அஷ்மியோ அவன் தொட்டவுடன் பயந்து போய் தேம்பி தேம்பி அழ, அக்ஷித் “விடுங்க அவள.” என்று கோபமாக கூறி, அவளின் கையை பிடித்து, தனக்கு அருகே நிறுத்திக் கொண்டான். கண்களில் அப்படி ஒரு கோபம்.

கார்த்திக் : முழிய பாரு… அப்டியே அவங்க அம்மா மாதிரி… என்று முனுமுனுக்கவும், அதிதி “ப்ச்ச்… நீ உள்ள வா முதல்ல. இந்த பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம்…” என்று அஷ்மியை தூக்கிக் கொண்டு அவள் உள்ளே நுழைந்து கொண்டாள்.

ஆருஷி : நானும் தான் மா… என்று கத்தவும், அவள் அருகில் நின்று கொண்டிருந்த அவளது தமையனோ அவளது தலையில் ஒரு தட்டு தட்ட, கடுப்பானவள் அவனை முறைத்தாள்.

அதை எப்போதும் போல் கார்த்திக் புன்னகையுடன் பார்த்திருந்தான்.

*
*

அவர்கள் சென்றதை பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தளை ஒரு புருவ முடிச்சுடன் பார்த்து விட்டு சென்றார் அந்த மர்ம நபர்.

அவர் சென்றதும், இவள் ‘இனி எப்டி இங்க இருந்து தப்பிக்குறது???’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள்.

அவளை பற்றி தெரிந்தவர்களாக, அறையில் ஒரு கூர்மையான பொருளும் இல்லை. தண்ணீர் பாட்டில் கூட இல்லை என்பதை உணர்ந்தவளுக்கோ தாகம் எடுக்க, “கடவுளே…. தண்ணி கூட குடுக்க மாட்டியா??” என்று வாய்விட்டே அவள் புலம்ப, அது கடவுளுக்கு மட்டும் தான் கேட்டது போலும். இவளை கடத்தி வந்தவர்களுக்கு கேட்கவில்லை.

அவர்களோ இங்க பெரிய ஹாலில் நால்வரும் அமர்ந்திருக்க, கநிகா “அவங்க இப்டி பேசுற ஆள் இல்ல. நம்ம கிட்ட மட்டும் தான் அவங்க அப்டி பேசுறாங்க. ஏன்???” என்று மனதில் நினைத்த கேள்வியை பாதியிலையே அவள் முடிக்க, அதை யாரும் உணர்ந்திருக்கவில்லை.

கபிலன் : நீ எதையோ மறைக்குறையோன்னு தோனுது. என்று அவளை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே அவன் கேட்க, இவள் “ஒன்னும் இல்ல…” என்று முடித்துக் கொல்ல, கனியனும், கபிலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவள் அப்படி தான்… ஒரு சில நேரம் அவள் இப்படி மனதில் நினைப்பதை மறைத்து பேசினாலும் இவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அவள் தான் அனைவரின் மனதில் நினைப்பதையும் எளிதாக கண்டு பிடித்து விடவாள்.

ஆனால், அவள் மனதில் நினைப்பதை எளிதில் கண்டறிய முடியாது.  அதை நினைத்து சில முறை அவர்கள் கவலை பட்டதும் உண்டு. அவர்களிடம் சொல்லாமல் இவள் பலகை யோசித்து செயல்படுவாள்.‌ அதே போல் அவள் செய்யும் சில விஷயங்கள் மட்டும் தான் இவர்களின் நிலைக்கு காரணம் என்பதை இவர்கள் இப்போது அறிய போவதில்லை…

கனியன் : அவங்க தப்பிக்க ட்ரை பண்ணுவாங்க…. எதாவது பண்ணனும். என்று அவன் சோஃபாவில் நன்றாக சாய்ந்து அமர்நது கொண்டு கேட்டான்.

“இது எல்லாம் வெளிய தெரியாம பாத்துக்கோங்க. அப்போ தான் அது நமக்கு நல்லது…” என்று கூறி விட்டு அவர் அங்கிருந்து நகர்ந்தார்.

அதை மற்றவர்கள் ஏதோ ஒரு யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கநிகா : இப்போ என்ன ப்ளான்??? என்று எங்கோ வெறித்தவாறு கேட்டாள்.

கனியன் : அது… இப்போதைக்கு எதுவும் இல்ல. கொஞ்ச நாள் போகட்டும். என்றான் புருவ முடிச்சுடன்.

கபிலன் : இல்ல… எனக்கு அது சரியா படல. இப்போவே பண்ணனும்… என்று கூறுபவனை என்ன செய்வதென தெரியாமல் பார்த்தனர் மற்றவர்கள். இது தானே அவனிடம் அவர்களுக்கு பிடிக்காதது. எதுவாக இருந்தாலும் உடனடியாக செய்து விட வேண்டும் என்று நினைப்பவன்.

கநிகா : இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்… என்று கூறியவளை திரும்பி பார்த்தவன், “அப்போ உண்மைய சொல்லு…” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான். கநிகா கூறினால் தானே… அவள் வாயை கூட திறக்கவில்லை.

கபிலன் : அப்போ கண்டிப்பா நடக்கட்டும்… ப்ரிபேர் பண்ண சொல்லிடுங்க… என்று கூறி விட்டு செல்பவனிடம் இதற்கு மேல் பேச முடியாது என்பதை உணர்ந்தவர்களாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கநிகா : அவங்க பாவம்… இருந்தாலும் இவன் இவ்ளோ பெரிய கோவக்காரனா இருந்துருக்க கூடாது… என்று முகத்தை சுருக்கி கூறினாள்.

*
*

அடுத்த நாள் :

ஆஷாவை ஒரு பெட்டில் படுக்க வைத்திருந்தனர். அனைவரின் கண்களும் ஒரு வித பதட்டத்துடன் அவளையே பார்த்திருந்தது.

ஆஷா : என்ன பண்றிங்க??? என்று தன் கையையும் காலையும் அசைக்க முயன்று தோற்று போனவளாய் கேட்டாள்.

அதற்கு பதிலேதும் கூறாமல் மற்றவர்கள் அமைதி காக்கவும், இவள் கொஞ்சம் கடுப்பானது உண்மையே. கோபத்துடன் கையையும் காலையும் அசைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவளை பார்த்தவர்களின் மனம் கொஞ்சம் கூட இறங்கவில்லை போலும்.

அதே நேரம் அந்த மர்ம நபர் கையில் ஒரு ஊசியுடன் அவள் அருகில் வரவும், இவள் “நோ…” என்று அலறினாள். அது என்னவென்று புரியாது நிலையுலும் கூட அவளுக்கு அபாய மணி அடித்தது. கண்களில் பயம் தெரிய கூடாது என்று அவள் நினைத்தாலுமே கூட அவள் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த சிறிய பயம் வெளியே தெரிந்தது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த மர்ம நபர், அவளின் கையில் அந்த ஊசியை போட்டு விட்டு அவளை ஏறிட்டார். அவளோ சிறிது நேரத்தில் வலியில் துடிக்க ஆரம்பித்து விட்டாள். அவளது உடல் மேலே எழும்ப துடிக்க, அவளது கை மற்றும் காலில் கட்டப்பட்ட கயிர்கள் அதை தடுத்தது. இருந்துமே அவளது உடல் மேலே எழும்புவதை நிறுத்தவில்லை. அவளது உடலில் ஆங்காங்கே நீல வண்ணத்தில் ஏதோ மிளிர ஆரம்பித்தது. அதை பார்த்ததும் முதல் படி சக்சஸ்… என்பது போல் கட்டை விரலை தூக்கி காண்பித்தார் அந்த மர்ம நபர்.

சிறிது நேர்த்தில் அவளது உடல் அசைவற்று நின்று விட, கநிகா மட்டும் ஒரு வித பயத்துடன் அவளை பார்த்தாள். அவளது பயத்தை போக்கும் வகையில் ஆஷா கண் விழித்தாள். கண்கள் நீல நிறத்தில் பளிச்சிட்டது.

அதை அவள் உணராது ஒரு வகையான பயத்தில் இருந்தாள்.

கநிகா : இது தப்போன்னு தோனுது. என்று கூறியவளை திரும்பி பார்த்த கபிலன் “அதெல்லாம் கவல படாத. இவங்களுக்கெல்லாம் பாவம் பாக்க கூடாது.” என்றான் முறைப்புடன்.

கநிகா எதையோ கூற வரவும், அவளை தடுத்தான் கனியன். “போதும் பேசாத…” என்று முறைப்புடன் கூறி விட்டு அவன் நகர்ந்து விடவும், இவளுக்கு தான் ஆஷாவை நினைத்து அழுகையே வந்து விட்டது.

ஆஷாவோ பயமும் சோர்வும் கலந்து கண்களை மூடியவாறு படுத்திருந்தாள்.

கநிகா அவளை தொட வரவும் கபிலன் அவளை அழைக்கவும் சரியாக இருக்கவும், இவளும் ஆஷாவை பாவமாக பார்த்தவாறு சென்று விட்டாள்.

*
*

ஆருஷி அர்ஷதை முறைத்துக் கொண்டே “அப்பா… இவன் என்னோட தலைல தட்ரான்.” என்று கோபமாக கத்தியவாறு அவள் ஓட, அர்ஷத் கடுப்பாகி “இல்லப்பா. இவ பொய் சொல்றா.” என்று இவனும் சேர்ந்து கத்தவும், அதிதி “இப்ப ரெண்டு பேரும் அமைதியா இருக்கிங்களா? இல்ல அடி வேணுமா?” என்று கத்தினாள். அவளது சத்தத்தை கேட்டு இருவரும் அமைதியாகி தலையை தொங்க போட்டுக் கொண்டு வந்தனர்.

இங்கு அக்ஷித் அஷ்மின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கண்களில் ஒரு வித பதட்டம் தெரிந்தது.

ஆருஷி : என்ன ஆச்சு உங்களுக்கு??? என்று அவனுக்கு அருகே சென்று கேட்டாள்.

அக்ஷித் : ஒன்னுல்ல… என்று அவன் கூறவும், அர்ஷத் “இங்க வரியா கொஞ்சம்???” என்று அவளின் கையை பிடித்து தனக்கு அருகே வைத்துக் கொண்டான்.

ஆருஷி : நீ கைய விடு டா. என்று கையை உதற போக, அர்ஷதோ அவளின் தலையில் கொட்டி விட, அவளோ வலியில் அழ தயாராக கார்த்திக் அவளை தூக்கி சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

ஆஷிஷ் : ஏன்டா அவள அடிக்குற?? என்று சலிப்புடன் கேட்டான். ஆஷிஷ் அவனின் புதல்வனிடம் பேசி பேசியே டயர்டாகி விடுவான்.

அதிதி : ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க. என்று கோபத்தில் கத்தியவள், கார்த்திக்கை ஏறிட்டாள். கண்களில் ஒரு கோபம் இருந்தது. அதை ஆஷிஷ் உணர்ந்து கொண்டான்.

அக்ஷித் : அம்மா எங்க??? அவங்கள பாக்கனும். என்று அழுவது போல் கேட்டான். உதடு பிதுங்கி அழ தயாரான சிறு பிள்ளை போல் அவன் நிற்க, அவனுக்கு பின்னே பயந்து போய் நின்றிருந்தாள்  அஷ்மி.

அதிதி : அம்மா வந்துருவாங்க. நீங்களே பாத்திங்க தான? அவங்க கெட்டவங்க கூட சண்ட போட்டாங்க. உங்க அம்மா ரொம்ப ஸ்ட்ராங்க்ல. அதான்… என்று அவனை சமாதானம் செய்யும் வகையில் கூறவும், அஷ்மி “அம்மா நைட்லாம் வீட்டுல இருக்க மாட்டாங்க.” என்று பயந்து போய் கூறினாள்.

அக்ஷித் : அம்மா வெளிய போக மாட்டாங்க பாப்பா. பக்கத்து ரூம்ல தான் இருப்பாங்க. நம்ல தனியா விட்டுட்டு அவங்க போக மாட்டாங்க. என்றான்.

ஆஷிஷ் : உங்க அம்மாவ பத்தி கொஞ்சம் செல்லுங்களேன்… என்று தன் மனதில் உதித்த சந்தேகத்தை தீர்க்க கேட்டு விட்டான்.

அக்ஷித் : அது… அம்மாக்கு காஃபி சுத்தமா பிடிக்காது. அதுவும் நாங்க ரெண்டு பேரும் கேட்டா அழ ஆரம்பிச்சுடுவாங்க. அஷ்மிக்கும் அம்மாக்கும் தான் சண்ட வரும். என்று தனது தாயின் நினைவில் கண்கள் கலங்க கூறியவன் தொடர்ந்தான் “அம்மா கொஞ்ச நாளா எதையோ யோசிச்சுட்டே இருந்தாங்க.” என்றான் யோசனையுடன்.

கார்த்திக் : இவங்க வீட்டுக்கு போய் பாத்தா தெரியும். என்று கூறவும், மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

*
*

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஆஷாகிட்ட இருக்குது ஸ்பெஷல் பவரு, சின்ன பசங்க அவகிட்ட மோதறது ரொம்ப தவறு…