Loading

ஆஷிஷ் தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு அந்த அப்பார்ட்மெண்ட்க்குள் நுழைந்தான். அங்கு இவனது ஆருயிர் நண்பனோ, போதை தலைக்கேறிய நிலையில் சோஃபாவில் சாய்ந்திருந்தான்.

அதை பார்த்தவனோ, கோபம் கொண்டு, அருகில் உள்ள நீரை அவன் மீது ஊற்றினான். அருளோ அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான்.

அருள் : ஏன்டா இப்டி பண்ண என்று முகத்தை தனது கையால் துடைத்துக் கொண்டே போதை இன்னும் தெளியாமல் உளறினான்.

ஆஷிஷ் : என்ன கருமத்துக்கு இப்டி குடிச்சுட்டு கிடக்குற? என்று கோபமாகவே கேட்டான்.

அருள் : அவ தான் டா. என்னமோ அண்ணன் தான் உலகம்னு என்ன வேண்டாம்னு சொல்லிட்டா. என்று கூறியவை புருவ முடிச்சுடன் பார்த்தான்.

ஆஷிஷ் : யாரு டா அவ என்று அவனும் ஆர்வத்துடன் கேட்டான்.

அருள் : தீக்ஷ்ஷி மச்சி… ரொம்ப பண்றா டா… அவள எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா??? என்று முனுமுனுத்தவன், அப்படியே மயங்கி சரிய, ஆஷிஷோ அண்ணனுக்கே உரிய கோபத்துடன் நின்றிருந்தான். வேகவேகமாக அவனை பிடித்து உளுக்கினான். அதிலும் போதை தெளியாத அருளின் முகத்தில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து ஊற்ற, அதில் கொஞ்சம் போதை தெளிந்தவன், “என்ன டா???” என்று முகத்தை தேய்த்துக் கொண்டே கேட்டவனை பார்த்து “தீக்ஷ்ஷிய லவ் பண்றியா???” என்று முறைப்புடன் வினவினான்.

அதில் அதிர்ந்து போனான் அருள். “அது… மச்சி… உனக்கு எப்டி தெரியும்???” என்று திக்கித்தினறி அவன் கேட்டிட, அவனை பார்த்து முறைத்த ஆஷிஷ் “அவ சின்ன பொண்ணு தான். அவ கொஞ்சம் பெருசாகட்டும். ஐ மீன், சாக்ஷ்ஷிக்கு மேரேஜ் முடுஞ்சதுக்கு அப்றம் பாத்துக்கலாம். அப்பவும் அவளுக்கு ஓகேன்னா மட்டும் தான். புரிஞ்சுதா??? அது வரைக்கும் அவள டிஸ்டர்ப் பண்ண கூடாது.” என்று அவன் கொஞ்சம் முறைப்புடன் கூறிட, அருளுக்கோ செம்ம சந்தோஷம்.

*
*

அதிதியும் கார்த்திக்கும் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர். இவர்களின் தாய் சிலிண்டர் வெடித்து இறந்து போய் இருந்தார். இப்போது அவர் இறந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. அதை நினைத்தே அதிதி அழுது கெண்டிருந்தாள். அதே நேரம் அவளுக்கு மும்பையில் ஒரு பெரிய பொட்டிக்கில் வேலையும் கிடைத்திருந்தது. அவளுக்கு அங்கு வேலை செய்ய வேண்டும் என்பது தான் கணவே. அங்கு செல்லலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கவும், கார்த்திக் தான் “போயிட்டு வா…” என்று அவளின் கையை அழுத்தி பிடித்தான். அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை. தனக்கும் ஒரு மாற்றம் தேவை என்பதை அவள் உணர்ந்திருந்தாள் போலும்.

*
*

ஒன்பது வருடங்களுக்கு பின் :

சென்னை :

கார்த்திக் கண்களில் நீருடன் கட்டிலில் சாந்திருந்தான். அவனின் நினைவு முழுவதும் தன்னவளே நிறைந்திருந்தாள். அவளை தான் ஏமாற்றி விட்டோமா, என்ற கவலை அவனுக்கு. கண்களில் இருந்து வந்த நீரை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை. எப்படியும் அவள் சமாளித்து விடுவாள் என்று இவனுக்கும் தெரியும். அவளது மன தைரியம் அப்படி. அவளிடம் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால், அவள் இவனை நம்பினாள். அதற்கு இவன் நம்பிக்கை துரோகம் செய்தது போல் ஆகி விட்டது.

இவனின் நினைவு முழுவதும் அன்று அவள் சொல்ல வந்தது தான் நினைவில் இருந்தது. இறுதியாக அவன் உண்மையை சொல்லும் முன் அவள் ஏதோ கூற வந்தாள். ஆனால், அதையெல்லாம் அவன் கேட்டதாக தான் தெரியவில்லை.

அவள் எவ்வளவோ தான் கூற வருவதை மட்டும் கேட்கும் படி கேட்டிருந்தாள். ஆனால், இவனது அந்த அவசர புத்தி அதை கேட்க விடாமல் செய்திருந்தது. அதை நினைத்து இப்போது வருத்திக் கொண்டிருக்கிறான்.

*
*

ஆஷிஷ் வேகவேகமாக படிகளில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.

ஆஷிஷ் வர்மா :

Diamond groups of Companiesஇன் MD மற்றும் CEO. இவனுக்கு அனைத்தும் சரியாக நடக்க வேண்டும். சிறிது தாமதமானாலும் எதிரில் நிற்பவர் காலி. அதனாலையே அனைவரும் இவனை கண்டு ஒதுங்கி தான் செல்வார்கள். சிறு வயதிலேயே தாயை இழந்தவன். இவனுக்கு ஆறு வயது இருக்கும் போதிலிருந்தே விடுதியில் தங்கி படித்தான். அதனாலையே தனது தந்தை உருவாக்கிய சாம்ராஜியத்தை தவிர்த்து விட்டு, தனக்கென்று ஒரு சாம்ராஜியத்தை உருவாக்கிக் கொண்டான்.

படிகளில் இருந்து இறங்கி வந்தவனின் கண்களில் முதலில் பட்டதென்னவோ இவனது ஆசை மணைவியான அதிதி தான்.

ஆஷிஷ் அவளை பார்த்து புண்ணகைத்தவன், “பேபி…” என்று முனுமுனுத்துக் கொண்டே அவளை ஓடி சென்று அனைத்திருந்தான். அதை கேலியாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள். அதாவது, அருள்-தீக்ஷ்ஷி மற்றும் அவினாஷ்-சாக்ஷ்ஷி.

அனைவருக்கும் திருமணம் முடிந்து இருந்தது. இதில் அவினாஷ் மற்றும் சாக்ஷ்ஷியின் காதல் கதை கொஞ்சம் சுமூகமாக முடிந்து விட்டிருந்தது. ஆனால், மற்றவர்களின் காதல் கதைகள் கொஞ்சம் கரடு முரடாகவே தான் இருந்தது.

அதே நேரம், அருள் “மச்சி… நேத்து “ஆஷா”ன்னு ஒருத்தவங்க உன்ன பாக்க வந்துருந்தாங்க மச்சி. அவங்க டிடெக்டிவாம். நம்ம வீட்டுல கொஞ்ச நாளா யாரோ வந்துட்டு போறாங்கன்னு உன்னோட பி.ஏ கிட்ட சொல்லிருந்தல்ல. அதான் அவன் இந்த பொண்ண அனுப்பிருக்கான். நான் இன்னிக்கு நைட் வீட்டுக்கு வாங்கன்னு சொன்னான்…” என்று கூறியபடி அவன் சாப்பிட அமர்ந்து கொள்ள, அதே நேரம் இவர்களின் பிள்ளைகளும் இவர்களை சூழ்ந்து கெண்டனர்.

அதிதி : எல்லாரும் போய் உக்காந்தா தான் சாப்பாடு. என்று கராராக கூறினாள்.

ஆஷிஷ் : ஏய்… ஏன்டி பிள்ளைங்கள மெரட்டுர??? என்று முறைத்தவன், தன் செல்ல மகளான ‘அருஷி வர்மா’வை தனக்கு அருகில் இழுத்து வைத்து, “என்ன சாப்பாடு டா வேணும்???” என்று அவனுக்கு முன் இருந்த உணவுகளை காண்பித்து கேட்டான்.

அதிதி மனதிற்குள் “எப்டி இருந்த ஆளு???” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். எப்படி பட்ட பெரிய கோபக்காரராக இருந்தாலும் தன் மகளிடம் சிறு குழந்தை தானே…

அருஷி : அப்பா… எனக்கு இது தான் வேணும். என்று அங்கிருந்த இட்லியை காண்பிக்கவும், ஆஷிஷ் அவளை விசித்திரமாக பார்த்தான். ஏனெனில் அவனுக்கு சப்பாத்தி மட்டும் தான் பிடிக்கும். அதிதிக்குமே கூட இட்லி அவ்வளவாக பிடிக்காது. தங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு யாருக்காவது இட்லி பிடிக்கும் போல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அதே போல் அவள் கேட்டதை எடுத்து ஊட்டினான்.

*
*

ஆஷா கோபத்தில் தனது பிள்ளைகளிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

அஷ்மி : ம்மா… ப்ளீஸ் மா. எங்களுக்கு காபி தான் வேணும். என்று‌ அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

ஆஷா : அறிவில்ல உனக்கு? இனி காபின்னு சொன்ன அவ்ளோ தான். என்று காட்டு கத்தல் கத்தினாள். அதை கேட்டு இருவரும் அதிர்ந்து போய் நின்றார்கள். சிறு பிள்ளைகள் தானே…

அஷ்மி அவளை பயந்து போய் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

அக்ஷித் : ம்மா… அவள ஏன் மா பயமுருத்துறிங்க??? என்று தன் தங்கையை தனக்கு பின் வைத்துக் கொண்டு கூறினான்.

ஆஷாவிற்கு என்ன சொல்வதென தெரியாமல், அமைதியாக சென்று விட்டாள்.

அதை பார்த்த அவளது மகனோ, அவள் பின்னாலையே சென்று விட்டான். அவனுக்கு தன் தாயை கஷ்ட படுத்த மனமில்லை. அஷ்மி கூட அவளுக்கு பின்னாலையே நகர்ந்து விட்டாள். இருவருக்குமே அவர்களது தாய் மட்டும் தான் உலகம். என்ன தான் அவர்களுக்கு நடுவே சண்டை வந்தாலுமே அடுத்த நொடி சமாதானம் ஆகி விடுவார்கள்.

அக்ஷித் : ம்மா… சாரி ம்மா. இனி அப்டி பண்ண மாட்டேன். எங்களுக்கு காபி வேண்டாம். என்று பாவமாக கூறினான்.

ஆஷாவிற்கு தான் மனம் தாங்கவில்லை. தனது மகனை அனைத்துக் கொண்டவள், “தரேன்ப்பா…” என்று மட்டும் கூறியவள் நேராக கிச்சனுக்குள் நுழைந்தவளுக்கு அழுகை மட்டும் நிற்கவில்லை. ஆனால் அவளது பிள்ளைகளின் முன் அவள் அழ மாட்டாள். எப்பையாவது அவன் வர மாட்டானா என்று ஏங்கிக் கொண்டே தான் இருக்கிறாள்.

அமைதியாக இரண்டு காபி போட்டவள், தனது பிள்ளைகளுக்கு எடுத்து சென்று கொடுத்தாள்.

அவர்களுக்குமே கொஞ்சம் கவலை தான். அவளுக்கு அது பிடிக்கவில்லை தான். இருந்தாலும் அவர்களை சமாதானம் செய்யும் அளவிற்கு அவள் இல்லை.

*
*

அன்று இரவு, ஆஷா தனது பிள்ளைகளை அவளது தோழி ஒருவளிடம் விட்டு விட்டு, நேராக ஆஷிஷின் வீட்டிற்கு சென்றாள்.

ஆஷிஷின் வீட்டில் :

அனைவரும்  ஆஷாவிற்காக தான் காத்திருந்தனர்.

ஆஷாவோ நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விட்டாள். அவளது முகத்தில் அப்படி ஒரு இறுக்கம். உணர்ச்சியை வெளிப்படுத்தும் கண்களில் பவர் கிளாஸ் போட்டிருந்தாள்.

ஆஷா : என்ன ப்ராப்ளம்??? என்று நேராக விஷயத்திற்கு வரவும், அவினாஷ் ” என்னோட பேர் அவி…” என்று ஏதோ கூற வரவும் அவனை தடுத்தவள், “உங்க பேர் எனக்கு எதுக்கு. என்ன ப்ராப்ளம்னு சொன்னிங்கன்னா அதை சரி பண்ணி குடுத்துட்டு போயிட்டே இருப்பேன்.” என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கூறினாள்.

ஆஷிஷ் : வீட்டுல ஆள் நடமாட்டம் தெரியுது. அத பாக்க தான்…. என்று அவன் ஆரம்பிக்கும் போதே ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர். அங்கு ஒருவன் முகமூடி போட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

அதை பார்த்தவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, ஆஷா சிறிதும் தாமதிக்காமல் தனது துப்பாக்கியை எடுத்து அவனை சுட வர, அவனோ அவளின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து, அவளது கழுத்தை வளைத்து பிடித்தான்.

ஆஷாவிற்கோ செம்ம கோபம் வரவும், அவனது கையை விலக்க பார்க்க, அவன் அவளது முயற்சிகளை எளிதாக தடுக்க, அவள் கீழே விழுந்தாள்.

கீழே விழுந்தவளை அவன் வயிற்றிலே உதைத்து விட, அவள் சுருண்டு விழுந்தாள்.

இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்து விட்டது. ஆஷிஷோ அவளை கண்டு கொள்ளாமல் அவனை அடிக்க போக, அவனால் கூட அவனை தடுக்க முடியாமல் போனது. அவனின் லாவகமான அடிகளில் இருந்த தப்பிக்க முடியாமல் போக, அவனுக்கு உதவ அவினாஷும், அருளும் முன் வர, அவர்களையுமே எளிதாக தடுத்தவன், அங்கிருந்து தப்பித்து சென்றான்.

அதிதி ஆஷாவின் அருகில் சென்று அவளுக்கு என்னவானது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.‌வயிற்றில் உதைத்ததால் அவளால் நிமிர கூட முடியாமல் சுருண்டு போய் இருந்தவளின் ‌கண்களில் நீர் துளிகள். வலியில் அவள் அழுகிறாள் என்று நினைத்தவள், “ஆஷி… இங்கள hospital கூட்டிட்டு போனும் போல…” என்க, ஆஷாவோ சிறிது நேரத்தில் மயங்கி விட்டிருந்தாள்.

அனைவரும் அவசரமாக மருத்துவமனையில் இவளை அனுமதித்தனர்.

நொடிகள் அமைதியாக கடந்தது. ஏனோ அங்கிருந்த அனைவருக்கும் அவள் மீது ஒரு பாசம் இருந்தது.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், “அவங்களோட husband எங்க???” என்று கோபமாக கேட்டிருந்தார்.

அதை கேட்ட மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அந்த மருத்துவர் வேறு எதையோ சொல்ல வரவும், ஆஷிஷ் “டாக்டர், அவங்க ஒரு டிடெக்டிவ். அவங்க பேர் ஆஷா. அத தவற வேற எது எங்களுக்கு தெரியாது.” என்று அவன் கூறவும், அவர், ” ஏற்கனவே அவங்க மென்டல் ப்ரஷர்ல இருக்காங்க போல. அவங்க வீட்டுல இருந்து யாரையாச்சும் வர சொல்லுங்க.” என்று அவர் கோபமாக கத்தவும், மற்றவர்களுக்கு என்ன செய்வது என தெரியாமல் போனது.

அதிதி : அவங்க பாலம்ல… நமக்காக தான அவங்க வந்தாங்க. என்று கண்களில் நீருடன் கூறியவளை பார்த்தவன், அவளை தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.

ஆஷிஷ் : அருள். அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியுமா??? தெரிஞ்சா போய் சொல்லி கூட்டிட்டு வா.. என்று கூறி விட்டு அவளை அனுமதித்திருக்கும் அறைக்குள் நுழைந்தான். அவனை தொடர்ந்து மற்றவர்களும் உள்ளே நுழைந்தால், அவள் அமைதியாக எங்கோ வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.

*
*

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. hani hani

      கான்செப்ட் கொஞ்சம் குழப்புது. கதை மாதிரி இல்லாம கான்வர்சேஷன் மாதிரி இருக்கு. நாவல் மாதிரி எழுதுங்க. இடையில இருக்க இங்கிலீஷ் வார்த்தைகள தமிழ்லயே எழுதுங்க. எல்லாருக்கும் எப்படி கல்யாணம் ஆச்சுனே புரியல. ஒரே எபில க்ளைமேக்ஸ் படிச்ச மாதிரி இருக்கு. யாரு பேசுறதுனு தெளிவா எழுதுங்க. வாழ்த்துக்கள்